Friday, August 31, 2007

சென்னை பயம்

இன்று சென்னை புறப்படுகிறேன். ஆயுள் தண்டனை பெற்று சிறைக்கு செல்பவன் கூட இந்த அளவுக்கு பயப்படுவானா தெரியாது. நான் மட்டும் ஒவ்வொரு முறையும் பயந்து சாகிறேன். ஏன் என்றால் ஓஷோ சொன்னது போல் சென்னை தான் என் இலக்கு போலும். அதனால் தான் சென்னை என்றாலே ஒரு பயம்,வெறுப்பு.

முதல் முதலாய் நானும் அருஞ்ஜுனை பாண்டியனும் சென்றோம். திருமணமாகாத நண்பன் ஒருவனின் அறையில் தங்கி சினிமா மீது படையெடுக்க திட்டம். நாங்கள் சென்னையில் இறங்கிய தினம் தான் அவனுக்கு நிச்சயதார்த்தம்.( த பார்ரா!). இதற்காக கள்ளக்குறிச்சி சென்று பாண்டியனின் மனைவியை அங்கு விட்டு விட்டு சென்னை போனதும் அங்கு அதிரடி படையெடுப்பு நடத்தியதும் தனிக் கதை.அப்போது பாக்யாவில் 5 கதைகள் வரை பிரசுரமாகியிருந்ததால் ஒரு தைரியம். சங்கிலி முருகனுக்கு கதை சொல்லியது ஒரு சாதனை.

பின்பு ஒருமுறை சென்னை வானொலி நிலையத்திலிருந்து தந்தி வந்ததால் செல்ல வேண்டி வந்தது. நான் அனுப்பிய படைப்புகள் காணாமல் போன சுப செய்தியை எனக்கு நேரில் சொல்லத்தான் தந்தி என்று அறிந்தது தனிக்கதை.
அவ்வப்போது சென்னை நண்பர்கள் ஜோதிடம் பார்க்க அழைப்பதும் என்னை அடை காத்து பஸ் ஏற்றிவிடுவதும் ஆரம்பித்தப் பிறகுதான் சென்னை பயம் சற்று குறைந்தது.


















சிகப்பு நாடா


சிகப்பு நாடாசிகப்பு நாடாத்தனத்தின் கொடுமையை அறிந்தவன்,அதனால் கொடூரமாக பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் இந்த வலைப்பூவை வலை மேயர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்தியாவின் எல்ல பிரச்சினைகளுக்கும் தீர்வாக ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற திட்டத்தை தீட்டினேன். இதன் 200 பிரதிகளை அன்றைய லோக்சபா சபாநாயகர் ஜி.எம்.சி பாலயோகிக்கு அனுப்பினேன்.(பதிவு தபால் மூலம் தான்). அவற்றை அன்றைய ஆளும் கட்சி கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்களுக்கு கிடைக்க செய்யுமாறு கோரினேன்.(11/6/98) .பல மாதங்கள் வரை பதிலில்லை. அந்த சமயம் என்.டி.ஆர்.ரசிகன் என்ற வகையில் தெலுகு தேசம் சார்பாக பூத் ஏஜண்ட்டாக உட்கார்ந்ததற்கான அடையாள அட்டை என்னிடம் இருந்தது. அதை இணைத்து எங்கள் தொகுதி எம்.பி.ராமகிருஷ்ணாரெட்டி காருவுக்கு இது விஷயமாகஒரு இன்லண்டு லெட்டர் போட்டேன்.
அவர் சபாநாயகர் அலுவலகத்தில் விசாரித்திருப்பார் போல.
சபாநாயகர் அலுவலகம் எம்.பி.க்கு நான் போட்ட கடிதத்தை மேற்கோள் காட்டி ஒரு கடிதம் போட்டது."நீங்கள் சொல்லும் திட்ட பிரதிகள் அடங்கிய பார்சல் எங்களுக்கு வந்து சேரவில்லை"-என்பது அதன் சாரம். நான் பதறியடித்து ஓடி தபால் அலுவலகத்தில் மேற்படி பார்சல் டெலிவரி ஆனதற்கான அத்தாட்சியை பெற்று பதிவு தபாலில் அனுப்பினேன். மீண்டு சில மாதங்கள் மவுனம். இடைவிடாத நினைவூட்டு கடிதங்களுக்கு பிறகு சபாநாயகர் அலுவலகத்து அதிகாரிகள் ஒரு கடிதம் போட்டனர். அதன் சாரம்:
நீங்கள் அனுப்பிய கடிதம்,பார்சல் டெலிவரி ஆனதற்கான ஆதாரம் கிடைத்தது. தங்கள் பார்சலை இந்த அலுவலகத்தில் லொகேட் செய்ய முடியவில்லை.எனவே தங்கள் திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினால் தேவையான பிரதிகளை நாங்களே தயாரிப்பதில் பிரச்சினை இல்லை.
மனம் நொந்து உடனே திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினேன். பதிலில்லை. பலமாதங்கள் கழித்து வெறுத்துப் போய் திட்டப்பிரதியை திருப்பியனுப்பச் சொல்லி தபால் செலவுக்காக ரூ.50 க்கான அஞ்ஜலாணை கூட அனுப்பிவிட்டேன். நாளிதுவரை ஒரு இழவும் நடக்கவில்லை. நானும் தொடர்ந்து நினைவூட்டுக் கடிதங்களை அனுப்பிக் கொண்டேதானிருக்கிறேன். சிகப்பு நாடாத்தனம் என்றால் இது தான் .

ஈ.வெ. ராமசாமியின் வாக்கும் ராமனின் வாக்காகவே


ஒரு ஜோதிடன்,ராம பக்தன், அம்மனை வணங்கும் சாக்தேயன் பெரியாரை கொண்டாடுவதில் நிறைய பேருக்கு பல சந்தேகங்கள் வருகின்றன. ஆத்திகமோ நாத்திகமோ அதன் உச்சத்தில் இருக்கும்போது அதில் எவ்வித முரண்பாடும் தெரிவதில்லை. பெரியாரின் முழு பெயர் ஈ.வெ.ராமசாமி என்பதாகும். "அந்தா ராம மயம் " என்று துவங்கும் ராமதாசர் கீர்த்தனை ராமசாமியின் வாக்கும் ராமனின் வாக்காகவே எனக்கு தோன்றுகிறது.
பார்ப்பணர்களின் விவாதத்திற்கப்பாற்பட்ட கீதை கூட வேத பண்டிதனையும், நாய் மாமிசம் உண்பவனையும் சமமாக பாவிப்பவனே உத்தமன் என்றுதான் கூறுகிறது.(அதே கீதையில் விஞ்ஞானத்திற்கு எதிரான நிறைய விசயங்கள் உள்ளன. அவற்றை பின்னொரு சமயம் கிழிக்கலாம்.)
நான் வணங்கும் ராமன் (பகவத் கீதையில் கிருஷ்ணனைப்போல்) என்னையே சரணடை என்றெல்லாம் சொன்னதில்லை.ராமன் என் லட்சிய புருஷன்.தான் ஒரு அவதாரம், என்ற பிரக்ஞை கூட ராமனில் இருந்ததில்லை. அவனை சுற்றியிருந்தவர்கள் தான் அவரை அவதார புருஷன் என்று கொண்டாடினார்களே தவிர ராமர் மட்டும் ஆராமாகத் தான் இருக்கிறார்.
இதே ராமன் புத்ரகாமேஷ்டி யாகம் மூலம் பிறந்ததாக பவுராணிகர்கள் கூறுகிறார்கள். (இதன் உண்மையான விளக்கத்தை "சகோதிரிகளை புணர்ந்து" என்ற தலைப்பிலான என் வலைப்பூவில் காணவும்) இதே ராமன் தவத்திலிருந்த சூத்திரனை பிராமணர்கள் பேச்சை கேட்டு கொன்றதாகவும் ஒரு கதை உள்ளது. அன்னப் பறவை போல் நான் ராமன் குறித்த பாசிடிவான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.
காந்திக்கு உதவிய அதே ராம நாமம் எனக்கும் உதவுகிறது. என்னை பக்குவப் படுத்தி *யத்பாவம் தத்பவதி என்பது போல் ராமனாகவே மாற்றியுள்ளது.அதற்காக புராண புருடாக்களை வைத்து பிழைப்பு நடத்தும் உண்மை நாத்திகர்களான பிராமணர்களை இடித்துரைத்த ராமசாமியை என்னால் விட்டுவிட முடியாது. இருந்தானோ இல்லையோ, பிறந்தானோ இல்லையோ தெரியாத ராமனுக்காக ரத்தமும் சதையுமாய் பிறந்து , வளர்ந்து தன் சொல்லம்புகளால் பிராமண ராட்சதர்களை வதம் புரிந்த ராம சாமியை நான் விட்டுவிட்டால் வரலாறு என்னை மன்னிக்காது.
வேதமாகட்டும்,சாத்திரமாகட்டும்,ஜோதிடமாகட்டும் எல்லாமே மக்களுக்காகத்தான். *ஈஷ்வரோ மனுஷ்ய ரூப்பேணா. மனிதனை,மனிதத்தை மறுத்தால் வேதம்,புராணம்,பிராமணீயம்,பிராமணர்களை மட்டுமே அல்ல என் ராமனையும் எதிர்ப்பேன்.
ராமன் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்திருந்து, அவன் தவமிருந்த சூத்திரனை பார்ப்பனர் பேச்சைக் கேட்டு கொன்றிருந்தால் கு.ப. சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தையாவது மேற்கொண்டிருப்பேன்.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பதறிவு
என்பது வள்ளுவர் வாக்கு. பெரியார் ஜோதிடத்தை மறுத்திருக்கலாம். வேதத்தை நிராகரித்திருக்கலாம். அவருக்கு அவற்றை ஆழமாக அராய்ச்சி செய்யும் வசதி,வாய்ப்பு இல்லாதிருந்திருக்கலாம். இன்று எனக்கு அதற்கான வாய்ப்பு உள்ளது. நான் நோண்டி நுங்கெடுக்கிறேன். மக்கள் நலத்துக்காக அவற்றின் உண்மை அர்த்தங்களை வெளியிடுகிறேன் இது தவறா?
*பெத்தல மாட்ட சத்தி மூட்டா - என்பது தெலுங்கு பழமொழி. அதாவது பெரியோர் வாக்கு கட்ட்ச்சோற்றை போன்றது. கட்டுச்சோறு என்பது ஊர் போய் சேரும் வரை தான்.ஊர் சேர்ந்த பிறகு ஆக்கி தின்னவேண்டும். பெரியார் வாழ்ந்த காலத்தில் வேதம்,புராணம் எல்லாம் விமர்சனத்துக்கு அப்பற்பட்டவையாய் இருந்தன, அந்த நேரம் எல்லாமே புருடா என்றுதான் அடித்து பேசவேண்டும். அந்த சமயம் கொஞ்சம் விஷயமிருக்கு ஆனால் அய்யர் பசங்க நிறைய ரீல் விட்டு காசு பார்க்கிறாங்க என்று மென்று விழுங்க முடியாது.
இப்போது நிலைமை மாறியிருக்கிறது. நாத்திகம் அலுத்து , மனக் குரங்கு ஆத்திகத்தின் பக்கம் தாவ ஆரம்பித்திருக்கிறது. இந்த சமயம் பெரியாரைப் போல் எல்லாமே புருடா என்றால் ,ஆத்திகத்தின் காரணாமாய் சற்றேனும் பலன் பெற்றவன் நாம் சொல்லுவதைத் தான் புருடா என்பான். மீண்டும் அவனை பார்ப்பன மாயாவில் இருந்து வெளிக்கொணர முடியாது. எனவேதான் அய்யர்கள்
தம் அடுத்த தலைமுறைக்கு மாற்றும் போது கோட்டை விட்ட டீட்டெயில்களை நான் பிடித்து வைத்துள்ளேன். என்னிடம் விடச்சொல்லுங்கள் புராண புருடாக்களை. அவன் மனைவியை இவன் கொண்டு போனான் இவன் மனைவியை அவன் கொண்டு போனான் என்ற கதைகளை நம் வீட்டுப் பெண்கள் முன்னிலையில் சொல்லியதோடு, அவற்றை பாராயணமும் செய்யச்சொன்ன பாவிகள் நமக்கு ஏன் பவிஷ்ய புராணத்தை கூறவில்லை என்று கேளுங்கள். (முதலில் இந்த தலை முறை அய்யனுக்கு தெரியுமா கேளுங்கள்.

Thursday, August 30, 2007

பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு பத்து கேள்விகள்


1.ஒரே நிறுவனத்தின் விளம்பரம் ஒரு பக்கத்திலும்,அது குறித்த செய்தி ஒரு பக்கத்திலும் வெளிவருவது ஏன்? நீங்கள் செய்தி போடுவதால் விளம்பரம் தருகிறார்களா? அல்லது அவர்கள் விளம்பரம் தருவதால் நீங்கள் செய்தி வெளியிடுகிறீர்களா?


2.விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஒரு அறிவிப்பை சமீப காலமாய் வெளியிட துவங்கியுள்ளீர்கள். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் வெளியிட்ட விளம்பரங்களுக்கெல்லா ம் நீங்கள் தான் பொறுப்பா?


3.மத்திய அரசு பதிவு பெற்ற பத்திரிக்கைகளுக்கு நியூஸ் ப்ரின்ட் காகிதத்தை கண்ட்ரோல் ரேட்டில் தருகிறது. ஆனால் எந்த பத்திரிக்கையும் நியூஸ் ப்ரின்ட் காகிதத்தில் வெளி வருவதில்லை. கண்ட்ரோல் ரேட்டில் அரசு தந்த காகிதங்கள் என்னவாகின்றன?


4.ஒரே குழுமத்திலிருந்து பல பத்திரிக்கைகள் வெளிவருகின்றன . பெரும்பாலும் ஆசிரியர் தவிர ஆசிரியர் குழு உறுப்பினர்கள் எல்லாம் அதே ஆசாமிகள் தான். இவர்களுக்கு எத்தனை பத்திரிக்கைக்கு வேலை செய்தால் அத்தனை சம்பளமா? அல்லது ஒரே சம்பளத்துக்கு இத்தனை இதழ்களுக்கும் பணி புரிகிறார்களா?


5.எஸ்.எம்.எஸ் மூலம் ஜோக்,வாசகர் கடிதம் இத்யாதி அனுப்பச் சொல்வதும் நடந்து வருகிறது. வாசகருக்கு செலவாகும் தொகையில் பத்திரிக்கைக்கு கிடைக்கும் பங்கு விவரம் என்ன?



6.எழுத்தாளர்கள் தங்களுக்கு அனுப்பும் படைப்புகள் முதலில் சுவற்றிலடித்த பந்தாக இருந்தன. பின் கிணற்றில் போட்ட கல்லாயின. தற்போது பிரதி வைத்துக்கொண்டு அனுப்புங்கள். திருப்பி அனுப்ப முடியாது என்று அறிவிக்கிறீர்கள். இந்த அறிவிப்பை தாங்கள் வெளியிடுவதற்கு முன் அனுப்பப்பட்ட படைப்புகளையாவது திருப்பி அனுப்பலாம் அல்லவா?



7.எழுத்தாளர் ராஜேஷ் குமார் எல்லா பத்திரிக்கைகளாலும் நிராகரிக்கப்பட்ட தன் குறுநாவல் மற்றொரு பத்திரிக்கையின் போட்டியில் பரிசு பெற்ற வரலாற்றை தம் சுய சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்வு பெறாத படைப்புகளை திருப்பி அனுப்பினால் அவை வேறு ஏதேனும் போட்டியில் பரிசு பெற்றுவிட்டால் என்ன செய்வது என்ற தங்கள் நல்லெண்ணமே மேற்படி அறிவிப்புக்கு காரணமா?


8.ஒரு பத்திரிக்கையில் கோழிக்கறியின் தீமைகள் குறித்து கட்டுரை தொடர் வெளிவந்தது. பிறகு கோழிக்கறி சாப்டு மஜா பண்ணுங்கங்கற விளம்பரங்கள் தான் தொடர்ந்து வந்ததே தவிர கட்டுரை என்ன கேடு ஒரு துணுக்கு கூட மேற்படி விஷயத்தில் வெளிவரவில்லையே? அது என்ன சமாசாரம்?


9.பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகளில் வாய்தா போன பிராமண‌ பிரபலங்களை கூட இந்த தூக்கு தூக்கறிங்களே..பிராமணர்களுக்கு மட்டும் வித்து பத்திரிக்கை நடத்தறிங்களா? இல்லயே! சூத்திர‌னோட காசு வாங்கிகிட்டு பிராமண புகழ் பாடறிங்களே இது நியாயமா?


10.உங்கள் வலை தளத்தில் contacட்: என்பதை மட்டும் ஒளித்து வைத்துள்ளீர்களே அது ஏன்? தப்பித்தவறி மெயில் அனுப்புபவர்களுக்கு உங்கள் விளம்பரத்தை தான் அனுப்புகிறீர்களே தவிர பதில் தருவதில்லையே இதுதான் பத்திரிக்கை தர்மமா?

