Saturday, August 28, 2010

ரத்தக்களறி

அண்ணே வணக்கம்ணே !

நேத்திக்கு தூள் கிளப்பியாச்சு .எப்படியும் ஏவரேஜ் ஹிட்ஸ் கூடியிருக்கும். அதை குறைக்க ஏதோ ஒன்னு செய்யனுமே. சமீபத்துல கழுகு வலைச்சரத்துல வெளியான இந்திய வல்லரசு கனவுகள் என்ற பதிவு குறித்து கூகுல் குழுமத்தில நடந்த ( நடந்துட்டு இருக்கிற ) டிஸ்கஷன்ல (டிசக்சன்?) அன்பர்கள் தெரிவிச்சிருக்கிற கருத்துக்கள், குறைகள், முன் வச்சிருக்கிற விமர்சனங்களுக்கு பதிலா இந்த பதிவை போடறேங்கண்ணா இந்த கலந்துரையாடல் ஆந்திர மானில காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி அரசியல் மாதிரி கச்சா முச்சானு போயிருக்கு . சிலர் அம்பானி இத்யாதியினரை அப்பாவிகளா,விக்டிம்ஸா , தர்ம ராஜர்களாக்கற முயற்சி கூட செய்திருக்காய்ங்க. ஏழை ஏழையாவே இருக்க பணக்காரன் பணக்காரனாக அவனவன் முயற்சியே காரணம்னு கூட சொல்லியிருக்காய்ங்க. லோகோ பின்ன ருசி. ஆக்சுவலா இந்த திட்டம் உருவானதே எனக்கே எனக்குன்னு தான்.



1984 முதல் 1986 வரை கெட்ட ஆட்டம் போட்டு பிரம்மச்சரியம் கை கொண்ட புதுசுல

ஆஞ்சனேயரை தாஜா பண்றதுக்காக - குட்டிங்க கிட்டருந்து என்னை காப்பாத்திக்கறதுக்காக - ஆஞ்சனேயரோட கம்பேனியன் ஷிப்புக்காக - தலை ராமனுக்கு கோவில் கட்டறேனு பீலா விடறாய்ங்க - நீ வா தலை ராம ராஜ்ஜியத்தையே கட்டியெழுப்பலாம்னு அவரை ஜொள்ளு விட வைக்கிறதுக்காக போட்ட திட்டம்.

1989ல ஜோஸ்யத்துல வேற ப்ரவேசம் ஏற்பட்டுருச்சா நம்ம ஜாதகத்துல குருவேற உச்சமா தாளி இந்த நாட்டுக்கு பிரதமராகி ( அதாங்க டைரக்ட் எலக்சன்ல) நம்ம திட்டத்தை அமல்படுத்தி ராமராஜ்ஜியத்தை ஏற்படுத்தியே தீர்ரதுனு துடியா இருந்த நான் ..



ஆத்ம சாட்சாத்காரத்துக்காக என் ராமன் என் உடல், என் மனம், என் புத்தி சகலத்தையும் போட்டு உலுக்கி ஒரு வழி பண்ண கோதாவுல இறங்கின காலத்துல பேதியாயிட்டன். அய்யய்யோ இந்த ரேஞ்சுல போனா பட்டினி சாவு கியாரண்டி. இந்த அயனான திட்டம் சனத்துக்கு உபயோகப்படாம போயிரும்னு ஜன சக்தி பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பினேன் ( 1993) இப்படித்தான் இது வெளி உலகத்துக்கு லீக் ஆச்சு.



பூஸ்ட் ஈஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜினு சச்சின் சொல்றாரே அந்த மாதிரி என் சீக்ரெட் ஆஃப் எனர்ஜி இந்த ஆ.இ.2000 தான். சோத்துக்கில்லாத நாள்லயே இந்த மேட்டர்ல ஜகா வாங்கினது இல்லிங்கண்ணா.



இந்த சனம் தான் என் வயித்தை உணவால நிரப்பினாய்ங்க. என்னை தன் மானத்தோட வாழ வச்சாய்ங்க. இந்த சனத்தோட வாழ்க்கைய வெளிச்சத்தால நிரப்புவேன். என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கிட்டுதான் இங்கன ரெஸ்பாண்ட் ஆகிட்டிருக்கேன். இதுவே ரெம்ப ஹார்டா இருந்தா ஐம் சாரி. ஓகே இப்போ அன்பர்களோட கருத்தை பார்ப்போம். ( கொஞ்ச நாள் போனா இந்த மேட்டர்ல ரத்தக்களறியே நடக்கும்போல இருக்கு. இதுக்கு என் எழுத்து காரணமாயிரக்கூடாதுன்னு அடக்கியே வாசிக்கிறேன் வால்க.)



திருவாளர் ராஜசங்கர் சொல்கிறார் :



//இவர் மாதிரி ஆள்கள் எல்லாம் மந்திரத்தில் மாங்காய் வரவைத்து பசியாற்றுவேன்

எனும் ஆட்கள். நம்மூர் அரசியல்வாதிகள் மாதிரி//



பாருங்கப்பு.. பாரத மாதாவை பாராளுமன்ற ஜன நாயகத்துல கேங் ரேப் தான் பண்ணினாய்ங்கனு நானிருந்தேன் தாயாவே ஆக்கிட்டாய்ங்களா? ராஜ சங்கர் மாங்காய் அதுக்கு தானே.



கூவத்தை மணக்கச்செய்வேனு சொன்னேனா? போஸ்ட் கார்டு விலையை குறைப்பேனு சொன்னேனா? உங்க ஊரு அரசியல்வாதிங்க மேல கடுப்புன்னா அதுக்கு லாஜிக் இருக்கு? என்னை போய் ஏன் அந்த க்ரூப்ல சேர்த்திங்க.? ஏன்யா வீணா கடல்ல கலக்கிற நதி நீரை கொண்டு விவசாயத்தை பெருக்கலாம்னு தானே சொன்னேன். இதுல மந்திரம் எங்க வருது?





கிருமி சொல்றாரு:

//ஏழைகளை மொத்தமா ஒழிச்சிட்டா, ஏழ்மை போயிடும்னும் சொல்லுவாங்க.//



பாவம் கிருமி சார் ஒண்டியா மாட்டி சனங்களோட அறிவு ஜீவித்தனமான விதண்டா வாதத்துக்கு எதிரா நமக்கு வக்காலத்து வாங்கி கண்ணு கட்டிப்போயி கடுப்பாகி இப்படி சொல்லியிருக்காரு



கிருமி



//இவர் ஆபரேசன் இந்தியா 2020 என்று இந்த திட்டத்திற்கு பெயரிட்டு, அதை

நிறைவேற்றியே தீருவேன் என்று கங்கணம் கட்டி போண்டியானவர். இவரது

கணக்குகள் தவறோ, சரியோ! இந்தியாவை வல்லரசாக்கித் தீருவேன் என்று கங்கணம் கட்டியதற்காகவாவது, இவர் பாராட்டுக்குரியவரே.//



நன்றி கிருமி சார். ஆனா நமக்கு தேவை பாராட்டு இல்லேன்னேன். காரியம் நடக்கனும்னேன்.

வேந்தன் அரசு சொல்றாரு:



//இந்தியாவில் அத்தனை பேரும் ஏழைகளாக இருந்தால் ஒரு பொட்டி கடைக்காரன் கூட தொழில் நடத்த முடியாது. பீடி வாங்க காசு வேணுமே/ ஒரு டீ குடிக்க காசு வேணுமே. அதனால் கோடீஸ்வரர்கள் ஏழைகளை வச்சு தோன்ற முடியாது. கையில் காசூள்லவர்களை வைத்துதான் பில் கேட்சு பில்லியனர் ஆகணுமுனா நம் கம்ப்யூட்டர் வாங்கும் வளமை உள்ளவராக இருக்கணும்//



இவர் இப்படி சொல்ல காரணம் இருக்கு. இந்த டிஸ்கஷன்ல புலவர் அசோக் என்பவர் இந்தியால இத்தனை கோடீஸ்வரர்கள் உருவாகியிருக்கிறதால இந்தியா பணக்கார நாடுதான்னு ஒரு வாதத்தை எடுத்து வச்சாரு. அதுல செமை லாஜிக் இருக்குதுன்னு நம்மாளு ஜே போட்டுட்டாரு.



