Tuesday, August 7, 2007

நேரிடை ஜனநாயகம் தேவை

தனி மெஜாரிட்டி என்பது கனவாகிப் போன நிலையில் நேரிடை ஜனநாயகம் ஒன்றே இந்தியாவை வல்லரசாக்கும். பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுக்கும் போது இன்று போல் அநாமதேயங்கள் அரசாள்வது தடுக்கப்படும்.பிரதமருக்கு எம்.பிக்களுக்கு லாலி படும் அவசியம் இருக்காது.இந்தியாவில் 52 சதவீதம் மக்கள் எஸ்.சி,எஸ்.டி,பி.சி மற்றும் மைனாரிட்டிக்களாக இருக்கும் நிலையில் -பிரதமர் பதவிக்கு மும்முனைப்போட்டி ஏற்பட்டால் மேற்சொன்னவர்களில் பாதிப் பேர் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர் பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும். அரசு,அரசியல் கட்சிகள்,வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் செலவ்ய் பெருமளவு குறையும்.