Showing posts with label bedlife. Show all posts
Showing posts with label bedlife. Show all posts

Monday, September 13, 2010

மனைவி அமைவதெல்லாம் : 2

நாம எல்லாரும் வாழ்ந்துக்கிட்டிருக்கிற வாழ்க்கை ஒன்னுதான் . அதை ஸ்வர்கமாவோ, நரகமாவோ மாத்திக்கிறது நம்ம கையில தான் கீது. இதையே பெண்டாட்டி மேட்டருக்கும் அப்ளை பண்ணி பாருங்க.



ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னதா ஞா. இந்த பொம்பளைகல்லாம் கண்ணாலத்துக்கு முந்தி வேணம்னா ஒவ்வொருத்தரு ஒவ்வொரு கேரக்டரோட இருக்கலாம். ஆனால் எந்த பெண்ணா இருந்தாலும் கண்ணாலத்துக்கப்பாறம் மனைவின்னு ஒரு ஜந்துவா மாறிர்ராய்ங்க.



ஆண்களும் இப்படித்தான் கண்ணாலத்துக்கு முந்தி தான் டிஃப்ரண்ட் கேரக்டர்ஸ். கண்ணாலத்துக்கப்பாறம் கணவன்ங்கற விசித்திர ஜந்துவா மாறிர்ராய்ங்க.



இந்த ரெண்டு ஜந்துக்களுக்குமே தாங்கள் ஏதோ ஸ்வர்கத்துல இருந்தாப்லயும் எதிராளி ( லைஃப் பார்ட்னர்) தங்களை காலை தடுக்கிவிட்டு நரகத்துல தள்ளிட்டாப்லயும் ஒரு எண்ணம் உண்டு



கண்ணாலம் மட்டும் நடக்காம இருந்திருந்தா தான் முகேஷ் அம்பானி அ அனில் அம்பானிக்கு ரேஞ்சுக்கு போயிருப்போம்னு கணவர்களோட நினைப்பு.



கண்ணாலம் மட்டும் நடக்காம இருந்திருந்தா தான் ஐஸ்வர்யா ரேஞ்சுல நித்ய யவ்வனத்தோட பூத்து குலுங்கியிருப்போம்னு பெண்டாட்டிகளோட நினைப்பு.



அவிக நினைப்புகள் தன்னிலையில..



கணவன்:

அய்யய்யோ அவள் கும்பலே சரியான பீத்த கும்பல். ஏதோ நான் முட்டி மோதி இந்த பன்னிய ஒரு ரேஞ்சுக்கு கொண்டு வந்தேன். இல்லேன்னா இது கூட சாணி அள்ளிக்கிட்டு தான் இருந்திருக்கும்



மனைவி:

அய்யய்யோ அவரு சைட் ஆளுங்கல்லாம் சரியான குடிகார கும்பல். பேச்செடுத்தா கத்தி குத்து கொலை தான். ஏன் நானுன்ன வாசி எல்லாத்தயும் அடக்கி ஒடுக்கி இந்த ரேஞ்சுல வச்சிருக்கன்.



கணவன்:

என்னமோப்பா கண்ணாலமாகி ஒரு 3 மாசம் எல்லாம் சரியாத்தான் போயிட்டிருந்தது. இவள் கர்பம்னு பார்த்துட்டு போக அவிக கும்பல் வந்து போச்சு பாரு அன்னைக்கு பிடிச்சது சனி



மனைவி:

ஹும்.. கண்ணாலமாகி ஒரு 3 மாசம் எல்லாம் சரியாத்தான் போயிட்டிருந்தது. இவருக்கு வைரல் ஃபீவருன்னு பார்த்துட்டு போக அவிக கும்பல் வந்து போச்சு பாரு அன்னைக்கு பிடிச்சது சனி



இது மாதிரி இன்னம் நிறைய இருக்கு. அதையெல்லாம் போட்டு உடைச்சா நான் ஏதோ கட்டிலடியில ஒளிஞ்சிருந்து பார்த்தேனோன்னு சனத்துக்கு ஒரு சந்தேகம் வந்துரும்.எனக்கென்னத்துக்கு பாஸ் அந்த வில்லங்கம்?



இப்படி ஆண் ,பெண்கள் விசித்திர ஜந்துக்களா மாற கவுண்டர் பார்ட்டுகளான பெண்கள், ஆண்களும் ஒரு முக்கிய காரணம். என்னதான் முயற்சி பண்ணாலும் அந்த மாற்றத்தை தள்ளி போட முடியுமே தவிர நிரந்தரமா தடுக்க முடியாது.



அப்படி தள்ளிப்போட நாம பண்ணவேண்டியது கேஸ் ஸ்டடி . அதாவது மனைவிங்கற பாத்திரம் ஏன் நம்ம லைஃப்ல என்ட்ரி கொடுக்குது?எத்தனையோ சோகக்கதைகளை கேட்டும் மறுபடி மறுபடி ஆண்கள் ஏன் கண்ணாலம் கட்டிக்கிடறோம்? இதனோட முன் கதை என்ன? இதுக்கெல்லாம் பதில் தேடி புறப்பட்டா இந்த தொடர்பதிவு மெகாசீரியல் கணக்கா நீளும். இருந்தாலும் சுருக்க முடிக்க தம் கட்டி பார்ப்பம்



ஆணோட தேவை வெறுமனே ஒரு பெண் தான்னா விலைவாசி கொஞ்சம் போல ஏறியிருந்தாலும் பஜார்ல சொப்பு சொப்பா சீப்பு சீப்பா கிடைக்குது. எய்ட்ஸுக்கெல்லாம் கேண்டோம் முறிவு இருக்கு. அப்பாறம் ஏன் அவனவன் சொட்டை தலைய நாலு மயிரால நிரவி ஃபோட்டோ எடுத்து ப்ரோக்கர் கிட்ட கொடுத்து கண்ணால மார்க்கெட்ல என்ட்ரி கொடுக்கான்?



ஒரு எலக்ட்ரானிக்ஸ் ப்ராடக்ட்ல ஆன் ஆஃப் ஸ்விட்ச் இருக்காப்ல மனித மூளைலயும் ஆன் ஆஃப் ஸ்விட்ச் இருக்கு. அதாவது தன்னைத்தான் காப்பாத்திக்கனுங்கற வெறி இருக்கிறாப்லயே தன்னைத்தான் அழிச்சுக்கனுங்கற வெறியும் இருக்குது.



