Tuesday, August 3, 2010

ஆடில சூரியன் ஆடிப்போய்

அண்ணே வணக்கம்ணே,
இன்னைக்கு ஆடி கிருத்திகை ஸ்பெஷல் பதிவுகள் மஸ்தா கீதுங்கண்ணோய்.

1.வாஸ்து ரகசியங்கள் : 6



2.காஷ்மீர் பிரச்சினைக்கு கல்கி தீர்வு



3.உனக்கு 22 எனக்கு 32


ஆடிமாசம்னா சூரியன் கடகத்துல இருப்பார். சிம்மம் இவரோட சொந்த வீடு. நீங்க பெரிய ரவுண்டா அடிச்சுட்டு நாயடி பட்டு உங்க வீட்டை நெருங்கற சமயம் உங்க மனசு எப்படி இருக்கும்? தாளி எப்படா வீட்டை போய் சேருவோம்னு தானே இருக்கும் .அதே மாதிரிதான் சூரியனும். சூரியன் ஈகோவுக்கு காரகர். அரை குடம் தான் தளும்பும்னுவாய்ங்களே அப்படி பவர் லெஸ்ஸா இருக்கிறச்ச சூரியன் சகட்டு மேனிக்கு ஈகோவை தூண்டி விட்டுருவார்.

கிருத்திகைங்கறது இவரோட சொந்த நட்சத்திரம்.இன்னம் சனங்களோட ஈகோ கிளர்ந்தெழ  கேட்கனுமா? அதுக்குத்தான் பெரியவங்க சூரியன் ஆடிமாசம் ஆடிப்போயிருப்பாரு. எக்கச்சக்கமா ஈகோவை கிளப்பி விடுவாரு. சனம் வெட்டி மடியும்.  கிருத்திகை சூரியனோட நட்சத்திரம். சூரியன் தான் மலைகளுக்கு காரகன். ஈகோ அதிகரிச்சா யுத்தம் கூட வந்துரலாம் யுத்தகாரகன் செவ்வாய். செவ்வாய்க்குரிய கடவுள் முருகன். .. அது இதுன்னு கணக்கு போட்டு முருகனை வணங்க சொல்லிட்டாய்ங்க. அதுவும் மலைமேல் இருக்கிற முருகனை. முருகனோட மூல மந்திரம்:

ஓம் சௌம் சரஹண பவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ‌

இந்த மந்திரத்தை ஜெபிச்சுக்கிட்டே மலையேறுங்கண்ணா.. அதுக்கு பிறகாவது மேற்படி பதிவுகளை படிச்சுட்டு உங்க கருத்துக்களை தெரிவிக்கும்படியா கெஞ்சி கேட்டுக்கறேண்ணா

எச்சரிக்கை: ஆகஸ்ட் 7 முதல் கவிதை07 ஒன்லி ஃபார் மெம்பர்ஸ் ஆப்ஷனுக்கு மாறப்போவுதோச். உடனே மெம்பராயிரணுமுங்கோ