Monday, August 13, 2007

பெரியார் சித்த புருஷர்


வாரியாரைப் பற்றி வாயார புகழ்கிறார்கள். உண்மை தான்.வெறும் புகழ்ச்சியில்லை. இதே வாரியார் அறிஞர் அண்ணா இறைவனை இகழ்ந்தார் அதனால் தொண்டையில் கேன்சர் வந்தது என்று சொல்லிவிட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட கதை தெரியுமா.


அப்படிப் பார்த்தால் எழுத்தாளர் பாலா நித்தியம் புகழ்பாடும் ராம்சுரத்குமாருக்கும் தான் கேன்சர் வந்தது. ஆஸ்திகர்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு அவர்களையும் அறியாது இறைவனுக்கு தாங்களே பி.எஸ் என்ற எண்ணம் வந்து விடுகிறது.


என் குறுகிய அறிவுக்கு எட்டிய வரையில் பாவம்-பரிகாரம் -தண்டனை இதெல்லாம் ஆஸ்திகர்களின் கற்பனை என்றே சொல்வேன். ஒருவேளை இவை நிஜமாகவே இருந்தாலும் அதை பரிசீலிப்பதோ, நிர்ணயிப்பதோ மனித யத்தனத்துக்கு மிஞ்சிய செயல் என்றே கூறலாம்.


தமிழுக்கு வாரியார் செய்ததை விட அண்ணா செய்தது அதிகம். இருவர் என்றால் இருவரையும் பட்டியலிடுவேன். ஒருவர் தான் என்றால் அண்ணாவை தான் பட்டியலிடுவேன்.


நான் ஆஸ்திகன் தான்.ஆனால் பெரியார் ஒரு சித்த புருஷர் என்பேன். ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா என்பது ஆன்றோர் வாக்கு. மனுஷ்யர்களின் நலம் நாடி, ஈஸ்வரனையும் மறுத்த பெரியார் சித்த புருஷர்தான்.