என் தாழ்மையான கருத்து.

தமிழ் அச்சு ஊடகம் தன் பிராமணீய அகங்காரத்தினால் என்னை புறக்கணித்த பிறகு தமிழ் வலைப்பதிவுகளை சரணடைந்தேன். சலூன் கள், தேனீர் கடைகளில் கூட பேச முடியாத மொழி வலைப்பூக்களில் தேவையில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

த‌மிழ் லிபியில் தெலுங்கு க‌விதை


நேனுநித்யம் அபத்ரதா பாவ‌ம்தோ

பாத படுதுன்னாஒ அத்ருஸ்ய ஹஸ்தம்

நன்னு காப்பாடுதூ வஸ்துன்ன

சங்கத்தினி நேனு அர்த்தம் சேஸுகோ கல்குதுன்னானு !

நா ஜீவிதபு பரமார்த்தான்னிஅர்தம் சேஸுகோ கல்குதுன்னானு !

நா ப்ரானாலனு காலிலோ கலிபெய்ய

கல சன்னிவேஸாலனு

தாட்டின்சின்தி ஆ ஹஸ்தமே!


அனுக்ஷனம் ஆத்ம க்ஷோப‌கு குரவுதுன்னா

தானி குரின்சி அரக்ஷனானிகி மின்சி

ஆலோசின்சனீயக நன்னு ரக்ஷின்சேதி ஆ ஹஸ்தமே!


யென்னி சார்லு மானசிகங்கா நேனு மரனின்சினா

நன்னு மல்லி மல்லி ப்ரதிகின்சின்தி ஆ அம்ருத ஹஸ்தமே!
ஈ தீபம் சுடிகாலிலோ ஆரிபோக காப்படின்தி

ஆ அத்ருஸ்ய ஹஸ்தமே!


நேனு நா கதான்னி தலச்சடம் நா

பவிதனுபங்காரம் செய்ய கல ரச குளிக

ஏதன்னா லபிஸ்துந்தேமோனன்ன கக்ருதி தோனே

ஆ ர‌ச‌ குளிக‌னு நா க‌த‌ம்லோனுன்டி த்ர‌வ்வி இவ்வ‌க‌லிகேதி கூட‌ ஆ ஹஸ்தமே!


இன்த‌ ஏல‌ ஆ குளிக‌னு அக்க‌ட‌ தாச்சி

உன்சின்தி கூட‌ ஆ ஹஸ்தமே!

த‌மிழ் லிபியில் தெலுங்கு க‌விதை

Wednesday, August 29, 2007

புலி மேல் பவனி வருகின்ற பவானி எனை நீ உடன் கவனி






தாயே தாயே கண் பாரு (குடை)


சாய்ந்து கிடக்குது என் தேரு


ஏனோ பிறந்தேன் அறிவில் சிறந்தேன்


ஞானம் பகிர நானும் துடித்தேன்


அனலில் புழுவாய் துடி துடித்தேன்


பாடிப்பாடி மகிழ்ந்தேனே


உயிர்வரை நாளும் நெகிழ்ந்தேனே


மாக்கள் போலே வாழ்கின்ற


உன் மக்கள்தானே வதைக்கின்றார்


உத்தமர் என்றே கதைக்கின்றார்


நியாயம் இதுவோ என் தாயே


என் கை உயர கை தாயேன்


சூக்கும் புத்தி உன் பிச்சை


இதில் ஏதடி எனக்கென்று ஓரிச்சை


உன் இச்சைப்படியே வாழ்கின்றேன்


பிச்சை ஏற்று தாழ்கின்றேன்


காசொடு கருமம் துணை


வந்து பிணைக்குது என்னை


அறுத்தெறிவாய்


மாதவன் சேவை என நம்பி


மக்கள் சேவை ஏற்றவன்


நான் ஏழ்மை ஒழிக்க வந்துற்ற


மகிஷம் அற்ற கூற்றுவன் நான்


என் நாவில் கலைமகள் நீயன்றோ


உன் செல்லப்பிள்ளை நானன்றோ


என் கவிதை கேட்க சிதையேற்ற


தாயே நீயே துடிப்பதுவோ


எழுதி எழுதி என்னாச்சு


அவை அழிந்திட என் மனம் புண்ணாச்சு


பாலையில் பனி மழை பொழிந்திடலாம்


என் மனதில் கவிதை வழிந்திடுமோ


நானும் மனிதன் தானல்லோ


கைப்பிடி இதயம் தானல்லோ


எத்தனை தானது தாங்குமடி


என்று என் கொடி ஓங்குமடி


தருமம் என் தலை காக்குமென்று


தரணியாளும் தலைவனையும்


உன் துணையாலே எதிர்த்திட்டேன்


ஐயம் ஏற்ற நாளுண்டு


கொண்ட கொள்கையில் ஐயம் உண்டோடி


அன்னை உண்டு பின் என்று


முன் பின் யோசனை இல்லதே


களம் புகுந்திட்ட பித்தன் நான்


நீ உளம் புகுந்திட்ட சித்தன் நான்


(ஒப்)பேற்றி என்னை வெளிக் கொணர்ந்தாய் இல்லை என்று மறுப்பேனோ (காப்)பாற்றி என்னை வைத்துள்ளாய் இல்லை என்றுனை வெறுப்பேனோ அசடர் கசடர் முன்பெல்லாம்


அலி போல் என்னை நிறுத்துவதோ


எலி போல் நானும் நடுங்குவதோ


புலி மேல் பவனி வருகின்ற பவானி எனை நீ உடன் கவனி


(வீர) சிவாஜி மட்டும் உன் பிள்ளை


என்றால் நீ ஒரு தாயில்லை


பிஞ்சில் பழுத்து வெம்பி விட்டேன்


உனையே நம்பி வந்து விட்டேன்


இன்னும் என்ன தயக்கமடி


தயங்குதலே உன் வழக்கமோடி


மென் மனம் புண்பட புல்லர்களே


புலி வேடம் கட்டி ஆடுகையில்


ஆடு போலே விழிக்கின்றேன்


ஏடு எடுத்து எழுதியதை முகர்ந்தும் பாரா உலகத்தில்


எழுதிவைத்து என் செய்வேன்


அம்மா நீயே மனம் வைத்தால்


என் எழுத்து உலகை ஆளாதோ


உலுத்தர் உவகை மாளாதோ


நாட்டின் ஏழ்மை நாளை மாறாதோ


என் லட்சிய தாகம் தீராதோ

காவலர்களின் பணிச்சூழலை மாற்ற என் ஆலோசனைகள்:


1.காவலர் தேர்வு என்பது போட்டியற்றதாகி விட வேண்டும். அதற்கு இப்போதுள்ள காவல் துறை அதிகாரிகள்,காவலர் எண்ணிக்கையை 3 மடங்காக்கி விடவேண்டும்.
2.காவலர் தேர்வு என்பது இயந்திரங்களால்,கணிணிகளால் ந்டத்தப்படவேண்டும்.
3.தேர்வான காவலர்களுக்கு விலை வாசியே தெரியவராத வகையில் அவர்களுக்கும்,அவர்கள் குடும்பத்தாருக்கும் தேவையான உயிர் பாதுகாப்பு,உணவு,உடை,இருப்பிடம்,செக்ஸ்,காப்பீடு,சேமிப்பு எல்லாவற்றுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும். அவர்களுக்கு தரப்படும் சம்பளம் என்பது அத்தியாவசிய,விபரீத சூழல்களில் மட்டுமே பயன் படவேண்டும்.(கிட்னாப்புக்குள்ளாதல் Etc.,)
4.காவலர்களின் உடல் நிலை,மன நிலை,பொருளாதார நிலை,(தாம்பத்திய வாழ்க்கை உட்பட) 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது அன்னிய நாட்டு சேவை நிறுவனங்களால் பரிசீலிக்கப் படவேண்டும்
5.காவலர்களுக்கான பதவி உயர்வு,இடமாற்றம்,பணிமாற்றம்,விடுப்பு,சகலமும் கணிணிகளால் நிர்ணயிக்கப்பட வேண்டும். மேலதிகாரிகளின் தயவை எதிர்ப்பார்க்கும் துரதிர்ஷ்டமான நிலை மாறவேண்டும்.(இவர்கள் மேலதிகாரிகளின் இம்சையால் மசாக்கிஸ்டுகளாகி, மக்கள் விஷயத்தில் வரும்போது சாடிஸ்டுகளாகி விடுகிறார்கள்.
6.எந்த அதிகாரியும்,எந்த காவலரும் எக்காரணம் கொண்டும் 8 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றக்கூடாது.
7.அனைத்து மானில போலீஸ் துறையையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்து விட வேண்டும்.((IAS & IPs, மாதிரி) நாடெங்கிலும் உலகத்தரத்தில் போலீஸ் குவார்ட்டர்ஸ் ,அவர்களின் பிள்ளைகள் படிப்புக்கான கல்வி நிலையங்கள்,ஹாஸ்டல்கள் கட்டப்பட வேண்டும்.பணிமாற்றம் என்பது அகில இந்திய அளவில் நடைபெறவேண்டும். பணிமாற்றம் என்பது காவலரை பாதிக்காத வண்ணம் நாடெங்கிலும் ஒரே பணிச்சூழல்,ஒரே விதி ஏற்படுத்த வேண்டும்
8.காவலன் என்பவன் மக்களுக்கு காவலனாக இருக்கும் வரை நாடு அவனுக்கு காவலாக இருக்க வேண்டும். அவன் அரசியல் விபச்சாரிகளின் தரகனாய் மாறிவிட்டால் நாடு கடத்த வேண்டும்


















அடிக்கடி ட்ரான்ஸ்ஃபர்: போலீசாரை சுட்ட ஏட்டு


அண்ணே வணக்கம்ணே !

மேற்படி செய்தி ச்சொம்மா ஒரு சாம்பிள் தான்.  நம்ம பக்கத்துல ரீசன்டா ஒரு ஏட்டு எஸ்பியை கிட்னாப் பண்ணி வ்ச்சுக்கிட்டு அலப்பறை பண்ணாரு. செய்திக்கு வராத எத்தனை சம்பவம் இருக்கோ தெரியாது.

இதுக்கெல்லாம் காரணம் காவலரின் பணி சூழல். இதை மாற்றினாலே தவிர புண்ணியமில்லை.


காவலர்கள் மீதான காதலால் இல்லையென்றாலும் அப்பாவி மக்கள் நலம் கருதி இந்த கட்டுரையை வலையில் பதிகிறேன். ஆந்திரத்தில் உள்ள காவலர் பணிச்சுழலின் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்படுகிறது. இருந்தாலும் என்ன ....வீட்டுக்கு வீடு வாசற்படி.


சமீபத்தில் வலைப்பதிவுகளை ரகசிய போலீசார் பார்த்து குறிப்புகள் எடுப்பதாய் அறிந்து இதனை தமிழில் பதிகிறேன். யூனிகோட் என்பது தமிழில் எத்தனைக்கெத்தனை எளிதாக உள்ளதோ,தெலுங்கில் அத்தனைக்கத்தனை கடினம் என்பதும் இந்த தமிழ் பதிவுக்கு ஒரு காரணம். ஊர் பிள்ளையை ஊட்டிவள்ர்த்தால் தன் பிள்ளை தானே வளருமாமே..சரி விஷயத்துக்கு வருகிறேன்.


இந்த கட்டுரைக்கான விஷயங்கள் பல வருடங்களாய் என் மனதில் இருந்தாலும், இதனை இன்று பதிய உடனடி காரணம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு பத்திரிக்கை நிருபன். (ஜோதிடனும் கூட). ஒருவாரத்திற்கு முன் என் க்ளையண்டுகளில் ஒருவரான் திருமதி. ............. என்பவர் என்னை செல்லில் தொடர்பு கொண்டு தன் மகன் ஒரு திருமணமான பெண்ணை ஏதோ செய்து விட்டதாய் புகார் கொடுக்கப்பட்டதாகவும், அவனை தேடி வேளை தவறிய வேளைகளில் போலீசார் தம் வீட்டுக்கு வந்து மிரட்டுவதாகவும் கூறி அழுதார். நானும் காலையில் இருந்து எஸ்.ஐ அவர்களை சந்தித்து பேச முயன்று கொண்டே இருந்தேன்.


காலை தி.தி.தேவஸ்தான இலவச திருமண நிகழ்ச்சிக்கான செக்யூரிட்டி யில் இருந்தார். (மக்கள் தொகை பெருக்கத்தால் திணறும் ஒரு நாட்டில் இது தேவையா?)மாலை சென்றேன். அவருக்காக அப்போதுதான் ஜீப் அனுப்பப்பட்டு கொண்டிருந்தது. சரி நாமும் வீட்டுக்கு போய் ப்ரஷ் அப் ஆகி வரலாம் என்று வீட்டுக்கு போனேன்.


அதற்குள் திருமதி...... அவர்களின் மகள் போன் செய்தார். "அம்மாவை போலீஸ்காரங்க கூட்டிட்டு போயிட்டாங்க."அப்போது நேரம் மாலை 6.
உடனே ஸ்டேஷன் போனேன். யார் செய்த புண்ணியமோ அதற்குள் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டிருந்தார்கள்.


பிறகு எஸ்.ஐ.யிடம் பேசினேன். அவர் குரலில் இனம் புரியாத எரிச்சல், இயலாமை,தாழ்வு மனப்பான்மை,நாசூக்கான மிரட்டல். சரி எப்படியோ நான் அந்த பையனின் நண்பர்களை விசாரித்து தேடிப் பார்க்கிறேன் ,கிடைத்தால் அழைத்து வருகிறேன், நீங்களே தீர்த்து வைய்யுங்கள் என்று கூறினேன்.


அவரோ தன் ஈகோவை திருப்தி படுத்திக்கொள்வதிலேயே குறியாயிருந்தார்."நான் கேட்கவில்லையே அழைத்து வரச்சொல்லி..அவனென்ன்ன வீரப்பனா ? நாங்களே பிடித்துக் கொள்கிறோம்" என்றெல்லாம் பேசினார்.


எனக்கு ஓரளவுக்கு பாடி லாஙுவேஜ், பேஸ் ரீடிங் எல்லாம் தெரியும். ஆசாமி பார்ட்டி கைக்கு கிடைத்தால் பார்ட் பார்ட்டாய் கழட்டாது விடமாட்டார் என்பது புரிந்து விட்டது. நான் அந்த பையனை அழைத்து வரும் வரையிலாவது காவலர்களை வீட்டுக்கு அனுப்பாதீர்கள் என்று கேட்டு கொண்டேன்.


அடுத்து 2 நாட்களும் தொடர்ந்து காவலர்களை அனுப்பியபடியே இருந்தார். நேற்று என்னை ஸ்டேஷனுக்கு அழைத்து "அழைச்சிட்டு வரேன்னிங்க என்னாச்சு? குடும்ப நண்பர் உங்களுக்கே அவங்க தகவல் தரலை.. எங்களுக்கு வேறு வழியே இல்லை என்னும்போதுதான் பெண்களை அழைத்து வருவோம் " அது இது என்று பேசி அனுப்பினார்.


இன்று அது "வேறு" வகையில் தீர்ந்துவிடப்போகிறது.அது வேறு விஷயம். அவரின் பேச்சு,செயல் யாவும் என்னில் அவர் மேல் பரிதாபத்தைத் தான் ஏற்படுத்தியது. கோபம் என்பது பலவீனத்தின் அடையாளம்.


"செல்லாவிடத்து சினம் தீது "என்பது வள்ளுவர் மொழி.
நான் எங்கள் மானில முதல்வர் மீதே மனித உரிமைகள் கமிஷனுக்கு புகார் கொடுத்தவன், நுகர்வோர் மன்றத்தில் புகார் கொடுத்து தீர்ப்பும் பெற்றவன். குண்டர் தலைவர் என்று பார்ப்பன மீடியாவால் வர்ணிக்கப் படும் தற்போதைய முதல்வர் முதல்வராக இருக்கும் போதே அரசை கண்டித்து தன்னந்தனியே உண்ணாவிரதம் இருந்தவன். என்னை மிரட்டுகிறார் அவர்.
ஜோதிட ஞானம் வேறு இருப்பதால் சரி ஒழியட்டும் அஷ்டமத்தில் செவ்வாய் என்று அட்ஜஸ்ட் செய்து கொண்டேன்.


இது யாரோ ஒரு எஸ்.ஐ. பற்றி என்று நினைத்து விடாதீர்கள். காவலர் பணிச்சூழல் அப்படி.


இதை மாற்ற என் ஆலோசனைகள் இங்கே




















அதுவ

Tuesday, August 28, 2007

உங்களை மறுத்துவிட்டேன்.


நீங்கள் எழுதும் கவிதையில் வாழ்க்கை இல்லை.