ஆனா கோடீஸ்வரர்கள் ஏழைகளை வச்சுத்தான் தோன்ற முடியும்ங்கறது என் வாதம். இன்னைக்கு அரசாங்கம் குடி நீர் சப்ளை மேட்டர்ல கைய தூக்குதே இதுக்கு என்ன காரணம்? மினரல் வாட்டர் யூனிட் தயாரிக்கிற முதலைகள் செழிக்கத்தான்.

அரசு ஊழியர்களுக்கு கூப்டு கூப்டு ஹவுசிங் லோன் கொடுக்கறாய்ங்களே எதுக்கு? சிமெண்ட் ஸ்டீல் கம்பெனிக்காரவுக செழிக்கத்தான். ஏன் சிக்ஸ் ட்ராக் ரோடு போடறாய்ங்களே எதுக்கு? காண்ட்ராக்டருங்க செழிக்க, வாகன உற்பத்தியாளர்கள் செழிக்க. அந்த ரோட்டை சரியா போடறதில்லையே ஏன்? அப்பத்தானே அந்த ரோட்ல போற வண்டி,வாகனமெல்லாம் சீக்கிரமா லொடக்காணி ஆகி ஸ்பேர்ஸ் அதிகமா விக்கும். சுய வேலை வாய்ப்பு திட்டம்னு ஆட்டோ வாங்க , டெம்போ வாங்க அரசாங்கம் சப்சிடி கொடுக்குதே, வங்கிகள் கடன் கொடுக்குதே எதுக்கு? அந்த உற்பத்தியாளர்கள் செழிக்க. ஏன் ஒரு அரசாங்கம் இதையெல்லாம் செய்யனும் ?



அரசமைக்கனும்னா தேர்தல்ல ஜெயிக்கனுமே. ஜெயிக்கனும்னா வாரி விடனுமே அதுக்கு பணம் வேணமே அந்த பணத்தை இந்த முதலைகள் தானே தரனும். அவிகளுக்கு லாப கரமா அரசு செயல்படலைன்னா அது பிழைக்க முடியாதே.



இந்த விஷ வளையம் உடைபடமா தொடர காரணம் என்ன? இந்தியா ஒரு ஏழை நாடு. ஏழ்மை காரணமா வாக்காளர்கள் இங்கன தேர்தல் சமயத்துல ஒரு ஸ்டீல் குடம், மூக்குத்தி,சீலைன்னு வாரி விட்டா கோட்ஸேவுக்கு கூட ஓட்டுப் போட்டுருவாய்ங்க.



இப்ப புரியுதுங்களா ஏழைகள் அதிகமா இருந்தாதான் அவிக நிர்மூடங்களா, தற்காலிக லாபங்களுக்கு ஜொள்ளு விடறவங்களா இருந்தாதான் அதிகமான எண்ணிக்கைல கோடீஸ்வரர்கள் உருவாக முடியும்.



ஏழை எப்பவுமே கேள்வி கேட்காத நுகர்வோனாக இருப்பான். ( மெக்கானிக் ஷெட்ல மெக்கானிக்ஸ் க்ரீஸ்,ஆயில் கறைய கழுவ உபயோகிச்ச சோப் ஆயிலை கலரும்,வாசனையும் சேர்த்து சாஷேல கொடுத்தா கேள்வி கேட்காம உபயோகிக்கிறவன் ஏழைதானே. அப்போ கோடீஸ்வரர்கள் அதிகமான எண்ணிக்கைல உருவாக முடியும் தானே.



நம்ம எதிர்வீட்டு பையன் புது சைக்கிள் வாங்கினான். ஆக்சில்ல லேசா விரிசல். பையன் ரெண்டு நாள் கழிச்சுத்தான் பார்த்திருக்கான். பதறியடிச்சு போயி கடைக்காரனை கேட்டான். அவன் கூலா " எங்கனா ரெண்டு ரூபா கொடுத்து பத்தவச்சுக்கப்பா"ன்னானாம்.



ஏதோ அந்த பையனுக்கு நேரம் நல்லாருந்து மேட்டர் என் பார்வைக்கு வர கன்ஸ்யூமர் ஃபோர பூச்சி காட்டி சுமுகமா முடிச்சேன். இல்லைனா என்ன கதி?



ஏதோ ஒரு கார் எஞ்சின்ல தீக்கிளம்பி எரிஞ்சு போனா அந்த ப்ராண்ட் காரே மொக்கையாயிருது.



ஒரு லாப்டாப் பேட்டரி பத்தி எறிஞ்சா கம்பெனிக்காரன் உடனே ஒட்டு மொத்தமா ரிட்டர்ன் வாங்கறான். ஏன் அங்கன வாங்கினவன் இருக்கப்பட்டவன் (அறிவு,விழிப்புணர்ச்சி, காசு,பணம் இருக்கப்பட்டவன்) . நியாயதேவனின் கதவுகளை தட்டும் வலிமை அவன் கைக்கு இருக்கு. அதானல பேதியாகுது.



இப்ப புரியுதுங்களா ஏழை நாட்ல தான், ஏழைகள் நிறைஞ்ச நாட்லதான் கோடீஸ்வரர்கள் அதிகமா உருவாகமுடியும்னு.



திருவாளர் ராஜசங்கர் சொல்கிறார் :



//இவர் மாதிரி ஆள்கள் எல்லாம் மந்திரத்தில் மாங்காய் வரவைத்து பசியாற்றுவேன்

எனும் ஆட்கள். நம்மூர் அரசியல்வாதிகள் மாதிரி//



பாருங்கப்பு.. பாரத மாதாவை பாராளுமன்ற ஜன நாயகத்துல கேங் ரேப் தான் பண்ணினாய்ங்கனு நானிருந்தேன் தாயாவே ஆக்கிட்டாய்ங்களா? ராஜ சங்கர் மாங்காய் அதுக்கு தானே.



கூவத்தை மணக்கச்செய்வேனு சொன்னேனா? போஸ்ட் கார்டு விலையை குறைப்பேனு சொன்னேனா? உங்க ஊரு அரசியல்வாதிங்க மேல கடுப்புன்னா அதுக்கு லாஜிக் இருக்கு? என்னை போய் ஏன் அந்த க்ரூப்ல சேர்த்திங்க.? ஏன்யா வீணா கடல்ல கலக்கிற நதி நீரை கொண்டு விவசாயத்தை பெருக்கலாம்னு தானே சொன்னேன். இதுல மந்திரம் எங்க வருது?





கிருமி சொல்றாரு:

//ஏழைகளை மொத்தமா ஒழிச்சிட்டா, ஏழ்மை போயிடும்னும் சொல்லுவாங்க.//



பாவம் கிருமி சார் ஒண்டியா மாட்டி சனங்களோட அறிவு ஜீவித்தனமான விதண்டா வாதத்துக்கு எதிரா நமக்கு வக்காலத்து வாங்கி கண்ணு கட்டிப்போயி கடுப்பாகி இப்படி சொல்லியிருக்காரு



கிருமி



//இவர் ஆபரேசன் இந்தியா 2020 என்று இந்த திட்டத்திற்கு பெயரிட்டு, அதை

நிறைவேற்றியே தீருவேன் என்று கங்கணம் கட்டி போண்டியானவர். இவரது

கணக்குகள் தவறோ, சரியோ! இந்தியாவை வல்லரசாக்கித் தீருவேன் என்று கங்கணம் கட்டியதற்காகவாவது, இவர் பாராட்டுக்குரியவரே.//



நன்றி கிருமி சார். ஆனா நமக்கு தேவை பாராட்டு இல்லேன்னேன். காரியம் நடக்கனும்னேன்.

வேந்தன் அரசு சொல்றாரு:



//இந்தியாவில் அத்தனை பேரும் ஏழைகளாக இருந்தால் ஒரு பொட்டி கடைக்காரன் கூட தொழில் நடத்த முடியாது. பீடி வாங்க காசு வேணுமே/ ஒரு டீ குடிக்க காசு வேணுமே. அதனால் கோடீஸ்வரர்கள் ஏழைகளை வச்சு தோன்ற முடியாது. கையில் காசூள்லவர்களை வைத்துதான் பில் கேட்சு பில்லியனர் ஆகணுமுனா நம் கம்ப்யூட்டர் வாங்கும் வளமை உள்ளவராக இருக்கணும்//



இவர் இப்படி சொல்ல காரணம் இருக்கு. இந்த டிஸ்கஷன்ல புலவர் அசோக் என்பவர் இந்தியால இத்தனை கோடீஸ்வரர்கள் உருவாகியிருக்கிறதால இந்தியா பணக்கார நாடுதான்னு ஒரு வாதத்தை எடுத்து வச்சாரு. அதுல செமை லாஜிக் இருக்குதுன்னு நம்மாளு ஜே போட்டுட்டாரு.



