திசைகளை குறிப்பிட திக்குனு இன்னொரு வார்த்தையும் உண்டு. (ஏதோ ஒரு திக்குலருந்து பிரச்சினை வரும்போது , தப்பிக்க வழி இல்லாம மத்த எல்லா திக்கும் லாக் ஆயிட்டா மனசு திக் திக்குனு அடிச்சுக்கும்).
திக்கற்ற பார்வதினு ஒரு பழைய படம் கூட இருக்கு. . வாழ்க்கைல ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல திக்கில்லாதவனாயிட்டனேனு புலம்பாத பார்ட்டியே கிடையாது. தெலுங்குல "திக்கு மொக்கு லேனி வாடு"ம்பாய்ங்க.
( திக்குன்னா திசை . மொக்குன்னா வேண்டுதல்- கடவுளோட ஒரு கமிட்மென்ட் )
பாரதியார் பந்தாவா சென்றிடுவீர் எட்டு திக்கும்னாரு.
ஜோசியத்துல நவகிரகங்கள் மாதிரி வாஸ்துல ஒன்பது திக்குகள் இருக்கு. அதாவதுங்கண்ணா 4 மெயின், 4 சப் + சென்டர் எல்லாத்தயும் சேர்த்தா 9.
உங்க ஜாதகத்துல எந்த கிரகம் வலிமையோட இருக்கோ அந்த கிரகத்துக்குரியதிசைல போனாதான் அந்த திசைல உள்ள கலைச்செல்வங்களை கொண்டுவந்து சேர்க்க முடியும். உங்க ஜாதகத்துல எந்த கிரகம் வீக்கா இருக்கோ அந்த கிரகத்துக்குரிய திசைல (திக்குல) தோஷம் இருந்தே தீரும். அப்படிப்பட்ட வீட்ல தான் நீங்க வாழ்விங்க. வாழனும்.
கிருஷ்ண தேவராயர் அவையில எட்டு மேதைக இருந்தாய்ங்களாம். அவிகளுக்கு அஷ்ட திக் கஜங்கள்னு பேரு. (கஜம்னா யானைனு அர்த்தமுங்கோ). இங்கயும் திக்கு.
இயற்கையிலான ஒழுங்கற்ற ஒழுங்குக்கும் , திக்குகளுக்கும் நெருங்கின தொடர்பு இருக்கு.
சூரியன் ஏன் கிழக்குலயே உதிக்கனும். ஏன் மேற்குலயே மறையனும்.
இந்த பூமி உருண்டைக்குள்ள என்னென்னவோ இருக்கு. எதுவும் நிலையா இல்லை. சுற்றி சுழண்டுக்கிட்டே இருக்கு. கண்டங்களே நகருதாம். வாயு, ஜலம்லாம் எதுல கணக்கு. நீங்க போர் போட்டு உள்ளாற இருக்கிற தண்ணிய உறிஞ்சி எடுத்தா அங்கன வெற்றிடம் ஏற்படுது அதை நிரப்ப பூமியுருண்டை தனக்குள்ள இருக்கிற ஐட்டங்களை அங்கே இங்கே மாத்தி ஃபில் அப் தி ப்ளாங்க்ஸ் பண்ணுது. எக்ஸ்ட்ரா செலவை சமாளிக்க பணம் புரட்டறச்ச சில இடத்துல நாம செய்யவேண்டிய பேமெண்ட் பெண்டிங் ஆயிருதுல்ல அப்படி..சில இடத்துல பூமியுருண்டை வெத்தா போயிருது. பூகம்பம் வரதுக்கு இதான் காரணம்னு சொல்றாய்ங்க.
இந்த உருட்டல் புரட்டல் எல்லாம் ஒரு குறிப்பிட்ட திக்கு, குறிப்பிட்ட திசையியலனு கணக்காதான் நடக்குது. இதையெல்லாம் ஒரு குன்ஸா கணிக்க முடிஞ்சா , அந்த கணிப்புக்கேத்தவகையில வீட்டை கட்டிக்கிட்டா அதான் வாஸ்து.இதுல என்ன ஒரு சோகம்னா போயஸ் கார்டன்ல ஒரு ஜெவோ, கோபால புரத்துல ஒரு கலைஞரோ மட்டும் வாஸ்துப்படி வீட்டை கட்டிக்கிட்டா போதாது. ஒவ்வொரு வீடும் , கிராமமும், ஒவ்வொரு நகரமும் வாஸ்துப்படி அமையனும். அப்படி அமைஞ்சா தான் முழுப்பலன் கிடைக்கும்.