உங்கள் வாழ்க்கையில் கவிதை இல்லை

நீங்கள் பூட்டிவைக்கும் கோவில்களில் தெய்வம் இல்லை

உங்கள் தெய்வங்களில் மனிதம் இல்லை

ஆண்களில் ஆண்மையில்லை

பெண்களில் தாய்மை இல்லை

உங்களை பெற்றோர் வலிவும்,பொலிவும் பெற்றோரில்லை

அதனால் தான் உங்கள் இதயம் மலரவில்லை

நிலத்தின் ரத்த ஈரம் உலரவில்லை

பத்தோடு பதினொன்று உங்கள் பிறப்பு

இதற்கு பொறுப்பில்லாத உங்கள் பெற்றோரும் பொறுப்பு

அவர்களின் வளர்ப்பில் நீங்கள் வளர்ந்தீர்களே

தவிரஉங்களில் எதுவும் வளரவில்லை

உங்கள் பள்ளிகளில் கல்வி இல்லை

உங்கள் கல்வியில் ஞானமில்லை

உங்கள் வியாபாரங்களில் நேர்மையில்லை

உங்கள் நேர்மையிலும் வியாபாரம் இல்லாமல் இல்லை.
உங்கள் அரசில் நிர்வாகமில்லை.

நிர்வாகத்தில் நீதியில்லை

உங்கள் நீதியில் பேதம் இல்லாமல் இல்லை.

உங்கள் காமத்தில் காதல் இல்லை

உங்கள் காதலில் காமம் தவிர வேறில்லை.

நீங்கள் என்னை முழுமையாக மறுக்கும் முன்

நானே உங்களை மறுத்துவிட்டேன்.

உங்களுடனான் தொடர்பை அறுத்துவிட்டேன்

Saturday, August 25, 2007

கலைஞருக்கு ஒரு பகிரங்க கடிதம்


நதிகளை இணைக்க சோனியா அம்மையாருடன் பேசி வரும் தாங்கள் என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தின் தொலைநோக்கு தன்மையை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.(திட்டத்தின்  முக்கிய அம்சங்கள்:

1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்.

இன்னமும் உங்களுக்கு கண்ணை கட்டலின்னா இங்கே அழுத்தி மேலதிக விவரங்களை படிங்க


இந்த திட்டத்துக்கு ஜெயலலிதா அம்மையாரின் ஆதரவைப் பெற அவர்களுக்கு ஜாதகம் எல்லாம் கணித்து பலன் எழுதி அனுப்பியவன் நான். என் கணிப்பு நிஜமானதும்,அதற்கு அம்மையார் Thanks Caர்ட் அனுப்பியதும் உண்மை. தங்கள் நீண்ட‌ வாழ்வில் எத்தனையோ நல்லது,கெட்டதுகளை பார்த்திருப்பீர்கள். 

அரசு அலுவலகங்களில் வைக்கப் படும் பிரதமர்களின் படம் மாறும். காந்தியடிகளின் படம் மாறாது. காந்தியடிகளின் படத்தோடு தங்கள் படமும் நிரந்தரமாக இருக்க இந்த திட்டம் உதவும்..

இந்த வலைப் பூவை கூரியரிலும் அனுப்புகிறேன். (ரகசியம்: தினகரன் இதழ் கடந்த சட்டம‌ன்ற தேர்தல்கள் குறித்த ஜோதிட கணிப்புகளை வெளியிட்ட போது..தங்கள் தலைமையி மைனாரிட்டி அரசு அமையும் என்றும் ராமதாசு தாங்கொணாத குடைச்சல் கொடுப்பார் என்றும் உறுதியாக கணித்து கூரியர் மூலம் கடிதம் அனுப்பினேன். 

ஆனால் தினகரன் என் கணிப்பை வெளியிடவில்லை. இன்னும் என்னிடம் அதற்கான ஆதாரம் உள்ளது)

கவிழ்ந்தது ரயில்

1.கவிழ்ந்தது ரயில் கை கொட்டி சிரிக்கும் குழந்தை
2.நாளை அது தன்னை தின்னப் போவதை அறியாது மண் தின்னும் பாலகன்
3.கலைவாணியின் கைகளில் கிட்டார் மாறவில்லை கவிஞர்கள்
4.அமுதாய் பொங்கும் கவிதை விஷ‌மாய் பெருகும் இன்டர்னெட் கட்டணம்
5.எங்கும் பசுமை பள்ளி மதில் சுவரில் மரம்
6.கட்ட‌ணக் கழிப்பறை முன் காத்திருக்கையில் சட்..சட்டையின் மேல் காக்கை எச்சம்
7.கூடு தேடி பறக்கும் பறவைகள்கடைகள் மூடப்பட காத்திருக்கும் மனிதர்கள்
8.செத்துவிழுந்தது ஒற்றைக் காகம்முட்டி மோதும் காக்கைக் கூட்டம்
ரோட்டோரம் அனாதைப் பிணம்
9.வாய்.. சில நேரம் பல்லிடை சிக்கிய உணவுத் துகளாலும்
பல நேரம் பயனற்ற சொல்லாலும் நாற்றமுறும் அங்கம்.
10. பிரசுரமும் பிரசவம் போலதான்தகுதியுள்ளவைதானா பிரசவிக்கப் படுகின்றன‌
11.கறைகறை படிந்த கேர் ப்ரீபோனமாதம் ஜனத்தொகை கட்டுப் பட்டதைகூறுகிறதுகறைபடிந்த நிரோத்கடந்த இரவில் ஜனத்தொகை கட்டுப் பட்டதைகூறுகிறதுஅச்சுக்கறை படிந்த காகிதம் ?

ஜோதிட சாஸ்திர‌ மர்மங்கள்

இது அந்திமழை டாட் காமி வெளியாகி நெஜமாலும் ஆயிரக்கணக்கான வாசகர்களால் படிக்கப்பட்ட ஐட்டம். இதை இன்னம் நெல்லாம் மெருகேத்தி இங்கே தரேன்.

ஜோதிட சாஸ்திர‌த்தில் உள்ள மர்மங்கள் ஆயிரமாயிரம்.. எல்லோரும் ஒரே பஞ்சாங்கத்தை தான் உபயோகிக்கிறோம். சிலர் சொல்வது நடக்கிறது. பலர் சொல்வது நடப்பதில்லை. இதை வைத்தே பகுத்தறிவாளர்கள் ஜோதிடம் விஞ்ஞானம் அல்ல என்று கூறிவிடுகிறார்கள்.

எந்த ஜோதிடர் பலன் கூறினாலும் அது அப்படியே நடக்க வேண்டும் என்றால் அதற்கு சில மர்மங்களை ஜோதிட நிபுணர்கள் பகிரங்கப் படுத்த வேண்டும் . நான் நிபுணர் அல்ல என்ற போதிலும் இதை துவங்கி வைக்கிறேன். சனங்க தொடரட்டும்.

மொதல்ல கைய தூக்கிருங்க:
ஜேம்ஸ்பாண்ட் படத்துல வில்லன் துப்பாக்கிய தூக்கினா ஜே.பாண்டே கை தூக்கிர்ராரு. அதை மாதிரி ஜோசியர்களும் கை தூக்கிரனும்.

தங்களோட இயலாமைய போட்டு உடைக்கனும்.

1.இன்னைக்கு செலாவணில உள்ள மூல நூல்களே மூல நூல்கள் அல்ல

2.இது பல காலம் அவாள் கஸ்டடில இருந்து மூச்சு திணறிக்கிட்டிருந்தது ( சீக்ரெட்)

3.ஜோதிஷத்துக்கு அடிப்படையே ஆன்மீகம் தான். ஆன்மீக தேடலோ, செல்வமோ இல்லாத பார்ட்டி சொன்னா எல்லாமே பல்லை இளிக்கும். ஜோசியருக்கு மட்டுமில்லை ஆர்வலருக்கும் இதெல்லாம் இருக்கனும்.

4.படைப்பாளி கையில உள்ள அஜெண்டாவ பிட் அடிக்கிற முயற்சி இது. அந்தாளு பெரீ கில்லாடி அஜெண்டா அமலாக தொடங்கிட்ட பிறவு கூட படக்குனு கண்ட் ரோல் ஜெட் கொடுத்துருவாரு

5.ஜோதிஷத்துக்கு பேஸ் ரிஷிகளோட ஸ்டடி. அவிகளுக்கு அந்த பலத்தை தந்தது அவிக தவம். நான் ட்ரான்ஸ்ல எழுதிட்ட கவிதைய சாதாரணமா இருக்கிறச்ச படிக்க கூட முடியாம போயிருது. அதனால அவிக என்னா மூட்ல எழுதினாய்ங்க்ளோ அந்த மூட் ஜோதிடருக்கு இருந்தாதான் அதையெல்லாம் புரிஞ்சிக்கிட முடியும்

6.ஜோதிஷத்துல மேற்படி ரிஷிகள் ,மகரிஷிகள் கொடுத்திருக்கிற விதிகள் எல்லாம் ஜஸ்ட் ஒரு சாக்கு மட்டும் தேன். அவுட் புட்டுக்கும் விதிகளுக்கும் சம்பந்தமே கிடையாது.

7.நீங்க ஜோசியர்னா உங்க முன்னாடி வந்து உட்கார்ர பார்ட்டியோட மைண்ட்ல பாஸ்ட்,ப்ரசன்ட்,ஃப்யூச்சர் எல்லாம் கலந்து கட்டியா இருக்கிறத பார்க்கமுடியனும். ஜஸ்ட் டெலிபத்தியாலயே கண்ணா .. கொஞ்சம் ஃப்யூச்சர் கன்டென்டை மட்டும் மேலே அனுப்புன்னனும். அப்ப ஃப்யூச்சர் கன்டென்ட் தண்ணில எண்ணெய் மாதிரி மிதக்கும். அதை கலக்காம அப்படியே சக் பண்ணி எடுத்து விடனும்.

8.பார்ட்டியோட எதிர்காலத்தை நீங்க சொல்றிங்கனு நினைச்சிங்கன்னா அது முட்டாள் தனம். பார்ட்டி உங்களை ஒரு மீடியமா யூஸ் பண்ணிக்கிறாரு. உங்க மூலமா அவரே பேசறாருனு நினைக்கனும்.

9.நீங்க மீடியமா மாறனும்னா உங்களுக்கு ஈகோ ங்கறதே இருக்ககூடாது

10.ஜோதிஷ விதிகளையெல்லாம் மைண்ட்ல ஸ்டோர் பண்றதே எதுக்குன்னா அந்த விதிகள் எத்தனை பேரோட லைஃப்ல ஃபெயில் ஆயிருக்குனு தெரிஞ்சுக்கத்தான்.

11.ஜோதிஷம் ஒரு சைன்ஸுதான். என்ன ஒரு வில்லங்கம்னா அது மிஸ்டிக் சைன்ஸ்.

12.ஜோதிஷத்துல என்டர் ஆறதுக்கு முந்தி அ கமாண்ட் ஏற்படற வரை அது ஐ.இ.சி மாதிரி தோணும். பக்கா சைன்ஸுப்பான்னு கூவத்தோணும். என்னைக்கு உங்களுக்கு நாம தேறிட்டம்னு ஒரு நினைப்பு வருதோ அந்த க்ஷணத்துலருந்து அய்யய்யோ இது சைன்ஸ் இல்லைப்பா அதுக்கும் மேலனு ஒரு ஃபீலிங் வந்துரும்.

13.இன்னைக்கு நமக்கு அவெய்லபிளா இருக்கிற கன்டென்ட் மொத்தமே ஒரிஜினல் சப்ஜெக்ட்ல 00.01% கூட கிடையாது. இதுவே தாளி இந்த அளவுக்கு பல்பு கொடுக்குதுன்னா மொத்தமா இருந்திருந்தா இன்னா கதி?

14.அட ஜாதக கணிப்புக்கு அடிப்படையான பிறப்பு நேரத்தையே எடுத்துக்கங்க. நாட் நாட்ல கர்பதான முகூர்த்தத்தை வச்சுத்தான் ஜாதகம் கணிப்பாய்ங்க.அப்பாறம் கொளந்தை தலை தெரிஞ்சதுமே நேரம் குறிச்சிக்கிட்டு ஜாதகம் கணிக்க ஆரம்பிச்சாய்ங்க. இப்போ? கொளந்தை வெளிய வந்து மூக்கை துடைச்சு மூஞ்சை துடைச்சு புட்டத்துல பளார்னு ஒன்னு விட்டு அது கூவின நேரத்தை வச்சு கணிக்கறோம். எந்தளவுக்கு டீட்டெயில்ஸ் மிஸ் ஆகும்னு ரொசிங்க

சரிங்கண்ணா ரெம்ப டீப்பா போயிட்டாப்ல இருக்கு. இப்போ லைட்டா சில அம்சங்களை பார்ப்போமா?

ஜோதிட சாஸ்திரத்தில் எத்தனையோ விதிகள் உள்ளன. இவற்றில் எது முக்கியம் எது முக்கியமல்ல என்பதை புரிந்து பலன் கூறவேண்டும்.

1.உதாரணமாக கிரகங்களுக்கு நைசர்கிக சுபத்துவ,பாபத்துவம் ‍/ லக்னாத் சுபத்துவ,பாபத்துவம் என்று இரண்டு விதிகள் உள்ளன. இதில் லக்னாத் சுபத்துவ,பாபத்துவ விதியையே அப்ளை செய்ய வேண்டும்.

2.எண்சாண் உடலுக்கு சிரஸே பிரதானம் என்பது போல் லக்னம்,லக்னாதிபதி பலத்தை வைத்துத் தான் மற்ற கிரகங்கள் பலனளிக்கின்றன.

லக்னாதிபதி 6,8,12 லிருக்க, அல்லது அஸ்தங்கதம் அடைந்திருக்க மற்ற கிரகங்கள் என்னதான் நல்ல நிலையில் இருந்தாலும் நல்ல பலன் கள் ஏற்படுவதில்லை. அதே போல் லக்னாதிபதி 6,8,12 அதிபதிகளோடோ,லக்னாத் பாபர்களோடோ சம்பந்தப்பட்டாலும் நிலைமை இது தான்.

3.பிரபல தோஷங்கள் இருத்தல் : உதாரணமாக செவ்வாய் தோஷம்,கால சர்ப்பதோஷம், சர்ப்ப தோஷம்,குருசந்திர தோஷம்

4.பாபர்கள் அநியாயத்துக்கு வலுத்தும்,சுபர்கள் வலுக்குன்றியும் இருத்தல்

5.லக்னாதிபதியை விட 6,8,12 அதிபர்கள் அதிகம் பலம் பெற்றிருத்தல்

6.சுபபலனை தரவேண்டிய கிரகங்களின் தசைகள் இளமையில் வராது போதல். (இதுவே சுக்கிரன் சுபனாக இருந்து இளமையில் சுக்கிர தசை வந்தாலும் தொல்லையே.)

7.தாய்,தந்தையரின் ஜாதகங்களில் 5 ஆமிடம் வலுக்குன்றியும், சோதர,சோதரிகள் ஜாதகத்தில் 3 ஆமிடம் பாப சம்ம்ந்தம் பெற்றுமிருத்தல்

8.ஜாதகர் தம் ஜாதகத்தில் வலுக்குன்றிய கிரகத்தின் தொழில்,வியாபாரம்,வேலையில் ஈடுபட்டிருத்தல்

9.சேரக்கூடாத கிரக‌ங்கள் சேர்ந்திருத்தல்,

10.மாங்கல்ய தோஷம் உள்ள பெண்ணை மணத்தல், இருதார ஜாதகனை/ஜாதகியை மணத்தல் போன்ற அம்சங்கள் திருமண வாழ்வுக்குண்டான நற்பலன் களை தடுத்து விடுகின்றன‌.

11. அதே போல் வாஸ்து கோளாறுகள்: வாடகை வீடாக இருக்கும் பட்சத்தில் நல்ல தசை,புக்தி வந்ததுமே அந்த நல்ல நேரம் அந்த வீட்டிலிருந்து வெளியே கிளப்பிவிடும். ஒரு வேளை சொந்த வீடாக இருந்தால்? இவர்கள் வீடு மாறமாட்டார்கள். கிரக பலன் அவ்வீட்டின் கெடுபலனை கட்டுப்படுத்துவதிலேயே செலவழிந்து விடும்.

12. நஷ்ட ஜாதகர்களுடன் கூட்டு: நம் ஜாதகம் நல்ல ஜாதகமாயிருந்தாலும் நஷ்ட ஜாதகர்களுடனான் கூட்டு அது தரும் நல்ல பலன் களுக்கு வேட்டு வைத்து விடும்.

13.பிள்ளைகள் ஜாதகம்: நமக்குப் பிறக்கும் பிள்ளைகளின் ஜாதகத்தில் 9 ஆமிடம் கெட்டால் தந்தை காலி, 4 ஆமிடம் கெட்டால் தாய் காலியாகிவிடுவார். தாய்,தந்தையரின் ஜாதகம் தீர்காயுஷ் ஜாதகமாக இருந்தால் போண்டியாகி விடுவார்கள்.