ஆனா கோடீஸ்வரர்கள் ஏழைகளை வச்சுத்தான் தோன்ற முடியும்ங்கறது என் வாதம். இன்னைக்கு அரசாங்கம் குடி நீர் சப்ளை மேட்டர்ல கைய தூக்குதே இதுக்கு என்ன காரணம்? மினரல் வாட்டர் யூனிட் தயாரிக்கிற முதலைகள் செழிக்கத்தான்.

அரசு ஊழியர்களுக்கு கூப்டு கூப்டு ஹவுசிங் லோன் கொடுக்கறாய்ங்களே எதுக்கு? சிமெண்ட் ஸ்டீல் கம்பெனிக்காரவுக செழிக்கத்தான். ஏன் சிக்ஸ் ட்ராக் ரோடு போடறாய்ங்களே எதுக்கு? காண்ட்ராக்டருங்க செழிக்க, வாகன உற்பத்தியாளர்கள் செழிக்க. அந்த ரோட்டை சரியா போடறதில்லையே ஏன்? அப்பத்தானே அந்த ரோட்ல போற வண்டி,வாகனமெல்லாம் சீக்கிரமா லொடக்காணி ஆகி ஸ்பேர்ஸ் அதிகமா விக்கும். சுய வேலை வாய்ப்பு திட்டம்னு ஆட்டோ வாங்க , டெம்போ வாங்க அரசாங்கம் சப்சிடி கொடுக்குதே, வங்கிகள் கடன் கொடுக்குதே எதுக்கு? அந்த உற்பத்தியாளர்கள் செழிக்க. ஏன் ஒரு அரசாங்கம் இதையெல்லாம் செய்யனும் ?



அரசமைக்கனும்னா தேர்தல்ல ஜெயிக்கனுமே. ஜெயிக்கனும்னா வாரி விடனுமே அதுக்கு பணம் வேணமே அந்த பணத்தை இந்த முதலைகள் தானே தரனும். அவிகளுக்கு லாப கரமா அரசு செயல்படலைன்னா அது பிழைக்க முடியாதே.



இந்த விஷ வளையம் உடைபடமா தொடர காரணம் என்ன? இந்தியா ஒரு ஏழை நாடு. ஏழ்மை காரணமா வாக்காளர்கள் இங்கன தேர்தல் சமயத்துல ஒரு ஸ்டீல் குடம், மூக்குத்தி,சீலைன்னு வாரி விட்டா கோட்ஸேவுக்கு கூட ஓட்டுப் போட்டுருவாய்ங்க.



இப்ப புரியுதுங்களா ஏழைகள் அதிகமா இருந்தாதான் அவிக நிர்மூடங்களா, தற்காலிக லாபங்களுக்கு ஜொள்ளு விடறவங்களா இருந்தாதான் அதிகமான எண்ணிக்கைல கோடீஸ்வரர்கள் உருவாக முடியும்.



ஏழை எப்பவுமே கேள்வி கேட்காத நுகர்வோனாக இருப்பான். ( மெக்கானிக் ஷெட்ல மெக்கானிக்ஸ் க்ரீஸ்,ஆயில் கறைய கழுவ உபயோகிச்ச சோப் ஆயிலை கலரும்,வாசனையும் சேர்த்து சாஷேல கொடுத்தா கேள்வி கேட்காம உபயோகிக்கிறவன் ஏழைதானே. அப்போ கோடீஸ்வரர்கள் அதிகமான எண்ணிக்கைல உருவாக முடியும் தானே.



நம்ம எதிர்வீட்டு பையன் புது சைக்கிள் வாங்கினான். ஆக்சில்ல லேசா விரிசல். பையன் ரெண்டு நாள் கழிச்சுத்தான் பார்த்திருக்கான். பதறியடிச்சு போயி கடைக்காரனை கேட்டான். அவன் கூலா " எங்கனா ரெண்டு ரூபா கொடுத்து பத்தவச்சுக்கப்பா"ன்னானாம்.



ஏதோ அந்த பையனுக்கு நேரம் நல்லாருந்து மேட்டர் என் பார்வைக்கு வர கன்ஸ்யூமர் ஃபோர பூச்சி காட்டி சுமுகமா முடிச்சேன். இல்லைனா என்ன கதி?



ஏதோ ஒரு கார் எஞ்சின்ல தீக்கிளம்பி எரிஞ்சு போனா அந்த ப்ராண்ட் காரே மொக்கையாயிருது.



ஒரு லாப்டாப் பேட்டரி பத்தி எறிஞ்சா கம்பெனிக்காரன் உடனே ஒட்டு மொத்தமா ரிட்டர்ன் வாங்கறான். ஏன் அங்கன வாங்கினவன் இருக்கப்பட்டவன் (அறிவு,விழிப்புணர்ச்சி, காசு,பணம் இருக்கப்பட்டவன்) . நியாயதேவனின் கதவுகளை தட்டும் வலிமை அவன் கைக்கு இருக்கு. அதானல பேதியாகுது.



இப்ப புரியுதுங்களா ஏழை நாட்ல தான், ஏழைகள் நிறைஞ்ச நாட்லதான் கோடீஸ்வரர்கள் அதிகமா உருவாகமுடியும்னு.



மேற்படி கலந்துரையாடல்ல ஒரு தோஸ்த் சொல்றாரு:



//ஏதோ ஒன்றோடு ஒப்பிட்டு தான் ஒன்றை குறை என்று கூற முடியும்//

எடுப்பு நல்லாவே இருக்கு.



//வளர்ந்த நாடுகளுடன், அல்லது வேகமாக குறுகிய காலத்தில் வளர்ந்த சிறிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் ஜிடிபி மற்றும் தனி மனித வாழ்க்கைத் தரம் மோசமாக இருந்தாலும், 1947 ல் நாம் இருந்த இடத்தில் இருந்து நாம் பெரிய அளவில் முன்னேறியுள்ளோம்.//



ஜிடிபி அளவுல (தேசீய வருமானம், தலை சரி வருமானம் இத்யாதிய வச்சு பார்த்தாலும்) பார்க்கறச்ச தூள் கிளப்பியிருக்கோம். நான் இல்லேங்கலையே நம்ம வாதம் என்னடான்னா அதுக்கு கான்ட்ரிப்யூட் பண்ண மெஜாரிட்டி பீப்புளுக்கு

சம வாய்ப்பு கிடைக்கலே அதனால அதனோட பலன் அந்த சனத்துக்கு சமமா கிடைக்கலேங்கறதுதான்.





// இதை விட வேகமாக இந்தியா முன்னேறியிருக்க முடியுமா? நிச்சயமாக. அதே நேரத்தில் நம் நாடு பெருமளவில் முன்னேறியுள்ளது. இப்போதுள்ள இந்தியா முன்னேறவில்லை என்று நீங்கள் கருதினால், நாற்பது ஐம்பது முன் வாழ்ந்த மக்களின் ஏழ்மை நிலை நீங்கள் அறியவேண்டும். அரிசி சோறு, காரை வீடு, குடிநீர் எதுவும் இன்று கிடைக்காததை விட பல மடங்கு நபர்களுக்கு கிடைக்காமல் இருந்தது.//



இந்த வாதத்தை எந்த வகையில சேர்க்கிறதுன்னு புரியலை. போதுமென்ற மனமே பொன்செய் மருந்து சைக்காலஜியா? அல்லது மெக்காலே பிரபுவோட கல்வி முறை தந்த பரிசா? நான் ஜோசியம் சொல்ல ஆரம்பிச்ச சமயம் ஃபீஸு அஞ்சு ரூபா. இன்னைக்கு ரூ 250 .உடனே ரெண்டையும் கம்பேர் பண்ணிப்பார்த்துட்டு ஆகா நான் வளர்ந்தாச்சு, முன்னேறியாச்சுன்னு மார் தட்டிக்க வேண்டியதுதானா?