இது மட்டுமில்லே எல்லாருக்கும் எல்லா திசையிலயும், எல்லா திக்குலயும் தோஷமில்லாத அமைஞ்சுட்டா வளர்ச்சி சூனியம். மேலும் உங்க ஜாதகப்படி, உங்க தொழில் படி, உங்க நட்சத்திரப்படி வாஸ்து மாறுது.
தோஷங்களால் வளர்ச்சி:
நிறை குடம் தளும்பாதும்பாய்ங்க. யோகத்துல கூட குண்டலினி சஹஸ்ராரத்துக்கு போயிட்டா அந்த சாதகனால உலகத்துக்கு எந்த உபயோகமும் இருக்காதுன்னுதான் கடவுள் அவனோட முன்னேற்றத்தை கொஞ்ச நாளைக்கு ப்ரேக் பண்ணி வைக்கிறாரு.
அந்த மாதிரி 100 சதம் வாஸ்து உள்ள வீட்ல வாழ்ந்தா "போதுமென்ற மனமே பொன் செய் மருந்து" " யாவும் அவன் செயல்" மாதிரி மென்டாலிட்டிதான் டெவலப் ஆகும். இப்படி 100 சதம் வாஸ்து உள்ள வீட்டுக்காரர் கதையையும் அனுபவ பூர்வமா பார்த்தேன்.
ஏதோ பூர்விக சொத்தா நிலங்கள் இருந்ததால பசி பட்டினி இத்யாதி இல்லைன்னாலும் பசங்க படிப்புக்காக ஒவ்வொரு சொத்தா வித்து ( நல்ல விலைக்கு) ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருந்தாய்ங்க. பசங்களும் படிப்பை முடிச்சுட்டு அப்பாவுக்கு தப்பாத பிள்ளைகளா ஹால் சோஃபால தூங்கி வழிஞ்சிக்கிட்டு இருந்தாய்ங்க.
வாஸ்து வாஸ்துதான் இல்லேங்கலை. ஹ்யூமன் பாடிக்கு ஒரு தர்மம் இருக்கில்லயா. அதை எந்தளவுக்கு சிரமப்படுத்தறமோ அந்த அளவுக்கு ஸ்ட்ரெங்தர்ன் ஆகும் லாஞ்சிவிட்டி அதிகரிக்கும். எந்த அளவுக்கு அதை சுகம்மா வச்சிருக்கமோ அந்த அளவுக்கு லொடக்கானி ஆயிரும்.
பார்ட்டி சொகம்மா தூக்கத்துலயே மேசிவ் ஹார்ட் அட்டாக்ல போய் சேர்ந்துருச்சு.. இத்தனைக்கு வயசு 50+ தான்.
இன்னைக்கிருக்கிற மெடிக்கல் மிராக்கிள்ஸுக்கு இது ஒரு வயசா? பார்ட்டி டிக்கெட் வாங்கின பிற்காடுதான் பின்னாடி எவ்ளோ பெரீ பொக்கை வச்சிட்டு போயிருக்குனு சனத்துக்கு தெரிஞ்சு என்னை கூப்டாய்ங்க.
நாமதான் அதிரடிக்கு மறுபெயர் இல்லியா? மேட்டரை உடைச்சு சொல்லி (பால்ல கூட கொஞ்சம் போல தண்ணி சேர்த்துத்தான் காய்ச்சி குடிக்கனும். அப்படியே குடிச்சா நாஸ்திதான். தங்கத்துல கூட கொஞ்சம் போல செம்பு, பித்தளை சேர்க்கனமப்பு)
டெம்ப்ரரியா ஈசானத்துல செங்கல் அடுப்பு வச்சி தண்ணி காய வைச்சு குளிங்கன்னேன்.ஒன்னரை மாசத்துல பசங்களுக்கு ஒன் பை ஒன் வேலை கிடைச்சு வீட்டை விட்டு வெளியேறினாய்ங்க. வீட்டுக்காரம்மா தனிய இருக்க பயந்துக்கிட்டு உறவுக்கார குடும்பம் ஒன்னை வாடகைக்கு வச்சுக்கிட்டாய்ங்க. ஏதோ கொஞ்சம் போல சுறுசுறுப்பா வாழ்க்கைச்சக்கரம் நகருது. குடி வந்த பார்ட்டி விருச்சிக லக்னம்,செவ்வாய் உச்சம். லேத் வச்சிருக்காரு. விடியல் 6க்கெல்லாம் லேத்துக்கு போயாகனும். அதனால செங்கல் அடுப்பை இன்னம் எடுக்க சொல்லலிங்கண்ணா.
