Sunday, August 19, 2007

யாரை காதலித்தால் ராஜ சுகம்


உடலுறவு என்பது ஆண் ,பெண் இருவருக்குமே உடலியல் தேவை. இதை மறுக்கும் எவரானாலும் சித்தம் கலங்குவதும்,வன்முறைக்கு திரும்புவதும் உறுதி(காஞ்சி பெரியவாள் போல).

காதல் என்பது தேவையா? என்பதே கேள்வி. பாரதியார் கூட காதலினால் கலவி உண்டாம் என்று கூறியுள்ளார். கலவிக்காகத் தானா காதல்? இல்லை.

காதல் என்பது விட்ட குறை தொட்ட குறையாய் வருவதாகும். கர்ம வாசனை என்று யோக நூல்கள் குறிப்பிடும் கடந்த பிறவியின் ஞாபகங்கள் தொடர்ந்து வந்து காதலில் வீழ்த்துகின்றன. நீங்கள் யாரை அடையவேண்டுமோ அவரை காதலித்து விட்டால் வம்புமில்லை,வழக்குமில்லை. தண்ணீர் பள்ளத்தை சென்றடைவது போல் காதல் கை கூடும். கவிஞர்கள் கூறும் ராஜ சுகம் கிடைத்து விடும்.

யதார்தத்தில் பார்க்கும் போது யார் யாரால் நரகத்தை அனுபவிக்கவேண்டுமோ அவரைத்தான் காதலிக்கிறார்கள். தாங்கள் நரகவேதனை அனுபவிப்பதோடு தங்களை சேர்ந்தவர்களையும்நரகத்தில் தள்ளுகிறார்கள்.

சரி யாரை காதலித்தால் ராஜ சுகம் என்று எப்படி அறிவது?அது ரொம்ப ஸிம்பிள்! உங்கள் இயற்கை தத்துவத்தை சமூகம் கற்பித்த அகந்தை மறைத்து நிற்கிறது. அந்த அகந்தை உங்களை தவறான துருவத்துக்கே இழுக்கிறது. இதை புரிந்து கொண்டால் போதும் உங்கள் காதலர்/காதலியை வெகு எளிதாக தேர்ந்தெடுக்கலாம்.

உங்களுக்கு யாரைப் பார்த்தால் நவத்துவாரங்களும் எரிகிறதோ அவர்களை அடையத்தான் இந்த பிறவியை எடுத்துள்ளீர்கள்.
யாரைக் கண்டதும் சுவர்க வாசம் சாத்தியம் என்று தோன்றுகிறதோ அவர் தான் உங்கள் நரகத்துக்கான நுழை வாயில்