Tuesday, August 17, 2010

மிஸ்டர் கலைஞர்! டேக் கேர் ! !




அண்ணா ஏ தாழ்ந்த தமிழகமேன்னு தலைப்பு வச்சாப்ல ஏ (கருணையில்லாத) கருணா நிதியே! ன்னுதான் தலைப்பு வைக்கலாம்னு நினைச்சேன். ஏ. கருணா நிதின்னு ஒரு பழம்பெரும் நகைச்சுவை நடிகர் இருக்காரேனு ஞா வந்தது. விட்டுட்டன். மிஸ்டர் கருணா நிதின்னு வைக்கலாம்னு பார்த்தேன். வேலூர் - சித்தூர் பயண நேரம் ரெம்ப குறைவா இருக்கவே விட்டுட்டன்.

நம்ம உத்தேசம் யாரையும் வெறுமனே கிழிக்கறதோ அவமானப்படுத்தறதோ இல்லிங்கண்ணா. நம்முது கைப்புள்ள கேரக்டர். "என்னங்க முருகேசன் ! வடிவேலுவை பி.எம் ஆக்க எதுன ஸ்கெட்ச் இருக்கானு கேட்டா அதுக்கும் மாஞ்சி மாஞ்சி ஐடியா கொடுக்கிற பார்ட்டி. தாத்தா மேல இன்னம் நமக்கு கவுரதை ,மரியாதையெல்லாம் மிச்சமிருக்குங்கோ.அதனாலதான் கலைஞர் தன்னோட வாழ்க்கை வரலாறை திருத்திக்க சஜஷன் தரேன்.

குரங்குக்கு கூடு கட்டிக்க சஜஷன் கொடுத்த குருவி கதையாயிர போவுதுன்னு உதறல் இருந்தாலும். தாத்தாவே தான் சொல்லி வச்சிருக்காரே. " கோழை வாழ்வதே இல்லை. வீரன் சாவதே இல்லை" அப்போ "மாவீரன்" (ரஜினி) கதி கூட அவ்ளதானா?

தாத்தா மேல இன்னமும் கொஞ்சூண்டு நம்பிக்கை ஒட்டிக்கிட்டிருக்க முக்கிய காரணங்கள் ரெண்டு ஒன்னு எமர்ஜென்சியை எதிர்த்தது. ரெண்டு எதிர்கட்சில இருந்தப்பயாச்சும் இலங்கை மேட்டர்ல ஆக்டிவா இன்டராக்ட் ஆனது.அதுக்காக ஆட்சியை இழந்தது. உபரியா மாறன் ப்ரதர்ஸ் உள்ளடி வேலையில இறங்கினப்ப

குருக்ஷேத்து அர்ஜுனன் மாதிரி பந்தம்,பாசம் எல்லாத்தயும் தூக்கி கூவத்துல போட்டுட்டு பதறடிச்சது.

காலேஜ்ல பசங்க கல்லூரி ஆரம்பமான நாள்ள இருந்து கடலை போடறது,ராக் பண்றது, பேட்ச் மெயின்டெயினென்ஸ் , பீடி,சிகரட்,பான்,பீடா, பப்,பார்ட்டினு காலத்தை கழிச்சுட்டாலும் காலேஜ் டே ,ஃபேர் வெல் ஃபங்க்ஷன் வந்துட்டா ஒரு மாதிரி ஒரு டீலாயிருவாய்ங்க. அதுலயும் ஃபைனல் இயர்னா கேட்கவே தேவையில்லை. காலேஜ் பக்கம் ஒதுங்காத பசங்க கூட அட்லீஸ்ட் பிட் பிரிப்பரேஷன்லயாவது இறங்கிருவாங்க

தாத்தா ஆட்சியோட இறுதிகட்டத்துல மட்டுமில்லை ஆயுளோட இறுதி கட்டத்துலயும் இருக்காரு. "சாகறப்ப சங்கரா சங்கராங்கறான்" ஒரு சொலவடை உண்டு. அதாவது வாழ் நாள் எல்லாம் பஞ்சமாபாதகங்கள் பண்ணிட்டிருந்தவன் கூட சாகற சமயத்துல கடவுளை நினைச்சு ஸ்வர்கத்துல கர்சீஃப் போட்டு வைக்க பார்க்கிறானு அர்த்தம்.

கீதைல கிஷ்டர் மரண தருவாயில் என்னை நினைத்தவன் என்னையே அடைகிறான்னு ஷார்ட் கட் ரூட்டெல்லாம் போட்டுவச்சிருக்காருன்னா. அதுமாதிரி கலைஞர் ஒரு நூறு தாட்டி டபுள் ப்ரமோஷன் அடிச்சு பெரியார், அண்ணா க்ரூப்ல சேர்ந்துர்ரதுக்கு ரூட் போடறேண்ணே.

