அண்ணே வணக்கம்ணே,
நேத்து வாஸ்து ரகசியங்கள் என்ற தலைப்பில் ஒரு புதிய தொடரை ஆரம்பிச்சேன். கடந்த அத்தியாயத்துல வாஸ்து எப்படி உங்க லைஃபை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுதுனு விளக்கி இருந்தேன்.
இளையராஜா மொத(ல்) பாட்டு ரிக்காரிடிங்குக்கு போனப்ப பவர் கட்டானாப்ல கோவில்கள்ங்கற மொத சப் ஹெடிங்கே அரை குறையா போஸ்ட் ஆயிருச்சு. அதை தீர்த்து வச்சிட்டு அப்பாறம் தொடரலாம்ணே.
கோவிலுக்கும் வீட்டுக்கும் என்னய்யா லிங்குன்னு கேட்பிங்க. கொஞ்சம் போல மொக்கை போட்டுட்டு மேட்டருக்கு வரேன்.
தாயை குடியிருந்த கோவில்னுவாய்ங்க. அந்த கோவிலே குடியிருக்கிற வீடு கோவிலில்லிங்களா?
நல்ல தொரு குடும்பம் பல்கலைகழகம்ங்கறாய்ங்க. பல்கலை கழகம்னா என்ன கல்விக்கோவில்.
ஆனால் ஒன்னுங்கண்ணா கோவில்ல குடியிருக்கக்கூடாது ( போறச்ச எதுவும் கொண்டு போகாம ஒரு ராத்திரி தங்கிட்டு சாமி தரிசனம் பண்ணிக்கிட்டு வரலாங்கண்ணா. கேது தசை,கேது புக்தி நடக்கிறவுகளுக்கு, கோசாரத்துல கேது சரியில்லாதவுகளுக்கு இது உத்தமமான பரிகாரங்கண்ணா. குட்டி புட்டியோட போயிராதிங்கண்ணா அசலுக்கு மோசமாயிரும்ணா). வீட்டை கோயிலாக்கிரக்கூடாது
(பூஜை ரூம் வேணம்னா கோவில் மாதிரி இருக்கலாம்ணா. அதே சமயம் தெரியாத்தனமாவோ பந்தாவுக்கோ ஆளுயர சிலையெல்லாம் வைச்சுரக்கூடாதுங்கண்ணா. இதுக்கெல்லாம் சில பல ரூல்ஸ் இருக்கு - அதை மீறினா என்ன ஆகும்னு பர்சனலா அறிஞ்சி தெரிஞ்சி வச்சிருக்கேண்ணா. பை தி பை
பூஜை ரூமு எந்த திசைல இருக்கனும்னு உங்களுக்கு சொல்லியிருக்காய்ங்கனு சொன்னா அது ஏன் தப்பு? எந்த திசைல இருக்கனும்னு நான் சொல்றேன். - (ஹி ஹி அடுத்த பதிவுல)
இந்த மொக்கை போதுமா இன்னம் கொஞ்சம் வேணமா? மேட்டருக்கு போவமா?
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதேனு சொல்லியிருக்காய்ங்க. கோவிலுங்கறது ஆல் இன் ஆல் அழகுராஜா மாதிரி இருந்தது ஒரு காலம். அந்த காலத்துல (ராசாவுங்க காலத்துல) கல் வீடுல்லாம் ரேர். ராசாவோட கோட்டைக்கடுத்து கல் கட்டிடம்னா அது கோவில் மட்டுமாத்தான் இருக்கும். கோவிலுங்கறது ஆயுத சாலை, கலைக்கூடம், போர்பயிற்சி நிலையம், டவுன் ஹால், மெடிக்கல் சென்டர், மண மாலை நிகழ்ச்சி நடத்தற வென்யூ, திருமண மண்டபம், எஜுகேஷ்னல் சென்டர், ஃபுட் கார்ப்பரேஷன் , டான்ஸ் ஸ்கூலு, யோகா சென்டர், ட்ரஸ்டு இப்படி பல பல விதத்துல மல்ட்டி பர்ப்பஸ் ப்ராஜக்டா இருந்தது.இதெல்லாம் அந்தக் காலம். இப்பல்லாம் .... ( வேணாங்கண்ணே அப்பாறம் ஆபாசம்னு திரட்டிகள் தடை பண்ணிரும்)
கோவில்கள்ள ரெண்டு வகை இருக்கு ஓஷோ சொல்றாப்ல உயிர் துடிப்புள்ள கோவில்கள் ஒரு வகை. பிளாஸ்டிக் பூ மாதிரி, சினிமா செட்டிங்ஸ் மாதிரி இருக்கிற கோவில்கள் இன்னொரு வகை. மொதல் வகை கோயிலுன்னா இதுங்க மேட்டர்ல ஹை அலர்ட்ல இருக்கனும்.