ஒரு ஆண் தன்னை அழிச்சுக்க ஒரு பெண்ணை கண்ணாலம் பண்ணிக்கிறதை விட பெட்டர் சாய்ஸ் வேற கிடையாது. அதுமட்டுமில்லை ஒரு பெண் தன்னை தான் அழிச்சுக்க ஒரு ஆணை கண்ணாலம் பண்ணிக்கிறதை விட பெட்டர் சாய்ஸ் வேற கிடையாது.



ஆக ஆணும் பெண்ணும் ஒருத்தரை ஒருத்தர் அழிச்சுக்கத்தான் கண்ணாலம் கட்டறாய்ங்க. ஒரேயடியா அழிக்கிற தில், தம்,தாக்கத்,கலேஜா இருக்கிறவுக ஒரே தவணைல போட்டுத்தள்ளிட்டு தந்தில செய்தியா வந்துர்ராய்ங்க. மேற்படி சமாசாரமெல்லாம் இல்லாதவுக தவணைல அழிச்சுக்கறாய்ங்க. கண்ணாலத்தோட ஒரே நோக்கம் இதுதான்.



என்ன அண்ணாத்தை வயித்துல கடபுடாங்குதா? உட்காரு சொல்றேன். டூ இன் ஒன் தெரியுமில்லையா? பொம்பளையும் அப்படித்தான் நீ சாகனும்னாலும் அவதான் . மறுபடி பிறக்கனும்னாலும் அவ தான் கதி.



மறுபடி பிறக்கிறதுன்னா எப்படி? நீங்க குழந்தையா இருந்தப்ப அம்மாலருந்து, அக்கம்பக்கத்து ஆன்டிங்க வரை க்ளோஸா மூவ் ஆகியிருப்பாய்ங்க, எப்ப உங்க உதட்டு மேல கருமை , குரல்ல கரகரல்லாம் வந்ததோ அவிகல்லாம் அபவுட் டர்ன் அடிச்சு உங்களை விட்டு விலகி போயிட்டாய்ங்க. இதுக்கு காரணம் உங்க காமம்.



என்னதான் நீங்க நான் உத்தமன்னு விபூதி,சந்தனம் குங்குமம்லாம் தரிச்சு சீன் போட்டாலும் முகத்துல பருவும், கண்ல காமமும் உங்க உள்ளத்தை காட்டி கொடுத்துரும். உங்கள்ள உருவான காம நினைவுகள் முழுக்க ஒழிஞ்சா தான் உங்க முகம்,கண்கள் எல்லாம் மறுபடி பழைய மாதிரி ஆகும். அப்பத்தான் தாய்குலம் உங்களை பழையபடி நெருங்கும்.



டீன் ஏஜ் எஃபெக்டால உங்களுக்குள்ள செத்துப்போன கல்மிஷமில்லாத சிறுவன் மறுபடி பிறந்து வரணும்னா அதுக்கு பெண் தான் உதவனும். பெண் என்றால் யாரோ பெண் அல்ல பெண்டாட்டிதான்.



அடங்கொக்கா மக்கா காமம் தீர பொம்பளைதானே தேவை நீ என்னவோ பெண்டாட்டி தேவைங்கறேம்பீக . சொல்றேன்.



ஒரு ஆம்பளை வயசு/பருவம் வந்ததுலருந்து தினம் தினம் ஒரு பொம்பளையோட செக்ஸை அனுபவிச்சா அவனால 100 வயசுல கூட காமத்தை ஜெயிக்க முடியாது. அவனுக்குள்ள புதைஞ்சு போன கல்மிஷமில்லாத சிறுவனை மறுபடி பிறப்பிக்க முடியாது.



இங்கன பயாலஜி,செக்ஸாலஜி,சைக்காலஜி, எக்கனாமிக்ஸ்ல வர்ர தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டி எல்லாம் வேலை செய்தாகனும். அப்பத்தான் காமத்தை தாண்டி வரமுடியும். காமத்தை தாண்டி வந்தாதான் தாய்குலத்தோட நெருக்கம் மறுபடி கிடைக்கும்.



பயாலஜி & செக்ஸாலஜி:

:

(பல தடவை சொன்னதுதான் 23 Vs 7) ஏழு அசைவுலயே விந்துவை வெளிப்படுத்திர்ர பலகீனம் குறைஞ்சு 23 ஐ எட்டிப்பிடிக்கனும்னா ஒரே பெண்ணோட வருஷக்கணக்கா உடலுறவு கொள்ளனும். அவளோட மனசுல மறைஞ்சிருக்கிற சாடிசம், சதி, பொறாமை, பொய்,வேஷம், மாதவிலக்கு, வெள்ளைப்படுதல், வயித்துவலி எல்லாம் இவனுக்கு விளங்க விளங்க அவள் மேல இருக்கிற மோகம் நிலத்தடி நீர் கணக்கா பாதாளத்துக்கு போயிட்டே இருக்கும். அப்பத்தான் 7 டு 23 சாத்தியமாகும். இதெல்லாம் நம்ம முன்னோர்கள் கணக்கு போட்டுத்தான் கண்ணாலங்கற சிஸ்டத்தை கொண்டுவந்திருக்கனும்.



சைக்காலஜி:

எனக்கு ஒரு ஜாதகம்ங்கறது 12 சேனல் கொண்ட ஒரு போர்ட்டபிள் டிவி மாதிரி. அதை பார்க்க பார்க்க ரெம்ப சுவாரஸ்யமா இருக்கும். ஆனால் இன்னைலருந்து தினசரி 15 நிமிசத்துக்கு ஒரு ஜாதகம்னு பலன் சொல்லிட்டே இருக்கனும். 10 டு ஃபைவ் ஒர்க்கிங் ஹவர்ஸுனு டீட் சைன் ஆயிட்டா இப்ப இருக்கிற ஆர்வம் நிச்சயமா இருக்காது. இது ஹ்யூமன் சைக்காலஜி. எது கட்டாயமோ அது எத்தனை இனிமையானதா இருந்தாலும் கசப்பா மாறிரும். எது கட்டாயமில்லையோ அது எத்தனை கோரமானதா இருந்தாலும் இனிப்பா மாறிரும். ( சின்ன வயசுல புளியங்கா அடிச்சு பச்ச மிளகா சேர்த்து அரைச்சு தின்னு தயிர் சோத்தை தின்னாக்கூட நெருப்பை வாரி வாயில கொட்டின எஃபெக்டை அனுபவிச்சிருக்கிங்களா? பேதியே புடுங்கிக்கினு அவஸ்தை பட்டு இருந்தாலும் மறுபடி மறுபடி போய்த்தானே இருக்ககோம் )



தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டி:

முதல் லட்டை சாப்பிட்ட ஆகா ஓகோ, ரெண்டாவதுக்கு ஆகா , மூணாவதுக்கு போதும்பா . இதான் இத்தனாம் பெரிய சப் ஹெடிங்குக்கு மேட்டரு.



