Wednesday, August 8, 2007

தந்திரபாபுவைப்பற்றி

1.என்.டி.ஆர் தனிக்கட்சி கண்டு,முதல்வராகும் வரை ஆ.மா காங்கிரஸ் மந்திரிசபையில் மந்திரியாக குப்பைக்கொட்டியவர்.
2.மாமனார் முதல்வரானதும் ஞான ஸ்னானம் பெற்று கட்சிக்குள் வந்தவர்
3.கடைசி முறை என்.டி.ஆர் முதல்வரான போது, பாபு நிதி மந்திரி. பின்னாளில் தான் அமலாக்கி கையை சுட்டுக்கொண்ட ஐ-டெக் முறைகளை அமலாக்க முயன்றார். என்.டி.ஆர் அந்த ஜீ.ஓ க்களை உடனடியாக திரும்பப்பெற்றர்.இதனால் ஈகோ அடிவாங்கிய நிலயில் லட்சுமி பார்வதி மேல் பழி போட்டு என்.டி.ஆர் முதுகில் குத்தினார்.அவர் சாவுக்கு காரணமானார்.
4.சரி தன் துரோகத்தில் துணை நின்றவர்களுக்காவது துரோகம் செய்யாதிருந்தாரா என்றால் இல்லை. சந்திர சேகர் ராவ் அரிகிருஷ்ணா,மோகன் பாபு,தக்கு பாடி வெங்கடேஸ்வர ராவ் எல்லாரையும் நட்டாற்றில் விட்டார்.
5.என்.டி.ஆர் மறைவுக்கு பிறகு நடந்த தேர்தல்களில் பா.ஜ.க வுடன் கூட்டு வைத்து 2 சதவீதம் ஓட்டு வித்யாசத்தில் மீண்டும் முதல்வரானார்.அந்த தேர்தலில் பா.ஜ.க பெற்ற வாக்குகளின் சதவீதம் என்ன தெரியுமா அதே 2 சதவீதம் தான்.
6.தான் தலைவராகிவிட்டதாய் பிரமித்துப் போய் கள் குடித்த குரங்கு கதையாய் ஆட்டம் போட்டர்.நக்சல்களுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துக்கொண்டு அதையும் மீறினார். அவர் மீது கொலை முயற்சி நடந்தது. அனுதாப ஓட்டில் ஜெயித்து விடலாம் என்று மனப்பால் குடித்தார். மக்கள் பேதிக்கு கொடுத்தனர்.

(இந்த பட்டியலை நான் சேகரிக்க காரணம் என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் குறித்து அவர் அலுவலகத்தில் இருந்து பதில் பெற 1997 முதல் 2003 வரை நான் படாத பாடில்லை. அதையெல்லாம் இங்கு சொன்னால் அனுதாபம் தேடுகிறான் என்றோ..ரீல் விடுகிறான் என்றொ பாலா ரசிகர்கள் கூறலாம். ஆனால் அது சரித்திரம்.

தமிழ் வாசகர்களுக்கு தெரியாத சரித்திரம் .தற்போதைக்கு ஆங்கிலத்தில் வாசிக்க லாக்-இன் செய்யுங்கள்: www.truthteller.sampasites.com

விரைவில் தமிழிலும் வைக்க உள்ளேன் அப்போது தெரியும் பாலா யார் நான் யார் என்பது)