Saturday, August 14, 2010

யார் அந்த தேவி ?


தேவி கருணை


நம்ம இந்து மதத்துல ஒவ்வொரு டிப்பார்ட்மென்டுக்கு ஒவ்வொரு அம்மனை போட்டு வச்சிருக்காய்ங்க. ஆக்சுவலா இந்த இந்து மதம்ங்கற பேரு வெளி நாட்டுக்காரய்ங்க கொடுத்தது. (இந்து மகா சமுத்திரத்தை வச்சு இந்த பேர் வந்ததா சொல்றாய்ங்க) ஆரம்பத்துல இதை சனாதன மதம்னு தான் சொல்வாங்களாம்.



சுஜாதா புதுக்கவிதை வெள்ளத்தை வருணிக்கிறப்ப சகலமும் மிதந்து வருதும்பார்.அதை மாதிரி இந்து மதத்துல சகலமும் இருக்கு. சில ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் கொண்ட இளைஞர்கள் மெனோஃபஸ் கேஸ்களை பிடித்துக்கொண்டு தொங்குவது போல சனம் இதுல உள்ள சக்கைகளை பிடிச்சி தொங்கறாய்ங்க.



எங்கயோ டைவர்ட் ஆயிட்டோம். ஆங் இந்து மதத்துல ஒவ்வொரு டிப்பார்ட்மென்டுக்கு ஒவ்வொரு அம்மனை போட்டு வச்சிருக்காய்ங்க



வீரத்துக்கு பார்வதி, படிப்புக்கு சரஸ்வதி, சில்லறைக்கு லட்சுமி இதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சதே. அது ஏன் நிறைய பொம்பள சாமியாவே இருக்க்ன்னு கேப்பிக. அன்னைக்கு எல்லாம் மேல் சாவனிஸ்ட் சொசைட்டியாச்சா. அதனால பொம்பள மேல கவர்ச்சி. பெண்டாட்டிய வணங்க ஈகோ இடம் கொடுக்காது.



கிரேக்க கலாசாரத்துல அறிவு ஜீவிகள் சொசைட்டில ஹோமோ தான் ஃபேஷன். பெண் புணர்ச்சியெல்லாம் சந்தானத்துக்காகத்தான். ( அடங்கொய்யால அந்த காலத்துல டெஸ்ட் ட்யூப் பேபி இருந்திருந்தா ஒட்டடையே படிஞ்சு போயிருக்கும் போல- நான் சொல்றது பெட் ரூம்லிங்கண்ணா)



சில சந்தர்ப்பத்துல ஒரே சப்ஜெக்டுக்கு ஆம்பளை சாமியும் உண்டு பொம்பளை சாமியும் உண்டு.



உ.ம் சரஸ்வதி,ஹயக்ரீவர்

பைரவர் -பைரவி

வராஹ மூர்த்தி -வாராஹி



இது ஏன்னு கேப்பிக. அந்த பொம்பள சாமிய ஆம்பளையா இமேஜின் பண்ணவன் ஹோமோவா இருந்திருக்கலாம்.



அது சரி சக்திக்கு ஆண்,பெண் வடிவம் கொடுக்கிறது வணங்குறதுல லாஜிக் இருக்கா? பலன் கிடைக்குதானு கேப்பிக. இருக்கே.



பாரத அன்னைங்கறோம் , தமிழ் அன்னைங்கறோம் உணர்வுக்கு ஒரு வடிவம் கொடுத்திருக்கோம். அதே மாதிரிதான் படிப்புன்னா சரஸ்வதி , சில்லறைன்னா லட்சுமி.லாஜிக் இருக்கே.



நமக்கு உருவம் இருக்கு. போது விடிஞ்சி போது போனா உருவங்களை தான் பார்க்கிறோம். அதனால சக்திக்கு கூட உருவம் கொடுத்தா தான் ஆட்டோ சஜஷன்

( சுய வசியம் ) பாசிபிள்.



மனித குலம் கண்ணில்லாம உருவாகியிருந்தா சாமியெல்லாம் ஒலி வடிவத்துல இருந்திருக்குங்கோ.



