காஷ்மீர்ல மறுபடி தீப்பிடிச்சுருச்சு. பத்தி எரியுது. எரியற வீட்ல தானே பிடுங்கனும். கல்கி மாதிரி ப்ராண்டட் மேகசின் ஒரு தீர்வை சொல்ற மாதிரி பாவ்லா காட்டிக்கினு விஷத்தை கக்கலைன்னா எப்படி? காஷ்மீர் பிரச்சினைக்கு கல்கி தர்ர தீர்வு என்னடான்னா வாக்கெடுப்பு நடத்தனுமாம். மக்கள் மத்தில வாக்கெடுப்பு நடத்தி இந்தியாவோட சேர்ந்திருக்கிங்களா பாக்கிஸ்தானோட போயிர்ரிங்களானு கேட்கனுமாம்.
இந்த நாட்டுக்கு சுதந்திரம் வந்து 63 வருசம் ஆகுது. இந்த 63 வருஷமும் எந்த சாதிக்காரவுக பி.எம் ஆ இருந்தாய்ங்க, சி.எம் ஆ இருந்தாய்ங்கங்கற கணக்கெடுப்பெல்லாம் தேவையில்லை. அதிகாரம் சூத்திரன் கையில இருந்தாலும் அதை செயல்படுத்தற பொசிஷன்ல இருந்ததெல்லாம் யாரு? அவாள் தானே.
கடந்த 63 வருஷத்துல மத்திய செயலகம், மானில செயலகங்கள்ள எத்தனை அய்யரு இருந்தான்னு ஒரு கணக்கெடுப்பு நடத்தி பாருங்க . கண்ணைக்கட்டும். பிரதம மந்திரி, முதல் மந்திரி ,மந்திரிகள் எல்லாம் என்ன காத்துலருந்தா டெசிஷன் எடுத்தாய்ங்க. செக்ரட்ரி நாலு ஆப்சனை கொடுத்தான். மேற்படி பி.மு. மந்திரிங்கல்லாம் சோசியக்கிளி மாதிரி ஒரு அட்டைய எடுத்தாய்ங்க.
இந்த உண்மைய புரிஞ்சிக்கிட்டு பார்த்தா இந்த நாட்ல இருக்கற எல்லா பிரச்சினைகளுக்கும் இவா தானே காரணம்.
கல்கியோட இந்த ஓட்டெடுப்பு யோசனைய மேலோட்டமா பார்த்தா ரெம்ப ஜினைனா, லிபரலா, சைன்டிஃபிக்கா, லாஜிக்கலா, ப்ராட் மைண்டடா, ஜன நாயகப்பூர்வமா , நியாய தர்மமா தோணும். ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் கணக்கா இருக்கும். கொண்டைய அவிழ்க்கிறேன். மூக்கை பொத்திக்குவிங்க.
பிரிட்டீஷ் காரவுக சுதந்திரம் அனவுன்ஸ் பண்றச்ச காஷ்மீர்க்கு தனியா ராஜா இருந்தாரு. அவரு இந்து. மெசாரிட்டி சனங்க முஸ்லீம்.ராசா ஊசலாட்டத்துல இருந்தாரு. அந்த பக்கம் போலாமா இந்த பக்கம் போலாமா இதுல தனி நாடாவே கன்டின்யூ ஆயிட்டா என்னங்கற நப்பாசை வேற. பாக்கிஸ்தான் வல்லடியா காஷ்மீரை சேர்த்துக்கற முடிவுல இருக்கவே ராசா இந்தபக்கம் சாஞ்சாரு. ஏதேதோ ஸ்பெஷல் க்ளாஸ் எல்லாம் வச்சி ஒப்பந்தம் போட்டாய்ங்க. ஆச்சு போச்சு.
பாக்கிஸ்தான் கிழக்கு வங்காள பிரச்சினைல கலியுக காளி ( துர்கையா?) இந்திரா காந்தி அம்மையார் அடிச்சு தூள் பண்ணி நாட்டை பிரிச்சாய்ங்க. ஏற்கெனவே பாக்கிஸ்தானுக்கு பைல்ஸ் கம்ப்ளெயிண்ட். இதுல ஆச்சி மசாலா வேற தடவி விட்டாய்ங்க.