திருக்குவளை சீர்த்திருத்த சிறுவர் சங்கம், நாடகம், முரசொலியை கையில எழுதி கைல கொண்டு வித்தது, காப்பரேஷன் எலக்சன்ல தி.மு. க வை செயிக்க வச்சு அண்ணா கையால கணையாழி வாங்கினது, அண்ணாவுக்கு இரங்கல் கவிதை "உன் இதயத்தை இரவலாக கொடுத்து செல் அண்ணா" - பி.ஜு பட்னாயக் தி.மு.க அதிமுக இணைப்பு ட்ரை பண்ணப்ப போட்ட நியாயமான நிபந்தனைகள் - 13 வருஷம் கட்சியை கட்டிக்காத்தது - பூமாலைங்கற வீடியோ கேசட்லருந்து சன் டிவியை வளர்த்தெடுத்தது இப்படி எத்தனையோ பொன்னேடுகள் தாத்தா லைஃப்ல இருக்கு.

நீண்ட ஆயுள் படைச்ச ட்ரெண்ட் செட்டர்ஸ் எல்லாம் இப்படித்தான் அவுட் டேட்டடாயிருவாய்ங்களாம். நான் தாத்தாவுக்கு சொல்றதெல்லாம் ஒன்னேதான். சரித்திரம் படைச்ச நீங்க இப்படி உங்க புகழையெல்லாம் இழந்து தரித்திரனா போய் சேரனுமான்னுதான்.

விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்னு அண்ணா,காமராஜர் சமாதில ஏத்திவச்சுட்டா போதாது பாஸு.ஏழை சனங்க வாழ்க்கையிலயும் ஒரு சிம்னி விளக்காவது ஏத்துவைங்க

பாஸ்ட் ஈஸ் பாஸ்ட். உங்க ஸ்டைல்ல சொன்னா நடந்தவை நடந்தவையா இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். நீங்களும் எங்க ஊர் திட்டத்தையெல்லாம் சகட்டுமேனிக்கு காப்பியடிச்சிங்க. சந்திரபாபு கிட்டருந்து உழவர் சந்தை, நமக்கு நாமே, ஒய்.எஸ்.ஆர் கிட்டருந்து 108 சேவை, காப்பீடு திட்டம்.

ஊர் பிள்ளை கிணத்துல இறங்கி வந்த பிறவாவது அழம் என்னனு தெரிஞ்சிக்கிட்டு அப்ளை பண்ணியிருக்கலாம். ஈயடிச்சான் காப்பிதான் அடிக்கிறிங்க. நிர்வாகத்துல புலின்னு ஒரு பட்டம் வேற இருக்கு.

ராமதாசு காங்கிரஸு தலைமைல கூட்டணி வரணுங்கறாரு. யானை இளைச்சதும் எலி பும்ஸவனத்துக்கு ( ஃபர்ஸ்ட் நைட்) முகூர்த்தம் கேட்ட கதையா இருக்கு.

காங்கிரசுக்கு 100 சீட்டு வேணமாம். டெப்புட்டி சி.எம் வேணமாம். பார்த்திங்களா தாத்தா நீங்க என்னவோ வயசான காலத்துல எதுக்கு ரிஸ்குன்னு தமிழினத்தையே பலி கொடுத்திங்க. வடவர் ஆணவப்போக்கை பார்த்திங்களா?

கல்கில தலையங்கம் எழுதறாய்ங்க.ராமதாஸு சொன்னது கரீட்டாம்.அதிமுக,திமுக நிழல் படியாத கட்சிகள் ஒன்னு சேரனுமாம். ஆக ஆமா நான் பாப்பாத்திதானு அறைகூவினாலும் ஜெயலலிதா அம்மா கூட அவாளுக்கு எங்கனயோ சரிய்யா ஆப்பு வச்சாப்ல தான் இருக்கு.

ஆனா பாருங்க அடுத்த பாராலயே விஜயகாந்த விட்டுர கூடாதாம். என்ன ரகசியம்னா விஜயகாந்த் பா.ஜ.கவோட போராட்டத்தை கையிலெடுத்துட்டாரு.

கலைஞரய்யா உங்களுக்கென்னா பாராட்டு விழா தானே வேணம் ( வயசாயிட்டா கிழவாடிங்க சின்னப்புள்ளத்தனமா பிஹேவ் பண்ணுவாய்ங்களாம்) நல திட்டம் ,இலவசம்லாம் நிறுத்திருங்கனு சொல்லமாட்டேன். தில்லில காங்கிரசுக்கு சப்போர்ட்டை வாபஸ் வாங்குங்கனு சொல்லமாட்டேன்.

அழகிரியை கட்சிக்கு தலைவராக்கி,ஸ்டாலினை சி.எம்மாக்கிட்டு - உங்க நிலைக்கு நடைபயணம் கூட தேவையில்லை. அதான் வீல் சேர் இருக்கே . இங்கன இருக்கிற மானமுள்ள தமிழனையெல்லாம் திரட்டிக்கிட்டு தில்லிக்கு புறப்படுங்க வீல் சேர் பயணம். உங்க பயணம் தில்லி எல்லைய தொடறதுக்குள்ள சோனியாம்மா இத்தாலி நோக்கி பறக்கலைன்னா அப்பாறம் வந்து என்னடா நாயேனு கேளுங்க.