14.நேரம் தவறிய செயல்: சிலர் நல்ல நேரத்தில் அடிமைத்தொழில் செய்வர், கெட்ட நேரத்தில் சொந்தத் தொழில் செய்வர்.

(இன்னம் மஸ்தா கீது நைனா .. நைசா படிச்சுட்டு ரெண்டாமரம் தெரியாம பூட்டிங்கண்ணா இந்த சப்ஜெக்ட் இதோட க்ளோஸ். இதை படிச்சதும் உங்களுக்கு என்னதோணுதோ அதை நாலு வரி கமெண்டா போட்டுட்டு போங்க - அப்போ தொடரும்.உடு ஜூட்!)

Friday, August 24, 2007

மீனராசி,த‌னுசு ராசி எதிர்காலம்


மீனராசிக்கு எப்போது திருமணம்:


மீனராசிக்கு தற்போது, அக்டோபர் 28 வரை குரு 9 ஆமிடத்தில் உள்ளார். எனவே அதற்குள் திருமணம் நடக்கலாம்.(இது பொதுப் பலன்). சனி 6 லும் ,ராகு,கேது 6,12 லும் உள்ளனர் (மார்ச்சு வரை) இதுவும் நல்லதே. என்றாலும் ஜாதகத்தையும் ஒரு முறை அனுப்பி வைய்யுங்கள்.


த‌னுசு ராசி எதிர்காலம்:


கடந்த 3 வருடங்கள் சரியில்லை. இந்த ஆகஸ்டு 5 அன்று நடந்த சனிப் பெயர்ச்சி அனுகூலம் தான். குரு ஜன்மத்தில் வருகிறார்.(அக்டோபர் 28 முதல்). எனவே உடல் நலம் பாதித்தாலும் பொன்,பொருள் சேரும். பிள்ளைகள் முன்னேற்றம் காண்பர். தீர்த்த யாத்திரைகள் செய்வீர்கள். தூர பிரயாணங்களில் எச்சரிக்கை தேவை. சொத்துத் தகறாறுகள் ஏற்படும். தந்தை,தந்தை வழி உறவினர்களுக்கு சிக்கல்,அவர்களால் சிக்கல் ஏற்படலாம்.

தனிப்பட்ட ஜோதிட பலன் களை அறிய‌


தனிப்பட்ட ஜோதிட பலன் களை அறிய‌

செல்: 09397036815

நிலாச்சாரல் வாசகர்களுக்கு


நிலாச்சாரல் வாசகர்களுக்கு நிலாச்சாரலில் என் தொடரை படித்து பலரும் நிலாச்சாரலுக்கு மெயில் அனுப்பி வருகிறீர்கள்..அவர்களு࠮?் எனக்கு பார்வார்ட் செய்து வருகிறார்கள். வாசக‌ர்களுக்கு ஒரு வேண்டு கோள்: 1.என்னைபொறுத்தவரை என் ஜோதிட அறிவு உலகத்திற்கு பயன்படுவதுதான் முக்கியம். இதில் பணம் என்பது மூன்றாம் பட்சம் தான். ஒவ்வொருவருக்கும் தனி தனியாக மெயில் அனுப்பவும் நான் தயார். ஆனால் யூனி கோடில் தட்டச்ச தெரிந்து கொண்டதே சமீபத்தில் தான். (நிலாச்சாரலுக்கு தொடரை அனுப்பும்போது அவுட் ஸோர்ஸிங் தான், அதற்கு பிறகு நிலச்சாரல் கொடுத்த உற்சாகத்தில் தட்டச்ச ஆரம்பித்துள்ளேன். ) எனவே என் சிந்தனை வேகத்திற்கு கைகள் ஒத்துழைக்க மறுக்கின்றன. மேலும் ஒருவருக்கு தேவைப்படும் அதே விவரம் மற்ற ஒருவருக்கும் தேவைப்படலாம். அடுத்தவர் தொடர்பு கொள்ளும் போது மீண்டும் தட்டச்சுவது வீண் வேலை. எனவேதான் இந்த ஒட்டு மொத்த பதில்கள். இதை நிலாச்சாரல் முகவரிக்கும் அனுப்ப உள்ளேன். அவர்களும் தங்களுக்கு இதை பார்வார்டு செய்யலாம்.



முதலில் சூரிய நமசஸ்காரம் பற்றிய கேள்வி:
சூரிய உதயத்தின் போது குளித்த பிறகோ, முடியாத பட்சம் பல் தேய்த்து முகம் கழுவியபிறகோ கிழக்கு திசை நோக்கி சூரியனை கண்டு வணங்க வேண்டும். "ஓம் நமோ ஆதித்யாய நமஹ" என்று சொல்ல வேண்டும்.
இதில் அதி முக்கியமான தத்துவம் உள்ளடங்கி உள்ளது. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு அல்லவா? மகா வெடிப்பின் காரணமாய் உண்டான பூமி,கிரகங்கள் யாவிலும் உள்ளவை சப்த தாதுக்களே. சப்த தாதுக்கள்தாம் சப்த கிரகங்கள். சூரியன் வானத்தில் மட்டும் இல்லை. உங்களுக்குள்ளும் உள்ளார்.
கோவிலில் ஆரத்தி காட்டுவதும், நாம் வணங்குவதும் நமக்குள் உள்ள சிதானந்த ஜோதியை கண்டு கொள்ளத்தான். அதே போல் சூரிய நமஸ்காரம் செய்வது நமக்குள் உள்ள சூரியனை கண்டு கொள்ளத்தான்.
சூரிய நமஸ்காரம் செய்யும்போது குறைந்த பட்ச ,உலர்ந்த ஆடைகளை அணிவது சூரிய கதிர்கள் நம் உடலின் மீது பட உதவும். காலைச்சூரியன்,மாலைச்சூரியனுடைய கதிர்களில் எத்தனையோ மருத்துவ குணங்கள் உள்ளன. வெளி நாட்டினர் sun bath என்ற பெயரில் உச்சி வெய்யிலில் கிடப்பது கேன்சரைத்தான் ஏற்படுத்தும்.

Tuesday, August 21, 2007

பெரியார் ஆட்டோ கிராப்

ஒரு மனிதன் மாமனிதனாவது கடவுளை ஏற்பதாலோ (அ) மறுப்பதாலோ அல்ல மனிதம்,மனித குலம் காப்பதாலேயே! பெரியார் ஆட்டோ கிராப் போட காசு வாங்குவாராம். கட்சி நிதி திரட்ட இதுவும் ஒரு வழி. ஒரு ஆட்டோ கிராபுக்கு ஓரணா கட்டணம். ஒரு ஆசாமி அரை அணா கொடுத்து ஆட்டோ கிராப் கேட்டாராம். பெரியார் இனிஷியல் மட்டும் போட்டாராம். ஆசாமி இதுல என்னங்க கஞ்சத்தனம்னு கேட்டார். என் பேனாவுக்கு கட்சி இன்க் போடுதப்பா..கட்சிக்கு எவ்வளவு லாபமோ அவ்வளவு இன்க் தான் செலவழிக்கனும்னாராம்.
ஏ.சி. கார்ல திரியுற சாமியார்ங்களை துறவிங்கறாங்க..அந்த கணக்குல சொல்லனும்னா பெரியார் தாங்க கடவுள்

Monday, August 20, 2007

சகோதிரிகளை புணர்ந்து


பிராமணீயத்தின் உண்மை வடிவம்
1.வேதம் என்றால் புனிதம் என்று பீலா விடுகிறார்கள். எமனின் சகோதரி , எமனிடம் கேட்கிறாள். எல்லோரும் அவரவர் சகோதிரிகளை புணர்ந்து அனுபவிக்கிறார்கள் நீயும் என்னை புணர்ந்தால் என்ன?
(ஆதாரம்: ராகுல் சாங்கிருத்யாயன் நூல்)
2.அஸ்வ மேதயாகம் என்றால்:
ராணியின் யோனியில் குதிரையின் உறுப்பை நுழைத்து வீரியத்தை விடச் செய்தல்.(குதிரை இவன் களை உதைக்காதோ?)
3.புத்ர காமேஷ்டி யாகம்:
ராணியை பிராமணர்களே புணர்வது
4.அதிதி பூஜை:
மனைவியை விருந்தாளிக்கு படுக்கப் போடுவது
5.இவங்க தின்னாத மாமிசமில்லை, அருந்தாத மது இல்லை.

Sunday, August 19, 2007

திருப்பதி சென்று திரும்பி வந்தால்


திருப்பதி சென்று திரும்பி வந்தால்
திருப்பதி சென்று திரும்பி வந்தால் வாழ்வில் திருப்பம் தோன்றுமடா என்பது கவிஞர் வரி. ஆனால் எனக்குள் மட்டும் ஒரு கேள்வி தான் வந்தது.
ஏழுமலையான் தன் திருமணத்திற்காக குபேரனிடம் கந்து வட்டியில் கடன் வாங்கி விட்டார். அதற்கான வட்டியை செலுத்தத்தான் பக்தர்களின் உதவாக்கரை வேண்டுதல்களையெல்லாம் கேட்டு நிறைவேற்றி வருகிறார் என்பது புராணம்.
கலியுக முடிவில் அசலை தீர்ப்பார் என்றும் புராணம் சொல்கிறது. ஒரு காலத்தில் ச‌ர்ப்லஸ் பட்ஜெட் போட்ட தி.தி.தேவஸ்தானம் பற்றாக்குறை பட்ஜெட் போடும் காலம் தொலைவில் இல்லை.
இது இப்படியே தொடர்ந்தால் பெருமாள் கலியுக முடிவில் குபேரனுக்கு என்னத்தை கொடுப்பாரோ தெரியவில்லை.
திருமலை நிர்வாகத்தின் வீண் விரயங்களை தடுத்து, 50 சதவீதம் வரை குறைத்து, மிச்சத் தொகையை தங்க பிஸ்கட்டுகளாக்கி , மத்திய அரசின் தங்க சேமிப்பு திட்டத்தில் டெப்பாஸிட் செய்ய வேண்டும் என்று 1999 முதல் வற்புறுத்தி வருகிறேன்.
இத‌ற்காக திரும‌லா விஷ‌ன் 1900 என்ற‌ பெய‌ரில் ஒரு திட்ட‌ம் தீட்டி TTD EO விற்கு தொட‌ர்ந்து அனுப்பிவ‌ருகிறேன். திட்ட‌த்தின் ஆங்கில‌ வ‌டிவ‌த்தை http://www.truthteller.sampasite.com/ என்ற‌ வ‌லை த‌ள‌த்தில் பார்க்க‌லாம்

யாரை காதலித்தால் ராஜ சுகம்


உடலுறவு என்பது ஆண் ,பெண் இருவருக்குமே உடலியல் தேவை. இதை மறுக்கும் எவரானாலும் சித்தம் கலங்குவதும்,வன்முறைக்கு திரும்புவதும் உறுதி(காஞ்சி பெரியவாள் போல).

காதல் என்பது தேவையா? என்பதே கேள்வி. பாரதியார் கூட காதலினால் கலவி உண்டாம் என்று கூறியுள்ளார். கலவிக்காகத் தானா காதல்? இல்லை.

காதல் என்பது விட்ட குறை தொட்ட குறையாய் வருவதாகும். கர்ம வாசனை என்று யோக நூல்கள் குறிப்பிடும் கடந்த பிறவியின் ஞாபகங்கள் தொடர்ந்து வந்து காதலில் வீழ்த்துகின்றன. நீங்கள் யாரை அடையவேண்டுமோ அவரை காதலித்து விட்டால் வம்புமில்லை,வழக்குமில்லை. தண்ணீர் பள்ளத்தை சென்றடைவது போல் காதல் கை கூடும். கவிஞர்கள் கூறும் ராஜ சுகம் கிடைத்து விடும்.

யதார்தத்தில் பார்க்கும் போது யார் யாரால் நரகத்தை அனுபவிக்கவேண்டுமோ அவரைத்தான் காதலிக்கிறார்கள். தாங்கள் நரகவேதனை அனுபவிப்பதோடு தங்களை சேர்ந்தவர்களையும்நரகத்தில் தள்ளுகிறார்கள்.

சரி யாரை காதலித்தால் ராஜ சுகம் என்று எப்படி அறிவது?அது ரொம்ப ஸிம்பிள்! உங்கள் இயற்கை தத்துவத்தை சமூகம் கற்பித்த அகந்தை மறைத்து நிற்கிறது. அந்த அகந்தை உங்களை தவறான துருவத்துக்கே இழுக்கிறது. இதை புரிந்து கொண்டால் போதும் உங்கள் காதலர்/காதலியை வெகு எளிதாக தேர்ந்தெடுக்கலாம்.

உங்களுக்கு யாரைப் பார்த்தால் நவத்துவாரங்களும் எரிகிறதோ அவர்களை அடையத்தான் இந்த பிறவியை எடுத்துள்ளீர்கள்.
யாரைக் கண்டதும் சுவர்க வாசம் சாத்தியம் என்று தோன்றுகிறதோ அவர் தான் உங்கள் நரகத்துக்கான நுழை வாயில்

சந்திரனின் சோதரியே!


சந்திரனின் சோதரியே!
எனைச் சற்று ஆதரியேன்.
பாற்கடலில் உதித்தாயாம்(திருமால்)
தன் மார்பில் பதித்தாராம்
வாழ்வில் இழந்தவை ஆயிரம்
பெற்றவை ஆயிரம்
உன்னுறவு வாய்க்கவில்லை
முன்னோர் வாக்கு பொய்க்கவில்லை
கல்வி,செல்வம் கூடவில்லை
வறுமை என்னோடு ஊடவில்லை
செந்தாமரைப் பூவாசம் புரிகின்ற தேவி!
உனை வேண்டாத மாந்தரில்லை மண்ணில்
இன்னும் என்ன வேலை விண்ணில்
நீயும் எமை சேர துடியாய் துடிக்கின்றாய்
அந்தோ அந்தகரே உன் வரவை தடுக்கின்றார்
பாரில் மாதா விரும்பாத மகவுண்டு இம்மண்ணில்
பேரனை விரும்பாத பாட்டி உண்டோ ம(வி)ண்ணில்
நான் கலைமகளின் பிள்ளை
அவளொ நின் பிள்ளையின் கிள்ளை
பாட்டி நீ எனக்கு
பரவசம் இலையோ உனக்கு
பேரன் அருகிருப்பின் வயது கூடுமென்று
தயங்குதல் வேண்டாம் தேவி
அமுதுண்ணும் அமரர்க்கே வயதும் கூடுமோடி
நீ எம் இல்லம் சேருதற்கே ராஜபாட்டை போட்டு வைத்தேன்
இன்றைய சீர்கேட்டை சீராக்க திட்டமிட்டேன்
கலியுகம் என்பதாலோ? எந்தன் கலியாலோ?
ஆயிரம் தடை வந்து
முதுகெலும்பை முறிக்குதம்மா.,
வையத்து நாடுகளில்
போர் விதைக்கும் நாடொன்றால்
நாடெல்லாம் காடாச்சு (ஏழை)
பாடு பெரும் பாடாச்சு
தான் செழிக்க தரணியிலே போர் பலவும் திணிக்குதம்மா.
.நல்லுறவை துணிக்குதம்மா
தன்மானம் தாக்குண்டால்
எவரேனும் கொதித்தெழுவர்
எரியூட்டி ஊதிவிட்டு
கொதிக்குதே கும்பி என்று
எதிர்ப்புக்கு மதச்சாயம்
பூசி மழுப்புகின்றார்
உலகறிந்த ரகசியத்தை
ஊரில் சிலரேனும்தட்டிக்
கேளாக்கால்அழிவுப்பாதை மீளாக்கால்
செல்வத்தின் தேவதையே
நின் மூத்தவள் முடியிழப்பதெப்போ?
மக்கள் வாழ்வெல்லாம் வறண்டேத் தான் கிடக்க
சேனை பெருக்குகின்றார்.வீணை மீட்டுகின்றார்
மக்களாட்சி பெயர் சொல்லி
லட்சங்கள் முதலிட்டு
கோடிகள்ஈட்டுகின்றார்.
குடிநீரும் விலையாச்சு
குடிகள் நிலை இலையாச்சு
குடக்கூலி உசந்தாச்சு
குடித்தனம் கசந்தாச்சு
வேலை கிடைப்பதில்லை
கிடைத்தால்கூலி கிடைப்பதில்லை
சிந்திய குருதியிலே பாதியேனும் வருவதில்லை பணமாக
அம்மா நீ அருள் புரிந்தால்
ராஜ பாட்டையிலே உனை தேரேற்றி அனுப்பிடுவேன்
ஊர் தோறும் , வாசல் தோறும்
வலம் வரச் செய்திடுவேன்
கழிவறையில் உனை புதைக்கும்
புல்லரை நான் புதைப்பேன்
அம்மா நீ கண் பாரு
பாரெலாம் பரவாதோ உன் பெயரன் என் பெயரே
என் பேச்சு விலை போனால்
அம்மா நின் ஆட்சிஅகிலத்தில் பரவிவிடும்

Saturday, August 18, 2007

வாருங்கள் ஒரே பிரச்சினைக்காக போராடலாம்!