ஆக தங்களை கொல்லவும், புதுசா பிறப்பிச்சுக்கவும்தான் ஆண் கண்ணாலம் கட்டறான்.



நம்ம ப்ளாகை தாய் குலம் சீந்தறதில்லைன்னாலும் அவிக பார்வையிலருந்து சில விஷயங்களை சொல்லியே ஆகனும். டீன் ஏஜ்ல ஒரு பெண் ஒவ்வொரு ஆணாலயும் கேவலம் ஒரு துளையாத்தான் பார்க்கப்படறாள். அந்த பருவத்துல அது பெருமையா இருந்தாலும் சில நாள்ள அது ஒரு வித அபத்திரத்தை ,அதிருப்தியை தந்துருது.



பேசிக்கலி அவளோட கேரக்டர் தாய். அந்த தாய்ங்கற கேரக்டரை எட்டிப்பிடிக்க கொடுக்கப்பட்டதுதான் அழகு,கவர்ச்சி இத்யாதியெல்லாம். அதனால தான் வேறும் பெண்ணா பார்க்கப்படறது அவளுக்கு அலுப்பை கொடுக்குது. என்னதான் அச்சம், நாணம், மடம், பயிர்ப்புன்னு பில்டாப் கொடுத்தாலும் அவளுக்குள்ளும் மோகம் இருக்கு. ஒன்னு அந்த மோகம் தீரனும் அல்லது அது தீரவே வழியில்லே. அதுக்கான சத்தா, மஸ்த் தன் கணவனுக்கு இல்லேங்கறதை புரிஞ்சிக்கிடனும் இந்த ஸ்டேஜ் வந்தாதான் அவள் ஒரு தாயா பரிணமிக்கிறாள். அதைத்தான் அவளோட அடி மனசு விரும்புது.



என்னோட ஓருயிர் -ஓருடல் - அமீபா- செல் காப்பி- காப்பி எர்ரர் - புது ஜீவராசி- தனிமை, இன்செக்யூரிட்டி சித்தாந்தத்தை ஞா படுத்திக்கங்க. உயிர்கள் மறுபடி ஏகமாக தடை இந்த உடல்ங்கற பிரமை இருக்கு - உடலை உதிர்த்தா இணையலாங்கற மூட நம்பிக்கையும் இருக்கு. அதுக்குத்தான் கொல்லுதல் -கொல்லப்படுதலுக்கான விருப்பம். இதெல்லாம் உடலுறவுல மட்டுமில்லை. திருமண வாழ்க்கையிலயும் சாத்தியமாகுது.



எதை கொல்றாய்ங்க? எதிராளியோட ஈகோவை கொல்றாய்ங்க. எதுக்கு ஆன்மாவை ஈகோ மறைச்சிருக்கு. ஈகோ அழிஞ்சா ஆன்மா பிரகாசிக்கும்.ஆன்மாவுக்கு பிரிவு- மறுபடி சேரனுங்கற வெறி கிடையாது. ஏன்னா ஆன்ம வடிவத்துல ஆல்ரெடி நாமெல்லாம் இன்டர்லிங்க்ட்.



நாயே நீன்னா அது உன் ஈகோ இல்லடா கண்ணா அதுக்கு அப்பால என்னமோ இருக்ககு. அதை நீ உணர்ந்துக்கத்தான் உன் ஈகோவை சீண்டறேன்னு ஒரு பெண்டாட்டிக்கு தெரியாம இருக்கலாம். ஆனால் அது அவளோட நினைவிலி மனசுக்கு தெரியும்.



ஆக எப்படி பார்த்தாலும் கண்ணாலங்கறது இன்னொரு உயிரோட இணையற முயற்சித்தான். உடலுறவுல உடல் அளவில் சில நிமிடங்கள் இது சாத்தியமாகுது. குழந்தை உண்டாகியிருக்கிறப்ப ஒரு பத்து மாசம் ஒரு பெண்ணுக்கு இது சாத்தியப்படுது. ஆணுக்குத்தான் இது அசாத்தியம். என்னதான் குழந்தைய எடுத்து கொஞ்சி , நெஞ்சோட அணைச்சாலும் அது சின்ன தா ஏப்பம் விட்டா கூட " ஏய்

இதுக்கு வாந்தி வராப்ல இருக்கு இந்தா"ன்னுட்டு எந்திருச்சு போயிர்ர நிலை தான்.



ஒரு ஆணால உயிர் வரை இணையறதுங்கறது சாத்தியமில்லேன்னு தான் சொல்லனும். ஆனால் பெண் தன்மை மிக்க ஆண்கள் வரபிரசாதிகள். இவிக அதுக்கான முயற்சில ஈடுபட ஆரம்பிக்கறச்ச பெண்ணுக்கு (மனைவி) " என்ன இந்தாளு நமக்க்கு போட்டியா வந்துருவான் போலிருக்கேன்னு ஒரு ஜெலஸ் வந்துருது. அவன் ஈகோவை சீண்டி அவனை முழு ஆணாக்க தன்னாலன முயற்சியெல்லாம் பண்ண ஆரம்பிச்சுர்ரா.



"ஏம்பா இந்த பாய்ஸ் எல்லாம் இப்படி இருக்கா" னு பேசிக்கிற வாலைக்குமரிகள் முதல், ஹும்.. இந்த வயசுல இந்த கிழத்துக்கு பில்டாப்பை பாரேன்னு முகவாய் கட்டைய தோள்ள இடிச்சிக்கிற பேரிளம்பெண்கள் வரை உணராத ஒரு சத்தியம் என்னன்னா..



இவிக கற்பனை உயிர்பெற்று ஒரு ஆண் இவிக லைஃப்ல என்ட்ரி கொடுத்தா தாளி பத்து நா இவிகளால தாங்க முடியாது. " ஹேய் இன்னைக்கு உங்க அண்ணா அண்ணி ஊர்லருந்து வராங்கண்ணியே போவலை"ன்னு டீன் ஏஜ் குமரியும், "அய்யே.. ரொம்ப வழியாதிங்க.. என்ன இன்னைக்கு கிளப்புக்கு போகலியான்னு பேரிளம்பெண்ணும் துரத்தி விட்டுருவாய்ங்க.



