Saturday, August 25, 2007

கவிழ்ந்தது ரயில்

1.கவிழ்ந்தது ரயில் கை கொட்டி சிரிக்கும் குழந்தை
2.நாளை அது தன்னை தின்னப் போவதை அறியாது மண் தின்னும் பாலகன்
3.கலைவாணியின் கைகளில் கிட்டார் மாறவில்லை கவிஞர்கள்
4.அமுதாய் பொங்கும் கவிதை விஷ‌மாய் பெருகும் இன்டர்னெட் கட்டணம்
5.எங்கும் பசுமை பள்ளி மதில் சுவரில் மரம்
6.கட்ட‌ணக் கழிப்பறை முன் காத்திருக்கையில் சட்..சட்டையின் மேல் காக்கை எச்சம்
7.கூடு தேடி பறக்கும் பறவைகள்கடைகள் மூடப்பட காத்திருக்கும் மனிதர்கள்
8.செத்துவிழுந்தது ஒற்றைக் காகம்முட்டி மோதும் காக்கைக் கூட்டம்
ரோட்டோரம் அனாதைப் பிணம்
9.வாய்.. சில நேரம் பல்லிடை சிக்கிய உணவுத் துகளாலும்
பல நேரம் பயனற்ற சொல்லாலும் நாற்றமுறும் அங்கம்.
10. பிரசுரமும் பிரசவம் போலதான்தகுதியுள்ளவைதானா பிரசவிக்கப் படுகின்றன‌
11.கறைகறை படிந்த கேர் ப்ரீபோனமாதம் ஜனத்தொகை கட்டுப் பட்டதைகூறுகிறதுகறைபடிந்த நிரோத்கடந்த இரவில் ஜனத்தொகை கட்டுப் பட்டதைகூறுகிறதுஅச்சுக்கறை படிந்த காகிதம் ?