அப்போ பவர் பில் என்ன? ( ரூ 50 அ 60/-) இப்போ பவர் பில் என்ன? ( ரூ.570/-)

அப்போ வருசத்துக்கு ஒரே ஒரு பஞ்சாங்கம். அது கூட பத்து பதினைஞ்சு ரூபாதான்.

உபரியா ஒன் சைட் பேப்பர்ஸ் இருந்தா போதும் ஒரு வருசத்துக்கு கதை க்ளோஸ்.

இப்போ அப்படியா? கம்ப்யூட்டர், இன்டர் நெட்,ப்ளாக்,ப்ளாக் அப்டேட்டிங், மொபைல் ஃபோன் இதுக்கெல்லாம் மெயின்டெயினென்ஸ் என்னாச்சு? இதுக மேல முதலீட்டுக்கு வட்டி என்னாச்சு?



இது முன்னேற்றமா .. இல்லை ஏதோ சர்வைவ் ஆயிட்டிருக்கேனானு சொல்ல மேதைகள் தேவையில்லை. டீ விலை சொல்லிரும். அப்ப 15 காசு. இப்போ ரூ.4

அப்போ பூபால் பீடி கட்டு ரூ 1.90 இப்போ ரூ 6.50.



என்னய்யா வாதம் இது ? 1947 பீரியடை எடுத்துக்கிட்டா காஸ்ட் ஆஃப் லிவிங் என்ன? இப்போ என்ன? அன்னைக்கு ஊருக்கெல்லாம் சேர்த்து ஒன்னு அ ரெண்டு திவாலா பார்ட்டி இருந்தா அதிகம். இன்னைக்கு ? தினசரிகள்ள தனி காலம் ஏற்படுத்தற ரேஞ்சுல ஐ பி பெட்டிஷன்ஸ் ஃபைல் ஆயிட்டிருக்கு. அப்போ ஊருக்கு வெளிய சுடுகாட்டுக்கிட்டே அ கக்கூஸு கிட்டே சாராய கடை இருக்கும். சரக்கு போடறவன் மறவா போய் போட்டுக்கிட்டு வருவான். அன்னைக்கு தண்ணீ ஃப்ரீ, எரி பொருள் ஃப்ரீ, இன்னைக்கு ? என்ன ஒரு இம்சைன்னா காலரா, டைஃபாயிட்லல்லாம் பொட்டு பொட்டுனு செத்துப்போயிருவாய்ங்க. தீண்டாமை ,சாதீயம். அது கூட ஏதோ பெரியார் மாதிரி ஜூரிங்க ஒர்க் அவுட் பண்ணதால ஓஞ்சு போச்சு.



இதுவே சொத்தைவாதம். அடுத்து ஒரு வாதம் வருது பாருங்க



//இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து சமூகம் பல மடங்கு முன்னேறியிருக்கும். //



கிழ்ஞ்சுது போங்க.



// அன்றும் எல்லோரும் சமமாகா எல்லாவற்றினையும் பெற்றுள்ளார்கள் என்ற நிலைமை நிச்சயம் இருக்காது. அன்றும் என்றும் புலம்புவது போல் மக்கள், இளைஞர்கள் புலம்புவார்கள். அது மாறாது.//



அடங்கொய்யால நான் என்ன வாத்தியார் படப்பாட்டு மாதிரி அல்லாரும் அல்லா சனமும் அல்லாத்தையும் சமமா பெறனும்னா சொன்னேன். தேசீய வருமானத்தை உயர்த்த ( உற்பத்தி நடவடிக்கைல பங்காற்ற)சம வாய்ப்பு இருக்கனும்னே அவ்ளதான். இதை உபயோகிச்சுக்கறவனுக்கு நிஜமாவே வருவாய் கூடும்.வாழ்க்கை தரம் உயரும். குண்டி பெருத்து "ச்சொம்மா தான் கிடப்பேங்கற பார்ட்டிக நாறிக்கிட்டு தான் இருப்பாய்ங்க.



இன்னைக்கு சாஃப்ட் வேர் சாம்ராட்டுகள் உட்பட சம்பளக்குறைப்பு ,,,ஆட் குறைப்பு, தலைக்கு மேல வேலை நீக்க கத்தி, தலை நிறைய அழுத்தம்னு ரெண்டுபக்கம் கொளுத்தி விடப்பட்ட மெழுகு வர்த்தியா உருகிக்கிட்டிருக்காய்ங்களே.. ஆனா

எம்.பிக்களுக்கு மட்டும் சம்பளம் பேட்டானு சகலமும் நாலு மடங்கு உசருதே. அது கூடாது............



எவனால உண்மையிலயே உற்பத்தி நடக்குதோ எவனால தேசீய வருமானம் உசருதோ அவனுக்கு அதுல உண்மையான பங்கு கிடைக்கனும். அதான் ஆ.இ

திட்டத்தோட சாராம்சம். சிரஞ்சீவி பிறந்த நாளைக்கு அவரோட புத்ர ரத்தினம்

நாலஞ்சு கோடி ரூபா செலவுல கார் ப்ரசன்ட் பண்ணாரம். நான் என்ன குப்பன்,சுப்பன் பிறந்த நாளைக்கு அவிக சன்ஸ் இந்த மாதிரி கார் ப்ரசண்ட் பண்ணனும்னா சொல்லியிருக்கேன்.



செல்வன் சொல்றாருங்கண்ணா:

// தீர்வை விட நோயே பரவாயில்லை எனும் சூழல் தான் சித்தூர் முருகேசனின் கட்டுரையை படித்தால் தோன்றுகிறது.//

சொக்கா ! இது என்னடா தங்கத்தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை. குஷ்டம் வந்தவுகளுக்கு தொடு உணர்ச்சியே இருக்காதாம். அப்படி ஒரு நிலைல தான் நாடு இருக்கு. தனி மனித தேவைகள் பெருகிப்போச்சு. வருவாய்க்கான பாதை குறிகிப்போச்சு . சோஷியல் ஆக்டிவிட்டீஸ் குறைஞ்சு போச்சு. அவனவனுக்கு டங்கு வார் அறுந்து தொங்குது. இதனால அவனவன் மென்டாலிட்டியே மாறிப்போச்சு. திரு.செல்வன் மட்டுமில்லே மெஜாரிட்டி ஆஃப் தி பப்ளிக்கும் இப்படித்தான் சொல்வாய்ங்க. ஏன்னா நிலைமை அப்படி.



சின்ன உதாரணம். என்.டி.ஆர் ஆட்சிக்கு வந்த புதுசுல நான் கவர்ன்மென்டல் ஆஃபீசர்ஸ் யூனியனுக்கு அவருக்கும் முட்டிக்கிச்சி. ஒரு 55 நாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது . போராட்டம் நடக்கிற பீரியட்ல என்.ஜி.ஓ ஹோம்ல கண்ணால பார்த்தேன். அவனவன் பெண்டாட்டி தாலிய வச்சு சீட்டாடிக்கிட்டிருந்தான்.



ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது. என்.டி.ஆர் ஒரு மயிரு கோரிக்கையையும் நிறைவேத்தலை. ஆனாலும் ஸ்ட்ரைக் க்ளோஸ். என்னடா மேட்டர்னா பெண்டாட்டிங்க மொறத்தால அடிக்க துவங்கியிருந்தாய்ங்க. கடைசி வரை அந்த 55 நாள் ஸ்ட்ரைக் கால சம்பளத்தை கூட வாங்க முடியலை அவிகளால.



மாற்றம் ச்சொம்மா வராது மாமே ! வலிக்கும். ஒரு குழந்தையை பெத்து எடுக்க ஒரு பொம்பளை எப்படி வலையை தாங்கறாளோ ( உங்க மம்மிய கேளுங்க) அப்படி ஒரு தேசத்தை மறுபடி பிறப்பிக்கிறதுன்னா தமாசு இல்லே துரை ! வெண்ணை கழண்டுக்கும்.



அட தீர்வை அமல் படுத்தறது அப்பாறம் அதுக்கு ஆதரவு தெரிவிக்கவே தயங்கற நிலைல சனம் இருக்காய்ங்கன்னா பார்த்துக்கங்க. இவிகள இந்த செட் அப் எந்த அளவுக்கு சாம்பல் கூடுகளா ஆக்கிருச்சுன்னு.