மனிதத் தன்மை வாய்ந்த மனிதர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடையில் ஒருங்கிணைப்பு இல்லை. அவரவர் ஒவ்வொரு பிரச்சினைக்காக போராடி வருகிறார்கள். இந்தியாவின் பல்வேறு பிரச்சினைகளும் ஒரே பிரச்சினயின் விளைவுகளே..நாட்டின் ஒரே பிரச்சினை ஏழ்மை தான்:ஒரு த‌னிம‌னித‌னின் வ‌ருவாயைக் கொண்டு அவ‌ன் செழிப்பை க‌ண‌க்கிடுகிறோம். அதே போல் ஒரு நாட்டின் தனி மனித வ‌ருவாயை கொண்டு அத‌ன் செல்வ‌ செழிப்பை க‌ண‌க்கிடுகிறார்க‌ள்.முதலில் தேசீய‌வ‌ருவாய் என்றால் என்ன‌?ஒரு வ‌ருட‌த்தில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் ம‌ற்றும் அளிக்க‌ப்ப‌ட்ட‌ சேவைக‌ளின் ம‌திப்பே தேசீய‌வ‌ருவாய்.த‌னிம‌னித‌ வ‌ருவாய் என்றால் என்ன‌?தேசீய‌ வ‌ருவாயை, ம‌க்க‌ள் தொகையால் வ‌குத்தால் கிடைக்கும் தொகையே த‌னி ம‌னித‌ வ‌ருவாய்.(அதாவ‌து ர‌ஜினி காந்தின் வ‌ருவாயையும், அவ‌ர் க‌ட்‍‍ அவுட்டுக்கு பீர் அபிஷேக‌ம் செய்யும் ர‌சிக‌னின் வ‌ருவாயையும் கூட்டி இர‌ண்டால் வ‌குத்து விடுகிறார்க‌ள். ப‌ச்சையாக‌ சொன்னால் ர‌ஜினி வ‌ருமான‌த்தை‍ அவ‌ன் ர‌சிக‌னுக்கு ப‌ங்கு போடுகிறார்க‌ள். அதாவ‌து வெறும் காகித‌த்தில்.
அதனால் தான் பிரதமரும்,நிதி மந்திரியும் தனிமனித வருவாய் உயர்ந்துவிட்டதாக கூவினாலும் ஏழ்மை ஆண்,பெண்களின் தன் மானத்தை ,மானத்தை எரித்துக் கொண்டே இருக்கிறது.
உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு :
உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு கிடைத்தால் தான் உய‌ர்ந்து வ‌ரும் தேசீய‌ வ‌ருமான‌த்தில் உண்மையான‌ ப‌ங்கு கிடைக்கும். இல்லாவிட்டால் காகித‌ப்ப‌ங்கு தான்.
உற்ப‌த்தி கார‌ணிக‌ள்:
உற்ப‌த்தி கார‌ணிக‌ள் 4. அவை நில‌ம்,கூலி,முத‌லீடு,நிர்வாக‌ம் ஆகிய‌ன‌வாகும். நாட்டில் ஆதிகால‌ம் முத‌ல் நில‌விய‌ சாதி அமைப்பினால் ச‌மூக‌த்தின் மெஜாரிட்டி ம‌க்க‌ள் வாழ்க்கைக்கு ஆதாரமான க‌ல்வி கிடைக்காது கூலிக‌ளாக‌வே வாழ்ந்து வ‌ருகிறார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் நில‌மோ.முத‌லீடோ,நிர்வாக‌த்தில் ப‌ங்கெடுக்கும் வாய்ப்போ த‌குதியோ இல்லை.ப‌ல‌ன்:நில‌த்தை முத‌ல் வைத்த‌வ‌னுக்கு வாட‌கை,முத‌லீடு வைத்த‌வ‌னுக்கு வ‌ட்டி,நிர்வாக‌ம் செய்த‌வ‌னுக்கு லாப‌ம் கிடைக்கும்.
வெறும் உட‌லுழைப்பை முத‌ல் வைத்த‌வ‌னுக்கு என்ன‌ கிடைக்கும்? கூலி. அதிலும் சேமிப்போ,எதிர்கால‌ பாதுகாப்போ,ஸ்கில்லோ,க‌ல்வியோ இல்லாத‌ வ‌னுக்கு என்ன‌த்தை..கூலி கிடைக்கும்? தேசீய‌வ‌ருமான‌த்தில் ப‌ங்கு கிடைக்கும்?

சி.கே.@ சித்தூர் டைகர்




இவ‌ர் நான் வாழும் சித்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆர‌ம்ப‌த்தில் சுயேச்சையாக‌ நின்று ஜெயித்தார். (காங்கிர‌ஸ் சீட் கொடுக்காத‌தால்) பிற‌கு இரண்டு முறைகள் காங்கிர‌ஸ் க‌ட்சி சார்பில் நின்று ஜெயித்தார். முத‌ல் இரண்டு முறைகள் அவ‌ர் காங்கிரஸ் கட்சி சார்பில் நின்ற போது என்.டி.ஆர் ர‌சிக‌ன் என்ற‌ முறையில் அவ‌ருக்கு எதிராக‌த்தான் வேலை செய்தேன்.


மூன்றாம் முறை அவ‌ருக்கு ஆத‌ர‌வாக‌ இல்லாவிட்டாலும் ஆளுங்க‌ட்சியான‌ தெ.தேச‌ம் க‌ட்சிக்கு எதிராக‌ 5000 துனண்டு பிர‌சுர‌ங்க‌ள் வெளியிட்டு வினியோகித்தேன்.


இந்த‌ ம‌ன‌மாற்ற‌த்திற்கு இர‌ண்டு கார‌ண‌ங்க‌ள்.


தெ.தே.க‌ட்சி ஆர‌ம்ப‌த்திலிருந்தே சி.கே.பாபுவை ஒரு வில்ல‌னாக‌ துஷ்பிர‌ச்சார‌ம் செய்து வ‌ந்த‌து. மேலும் நான் NTR ர‌சிக‌னும் கூட‌ .இன்னும் கேட்க‌ வேண்டுமா? அவ‌ர் ஜெயித்த‌தெல்லாம் முறைகேடான‌ வ‌ழிக‌ளில் தான் என்று தொட‌ர்ந்து பேசிவந்தேன்.மூன்றாம் முறை தேர்தல் நடந்த போது தந்திரபாபு(அச்சுப் பிழை இல்லிங்க காரண பெயர்) மாவட்ட போலீஸ் துறை மொத்த‌த்தையும் CK வை பின் தொட‌ர‌ வைத்தார். துப்பாக்கி ஏந்திய‌ காவ‌ல‌ர்க‌ள் என்ன‌, ஷேடோ பார்ட்டி என்னும் போலீஸ் வாக‌ன‌ம் தொட‌ர்வ‌து என்ன‌? பெனுகொண்டா 'டான் ' ப‌ரிடாலா ர‌வி & கோ ராத்த‌ங்கி திட்ட‌ம் தீட்டிய‌து என்ன..பாபுவே தெரு தெருவாய் பிரச்சாரம் செய்ததென்ன?


தேர்த‌லுக்கு முன்பே நான் ஒரு முடிவெடுத்திருந்தேன். இந்த‌ முறை CK ஜெயித்தால் ம‌ட்டும் இவ‌ர் உண்மையிலேயே ம‌க்க‌ள் ஆத‌ர‌வை பெற்ற‌வ‌ராக‌த்தான் இருக்க‌ வேண்டும் ..இவ‌ர் இந்த‌ முறை ஜெயித்து விட்டால் இனி இவ‌ரை விம‌ர்சிப்ப‌து பெருவாரியான‌ வாக்காள‌ர்க‌ளை விம‌ர்சிப்ப‌து போல்தான் என்று முடிவு கட்டிவிட்டேன்.அரசின் ஆயிரம் அடக்குமுறைகளை மீறி அவர் ஜெயித்தார். அவரை விமர்சிப்பதை கை விட்டேன்.

அடுத்த முறை தேர்தல் நெருங்கி வந்தது.


தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் ஒரு இஞ்சினீரிங்க் கல்லூரி மாணவர் ஒருவர் உயிருடன் எரித்து கொல்லப் பட்டார். அவரது தாய் தெ.தே.கட்சி மகளிர் அணியை சேர்ந்தவர். இனி கேட்க வேண்டுமா மொத்த அரசு இயந்திரமும் சி.கே வுக்கு எதிராக தூண்டிவிடப்பட்டன. அவர் கைதானார். கடப்பா மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். அங்கு அவர் செய்தது என்ன தெரியுமா ?


ஷீரடி சாய் பக்தரான சி.கே கடப்பா சிறைக்குள் கட்டப்பட்டு வந்த சாய் மந்திரத்துக்கு கரசேவை செய்து கொண்டிருந்தார். ஒரு வேளை கொலை செய்த ஆசாமியாக இருந்தால் ராம்ஜெத்மலானியையோ,கபில் சிபலையோ பிடித்து வெளியே வரும் வேலையைப் பார்க்க வேண்டுமா சிவனே என்று கோயில் கட்ட கல்லும்,மண்ணும் சுமக்க வேண்டுமா?
இந்த செய்திகள் ஏற்கெனவே அரசாங்கத்தின் பழிவாங்கல்களுக்கு ஆளாகியிருந்த என் மனதை பெரிதும் மாற்றின.


இத்தனைக்கும் நான் செய்த பாவம் ஒன்றுமில்லை. புதிய இந்தியாவை படைக்க ஒரு திட்டம் தீட்டி அதை சந்திரபாபுவுக்கு தொடர்ந்து அனுப்பி பதில் கொடுக்க தபால் செலவுக்காக ரூ.10 மோ அனுப்பி அப்படியும் பதில் வராததால் நுகர்வோர் மன்றத்தில் வழக்குப் போட்டதுதான். உத்தமர் போல் எனக்கு சாதகமாக பதில் கொடுத்து ஊர் வாயை அடைத்து விட்டுத் தான் மாவட்ட அரசு இயந்திரத்துக்கு ரகசிய உத்தரவுகள் பிறப்பித்திருந்தார்.)


எப்படியோ அரசியல் ரீதியாக சி.கே வை ஜெயிக்க முடியாத தெ.தே. தலைவர் சந்திரபாபு கருக்கட்டிக் கொண்டு பழிதீர்த்தார். சி.கே.வுக்கு பெயில் கிடைத்தது. ஆனால் அரசு வக்கீல் செய்த மாய்மாலத்தால் கோர்ட்டு ஒரு விசித்திர உத்தரவை பிறப்பித்தது. அவர் ஊருக்குள் வரக் கூடாதாம்.


சந்திரபாபுவின் தந்திரங்களைப் பற்றி சொல்ல ஒரு தனி வலை தளமே தேவை. அவற்றிற்கு பலியானவர்களுக்குத் தான் அவற்றி வலிமை புரியும். நானாவது வேலை வெட்டியில்லாமல் பாபுவின் அரசியலை விமர்சித்து வருபவன் (வார்டு மெம்பராக ஜெயித்து வருமத்தனை நெட் வொர்க்க் கூட இல்லாதவன்)


ஆனால் சி.கே.பாபு ? அரசியல் களத்தில் இருப்பவர், இதர தெ.தே தலைவர்களைப் போல் பார்ட் டைம் பொலிடீஷியனாக இருந்தாலும் பரவாயில்லை. எத்தனையோ சங்கங்களின் தலைவர்,அவர்கள் பிரச்சினைகளை தன் பிரச்சினையாக தீர்ப்பவர். அவருக்கு எங்கே நேரம்?
அவரது வக்கீலோ சி.கே வின் வழக்கை சாதாரண கொலை வழக்காக நினைத்து செயல்பட்டுக் கொண்டிருந்ததார்.


இந்த நிலையில் அவருக்கு பல யோசனைகளை தெரிவித்து கொரியர் மூலம் கடிதம் அனுப்பினேன். அதை வக்கீல் ரெஃப்யூஸ் செய்துவிட்டார். விடா கண்டனான நான் சாதாரண தபாலில் மீண்டும் அதே விஷயங்களை அனுப்பினேன். அதோடு இப்படி யோசனைகள் தெரிவித்துள்ளதாக சி.கே. வுக்கும் சிறை முகவிரிக்கு கடிதம் எழுதினேன்.


தேர்தல் நெருங்கியது. காங்கிரஸ் கட்சி சி.கே.வுக்கு சீட் கொடுக்கவில்லை. சுயேச்சையாக போட்டியிட்டார். குறைந்த வாக்கு வித்யாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். மானிலத்தில் காங்கிரஸ் ஆட்சி பிடித்தது. சி.கே.வின் அரசியல் குரு ஒய்.எஸ் ஆர் முதல்வரானார். சிலமாதங்களில் நகராட்சி தேர்தல் வந்தது. தெ.தே.களத்தில் நின்றதென்னவோ நிஜம். கோடீஸ்வரரான தெ.தே.எம்.பி பணத்தை கொட்டினார். இந்த நிலையில் அவ‌ருக்கு ஆத‌ர‌வாக‌ இல்லாவிட்டாலும் ஆளுங்க‌ட்சியான‌ தெ.தேச‌ம் க‌ட்சிக்கு எதிராக‌ 5000 துனண்டு பிர‌சுர‌ங்க‌ள் வெளியிட்டு வினியோகித்தேன்.

சந்திரபாபு வந்தார். புலி (சி.கே.வுக்கு சித்தூர் டைகர் என்ற விருது உண்டு)நாட்டில் இருக்கக்கூடாதென்று வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிவிட்டுப் போனார். ஆனாலும் நகராட்சி காங்கிரஸ் வசமாகியது.


சட்டமன்ற தொகுதி கட்சி பொறுப்பாளராக சி.கே.பாபுவின் நேரடி பார்வையில் வேட்பாளர் தேர்வு முதல் சகலமும் நடந்தன.

இந்த பெருவெற்றியை சகிக்க முடியாத தெ.தே.கட்சித் தலைவர்கள் 9/2/2007 அன்று வாடகை கொலையாளிகளைக் கொண்டு துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த கொடூர கொலை முயற்சியில் நகராட்சி ஊழியர் ஒருவர்,கொலையாளிகளில் ஒருவன்,சி.கே.வின் துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் உயிரழந்தனர்.


சி.கே.வை ஒழித்துக் கட்டுவதான எண்ணத்துடன் சித்தூர் தொகுதி,நகராட்சிகளின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு வேட்டு வைத்துவிட்டனர். முதல்வருடன் தனக்குள்ள நல்லுறவை பயன்படுத்தி சி.கே. தொகுதி வளர்ச்சிப் பணிகளில் படைத்திருக்கக் கூடிய சரித்திரத்தை சமாதி ஆக்கிவிட்டனர்.


தன் உயிருக்கு ஆபத்து இருந்தாலும் தொடர்ந்து மக்கள் பணி யாற்றிவரும் சி.கே.வை சித்தூர் டைகர் என்று அவர் ஆதரவாளர்கள் கொண்டாடுவதில் நியாயமில்லாமலில்லை

ரஜினி‍,சுஜாதா,பாலா,ஆ.வி சந்தித்தால்


குறிப்பு: எவரையும் புண்படுத்துவதோ,அவமானப் படுத்துவதோ என் நோக்கமில்லை. தெரிந்த்தோ தெரியாமலோ எல்லோரும் தவறு செய்பவர்களே..நம்மை பொறுத்த வரை சிறு தவறாக இருக்கக் கூடிய ஒன்று அடுத்தவரின் வாழ்வையே கூட சீரழித்து விடலாம் .
"தவறு செய்தவன் திருந்த்தியாகனும்,தப்பு செய்தவன் வருந்த்தியாகனும்"
இது ஒன்றே என் எழுத்தின் நோக்கம்.

ராகவேந்திரா கல்யாண மண்டபம். ரஜினிகாந்த் பக்கத்தில் அன்புமணி இல்லாத தைரியத்தில் தனி அறையில் சிகரட் பிடித்துக் கொண்டிருக்கிறார். மண்டப வாசலில் ஒரு இன்டிகா நிற்கிறது. அதிலிருந்து ஆனந்த விகடன் பதிப்பாளர் சீனிவாசன்,எழுத்து சித்தர் பாலகுமாரன்,அறிவு ஜீவி சுஜாதா இறங்குகிறார்கள். கதர் சட்டை,வேட்டி சந்தனம் குங்குமத்தில்,கழுத்தெல்லாம் மாலையுடன் பாலகுமாரன் பாய்ந்து உள்ளே நுழைகிறார்.

பாலகுமார‌ன்: (உ.வசப்பட்டு) என் சூரியனே..உன்னை பார்த்து எவ்வளவு காலமாச்சு..

