பதவி சுகத்துக்கு குலாம் அப்துல் கலாம்நான் கலாமை விமர்சிப்பவன் என்று பாலகுமாரனின் அபிமானிகள் என் மீது குற்றம் சாட்டியுள்ளனர். நான் மற்றெந்த அரசியல்வாதியையும்(இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக நான் தீட்டிய திட்டத்தை கண்டு கொள்ளாதவர்களை தவிர) விமர்சித்ததில்லை. காரணம் அவர்கள் புலிகள்.(தமிழ் புலிகள் அல்ல) . நான் கவலைப்படுவது பசுத்தோல் போர்த்த புலிகளைப் பற்றித்தான்.பதவி சுகத்துக்கு குலாம் அப்துல் கலாம் என்பதை நான் என்றோ அறிவேன். ஆனால் உலகம் அவரை ஆதர்ச புருஷராக கொண்டாடியது. இதற்கு பார்ப்பன ஆதிக்கம் மிக்க மீடியாவும் ஒரு காரணம். மைனாரிடி வர்கத்தை சேர்ந்த கலாமுக்கு உரிய முக்கியத்துவம் தராவிட்டால் தம் சுயமுகம் வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்திலும்,குற்ற மனப்பான்மையிலும் சற்று அதிகமாகவே முக்கியத்துவம் தரப்பட்டு விட்டது. என்னதான் நாடு முன்னேறினாலும் அச்சில் வந்ததெல்லம் உண்மை என்று நம்பும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள். (ஆந்திர ஐ கோர்ட்டு நீதிபதி முன்பு பத்திரிக்கை கட்டிங்குகளை ஆதாரமாக சம்ர்ப்பித்தபோது அவர் ரூபாய் செலவழித்தால் எந்த செய்தி வேண்டுமானாலும் பத்திரிக்கையில் வெளிவரும் என்பது எங்களுக்கு தெரியும் என்று சொன்னாராம்.)
நிற்க..கலாம் கதைக்கு வருவோம். அரசுத்துறை நிறுவனங்கள்,அவற்றில் நிலவும் சிகப்பு நாடாத்தனம்.ஊழல் குறித்து அறியாதவர்கள் இல்லை. ஒரு அரசுத்துறை நிறுவனத்தில் யாதொரு முரண்பாடும் இல்லாது நீண்ட காலம் பணியாற்றியதை கொண்டே கலாமின் ஜாதகத்தை கணித்துவிடலாம்.
சரி ஒழியட்டும் இவர் உந்துதலில் அரசு செய்த அணுகுண்டு வெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளை அனுபவித்தவர்கள் மறக்க முடியுமா? இதையும் மேரா பாரத் மகான் கோஷங்கள் மழுப்பிவிட்டன. இதுகூட போகட்டும்..நான் எளிமையானவன்,அறிவுஜீவி என்று சொல்லிக்கொள்ளும் கலாம் ஜனாதிபதி மாளிகையின் பிரம்மாண்டத்தை நேரில் பார்த்ததுமே என்ன செய்திருக்க வேண்டும்? இதெல்லாம் சரிப்பட்டு வராது ..எனக்கு ஏதாவது அரசு வீட்டை ஒதுக்கி கொடுங்கள் என்று கேட்டிருக்கவேன்டும். செய்தாரா இல்லை.
அதுவும் ஒழியட்டும் அந்த மாளிகையின் வியர்த்த செலவுகளையாவது பாதிக்கு குறைத்திருக்க வேண்டாமா? கு.ப. அதை மாறுபட்ட,ஆக்கப்பூர்வமான வழிகளில் உபயோகித்திருக்கலாமே. இன்று கணக்கெடுக்க சொல்லுங்கள் ஜ.மாளிகையில் கலாமை சந்தித்த பிருமுகர்களை..இதில் வயிறு நிறைந்தவர்கள் எத்தனை பேர்? பார்ப்பன அ.ஜீவிகள் எத்தனை பேர்,ஆளும்,அதிகார வர்க முதலைகள் எத்தனை பேர்? பீகார் சட்டமன்ற கலைப்பு விவகாரம் ஒன்று போதுமே கலாம் பதவி சுகத்துக்கு குலாம் என்பதை நிரூபிக்க.
எம்.பி.க்கள் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கினார்கள்..தொகுதி நிதியில் விளையாடினார்கள் .கலாம் கழட்டியது என்ன? குற்றச்சாட்டுகளுக்கு ஆளான எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் கு.ப.உண்ணாவிரதம் இருப்பேன் என்று மிரட்டவாவது செய்தாரா? இல்லை.
சரி ஒழியட்டும் வந்த மாதிரியே போயிருந்தாலும் மன்னித்திருக்கலாம். போகும்போது ஆந்திரத்து தந்திர பாபு(அச்சுப்பிழையல்ல) மீண்டும் போட்டியிட கோரியபொது வெற்றி நிச்சயம் என்றால் ஓ.கே என்று வாயை விட்டார்..பின் ஜ.மாளிகை தரப்பில் அறிக்கை வெளியிட்டு மேலுதட்டில் பட்ட மண்ணை துடைத்துக் கொள்ள வேண்டி வந்தது.