Wednesday, August 25, 2010

ஆசை 60 நாள் மோகம் 30 நாள்தானா? - 2

வணக்கம்ணே!

இந்த தொடர் பதிவோட முதல் அத்யாயத்தை  படிச்சவுக " என்ன இது  நம்ம  முருகேசன்.. எங்க சுத்தினாலும் கில்மாலயே வந்து நிக்கறாரே . நாட்ல பல்லாயிரம் பிரச்சினைகள் இருக்கிறச்ச இந்த ஒரு  பிரச்சினைக்கு மட்டும் இத்தனை இம்பார்ட்டென்ஸ்  தேவையா?"ன்னு  நினைச்சிருக்கலாம்.

குடல் கனத்த , மூத்திரப்பை நிறைஞ்ச மனிதன், மடி நிறைஞ்ச பசு, ஹீட்ல இருக்கிற நாய் இதெல்லாம் தன்னோட குறிப்பிட்ட  பிரச்சினையை தவிர வேற  எதையும் யோசிக்க கூட முடியாத நிலைல இருக்கும்.  அதை யோசிக்க வைக்கனும்னா மொதல்ல அதனோட பிரச்சினைக்கு ஒரு தீர்வை காட்டிரனும். அதை செய்யாம நீங்க வேற எதை பத்தி பேசினாலும் உபயோகமே கிடையாது.

நாட்டு சனத்தொகைல சரி பாதி ஆண், சரி பாதி பெண். ( இந்த விகிதம் கூட பெண் சிசுக்கொலையால மொக்கையாயிருச்சுனு  கேள்வி) . ஆண்,பெண்களுக்கு மட்டுமில்லே, திரு நங்கைனு சொல்ற க்ரூப்புக்கு கூட தனிய ஒரு செக்ஸ் லைஃப் இருக்கு. செக்ஸ் லைஃப் இல்லாத பார்ட்டியே கிடையாது.

நாம் பூமியின் குழந்தைகள். பூமி சூரியனின் குழந்தை. சூரியன்  இயற்கையின் குழந்தை. இயற்கையை உன்னிப்பா கவனிச்சா அதன் அடிப்படையே  சர்வைவல்தான்.சர்வைவல் மீன்ஸ் தன்னை தான் காப்பாத்திக்கிறது. தன் இனத்தை பெருக்கறது. (இல்லாட்டி அழிஞ்சு போயிரும்)  உயிர்கள் மட்டுமில்லே, ஒரு  பூவை எடுத்துக்கங்க. என்னென்ன சால்ஜாப்பு பண்ணுது? நிறம், மணம்,கவர்ச்சி எல்லாம் எதுக்கு வண்டை அழைக்க. வண்டு வந்தா என்ன லாபம்? மகரந்த தூள் அதனோட கால்ல ஒட்டிக்கிட்டு தன் பயணத்தை துவங்கும். அந்த பூவினம் பரவும். சர்வைவல்.

செக்ஸுங்கறதுக்கு அடிப்படை  சர்வைவல் இன்ஸ்டிங்ட். உயிர்வாழனும்ங்கற துடிப்புக்கு அடையாளம் செக்ஸ். வாழ்வின் உயிர்ப்பே செக்ஸ். செக்ஸின் நோக்கம் இனப்பெருக்கம். ஒருத்தன் செக்ஸை மறுத்தாலோ, அவனுக்கு செக்ஸ் மறுக்கப்பட்டாலோ அவன்ல உயிர்ப்பு நாளுக்கு நாள் மங்கி கிட்டே வரும்.

ஒரு பெண் குழந்தை 10 வயசு வரை எப்படி இருக்கு?  அடுத்த 2 அல்லது 3 வருஷத்துல அத்தனை மாற்றங்கள் எப்படி அத்தனை வேகமா ஏற்படுது? இயற்கை. இயற்கை உயிர்களுக்கு தந்திருக்கிற ஒரே உணர்வு (கடமை) இனப்பெருக்கம் தான்.
ஆணோ பெண்ணோ அவன்/அவள் தன் கடமையை செய்வாங்கற எதிர்பார்ப்புலதான்
இயற்கை எதை எதையோ வாரி வழங்குது.  இயற்கை உயிர்களுக்கு எதை  வழங்கினாலும் அதுக்கு பிரதியா இயற்கை எதிர்பார்க்கிறது இனப்பெருக்கத்தை தான்.