//தீர்வு என்னவென்றால் தேவர்மகனில் கமல் சொல்லுவதுதான் தீர்வு//

த பார்ரா. அறிவு ஜீவிகளோட ஸ்டைலே இதான் . சுஜாதா சிவாஜிக்கு ஒர்க் பண்ண மாதிரி இப்படி தொபுக்கடீர்னு விழுந்துட்டாரு பார்த்திங்களா? படத்தை படமா பாருங்க பாஸு. கலைஞனோட தீர்வு பொயட்டிக்கா இருக்கும். க்ரியேட்டிவா இருக்கும். ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராது நைனா.



புலவர். அசோக் வந்துட்டாரு. அட்டென்ஷன்:



// வெறும் விவசாயம் நாட்டினை முன்னேற்ற முடியாது.//

அப்போ ஜஸ்ட் எண்ணெய் வளத்தை வச்சுக்கிட்டு அரபு நாடுகள் எப்படி கண்ணா முன்னேறிருச்சு. எண்ணெய்க்காச்சும் மாற்று இருக்கு. உணவுக்கு,உணவுப்பொருளுக்கு ஏது நைனா மாற்று//



// இயற்கையின் நுணுக்கமான விதிகளை அறிந்து, அவற்றினை பயன்படுத்தும் அறிவே பொருளாதாரத்தை வேகமாக முன்னேற்றும்.//

அது சரி. மிந்தியெல்லாம் த்ராய் வச்சு அரைச்செங்கல்லை வச்சு சுண்ணாம்புல ஒட்டி தளம் போடுவாய்ங்க. ஏதோ ஒன்னு ரெண்டு த்ராய் செதிலடிச்சுரும். மெள்ள தட்டி எடுத்து த்ராய மாத்திருவாய்ங்க. இப்ப மோல்டிங் தானே தில்லில அரசு நிகழ்ச்சிகள்ள ஐ.ஏ,எஸ் ஆஃபீஸர்ஸ் பக்கெட் பிடிச்சுக்கிட்டு நிப்பாய்ங்களாம் . மழைக்கு ஒழுகுற தண்ணிய பிடிக்க. // இயற்கையின் நுணுக்கமான விதிகளை அறிஞ்சுக்கிட்டா// பொருளாதார முன்னேற்றம் ஃப்ரீஸ் ஆயிரும் பாஸு.



// ஒருவர் விவசாயம் செய்தால் போதும் என்ற இடத்தில், முப்பது பேரை வேலை செய்ய வைத்து மனித திறனை வீணடிக்கின்றோம். //



தலை ! வேலை வாய்ப்பு உறுதி திட்டம் ,ஒரு ரூபா அரிசி,டாஸ்மாக்கெல்லாம் வந்த

பிறவு விவசாய வேலைக்கு ஆளே கிடைக்கிறதில்லை அப்பு ! லோக்கலா விஜாரிச்சு பாரு. நிலவரம் புரியும்.



நான் சொல்றது கூட்டுறவு பண்ணை விவசாயம்ங்கண்ணா. இதுல அந்த கதையெல்லாம் நடக்காது. நீ ஏன் ரெம்ப அலட்டிக்கிறே .கூல் !



// மனித திறனை அதிகரிக்க அறிவியல் கல்வியின் பயன் மக்களால் நன்கு உணரப்பட வேண்டும்.//

அது சரி மெக்காலே பிரபுவோட கல்வி முறையோட பயன் தானே நல்லாவே உணரப்பட்டுருச்சுப்பா. போங்கய்யா நீங்களும் உங்க அறிவியலும் .



// ஊசி போடுற டாக்டர் வந்துட்டார் என்று ஓடும் கிராமத்தான் மாதிரி அறிவியலை புரியாதா கிராமத்தானாக இருக்கும் மக்களின் அறிவியலறிவு அதிகரிக்கின்றது. இது ஒன்றே நீண்ட காலத் தீர்வு.//



அல்லாபதியோட கடைக்கால்லயே ட்ரில் பண்ணி சேம்பிள் எடுத்து பார்த்தவன் துரை! இருந்திருந்து இன்னா மாரி உதாரணத்தை பிடிச்சே பாரு. சனத்துக்கு அறிவியல் அறிவு சாஸ்தியாகித்தான் புது புது க்ரைமா நடக்குது.



// குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள்.//

இன்னா படிப்பு மெக்காலே பிரபு படிப்பை தானே . நல்லா விளங்கும்யா.



செல்வன் ஸ்பீக்கிங்:



// ரஜினி ராகவேந்திரா கல்யாணமண்டபம் கட்டியது, போயஸ் கார்டன் வீட்டை கட்டியது, எடுத்த அருணாச்சலம்,பாபா முதலிய படங்கள்..இதனால் பல்லாயிரம் பேருக்கு கிடைத்த வேலைவாய்ப்பு..இதெல்லாம் ரஜினியின் விளைவே.என் உறவுபெண்கள் நிறையபேர் தியேட்டருக்கே போகமாட்டார்கள்.ரஜினி படம் என்றால் மட்டும் வருவார்கள். ரஜினிபடம் ரிலீசானால் தியேட்டரில் முறுக்கு விற்பவர் முதல் நலிந்து கிடக்கும் வினியோகிஸ்தர்கள், ஈ ஓடும் திரையரங்குகள்

,ஸ்டண்ட்மேன்கள், எக்ஸ்ட்ரிராக்கள் என பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்..முருகேசு மாதிரி பொருளாதார எக்ஸ்பெர்ட்டுக்கு இதெல்லாம் தெரியாதது தான் அதிசயமாக உள்ளது //



அண்ணாத்தை .. தூங்கறவுகளை எழுப்பிரலாம். தூங்கற மாதிரி நடிக்கிறவுகளை எழுப்ப முடியாது. நீ சொன்ன கணக்கெல்லாம் ஓகே நைனா. நீ சொன்ன கேட்டகிரில உள்ளவுக சம்பாத்தியம் எல்லாத்தையும் ஒன்னு சேர்த்தா கூட ரஜினியோட சம்பளத்தை எட்டிப்பிடிக்க முடியாதே அதானே சோகம்.



மேலும் முறுக்கு விக்கிறவனுக்கு வேணம்னா அது ப்ரொடக்டிவ் ஆக்டிவிட்டி. வாங்கி திங்கறவனுக்கு ? தண்டச்செலவுதானே. நாட்ல அன் ப்ரொடக்டிவ் ஆக்டிவிட்டீஸ் அதிகரிக்க காரணமே உற்பத்தி நடவடிக்கைல வாய்ப்பு கிடையாமை தான். ஆப்பரேஷன் இந்தியா 2000 மட்டும் அமலாகட்டும் தாளி ரஜினி படம்லாம் கிழவாடிகளுக்காக நள்ளிரவு தூர்தர்ஷன்ல மட்டும் வரும். பார்க்கத்தான் ஆளிருக்காது.



மேலும் ரஜினிக்கு கிடைக்கிற சம்பளம் மறுபடி திரைத்துறைல ரீ இன்வெஸ்ட் ஆனாலும் பரவால்லை. சூப்பர் சம்பளமெல்லாம் சேஃப்டி ஆயிருதுல்ல.



// இரண்டாயிரம் வருடம் கழிந்த பிறகும் இது போன்ற வேறுபாடுகள் இருக்கத் தான்

செய்யும். அப்ப தனியாக விண்வெளிக் கப்பல் இல்லாதவர்கள் எல்லாம் ஏழையாக

கருதப்படுவார்கள்.//



அடங்கொக்கா மக்கா .. ஆ.இ 2000 அமலாயிட்டா கங்கை காவிரி இணைப்பு கால்வாய் வெட்டும் பணில மண்வெட்டி தூக்காதவன் தான் ஏழையா கருதப்படுவான். நாட்டு மக்கள் சாமியாடிக்கிட்டிருப்பாய்ங்க தெரியுமில்லை.



குடிக்க கூழில்லையாம் கொப்பளிக்க பன்னீராம் . நல்ல தீர்கதரிசனம்பா. யந்திரன் கதை இலாகால வேலை கீலை பார்த்திருப்பாரோ. நல்லாவே எடுத்துவைக்கிறாய்ங்கப்பா வாதம்.



// எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலை வந்துவிட்டது என்றால் மனிதன் முன்னேறுவதை நிறுத்தி விட்டான் என்று பொருள்.//



அப்போ நாப்பது சில்லறை கோடி சனம் அடுத்த வேளை சோத்துக்கு கியாரண்டி இல்லாம அக்கா தங்கச்சி மூக்குத்திய வித்து யந்திரன் பார்க்கனும். அப்பத்தான் அவன் முன்னேறிக்கிட்டிருக்கிறதா அர்த்தம்னு சொல்றிங்க. வெளங்கும்யா.



// 1947 ஐ விட சராசரி இந்தியனின் ஆயுள்காலம் பெருமளவு அதிகரித்துள்ளது.//

எதுக்கு பிச்சையெடுக்கவா ? ஊட்டு பொம்பளை ஊர் மேல போக பார்த்து சாகவா?

ஓ எலக்சன் எலக்ன்சனுக்கு ஓட்டுப்போட ஆள் வேணமுல்லை.



திடீர்னு என்னாச்சு புரியலை .பார்ட்டி அப்படியே அந்தர் பல்ட்டி அடிக்கிறாரு பாருங்க.



// பணக்காரனை ஒழித்தால் ஏழை என்று ஒருவன் இருக்க மாட்டான்.//



ஆனா நமக்கு இந்த மாதிரி நெகட்டிவ் தாட்ஸ் எல்லாம் கிடையாது. இந்த திட்ட அமலுக்கு நிதியாதாரங்கள் திரட்ட நான் கொடுத்த யோசனைகள்ள ஒன்னு இந்தியாவுலயே ஸ்விஸ் பேங்க் மாதிரி ஒரு பேங்கை திறக்கனும்ங்கறதுதான்.



ஆ.இ 2000 திட்டத்தோட நோக்கம் பணக்காரனை ஒழிக்கிறதுல்ல. அந்த வர்கம் கிட்டே டெப்ளாய் ஆகாம நான் ஃபங்சனிங் ப்ராப்பர்ட்டியா இருக்கிற சகலத்தையும் நாட்டு முன்னேற்றத்துக்காக முதலீடு செய்ய வைக்கிறதுதான். உற்பத்தி காரணிகளை ஆளும்,ஆளப்படும் வர்கங்களுக்கிடையில சமமா பங்கிட்டு மெஜாரிட்டியா இருக்கிற பெருவாரியான மக்கள் தொகைய உற்பத்தி நடவடிக்கைல பங்கு கொள்ள வைக்கிறதுதான்.



செல்வன் ஸ்பீக்கிங்:



// நீங்க தான் வேலைவாய்ப்பு தர வரும் சுரண்டல்கார அமெரிக்கர்களையும், ஜிந்தால், தாப்பர் கம்பனிகளையும் துரத்த சொல்லுகிறிரிகளே?அப்புறம் ஏழைகள் ஏழைகளாக இல்லாமல் எப்படி இருப்பார்கள்?இந்திய பணகாரனும் வேண்டாம், அமெரிக்க பணகாரனும் வேண்டாம் என்றால் வேலைகள் எங்கிருந்து வரும்?//



அட கடவுளே ! குழந்தை வேணம்னு பெண்டாட்டிய சாமியார் கிட்டே படுக்கப்போடமுடியுமா என்ன ? தாது புஷ்டி , வயாக்ரானு முயற்சி பண்ணனுமே

தவிர இந்த மாதிரியெல்லாம் ரெண்டு கதவையும் திறந்துவிட்டு ரெட் கார்ப்பெட் விரிச்சா பாரதமாதாவுக்கு எய்ட்ஸ் வந்துரும்பா.



போபால் விஷவாயு கசிவுக்கப்பறமும் அவிக வேலை தருவாய்ங்கனு நம்பறிங்க ?

ஒரு பெப்சி,கோக் வந்து லோக்கல் டிரிங்ஸ் தயாரிப்பாளர்கள் கதி என்னாச்சுனு பார்த்துமா?



// இந்தியா மாதிரி ஜனதொகை கொண்ட முன்னாள் கம்யூனிஸ்டு நாடான சீனா எப்படி முன்னேறியது என்பதை கண்டும் நாம் பாடம் கற்கலை என்றால் எப்படி?//



சீனா முன்னேறிருச்சுங்கறிங்க ? அண்ணாத்தை முன்னேற்றம்னா எத்தீனி பேரு மொபைல் வச்சிருக்கான், கம்ப்யூட்டர் வச்சிருக்கான், நெட் கனெக்சன் வச்சிருக்காங்கறதை பொருத்து கணக்கிடறதெல்லாம் உலக வங்கி ஃபார்முலா.

உண்மையான ஃபார்முலா என்ன தெரியுமா ?



உழைக்க தெம்பிருக்கிற ஒவ்வொருத்தனுக்கும் கை நிறைய வேலை கிடைச்சு, அவன் வவுறு நிறைய திங்கனும். நான் இந்தியன். மேரா பாரத் மஹான்னு தொப்புள்ள இருந்து கத்தனும்.



ஒரு தொழில்ல லாபம் பார்க்கனும்னா தொழிலாளி வயித்துல அடிக்கனும்.

( மார்க்ஸ் - டாஸ் கேப்பிடல் )



இன்னைக்கு க்ளோபலைசேஷன் புண்ணியத்துல பன்னாட்டு கம்பெனிகளோட போட்டியால டபுளா அடிக்கிறாய்ங்கப்பு தொழிலாளி வயித்துல. தினசரில

சீனானு டேட் லைன் இருந்தாலே சுரங்கத்தில் வெடி, வெள்ளம் தொழிலாளி சாவு செய்திதான் தரிசனம் தருது. இதான் முன்னேற்றம்னா அது யூஸ் பண்ணிட்ட கேர்ஃப்ரீய விட யூஸ்லெஸ். ஆளை விடுங்க.





கிருமி வருகிறார் பராக்:



புலவர் ஒத்தர் முருகேசன் பொருளாதரம் படிச்சதுண்டா? அவருக்கு இன்னா தெரியும் ? அல்லா டுபாகூரும் கவர்ன்மென்டுக்கு சஜஷன் கொடுக்கிறதானு பொங்கியிருந்தாரா அதுக்கு பதிலா கிருமி தெரிவிச்ச கருத்துங்கண்ணா.



// அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறையில் கற்றவர்கள் மட்டுமே சொல்ல வேண்டுமா?

மெத்தக் கற்றவர்கள் தத்தம் துறையில் நூறு சதம் ஏற்கத்தக்க கருத்துகளை

சொன்னார்களா எப்போதாவது? அவர்கள் சொன்னதெல்லாம் சரியாக

இருந்திருக்கிறதா? பொருளாதார மேதை ப.சிதம்பரம், மன்மோகன்சிங் எல்லாம் சரியாகத்தான் செய்தனரா? சித்தூர்க்காரர் மாத்தி யோசித்துள்ளார். மாத்தி செய்ய அல்ல குறைந்த பட்சம் மாற்றி யோசிக்கக்கூட தயாராயில்லை நம் அறிஞர் பெருமக்கள்.//

நன்றி கிருமி அவர்களே.



மீண்டும் கிருமி ஸ்பீக்கிங்:



வல்லரசு என்பதன் அளவுகோல் என்ன?

// போர்ப்படைகள், பெரும் பொருளாதார பின்புலம் போன்றவையா? எனில்

வல்லரசுக்கனவெல்லாம் இப்போதைக்கு கனவு அளவிலேயே இருக்கும்.//

கிருமியண்ணே,

புதியதோர் உலகம் செய்வோம் .கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்ங்கறதுதான் ஆ.இ 2000 திட்டத்தோட லட்சியம். வல்லரசு கனவுகள்ங்கறது கழுகாரோட உபயம். அமெரிக்கா கூடத்தான் வல்லரசுனு வல்லடி பண்ணிக்கிட்டிருந்தது. இன்னைக்கு மாஜி சாஃப்ட் வேர் சாம்ராட்டுங்க எல்லாம் காருக்குள்ளயே கலவி செய்யறாய்ங்களாம்.அதுக்கு என்ன செய்ய?



