
மீனராசிக்கு எப்போது திருமணம்:
மீனராசிக்கு தற்போது, அக்டோபர் 28 வரை குரு 9 ஆமிடத்தில் உள்ளார். எனவே அதற்குள் திருமணம் நடக்கலாம்.(இது பொதுப் பலன்). சனி 6 லும் ,ராகு,கேது 6,12 லும் உள்ளனர் (மார்ச்சு வரை) இதுவும் நல்லதே. என்றாலும் ஜாதகத்தையும் ஒரு முறை அனுப்பி வைய்யுங்கள்.
தனுசு ராசி எதிர்காலம்:
கடந்த 3 வருடங்கள் சரியில்லை. இந்த ஆகஸ்டு 5 அன்று நடந்த சனிப் பெயர்ச்சி அனுகூலம் தான். குரு ஜன்மத்தில் வருகிறார்.(அக்டோபர் 28 முதல்). எனவே உடல் நலம் பாதித்தாலும் பொன்,பொருள் சேரும். பிள்ளைகள் முன்னேற்றம் காண்பர். தீர்த்த யாத்திரைகள் செய்வீர்கள். தூர பிரயாணங்களில் எச்சரிக்கை தேவை. சொத்துத் தகறாறுகள் ஏற்படும். தந்தை,தந்தை வழி உறவினர்களுக்கு சிக்கல்,அவர்களால் சிக்கல் ஏற்படலாம்.