Sunday, August 22, 2010

கில்மா ஜோசியம் : 5

அண்ணே வணக்கம்ணே!
கீதை ஒரு உட்டாலக்கடி தொடருது. அதையும் படிங்க‌
ஒரு பார்ட்டி இந்த தொடர்பதிவுக்கான  தலைப்பென்னவோ வசீகரமா இருக்கு.ஆனா இந்த பட்லி விஷயத்துல  என் ஜாதகத்திலான லீடிங் ப்ளேனட்டை  ஐடென்டிஃபை பண்றதுதான் கஷ்டமா கீதுனு புலம்பியிருந்தது.

அந்த பார்ட்டிக்கு மட்டும் ஒரு சீக்ரெட். தலை ! கிரகத்தை வச்சு தானே உங்க பட்லியோட  கேரக்டரை சொல்றேன். அவிக  கேரக்டரை வச்சு கிரகத்தை கண்டுக்கிடலாம்ல. இந்த 9 வகை பெண்களோட குணங்கள், அமைப்பையும் நெல்லா படிங்க. இதுல உங்க ஜுஜுலிப்பாவுக்கு எந்த கேரக்டர் வெயிட்டா அமைஞ்சிருக்குனு பாருங்க. அதான் உங்க ஜாதகத்துல 7 ஆமிடத்தை லீட் பண்ற கிரகம்.  புரியுதா?

உங்க லவர் அ உட் பிக்கு சொல்லியிருக்கிற ப்ளஸ் பாயிண்ட்ஸ்ல பாதியாச்சும் உங்களுக்கிருந்தா உங்க ஜோடி ஜாடிக்கேத்த மூடி. இல்லேன்னா தப்பாது தொப்புள் வரை தாடி.ஓகேவா தூள் பண்ணுங்க..

இப்போ மேட்டருக்கு வந்துருவம்.

இந்த கில்மா ஜோசியம் தொடர்பதிவுல உங்க பட்லியை ரெஃபர் பண்ணவேண்டிய கிரகங்கள்ள எது வெயிட்டா இருக்குனு பார்த்துக்கிட்டா அந்த கிரகத்தோட காரகத்வத்துல உங்களுக்கு அமையப்போற வா.துணைய பத்தி தெரிஞ்சுக்கறது ச்சோ ஈஸின்னுட்டு விவரிச்சு சூரியன்,சந்திரன் ஆதிகத்துல பிறந்த பெண்களை பத்தி சொல்லியிருந்தேன்.  மேற்சொன்ன கிரகங்கள் நல்லதை செய்யற கண்டிஷன்ல இருந்தா எப்படி இருப்பாய்ங்கனு மட்டும் சொல்லிக்கிட்டிருக்கேன். அதாவது குறிப்பிட்ட கிரகங்களோட ப்ளஸ் பாய்ண்ட்ஸ்  உள்ள பெண்களை பத்தி. இந்த வகைல 9 வகை பெண்களை பத்தி நீங்க தெரிஞ்சிக்கிடலாம்.

3.செவ்வாய் பெண்கள்:
சிவந்த நிறம், ஆண்டொன்று போக வயதொன்று குறையும் இளமை தோற்றம், உற்சாகம், தைரியம், நல்ல அட்வைசர்+கமாண்டர்  கிடைச்சா எந்த யுத்தத்துக்கும் பின் வாங்காத தில். ரியல் எஸ்டேட் போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,கெமிக்கல்ஸ்,ரியல் எஸ்டேட்ஸ்,மெட்டல் ஃபோர்ஜிங்க், செம்பு,ஹோட்டல், எரிபொருள் போன்ற செவ்வாய் தொடர்பான தொழில்களில் ஆர்வம் அனுகூலம்.

நல்ல  ரத்த ஓட்டம் ஒழுங்கான மாதவிலக்கு சக்கரம், லேசில் நோய் வாய்படாத தன்மை. போட்டிகளை சமாளிக்கும் சேலஞ்சிங்க் கேரக்டர். விளையாட்டு வீராங்கனை போன்ற தோற்றம்.சகோதர வகையில் நல்லாதரவு.

நிதானம்,  லேசான  முன் கோபம், நெருப்பு,மின்சாரம் ,சுட்ட எண்ணெய், வென்னீர் வகையறாவால பெரிய நஷ்டம் ஏற்படாமை, . காதல். கலாட்டா கல்யாணம்னிட்டு அல்லாடாம அரேஞ்ஜ்ட் மேரேஜ் அட்லீஸ்ட் தான் காதலிச்ச பார்ட்டியயே அப்பா அம்மா ஒப்புதலோட மணக்குற தில்லு,போராட்ட குணம்.

