Thursday, August 26, 2010

ஆசை 60 நாள் மோகம் 30 நாள்தானா? -3

அண்ணே வணக்கம்ணே,

நேத்தைய அத்யாயத்துல செக்ஸோட முக்கியத்துவம் என்னனு பார்த்தோம். இது முடிஞ்சு போச்சுனு நினைக்காதிங்க. இன்னம் எத்தனையோ இருக்கு. சந்தர்ப்பம் வரப்பல்லாம் அள்ளி தெளிச்சுக்கிட்டே போவோமில்லை.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த செக்ஸை ஏன் சமுதாயம் ஏறக்குறைய தடை பண்ணிருச்சு?

செக்ஸ்ங்கறது ஒரு வேக்குவம். இந்த வேக்குவம் டைரக்டா செக்ஸ்ல செலவழிஞ்சு போச்சுன்னா சனங்களால சமுதாயத்துக்கு எந்த லாபமும் இருக்காது.  பல பன்னாடைங்க பீ தின்னு, தின்னு தின்னாம ,பெண்டாட்டி எவனோட படுக்கிறா,மகள் எவனோட போய் வர்ரானு கூட பார்க்காம ரவுண்ட் தி க்ளாக்   பணம் பணம்னு அலையறான். இதுக்கு காரணம் என்னனு சொல்லியிருக்கேன்.அவன் பணத்தை பணமா பார்க்கலை . செக்ஸுக்கு மாற்றா ஃபீல் பண்ணான். உணர்ந்தான்.

செக்ஸுல என்னெல்லாம் நடக்குதோ, என்னெல்லாம் கிடைக்குதோ அதெல்லாம் பணத்துல கிடைக்குது (ன்னு நம்பறான்) , உபரியா எதிர்காலத்துல செக்ஸ் கூட கிடைக்கும்னு கணக்கு போடறான் ( சப் கான்ஷியஸா) . அவலை நினைச்சு உரலை இடிக்கிறதுக்கும்,  சுய இன்பம் அனுபவிக்கிறதுக்கும் இதுக்கும் எதுனா பெரிய வித்யாசம் இருக்கா பார்த்திங்களா?

இந்த நிலை ஏன் வந்தது? செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருந்தது. (பட்டிருக்குது)  அதனால செக்ஸுக்கான வேக்குவம் மடைமாற்று செய்யப்பட்டு (டைவர்ஷன்) சிஷ்யன் பணம் பொறுக்க ஆரம்பிச்சான். இவனுக்குள்ள இருக்கிற செக்ஸுக்கான வேக்குவம் இயற்கை கொடுத்தது. அதனோட உத்தேசம் இனப்பெருக்கம். இவன் காச பொறுக்கி வேற எதையோ பெருக்கி (ஃபேக்டரீஸ்,ப்ராஞ்சஸ், ப்ராடக்ட்ஸ் ஏதோ ஒரு இழவு) தன்னைதானே ஏமாத்திக்கிறான். இவன் காசு பொறுக்கிற ப்ராசஸ்ல ஹி ஈஸ் ஃபீடிங் தி சொசைட்டி.

ஒரு சமுதாயத்துல அவனவன் செக்ஸுக்கான வேக்குவமை செக்ஸுல மட்டும் செலவழிச்சுட்டு எனக்கு காசு வேணா,பணம் வேணா, பதவி வேணா,அதிகாரம் வேணா, பெயர் வேணா, புகழ் வேணா, படைப்புத்திறன் வேணா, கலைகள் வேணாம்னு இருந்துட்டான்னா அந்த சமுதாயம் உருப்படுமா?

ஆஃப்டர் ஆல் நிலக்கரி பூமியோட அழுத்தத்துலயும் சூட்லயும் வைரமா மாறுது.அந்த மாதிரி இந்த செக்ஸுக்கான வேக்குவம் வேற ஏதோ ஒரு வடிவத்துல வெளிப்பட்டா தான் சமுதாயத்துக்கு லாபம். அதனாலதான் செக்ஸை ஏறக்குறைய தடை செய்துவச்சாய்ங்க.