ஏன் இப்படி ? எலி பூனைய துரத்துறதை பத்து மினிட் மார்க்கலாம் 30 மினிட் பார்க்கலாம். வாழ முடியுமா? எலி எலி தான். பூனை பூனைதான். எலி எலியாத்தான் இருக்கனும் பூனை பூனையாத்தான் இருக்கனும்.



அதுக்குன்னு நான் தாய்குலத்தை கிச்சன்ல சிறைவைக்க சொல்லலை. உங்க பாடி மைண்டோடசெயல்பாடுகளை தீர்மானிக்கிறது ரத்தத்துல கலக்கிற கெமிக்கல்ஸ். அதை சுரக்கிறது நாளமில்லா சுரப்பிகள். அந்த சுரப்பிகளோட ராசா ஹைப்போ தலாமஸ். அதை கட்டுப்படுத்தறது உங்க எண்ணம். உங்க எண்ணங்களுக்கு ஆதி மூலம் ஆன்மீக பாஷைல சொன்னா வாசனை. உயிரியல் பாஷைல சொன்னா ஜீன்ஸ்.



விதி வழியே மதிங்கறாய்ங்களே.. அது பிரம்மன் எழுதின விதியில்லை. உயிரியல் விதி. யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே. இடம் மாறினா நாறிர வேண்டியதுதான்.



ஆண் தன்மை மிக்க பெண்கள் இருக்கலாம். அவிக வேணம்னா என்ன வேணம்னா பண்ணிட்டு போவட்டும். சராசரி பெண்கள் தங்கள் மனசு, உடம்பு இயல்புக்கு ஏத்தபடி வாழ்ந்தா அதுவே பெட்டர். இல்லாட்டி தாளி மாதவிலக்கே நின்னுரும். மீசை முளைக்கும். தாடி வரும். குரல் கூட கரகரவாயிரும். அப்பாறம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தான்.



சரி நீட்டி முழக்கி ஆரம்பிச்ச இந்த பதிவை முடிக்க வேண்டிய கட்டாயம். நாட்ல உள்ள புருசன் பொஞ்சாதிக்கு நான் சொல்ல விரும்பறது என்னன்னா..



மேலே சொன்ன விசயங்களை இன்னொரு தாட்டி படிங்க. புரிஞ்சிக்கிடுங்க. இது ஜஸ்ட் மெடிக்கல் ப்ரிஸ்க்ரிப்ஷன் மாதிரி. இது ஒன்னும் ஓம்கார் ஸ்வாமிகள் தர்ர சக்கரமில்லை தலையணைக்கு கீழே வச்சிட்டு தூங்க. படிங்க ஃபாலோ பண்ணுங்க.



கணவன்/மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமில்லை. நீங்க கடந்த பிரிவை முடிச்சுட்டு ஆன்ம ரூபத்துல இருந்தப்ப ப்ரிப்பேர் பண்ண கொட்டேஷனின் படி கடவுள் கொடுத்த டெலிவரி.



இட் ஈஸ் யுவர் கப் ஆஃப் டீ. கடவுள் என்ன டீக்கடை நாயரா? வேலைக்காரன் வரலைங்கற கவலைல டீயை மாத்தி கொடுத்துர



சுவரை வச்சித்தான் சித்திரம். புருஷனை வச்சுத்தான் பெண்டாட்டி, பெண்டாட்டிய பொருத்துத்தான் புருசன்.



அவிக கேரக்டரை டிசைன் பண்ணதும் நீங்கதான் ,டிசைட் பண்றதும் நீங்க தான். ஆரம்பத்துல வேணம்னா இழு பறி இருக்கும். ஆண் கமாண்ட் பண்ண பார்ப்பான். பெண் மன அழுத்தத்தை உணர்வாள். போக பொக ஆணோட கமாண்டெல்லாம் காலாவதியாகிட்டு சரண்டர் ஆஃப் இண்டியாதான். இதை இருபாலாரும் புரிஞ்சிக்கிட்டா வாழ்க்கை ஸ்வர்கம் தான். ( படிக்கவும்: இன உறுப்பும் கேரக்டரும் )



மனைவி : ஹும் கொஞ்ச நாளைக்குத்தானே இந்த கார்வாரெல்லாம்னு அஜீஸ் ஆயிரனும்.



கணவன்:"ஹும் எப்படியும் இவள் வழிக்குத்தான் போகப்போறோம். என்னத்துக்கு இந்த இழு பறின்னு விட்டுக்கொடுத்துரனும்



டிவிஷன் ஆஃப் லேபர்:

மத்திய மானில அரசாங்கங்களோட அதிகாரங்கள் மூன்று பட்டியல்ல அடங்கும் .ஸ்டேட் லிஸ்ட், சென்டர் லிஸ்ட், கன் கரண்ட் லிஸ்டு. இங்கன மனைவி தான் ஸ்டேட். கணவன் தான் சென்டர். கன் கரண்ட் லிஸ்டுன்னா ரெண்டு பேரும் சேர்ந்து டிசைட் பண்ற இஷ்யூஸ்



ஜோதிஷப்படி பார்த்தா பெண்டாட்டியால இம்சைபடனுங்கற தலையெழுத்து இருந்தா சீக்கிரம் கண்ணாலம் ஆகும். ஞானப்பல் முளைக்கிற வரை (ப்ராக்டிக்காலிட்டி புரியறவரை) கொஞ்சம் இழு பறியிருக்கும். இந்த கேஸெல்லாம் 90% காதல் திருமணமாத்தான் இருக்கும். அதனால " ஹும் நம்ம தலையெழுத்து இதான். யாரோ திணிச்சதில்லையே.. நான் எடுத்த முடிவுதானே" னு கொஞ்ச காலத்துக்கு - ஞானப்பல் முளைக்கிற வரை) அஜீஸ் ஆயிரனும்.



