Tuesday, August 7, 2007

என்.டி.ஆரும் எம்.ஜி.ஆரும்




அறிஞர் அண்ணா தமிழக அரசியலில் ஒரு ட்ரேட் மர்க் ஆகிவிட்டிருப்பதை எவராலும் மறுக்க முடியாது. பெரியார் பாம்பையும்,பார்ப்பானையும் ஒன்றாக பார்த்தால் முதலில் பாம்பை அடி என்றார். அண்ணாவோ நான் பிராமணர்களை எதிர்க்கவில்லை, பிராமணீயத்தைத் தன் எதிர்க்கிறேன் என்றார். ஆனால் திராவிட பரம்பரையில் வந்த ஜெயலலித நான் பாப்பாத்தி தான் என்று அறை கூவினார். இதையெல்லம் நினைத்து பார்க்கும்போது காலம் செய்த கோலம் என்றுதான் ஆறுதல் பெறவேண்டியுள்ளது. ஆந்திரத்தமிழனான எனக்கு பெரும் உறுத்தலை தருவது பிராமண அறிவு ஜீவிகளின் போக்குத்தான். எழுத்தாளர்களை எடுத்துக்கொண்டால் சுஜாதா,பாலகுமாரன் எழுதும் கதைகளில் எல்லாம் சூத்திரர்கள் வில்லன் களாகவும்,பிராமணர்கள் எல்லாம் தியாக சீலர்களாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள். அவற்றையும் மானம் கெட்ட சூத்திரர்கள் வாங்கி படிக்கிறார்கள். ரத்தம் ஒரே நிறம் எழுதிய சுஜாதா பாசுரங்களுக்கு பொழிப்புரை எழுதுகிறார். மெர்க்குரிப்பூக்கள் எழுதிய பாலகுமரன் ஆன்மீகம் போதிக்கிறார். பிராமணர்கள் பூஜிக்கப்பட்டால் நல்ல மழை பெய்யும் என்று சத்தியம் செய்கிறார். அவரைப்பற்றி தமிழகத்தில்,இன்றைய தமிழர் கருத்து எப்படி உள்ளதோ நான் அற்யேன். ஆந்திரத்தில் வாழும் நான் என் கருத்தை இங்கு பதிவு செய்வதில் பெருமை அடைகிறேன். சோ ராமசாமி போன்றவர்கள் கருக்கட்டிக் கொன்டு என்னதான் துஷ்பிரச்சாரம் செய்தாலும் என் போன்றவர்கள் அண்ணா மீது வைத்திருக்கும் அன்பு மாறாது. ஆந்திரத்தில் என்.டி.ஆர் அரசியலில் குதித்த நாள் முதல் தமிழ்பத்திரிக்கைகள் அவரை ஆந்திர எம்.ஜி.ஆராகவே சித்தரித்து வந்துள்ளன. என்னை பொருத்தவரை என்.டி.ஆர். ஆந்திர அரசியல் வரலாற்றில் ஒரு அண்ணா என்றுதான் சொல்வேன். அவர் எம்.ஜி.ஆரை போல் சினிமாவில் நடித்திருக்கலாம். ஆனால் மேடைப்பேச்சு, இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி போன்ற திட்டங்களை வைத்து பார்க்கும் போது அவரை அண்ணாவோடு தான் ஒப்பிடத் தோன்றுகிறது. இரண்டாவது திருமணம் என்ற நோக்கில் பார்த்தால் பெரியாரோடும் ஒப்பிடலாம். ஏன்.டி.ஆரின் 2 ரூபாய் திட்டம் தான் கலைஞரை ஆட்சியில் அம்ர்த்தியுள்ளது என்றால் அது மிகையாகது.