Wednesday, August 4, 2010

வாஸ்து ரகசியங்கள்: 7

அண்ணே வணக்கம்ணே,

வாஸ்து ரகசியங்கள் என்ற இந்த தொடர்பதிவுக்கு  நீங்க கொடுத்துக்கிட்டிருக்கிற ஆதரவுக்கும்  வரவேற்புக்கும் ரெம்ப நன்றி. ஹிட்ஸ் அதிகரிச்சா மத்தவுகளுக்கு ஆத்ம திருப்தி மட்டும்தான் கிடைக்கும். நமக்கு பைசாவும் கிடைக்குது. புது வாசகர்கள்ள சிலர் தனிப்பட்ட ஜோதிட  ஆலோசனைக்கு தொடர்பு கொள்றதால.

மொதல் மொதலா என் ஜோதிட ஆலோசனையை கமர்ஷியலைஸ் பண்ணவர் கேரளாவை சேர்ந்த காலஞ்சென்ற திரு. பவித்திரன். அவரை பழி வாங்கின பல்லியோட கதைய இன்னொரு சந்தர்ப்பத்துல சொல்லியே உடறேன். அவர் தான் சொல்வாரு."ஜோதிஷம் உண்மை .ஆனால் அதை பார்க்கிறது  வேஸ்டு"

அவிக வீட்டு மாடில ஆஃபீஸ் போட்டு சோசியம் சொல்ட்டு இருக்கிறப்ப இப்படி ஒரு டயலாக் விட்டா எப்படி இருக்கும். ஆனால் அதுக்கு அவர் கொடுத்த விளக்கம்:
1.என்ன நடக்கபோவுதுனு பக்காவா  தெரிஞ்சிக்கறது  கஷ்டம்
2.அப்படியே தெரிஞ்சாலும் அதை  நல்லதை உபயோகிச்சுக்கறதோ , கெட்டதை தடுக்கிறது அதை விட கஷ்டம்

நானும் ஒரு ஜோசியன் தான். இதுல ஆராய்ச்சியாளன் வேறே. ஜோதிஷத்துக்கு காரகன் புதன். இவர் நமக்கு விரயாதிபதி.  வாஸ்துவுக்கு காரகன் செவ்வாய். இவர் நமக்கு யோக காரகன். ப்ளாக் ஆரம்பிச்சு பத்துவருஷம் ஆச்சு. ரெண்டுல ஒன்னு பார்த்துர்ரதே சரினு   கோதாவுல இறங்கி 14 மாசமாச்சு. ஆனாலும் வாஸ்துவ பத்தி எழுதனும்னு தோனவே இல்லை. இன்னம் சொல்லப்போனா "ஜோதிடம் வாஸ்து பெயரால் மோசடிகள்"னு ஒரு பதிவை வேற போட்டாச்சு.

இப்ப நமக்கு செவ்வாய் தசை தான் நடக்குது. 19/Apr/2009 லயே ஸ்டார்ட் ஆயிருச்சு. வாஸ்து ரகசியங்களை போட்டு கிழிச்சிருக்கலாமில்லயா? ஏன் கிழிக்கலை?  நாமதான் சித்தன் போக்கு சிவன் போக்குனு கிடக்கோமே." எல்லோரும் நலம் காண நான் பாடுவேன்" னிட்டு நாம பாடிட்டிருந்தா  அடுத்து என்ன பாடனும்னு  பகவான் ஸ்லிப் அனுப்புறாருங்கோ.
 பிரபாகரன் சாகலை. நவம்பர் 26 க்கு அப்புறம் வருவாருனு ஏன் அதிரடி  பதிவை போடனும்? தமிழ் மணம் ஏன் டர்ராகனும். கவிதை07 ஐ ஏன் தடை பண்ணனும். சராசரி ஹிட்ஸ் ஏன் குறையனும்? எத்தை தின்னா பித்தம் தெளியும்னு நான் ஏன் மண்டைய ஊறுகாய் பாட்டில் மாதிரி குலுக்கனும். வழக்கமா பலான ஜோக்ஸ் போட்டுத்தான் தூக்கி நிறுத்தறது வழக்கம் ( நான் ஹிட்ஸை சொன்னேண்ணா) . இந்த தடவை ஏன் வாஸ்து பேட்டைல ஒதுங்கனும்.
எல்லாமே பகவானோட லீலை. இதுல ஜோதிஷம் எங்கே உதவுச்சு.  நம்ம மேட்டர்ல இப்படி கோட்டை விட்டு கோட்டை விட்டுத்தான் அடுத்தவுக மேட்டர்ல  கண்ல விளக்கெண்ணை விட்டுக்கிட்டு பலன் சொல்ற ஸ்டேஜு வந்ததுங்கண்ணா.  சரி வாஸ்துவுக்கு வந்துருவமா?