ஒரு சிறுமி குமரியாகி ஒரு அஞ்சாறு  வருஷம் வரை அவளுக்குள்ளருந்து என்னெல்லாம் வெளிப்படுது. ( பாஸ் நான் சொல்றது கலை,கவர்ச்சி இத்யாதி) இதெல்லாம் இயற்கை வழங்கற கொடை. எதுக்கு ?  மிஸ் இந்தியா ஆகவா? இல்லே. நை. நோ. நஹி. இனப்பெருக்கம் செய்ய, எதிர் பாலினத்தை கவர.

ஒரு சிறுவன் இளைஞனாகிட்டிருக்கிறப்ப பாருங்க அவனோட அன்வென்சர், கிர்யேடிவிட்டி, பரபரப்பு , துடிப்பு .

இதெல்லாம் இயற்கை வழங்கற கொடை. எதுக்கு ?  இன்னொரு சச்சின்  ஆகவா? இல்லே. நை. நோ. நஹி. இனப்பெருக்கம் செய்ய, எதிர் பாலினத்தை கவர.

இயற்கையும் ஒரு குறிப்பிட்ட காலம் இதையெல்லாம் வாரி வழங்கிக்கிட்டே இருக்கும். இவன் சுய இன்பத்துலயோ, ஸ்வப்ன ஸ்கலிதத்துலயோ  மட்டும் தான் தன் கொடையை செலவழிப்பான்னு கன்ஃபர்ம் ஆயிட்டா இயற்கை சைடு வாங்கிக்குது.

ஆணோ பெண்ணோ அவனோட அவளோட பீக் ஹவர்ஸ் . டீன் ஏஜ் தான். சகல திறமைகளும் உச்சக்கட்டத்தை பிடிக்கிறது இந்த கட்டத்துலதான். ஏன்? அந்த உயிர் இயற்கையின் எதிர்பார்ப்பான இனப்பெருக்கத்தை செய்யக்கூடிய நிலைல  - இனப்பெருக்கத்துக்கு தேவையான செக்ஸில் ஈடுபடக்கூடிய நிலைல இருக்கு.

இயற்கை அந்த பையனுக்கோ பெண்ணுக்கோ எதையெல்லாம் கொடுத்ததோ அதெல்லாம் ஜஸ்ட் இனப்பெருக்கத்துக்காக,செக்ஸுக்காகத்தான்.

பருவமடைந்த அவன்/அவள் செக்ஸை தவிர வேறு எதில ஈடுபட்டாலும்  இயற்கை தன் கொடைல வெட்டி விதிக்குது. 

நான் , செக்ஸை தவிர எதையும் சிந்திக்காதிங்க, எதையும் செய்யாதிங்கனு சொல்ல வரலை. நீங்க எதை செய்தாலும் அதன் பின்னாடி இருக்கிற பேசிக்கல் இன்ஸ்டிங்ட்ஸ் கொல்லுதல் அ கொல்லப்படுதல்.  எல்லா உயிர்களுக்கும் மூலம் ஒரு செல் அங்க ஜீவியான அமீபா ஓருயிர் ஓருடலா இருந்தப்ப நிச்சிந்தையா இருந்தம். அந்த  நிலைக்கு போக இந்த உடல் தான் தடைனு தப்பா நினைச்சு இந்த உடலை உதிர்க்கத்தான் கொல்லுதல் கொல்லப்படுதல்ங்கற ரெண்டு கான்செப்ட்.

இது ரெண்டுமே செக்ஸ்ல தான் சாத்யம். மேற்படி ரெண்டு பேசிக்கல் இன்ஸ்டிங்ட் செக்ஸுல நிறைவேறலன்னா வன்முறைக்கு இட்டு செல்லும். அல்லது பணம்,பதவி,பேர் புகழை  துரத்த சொல்லும். அதுக்காக சாகச்சொல்லும்.சாகடிக்க சொல்லும். ஒரு வேளை பணம்,பதவி,பேர் புகழெல்லாம் கிடைச்சுட்டாலும் (இதெல்லாம் செக்ஸுக்கான  போலி/மாற்றுதானே)  மறுபடி செக்ஸுக்கு தவிக்கச்சொல்லும்.

