Friday, August 27, 2010

மிஸ்டர் அய்யர் டேக் கேர் !

அய்யரே ,
( "பிராமின்" ங்கற தலைப்புல வலைப்பூவை ஆரம்பிச்சு  முளைச்சு ஒரே ஒரு இலை கூட விடாமயே  திரட்டில என்  ஃபோட்டோ,மெயில் அட்ரசை யூஸ் பண்ணி   ஐட்டம் போட்ட அய்யர் தி கிரேட்டை கூப்டேங்கண்ணா)

அய்யரே ! 

நீ போட்ட  ஐட்டத்தை பார்த்து  நம்மாளுங்க தகவல்  சொல்ட்டாய்ங்க. என்னங்கடா இது  முன்னாடில்லாம்  நம்ம  பேரை உபயோகிச்சு மறுமொழிதான் போடுவாய்ங்க. இப்ப பதிவே போட ஆரம்பிச்சுட்டிங்களானு கொஞ்சமா கலங்கித்தான் போயிட்டேன்.

நல்லாருக்கு ராசா ! ஊரு நல்லாவே டெவலப் ஆகிரும்டா.  இந்த நரிவேலையையெல்லாம்   ஆல்ரெடி மஸ்தா பேரு நம்ம கிட்டே  ஏற்கெனவே காட்டியாச்சுடியோய்.

சுஜாதா சார் கதைகள்ள  அடிக்கடி லாடரல் திங்கிங்னு வரும். மாத்தி யோசிக்கிறது. உன் போஸ்டை படிச்சேன்.    நீ போண்டால விஷம் வைக்கிற கேரக்டருன்னு தோணலைஏன்னா மொத பதிவுலயே  நான் பார்ப்பான் தானு மாரடிச்சிருக்கியே.  இப்படி பப்ளிக்கா டிக்ளேர் பண்ற பார்ட்டிக்கு என்  ஐடிய உபயோகிக்கவேண்டிய அவசியம் என்ன?

எவனாச்சும் வில்லங்கம் பண்ணா அவன் எந்த ஐ.பி நெம்பர்லருந்து வரான்னு பார்த்து வச்சுக்கறது வழக்கம். வேறென்ன நம்ம ஊர் எஸ்.பிக்கு கம்ப்ளெயிண்ட் பண்ணி அந்த ஊரு எஸ்.பிக்கு இன்ஃபர்மேஷன் கொடுக்கத்தான்.

அப்படித்தான் இந்த அய்யரோட ஐ.பி நெம்பரையும் பிக் அப் பண்ணேன்.  ரெம்ப பரிச்சயமான நெம்பரா தோணுச்சு படக்குனு நாம யூஸ் பண்ற கனெக்சனோட ஐ.பி நெம்பரை பார்த்தேன். பகீர்னு ஆயிருச்சு. அடங்கொய்யால நம்ம மூக்குக்கு கீழ இப்படி ஒரு வண்டா?

 நம்ம ஊர்லருந்து எவனோ மிரட்டல் ஈ மெயில் எல்லாம் அனுப்பி நாஸ்தியாகி சித்தூர்ல ஐ.டி / ப்ரூப்ஃப் இல்லாம  பெண் கொடுப்பாய்ங்களோ என்னமோ சிஸ்டம் மட்டும் தரமாட்டாய்ங்க.

குபீர்னு எந்திரிச்சு போயி ரெஜிஸ்தர்ல பார்த்தா  ஆர்.சீனிவாசனு இருக்கு.  என்னடா மேட்டருன்னா.. சித்தூர்ல நமக்குனு ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. நெட் வோர்ல்டுல நடக்கிற கூத்தையெல்லாம் அவிகளுக்கு சொல்றது வழக்கம். இதுல ஏதோ ஒரு சர்க்கிள்ள கமுக்கமா இருந்து  நம்ம வாய்வழியாவே இந்த மேட்டரையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு கோதாவுல இறங்கின சீனிவாசனுக்கு  நேரம் சரியில்லை போல . நாம வர்ர சென்டருக்கே வந்துருக்காரு.

திரட்டில பதிவை இணைக்கிறப்ப  இவர் தன்னோட ஐடிய டைப் பண்ணப்போற சமயத்துல  நம்ம ஐடி  ( சிஸ்டம் மெமரில இருந்து ) தலை தூக்கியிருக்கு ஐயரு தன்னோட ஐடினு நினைச்சு  மவுஸ விட்டு உள்ளாற தள்ளிட்டாருபோல.

ஓஞ்சு போவட்டும் இந்த ஒரு தரம்  விட்டுரலாம். மத்த அய்யருல்லாம்  தங்களுக்குள்ள ஏதோ ஒரு அண்டர் ஸ்டாண்டிங்குக்கு வந்துட்டு நம்ம மேட்டர்ல கை விடறதில்லை. இந்த ஐயரு புதுசா கிளம்பியிருக்காரு. கிளம்பிட்டாய்ங்கய்யா கிளம்பிட்டாய்ங்கய்யா.   இப்பத்தான் நேரு, இந்திரானு ஆரம்பிச்சிருக்காரு. இப்பயே கட்டைய போட்டா ஓடிப்போயிருவாரு.  எத்தனை தூரம் தான் போறாருனு பார்ப்போம்.

கடைசியா அய்யரே ஒரு சொல்:

நீ லோக்கல் சரக்குனு கண்டுக்கிட்டன். இன்னம் கொஞ்ச நாழில  உன் ஜாதகமே என் கையில வந்துரும். என் பின்னாடியே மோந்துகினு வந்திருக்கே பார்த்தியா.  நான் என்ன என்.டி.ஆரா ஏமாந்து போவ.  நீ மட்டும் நாலு காலையும் தூக்கி மன்னிப்பு கேட்கலை ..உனக்கு வைக்கிறேன் இர்ரீ ஆப்பு.