தெற்கு திசைல இருப்பாய்ங்க. கடைசி மகளா இருக்க வாய்ப்பு. நிலம் நீச்சு இருக்கும். அவிக குடும்பம் மேற்சொன்ன  செவ் தொடர்பான  தொழில்,துறைகளில் இருக்க வாய்ப்பு. பேர்லயே நெருப்பு இருக்கலாம் அல்லது குமாரி,சிட்டி,புஜ்ஜி, சின்னி, மாதிரி பேர்கள் அல்லது ஏதானும் ஆயுதத்தோட பேரு உ.ம் வேலாயி அல்லது வள்ளி தேவானை தொடர்பான பேர்கள். யுத்தம் தொடர்பான பேர்கள் இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 9ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .இவிக வீட்டுக்கு போற வழில போலீஸ் ஸ்டேஷன், உலைக்களம்,லேத், மாதிரி நெருப்பு தொடர்பான தொழிலகங்கள் இருக்கலாம். முருகன் கோவில் இருக்கலாம்.

4.ராகு பெண்கள்:
இவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.
இவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ  இருக்கலாம்.  இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்
ஓரப்பார்வை இருக்கலாம், பூனைக்கண் இருக்கலாம். பேர்ல கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ  பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற  பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம்


5.குரு தொடர்பான பெண்கள்:
நடுத்தர உயரம், எலுமிச்சை நிறம், தெய்வம்,கோவில்,குளம்,பிராமணர்கள்,சாஸ்திரம், சம்பிரதாயம், பெரியவர்கள் மீது கவுரவம். நீதி நியாயம் தருமம் மீது நம்பிக்கை.  நல்ல ஞா சக்தி, தூர திருஷ்டியுடன் திட்டமிடுதல், இக்கட்டான சூழலில் நல்ல  யோசனை சொல்லுதல்,  நல்ல ஜீரண சக்தி, கணீர் என்ற குரல், குரு தொடர்பான தொழில் செய்யும் குடும்பத்தில் பிறத்தல், அதே போன்ற குடும்பத்தில் வாழ்க்கைப்படல், சாஸ்திர சம்பிரதாயப்படி,பெரியோர் விருப்பப்படி திருமணம் நடத்தல், வயதான தம்பதியை போஷித்தல், தீர்த்தயாத்திரை, தூர தேச பயணங்களில் ஈடுபாடு, (முக்கியமாக சிவ க்ஷேத்திரங்கள்) , சிக்கனம், திட்டமிட்டு செலவிடல், பொன் பொருள்,மரியாதை ,செல்வாக்குடன் வாழ்தல். பொன் பொருள் விஷயத்தில் ஒரு மாற்று குறைவாக இருந்தாலும் மரியாதையில் குறைவின்றி இருத்தல்.பொருளாதாரம்,அரசியல் தொடர்பான படிப்பில் ஆர்வம் இருக்கலாம்.  இவிக வீட்டுக்கும் 3 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் . இவிக வீடு உள்ள ஏரியால வங்கி,ஏடிஎம், ட்ரஷரி, பிரபல சேவை நிறுவனம், கோர்ட் , அற  நிலையத்துறை அலுவலகம்,சிவன் கோவில் இத்யாதி இருக்கலாம்.

6.சனி தொடர்பான பெண்கள்:
நிறமொரு மாற்று குறைவாக இருக்கலாம். கலை,அலங்காரம்,வாசனை பொருட்களில் ஈடுபாடு இராது. வெற்று ஆடம்பரங்களில் இறங்க மாட்டார்கள். .இவிகள பொருத்தவரை பேக்கிங் முக்கியம் கிடையாது ரீஃபில் பேக்னாலும் ஓகே ஆனா ப்ராடக்ட் உழைக்கனும். கொஞ்சம் மந்தமாதான் இருப்பாய்ங்க. கட் அண்ட் ரைட்டா பேசுவாங்க.  எளிய உணவிலேயே திருப்தி அடைவாங்க.
இவங்க வாழற வீடு முதல்  யூஸ் பண்ற  வெயிக்கிள் வரை செகண்ட் ஹேண்டாவோ இல்லே அரதப்பழசாவோ இருக்கலாம். எதையும் விட்டுத்தான் பிடிப்பாங்க. கணவருக்கும் இவிகளுக்கு வயசு வித்யாசம் அதிகமா இருக்கலாம். (கு.ப தோற்றமாவது அப்படி இருக்கும்) படிப்பு,அந்தஸ்தும் இவிகளை விட ஒரு மாத்து குறைவா இருக்கலாம். இவிக குடும்பம் ஐரன்,ஸ்டீல்,ஆயில் ,ஃபேக்டரி ,விவசாயம்,வெட்டினரி துறைல இருக்கலாம். இவிக வீடு மேற்கு திசைல இருக்கும். சேரி,தொழிற்பேட்டைய ஒட்டி அமைஞ்சிருக்கலாம். அங்கன எண்ணை செக்கு, எருமைகள் , ஸ்க்ராப் ,காயலான் கடைகள் கூட இருக்கலாம் .இவிக வீட்டுக்கும் 8 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .


7.புதன் தொடர்பான பெண்கள்:
ஆண்மை மிளிரும். (இதே பார்ட்டி  ஆணா இருந்தா பெண்மை மிளிரும்) .இவிக வாழ்க்கைக்கும் 5 ஆம் நெம்பருக்கும் நிறைய தொடர்பிருக்கும்.  பெருமாள் மனைவி  பேரை கொண்டிருக்கலாம்  .ஜாதகர் + அவிக குடும்பம்  போஸ்டல் எஸ்.டி.டி.மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவு, விற்பனை துறையில் இருக்கலாம். இவை  தொடர்பான படிப்பை படிச்சிருக்கலாம்.  வேலையும் இதே துறைகளில் அமையலாம். தாய் மாமன் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமிருக்கலாம். வீடே பஜார் தெருவில் இருக்கலாம். வைசிய குலத்தை சேர்ந்தவர்கள் க்ளோசா இருப்பாங்க.
8.கேது தொடர்பான பெண்கள்:
ராகு தொடர்பான பெண்களுக்கு சொன்ன அதே அம்சங்கள் இவிகளுக்கும் அமைஞ்சிருக்கலாம். உபரியா 4 ஆம் நெம்பர் ரெம்ப இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்கும். இவிக வீட்டுக்கு போற வழில வினாயகர் கோவில், சன்யாசி மடம் , சர்ச் அ தர்கா இருக்கலாம்.இவிக குடும்பமே ஒரு சன்னியாசிய ( கல்கி சாமியார் மாதிரி தம்பதி சமேதரா இருக்கிற பார்ட்டிய இல்லிங்க) ரெம்ப நம்பியிருக்கலாம்.வேதாந்தத்துல ஆர்வமிருக்கலாம். யோகா,தியானத்துல் ஆர்வமிருக்கலாம்.
9.சுக்கிரன்  தொடர்பான பெண்கள்::
இவிக ஃபேமிலி மெம்பர்ஸுக்கும்,இவிகளுக்கும் நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகங்களில் ஈடுபாடு. பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியவற்றிற்கும் இவர்கள் வாழ்வில் இடமுண்டு. வீடு வாகன யோகம் அமைஞ்சிருக்கும். உங்க வீட்டுக்கு தென் கிழக்கு திசைல இருப்பாய்ங்க. . ஓய்வு, விசேஷங்கள், ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டிகளூக்கு  முக்கியத்துவம் தருவர். 6 ஆம் நெம்பர் இவர்கள் வாழ்வில் நிறைய க்ராஸ் ஆகும். லட்சுமி,மலர்,கனி, வாசனை பொருட்களின் பெயர் கொண்டிருக்கலாம்  பிராமண இளைஞர் ஒருத்தர்  இவிக ஃபேமிலி  ஃப்ரெண்டா இருக்க வாய்ப்பு இருக்கு. இவிக வீட்டுக்கு போற வழில பழம் தரும்,கனி தரும் மரங்கள் இருக்கலாம். விமன்ஸ் ஹாஸ்டல்,விமன்ஸ் க்ளப் இருக்கலாம். ஏரியா பேர்லயோ வீட்டு பேர்லயோ பெண் பெயர் இருக்கலாம். உம்: துர்கா காலனி,  முத்துலட்சுமி தெரு
எச்சரிக்கை:
இந்த கணிப்பெல்லாம் ஒர்க் அவுட் ஆனாலும் அவிக ஜாதகத்தையும் வாங்கி உள்ளூர்ல  யாராச்சும் பொறுப்பான,தில்லான ஜோசியர் இருந்தா காட்டி பொருத்தம் பார்த்து முடிவு பண்ணுங்க பாஸ். சந்துல தோஷம் கீஷம் மாட்டிக்கிச்சுன்னா வம்பாயிரும். அப்பாறம் வாழ் நாள் எல்லாம் என்னை திட்டிக்கிட்டே இருப்பிக. எனக்கெதுக்கு அந்த பாவம்.