ரஜினி: (மனதுக்குள்) ஆமாம்..சினேகமுள்ள சிங்கத்துல கலைஞரை நல்லவராவும், இரண்டாவது சூரியன்ல கெட்டவராவும் சித்தரிச்சிட்டு சித்தூர் முருகேசன் கிட்ட வாங்கி கட்டிகிட்டது போதலியாக்கும்.சந்திரனே,சூரியனேன்னிக்கிட்டு

பாலா: அதிகாலை எழுந்து கைகளை தேய்த்து,கண்களில் ஒற்றி..

சுஜாதா: ஆமாம்..நீங்க ஆய் போன கதையெல்லாம் நாவலோட நிறுத்திக்கங்க .சும்மா போட்டு அறுத்துகிட்டு .என்னடா வயசான காலத்தில அனாமதேயங்கள் கிட்ட எல்லாம் வாங்கி கட்டிக்கிட வேண்டி வந்துருச்சேனு கதிகலங்கி போயி வந்தால்

பாலா: டி.வி.எஸ் ல என்னை மக்கு பார்ப்பான்னு சொன்னது சரிதான் ..இவரை பார் வந்ததும் வராததுமா பாயின்டுக்கு வந்துட்டார்.

ரஜினி: வாங்க மிஸ்ட‌ர். சுஜாதா.! சிவாஜில எல்லாரும் உங்க வசனத்தை பத்தித்தான் பேசறாங்க (மனதில்) அதென்ன சிங்கம் சிங்கிளா வரும்..பன்னிங்க கூட்டமா வருமா ..கடைசில கூட்டமா என் படத்தை பார்க்க வர்ர என் ரசிகர்களை பன்னிங்கன்னிட்டிங்களே...

பாலா: ம்ம்.. நாந்தான் மக்கு பார்ப்பான். சங்கர் வீட்டு கல்யாணத்துல சாம்பார் பக்கெட்டு தூக்கியும் பலனில்லாம போயிருச்சே

சுஜாதா: ரஜினி நான் எதுக்கு வந்தேன்னா.. நானோ டெக்னாலஜில லேட்டஸ்டா..

ரஜினி: எதுக்குங்க சும்மா சுத்தி வளைச்சிக்கிட்டு சித்தூர் முருகேசனை பற்றி பேசத்தானே வந்திருக்கிங்க..(மனதுக்குள்)ஒருகாலத்துல எனக்கு பிரச்சினைன்னா ஆர்.எம்.வீரப்பன் சார் வீட்ல போய் உக்காந்துருவேன்..இப்போ எங்க போறது?

சுஜாதா: அட ஆமாம் ரஜினி..எப்படி கரெக்டா சொல்றிங்க? பாபா படம் மாதிரி எதாச்சும் மந்திரம் கிந்திரம் கிடைச்சுருச்சா?

ரஜினி: ம்ம்..கிழிஞ்சது லம்பாடி லுங்கி.. நேத்து ராத்திரி

பாலா: யம்மாவா..

ரஜினி: பாலா சார் இன்னும் நந்த பாலனாவே இருக்கிங்க.அதனாலதான் சித்தூர் முருகேசன் இந்த கிழி கிழிச்சிருக்காரு போல‌

சுஜாதா: ரஜினி நீங்க விஷயத்தை சொல்லுங்க.

ரஜினி: நேத்து ராத்திரிதான் சித்தூர் முருகேசனோட http://www.kavithai07.blogspot.com/ வெப்சைட்டை பார்த்தேன். உங்க ரெண்டு பேரையும் நல்லாவே கிழிச்சிருக்கார் முருகேசன்..ஏங்க சுஜாதா சிவாஜிக்கு கதை எழுத சொன்னா கதை பண்ணியிருக்கிங்களே! உங்க கதைகளை நீங்களே காப்பியடிச்சிருக்கிங்களாம்..அதென்ன‌து அனிதாவின் காதல்கள், அப்புறம் எண்டமூரி வீரேந்திரனாத் கதைகளை கூட உருவறாப்ல எழுதியிருக்காருஉருவறதுதான் உருவரிங்க அஸ்ஸாமி, ஒரியா , ஈரான் இப்படி உருவியிருக்ககூடாதா?

பாலா: முன்னெல்லாம் மதிய நேரத்து டி.டி படங்களை கூட பார்த்து கணயாழில விமர்சிப்பாரு..இப்ப பாவம் பாசுர விளக்கம் எழுதவே நேரம் போதலை.

ஆ.வி.பதிப்பாளர்; அலோ ரஜினி! நம்ம ப்ரிட்டானிகா கலை களஞ்சியத்துக்கு ஒரு பாராட்டு , அப்புறம் நம்ம ஜூவி பழைய இதழ்களை படிச்சு....

ரஜினி: என்ன எல்லாரும் பழைய ரஜினியா என்னைப் பார்க்கனும்னு பேசி வச்சிக்கிட்டு வந்திருக்கிங்களா?

ஆ.வி: அய்யோ நான் இதுவரை சொன்ன விஷயங்களை கூட கேட்க விடாம பண்ணிட்டாரே இந்த சித்தூர் முரருகேசன்

ரஜினி: அட நீங்களும் குட்டு வாங்கின பார்ட்டி தானா?

ஆ.வி: குட்டு இல்லிங்க கும்மாங்குத்து

ரஜினி: விஷயத்தை சொல்லுங்க..

ஆ.வி: இந்த முருகேசன் இந்தியாவை பணக்கார நாட்டாக்குறதுக்கு ஏதோ திட்டம் போட்டாராம். அதை பத்தி தான் பேசி பதிவு செய்த கேசட்டை ஆ.வி க்கு அனுப்பியிருக்காரு. அது நம்ம ஆபீஸ்ல எப்படியோ மிஸ் ஆகியிருக்கு. ஒரு 6 மாதம் கழிச்சு தன் கேசட்டை திருப்பி அனுப்ப தபால் செலவுக்கு ரூபாய் 10 எம்.ஓ அனுப்பியிருக்காரு. அது எடிட்டர் கைக்கு போயிருக்கு. அவர் உடனே நம்ம வேலூர் நிருபரை சித்தூர் அனுப்பி பேட்டி எடுக்க சொல்லியிருக்காரு

ரஜினி: அப்படி எதுவும் ஆ.வி,ஜூ.வி ல வந்த மாதிரி தெரியலியே

ஆவி: அதையும் ஆபீஸ்ல மிஸ் பண்ணியிருக்காங்க

ரஜினி: கவர்ன்மென்டு ஆபீஸ்ல இருந்து பதில் போடலன்னா மாத்திரம் கிழி கிழின்னு கிழிக்கறிங்களே..

ஆ.வி: விஷயம் என்னன்னா இடம் போதலைங்க..இப்ப மாடர்னா கட்டிலறை,கழிவறை பத்தியெல்லம் தொடர் போடறமில்ல..

ரஜினி: அது சரி அப்ப வாங்கி கட்டிக்கங்க..
பால: ஆமாம் ரஜினி உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள்ள டச்சே ஆகமாட்டிங்களே
இந்த முருகேசன் உங்களுக்கும் எதுனா வேல் விட்டுட்டாரா?

ரஜினி: நீங்கள்ளாம் நீங்க பண்ணின தப்புக்கு வேல் விட்டாரு ..நானு (சுஜாதாவை பார்த்தபடி) யார் யாரோ பண்ணின தப்புக்கு வேல் வாங்கியிருக்கேன். என் வயித்தெரிச்சல எங்க கொட்ட?

சுஜாதா: ஏன் இங்கயே கொட்டுங்களேன் !
ரஜினி: ஆக்சுவலா முருகேசன் என் ரசிகர்

ஆ.வி: முன்னாள் ரசிகர்னு வலைப்பூவில எழுதியிருக்காரே?

ரஜினி:இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் பக்காவா இருங்க.. படைப்புகள் அனுப்பினவனுக்கு அது பத்தின முடிவை தெரிவிக்காதீங்க அவனுக்கு தொடர்ந்து உங்க விளம்பரங்களை அனுப்பி தாலி அறுங்க..ஷிட்!

பாலா: சரி சரி விஷயத்துக்கு வாங்க..எனக்கு வேலையிருக்கு சுவாமி

ரஜினி: யோவ் ..அப்ப எங்களுக்கு வேலை வெட்டி இல்லேங்கறியா?

பாலா: அப்படின்னு நீங்க தப்பா புரிஞ்சுகிட்டா என்ன சொல்லமுடியும் ? என் வினை! விதி!

சுஜா: ரஜினி நீங்க ஆரம்பிங்க..சீக்கிரமா இந்த முருகேசன் விஷயத்துல ஒரு முடிவுக்கு வரணும்..பெர்க்லி-ல ஒரு கருத்தரங்கத்துக்கு ஒத்துக்கிட்டிருக்கேன்

ரஜினி: (மூவரையும் முறைத்து பார்த்தபடி) அது ஒண்ணுமில்லிங்க பாபா படம் ரிலீசாச்சு..ஒரு வாரத்துலயே படம் பப்படம்னு ரிபோர்ட்டு. என்னடா பண்ணலாம்னு யோசிச்சிக் கிட்டு இருந்த நேரம் முருகேசன் ஒரு கடிதம் போட்டிருந்தாரு. பாபா படம் ஓரளவுக்காவது பேர் சொல்லணும்னா இந்த காட்சிகளையெல்லாம் வெட்டிருங்கனு ஒரு லிஸ்டை அனுப்பியிருந்தாரு..நானும் ஓ.கே பண்ணி தியேட்டர்களுக்கு ஒரு சர்க்குலர் அனுப்பினேன்.வெட்டச்சொல்லி. இந்த மேட்டர் தேவி-வீக்லி ல லீக் ஆயிருச்சி. இதை படிச்ச முருகேசன் நம்ம ஜனங்க கூரியர் தபால் வாங்கும்போது போட்டிருந்த போன் நெம்பருக்கு போன் போட்டு நான் என்ன பீஸா கேட்டேன்..நன்றின்னு ஒரு கார்டு போடலாமில்லையா ஜெயலலிதா மாதிரின்னு கேட்டிருக்காரு. நம்ம லதா இருந்துகிட்டு நன்றி சொன்னதா நினைச்சுக்கங்கன்னு சொல்லியிருக்கு இந்த விவரம் எல்லாம் வலைப்பூவில வரப்போவுதுன்னு அறிவிப்பு வச்சிருக்காரு முருகேசன்

ஆ.வி: (கவன்க்குறைவால் சற்று உரக்கவே) அடடா.. இது நல்ல ஸ்கூப்பாச்சே..வாசகர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியே நாலு சில்லறை தேத்திரலாமே

ரஜினி: பார்த்திங்களா .முருகேசன் சொல்றாப்பல புத்தியை காட்டிட்டிங்களே. எங்கே சத்யநாராயணன்..300 பேருக்காக ஒரு படம் பண்றதா அறிவிச்சுர்ரேன்..முருகேசனுக்கும் ஒரு பங்கு..

ஆ.வி: அய்யய்யோ ஏதோ ஆர்வக்கோளாறுல உளறிட்டங்க..கேன்சல் பண்ணுங்க..முருகேசனுக்கு பங்கு கொடுத்து படம் பண்ணிட்டிங்கன்னா அடுத்த படத்துல ஆ.விக்கு பங்கு கொடுக்க வேண்டியதுதான்

சுஜாதா: ஓல்டேன். இந்த முருகேசனோட வாயை மூடறதுக்கு என்னவழின்னு பாருங்க..பேசாம ரஜினி, முருகேசனோட ஆப்பரேஷன் இந்தியா திட்டப்படி கங்கைக்கும் காவேரிக்கும் கால்வாய் வெட்ட ஒரு கோடி ரூபாய் நன்கொடை அறிவிச்சுரலாம்

பாலா: ஆமாம் .பாத்ரூம்ல குழாய் ஒழுகுதுன்னு பெண் கள் அடிச்சிக்கிட்டா கண்டுக்க மாட்டிங்க ..கங்கை காவேரின்னா லட்சம் , கோடின்னுவிங்க . எங்க பெண்கள் மதிக்கப் படலியோ அங்கே ..

ரஜினி: பாலா நிங்க ரொம்ப ஓவரா போறிங்க . பெண்கள் மேடை ஏறி ஆடக்கூடதுன்னு சொன்னவன் நான்..ஆனல் என் மக‌ளே மேடையில ஆடினாங்க . . நான் என்ன குறுக்க விழுந்து தடுத்தேனா

ஆ.வி: இது நல்ல யோசனையா இருக்கே

ரஜினி: அட சும்மா இருங்க சார்..நான் இதுக்கு முன்னாடி அறிவிச்ச ஒரு கொடியை நினைச்சாலயே கதி கலங்குது..போதாதற்கு இதையும் நக்கலடிக்கிறாரு முருகேசன். 10 கோடி அனெம்ப்ளாயிடை வச்சு கால்வாய் வெட்டனும். ஆளுக்கு சிங்கிள் டீ ஸ்பான்ஸர் பண்ணனும்னா கூட 20.5 கோடி வேணும்.. ஒரு கோடியை வச்சு நாக்கு வழிக்கறதான்னு முருகேசன் கேக்கறார்.

சுஜாதா: குடுக்கப் போறிங்களா பாழா? பேசாம 20.5 கோடியே அனவுன்ஸ் பண்ணிருங்க..

ரஜினி: இப்பத்தான் புரியுது. முருகேசன் சொல்றது கரெக்டு. நீங்கள்ளாம் ஒரு க்ரூப். எந்ததுறையா இருந்தாலும் அதுல உங்க‌ளாவா தான் நெம்பர் ஒன்னா இருக்கனும். வேற ஆளு நெம்பெர் ஒன்னா இருந்த அவனுக்கு பொண்ணு குடுத்துருவிங்க எனக்கு கொடுத்த மாதிரி, இல்லை உங்க‌ளாவாளா மாத்திருவிங்க இளையராஜாவை மாத்தின மாதிரி.உங்களோட சேர்ந்துதான் நான் கெட்டேன். என்னை வளர்த்தது சேரி ஜனம். என் கைல லாப் டாப்பை கொடுத்து அவங்களுக்கு அன்னியமாக்கிட்டிங்க,என் கிட்ட கறுப்புப் பணம் எவ்வளவிருக்குன்னு நாடு முழுக்க பேச வச்சிட்டிங்க.. இப்போ முருகேசனுக்கு 20.5 கொடுக்கறதா அறிவிக்க சொல்றிங்க முருகேசன் என்ன இ.வாயனா ? அடுத்த தபால்லயே ஸ்பீடு போஸ்டுக்கு ஸ்டாம்பு அனுப்பி அனுப்புய்யா டி.டி ம்பாரு..போதும்யா உங்க சவகாசம் . எங்கே சத்யநாராயணா ..முருகேசனுக்கு போன் போடுப்பா..என்னை நானே மறந்துட்டேன்..என் பலம் என்னன்னு கேட்டு தெரிஞ்சுக்கலாம்.

Wednesday, August 15, 2007

வாருங்கள் ஒரே பிரச்சினைக்காக போராடலாம்!


வாருங்கள் ஒரே பிரச்சினைக்காக போராடலாம்!
மனிதத் தன்மை வாய்ந்த மனிதர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடையில் ஒருங்கிணைப்பு இல்லை. அவரவர் ஒவ்வொரு பிரச்சினைக்காக போராடி வருகிறார்கள். இந்தியாவின் பல்வேறு பிரச்சினைகளும் ஒரே பிரச்சினயின் விளைவுகளே..
நாட்டின் ஒரே பிரச்சினை ஏழ்மை தான்:
ஒரு த‌னிம‌னித‌னின் வ‌ருவாயைக் கொண்டு அவ‌ன் செழிப்பை க‌ண‌க்கிடுகிறோம். அதே போல் ஒரு நாட்டின் தனி மனித வ‌ருவாயை கொண்டு அத‌ன் செல்வ‌ செழிப்பை க‌ண‌க்கிடுகிறார்க‌ள்.
முதலில் தேசீய‌வ‌ருவாய் என்றால் என்ன‌?
ஒரு வ‌ருட‌த்தில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் ம‌ற்றும் அளிக்க‌ப்ப‌ட்ட‌ சேவைக‌ளின் ம‌திப்பே தேசீய‌வ‌ருவாய்.
த‌னிம‌னித‌ வ‌ருவாய் என்றால் என்ன‌?
தேசீய‌ வ‌ருவாயை, ம‌க்க‌ள் தொகையால் வ‌குத்தால் கிடைக்கும் தொகையே த‌னி ம‌னித‌ வ‌ருவாய்.(அதாவ‌து ர‌ஜினி காந்தின் வ‌ருவாயையும், அவ‌ர் க‌ட்‍‍ அவுட்டுக்கு பீர் அபிஷேக‌ம் செய்யும் ர‌சிக‌னின் வ‌ருவாயையும் கூட்டி இர‌ண்டால் வ‌குத்து விடுகிறார்க‌ள். ப‌ச்சையாக‌ சொன்னால் ர‌ஜினி வ‌ருமான‌த்தை‍ அவ‌ன் ர‌சிக‌னுக்கு ப‌ங்கு போடுகிறார்க‌ள். அதாவ‌து வெறும் காகித‌த்தில்.(தொட‌ரும்)

காசும் கருமமும்


அரசு ஊழியர் வயிற்றில் பிறந்தேன் .அரசு மருத்துவமனையில் பிறந்தேன். அரசு பள்ளி,கல்லூரிகளில் படித்தேன். அன்று அரசு இலவசமாக வழங்கிய குடிநீரில் *குளித்தேன். (அரசுக்கு பணம் ஏது? ஒரு ஏழை இன்று 50 காசு தீப்பெட்டி வாங்கினால் அதில் 10 காசு எக்சைஸ் வரி அரசுக்கு போகிறது.)


