Saturday, August 18, 2007

சி.கே.@ சித்தூர் டைகர்




இவ‌ர் நான் வாழும் சித்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆர‌ம்ப‌த்தில் சுயேச்சையாக‌ நின்று ஜெயித்தார். (காங்கிர‌ஸ் சீட் கொடுக்காத‌தால்) பிற‌கு இரண்டு முறைகள் காங்கிர‌ஸ் க‌ட்சி சார்பில் நின்று ஜெயித்தார். முத‌ல் இரண்டு முறைகள் அவ‌ர் காங்கிரஸ் கட்சி சார்பில் நின்ற போது என்.டி.ஆர் ர‌சிக‌ன் என்ற‌ முறையில் அவ‌ருக்கு எதிராக‌த்தான் வேலை செய்தேன்.


மூன்றாம் முறை அவ‌ருக்கு ஆத‌ர‌வாக‌ இல்லாவிட்டாலும் ஆளுங்க‌ட்சியான‌ தெ.தேச‌ம் க‌ட்சிக்கு எதிராக‌ 5000 துனண்டு பிர‌சுர‌ங்க‌ள் வெளியிட்டு வினியோகித்தேன்.


இந்த‌ ம‌ன‌மாற்ற‌த்திற்கு இர‌ண்டு கார‌ண‌ங்க‌ள்.


தெ.தே.க‌ட்சி ஆர‌ம்ப‌த்திலிருந்தே சி.கே.பாபுவை ஒரு வில்ல‌னாக‌ துஷ்பிர‌ச்சார‌ம் செய்து வ‌ந்த‌து. மேலும் நான் NTR ர‌சிக‌னும் கூட‌ .இன்னும் கேட்க‌ வேண்டுமா? அவ‌ர் ஜெயித்த‌தெல்லாம் முறைகேடான‌ வ‌ழிக‌ளில் தான் என்று தொட‌ர்ந்து பேசிவந்தேன்.மூன்றாம் முறை தேர்தல் நடந்த போது தந்திரபாபு(அச்சுப் பிழை இல்லிங்க காரண பெயர்) மாவட்ட போலீஸ் துறை மொத்த‌த்தையும் CK வை பின் தொட‌ர‌ வைத்தார். துப்பாக்கி ஏந்திய‌ காவ‌ல‌ர்க‌ள் என்ன‌, ஷேடோ பார்ட்டி என்னும் போலீஸ் வாக‌ன‌ம் தொட‌ர்வ‌து என்ன‌? பெனுகொண்டா 'டான் ' ப‌ரிடாலா ர‌வி & கோ ராத்த‌ங்கி திட்ட‌ம் தீட்டிய‌து என்ன..பாபுவே தெரு தெருவாய் பிரச்சாரம் செய்ததென்ன?


தேர்த‌லுக்கு முன்பே நான் ஒரு முடிவெடுத்திருந்தேன். இந்த‌ முறை CK ஜெயித்தால் ம‌ட்டும் இவ‌ர் உண்மையிலேயே ம‌க்க‌ள் ஆத‌ர‌வை பெற்ற‌வ‌ராக‌த்தான் இருக்க‌ வேண்டும் ..இவ‌ர் இந்த‌ முறை ஜெயித்து விட்டால் இனி இவ‌ரை விம‌ர்சிப்ப‌து பெருவாரியான‌ வாக்காள‌ர்க‌ளை விம‌ர்சிப்ப‌து போல்தான் என்று முடிவு கட்டிவிட்டேன்.அரசின் ஆயிரம் அடக்குமுறைகளை மீறி அவர் ஜெயித்தார். அவரை விமர்சிப்பதை கை விட்டேன்.

அடுத்த முறை தேர்தல் நெருங்கி வந்தது.


தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் ஒரு இஞ்சினீரிங்க் கல்லூரி மாணவர் ஒருவர் உயிருடன் எரித்து கொல்லப் பட்டார். அவரது தாய் தெ.தே.கட்சி மகளிர் அணியை சேர்ந்தவர். இனி கேட்க வேண்டுமா மொத்த அரசு இயந்திரமும் சி.கே வுக்கு எதிராக தூண்டிவிடப்பட்டன. அவர் கைதானார். கடப்பா மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். அங்கு அவர் செய்தது என்ன தெரியுமா ?