நீ பிரிச்சே இல்லே நானும் பிரிக்கிறேனு பாக் தொடை தட்ட ஆரம்பிச்சது. காஷ்மீர்ல ஷேக் அப்துல்லா இருந்தாரு. லீடர் ஷிப் குவாலிட்டீஸ்,சரிஸ்மா உள்ள தலைவர். இந்திய இறையாண்மைக்கு மட்டும் ( இந்திராகாந்திக்கு இல்லிங்கண்ணா) காஷ்மீர் மக்களின் நம்பிக்கைய பெற்றிருந்த தலைவர்.
தகுதி உள்ளவன் தலை வணங்க மாட்டான். (ஒய்.எஸ்.ஆர் மாதிரி) . ஆனால் அவனால தலைமைக்கு லாபம் உண்டு.
தகுதியில்லாதவன் தலையால தண்ணி குடிச்சாலும் - இதுக்கு ஒரு விபரீத அர்த்தம் இருக்குங்கண்ணா .. இதை சுஜாதா கூட உபயோகிச்சிருக்காரு- ரோசய்யா மாதிரி - தலைமைக்கு தலை தான் போகும்.
ஷேக் அப்துல்லாவ கழட்டி விட்டு மருமகன், மச்சான்னு போனாய்ங்க. மேய்ப்பன் இல்லாத மந்தைல நரி புகுந்துருச்சு. காஷ்மீரோட பிரச்சினை தலைமையின் நம்பகத்தன்மை, குறித்த பிரச்சினையின் சைட் எஃபெக்ட்ஸ் தான்.
பாக்கிஸ்தானையும், சீனாவையும் காட்டி ராணுவ பட்ஜெட்டை கூட்டிக்கிட்டே போறாய்ங்க.ஆயுத பேரத்துல கொள்ளையடிக்கிறாய்ங்கனு வளர்ச்சி பணிகள் எல்லாம் முடங்குதுன்னு நான் கூட ஒரு அதிரடி தீர்வை சொன்னவன் தான். காஷ்மீரை ஐ. நா நடவடிக்கைகளுக்கு ஒப்படைச்சுரனும் அதன் பாதுகாப்புக்கு ஐ.நாவோட அமைதிப்படை பொறுப்பேத்துக்கனும். இதே மாதிரி பாக் ஆக்கிரமிச்சுருக்கிற காஷ்மீரோட நில பாகத்தையும் ஐ. நா நடவடிக்கைகளுக்கு ஒதுக்கனும்னு ப்ரஷர் கொடுக்கனும். சீனா விஷயத்துலயும் இதே ஃபார்முலாவை அப்ளை பண்ணனும் இதான் நான் கொடுத்த தீர்வு.
அட்லீஸ்ட் ஐ.நா அமைதிப்படையோட பாதுகாப்புலயாவது காஷ்மீர் ஒன்னு சேரனும் ஏஸ் பெர் ரிக்கார்ட்ஸாச்சு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானதா இருக்கனும்னு நினைச்சேன். என்னதான் சோசியம் கீசியம்னு அலப்பறை பண்ணாலும் சூத்திரன் தானே. நம்ம ரேஞ்சு இதான்.
கல்கி என்ன சொல்லுது? ஓட்டிங் வைக்கனும். தெலுங்கானால என்ன நடந்தது பார்த்திங்கல்ல.. பன்னெண்டுக்கு பன்னெண்டும் காலி. இதே இழவுதான் காஷ்மீர் மேட்டர்லயும் நடக்கும்.
மக்களை சேர்ந்து வாழனுமா , கூடி வாழனுமானு துலாக்கோல் மாதிரி ரோசிக்கிற ஸ்டேஜ்லயா வச்சிருக்கம் . ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
சாதாரண நிர்வாக சீரமைப்புல தீர்ந்திருக்க வேண்டிய பிரச்சினை தெலுங்கானா. ஒய்.எஸ் உயிரோட இருந்திருந்து ஜலயக்னத்தை கம்ப்ளீட பண்ணி தெலுங்கானாவுக்கு தண்ணிய கொடுத்து தொலைச்சிருந்தா போதும் தனித்தெலுங்கானா கோரிக்கையே காணாம போயிருக்கும். அவர் சபீதா இந்திரா ரெட்டிய ஹோம் மினிஸ்டராக்கினார் ஏன்? அவிக தெலுங்கானாவ சேர்ந்தவுக. நெம்பர் ஒன் ஆந்திராகாரரா இருந்தா நெம்பர் டூ தெலுங்கானா காரரா இருக்கனும்னு ஒரு ஒப்பந்தம் போட்டாய்ங்களாம் (ஒரு காலத்துல) அதை கூட அமல் படுத்தல இந்த படுபாவிங்க. தனித்தெலுங்கானா கோரிக்கை ஏன் எழாது?