இந்த உண்மைகளையெல்லாம் புரிஞ்சுக்கிட்டு நாம எதை செய்தாலும் "அதுக்காக"தான் செய்யறோம். நம்ம டார்கெட் "கில்மா"தானு புரிஞ்சிக்கிடனும்.  அதுக்காகத்தானே இதுன்னு நீங்க அல்ஜீப்ரா படிச்சாலும் பளிச்சுனு புரியும்.  இந்த மாதிரி சிக்கலான தத்துவங்கள் கூட பல்பு போடும்.

அதை விட்டுட்டு எதுக்காக பண்றோம்னே தெரியாம லாலா கடை அல்வா தின்னா கூட போர் அடிக்கும்.கடுப்படிக்கும்.

வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்புன்னு ஒரு பதிவு போட்டிருக்கேன் படிங்க.

நீங்க பிறந்தது,படிச்சது,வேலைக்காக லோல்பட்டது, லோன் போட்டு வண்டி வாங்கினது, கண்ணலம் கட்டினது எல்லாமே கில்மாவுக்காகத்தான்.  நீங்க எது பண்ணாலும் கில்மாவுக்காகத்தான். இந்த சப் கான்ஷியஸ் ட்ரூத்தை புரிஞ்சிக்கிட்டா ஆசை 60 வருஷம் மோகம் முப்பதுவருஷம்னு 90 வயசுல கூட வாக்கிங் ஸ்டிக்கை சுழட்டிக்கிட்டு விசிலடிச்சுக்கிட்டே வாக் போவிங்க. காலனி பசங்கல்லாம் ஹாய் சொல்லும்.

அதை விட்டுட்டு  இயற்கை உங்களுக்கு கொடுத்த கொடைகளுக்கெல்லாம் காரணமான கில்மாவுக்காக கண்ணாலம் கட்டிக்கிட்டு.. கண்ணாலம் கட்டி  இத்தீனி வருஷம் ஆச்சு  என்ன சாதிச்சோம்னு மேற்கொண்டு யோசிக்க ஆரம்பிச்சா. நாறிருவிங்க. உங்க  தாம்பத்யம் மட்டுமில்லே சம்பாத்தியம் கூட சமாதியாயிரும். 

அட என்ன முருகேசன் ..24 மணி  நேரம் பலான நினைப்புலயே இருக்க முடியுமா?னு கேப்பிக. சொல்றேன்.  நீங்க எந்த நினைப்புல  இருந்தாலும் அதுக்கு அடிப்படை பலான நினைப்புத்தான்.

உங்க கிட்டே உடலுறவு இச்சை (இனப்பெருக்க திறன் மற்றும் ஆர்வம்) இருக்கிற வரை தான் நீங்க பெண் அ ஆண். அது மங்க ஆரம்பிச்சுட்டா சகலமும் சுருங்க ஆரம்பிச்சுரும். வற்ற ஆரம்பிச்சுரும் பயாலஜிக்கலா மட்டுமில்லை சைக்கலாஜிக்கலா கூட ஒரு பஸ் ஸ்டாப்ல ஒரு  பையன் பொண்ணு வேகாத மதிய வெய்யில்ல   நின்னு கடலை போட்டுக்கிட்டிருக்கிறதை பார்த்து "இவிகளையெல்லாம் நிக்க வச்சு சுடனும்"னு என்னைக்கு தோணுதோ அங்கே அன்னைக்கு உங்களுக்கு வாய்தா போச்சுனு அர்த்தம்.

நீங்க  முழுத்திறமையோட வேலை செய்யற வரைதான் எந்த நிறுவனமும் உங்களுக்கு முழு சம்பளம் கொடுக்கும். உங்க திறமை மங்கி கிட்டே வருதுனு வைங்க  சம்பளமும் குறைஞ்சிக்கிட்டே வரும். ஒன் ஃபைன் மார்னிங் வி.ஆர்.எஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிருவாய்ங்க.