மேலும் அந்த காலத்துல  சனங்க அறியாமைல  வாழ்ந்ததால கு.க மாதிரி மேட்டர் எல்லாம் தெரியாது. ஜென்யூனா  டைரக்டா  பெத்துக்க ஆரம்பிச்சுருவாய்ங்க.
" (கவிதைகளை) குழந்தைகளை படைப்பதனால் பிரம்மனாகிறோம்"னு சுப்பீரியரா ஃபீல் பண்ணி தேங்கி போயிர்ர காலம் அது.

என்னங்கடா இது இம்சையா போச்சு அவனனவன் பெத்துத்தள்ளி தன் வேக்குவத்தையெல்லாம் ஒழிச்சுட்டு தேங்கிபோயிர்ரான். சமுதாயத்துக்கு எந்த பலனும் இல்லாத போகுதேனு பிரம்மச்சரியம், அது இதுனு ஊத்திவிட ஆரம்பிச்சாய்ங்க.  அதனால வேக்குவம் உருவாச்சு. உருவான வேக்குவம் உரு மாறி கல்லணை கட்டினாய்ங்க,கப்பல் கட்டினாய்ங்க.

இந்த கண்ணாலங்கற ஏற்பாடே மனுசனுக்குள்ள இருக்கிற வேக்குவம் செக்ஸுல முழுக்க செலவழிஞ்சுராத இருக்க பண்ண ஏற்பாடுனு தோனுது.

( தன் உழைப்பால பண்படுத்தப்பட்ட நிலம் தன் வாரிசுக்கே சேரணும்னு பண்ண ஏற்பாடுன்னும் சொல்றாய்ங்க . இல்லேங்கலை)

என்ன முருகேசன் !   மனுஷனோட பேசிக்கல் இன்ஸ்டிங்ட் கொல்லுதல், கொல்லப்படுதல்  இது நிறைவேர்ரது செக்ஸுலதான். மனித உடல்,மனம்,புத்திக்கெல்லாம் மையம் செக்ஸுதான்னு சொல்லிக்கிட்டு வந்திங்க ஓகே.

இதுக்கு கண்ணாலம் பெஸ்ட் சொல்யூஷனில்லையா? உனக்கே உனக்குனு ஒரு குட்டிய தள்ளிவிட்டுட்டா அவன் கப்பாசிட்டிக்கு ஒரு நாளைக்கு மூணு ஷோ, நாலு ஷோ ,மிட் நைட் ஷோ போட்டுக்கிட்டு குஜிலியாயிருவானில்லையா?

ஆனா  நீங்க இந்த கண்ணாலங்கற ஏற்பாடே மனுசனுக்குள்ள இருக்கிற வேக்குவம் செக்ஸுல முழுக்க செலவழிஞ்சுராத இருக்க பண்ண ஏற்பாடுன்னு சொல்றிங்களே லாஜிக் உதைக்குதே.

உங்கள்ள ஆர்ட்ஸ் ஸ்டூடெண்ட்ஸ் எத்தீனி பேரு கைய தூக்குங்க. படிக்கிற காலத்துல ஒழுங்கா எக்கனாமிக்ஸ் சப்ஜெக்டை படிச்சவுக எத்தீனி பேரு? எக்கனாமிக்ஸ்ல ஒரு சூப்பர் தியரி இருக்குங்கண்ணா . அதனோட பேரு " தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டி". இது என்ன ஏதுனு ரோசிச்சு வைங்க. அடுத்த பதிவுல பார்ப்போம்.

(பொறுமை இல்லாதவுக நம்ம ப்ளாக்லயே தேடிப்பாருங்க. முன்னொரு காலத்துல இதை பத்தி எழுதினாப்ல ஞா)