கோவில், கோவில்ல குடியிருக்கிற தெய்வம் இத்யாதியால பலனும் உண்டு. ரியாக்சனும் உண்டு. குழப்பறியேப்பாங்கறிங்க அப்படித்தானே.
சாமிங்க கூட உங்களுக்கு கடன் பட்டிருந்தாதான் நல்லதை செய்வாய்ங்க. அண்ணாதுரையோட அப்பா முருகனுக்கு தேனாபிஷேகம் பண்ணாராம்.அதனாலதான் அண்ணாவோட தமிழ் தேனா இனிச்சது. அப்பாவுக்கு பட்ட கடனை முருகன் பிள்ளை காலத்துல செட்டில் பண்ணார்.
நீங்க பத்திரிக்கைல படிச்சுட்டு,டிவில பார்த்துட்டு கோவில் கோவிலா ஏறி இறங்கறதுல புரோஜனம் இல்லே நைனா. கடந்த பிறவில நீங்க எந்த பீஜாக்ஷரத்தை ஜபிச்சிங்கனு கண்டுபிடிச்சு அதை இந்த பிறவிலயும் கன்டின்யூ பண்ணினா உடனடி லாட்டரி மாதிரி பலன் பெறலாம்னு ஒரு பதிவை போட்டிருந்தேன்.
ஒரிஜினல் சரக்குல இன்னம் வில்லங்கமான விளக்கமெல்லாம் இருந்ததுங்கண்ணா. குறிப்பிட்ட எழுத்துல துவங்குற பேர் உள்ள பார்ட்டி ,குறிப்பிட்ட பீஜத்தை தெரியாத்தனமா ஜெபிக்க ஆரம்பிச்சுட்டா சூனியம் வச்ச கணக்கா ஷெட் ஆயி, மெட்டாஷ் ஆயிருவாய்ங்களாம்.
எக்ஸ்ரேனால எத்தனையோ உபயோகம் இருக்கு. ஆனா குழந்தைகள்/கர்பிணிகள விலகியிருக்க சொல்றாய்ங்க. அங்கன வேலை பார்க்கிறவுக எத்தனையோ முன் ஜாக்கிரதைகள் எடுத்துக்கறாய்ங்க.
அணு சக்தியால எத்தனையோ உபயோகமிருக்கு. ஆனால் அணு மின் நிலையத்துக்கு ள்ளாற போக எத்தனையோ கட்டுப்பாடுகள் இருக்கு. பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கு.
அதே மாதிரி கோவில் மேட்டர்ல நிறைய சமாசாரம் இருக்கு.
மேலும் கோவில், சாமி சிலை இதெல்லாம் ஒரு டம்ப் யார்ட் மாதிரி . இதானால் ஊருக்கு லாபம். ஊர் சனத்துக்கு லாபம் கோயிலை ஒட்டி வாழறவனுக்கு?
ஊர்ல இருக்கிற பீடை பிடிச்சவனெல்லாம் வந்து தன் மலினங்களை , கர்மத்தை எல்லாம் ஒழிச்சுட்டு போற இடம் ( முதல் சாதி கோயில்களுக்கு இது பொருந்தும்) இதுகளை விட்டு குன்சா விலகி இருக்கிறது மேலுங்கண்ணா.முக்கியமா தொட்டு பூஜை பண்ற அய்யருங்களுக்க்கு பல்புத்தான். மடியா,ஆசாரமா, ஆகம விதிகளின் படி பூஜை பண்ற பார்ட்டிக்கே ஆப்புதானும்போது ..மலை மேல இருக்கிற கோவில்ல கொள்ளையடிச்சு , கொள்ளையடிச்ச பணத்தை பத்து வட்டிக்கு திருப்பற திருச்செந்தூர்,பழனி மாதிரி கோவில் அய்யர்மாருங்க கதி என்னன்னு நீங்களே ஒரு ஓட்டு ஓட்டிப்பார்த்துருங்க.
பெண்டாட்டி,பிள்ளை,குட்டினு குடும்ப வாழ்க்கை வாழறவுக கோயில் நடவடிக்கைகள்ள தலையிடவே கூடாதாம். அப்படி ஈடுபட்டா படிப்படியா குடும்பத்தை இழந்து அவிக அனாதையா மாறிட வாய்ப்பிருக்காம். சாக்கிரதைங்கண்ணா.
காசு பணம் கேட்டா கொடுத்து ஒழிச்சுருங்க. பசை மாதிரி ரெம்ப பூசிக்காதிங்க. நாறிரும்.