பெண்டாட்டியால சுகப்படற எழுத்திருந்தா கண்ணாலமே ஆகலைன்னாலும் பெண்டாட்டி சுகம் கிடைச்சுரும். ( இப்படி ஒரு சோடி பத்தி இன்னொரு தாட்டி விவரமா பார்ப்போம்)



இந்த பொம்பள பசங்க கண்ணாலத்துக்கு மிந்தி அப்பனை டார்ச்சர் பண்ணி பண்ணி பழக்க தோஷத்துல கண்ணாலத்துக்கப்பாறம் புருசனை டார்ச்சர் பண்ணுவாய்ங்க. இதை குறைக்க ஒரே வழி நீங்க உங்க அம்மாவை டார்ச்சர் பண்ண மாதிரி பெண்டாட்டிய டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுருங்க. ( வண்டி சாவியை எங்கனா அங்கே போட்டுர்ரது - பேண்ட் சட்டைய சோஃபா மேல குப்பையா போட்டுர்ரது )



உங்க ரெண்டு பேர்ல யார் சாடிஸ்ட் யார் மசாக்கிஸ்ட்டுன்னு அப்சர்வ் பண்ணி தெரிஞ்சுக்கங்க. ராத்திரில இடம் மாறுங்க. பத்து வருஷத்துக்கு அப்பாறம் பர்மனென்டா இடம் மாறுங்க.



என்னா மஹேஷ் சார் .. முடிச்சுரலாமா ? தொடரலாமா?

Wednesday, August 25, 2010

ஆசை 60 நாள் மோகம் 30 நாள்தானா?

அண்ணே வணக்கம்ணே ,

இந்த மேட்டர்ல ஒரு பத்து நாளைக்கு சின்னதா ஒரு தொடர் பண்ணலாம்னு உத்தேசம்.( மறுபடியுமாஆஆஆஆஆ)



கில்மா ஜோசியம் ,   பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி தொடர்களும் தொடருது.



இந்த தொடருக்கு "திருமண(ன) முறிவுகளுக்கு முறிவு "ன்னிட்டு ஒரு தலைப்பையும் வைக்கலாம் தான். ஆனால் ரீச் ஆறது கஷ்டம் அதனாலதான் ஆசை 60 நாள் மோகம் 30 நாள்தானா?ன்னு டைட்டில் வச்சிருக்கன். எவனாச்சும் கண்ணாலத்துக்கப்பறம் பெண்டாட்டியோட நெருக்கமா இருந்தா பெருசுங்க விடற டயலாக் இது தான் . உபரியா ஒரு ஹூங்காரம் வேற,



திருமணம்ங்கறதே இயற்கைக்கு விரோதமானதுதான். ஆனால் இந்த மேரேஜ் செட் மட்டும் இல்லைன்னா சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட் படி பார்த்தா சோனி, முண்டத்துக்கெல்லாம் லைஃப் பார்ட்னரே கிடைக்காம கையில பிடிச்சுக்கிட்டு அலைய வேண்டியதுதான் ( மொபைல் ஃபோனை சொன்னேன்) .



நான் அரசு நிர்வாகம் சீர்பட ஒரு சஜஷன் கொடுக்கிறது வழக்கம். மன்சனை மன்சனா நினைச்சு ப்ளான் பண்ணா எந்த ப்ளானா இருந்தாலும் அது ஃபணாலாயிரும். மன்சனை மிருகமா நினைச்சு ப்ளான் பண்ணா சூப்பர் சக்ஸஸ் கியாரண்டி.



திருமணங்கறது மன்சனை மிருகமா நினைச்சு ஏற்படுத்தின அமைப்பு அதனாலதான் இன்னைக்கும் தூள் பண்ணுது. ஆனால் காலத்தின் கோலம் திருமண கல் கோட்டைய தூள் பண்ணியே தீர்ரதுனு ஆண் பெண்கள் டிசைட் ஆயிட்டாய்ங்க இதுக்கு ஒரு தீர்வை முன் வைக்கத்தான் இந்த பதிவு.



மன்சாள்ள பல ரகம் இருக்கு பாஸ். உடல்,மனம்,புத்திங்கற 3 டைமன்ஷன்ல வாழற சனம் நாட்ல இருக்கு. உடல்ங்கறது காட்டுமிராண்டி . உடல் மட்டத்துல வாழற சனம் கண்ணால கட்டியே தீரனும். இல்லைன்னா பவர் கட்ல, சிட்டிபஸ் கூட்டத்துல பாஞ்சுருவாய்ங்க.



( இவிக நேரம் நல்லாருந்து பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கிடைச்சுட்டா பிரச்சினையில்லை. இவிகளுக்கு கண்ணாலமும் தேவையில்லை) .



அடுத்தது மனம். மனசு சஞ்சலம் நிறைஞ்சது. மாறிக்கிட்டே இருக்கும். நான் 10 வயசுலருந்து லவ் பண்ணேன். 14 வருசத்துல நான் லவ் பண்ண குட்டிகளோட எண்ணிக்கை மட்டும் செஞ்சுரியை தாண்டிரும். ( இதை படிக்கற நீங்க மட்டும் என்னவாம். இதே கேஸுதான். நான் ஏதோ தில்லு துரைங்கறதால போட்டு உடைச்சேன் . நீங்க நகராட்சி டம்பிங் ஏரியா மாதிரி குவிச்சு வச்சிருக்கிங்க)



எதுக்கு சொல்றேன்னா மனித மனம் அந்த அளவுக்கு சஞ்சலமானது. மன மட்டத்துல வாழற சனத்துக்கும் கண்ணாலம் அவசியம். இல்லைன்னா சமூகம் நாறிப்போயிரும். நீங்க எத்தனை தாட்டி கண்ணாலம் கட்டினாலும் மனசு மாற்றத்தை தான் விரும்பும்.



அடுத்தது புத்தி. புத்தின்னா அரை குறை புத்தியெல்லாம் இருந்தா வேலைக்காதுங்கோ.சூரியன் உதிச்ச பிறவு கயிறு கயிறா,பாம்பு பாம்பா தெரியற மாதிரி பச்சக்குனு நெஜத்தை உணர்ர புத்தி இருக்கனும். அதுல ஈகோ இருக்க கூடாது. புத்திக்கு பிரமைகள் இருக்காது, இங்கன மாறாதது மாற்றம் ஒன்னுதான்னு தெரியும். மாற்றத்துக்கு சித்தமா இருக்கும். எதையும் லாஜிக்கலா தான் ரோசிக்கும். கற்பனைக்கு இடம் தராது. எதையும் இறுக்கிக்க துடிக்காது.இப்படியா கொத்த அக்மார்க் புத்தி மட்டத்துல வாழற சனம் கண்ணாலமில்லாமயே சேர்ந்து வாழலாம்.