இயற்கை கூட அவ்ளதான். உங்களுக்கு உடலுறவுல நாட்டம் இருக்கிற வரைதான் எல்லாத்தையும் அள்ளி அள்ளி கொடுக்கும்.  எழுச்சி, புடைப்பு, லூப்ரிகேஷன், மாதவிலக்கு,  ஞா சக்தி,அழகு,கவர்ச்சி,வலிமை,கிரியேட்டிவிட்டி எல்லாமே இயற்கையின் கொடை. இதுக்கு அது உங்க கிட்ட எதிர்பார்க்கிறது ஜஸ்ட் இனப்பெருக்கம். மினிமம் உடலுறவு ஆர்வம், உடலுறவில் ஈடுபடுதல்.

நீங்க சப் கான்ஷியஸா  செக்ஸுக்கு வழி கிடைக்கும்னு தான் படிக்கிறிங்க,வேலை தேடறிங்க, டூ வீலர் வாங்கறிங்க, கண்ணாலம் கட்டறிங்க. இன்னம் கொஞ்சம் பெட்டரா செக்ஸு அமைய பணம் தேடறிங்க. பதவி உயர்வு தேடறிங்க. ஆனால் எங்கயோ ட்ராக் மாறி அசலான உத்தேசம் காத்துல போயிருது. எப்ப உங்க உத்தேசம் காத்துல போயிருதோ அங்கன இயற்கை உங்களை கை விட்டுருது.

என்னமோ முருகேசன் நீங்க இதுக்கு அளவுக்கு மீறின முக்கியத்துவம் தராப்ல இருக்குனு முனகறிங்க. கேட்குது. சொல்றேன்.

ஒரு டீன் ஏஜ் பையன்  பையன் செத்துப்போயிட்டான்னு வைங்க.
"அய்யய்யோ ஒன்னுமே அனுபவிக்காம போய் சேர்ந்துட்டானே"ன்னு புலம்புவாய்ங்க. அவனே கண்ணாலமாகி நாலஞ்சு வருஷத்துல செத்துபோயிட்டானு வைங்க "அய்யய்யோ அனுபவிக்கிற வயசுல போய்சேர்ந்துட்டானே"ம்பாய்ங்க.

ஒரு அறுபது வயசாகி  செத்தானு வைங்க " ஹும் நல்லா அனுபவிச்சான். நல்லபடியா போய் சேர்ந்துட்டான்"னுவாங்க. இதுலருந்து என்ன தெரியுது மனித வாழ்க்கைல, இந்த கேடுகெட்ட ஹிப்பாக்ரடிக் சொசைட்டில கூட  மனுசங்க பார்வையில அனுபவிக்கிறதுன்னா செக்ஸ் தான்.  

எச்சரிக்கை:

செக்ஸுக்கு அப்பால மஸ்தா கீது நைனா. ஆனா அதெல்லாம் செக்ஸை சப்ஜாடா பார்த்து முடிச்சப்பாறம்தான் ஸ்க்ரீன் மேல வரும். அதுவரை செக்ஸ் செக்ஸ். ஜஸ்ட் செக்ஸ் தான் மண்டைல நிரம்பியிருக்கும்.  ஒருத்தன் செக்ஸை தங்கு தடை, குற்ற உணர்ச்சி இல்லாம அனுபவிச்சா தான் லைஃப் அர்த்தமுள்ளதா தோனும். சந்தோசத்துல இருக்கிறவன் அடுத்தவுகளை சந்தோசப்படுத்தி பார்ப்பான்.  துக்கத்துல உள்ளவன் துக்கப்படுத்தி தான் பார்ப்பான்.

அவனவன் புத்தி சாலித்தனத்தை பொருத்து சில காலம் கழிஞ்ச பிறவு செக்ஸ் தான் லைஃபானு கேள்விகள் எழும்பும். அந்த கேள்விகள் தான் மனித வாழ்வை உண்மையிலயே அர்த்தமுள்ளதாக்கும்.