தெலுங்கானால கர்ஃப்யூ இல்லை, துப்பாக்கி சூடு இல்லே. பாக் ராணுவத்தோட தூண்டுதல் இல்லே. தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கல்லே. ஆனாலும் ஓட்டெடுப்பு தனித்தெலுங்கானாவுக்கு ஆதரவாதான் இருந்தது.
மக்கள் அப்பாவிங்க.அவிக பிரச்சினைக்கு தீர்வுன்னு அக்கரைய சூ காட்டி விட்டா போதும் நம்பிர்ராய்ங்க. அந்த மாதிரி சூ காட்டிவிட டி.ஆர்.எஸ், கே.சி.ஆர் மாதிரி நெகட்டிவ் பர்சனாலிட்டிங்க பேட்டை பேட்டைக்கு முளைச்சிக்கிட்டே இருக்காய்ங்க.
இருப்பாய்ங்க. இதுக்கெல்லாம் தீர்வு ஓட்டெடுப்புமில்லை கல்லெடுப்புமில்லை . சாதாரண நிர்வாகம் சுமாரா நடந்தா போதும். இதெல்லாம் உஷ் காக்கி ஆயிரும்.
பெருசா பேச வந்துட்டாய்ங்க ஓட்டெடுப்பாம்.. கல்லெடுப்பாம்.
எங்க பாட்டி சொல்லும் " யோக்கியம் ஒரு குளத்து நண்டு உப்பு மிளகாயை போட்டு கிண்டு" ன்னு. பாக்கிஸ்தானுக்கும் கல்கிக்கும் என்னங்கண்ணா வித்யாசம்?
ஆமாங்கண்ணா ஒரு வேளை கல்கியோட யோசனைப்படி காஷ்மீர்ல மட்டுமில்லாம தமிழ் நாட்லயும் ஓட்டிங் வச்சா என்ன நடக்கும்ங்கறிங்க?
எப்படி
அவாளுக்கும் எனக்கும் எந்த விதமான வியாஜ்யமும் கிடையாது. நான் பத்திரிக்கைகளோட கதவை தட்டற காலத்துல நமக்கு லாபியிங், லௌகீகம்லாம் தெரியாது.தெரிஞ்சவா இடம் பிடிச்சா. நமக்கு தெரியாது. இந்த மேட்டர்ல நமக்கு வருத்தம் உண்டே தவிர கடுப்பு ஒரே விஷயத்துலதான் அது பெரிய பெரிய மேட்டர்ல கூட சுய நலம், போட்டுக்கொடுக்கிறது,காட்டிக்கொடுக்கிறது, ஒளிச்சு வைக்கிறது , போற போக்குல சீண்டி விட்டு போறது, ஹிடன் அஜெண்டாவை வச்சுக்கிட்டு பத்தினி வேஷம் போடறது, காரியமானா சரினு சூத்திரன் காலை பிடிக்கிறது, முடிஞ்சா அவனுக்கு பெண்ணை கொடுத்துர்ரது , சில மேட்டர்ல கூட்டிக்கொடுக்கிறது (இ.பே.மணியன்), இல்லாட்டி ஜெயிச்சு வந்த சூத்திரனை அண்டர் டேக் பண்ணிர்ரது, அவனை பிராமணனா மாத்திர்ரது . இப்படி இன்னும் முக்கா டஜன் சில்மிஷங்க இருக்கு. இதெல்லாத்தையும் சேர்த்துத்தான் பார்ப்பார குசும்புனு சாமானிய சனம் சொல்வாய்ங்க.
