Tuesday, August 7, 2007
தமிழ் எழுத்தாளர்கள் போக்கு
தமிழகத்தில் தமிழ் எழுத்தாளர்கள் போக்கு அருவறுப்பூட்டுவதாக உள்ளது. ஆந்திரத்தில் ஒய்.எஸ்.முதல்வரான புதிதில் மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் மாவோயிஸ்டுகள் தரப்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்களில் வரவர ராவும் ஒருவர். இவர் புரட்சிகர எழுத்தாளர்கள் சங்க தலைவராவார். தமிழகத்தில் நடப்பது என்ன? ஒன்று எழுத்தாளர்கள் தமது எழுத்து விபச்சாரத்தில் மூழ்கி கிடக்கிறர்கள். அல்லது ஆளும் வர்கத்துக்கு ஜால்ரா போடுகிறார்கள். அல்லது சிவாஜி போன்ற மசாலாக்களில் கடுகாகி மிதக்கிறார்கள். இதைப் பாராட்டவும் ஆளிருக்கிறது. கலைஞர் பெரும் எழுத்தாளர்தான் இல்லை என்று யார் மறுத்தார்கள். இதை சொல்ல ஒரு கவிஞர் கூட்டமே ஓவர் டைம் செய்கிறது. ஸ்கூட்டரில் செல்லும்போது முதல்வர் கையசைத்தால் ஒரு எழுத்தாளரின் ஜென்மமே சாபல்யமடைந்து விடுகிறது. தினசரிகளின் முதல் பக்கத்தை அலங்கரிக்குமத்தானை சமூக உணர்வும்,அரசியல் துணிவும் தமிழ் எழுத்தளர்களுக்கு என்றுதான் வருமோ? எனக்குத்தெரிந்து 'ஞானி' ஒருவரின் எழுத்துக்களில் தான் "நாமார்க்கும் குடியல்லோம்..நமனை அஞ்சோம்" என்ற தன்மை வெளிப்படுகிறது.