Saturday, August 28, 2010

காதலிக்கிறவுக ஃபோன் பேசறப்ப

அண்ணே வணக்கம்ணே,
மேட்டர் இல்லாம மொக்கை போடறேனு   நினைச்சுராதிங்க. இன்னைக்கு "ஆரா"  ன்னு ஒரு தனிப்பதிவு போட்டிருக்கேன்.அட்மாஸ்ஃபியர்னா தெரியும் சுற்றுசூழல்(?). நூஸ்ஃபியர்னா ? மனிதர்களோட எண்ண அலைகளாலான சூழல்னு சொல்லலாம். யோகால இதையே ஆரானு சொல்றாய்ங்க. 

இந்த தனிப்பதிவோட கீதை ஒரு உட்டாலக்கடி  தொடருது.
ஆசை 60 , மோகம் 30 நாள்தானா?  தொடர்  பதிவும் தொடருது.

காதலிக்கிறவுக ஃபோன் பேசறப்ப பார்த்திருக்கிங்களா? அதும் பொண்ணு பேசறதை கவனிச்சிருந்தா உங்க மண்டை காஞ்சிருக்கும்.

"சொல்லு " ச்சீய் "   'வச்சிரட்டா "  ' இல்லப்பா"  இந்த நாலே வார்த்தைல நாலு நாள் சம்பாஷனைய முடிச்சுர்ராய்ங்க. மறுபக்கம் என்ன பேசறாய்ங்கனு தெரியமாட்டேங்குது. இவனுக பஸ் ஸ்டாண்ட்ல சகல இரைச்சலுக்கிடையில பஸ்ஸுங்க கச்சா முச்சானு ஸ்டாண்ட்ல போடறதும், எடுக்கிறதுமா இருக்கிறச்ச பேசிட்டு கிடக்கிறதை பார்த்தா பரிதாபமா இருக்கு. ஆனால் அந்த காலத்து மூத்திர சந்து சந்திப்புகளை விட இதை பெட்டருன்னும் தோணுது.

முதலாளி - சிப்பந்தி ஃபோன் சம்பாஷனைல பார்த்திங்கனா " சார் ."ங்கற ஒத்த வார்த்தை அத்தீனி மாடுலேஷன், அத்தீனி ஸ்ருதி,லயத்துல புழங்கும். புருசன் பொஞ்சாதி சம்பாஷனைன்னா (புது கண்ணால ஜோடி கதை வேற)  பட்டு கத்தறிச்சாப்ல இருக்கும்.

என்ன? - சரி - சரி- வந்து பேசறேன் - வந்து..........பேசறேன்- எனக்கு மிக்கியமான கால் வந்துட்டிருக்கு -அப்பறம் கூப்டு -வேணா வேணா இன்னைக்கு மீட்டிங்ல இருப்பேன் - நானே கூப்பிடறேன்.

இந்த மொபைல் சம்பாஷனைகளை பத்தி பதிவு போடுங்கப்பு.

கடன் கேட்கிறவன் - கடன் கொடுத்து மாட்டிக்கிட்டவன் - க்ரெடிட் கார்ட் வேணமானு கேட்கிற ரெப் - இவிக சம்பாஷணைகளை ரெக்கார்ட் பண்ணி ஆடியோ ஃபைலா போட்டா போதும். இதுக்கு மிஞ்சின ரியால்ட்டி ஷோவே கிடையாது.

அய்யர் தி கிரேட்டை ஐடென்டிஃபை பண்ணியாச்சு .பார்ப்பம்.

ஓகே ஜூட்