Thursday, August 9, 2007
சுஜாதாவும் அவர் ராசியும்
சுஜாதா அறிவு ஜீவியாக இருக்கலாம் . ஆனால் அவர் தொடர்ந்து ஜோதிடம் குறித்த தவறான செய்திகளையே பதிவு செய்து வருகிறார்.அவர் *தன் ராசி எது என்பதிலேயே குழப்பமிருப்பதாக கூறிவருவது தெரிந்ததே. இது ஜோதிட அரிச்சுவடியை புரட்டினாலே தெரிந்து கொள்ளக்கூடிய விஷயம். ஆனால் சுஜாதாவோ தம்து சோம்பலை மறைத்து ,ஜோதிடத்தின் நம்பகத்தன்மையை சந்தேகத்துக்குள்ளாக்கிவருகிறார். முதலில் இந்த பஞ்சாயத்தை தீர்த்துவிட்டு சிவாஜிக்கு போகலாம். ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் ப்ரஸ்தாபிக்கப்படுகின்றன. பகுத்தறிவாளர்கள் மற்ற நட்சத்திரம் எல்லாம் நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி ஒப்புக்கு சப்பாவா என்று நக்கலடிக்கிறார்கள். உண்மையில் நட்சத்திரம் என்பது நட்சத்திர மண்டலத்தை குறிக்கிறது. அஸ்வினி என்றால் ஆகாய வெளியில் குதிரை வடிவத்தில் தென்படும் நட்சத்திர தொகுப்பாகும். நிற்க, சுஜாதாவின் ஜன்ம நட்சத்திரம் கிருத்திகை என் கிறார். ஆனால் தன் ராசி மேஷமா, ரிஷபமா என்பதில் குழப்பம் இருப்பதாக கூறுகிறார். சந்திரன் கிருத்திகை நட்சத்திர மண்டலத்தில் 24 மணி நேரம் சஞ்சரிக்கிறார். இதை 4 பாகங்களாக்கி உள்ளார்கள். கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாகத்தில் (நட்சத்திரம் உதயமான முதல் 6 மணி நேரத்தில்) பிறந்திருந்தால் அவர் ராசி மேஷமாகும். அடுத்த 3 பாகங்களில் அதாவது அடுத்த 18 மணி நேரத்தில் பிறந்திருந்தால் அவர் ராசி ரிஷபம். இந்த சின்ன விஷயத்தை கூட தெரிந்து கொள்ளாமல் வாசகர்களை குழப்பி வருவது அவருக்கு அழகல்ல. அவர் தன் பிறப்பு விவரங்களை எனக்கு மெயிலில் அனுப்பினால் அவர் ராசி எது என்று ஸ்டாம்பு பேப்பரில் எழுதி தர தயார்.