நீ எந்த வடிவத்துல என்னை வணங்கறியோ அந்த வடிவத்துல அருள்பாலிப்பேனு கீதைல கிருஷ்ணர் சொல்றார். (என் அனுபவத்துக்கு வந்த கிருஷ்ணர் - நான் ஏத்துக்கிற கீதைலனு சேர்த்துக்கிடுங்க)



விவேகானந்தர் உன் பிரார்த்தனைக்கு பலன் கிடைச்சா அது எங்கிருந்தோ வரலை உனக்குள்ள இருந்தே வந்ததுனு சொல்றார்.



அப்பாடா கம்யூனிகேஷன் ஸ்கில்ஸே ஃபணாலாகி,டர்ராகி கிடக்கிற இந்த மோமெண்ட்ல ஒரு ரீ ஸ்டார்ட் தேவைப்படுது. (கொச்சையா சொன்னா கலை மகளொட அருள்)



இந்த மாதிரி சந்தர்ப்பத்துல பேனா பேப்பர் எடுத்து அவிகளை வில்லங்கமான கேள்வியெல்லாம் கேட்டு வந்து என் நாக்குல நில்லு ( ரெம்ப நாறும் பரவாயில்லியா தாயே) வாக்கு சொல்லு அது இதுன்னு கவிதை எழுதிர்ரது வழக்கம்.



ப்ளாக்ல எழுதினா யாரு படிக்கிறது.அதனாலதான் சரஸ்வதிக்கும் நமக்கும் உள்ள ரிலேஷன் , கம்யூனிகேஷனை ரீ கலெக்ட் பண்ணிக்க இந்த பதிவை எழுதிக்கிட்டிருக்கேன்.



வைரமுத்து சொல்வாரு :

வார்த்தைக்கு பொருள் அகராதியில் இருக்கிறது.

கவிதைக்கு பொருள் வாழ்க்கையில் இருக்கிறது.



"யாழினிது,குழலினிது" என்பார் "தம் மக்கள் சொல் கேளாதார்"ங்கற குறளை எடுத்துக்கங்க. இந்த குறள் புரியனும்னா நீங்க வாழ்ந்திருக்கனும்.குழந்தைய பெத்திருக்கனும். சில மாசமாச்சும் பிரிஞ்சிருக்கனும். பிரிவுக்கப்பறம் கொளந்தை பேச்சை கேட்டிருக்கனும்.. இல்லைனா ஒரு ..ரும் புரியாது.



தினசரி காலை பத்து மணி போய் சாயந்திரம் 5 மணிக்கு வீட்டுக்குள்ள வந்து பூந்துகிட்டா களவாணி பசங்கள பத்தின செய்திகள் தான் இனிதுனு தோணும்.



கவிதைய புரிஞ்சிக்க நீங்க வாழ்ந்திருக்கனும். கவிதைய எழுத ? வாழ்க்கைய இழந்திருக்கனும். இழந்தா மட்டுமே புரியற மேட்டர் எதுன்னா வாழ்க்கைதான். இழந்திருந்தா மட்டும் போதாது ஃபீனிக்ஸ் பறவையா எழுந்திருக்கனும்.



கவிதை புரியனும்னா வாழ்ந்திருக்கனும். தட்ஸால். வாழ்க்கை புரியனும்னா? இழந்து எழுந்திருக்கனும். வாழ்க்கையோட மறை பொருள் புரியனும்னா? அதை அசால்ட்டா சொல்லனும்னா?



தேவி அருள் இருக்கனும். யார் அந்த தேவி ( ஸ்ரீ தேவியில்லிங்கண்ணா 47 வயசாமே நெஜமாவா?) வாக் தேவிங்கண்ணா. அவிக அருள் எனக்கு எப்படி கிடைச்சுது. எப்பல்லாம் தடங்கலுக்கு வருந்தறாய்ங்க. உங்களுக்கும் கிடைக்குமா? ( உங்க பசங்களுக்கும்) கிடைக்க என்ன பண்ணனும்? இதையெல்லாம் .. சொல்லனுமா என்ன இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம்.



உடு ஜூட்..