இன்று அந்த வினை தீர/அரசுக்குப் பட்ட கடன் தீர்க்க புதிய இந்தியாவை உருவாக்க திட்டம் தீட்டி கடந்த 10 வருடங்களாய் லட்ச கணக்கான ரூபாய்களை செலவழித்து வருகிறேன்.


பணமுதலைகளுக்கு வரி ஏய்ப்புக்கு உதவ சட்ட,கணித புலிகளான ஆடிட்டர்கள் உள்ளனர். பாவம் இந்த ஏழைகளின் நிலைதான் என்ன?


வினை செய்தால் தான் காசு வரும்,அந்த காசுடன் வினையும் வரும். அந்த காசு போனால் வினை போகும். இது என் அனுபவம்.


என் நண்பன் ஒருவன் நான் அறிமுகம் செய்த முதியவரை ஏமாற்றினான். அந்த வயதில் அது என்ன ஏது என்பது தெரியாது. பிறகு அதே நண்பனுக்கு 900 ரூபாய் சம்பளத்துக்கு நான் இந்தி ஆசிரியனாக வேலை செய்ய வேண்டியதாகிவிட்டது.


அதிலும் 300 ரூபாய் குவார்ட்டர்ஸ் வாடகை, 100 ரூபாய் கரண்டு பில் போக ரூ.500 கைக்கு வரும். ஆனால் பாருங்கள் வினையின் வலிமை. அவன் என்னை குடி வைத்த வீடு அவன் அப்பா கட்டியது.அவருக்கு காலில் புண். அங்கு குடி போன சில நாட்களில் எனக்கும் காலில் புண் வந்து விட்டது.


இந்த ரகசியம் தெரியாது பணம்,பணம்,பணம் என்று ஜனம் அலைகிறது. வினை தீர்க்க‌,க‌ட‌ன் தீர்க்க‌ வேண்டி நோய்க்கோ,ரெயிடுக்கோ,த‌ண்ட‌னைக்கோ ஆளாக‌ வேண்டி வ‌ந்தால் ம‌ட்டும் புல‌ம்புகிற‌து.

Tuesday, August 14, 2007

தென்னிந்திய நாஸ்ட்ரோ டாமஸ் பிரம்மங்காரு2008-இல் பிரளயம்?


முன்னுரை:
எதற்குமே முடிவு என்று ஒன்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் போர் தான். நமக்குத் தெரிந்த இந்த உண்மை இறைவனுக்கு தெரியாதா என்ன? அதனால் தான் பிரளயம் என்று ஒன்றை நிர்ணயித்து வைத்துள்ளான்.
பிரளயம் பற்றி எத்தனையோ யூகங்கள் விஞ்ஞானிகளிடையில் உள்ளது. மாறுதலுக்கு ஆன்ம விஞ்ஞானி ஒருவரின் கருத்தையும் இங்கு பார்ப்போம்.
இவர் சொன்னபடி பிரளயம் வருகிறதோ இல்லையோ அதை நிர்ணயிக்குமத்தனை ஞானம் எனக்கு கிடையாது.
இவர் எத்தனையோ நல்ல விஷயங்கள் பற்றி கூறியுள்ளார். அவற்றை பின்பற்றுவோம்.
அப்படியே பிரளயம் வருவதற்கு முன்பே நம் சில்லரை தகராறுகளுக்கு மங்களம் பாடி, போர்களுக்கு, சூடோ புரட்சிகளுக்கு விடை கொடுத்து குறுகிய காலத்திற்காவது ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்வோம் என்ற சிந்தனையை கொடுத்தது இவர் தான். அந்த சிந்தனையின் தொடர்ச்சியே ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம்
பிரம்மஙாரு என்றால் ஆந்திரத்தில் தெரியாதவர்கள் கிடையாது. இவர் கி.பி.1900 முதல் கி.பி 2008 வரை உலகத்தில் நடக்கக் கூடிய சம்பவங்களை பனை ஓலை சுவடிகளில் கால ஞானம் என்றபெயரில் எழுதி வைத்துள்ளார். இன்றைக்கு 489 வருடங்களுக்கு முன்பு பிறந்த பிரம்மங்காரு எழுதிய எதிர்கால சம்பவங்கள் அனைத்தும் யதார்த்ததிலும் நடந்து வருகின்றன.

அந்த காலத்திலேயே பெண்ணடிமை,ஜாதி மத பேதங்கள்,பிராமணர்களின் சாதி செருக்கு, போன்றவற்றிற்கு எதிராய் போராடியவர். ஒரு முகமதியனை சீடனாக ஏற்று " பிரம்மத்துக்கு மிஞ்சிய குருவில்லை ஸித்தய்யாவை (முகமதிய சீடர்) மிஞ்சிய சீடனில்லை என்ற சொலவடைக்கே காரணமானர்.
காலஞானத்தின் சாரம் :

கி.பி.1900-முதல் 2008 க்குள் உலகத்தின் 7-இல் 6 பாகம் அழிந்து, ஒரு பாகம் மட்டுமே மிஞ்சும் என்பது காலஞானத்தின் சாரம் . அவர் தன் கணிப்புகளை தமிழ்/தெலுங்கு வருடங்களின் அடிப்படையில் எழுதியுள்ளதால் 2008-இல் வரக்கூடிய உகாதிக்குள் இது நிகழலாம் என்று தோன்றுகிறது.

என் கருத்து:

வெறும் ஜோதிடத்தின் அடிப்படையிலேயே இது போன்ற கணிப்புகளை கூற முடியும். ஜோதிடத்தில் வெறும் 1 சதவீதம் கூட அறியாத நானே கடக சனியால் சுனாமி ஏற்படும் என்று கணித்து துண்டு பிரசுரம் வெளியிட்டேன். (சுனாமி என்ற வார்த்தை எனக்கு அப்போது தெரியாததால் கடற்கரையில் வாழும் மக்கள் வரலாறு காணாத பாதிப்புக்குள்ளாவர்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்)

ஈதிப்படியிருக்க மாபெரும் யோகியான பிரம்மங்காரு எதிர்கால சம்பவங்களை, மனிதர்களின் பெயர்கள் உட்பட எழுதிவைத்ததில் ஆச்சரியமே கிடையாது.

2007,செப்டம்பர் 5 முதல் செவ்வாய் மிதுனத்தில் ஸ்தம்பிக்கிறார். சிம்ம சனி தன் 10 ஆம் பார்வையாக செவ்வாயை பார்க்கிறார். இந்த நிலை 2008 ஏப்ரல் வரை தொடர்கிறது. கடக சனி கடற்கரையில் பாதிப்பை கொடுத்தார் என்றால், சிம்ம சனி தலைவர்களுக்கு, மலை பிரதேசங்களுக்கு பெரும் பாதிப்பை தரலாம் . மிதுனம் என்பது ஆண்,பெண் உறவை, உடலுறவை காட்டுமிடம் இதனால் செக்ஸ் குற்றங்கள் அதிகரிக்கலாம் . மரணங்கள் தம்பதிகளுக்கே அதிகம் நேரலாம்.
(அதற்குள்ளாகவாவது என் ஆப்பரேஷன் இந்தியா அமலானால் விபச்சாரத்துக்கு சட்டப் பாதுகாப்பு கொடுத்து விடலாம்.)
பாலவின் ரசிகர்களுக்கு:

பாலாவின் ரசிகர்களுக்கு இது ஒரு ஆயுதமாகிவிடப் போகிறது. ஆகா சித்தூர் முருகேசன் இரட்டை வேடம் போடுகிறார். ஒரு பக்கம் புட்டபர்த்தி சாயி பாபா,சங்கராச்சாரிகளை கின்டலடித்த படி, மறுபக்கம் தான் ஒரு சாமியாரை வெளிச்சம் போடுகிறார் என்றும் தம் குழுவில் கூறிக்கொள்ளலாம்.
வாழ்க..வளர்க. எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை தூக்கி எறிந்து விட்டு, சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆளுங்கட்சி டெக்னிக் இது. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.

பிரம்மங்காரு பற்றி நான் கேள்விப் பட்ட விஷயங்களை வைத்தோ, படித்த விஷயங்களை வைத்து மட்டுமே நான் இந்த வலைப் பூவை எழுதவில்லை என்பது வரைக்கும் சொல்லி கச்சேரி மற்றொரு சந்தர்ப்பத்தில் தொடரும் என்று சொல்லி இதனை முடிக்கிறேன்.

எச்சரிக்கை: படு ஜிகாவான ஜோக்





வெங்கடேஷ் (7)பக்கத்து வீட்டு சிறுமியுடன் விளயாடிக்கொண்டிருந்த்தான். இயல்பாகவே இருக்கக் கூடிய அறியும் ஆர்வத்தில் அவளின் உறுப்பை தீண்டிப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்தான். இதை பார்த்த அவன் அம்மாவுக்கு பயங்கர கோபம்..விளங்காதவனே..பொட்டை புள்ளைங்களுக்கு அங்கே பல்லிருக்கும்டா பல்லு பட்டால் விஷம் என்று சொல்லிவிட்டாள்.



வெங்கடேஷ் பெரியவனான். திருமணமானது.முதலிரவில் அவன் தன் மனைவியிடம் சில்லரை விளையாட்டுக்களோடு நிறுத்திக் கொண்டான். இதனால் மன்ம் நொந்த வெங்கடேஷின் மனைவி தன் தாயிடம் புகார் செய்தாள். அவள் கி.ரா கதைகளில் வரும் தந்திரங்களில் கை தேர்ந்தவள். அட காரசாரமா மீன் குழம்பு வச்சு ஊத்தி போடுவயா..என்று யோசனை சொன்னாள். மீன் குழம்பு ரெடியானது. இரவு வெங்கடேஷுக்கு கும்பமும் கொட்டப்பட்டது. கொல்லைப்புறம் காற்றாட கயிற்றுக் கட்டிலும் போடப்பட்டது.


வேலைக்காரி உண்டவர்கள் மென்று உமிழ்ந்த மீன் முள்ளை எல்லாம் தோட்டத்தில் கொட்டியிருந்தாளே அந்த இடத்திலேயே போடப்பட்டது கட்டில். வெங்கடேஷ் பயங்கர ஆவேசத்தில் இருந்தான்.கடிபட்டாலும் சரி என்று 'அந்த ' காரியத்தை செய்தே விட்டான். துரதிர்ஷ்டவசமாக அவன் இன உறுப்பு கயிற்று கட்டிலின் சந்தில் நுழைந்து விட்டது.


கீழே கொட்டப் பட்டிருந்த மீன் முட்கல்ளை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்த பூனை ஒன்று இதென்னடா உயிருள்ள மீனாயிருக்கிறதே என்று அவனுடையதை ஒரு கவ்வு கவ்வி விட்டது. அலறி புடைத்து ஓடியவன் தான்..நாளிதுவரை கிராமத்துக்கு திரும்பவில்லை.

பார்ப்பன சதிக்கு பலி


பார்ப்பன சதிக்கு பலியான சூத்திர படைப்பாளி நான்.


1987-லேயே முதல் சிறுகதை பிரசுரமாகியும் இருட்டில் கிடப்பவன் . 2000-ல் ஆன்மீகம் என்ற மாத இதழில் ஒரு ஜோதிட ஆராய்ச்சியாளனாக கட்டுரை தொடர் ஒன்று தேர்வாகி, பார்ப்பனர் சதியால் 3 அத்யாயங்களுடன் நிறுத்தப்பட்டு விட்டது.


வலைப்பூக்கள் பற்றி அறிந்திருந்தும் தமிழில் தட்டச்ச தெரியாது வந்தும் வராத ஆங்கிலத்தில் பூத்துக்கொண்டிருந்தேன். 'அந்திமழை'யில் நனைந்த பிறகு தமிழில் வெள்ளோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

Monday, August 13, 2007

ஈ.வே.ரா Vs வினாயகர்


ஓம் கம் கணபதே நம !
முற்காலத்தில் ஒரு சீடன் தனக்கு மந்திர உபதேசம் செய்யக்கேட்டு ஒரு குருவிடத்தில் வந்தால்.. அவன் கடந்த பிறவிகளில் எந்த தெய்வத்தை உபாசித்து வந்தான் என்பதை அறிந்து அதே தெய்வத்தின் மூல மந்திரத்தை உபதேசிப்பார். அத்ற்கென்று ஒரு முறை உள்ளது.

பிராமணர்களின் சுயநலம் காரணமாய் மறைக்கப் பட்ட எத்தனையோ விஷயங்களில் இதுவும் ஒன்று. பெரு முயற்சிகளுக்கு பிறகு அந்த முறையை என் நண்பர் ஒருவர் கண்டுபிடித்து வெளியிட்டார். ஆனால் தன் தவறான பழக்க வழக்கங்களால் அதை சரியாக உபயோகித்துக் கொள்ளமுடியாது போய்விட்டது


வேறு விஷயம். நான் அதை எந்த அளவுக்கு உபயோகித்துக் கொண்டேன் என்பதை காலம் தான் நிர்ணயிக்க வேண்டும்.
மேற்படி முறையில் நான் வழிபட வேண்டிய தெய்வம் மகா கணபதி. நான் கணபதியை எந்த அளவு பக்தியுடன் வணங்குகிறேனோ அதே அளவு பக்தியுடன் வினாயகர் சிலைகளை உடைத்த, பகுத்தறிவு பகலவன் ஈ.வே.ரா அவர்களையும் வணங்குகிறேன். குழப்புகிறேனா?


இன்னும் கொஞ்சம் குழப்பிவிட்டு விஷயத்துக்கு வருகிறேன். கணபதி ஊர்வலம் நடத்தி மும்பையிலும், சென்னையிலும் தேவையில்லாத பதட்டத்தை உருவாக்கும் கூட்டத்தைத் தான் நான் நாத்திக கூட்டம் என்பேன்.ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா..மனுஷ்யர்களுக்காக, அவர்களது மூட நம்பிக்கைகளுக்காக வினாயகர் சிலைகளை உடைத்த பெரியார் உண்மையான ஆஸ்திகர். சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று மனுஷ்யர்களுக்கு தொல்லை கொடுக்கும் கூட்டம் தான் நாஸ்திக கூட்டம் என்பது என் கருத்து.


மந்திரம் என்பது உடல். பீஜம் என்பது மந்திரத்தின் உயிர். பீஜம் என்பது எப்படி உருவாகிறது? அதற்கு சக்தி எப்படி உருவாகிறது? அது எப்படி வேலை செய்கிறது ? என்பவற்றையும் ஒளிக்காது இந்த வலைப்பூவில் பிரசுரிக்க காத்திருக்கிறேன்.


ஆனால் ஒரே நிபந்தனை 100 நபர்கள், தம் நண்பர்களான 100 வலைஞர்களின் மெயில் விலாசங்களுடன் என் மெயிலுக்கு தொடர்பு கொள்ளவேண்டும்

கோவி.கண்ணன் ...



சமுதாயத்தில் பிறரைவிட நாம் தாழ்ந்துவிட்டால் யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். உயர்ந்து விட்டாலோ அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியாது. "


உங்கள் அளவுக்கு எழுதமுடியாவிட்டாலும், உங்கள் எழுத்துக்களின் ஆழம் வியக்கவைக்கிறது.


வாருங்கள் நண்பரே வளமான கருத்துக்களை முன்வைத்து அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள் !பாராட்டுக்கள் !

பெரியார் சித்த புருஷர்


வாரியாரைப் பற்றி வாயார புகழ்கிறார்கள். உண்மை தான்.வெறும் புகழ்ச்சியில்லை. இதே வாரியார் அறிஞர் அண்ணா இறைவனை இகழ்ந்தார் அதனால் தொண்டையில் கேன்சர் வந்தது என்று சொல்லிவிட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட கதை தெரியுமா.


அப்படிப் பார்த்தால் எழுத்தாளர் பாலா நித்தியம் புகழ்பாடும் ராம்சுரத்குமாருக்கும் தான் கேன்சர் வந்தது. ஆஸ்திகர்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு அவர்களையும் அறியாது இறைவனுக்கு தாங்களே பி.எஸ் என்ற எண்ணம் வந்து விடுகிறது.