நான் ஈசான்யம் குறைஞ்ச வீட்ல குடியிருந்தப்பதான் 14 நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டேன். (பக்கத்து போர்ஷன் பையன் கொலை கேஸ்ல மாட்டினான் அது வேற விஷயம் - மொத்தத்துல ரெண்டு கேஸ்லயும் போலீஸ் வந்தது).
ஏதோ ஷீர்டி பாபா மாதிரி வந்த தட்சிணையை வந்த மாதிரி டிஸ்பர்ஸ் பண்ணிக்கிட்டிருந்த நான் சிறு தொழிலதிபர் ரேஞ்சுக்கு வர காரணம் நைருதி வளர்ந்து ஆக்னேயம் குறைஞ்ச வீட்ல வசிச்சப்பத்தான்.
எச்சரிக்கை:
இதெல்லாம் விஷபரீட்சைங்கண்ணா இதுல இறங்கி யாருக்காச்சும் ரிவர்ஸ் ஆகி அவிக வேட்டிய அவுத்துட்டா நான் பொறுப்பு கிடையாதுங்கோ
ஆக இயற்கைல, முக்கியமா பூகோளத்துக்குள்ள ஒரு ஒழுங்கற்ற ஒழுங்குல மாற்றங்கள் நடந்துக்கிட்டே இருக்கு நம்ம முன்னோர்கள் எந்தவிதமான கருவிகளும் இல்லாம ஜஸ்ட் தங்கள் அனுபவம், உள்ளுணர்வின் உதவியோட நீரோட்டம் எந்த திக்குல போகுது. (ஈசான்யம்) காத்து எந்த திசையிலருந்து வீசுது (வாயு மூலை) ன்னெல்லாம் தெரிஞ்சு வச்சிருந்தாய்ங்க.
தங்களோட கண்டுபிடிப்புகளுக்கு கொஞ்சம் பிராக்டிக்காலிட்டியையும் சோடிச்சு அவிக சொல்லி வச்சதுதான் வாஸ்து .
இப்படி நாம விலாவாரியா சொல்லிவச்சாத்தான் ஆர்வமுள்ளவுக ஆவாய்ங்க சுஸ்து
ஒளிச்சு ஒளிச்சு வச்சி சரக்கே இல்லாம போயிட்ட இனத்துக்கு அடிச்சிரும் பேஸ்து.
மொக்கை போதும் மேட்டருக்கு "வா" ங்கறிங்க . வந்தே உட்டேன்.
கடந்த பதிவுல சைட் செலக்சனை பத்தி பேசிக்கிட்டிருந்தோம்.
தெருக்கள் அமைதல்:
மனைக்கு கிழக்கு திசையில் தெரு:
வாஸ்துப்படி இது ஓகே. முக்கியமா வீட்டில் வசிக்கும் ஆண்களுக்கு இது நல்லது.
விளக்கம்:
இந்த தொடர்பதிவோட ஆரம்பத்துல காம்பவுண்ட் சுவர் இல்லைன்னா நாஸ்தினு நான் சொன்னது ஞா இருக்கலாம்னு நினைக்கிறேன். எல்லாவிதிகளுக்கும் ஒரு விதி விலக்கு உண்டில்லையா? காம்பவுண்டு சுவர் மேட்டரும் அப்படித்தான் குறிப்பிட்ட திசையில இருக்ககூடாதது இருந்தா ( உ. ம். கிழக்கு, வடக்கு அ ஈசான்யத்துல மலை) காம்பவுண்ட் மஸ்ட்.
இங்கே பாருங்க கிழக்குல தெரு இருந்தா நல்லதுனு கே.வி சார் சொல்லியிருக்காரு. ஆனால் அது உங்க வீட்டு தரைப்பகுதிய விட உசரமா இருக்கக்கூடாது.இது பாயிண்ட் நெம்பர் ஒன். அந்த திசைல காம்பவுண்ட் இருக்ககூடாது நெம்பர் டூ. கிழக்கு பக்கம் காலியிடம் இருந்தா நல்லதுங்கறது பேசிக் பிரின்ஸிபிள். தெரு இருந்தா காலியிடம் இருக்கிற மாதிரிதானே (ஒரு வேளை அதை கட்சிக்காரவுக ஆக்கிரமிச்சு வச்சிருந்தானுங்கனா காம்பவுண்ட் போட்டுத்தான் ஆகனும்.
