இன்றைய கீதை அவா கைங்கர்யம்னு ருசுப்படுத்திக்கிட்டு வர்ர கீதை ஒரு உட்டாலக்கடி தொடர்பதிவு தொடருது. கில்மா ஜோசியம் நாளைக்கு. எந்த பேர் கொண்ட குட்டிக்கு லைன் விட்டா பச்சக்குனு ஒட்டும்னு பார்ப்போம்
நாமம்னா பேரு. ஆவளின்னா வரிசைனு அர்த்தம். ( உ.ம் தீபாவளி - தீபங்களின் வரிசை) .
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அவரோட சஹஸ்ர நாமங்களை பாக்கெட் புக்கா அச்சிட்டு இலவசமா வினியோகிக்கலாம்னு கூகுல்ல தேடினேன். அதுல ஒரு பேர் என்ன தெரியுமா? மனுவே நமஹ !.
மனுன்னா திங்க கிழமை மனு நீதி நாள்ள 36 ஆவது தடவையா தர்ராய்ங்களே அந்த மனு இல்லிங்கண்ணா. ஒருதாய் வயித்து பிள்ளைகளான மக்களை நாலு க்ரூப்பா பிரிச்சு பிரிட்டீஷ் காரனோட டிவைட் அண்ட் ரூல் பாலிசிக்கு கடைக்கால் போட்ட களவாணிப்பய மனு.
மெஜாரிட்டி ஆஃப் தி பீப்புள் அடிப்படை கல்வி கூட கிடைக்காம தற்குறிகளா கிடக்க காரணம் இந்த மனு.
கல்வியில்லாத ஒரே காரணத்தால உற்பத்தி காரணிகள்ள முக்கியமான நிலம், முதலீடு, நிர்வாகம்ங்கற மூன்றும் மைனாரிட்டிகளான ஆளும் வர்கத்துக்கிட்ட மாட்ட காரணம் இந்த மனு.
பெருவாரியான மக்கள் வெறுமனே கூலிப்பட்டாளமா அதுவும் அன் ஸ்கில்ட் லேபரா அதுவும் டிமாண்டிங் பொசிஷன் இல்லாம கொடுத்த கூலிக்கு உழைச்சு கொட்டிஓடா தேயறாய்ங்களே இதுக்கு காரணம் மனு.
நாட்டுல உற்பத்தி பெருகிக்கிட்டே போகுது. சர்வீஸஸ் அதிகரிச்சுக்கிட்டே போகுது. தேசீய வருமானம் உசந்துக்கிட்டே போகுது. ஆனால் நிலம் தர்ர வாடகை, முதலீடு தர்ர வட்டி, நிர்வாகம் தர்ர லாபம் இப்படி மூணையும் ஆளூம் வர்கமே அள்ளியெடுக்க காரணம் மனு.
ஜஸ்ட் தங்களோட கூலிய மட்டும் நம்பி வாழற பெருவாரியான மக்களோட இழி நிலைக்கு காரணம் மனு.
ஸ்ரீ கிருஷ்ண நாமாவளில அவளை கணக்கு பண்ணவரே இவளை கர்பமாக்கினவரேன்னுட்டு போகாம மனுவே நமஹங்கறாய்ங்க. நம்ம அரசியல் சாசனம் என்னவோ ரைட் டு ஈக்வாலிட்டிய கொடுத்திருக்கு. சூத்திரங்க கட்டின கோவில்ல, சூத்திரங்க செலவுல நடக்கிற பூஜைல அய்யரு கிருஷ்ணரை ஓம் மனுவே நமஹங்கறார் . நாமளூம் கன்னத்துல போட்டுக்கிட்டு வந்துர்ரம்.
யார் இந்த மனு ? மக்களை நாலு வர்ணமா பிரிச்சவன். சமத்துவத்துக்கு சமாதி கட்டினவன். இவன் பேரை கிருஷ்ணருக்கு கொடுத்திருக்காய்ங்க. கிருஷ்ணன் யார்?
வேதம் படிச்ச பிராமாணனும், நாய் மாமிசத்தை சமைச்சு சாப்பிடறவனும் என் பார்வையில சமம்னு சொன்னவன். ஆனால் இந்த பிக்காலிங்க கிருஷ்ணனையே கலீஜ் பண்றாப்ல ஓம் ஸ்ரீ மனுவே நமஹாங்கறாய்ங்க.
இதையெல்லாம் கேக்க நாதியே இல்லையா?
காபூல்லருந்து பாபர் இந்தியா மேல படையெடுத்து வர்ராரு. கூடாரம் அடிச்சு தங்கறாரு. அப்ப ராத்திரி நேரம் உசரத்துல நின்னு எதிரிங்க (இந்தியர்கள்) தங்கியிருக்கிற இடத்தை பார்வையிடறாரு. நாலு இடத்துல நெருப்பு எரியுதாம். என்னங்கடானு விசாரிச்சாராம்.
" நாலு சாதி இருக்கு. நாலு சாதிக்கும் தனித்தனியே சமையல் நடக்குது" ன்னாய்ங்களாம்.
ஒடனே பாபர் டிசைட் பண்ணிட்டாரு. வெற்றி நமக்கே.
இப்படி அன்னிய படையெடுப்புகளுக்கெல்லாம் வெத்தலைபாக்கு வச்சு கூப்ட வருணாசிரம தருமத்தை அடிகோலின மனுவோட பேரை கிருஷ்ணரோட சஹஸ்ர நாமத்துல சேர்த்திருக்காய்ங்கண்ணா. இதை கோவில்ல பப்ளிக்கா படிப்பாய்ங்க போல. நம்ம சூத்திர பயலுவ மானங்கெட்டு கேட்டுக்கிட்டு சுண்டல் வாங்கி தின்னுட்டு ........விட்டுட்டு வருவானுங்க போல.
தட்டிக்கேளூங்கப்பா. மனுவுக்கும் கிருஷ்ணனுக்கும் என்ன சம்பந்தம்? மனு பேரை எதுக்கு ஸ்ரீகிருஷ்ண நாமாவளில சேர்த்திங்கனு கேளுங்கப்பா.