சரிங்கண்ணா புருசன் பொஞ்சாதி பிரச்சினைக்கு தீர்வு தரேன்னிட்டு மொக்கை போட்டுக்கிட்டிருந்தா எப்படினு அவசரப்படாதிங்க.



நிலைமை எப்படினா இருக்கட்டும் - சம்சாரம் தாய் வீட்டுக்கே போயிருக்கட்டும் - விவாகரத்து கேட்டு நோட்டீஸ் கூட கொடுத்திருக்கட்டும் - வீட்டுக்கொடுமை,வரதட்சிணை வழக்கு போட்டிருக்கட்டும் - செயிலுக்கு கூட அனுப்பியிருக்கட்டும். அவிக வந்து குடும்பம் நடத்தனும் - உங்க இல்வாழ்க்கை சிறக்கனும் - தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் மாதிரி உங்க மனைவி மாறிரனும் -இதானே உங்க கோரிக்கை.



ஓகே . நாளைலருந்து பிரச்சினை ஏன் வருது? அதை வளர்க்கறது எது? இந்த பிரச்சினைகளுக்கான கர்ப்பப்பை எது ? அதுக்கு ஒரு லூப் மாட்டறது எப்படிங்கற மேட்டரையெல்லாம் அடுத்தடுத்த பதிவுகள்ள பார்ப்போம்.

Thursday, August 12, 2010

சயனேஷு ரம்பா

கடந்த பதிவுல மனைவிங்கறவுக படுக்கைல செக்ஸ் ஒர்க்கரை போல இருக்கனும்னு சொல்ற சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்னை கோட் பண்ணியிருந்தேன்.  மனைவி மேற்படி ஸ்லோகத்துக்கிணங்க மாறனும், படுக்கையறையில் ஒத்துழைக்கனும்னா அவிகளை எப்படி மோட்டிவேட் பண்ணனும்னு இன்னொரு சந்தர்ப்பத்துல பார்க்கலாம்னு சொல்லியிருந்தேன். (வாஸ்துப்படி வாயு மூலைல படுக்கையறை அமையனும்)

நாளைக்கு நிலைமை எப்படியிருக்கும்னு சொல்ல முடியாது . ஆகஸ்டு15க்குள்ள ஒரு ஐநூறு பேராச்சும் கவிதை07 சைட்ல மெம்பராகலைன்னா புதுப்பதிவு போடறதையே நிறுத்திரலாம்னு ஒரு எண்ணம். அதனால தள்ளி போடாம இதை பைசல் பண்ணிரலாம்னு தான் இந்த பதிவு.

நானேதோ வேலை வெட்டியில்லாம இந்த மாதிரி கில்மா பதிவுகளை போட்டுக்கிட்டிருக்கேன்னு  சிலர் நினைக்கலாம். எனக்கேதோ இந்த கில்மா மேட்டர்ல எல்லாம் இன்டரஸ்டுன்னும் சிலர் நினைக்கலாம். அதெல்லாம் ஒரு மண்ணுமில்லிங்கண்ணா

ஒரு பெண்ணுடனான ரிலேஷன்ல  உடலுறவுக்கு பிறகு ஒரு வித மாசு கலந்துர்ரத ஒரு வித மரியாதை குறைவு வந்துர்ரதை என்னால எத்தனையோ சந்தர்ப்பங்கள்ள உணர முடிஞ்சிருக்கு. இதை உனக்கு 22 எனக்கு 32 கதைல கூட முகேஷ் பாத்திரத்தோட வாக்கு மூலமா தந்திருக்கேன்.

இன்னைக்கு ஐம் அபவ் ஆல் தீஸ் இன்ஃபாக்சுவேஷன்ஸ், காதல்ஸ்,கல்யாணம்ஸ், அஜால் குஜால்ஸ். என் வாழ்க்கையை இன்னொரு தாட்டி துவங்குற வாய்ப்பு கிடைச்சா (இதே மென்டல்  மெச்சூரிட்டி  இருக்கனும்) மேலே சொன்ன உருப்படியை எல்லாம் அவாய்ட் பண்ணிருவேங்கண்ணா.

என்னோட உபதேசங்களோட சாரம், சென்ட்ரல் பாயிண்ட், உத்தேசம் எல்லாமே சனம் செக்ஸை  புரிஞ்சிக்கிடனும். சஜமா கடந்து வரணும். கிழவாடி ஆயிட்ட காலத்துல பேய் மறுபடி முருங்கை மரம் ஏறிடக்கூடாது (திவாரி மாதிரி), செக்ஸோட அர்த்தமற்ற தன்மையை புரிஞ்சிக்கிட்டு மெல்ல ஆன்மீகப்பயணத்தை துவக்கிரனும்ங்கறதுதான்.

இதையெல்லாம் நான் புதுசா சொல்றேன்னு பீத்திக்க விரும்பலை. " காமி கானிவாடு மோக்ஷ காமி காலேடு" னு ஆதிகாலத்துலயே நம்மாளுங்க சொல்லி வச்சிருக்காய்ங்க. முந்தா நாள் வரை ஓஷோ சொல்ட்டு போனாரு. ஆனால் திருந்தினது எத்தனை பேரு?

ஓகே ஓகே ..மொக்கை போதும். மேட்டருக்கு வந்துர்ரேன்.மனைவி மேற்படி ஸ்லோகத்துக்கிணங்க மாறனும், படுக்கையறையில் ஒத்துழைக்கனும்னா அவிகளை எப்படி மோட்டிவேட் பண்ணனும்னு இப்ப பார்ப்போம்.

நான் இங்கன சொல்ற மேட்டர் எல்லாம் மனைவிக்கு மட்டும் தான் பொருந்தும், மத்த நாலணா கிராக்கிங்க, காதலி,கள்ளக்காதலி இத்யாதி கேட்டகிரிக்கெல்லாம் பொருந்தாது.