சொந்த காசு,பணம், செலவழிச்சு நேரத்தை ஸ்பென்ட் பண்ணி சர்வீஸ் பண்ணாலே இந்த கதி. இதுல கோவில் நிலத்துல குடியிருக்கிறது அ கோயிலை ஒட்டி குடியிருக்கிறது, கோயில் நிலத்தை குறி வச்சு (எதிர்கால ஆக்கிரமிப்புக்கு) குடியிருக்கிறது, கோவில் பணத்தை கொள்ளையடிக்கிறது இதெல்லாம் தற்கொலை மாதிரிதான்.
சரிங்கண்ணா கோயில்குளத்தை பத்தியெல்லாம் இன்னொரு பதுவுல பார்ப்போம் வாஸ்துவுக்கு வந்திரலாம். சிவன் சொத்து குல நாசம்னு கேள்விப்பட்டிருப்பிங்க. கோவில் நிலத்தை ஆக்கிரமிச்சா மட்டுமில்லே, கோவிலை ஒட்டி தப்பான திசைல வீட்டை கட்டி தொலைச்சாலும் கதை கந்தல் தான் வாஸ்து சொல்லுது .
நான் சொன்ன இன்னொரு வகை கோயிலானாலும் அது பொது சொத்து. ஊர் கருமம். ஊர் பீடை. அதை விட்டு எவ்ளோ தூரம் எட்டியிருந்தா அவ்ளோ நல்லது பாஸு.
இனி எந்தெந்த கோவில்களுக்கு எந்தெந்த திசைல வீடு கட்டக்கூடாதுங்கற டேட்டாவ பார்ப்போம்:
( தகவல் உபயம்: என் அணிந்துரையோடு வெளியான கட்டிடக்கலை ஒரு அறிமுகம் நூல். நூலாசிரியர்: கே.வி.முனி . இவரை தொடர்பு கொள்ளனும்னா எனக்கு கால் பண்ணுங்க விவரம் சொல்றேன். செல்: 09397036815)
சிவன், வினாயகர்,முருகன் கோவில்களுக்கு முன் புறத்துல , விஷ்ணு,கிருஷ்ணர், ராமர்,பெருமாள்,ஆஞ்சனேயர் கோவில்களுக்கு பின் புறத்துல,அம்மன் ,துர்கை, காளி,திரௌவுபதி,முத்தியாலம்மன், கங்கையம்மன் ,எல்லையம்மன் கோவில்களுக்கு இருபுறம் , வீடு கட்ட கூடாது.
எந்த கோவிலின் நிழலும் காலை ஒன்பது மணிக்கு மேல் மாலை 3 மணிக்குள் வீட்டு மேல விழக்கூடாது.
சேம்பிளுக்கு சிவன் கோவில் கதைய பார்ப்போம்:
சிவன் கோவில்கள்ள அவரோட உருவச்சிலை வைக்கிறது கிடையாது. ஜஸ்ட் சிவலிங்கம் மட்டும்தான் இருக்கும். ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன் யாராச்சும் யோகி ஒரு குழிக்குள்ள இறங்கி நிஷ்டையில இருந்து பிராணனை சஹஸ்ராரத்துல செலுத்தி ஸ்தூல உடம்புக்கு குட்பை சொல்லிட்டா அந்த குழி மேல சமாதியை கட்டி சமாதி மேல ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபனம் பண்றது வழக்கம். அதாவது யோகியோ போகியோ உடலை புதைச்ச இடத்தை என்னன்னு சொல்விங்க? இந்த பின்னணி கொண்ட சிவன் கோவிலுக்கு முன்னே வீட்டை கட்டினா உங்களுக்கு என்னமாதிரி வைபரேஷன்ஸ் கிடைக்கும்? சப்போஸ் நீங்க தனிக்கட்டையா இருந்து யோகம் கீகம் பண்ணிக்கிட்டிருந்தா ஓகே. ஒரு வேளை புதுசா கண்ணாலமாகியிருந்து ஒரு நாளைக்கு மூணு ஷோ போட்டுக்கிட்டிருந்தா என்ன ஆகும்? ரோசிங்க.
சிவன் முத்தொழில்கள்ள சம்ஹாரத்தை (அழிப்பை) செய்யறவரு நீங்க ஜாலிலோ ஜிம்கானான்னு அஜால் குஜால் வேலை பண்ணிக்கிட்டிருந்தா என்ன ஆகும்? ரோசிங்க.
மேலும் ஒவ்வொரு கடவுளுக்கு ஒவ்வொரு விதமான வைப்ரேஷன்ஸ் உண்டு. சிவன் கோவிலுக்கு போய் வர்ரவன் எந்த மாதிரி வைப்பரேஷ்ன்ஸோட வெளிய வருவான்? ரோசிங்க.