அய்யா! அரசியல் சாணக்கியரே மந்தைல நுழைஞ்ச நரி மாதிரி காங்கிரஸ் தமிழ அரசியல்ல நுழைய பார்க்குது. சிங்கமும் 4 எருமைகளும் கதை தெரியும்ல. போயஸ் கார்டனுக்கு ஒரு கால் போடுங்க . காங்கிரஸ் களவாணிகளை சேர்த்துக்காதம்மா நமக்குள்ள ஆயிரம் இருக்கும். அதை அப்பாறம் பார்த்துப்போம்னு ஒரு பேச்சு சொல்லுங்க
எப்படியும் அடுத்த தேர்தல்ல திமுக காலி. இந்த கடைசிகட்டத்துலயாவது ஒய்.எஸ்.ஆர் தன் ரெண்டாவது ரெஜிம்ல செய்ய நினைச்ச அரசோட டெலிவரி மெக்கானிசத்தை சரி பண்ணிருங்க. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கொடுங்க, அதிகாரம் கொடுங்க. எங்க ஸ்டேட்ல முதியோர் உதவித்தொகைய நகராட்சி காரவுக வீடு தேடி கொடுத்துட்டு போறாய்ங்க. உங்க ஸ்டேட்ல அன்புடன் தமிழக முதல்வர்னு சீல் பொட்டு எம்.ஓ பண்ணிக்கிட்டிருந்திங்க. மாத்துங்கய்யா.

வீடு போ போங்குது. காடு வா வாங்குது. இப்பயாச்சு மாறுங்க மாத்துங்க. உங்க வாழ்க்கை வரலாற்று பொன்னேடெல்லாம் செதிலடிச்சு போச்சு .கட்டக்கடைசியா ஒரே ஒரு வரியாச்சும் உங்க வாழ்க்கை வரலாறுல நல்லதா இடம் பெறட்டும்.

நீங்க இத்தனை தாட்டி சி.எம் ஆகி பரிபாலனம் பண்ணிங்களே இந்த அரசு இயந்திரத்தை கட்டி எழுப்பினது ப்ரிட்டீஷ் காரன். அந்த காலத்து லெட்டர் ப்ரஸ் மாதிரி, கக்கூஸு மாதிரி நாறுது. இதை தூக்கி போட்டு புது இயந்திரத்தை இன்ஸ்டால் பண்ணிட்டு போங்க.

பல காலத்துக்கு மிந்தி ஏதோ தீபாவளி மலர்ல மிட்டாய்னு ஒரு கதை படிச்சேன். அதுல ஒரு கேரக்டர் . திவால் பார்ட்டி. செலவை சுருக்க மட்ட சரக்கு, மட்ட சோறுன்னு விழுங்கி வைக்கும். உள்ளாற போனது வெளிய வந்துராம படக்குனு ஒரு மிட்டாயை வாயில திணிச்சுக்கும். அந்த பார்ட்டிக்கு ஒரு பட்லி.

மிட்டாய்ய் பார்ட்டியோட மனைவி தன்னை தேடிவந்து கதறிட்டு தற்கொலைக்கு ரயிலை தேடி ஓட அவளை விலக்கிட்டு தான் செத்து போகுது அந்த பட்லி. நாற வாழ்க்கைய வாழ்ந்த அவள் மிட்டாய் மாதிரி ஒரு வேலைய செய்துட்டான்னு கதாசிரியர் கதைய முடிக்கிறார்.

தாத்தா .. உதவாக்கரை தமிழ் படங்களுக்கு வசனம் எழுதினது போதும், வசன மழை பொழிஞ்சது போதும். ஒரு ஃபெடல் காஸ்ட்ரோ மாதிரி சரித்திரத்துல இடம் பிடிக்க ஒரு கர்சீஃபை கொடுத்திருக்கேன். இதை உங்க தலைல போட்டுக்கிட்டு பாய்ங்களை ஏமாத்துவிங்களோ? இல்லை சனம் தலை மேல போட்டு ஒழிச்சு கட்டிருவிங்களோ ? உங்க சவுரியம்.

பி.கு:
வேலூர்லருந்து டாக்ஸி மட்டும் அனுப்பிராதிங்க தலைவா! (அம்மாவுக்கும் உங்களுக்கும் இருந்த வித்யாசமெல்லாம் குறைஞ்சுக்கிட்டே போகுது) இந்தியாவை பணக்கார நாடாக்க ( சன் க்ரூப் ரேஞ்சுக்குஇல்லைனாலும்) ஆப்பரேஷன் இந்தியா2000 ன்னிட்டு ஒரு ப்ளான் வச்சிருக்கேன். இதை பத்தி கழுகுங்கற வலைச்சரத்துல பதிவு போடனும். நம்ம கச்சேரிய அப்பாறம் வச்சிக்கலாம். நான் வடிவேலு மாதிரி. எங்க போகபோறேன்.