Monday, August 13, 2007

ஈ.வே.ரா Vs வினாயகர்


ஓம் கம் கணபதே நம !
முற்காலத்தில் ஒரு சீடன் தனக்கு மந்திர உபதேசம் செய்யக்கேட்டு ஒரு குருவிடத்தில் வந்தால்.. அவன் கடந்த பிறவிகளில் எந்த தெய்வத்தை உபாசித்து வந்தான் என்பதை அறிந்து அதே தெய்வத்தின் மூல மந்திரத்தை உபதேசிப்பார். அத்ற்கென்று ஒரு முறை உள்ளது.

பிராமணர்களின் சுயநலம் காரணமாய் மறைக்கப் பட்ட எத்தனையோ விஷயங்களில் இதுவும் ஒன்று. பெரு முயற்சிகளுக்கு பிறகு அந்த முறையை என் நண்பர் ஒருவர் கண்டுபிடித்து வெளியிட்டார். ஆனால் தன் தவறான பழக்க வழக்கங்களால் அதை சரியாக உபயோகித்துக் கொள்ளமுடியாது போய்விட்டது


வேறு விஷயம். நான் அதை எந்த அளவுக்கு உபயோகித்துக் கொண்டேன் என்பதை காலம் தான் நிர்ணயிக்க வேண்டும்.
மேற்படி முறையில் நான் வழிபட வேண்டிய தெய்வம் மகா கணபதி. நான் கணபதியை எந்த அளவு பக்தியுடன் வணங்குகிறேனோ அதே அளவு பக்தியுடன் வினாயகர் சிலைகளை உடைத்த, பகுத்தறிவு பகலவன் ஈ.வே.ரா அவர்களையும் வணங்குகிறேன். குழப்புகிறேனா?


இன்னும் கொஞ்சம் குழப்பிவிட்டு விஷயத்துக்கு வருகிறேன். கணபதி ஊர்வலம் நடத்தி மும்பையிலும், சென்னையிலும் தேவையில்லாத பதட்டத்தை உருவாக்கும் கூட்டத்தைத் தான் நான் நாத்திக கூட்டம் என்பேன்.ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா..மனுஷ்யர்களுக்காக, அவர்களது மூட நம்பிக்கைகளுக்காக வினாயகர் சிலைகளை உடைத்த பெரியார் உண்மையான ஆஸ்திகர். சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று மனுஷ்யர்களுக்கு தொல்லை கொடுக்கும் கூட்டம் தான் நாஸ்திக கூட்டம் என்பது என் கருத்து.


மந்திரம் என்பது உடல். பீஜம் என்பது மந்திரத்தின் உயிர். பீஜம் என்பது எப்படி உருவாகிறது? அதற்கு சக்தி எப்படி உருவாகிறது? அது எப்படி வேலை செய்கிறது ? என்பவற்றையும் ஒளிக்காது இந்த வலைப்பூவில் பிரசுரிக்க காத்திருக்கிறேன்.


ஆனால் ஒரே நிபந்தனை 100 நபர்கள், தம் நண்பர்களான 100 வலைஞர்களின் மெயில் விலாசங்களுடன் என் மெயிலுக்கு தொடர்பு கொள்ளவேண்டும்