// சீனா சத்தமின்றி, இமய மலையை ஒட்டிய பகுதிகளில் பெரும் நிலப்பரப்பை

ஆக்கிரமித்துக் கொண்டு வருகிறது. இன்றைய நிலையில் இந்தப் பிரச்சினையை

வெளியில் எடுத்தாலே, சீனம் இவற்றையெல்லாம் பகிரங்கமாக செய்ய ஆரம்பித்து

விடும், என்று இந்திய அரசு கையாலாகாத நிலையில் இருக்கிறது. எல்லையில்

வாலாட்டும் பாகிஸ்தானையும், பங்களாதேசையும் அடக்க இயலவில்லை.//



தெலுங்குல ஒரு சொலவடை உண்டு " சேஸுகுன்ன வானிகி சேஸுகுன்னந்த மஹ தேவா" அதாவது வினை விதைத்தவன் வினையறுப்பான்ங்கற மாதிரி.



நம்ம வெளி உறவு கொள்கையே டுபுக்கு. ரஷ்யா இருந்த வரை ரஷ்யாவுக்கு ஜல் ஜக். ( நேருவோட தலையிடா கொள்கை , பஞ்ச சீல கொள்கையெல்லாம் புதுமுக நடிகை கவர்ச்சியாக நடிக்க மாட்டேனு சொல்ற மாதிரி உலுவுலா காட்டி) அது வீககானதும் அமெரிக்காவுக்கு ஜல் ஜக்.



நேரு மாமா தலாய் லாமாவுக்கு ரெட் கார்ப்பெட் விரிச்சாரு. ( அவரு ஷோ மேன். தனிப்பட்ட இமேஜுக்கு இந்த மெனக்கெடல்) சீனா நமக்கு ரெட் கார்ட் போட்டுருச்சு.

இப்ப காஷ்மீர்ல தனி நாடு கேட்கிறவுகளுக்கு சீனா ரெட் கார்ப்பெட் விரிச்சா நமக்கு கடுப்பாகாது.



காஷ்மீர் மேட்டர்லயே வெட்டுப்பழி கொலைப்பழி. இதுல கிழக்கு வங்காள மேட்டர்ல இந்திராம்மா மூக்கை நுழைச்சாய்ங்க. இதே வேலைய பாக் செய்தா நாம சகிப்பமா?



ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்

தீதுமுண்டோ மன்னும் உயிர்க்கு.



// நாட்டில் வேறு பல பிரச்சினைகள். உள் நாட்டு பிரச்சினைகளுக்கு பெரும்

காரணமே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தான். //



பிரச்சினையோட ஆணி வேரை பிடிச்சுட்டிங்க. பொருளாதார ஏற்றத்தாழ்வையெல்லாம் நம்ம சனம் பெருசா கண்டுக்கிடறிதில்லை. மெக்காலே பிரபு குமஸ்தா படிப்பை தானே ஏற்படுத்திட்டு போனாரு. தாளி அவன் ( அம்பானி) எத்தனை நூறு கோடி வேணம்னா செலவழிச்சி,எத்தனை மாடி வேணம்னா மாளிகை கட்டிக்கிட்டு ஒழிஞ்சு போவட்டும். ஊர்ல இருக்கிற அம்மாவுக்கு ஃபோன் போட பத்து ரூபா ரீசார்ஜுக்கு வழியில்லையேங்கற ஆதங்கம் தான் ஸ்டார்ட்டிங் பாய்ண்ட்.



பொருளாதாரம் கூட செகண்டரி. நாட்டு மக்கள் மனசுல நம்பிக்கைய விதைச்சு, உணர்வு பூர்வமா ஒருங்கிணைக்கிற தலைமை இல்லை தலை அதான் பிரச்சினை.



ஆஃப்டர் ஆல் ஒரு எம்.ஆர்.ஓ, ஒரு லோக்கல் சர்வேயர் கரீக்டா வேலை செய்திருந்தான்னா ஆரம்பத்துலயே அப்ஜெக்சன் பண்ணி நாற விட்டிருக்கலாம்.

க்ரீன் ஹன்டை தவிர்த்திருக்கலாம். யதா ராஜா ததா ப்ரஜா இங்கன டாப் டு பாட்டம் எல்லாமே சோனிங்க. எவனுக்கும் தன் மேல தனக்கே நம்பிக்கை கிடையாது. அந்த நம்பிக்கைய இவன் படிச்ச படிப்பு தரலை.



ஒரு ஒய்.எஸ்.ஆர் எதிர்கட்சியெல்லாம் ஒரு அணி. மெகாஸ்டார் ஒரு அணி. கட்சிக்குள்ளயே கிழவாடிங்க எல்லாம் தனி அணி. புதுசா எந்த ஒரு தேர்தல் வாக்குறுதியும் தராம எலக்சனுக்கு போனாரு. அடிச்சாரு. ( அவர் மேல ஆயிரம் ஊழல் குற்றச்சாட்டு இருக்கட்டும் அதெல்லாம் வேற கதை ) அந்த மாதிரி ஒரு கேரக்டர் ஆல் இண்டியா லெவல்ல இருந்தா இதெல்லாம் ஜுஜுபி.



அடுத்து வந்திருக்கிற ஒரு கருத்தை பார்ப்போம் சாந்தி ஸ்பீக்கிங்:





//ஏற்கனவே NWDA ( National Water Development Agency ) 16 லிங் புரபோஸ்

பண்ணிருக்காங்க.. அதை செய்வதனால் லாபத்தைவிட , 1,675,000 ஹெக்டேர் காடுகளும் , 1,050,000 ஹெக்டேர் நிலங்களும் மூழ்கும் அபாயம் இருக்காம்.

கிட்டத்தட்ட 3.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்த்தலும் செய்யணும்.. //



தாளி ! பன்னாட்டு கம்பெனிகள் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து செழிக்க நாடெங்கிலும் சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்தினாய்ங்க. அதுலயும் நிலம் பறி போச்சு. மக்கள் இடம் பெயர்ந்தாய்ங்க. அணு மின் நிலையம் அமைச்சிருக்காய்ங்க. அதுல இல்லாத ரிஸ்கா? ராணிப்பேட்டைல பெல் கம்பெனி அமைக்க நிலம் கொடுத்த ஒரு குடும்பத்துக்கு இன்னமும் வேலை தரப்போறாய்ங்க.



நான் சொல்ற திட்டத்துல முத அம்சம் நேரிடை ஜன நாயகம் .ஊறப்போடறது , நாறடிக்கிறதுக்கெல்லாம் இடம் இருக்காது. ஆல் இண்டியா லெவல்ல மக்கள் ஆதரவு படைத்த தலைவன் ஒருத்தன் தான் தலைமை பொறுப்புக்கு வரமுடியும். எல்லா விளை நிலமும் நாடு தழுவிய விவசாயிகள் கூட்டுறவு சங்கம் கையில தான் இருக்கும். எல்லா நில உரிமையாளர்களுக்கும் லீஸ் பணம் தான் கிடைக்கும். அதே மாதிரி நிலமிழந்த மக்களுக்கும் லீஸ் பணம் கிடைக்க போவுது. இன்னைக்கு இந்த பாராளுமன்ற ஜன நாயகத்துல கூச்சலும் குழப்பமுமா நிலமிழந்த சனத்தை நடுத்தெருவுல விடற பிசினஸ் எல்லாம் இருக்காதுல்ல.





// மேலும் மாநிலங்களுக்குள் சண்டை அதிகரிக்குமாம் காவிரி பிரச்னை போல..//



ஆத்தா ! தகராறுக்கு முக்கிய காரணமே பாசன நீர் பற்றாக்குறைதான். கடல்ல வீணா கலக்கற தண்ணீய எல்லாம் திருப்பி விடறதால நிச்சயமா உபரி நீரே இருக்கும். கவலை வேண்டாம்.