என் குறுகிய அறிவுக்கு எட்டிய வரையில் பாவம்-பரிகாரம் -தண்டனை இதெல்லாம் ஆஸ்திகர்களின் கற்பனை என்றே சொல்வேன். ஒருவேளை இவை நிஜமாகவே இருந்தாலும் அதை பரிசீலிப்பதோ, நிர்ணயிப்பதோ மனித யத்தனத்துக்கு மிஞ்சிய செயல் என்றே கூறலாம்.


தமிழுக்கு வாரியார் செய்ததை விட அண்ணா செய்தது அதிகம். இருவர் என்றால் இருவரையும் பட்டியலிடுவேன். ஒருவர் தான் என்றால் அண்ணாவை தான் பட்டியலிடுவேன்.


நான் ஆஸ்திகன் தான்.ஆனால் பெரியார் ஒரு சித்த புருஷர் என்பேன். ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா என்பது ஆன்றோர் வாக்கு. மனுஷ்யர்களின் நலம் நாடி, ஈஸ்வரனையும் மறுத்த பெரியார் சித்த புருஷர்தான்.

கோ.வி.கண்ணன் அவர்களுக்கு,


தங்கள் கருத்தை படித்து அக,மிக மகிழ்ந்தேன். என்னை, என் எழுத்தைப் பாராட்டிய முதல் ஆள் நீங்கள் தான். (என் ஜோதிட ஞானம் தவிர்த்த எழுத்துக்கு). முதற்கண் அதற்கு நன்றி.


தங்கள் வலைப் பதிவை படித்தேன். சோதிடம் குறித்த தங்கள் குற்றச்சாட்டில் உண்மையில்லாமலில்லை. அதே நேரம் சோதிடத்துறையில் பிரபலமாக உள்ள விஷயங்களை மட்டுமே குறி வைத்து விமர்சித்துள்ளீர்கள். சோதிடம் விஞ்ஞானப் பூர்வமானதே என்பதை நிரூபிக்க ஆயிரம் வாதங்களை என்னால் முன் வைக்க முடியும்.


என்வலைப்பதிவை மேய்ந்த தங்களுக்கு என் லட்சியம் என்ன அதற்கான என் முயற்சிகள் என்ன அதற்காக நான் இழந்தவை என்ன என்பது ஓரளவு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.


தற்சமயத்துக்கு ஆப்பரேஷன் இந்தியா 2000 ஒன்றில் தான் எனக்கு ஆர்வம். அதற்கு ஆதரவு திரட்டத்தான்வலை தள மேய்ச்சல் மைதானத்துக்கு வந்தேன்.யூனி கோடில் தட்டச்ச நான் அறிந்து கொண்டதே..கடந்த 10 தினங்களில் தான்.


எனவே விரிவான் பதிலை தர நான் துடித்தாலும் சிரமமாகவே உள்ளது. நிலா சாரல் டாட் காமில் உள்ளிடப்பட்டிருக்கும் என் ஜோதிட ஆய்வுக்கட்டுரையை ஒருதரம் படித்துப் பாருங்கள். ஜோதிடம் குறித்த என் பார்வைக்கும்/பிற பிரபலங்கள் பார்வைக்கும் உள்ள வேறுபாடுகள் புரியலாம்.
தங்கள் தொடர்புக்கு மீண்டும் நன்றி.

Sunday, August 12, 2007

பாலா சுஜாதா போன்ற சத்ருக்களால் ஜீவனம்




சோதிடத்தில் ஒவ்வொரு லக்னத்துக்கும் ஒவ்வொருவிதமான பிழைப்பு கூறப்பட்டுள்ளது ஆனல் எனக்கு மட்டும் சத்ருக்களால் ஜீவனம் என்று கூறப்பட்டுள்ளது. இது உண்மை தான் போலும். நண்பர்களுக்கு நான் செய்ய வேண்டியது எவ்வளவோ இருந்தாலும் சத்ருக்களை அதிலும் சமூக சத்ருக்களை விட்டு வைப்பதாயில்லை.


பாசிடிவ் திங்கிங்க் பற்றி நான் அறியாதவனில்லை. ஆனால் அல்ஜீப்ராவை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் சத்ருக்களை ஒழித்துக் கட்டினால் (கருத்து ரீதியில்) நண்பர்களுக்கு நன்மை ஆட்டோமேடிக்காக நடந்து விடும் என்பது என் அனுபவம்.

நான் போட்ட கடிதங்களுக்கு ( எது விஷயமாக என்பதை இதே வலைப்பூவில் அறியலாம்) பதில் போடாத எங்கள் முதல்வருக்கு தபால் செலவுக்கு பத்து ரூபாய் அனுப்பி, அதன் பிறகும் பதில் வராத காரணத்தால் மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் வழக்குப் போட்டேன். தினசரிகள் மூலம் இந்த செய்தியை அறிந்த முதல்வர் அலுவலகம் உடனடியாக பதில் போட்டது. உங்கள் யோசனைகளை உரிய முறையில் உபயோகித்துக்கொள்கிறோம் என்றது.


அப்போதும் ஆளுங்கட்சியை சேர்ந்த நண்பர்கள் அடுத்தவனை ஏன் குறை சொல்றே..அவன் செய்யறது சரியில்லைன்னா நீ சரியா செய்து காட்டு என்றார்கள். இதே பேச்சைத்தான் பாலகுமாரனின் ரசிகர்களும் சொல்கிறார்கள்.


அய்யா..எனக்கு பாலா,சுஜாதா அத்தனை எழுத்துத் திறமை இல்லை. நான் எப்படி நல்ல நாவல் எழுதிக் காட்ட முடியும். அதற்காக அவர்களின் எழுத்துக்களில் உள்ள விஷங்களை எடுத்துக்காட்டக் கூடாதா என்ன?
மேலும் ஒரு குற்றச்சாட்டு:
அவர்களுக்கு உண்மையிலேயே தம் எழுத்துக்கள் மீது காப்பி ரைட் உள்ளதா? இந்த சந்தேகம் சுஜாதாவின் கமிஷ்னருக்கு ஒரு கடிதம், பாலாவின் பலாமரம் நாவல்களை ஒரே நாளில் படித்தபோது ஏற்பட்டது.

இரண்டு நாவலிலும் உள்ள பொதுவான அம்சங்கள்:
ஒரு காவல் துறை அதிகாரி. அவர் கடமை வீரர். திருமண வாழ்வில் சிக்கல். அவர் மீது அனுதாபம் காட்டும் மற்றொரு பெண்..
ஒரே ஆங்கில நாவலிலிருந்து உருவப்பட்டதா?
இதை அவர்கள்தான் கூற வேண்டும்.
பாலாவின் கதை தெலுங்கு சினிமாக்களில்:
பாலா, தாத்தாவே பேரனை கிட்னாப் செய்வது போல் ஒரு நாவல் எழுதியுள்ளார். இதே கதை முதலில் தாசரி நடிக்க வெளியானது. பின்பு நாகார்ஜுனா ,கிருஷ்ணா நடிக்க வெளியானது.
பெயர் போட்டு நாவல் வெளியிட்டாலே வெளியிட்டவரின் வமிசத்தை சபிக்கும் பாலா பெயர் கூட போடாது தன் கதையை படம் பிடித்தவர்களை எப்படி விட்டார்.


சுஜாத்தாவின் கதை தெலுங்கில்:
இதே போல் சுஜாதாவின் நாவல்களுக்கும்,எண்டமூரி நாவல்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை உள்ளது.அவர் பணம்-பணம்-பணம் எழுதினால் இவர் அனிதாவின் காதல்கள்,அவர் ராட்சஷன் எழுதினால் இவர் செப்டம்பர் பலி. என்னடா இது தமிழ் இலக்கியத்துக்கு வந்த சோதனை?

Saturday, August 11, 2007

என்னைப்பற்றி அறிய

என்னைப்பற்றி அறிய தமிழ் வலையுலகம் காத்திருக்கிறது என்று கூறமாட்டேன். ஆனாலும் சமீபத்தில் பாலகுமாரனின் இரட்டை வேடத்தை ஆர்குட்டில் வெளிப்படுத்திவிட்டு என்னைப்பற்றி யாருக்கும் தெரியாத நிலையில் என்னைப்பற்றி நானே சொல்லிக்கொள்ள வேண்டி வந்துவிட்டது. அதனால் தான் முதலில் நான் யார் என்பதை சொல்லிவைக்க முடிவு செய்துவிட்டேன். இந்த சுய அறிமுகத்தை ஓஷோவின் கருத்தோடு ஆரம்பிக்கிறேன்.

"சமுதாயத்தில் பிறரைவிட நாம் தாழ்ந்துவிட்டால் யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். உயர்ந்து விட்டாலோ அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியாது. " (இதே வாதத்தை என்னால் விமர்சிக்கப் படவிருக்கும் பிரபலங்களும் முன் வைக்கலாம் . அது அவர்கள் சவுகரியம்.)

பொருளாதார அளவிலான உயர்வுக்கே இதுதான் நிலை. அறிவு,ஆக்கம்,ஆய்வு,ஆன்மீகம்,இப்படி சகல துறைகளிலும் உயர்ந்துவிட்டால் உங்களுக்கும் உலகத்துக்கும் இடையில் பெரிய்ய.......இடைவெளி ஏற்பட்டுவிடும். இது உறுதி. என் அனுபவம் கூட..

என் இலக்கிய உலக பிரவேசம் 1987 ல் என் 20 ஆவது வயதில்தான் ஆரம்பித்தது. முதல் சிறுகதை அந்த நாளில் பெத்த பெயர் கொண்டிருந்த கே.பாக்யராஜ் அவர்களின் பாக்யா இதழில் பிரசுரமானது.(முளைச்சு மூணு இலை விடலை) எந்த காலத்திலும் தேவைக்கு அதிகமாக உழைத்து (ஓவர்) நஷ்டப்பட்டிருக்கிறேனே தவிர சோம்பலுக்கு என் விலாசம் தெரியாது.

(நிறைய பேருக்கும் தெரிவதில்லை அடிக்கடி வீடு மாற்றிவிடுவதால்) 1990 வரையில் பிரசுரமான கதைகளின் எண்ணிக்கை 5 தான். பிரசுரித்த பத்திரிக்கைகள்: பாக்யா,கல்கி,வாசுகி,உதயம்,கவிதாசரண். 1991-ல் என் எதிரிகளின் தவத்துக்கு மெச்சி இறைவன் அவர்களுக்கு கொடுத்த வரமாய் என் மனைவி என் வாழ்வில் பிரவேசித்தாள். அது எனக்கு சாபம் என்று அவர்கள் மயங்க , சதிகாரனான(மாகிர்-இசுலாமிய 99 போற்றிகளில் ஒன்று) இறைவன் அதையே எனக்கும் என் தாய் நாட்டுக்கும் ஒரு வரமாக்கி விட்டான்.

எனக்கு திருமணமான பிறகுதான் பத்திரிக்கைகள்,இலக்கியங்கள் காட்டும் உலகமும்,பெண்ணும் யதார்த்தத்தில் இல்லவே இல்லை என்ற உண்மையை புரிந்து கொண்டேன். பாலகுமாரன் தன் கதைகளில் வீடு முக்கியம்,மனைவி முக்கியம் என்று புலம்பும்போதெல்லாம் எனக்கு அல்ப சங்கியைக்காக இறைவன் படைத்த பாகங்கள் எல்லாம் எரிய இதுதான் காரணம்.

இத்தனைக் காலம் நான் இருட்டில் இருக்க என் ஏழ்மையை காரணமாக சொல்லவே முடியாது. லக்சரி என் வாழ்வில் கிடையாது. ஒட்டகத்தைப் போல் ,பாலைவன தாவரத்தைப் போல் கிடைத்த போது புசித்து, கிடைக்கதபோது பசித்து வாழ்ந்தேன்.

என் குரள் வளையை நெறித்த கீழ்காணும் பிரமுகர்களை விட ஆனந்தமாகவே வாழ்ந்தேன். என்னிடத்தில் இருந்த விலை உயர்ந்த ஒரே பொருள் நான் தான் என்பதை இந்த உலகத்தினரை விட முன்பாகவே உணர்ந்து கொண்டேன். என்னை ப்ரமோட் செய்து கொள்ள கிடைத்த சின்னவாய்ப்ப்பையும் நான் விட்டதில்லை. அதற்கு என் ஏழ்மை தடையாக இருக்க அனுமத்ததுமில்லை.


என் இருண்ட காலத்துக்கு காரணமான பிரமுகர்கள்+அவர்களுடனான என் அனுபவங்கள் வருமாறு:

தன் ரசனையை வளர்த்துக் கொள்ளாமலே இருந்து என் பிற்கால கதைகளை பிரசுரத்துக்கு தேர்வு செய்யாத கே.பாக்யராஜ்,

என் கதைகளை பற்றிய முடிவுகளை அறிவிக்க தபால் செலவுக்கு அனுப்பிய ரூ.10 ஐ பெற்றுக்கொண்டும் முடிவு சொல்லாத ஆனந்த விகடன் ஆசிரியர்.

தேர்வாகி பிரசுரமாகிக் கொண்டிருந்த எனது ஜோதிட ஆய்வு கட்டுரை தொடரை பாதியில் நிறுத்திய ஆன்மீகம் மாத இதழின் ஆசிரியர்,

என் படைப்புகளை சுவற்றிலடித்த பந்தாக திருப்பியனுப்பிய கல்கி ஆசிரியர் இப்படி எத்தனையோ பேர்,எத்தனையோ துரோகங்கள்..

அவர்களின் பெயர்கள் மட்டும் இங்கே...

ப்ரைம் பாயின்ட் சீனிவாசன்,எண்டமூரி வீரேந்திர நாத், ரஜினி காந்த், அவர் மனைவி லதா ரஜினிகாந்த்,ஆர்னிகா நாசர்,வாணியம்பாடி டாக்டர்(?) அக்பர் கௌசர்,எங்கள் முன்னாள் முதல்வர் சந்திரபாபு, இன்னாள் முதல்வர் , உங்கள் 'ஜெ' ,கலைஞர்,நக்கீரன் ஆசிரியர்,பா.ம.க. ராமதாசு,வாழைப்பாடி ,லோக் சபா சபாநாயகர்,திருமலை திருப்பதி தேவத்தானத்தார்,மதுரை மீனாட்சி கோவில் நிர்வாக அலுவலர், சென்னை வானொலி நிலையம்,
திருப்பதி எப்.எம்,கலியுக நாரதா,
சைக்காலஜி டுடே ஆசிரியர்கள், நடிகர் கிருஷ்ணா, ஜனாதிபதிகள்,
தலைமை நீதிபதிகள்,மானில முதல்வர்கள்,கவர்னர்கள்,
பல நாட்டு பிரதமர்கள்,ஜனாதிபதிகள், என்.டி.ஆர் மகன் அரிகிருஷ்ணா,
அவர் மகன் சின்ன என்.டி,ஆர்,லோக்கல் சாக்லெட்டு கம்பெனி,
மணிமேகலை பிரசுரம்,லிப்கோ பதிப்பகம்,
ராஜமன்ட்ரி கொல்லப்பூடி வீராசாமி அன்ட் சன்,
வேதவியாசர் (புராண பார்ட்டி இல்லிங்கோவ்!)
எழுத்தாளர் ராஜேஷ் குமார்,
இப்படி எத்தனை எத்தனை பிரபலங்கள்..எத்தனை எத்தனை துரோகங்கள்..மொத்தத்தையும் இங்கே கொட்டப் போகிறேன்..


ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.

Thursday, August 9, 2007

சனி பிடிச்சா நல்லதுங்கோ !

*சனி பிரதிகூலமாக சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறான்.நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள். மனிதன் சனி அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர்,காற்று,உணவு உட்கொள்ளுதல்) ,எலிமினேஷனில் (வியர்த்தல்,மல,ஜலம் கழித்தல்,கரிய மில வாயுவை வெளிவிடுதல்)தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால் தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய்.

* 19 வருடங்கள் நடைபெறக்கூடிய சனி தசை வரும்போது அதன் முதல் பாதி ஒரு விதமாகவும் மறுபாதி வேறு விதமாகவும் பலன் தரும். சனி குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி பெரிய அளவில் நன்மை செய்யாது. ஒரு வேளை சனி குறிப்பிட்ட ஜாதகத்துக்கு பாவியாகவோ,மாரகனாகவோ இருந்தால் முதல் பாதியில் நன்மையை தந்து பின் பாதியில் தீமையை தருவான்.
கோசாரத்தில் ஏழரை சனி நடந்து வரும் போதும் இதே விதியை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் (ஒவ்வொரு இரண்டரை வருடத்துக்கும்) முதல் பாதி கெடு பலனை தந்தால் மறுபாதி அந்த அளவுக்கு கெடுபலன் களை தராது.* சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.

*கேது போல் கெடுப்பவனில்லை என்பது ஜோதிட பொன்மொழி