கொசுறு:
தி வீக் பத்திரிக்கைய வித்தாச்சு. டைம்ஸ் பத்திரிக்கையையும் சேல்ஸுக்கு வச்சிருக்காய்ங்க. மீடியால இது ஒரு புது ட்ரெண்ட்.புயல்னும் சொல்லலாம். இந்த புயல்ல கல்கி எல்லாம் என்ன கதியாகபோவுதோ வெயிட் அண்ட் சீ
எத்தை தின்னா பித்தம் தெளியும்ங்கற ஆத்திரத்துல பரிகார ஸ்பெஷல் விட்டிருக்காய்ங்க. நூத்துக்கு 99 அரதப்பழசான பார்ப்பானுக்கு படியரிசிக்கு வழி பண்ற பரிகாரம் தான் சொல்லப்பட்டிருக்கு. ஒரே ஆறுதல் ஒரு பார்ட்டி ராத்திரில ஜோசியம் சொல்லலாம் தப்பில்லைனு ஏறக்குறைய நம்மை மாதிரியே அனலைஸ் பண்ணியிருக்கிறதுதான்.
கண்ணதாசன் மகள் மதம் மாறினதை பத்தி ஒரு ரிப்போர்ட் ( ராமகோபாலன் பேட்டில பிரஸ்தாபனை வேற) உமர்கய்யாம் மாதிரி இருந்த கண்ணதாசன் ரூட்டை மாத்தினப்ப அவருக்கு சரிய்யான வழியை காட்டியிருந்தா அவர் ஏன் நுனிப்புல் மேயப்போறாரு அந்த என்விரான்மென்ட்ல வளர்ந்த விசாலி கண்ணதாசன் மதம் மாறப்போறாய்ங்க.
கண்ணதாசன் ஒரு செலிபிரிட்டி. அவரை வச்சு தங்களோட பாப்புலாரிட்டிய டெவலப் பண்ணத்தான் பார்த்தாய்ங்களே தவிர ( சங்கராச்சாரி உட்பட - சீனியருங்கோ) அவருக்கு ஒரு வழி காட்டனும்னு நினைக்கலை. அவர் கடைசி வரை கிருஷ்ணனுக்கு கோவிலுங்கற ரேஞ்சுலயே நின்னுட்டாரு.
என்னை கேட்டா மதமாற்ற பிரச்சாரத்துக்கெல்லாம் தள்ளுபடியோட பர்மிஷன் தரனும். ஓடிப்போற மதில் மேல் பூனையெல்லாம் ஓடிப்போச்சுன்னா தான் இந்த அலேக் மே ரஞ்சன் வேலை காட்டிக்கிட்டு கல்லாவை நிரப்பற பார்ப்பன குருக்களுக்கெல்லாம் புத்தி வரும்.
தெலுங்குல ஒரு பழமொழி உண்டு " தும்மித்தே ஊடி போயே முக்கு உன்ட்டே எந்த போத்தே எந்தா" ( தும்மினாலே கழண்டுக்கிற மூக்கு இருந்தா என்ன போனா என்ன?)
இந்த மடாதிபதிகளை கேட்கிறேன்..........
அவன் ஏன் மதம் மாறுரான். உங்க கடைக்காலே சரியில்லை. உருவகங்களையும், பொயட்டிக் டெஸ்க்ரிப்ஷன்சயும், சிமிலீசையும் (உவமைகள்) எச்சி உமிஞ்சி நிஜம்னு சத்தியம் பண்ணிங்க. அதனோட உள்ளர்த்தம் என்ன? அதனோட செயல்பாடு என்ன? அதனால லாபம் என்னனு சொல்லித்தந்திங்களா? இல்லே. ஆரம்ப கால குருக்கள் வேணம்னே மறைச்சாய்ங்க. மத்திய கால குருக்களுக்கு ஃபேக்ட்ஸ் பத்தின தடுமாற்றம் இருந்தது. இப்போ உள்ள பார்ட்டிங்களுக்கு மேட்டரே தெரியாது. சொல்லனம்னு நெனச்சா கூட சொல்ல முடியாத நிலை. சட்டில இருந்தா தான் அகப்பைல வரும். பாட்டில்ல இருந்தாதானே க்ளாஸ்ல வரும்