Sunday, August 12, 2007

பாலா சுஜாதா போன்ற சத்ருக்களால் ஜீவனம்




சோதிடத்தில் ஒவ்வொரு லக்னத்துக்கும் ஒவ்வொருவிதமான பிழைப்பு கூறப்பட்டுள்ளது ஆனல் எனக்கு மட்டும் சத்ருக்களால் ஜீவனம் என்று கூறப்பட்டுள்ளது. இது உண்மை தான் போலும். நண்பர்களுக்கு நான் செய்ய வேண்டியது எவ்வளவோ இருந்தாலும் சத்ருக்களை அதிலும் சமூக சத்ருக்களை விட்டு வைப்பதாயில்லை.


பாசிடிவ் திங்கிங்க் பற்றி நான் அறியாதவனில்லை. ஆனால் அல்ஜீப்ராவை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் சத்ருக்களை ஒழித்துக் கட்டினால் (கருத்து ரீதியில்) நண்பர்களுக்கு நன்மை ஆட்டோமேடிக்காக நடந்து விடும் என்பது என் அனுபவம்.

நான் போட்ட கடிதங்களுக்கு ( எது விஷயமாக என்பதை இதே வலைப்பூவில் அறியலாம்) பதில் போடாத எங்கள் முதல்வருக்கு தபால் செலவுக்கு பத்து ரூபாய் அனுப்பி, அதன் பிறகும் பதில் வராத காரணத்தால் மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் வழக்குப் போட்டேன். தினசரிகள் மூலம் இந்த செய்தியை அறிந்த முதல்வர் அலுவலகம் உடனடியாக பதில் போட்டது. உங்கள் யோசனைகளை உரிய முறையில் உபயோகித்துக்கொள்கிறோம் என்றது.


அப்போதும் ஆளுங்கட்சியை சேர்ந்த நண்பர்கள் அடுத்தவனை ஏன் குறை சொல்றே..அவன் செய்யறது சரியில்லைன்னா நீ சரியா செய்து காட்டு என்றார்கள். இதே பேச்சைத்தான் பாலகுமாரனின் ரசிகர்களும் சொல்கிறார்கள்.


அய்யா..எனக்கு பாலா,சுஜாதா அத்தனை எழுத்துத் திறமை இல்லை. நான் எப்படி நல்ல நாவல் எழுதிக் காட்ட முடியும். அதற்காக அவர்களின் எழுத்துக்களில் உள்ள விஷங்களை எடுத்துக்காட்டக் கூடாதா என்ன?
மேலும் ஒரு குற்றச்சாட்டு:
அவர்களுக்கு உண்மையிலேயே தம் எழுத்துக்கள் மீது காப்பி ரைட் உள்ளதா? இந்த சந்தேகம் சுஜாதாவின் கமிஷ்னருக்கு ஒரு கடிதம், பாலாவின் பலாமரம் நாவல்களை ஒரே நாளில் படித்தபோது ஏற்பட்டது.

இரண்டு நாவலிலும் உள்ள பொதுவான அம்சங்கள்:
ஒரு காவல் துறை அதிகாரி. அவர் கடமை வீரர். திருமண வாழ்வில் சிக்கல். அவர் மீது அனுதாபம் காட்டும் மற்றொரு பெண்..
ஒரே ஆங்கில நாவலிலிருந்து உருவப்பட்டதா?
இதை அவர்கள்தான் கூற வேண்டும்.
பாலாவின் கதை தெலுங்கு சினிமாக்களில்:
பாலா, தாத்தாவே பேரனை கிட்னாப் செய்வது போல் ஒரு நாவல் எழுதியுள்ளார். இதே கதை முதலில் தாசரி நடிக்க வெளியானது. பின்பு நாகார்ஜுனா ,கிருஷ்ணா நடிக்க வெளியானது.
பெயர் போட்டு நாவல் வெளியிட்டாலே வெளியிட்டவரின் வமிசத்தை சபிக்கும் பாலா பெயர் கூட போடாது தன் கதையை படம் பிடித்தவர்களை எப்படி விட்டார்.


சுஜாத்தாவின் கதை தெலுங்கில்:
இதே போல் சுஜாதாவின் நாவல்களுக்கும்,எண்டமூரி நாவல்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை உள்ளது.அவர் பணம்-பணம்-பணம் எழுதினால் இவர் அனிதாவின் காதல்கள்,அவர் ராட்சஷன் எழுதினால் இவர் செப்டம்பர் பலி. என்னடா இது தமிழ் இலக்கியத்துக்கு வந்த சோதனை?