Friday, August 24, 2007

நிலாச்சாரல் வாசகர்களுக்கு


நிலாச்சாரல் வாசகர்களுக்கு நிலாச்சாரலில் என் தொடரை படித்து பலரும் நிலாச்சாரலுக்கு மெயில் அனுப்பி வருகிறீர்கள்..அவர்களு࠮?் எனக்கு பார்வார்ட் செய்து வருகிறார்கள். வாசக‌ர்களுக்கு ஒரு வேண்டு கோள்: 1.என்னைபொறுத்தவரை என் ஜோதிட அறிவு உலகத்திற்கு பயன்படுவதுதான் முக்கியம். இதில் பணம் என்பது மூன்றாம் பட்சம் தான். ஒவ்வொருவருக்கும் தனி தனியாக மெயில் அனுப்பவும் நான் தயார். ஆனால் யூனி கோடில் தட்டச்ச தெரிந்து கொண்டதே சமீபத்தில் தான். (நிலாச்சாரலுக்கு தொடரை அனுப்பும்போது அவுட் ஸோர்ஸிங் தான், அதற்கு பிறகு நிலச்சாரல் கொடுத்த உற்சாகத்தில் தட்டச்ச ஆரம்பித்துள்ளேன். ) எனவே என் சிந்தனை வேகத்திற்கு கைகள் ஒத்துழைக்க மறுக்கின்றன. மேலும் ஒருவருக்கு தேவைப்படும் அதே விவரம் மற்ற ஒருவருக்கும் தேவைப்படலாம். அடுத்தவர் தொடர்பு கொள்ளும் போது மீண்டும் தட்டச்சுவது வீண் வேலை. எனவேதான் இந்த ஒட்டு மொத்த பதில்கள். இதை நிலாச்சாரல் முகவரிக்கும் அனுப்ப உள்ளேன். அவர்களும் தங்களுக்கு இதை பார்வார்டு செய்யலாம்.



முதலில் சூரிய நமசஸ்காரம் பற்றிய கேள்வி:
சூரிய உதயத்தின் போது குளித்த பிறகோ, முடியாத பட்சம் பல் தேய்த்து முகம் கழுவியபிறகோ கிழக்கு திசை நோக்கி சூரியனை கண்டு வணங்க வேண்டும். "ஓம் நமோ ஆதித்யாய நமஹ" என்று சொல்ல வேண்டும்.
இதில் அதி முக்கியமான தத்துவம் உள்ளடங்கி உள்ளது. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு அல்லவா? மகா வெடிப்பின் காரணமாய் உண்டான பூமி,கிரகங்கள் யாவிலும் உள்ளவை சப்த தாதுக்களே. சப்த தாதுக்கள்தாம் சப்த கிரகங்கள். சூரியன் வானத்தில் மட்டும் இல்லை. உங்களுக்குள்ளும் உள்ளார்.
கோவிலில் ஆரத்தி காட்டுவதும், நாம் வணங்குவதும் நமக்குள் உள்ள சிதானந்த ஜோதியை கண்டு கொள்ளத்தான். அதே போல் சூரிய நமஸ்காரம் செய்வது நமக்குள் உள்ள சூரியனை கண்டு கொள்ளத்தான்.
சூரிய நமஸ்காரம் செய்யும்போது குறைந்த பட்ச ,உலர்ந்த ஆடைகளை அணிவது சூரிய கதிர்கள் நம் உடலின் மீது பட உதவும். காலைச்சூரியன்,மாலைச்சூரியனுடைய கதிர்களில் எத்தனையோ மருத்துவ குணங்கள் உள்ளன. வெளி நாட்டினர் sun bath என்ற பெயரில் உச்சி வெய்யிலில் கிடப்பது கேன்சரைத்தான் ஏற்படுத்தும்.