தெற்கு திசையில் தெரு:
நாட் ஓகே. (இது பொது விதி. ஆனால் குறிப்பிட்ட நட்சத்திரத்துல பிறந்தவுக, குறிப்பிட்ட எழுத்துகள்ள துவங்கற மாதிரி பேரை கொண்டவுகளுக்கு ஓகே)
நம்ம அனுபவம்:
ஒரு பார்ட்டி இந்த மாதிரி மனைல காம்ப்ளெக்ஸ் கட்டப்போறேன்னான். நானு "வேணா ராசா .. எதுக்கு வம்பை விலை கொடுத்து வாங்கறே இது செவ்வாய்க்குரிய திசை . வீண் விரோதம் வரும். எரிச்சல்,ரத்தம் தொடர்பான வியாதிகள் வரும். போலீஸ் பிரச்சினை வரும். அண்ணன் தம்பி தகராறு வரும். பேசாம கிழக்கு பக்கம் பேசேஜ் வச்சு கட்டிக்க. பில்டிங்குக்கு லுக் இல்லன்னா ம..ரு ஒன்னாச்சுன்னேன். கேட்கலை. கட்டியாச்சு.
பெண்டாட்டி கவுன்சிலராச்சு. ( எதிர்கட்சி). ஆளுங்கட்சிலருந்து பயங்கர ப்ரஷர். இதென்னடா லொள்ளுன்னு அடக்கி வாசிக்க ஆரம்பிச்சாய்ங்க சொந்த கட்சிலயும் விரோதம். அண்ணாத்தைக்கு ப்ளட் ஷுகர் மாட்டிக்குச்சு. அண்ணன் பெண்டாட்டியோட தகராறு. இவன் சொம்மா தமாசுக்கு கார்ட்ஸ் விளையாடிக்கிட்டிருந்தா ஏரியா ஆள்காட்டி எவனோ போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ண கூண்டோட ஸ்டேஷன். இவனுக்கு ஸ்க்ராப் வியாபாரம்.சக வியாபாரிங்கல்லாம் சிண்டிகேட் ஆகி இவன ரத்தக்கண்ணீர் வடிக்க வச்சுட்டாய்ங்க
இந்த களேபரத்துல கவர்ன்மென்ட் சர்வீஸ்ல இருந்த இவன் லாங் லீவ் போட்டு சம்பளமும் கட்.
இது போதாதுன்னு மேற்படி காம்ப்ளெக்ஸுக்கே குடி வந்துரப்போறதா சொன்னான்.வேணாம்யா இவ்ள எக்ஸ்பீரியன்ஸுக்கப்பறமும் எதுக்கு விஷபரீட்சைன்னேன்.கேட்கலை. இவன் கிட்டே வேலை செய்யற பசங்க இவன் போர்ஷனுக்கு டூப்ளிக்கேட் கீஸ் ரெடி பண்ணி சொந்த வீடு மாதிரி தினம் தினம் ஆட்டைய போட்ட கூத்தெல்லாம் நடந்தது.
மேற்கு திசையில் தெரு:
ஆண்களுக்கு சோம்பல் + பெண்களுக்கு நோய் பிடிவாதம்.
வடக்கு திசையில் தெரு:
ஆண்களுக்கு ஓகே
தெற்கு மற்றும் கிழக்கு திசையில் தெரு:
தெற்கு தெருவை உபயோகிக்காதிங்க. தெற்கு நோக்கிய தலைவாசல் அமைக்காதிங்க. கிழக்கு நோக்கிய வாசல் பெஸ்ட்`
தெற்கு,மேற்கு திசையில் தெரு: நாட் சூட்டபிள் ஃபார் ரெசிடன்ஸ். ஹோட்டல் இத்யாதிக்கு சூ..ப்பர்
வடக்கு ,மேற்கு திசையில் தெரு:
மேற்கு நோக்கிய வாசல் கூடாது. மேற்கு திசையில் உள்ள தெருவை யூஸ் பண்ணகூடாது.
வடக்கு கிழக்கு திசைகளில் தெரு:
சூப்பர். ஆனால் அந்த தெருக்கள் மனையை குறுக்கின மாதிரி அமைஞ்சிருக்ககூடாது.
(மனையின் சதுர அ செவ்வக வடிவத்துக்கு ஆப்பு வைக்கிற மாதிரி)
அடுத்த பதிவுல மனை வளர்ரது, மனை குறையறது பத்தியும் அதுக்குண்டான பலன் களை பத்தியும் பார்ப்போம்.