Saturday, August 18, 2007

வாருங்கள் ஒரே பிரச்சினைக்காக போராடலாம்!


மனிதத் தன்மை வாய்ந்த மனிதர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடையில் ஒருங்கிணைப்பு இல்லை. அவரவர் ஒவ்வொரு பிரச்சினைக்காக போராடி வருகிறார்கள். இந்தியாவின் பல்வேறு பிரச்சினைகளும் ஒரே பிரச்சினயின் விளைவுகளே..நாட்டின் ஒரே பிரச்சினை ஏழ்மை தான்:ஒரு த‌னிம‌னித‌னின் வ‌ருவாயைக் கொண்டு அவ‌ன் செழிப்பை க‌ண‌க்கிடுகிறோம். அதே போல் ஒரு நாட்டின் தனி மனித வ‌ருவாயை கொண்டு அத‌ன் செல்வ‌ செழிப்பை க‌ண‌க்கிடுகிறார்க‌ள்.முதலில் தேசீய‌வ‌ருவாய் என்றால் என்ன‌?ஒரு வ‌ருட‌த்தில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் ம‌ற்றும் அளிக்க‌ப்ப‌ட்ட‌ சேவைக‌ளின் ம‌திப்பே தேசீய‌வ‌ருவாய்.த‌னிம‌னித‌ வ‌ருவாய் என்றால் என்ன‌?தேசீய‌ வ‌ருவாயை, ம‌க்க‌ள் தொகையால் வ‌குத்தால் கிடைக்கும் தொகையே த‌னி ம‌னித‌ வ‌ருவாய்.(அதாவ‌து ர‌ஜினி காந்தின் வ‌ருவாயையும், அவ‌ர் க‌ட்‍‍ அவுட்டுக்கு பீர் அபிஷேக‌ம் செய்யும் ர‌சிக‌னின் வ‌ருவாயையும் கூட்டி இர‌ண்டால் வ‌குத்து விடுகிறார்க‌ள். ப‌ச்சையாக‌ சொன்னால் ர‌ஜினி வ‌ருமான‌த்தை‍ அவ‌ன் ர‌சிக‌னுக்கு ப‌ங்கு போடுகிறார்க‌ள். அதாவ‌து வெறும் காகித‌த்தில்.
அதனால் தான் பிரதமரும்,நிதி மந்திரியும் தனிமனித வருவாய் உயர்ந்துவிட்டதாக கூவினாலும் ஏழ்மை ஆண்,பெண்களின் தன் மானத்தை ,மானத்தை எரித்துக் கொண்டே இருக்கிறது.
உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு :
உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு கிடைத்தால் தான் உய‌ர்ந்து வ‌ரும் தேசீய‌ வ‌ருமான‌த்தில் உண்மையான‌ ப‌ங்கு கிடைக்கும். இல்லாவிட்டால் காகித‌ப்ப‌ங்கு தான்.
உற்ப‌த்தி கார‌ணிக‌ள்:
உற்ப‌த்தி கார‌ணிக‌ள் 4. அவை நில‌ம்,கூலி,முத‌லீடு,நிர்வாக‌ம் ஆகிய‌ன‌வாகும். நாட்டில் ஆதிகால‌ம் முத‌ல் நில‌விய‌ சாதி அமைப்பினால் ச‌மூக‌த்தின் மெஜாரிட்டி ம‌க்க‌ள் வாழ்க்கைக்கு ஆதாரமான க‌ல்வி கிடைக்காது கூலிக‌ளாக‌வே வாழ்ந்து வ‌ருகிறார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் நில‌மோ.முத‌லீடோ,நிர்வாக‌த்தில் ப‌ங்கெடுக்கும் வாய்ப்போ த‌குதியோ இல்லை.ப‌ல‌ன்:நில‌த்தை முத‌ல் வைத்த‌வ‌னுக்கு வாட‌கை,முத‌லீடு வைத்த‌வ‌னுக்கு வ‌ட்டி,நிர்வாக‌ம் செய்த‌வ‌னுக்கு லாப‌ம் கிடைக்கும்.
வெறும் உட‌லுழைப்பை முத‌ல் வைத்த‌வ‌னுக்கு என்ன‌ கிடைக்கும்? கூலி. அதிலும் சேமிப்போ,எதிர்கால‌ பாதுகாப்போ,ஸ்கில்லோ,க‌ல்வியோ இல்லாத‌ வ‌னுக்கு என்ன‌த்தை..கூலி கிடைக்கும்? தேசீய‌வ‌ருமான‌த்தில் ப‌ங்கு கிடைக்கும்?