அதனாலதான் சிவன் கோவிலுக்கு முன் புறம் , வீடு கட்ட கூடாதுனு சொல்லியிருக்காய்ங்க
அம்மன் கோவில்களுக்கு இருபுறம் , வீடு கட்ட கூடாது:
சாதாரணமா அம்மன் கோவில்னாலே பலி சமாசாரம் இருக்கும். நிறைய அம்மனுகளை ஆதி சங்கரர் வந்துதான் கன்வின்ஸ் பண்ணி வெஜ்ஜாக்கினாராம் .இதுக்கு முன்னாடி அவிகல்லாம் நான் வெஜ் தான். பலி கொடுக்கிறதென்னவோ கோவிலுக்கு முன்னாடி கொடுக்கிறானு வைங்க. அதை க்ளீன் பண்ண எங்கன போவான்? பக்க வாட்ல தான் ஒதுங்குவான். கழிசலை கொத்திட்ட போக கழுகு வரலாம், ஏழைகளின் உண்டு காட்டியான காக்கா வராமயே போகலாம். பலியான மிருகத்தோட மாமிசத்து எலும்புகளை பொறுக்கிட்டு போக நாய்கள் வரலாம். அந்த இடத்தை சரியா க்ளீன் பண்ணலேன்னா தொத்து நோய்கிருமிகள் வரலாம். அதனாலதான் அம்மன் கோவில்களுக்கு இருபுறம் , வீடு கட்ட கூடாதுனு சொல்லியிருக்காய்ங்க
விஷ்ணு,கிருஷ்ணர், ராமர்,பெருமாள்,ஆஞ்சனேயர் கோவில்களுக்கு பின் புறத்துல:
சாதாரணமா கோவில் எல்லாம் கிழக்கு பார்த்த மாதிரி தான் கட்டுவாய்ங்க. அதுலயும் மேற்படி சௌம்யமான கோவில் எல்லாம் கிழக்கு பார்த்த மாதிரிகட்டத்தான் அதிக வாய்ப்பு. இதுக்கு பின் புறம்னா மேற்கு பக்கத்துல தான் வீடு கட்டனும். நீங்க மேற்குல வீடுகட்டினா கிழக்குல கோவில் உசரமா இருக்கும். அப்போ வீட்டு ஆண்கள் எலிகளாக, வீட்டுப்பெண்கள் நோய்கண்ட புலிகளாக கிலியோடவே வாழ்ந்து பலியாக வேண்டியிருக்குமுங்க .
எந்த கோவிலின் நிழலும் காலை ஒன்பது மணிக்கு மேல் மாலை 3 மணிக்குள் வீட்டு மேல விழக்கூடாது:
கோவிலோட நிழல் அதுவும் ஒன்பது மணிக்கு மேல் மாலை 3 மணிக்குள்ள வீட்டு மேல விழுதுன்னா அந்த அளவுக்கு உங்க வீடு கோவிலோட நெருங்கியிருக்குனு அர்த்தம். கோவில் எல்லாம் சப்ஸ்டேஷன் மாதிரி. உங்களுக்கு பவர் கனெக்சன் வேணம்னா லைட் போல்லருந்து வாங்கிக்கனும். ட்ரான்ஸ்ஃபாரத்துலருந்து எடுக்கிற ( நேர்மையா நடக்கிற ஆசிரமங்கள்,மடங்கள்) கரண்டே சில சமயம் கவுத்துருது. தொழிற்சாலைகள், பெரிய பெரிய கட்டடங்கள்ள
( நித்யானந்தா மாதிரி அரை குறைகள்) மின் விபத்து நடக்கிறதே ஹை ஓல்ட்டாலதான் ( கே.வி ஸ்ல வரும்) .இந்த அழகுல சப்ஸ்டேஷன்லருந்து டைரக்டா கரண்ட் வந்தா என்னாகும்? அதனாலதான் கோவிலை விட்டு சற்றே விலகியிரும் பிள்ளாய்னு பெரியவுக சொல்லியிருக்காய்ங்க
மத்த மேட்டருக்கும் லாஜிக் இருக்கும். ரோசிங்க. நம்ம பெரியவங்க மாலை வெய்யில் மாமருந்துனு சொன்னாய்ங்க. அதையேதான் இப்ப விஞ்ஞானிங்க விட்டமின் ' E ' இருக்குனு சொல்றாய்ங்க. என்ன இன்னைக்கு போட்ட ரெண்டாவது அத்யாயம் ஓகேவா .. உடுங்க ஜூட். நாளைக்கு இன்னும் அதிரடியான ரூல்ஸயும் அதுக்கான காரண காரியங்களையும் பார்ப்போம்