புலவர் ஸ்பீக்கிங்:



// நிலத்தை சும்மா விட சொல்லவில்லை. அது cost benefit analysis சார்ந்த முடிவாக இருக்க வேண்டும். சித்தூர் ஜோசியரின் ஜோசியத்தை சார்ந்ததாக இருக்கக் கூடாது.//



காஸ்ட் பெனிஃபிட் அனலிசிஸ்னா என்ன ? கட்டுப்படியாகுமானு பார்க்கிறது அவ்ளதானே. புலவரே உலகத்துல உண்மையான ப்ரொடக்டிவிட்டி உள்ள தொழில் விவசாயம் தான். விவசாய உற்பத்திக்கு தான் ஃபேஷன் த்ரெட் எல்லாம் கிடையாது என்ன விவசாயிகள் சங்கமே கிடங்குகள், கோல்ட் ஸ்டோரேஜ், ஆக்ரோ இண்டஸ்ட் ரீஸ்னு ப்ளான் பண்ணனும். கோதுமைய கோதுமையா விக்காம ( ரா மெட்டீரியல்) உற்பத்தி பொருளாக்கனும் ( நூடுல்ஸ்?) . இதுக்கு காஸ்ட் பெனிஃபிட் அனலிஸிஸ் எல்லாம் தேவையில்ல புலவரே.



நான் என்ன அப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை ஜோசியம் சார்ந்த திட்டம்னா சொன்னேன். நான் ஒரு இந்தியன், ஆந்திரன், தமிழன்., சிந்தனையாளன் , ஹ்ய்மேனிஸ்ட் இப்படி பல தளங்கள்ள வேலை செய்யறேன். என்னை ஏன் ஒரு ஜோசியனாவே பார்க்கறிங்க ? திட்டத்துக்கு சப்போர்ட்டா அயனான தியரிட்டிக்கல் அனலைஸ் கொடுத்திருக்கேன்ல. என்ன சொல்லப்பட்டதுனு மட்டும் பாருங்கண்ணா யார் சொன்னதுனு பார்க்காதிங்க.



மகிழ்நன் பா ஸ்பீக்கிங்:



ஆ.இ.2000 ல ரெண்டாவது அம்சமான .நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல் பத்தி கிழிக்கிறாரு



//முருகேசன் பொருளாதார புலி என்பதுக்கு இதுவே சான்று 10 கோடி பேருக்கு மாதம் 4000 ரூபாய் சம்பளம் தருவதாக வைத்துகொள்வோம்.மாசம் நாற்பதாயிரம் கோடி இதுக்கு மட்டுமே செலவாகும்.வருசத்துக்கு ஐந்துலட்சம் கோ டி இந்த "சிறப்பு ராணுவத்துக்கு" மட்டுமே செலவாகும்.இந்திய அரசின் பட்ஜெட்டை விட

இரு மடங்கு செலவு பிடிக்கும் திட்டம் இது. இந்த மாதிரி கோமாளிதனமான திட்டத்தை வைத்து இத்தனை விவாதம் இங்கே நடப்பதே ஆச்சரியமா இருக்கு//



நான் வெறுங்கையில முழம் போட்டேனு நினைச்சிட்டாய்ங்க போல. அண்ணே ஆ.இ.2000 அமலானால் இல்லை இல்லை அமலாக போகுதுனு சீன் க்ரியேட் ஆனாலே அரசாங்கத்தோட நிறைய துறைகளுக்கு மூடு விழா நடத்த வேண்டி வந்துரும். உ.ம் மனித வளத்துறை . மேலும் இதுக்கு பணம் புரட்ட தனியா எக்கானமி பேக்கேஜ் கொடுத்திருக்கன். இப்போ உள்ள ராணுவ செலவை குறைக்க (பாதியா) எல்லையோர பதற்றத்தை குறைக்க அதிரடி ஐடியால்லாம் கொடுத்திருக்கன். கழுகுல வெட்டிரப்போறாய்ங்கனு தரலை. அதையெல்லாம் படிச்சிங்கனா கொஞ்சம் வெளிச்சம் கிடைக்கும். அதுக்கு இங்கே அழுத்துங்க.



ஸ்விஸ் பாங்க் ஸ்டைல்ல ஒரு பாங்க் திறந்தாலே போதும். ஸ்விஸ்ல உள்ள கருப்பு பணமெல்லாம் இந்தியாவை நோக்கி வெள்ளமா திரும்பும். மேலும் சிறப்பு ராணுவத்துக்கு லத்தி,சாணியெல்லாம் தேவையில்லிங்கண்ணா. ஷார்ட்ஸ், கட் பனியன் ஹேட், மண் வெட்டி, தட்டு தான் தேவை. அவிகளுக்கு தர்ர சம்பளம் முதலீடு நைனா.



ஆஃப்டர் ஆல் ஒரு மானில முதல்வர் ஒரு லட்சம் கோடில அணைகள் கட்ட ஆரம்பிச்சாருன்னா அந்த தில்லுல லட்சத்துல ஒரு பங்கு இருந்தா போதும் ஆ.இ 2000 நல்ல படியா முடியும். மேலும் இது உடனடி லாட்டரி இல்லே. வெறும் ஸ்தூலமான விஷயமில்லே.உணர்வு பூர்வமானது. இதை உள்ளபடி உணர்த்த தலைமை குணங்கள் நிறைந்த சரிஸ்மா உள்ள தலைவன் தேவை. அதனாலதான் நேரிடை ஜன நாயகத்தை முதல் பாய்ண்டா வச்சேன். சோனியாவுக்கு உள் பாவாடை தோய்க்கிற மன்மோகன் எல்லாம் தெப்பக்குளத்தை தூர் வார வைக்க கூட முடியாது.



//நதி நீர் இணைப்பு செயல்படுத்த முடியாமல் இருக்க காரணம், அதனால் வரும் பயனை விட ஆகும் செலவு அதிகமாவதால் தான். //

அப்படின்னு யாருண்ணே சொன்னாய்ங்க. காமர்ஸ்ல எக்ஸ்பெண்டிச்சர்ல ரெண்டு வகை உண்டு. கேப்பிட்டல் அண்ட் ரெவின்யூ. இது கேப்பிடல் எக்ஸ்பெண்டிச்சர்ணே. கோழி வாங்க நிறைய தான் செலவு பிடிக்கும் .அதுக்குன்னு அஞ்சு ரூபா கொடுத்து சால்னா கடைல அவிச்ச முட்டையையே சாப்டு காலத்தை கழிக்க முடியுமா?





//உதாரணமாக கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் சில காலத்திற்கு முன் சற்றும்

சிந்திக்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் இந்த டெக்னாலஜியில் ஏற்பட்ட புது

கண்டுபிடிப்புகளால், விலை குறைவினால் சென்னையின் 8 சதவீத தண்ணீர் தேவை இதன் மூலம் வருகிறது. இன்னும் பத்து வருடத்தில் சென்னையின் 90 சதவீத தண்ணீர் தேவையும் கடல் நீர் மூலம் பூர்த்தி செய்யப்பட்டால் ஆச்சிரியப்பட ஒன்றும் இல்லை //.



அண்ணே கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்லாம் இயற்கை அன்னையோட அடி மடில கை வைக்கிற மாதிரி . கடல் நீரோட அடர்த்தி கூடிப்போச்சுனு வைங்க.. ஜீவ ராசியெல்லாம் குப்பையா செத்து ஒதுங்கும் . நாத்தம் தாங்க முடியுமா? ரோசிங்க



விளக்கம்:

மேற்படி கலந்துரையாடல் நடைபெறும் குழுவிலேயே பளிச் பளிச் என்று பதில் கொடுக்கத்தான் முயன்றேன். ஆனால் அதென்னவோ என் மூளை கலர் மானிட்டர் முன் பஜ் என்று ஆகிவிடுகிறது. கருப்புதான் எனக்கு பிடிச்ச கலருங்கற மாதிரி வீட்ல உட்கார்ந்து அக்னி ஹோத்திரம் பண்ணிட்டே அடிச்சா தான் அடிச்ச மாதிரி இருக்கு.

என் ராசி சிம்மம். இப்போ வாக்குல சனி செவ் சேர்க்கை ( செப். 5 வரை) என் வாதங்கள் யார் மனதையேனும் புண்படுத்தியிருந்தால் சாரி. என் வல்லரசு கனவை விவாத பொருளாக ஏற்றமைக்கே உங்களுக்கெல்லாம் எம்.பி டிக்கெட் கொடுத்தாகனும். அதுக்கு நான் இன்னொரு டிக்கட் வாங்கியாகனும் ( லாட்டரி டிக்கெட்டை சொல்றேன் ) தங்கள் கருத்துக்களை வெளியிட்டு என்னை கவுரவித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.