*சனி பிரதிகூலமாக சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறான்.நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள். மனிதன் சனி அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர்,காற்று,உணவு உட்கொள்ளுதல்) ,எலிமினேஷனில் (வியர்த்தல்,மல,ஜலம் கழித்தல்,கரிய மில வாயுவை வெளிவிடுதல்)தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால் தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய்.
* 19 வருடங்கள் நடைபெறக்கூடிய சனி தசை வரும்போது அதன் முதல் பாதி ஒரு விதமாகவும் மறுபாதி வேறு விதமாகவும் பலன் தரும். சனி குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி பெரிய அளவில் நன்மை செய்யாது. ஒரு வேளை சனி குறிப்பிட்ட ஜாதகத்துக்கு பாவியாகவோ,மாரகனாகவோ இருந்தால் முதல் பாதியில் நன்மையை தந்து பின் பாதியில் தீமையை தருவான்.
கோசாரத்தில் ஏழரை சனி நடந்து வரும் போதும் இதே விதியை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் (ஒவ்வொரு இரண்டரை வருடத்துக்கும்) முதல் பாதி கெடு பலனை தந்தால் மறுபாதி அந்த அளவுக்கு கெடுபலன் களை தராது.* சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.
*கேது போல் கெடுப்பவனில்லை என்பது ஜோதிட பொன்மொழி