ஏன்னா அங்கன பரஸ்பர நம்பிக்கை கிடையாது, அது தர்ம சம்மதமும் கிடையாது சட்ட சம்மதமும் கிடையாது. காதலி, கேர்ள் ஃப்ரெண்டோட உடலுறவு பாத்ரூம்ல சாப்பிடறதுன்னா, நாலணா கிராக்கி, கள்ளக்காதலி எல்லாம் கக்கூஸுல சாப்பிடற மாதிரி. (சாப்டு பார்த்துத்தான் சொல்றேங்கண்ணா)

என்னதான் தாய் குலம் சொந்தக்கால்ல நிப்போம், சம உரிமை அது இதுன்னு பீத்திக்கிட்டாலும் தே ஆர் வீக்கர் செக்ஸ் (வீக் இன் செக்ஸ் இல்லிங்கோ) ,  டிப்பெண்டென்ட்ஸ் அவிகளை எக்ஸ்ப்ளாயிட் பண்ணாலோ, இம்சை கொடுத்தாலோ 
ஏழேழு தலை முறையும்  நாறிரும்.  கள்ள உறவும் கர்ம சித்தாந்தமும் என்ற என் பதிவுகளை படிக்கவும்.

உபரியா நம்ம ப்ளாக்ல செக்ஸ் ,செக்ஸாலஜி, சைக்காலஜிங்கற குறி சொற்களை தேடிப்பிடிச்சு எல்லா பதிவுகளையும் ஒரு பாட்டம் படிச்சு வைங்கண்ணா. அப்பாறம் இந்த மோட்டிவேஷன் டிப்ஸை தரேன்.


இந்த மாதிரி மேட்டர் எல்லாம் கேப் ஃபில்லிங் கிடையாதுங்கோ. ரெம்ப அக்கறையா நிதானமா அடிக்கனும்.அடிச்சாகனும். அதனால் ஒரு நாள்  வாய்தா வாங்கிக்கிறேன் பாஸு.

Sunday, August 8, 2010

கில்மா வாஸ்து

அண்ணே வணக்கம்ணே,


பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் தொடர்ல புது அத்யாயம் ஒன்னையும் போட்டிருக்கேண்ணே படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க. ( தனிக்காட்டு ராசா.. கிருமி அய்யா காமெடிக்கு சொன்னதுக்கே ட்ராஜடி ஆயிட்டா எப்படி ராசா கமெண்ட் ஃபார்ம் இருக்கிறதே உங்களுக்காகத்தானே)

எண்சாண் உடலுக்கு சிரசே பிரதானம்ங்கற மாதிரி ஆண்,பெண் உறவுல உடலுறவு பிரதானம். ஏதோ நம்ம தாய்குலங்களோட கருணையால காலம் ஓடிக்கிட்டிருக்கே தவிர இல்லேன்னா தினத்தந்தில புதுமணப்பெண் கள்ளக்காலனுடன் ஓட்டம்னு நீட்டி முழக்கி செய்தி போட முடியாது. இன்று ஓடிப்போனவர்கள்னு பட்டியல்தான் போட முடியும்.

இந்த மேட்டர்லயும் வாஸ்து பக்காவா வேலை செய்யுதுங்கண்ணா.

வடக்கும், கிழக்கும் ஆண்களை காட்டுமிடம் இந்த இடங்களிலான கூரையாகட்டும், தரையாகட்டும் தெற்கு,மேற்கை விட தாழ்ந்திருக்கனும். பேசேஜ் இருக்கலாம். வீட்ல உபயோக்கிக்கிற தண்ணி போற பைப் லைன், ட்ரெயினேஜ் இருக்கலாம். கட்டிடமோ, திண்ணை எட்செட்ராவோ இருக்ககூடாது. இருந்தா அந்த வீட்ல மதுரைதான். புருசங்காரன் பொஞ்சாதிக்கு காஃபி ஃப்ளாஸ்க் சுமக்க வேண்டியதுதான்.

இந்த மேட்டர்ல அடுத்து ரெம்ப முக்கியமான சில மேட்டர் எல்லாம் இருக்கு. ஈசானத்துல கழிவறை கூடாது. (கள்ளக்காதல் வரும் ) நைருதில டோர் கூடாது. (புருசன் டம்மி பீசாயிருவான். பொஞ்சாதி தினத்தந்தில செய்தியா வந்துருவாள்) பள்ளம் கூடாது. (புருசங்காரன் ஃபைனான்ஷியலா ஷெட் ஆயிருவான். தலைச்சன் குழந்தை காலி) தரை அமைப்பும் கூரை அமைப்பும் மத்த எல்லா திசைகளைவிட உசரமா இருக்கனும்.

வாயு மூலைல மனை (மிளகாய் விரையை விட அதிகமா) குறைய கூடாது. அந்த திசைல தெரு குத்து வரக்கூடாது. பள்ளம் ,கிணறு கூடாது. இருந்தா தொழிலே ஆரம்பிச்சுருவாய்ங்க.

(இந்த மாதிரி பலான மேட்டர்லாம் நிறைய இருக்கு நாளைக்கு பிரிச்சு மேஞ்சுருவமில்லை)

சரிங்கண்ணா இந்த மேட்டர்ல டீப்பா போறதுக்கு முந்தி கடந்த பதிவுல விட்ட தப்பான திசைகள்ள கிணறுகள் மேட்டரை முடிச்சு சூ காட்டிருவமா. அடுத்த பதிவுலருந்து கில்மா தான் ஜுஜுலிப்பா தான் ஓகே உடு ஜூட்

தப்பான திசைகள்ள கிணறு /செப்டிக் டாங்க்/பள்ளம் /சம்ப்பு இத்யாதி உள்ள வீடுகள் அவ்வீட்டு மனிதர்களின் வாழ்க்கைய பத்தி பேசிக்கிட்டிருந்தோம் ( படிச்சிக்கிட்டிருந்திங்க - நான் அடிச்சிக்கிட்டிருந்தேன்- டைப்பை சொன்னேங்கண்ணா)

கடந்த பதிவுல ஆக்னேயத்துல செப்டிக் டாங்க் மேட்டரை பார்த்தோம். நைருதில விவசாய கிணறு பத்தி ஏற்கெனவே சொல்லியிருக்கேன். அப்பன் ஃபைனான்ஷியலி ஷெட்,அம்மா மென்ட்டல், பெரிய பையன் டிக்கெட், சின்ன பையன் ஓடிப்போய் திரும்பி வந்தான் எட்செட்ரா.

வேணம்னா லேட்டஸ்டா ஒன்னு சொல்றேன். மனைக்கு வடக்கு கிழக்கு திசைகள்ள தெரு இருந்தா தூளு ,சூப்பருனு சொல்லியிருக்கேன். அந்த மாதிரி ஒரு மனை ஹார்ட் ஆஃப் தி டவுன். பஸ் ஸ்டாண்டுக்கு சமீபம். அது சேல்ஸுக்கு வந்திருக்கிறதாவும் தான் வாங்கப்போறதாவும் நண்பர் ஒருத்தர் சொன்னார். வாஸ்து பார்க்கனு கூட்டிப்போனார்.