தெருக்குத்துன்னா என்ன?
மனைக்கு நேர் எதிர்ல தெரு அமையறதைத்தான் தெருக்குத்துங்கறோம். இது மொத்தம் 12 வகை . இதுல 6 ஓகே. இன்னொரு 6 நாட் ஓகே. இப்போ விலாவாரியா பார்ப்போம்

நன்மை தரும் தெருக்குத்துகள்:

1.மனைக்கு கிழக்கு பகுதியில் வடகிழக்கில் தெரு
2.தென் பகுதியில் தென் கிழக்கில் தெரு
3.மேற்கு பகுதியில் வடமேற்கில் தெரு
4.வடக்கு பகுதியில் வடகிழக்கில் தெரு
5.மனையின் அகலத்துக்கு கிழக்கு திசையில் தெரு
6.மனையின் அகலத்துக்கு வடக்கு திசையில் தெரு

தீமை தரும் தெருக்குத்துகள்:

1.கிழக்கு பகுதியில் தென் கிழக்கில் தெரு
2.தெற்கு பகுதியில் தென் மேற்கு திசையில் தெரு
3.மேற்கு பகுதியில் தென் மேற்கு திசையில் தெரு
4.வடக்கு பகுதியில் வடமேற்கு திசையில் தெரு
5..மனையின் அகலத்துக்கு தெற்கு  திசையில் தெரு
6.மனையின் அகலத்துக்கு மேற்கு திசையில் தெரு


கிணறு, போர்வெல் , மழை நீர் சேகரிப்பு தொட்டி,  சம்பு எனப்படும்  அண்டர் கிரவுண்ட் தண்ணீர் டாங்க் இதெல்லாம் கிழக்கு, வடக்கு, அல்லது வடகிழக்குல மட்டும் தான்  அமையனும். இல்லைன்னா லொள்ளுதான்.

உப விதிகள்:

1.கிராமப்பகுதிகள்ள சிலர் தங்கள் நிலத்தருகிலேயே வீடு கட்டி குடியிருப்பாய்ங்க. நிலத்துக்கு நீர் பாய்ச்சற பெரிய சைஸ் கிணறு இருக்கும். அந்த கிணறு நன்மை செய்யும் திசைகள்ள இருந்தா கூட இம்சைதான். ஏன்னா  கிணறோட பரப்பளவு மனையோட பரப்பளவுல பத்துல ஒரு பாகம் தான் இருக்கனும். அப்பத்தான் நன்மை இல்லைன்னா டப்பா டான்ஸ் ஆடிரும்.

2.மேலும் கிணறு இருந்தா மட்டும் போதாது. அதுல தண்ணியிருக்கனும். அந்த தண்ணியை இறைச்சு உபயோகிச்சுக்கிட்டிருக்கனும்.

3. கிணறு  உள்ள பகுதி ஈசான்யமா இருந்தா அது திறந்தவெளியா இருந்தா நல்லது. மூடியிருந்தாலும் கிணற்றுக்கு நேர கம்பி ஜன்னலாச்சும் போடனும்

4. நன்மை தரும் திசையில கிணறு இருந்தாலும் வீட்டுக்கு  காம்பவுண்டு இருந்தால்                    காம்பவுண்டுக்குள்ளதான் கிணறு அமைஞ்சிருக்கனும் .காம்பவுண்டுக்கு வெளிய இருந்தா அதுக்குண்டான பலன் கிடைக்காது.

5.காம்பவுண்ட் இல்லாத பட்சத்துல  அதுக்கும் நம்ம  வீட்டுக்கும் இடையில இதர கட்டிடங்களோ, பாறைகளோ, மண் மேடுகளோ  இருக்கக்கூடாது. . 

6.கிணத்துல தண்ணியில்லாத பட்சத்துல அதை மழை நீர் தேக்க தொட்டியா உபயோகிக்கலாம். அதுக்குரிய நிபுணர்களை கலந்தாலோசிச்சு மொட்டை மாடியில  காம்பவுண்டுக்குள்ள விழற  மழை  தண்ணி மட்டும் கிணத்துல ஸ்டோர் ஆறாப்ல செய்ங்க. நாட்டுக்கு வீட்டுக்கு ரெண்டுக்கும் லாபம்.

செப்டிக் டாங்க்:

மேட்டருக்கு வந்தா வடக்கு அ கிழக்கு திசைகளில் சென்டர்ல அமையனும். வடக்கு பார்த்த தலை  வாசல் வச்ச வீடுன்னா கிழக்குல, கிழக்கை பார்த்த தலைவாசல் வச்ச வீடுன்னா வடக்கு பக்கம் வச்சுக்கலாம்.


(அடுத்த பதிவுல தப்பான திசையில கிணறு, போர்வெல் , மழை நீர் சேகரிப்பு தொட்டி,  சம்பு எனப்படும்  அண்டர் கிரவுண்ட் தண்ணீர் டாங்க் இத்யாதி வச்சு ஷெட் ஆன குடும்பங்களோட கதைய சொல்றேன். கையோட கையா சரியான திசைல விவசாய கிணறு இருந்தும் வீட்டுக்காரவுக பண்ண சின்ன தவறால ஏற்பட்ட உயிர்பலியை பத்தியும் சொல்றேன். உபரியா தவறான திசையில செப்டிக் டாங்க் வச்சவுக கதையையும் பார்ப்போம் )

உடுங்க ஜூட்