நம்மது கடகலக்னம்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேனே.வாஸ்து பார்க்க போனச்ச லக்னாதிபதி சந்திரன் எங்கன இருந்தாரோ சூப்பருனு சொல்ட்டு வந்துட்டன். நிறைய ஜோசியருங்க எப்படின்னா பணம் பைக்கு வந்ததுமே பார்த்த ஜாதகத்தை மைண்ட்ல இருந்து தூக்கிருவாய்ங்க. நமக்கு தூக்கம் வராது.

ஒரே ஒரு அஞ்சு ரூபாய்க்காக காலை பத்துலருந்து மாலை (?) 4 வரை அலைஞ்சிருக்கேன். அப்படியா கொத்தது அம்பதும் , நூறும், (இப்போ இரு நூற்று அம்பது) தந்தவுகளுக்கு அதுக்குரிய உழைப்பை ஸ்டஃப்ஃபை கொடுத்தமா இல்லியானு பாதி ராத்திரி எந்திரிச்சு ரோசிக்கிறதெல்லாம் உண்டுங்க.

பார்த்துட்டு வந்த சைட்டை பத்தியே ரோசிச்சிக்கிட்டிருந்தேன் தாளி தூள் சைட்டுல்லயா . அந்த மாதிரி நார்த் ஈஸ்ட் ப்ளாக் கிடைக்கிறதே கஷ்டமில்லையா . அதப்போய் ஏன் விக்கிறாய்ங்கனு யோசனையா போச்சு. மறு நாள் போனேன்.

நிதானமா பார்க்க ஆரம்பிச்சேன்.மாடிப்படி கூட நைருதில தான் வச்சிருக்கான். மனை வளரலை . குறையலை. நார்த் ,ஈஸ்ட்ல போற ரோட்டுக்கு தெற்குல இருக்கிற ஒட்டன் சந்து (சுஜாதா ஒக்காபிலரி) கணக்கே கிடையாது. என்ன ஃபால்ட்டு என்ன ஃபால்ட்டுனு ரோசிச்சிக்கிட்டே கிரவுண்டை ஒரு உதை உதைச்சேன். "டொம்" னு சத்தம். மறுபடி உதைச்சேன் "டொம்". அப்பாறம் பார்த்தா நைருதில கிணறு.

ஒடனே நண்பருக்கு இன்ஃபார்ம் பண்ணி மொத வேலையா இதை பெயர்த்து பார்த்து சப்ஜாடா தூர்த்த பிறவு மத்த வேலை பார்க்கற மாதிரியிருந்தா வாங்கிக்கங்கனு சொன்னேன். பை தி க்ரேஸ் ஆஃப் காட் இன்னைக்கு அந்த நார்த் ஈஸ்ட் ப்ளாக் லட்சுமி கடாட்சமா இருக்கு.

மேற்கு திசைல கிணறுக்கு எங்க வீடே உதாரணம். ( அம்மாவுக்கு யூட்ரஸ் கான்சர்)

சரி இப்படியே வடக்கு,கிழக்கு, வடகிழக்கு தவிர மத்த 6 திசைக்கும் 6 வீட்டுக்கதை சொல்லப்போறிங்களா ஆள விடுங்க சாமினு கிளம்பிராதிங்க. இன்னம் ஒரே ஒரு கதைதான். அதுவும் சரியான திசைல இருந்த கிணறு சனங்க பண்ண தப்பால அந்த குடும்பத்தையே நாசம் பண்ணதை மட்டும் சொல்லிர்ரன்.

விளை நிலத்துல கட்டப்பட்ட வீடு. ஜஸ்ட் இமேஜின் பண்ணுங்க சுத்தி நிலம். மத்தில வீடு . வீட்டுக்கு ஈசானியத்துல கிணறு அதுவும் சேந்து கிணறில்லை. விவசாய கிணறு. நல்லாதான் போய்க்கிட்டிருந்தது. சின்னவர் தலையெடுத்தாரு. கவுன்சிலரானாரு அம்புட்டுதேங் .ஏதோ கட்சில இளைஞரணி தலைவரானாரு. எவனோ அதி மேதாவி வீட்டுக்கு காம்பவுண்டு போடச்சொல்லி ஐடியா கொடுத்தான். ரெண்டே வருஷம் ஆளே போய் சேர்ந்துட்டாரு. எப்டி? எப்டி?எப்டி?னு கேட்கறிங்க சொல்றேன்.

கிணறோட பரப்பளவு வீட்டோட பரப்பளவுல பத்துல ஒரு பாகம் தான் இருக்கனும்னு சொல்லியிருக்கன். வீடா சின்னது. கிணறா பெருசு. ஆனாலும் காம்பவுண்ட் இல்லாததால டோட்டல் லேண்டுக்கு ஒர்க் அவுட் ஆகிட்டிருந்தது. மொத்த நிலத்தோட பரப்பளவோட ஒப்பிட்டா நூத்துல ஒரு பாகம் கூட இல்லாம இருந்தது. எதோ ஒரு அரை குறை சொன்ன ஐடியாவை அப்ளை பண்ணி காம்பவுண்ட் போட்டதுல அந்த கிணறு வீட்டுக்கு மட்டும் ஒர்க் அவுட் ஆச்சு. வீட்டோட பரப்பளவுல ஏறக்குறைய ரெண்டரை பங்கு இருந்தது .குடும்ப தலைவன் இல்லாத வீடு. அம்மா விதவை. அண்ணன் செமை லாலா பார்ட்டி இருந்து இல்லாத மாதிரிதான்.அதுக்கடுத்தவர் தான் சின்னவரு. வீட்டுல முக்கியஸ்தரு . காலியாயிட்டாரு.

சரிங்கண்ணா வாஸ்து குறித்த ரகசியங்கள்ள கிணறு எபிசோட் ஓவர். வெறுமனே மேடு பள்ளங்களை பேசிக்கிட்டிருந்தா தம்பி மாருங்க (தம்பிகளுக்கு ஏது மாரு?) கோவிச்சுக்க போறாய்ங்க.

உங்களுக்கு அடுத்த பதிவுல இருக்கு தம்பி தலை தீபாவளி