ஷீரடி சாய் பக்தரான சி.கே கடப்பா சிறைக்குள் கட்டப்பட்டு வந்த சாய் மந்திரத்துக்கு கரசேவை செய்து கொண்டிருந்தார். ஒரு வேளை கொலை செய்த ஆசாமியாக இருந்தால் ராம்ஜெத்மலானியையோ,கபில் சிபலையோ பிடித்து வெளியே வரும் வேலையைப் பார்க்க வேண்டுமா சிவனே என்று கோயில் கட்ட கல்லும்,மண்ணும் சுமக்க வேண்டுமா?
இந்த செய்திகள் ஏற்கெனவே அரசாங்கத்தின் பழிவாங்கல்களுக்கு ஆளாகியிருந்த என் மனதை பெரிதும் மாற்றின.


இத்தனைக்கும் நான் செய்த பாவம் ஒன்றுமில்லை. புதிய இந்தியாவை படைக்க ஒரு திட்டம் தீட்டி அதை சந்திரபாபுவுக்கு தொடர்ந்து அனுப்பி பதில் கொடுக்க தபால் செலவுக்காக ரூ.10 மோ அனுப்பி அப்படியும் பதில் வராததால் நுகர்வோர் மன்றத்தில் வழக்குப் போட்டதுதான். உத்தமர் போல் எனக்கு சாதகமாக பதில் கொடுத்து ஊர் வாயை அடைத்து விட்டுத் தான் மாவட்ட அரசு இயந்திரத்துக்கு ரகசிய உத்தரவுகள் பிறப்பித்திருந்தார்.)


எப்படியோ அரசியல் ரீதியாக சி.கே வை ஜெயிக்க முடியாத தெ.தே. தலைவர் சந்திரபாபு கருக்கட்டிக் கொண்டு பழிதீர்த்தார். சி.கே.வுக்கு பெயில் கிடைத்தது. ஆனால் அரசு வக்கீல் செய்த மாய்மாலத்தால் கோர்ட்டு ஒரு விசித்திர உத்தரவை பிறப்பித்தது. அவர் ஊருக்குள் வரக் கூடாதாம்.


சந்திரபாபுவின் தந்திரங்களைப் பற்றி சொல்ல ஒரு தனி வலை தளமே தேவை. அவற்றிற்கு பலியானவர்களுக்குத் தான் அவற்றி வலிமை புரியும். நானாவது வேலை வெட்டியில்லாமல் பாபுவின் அரசியலை விமர்சித்து வருபவன் (வார்டு மெம்பராக ஜெயித்து வருமத்தனை நெட் வொர்க்க் கூட இல்லாதவன்)


ஆனால் சி.கே.பாபு ? அரசியல் களத்தில் இருப்பவர், இதர தெ.தே தலைவர்களைப் போல் பார்ட் டைம் பொலிடீஷியனாக இருந்தாலும் பரவாயில்லை. எத்தனையோ சங்கங்களின் தலைவர்,அவர்கள் பிரச்சினைகளை தன் பிரச்சினையாக தீர்ப்பவர். அவருக்கு எங்கே நேரம்?
அவரது வக்கீலோ சி.கே வின் வழக்கை சாதாரண கொலை வழக்காக நினைத்து செயல்பட்டுக் கொண்டிருந்ததார்.


இந்த நிலையில் அவருக்கு பல யோசனைகளை தெரிவித்து கொரியர் மூலம் கடிதம் அனுப்பினேன். அதை வக்கீல் ரெஃப்யூஸ் செய்துவிட்டார். விடா கண்டனான நான் சாதாரண தபாலில் மீண்டும் அதே விஷயங்களை அனுப்பினேன். அதோடு இப்படி யோசனைகள் தெரிவித்துள்ளதாக சி.கே. வுக்கும் சிறை முகவிரிக்கு கடிதம் எழுதினேன்.


தேர்தல் நெருங்கியது. காங்கிரஸ் கட்சி சி.கே.வுக்கு சீட் கொடுக்கவில்லை. சுயேச்சையாக போட்டியிட்டார். குறைந்த வாக்கு வித்யாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். மானிலத்தில் காங்கிரஸ் ஆட்சி பிடித்தது. சி.கே.வின் அரசியல் குரு ஒய்.எஸ் ஆர் முதல்வரானார். சிலமாதங்களில் நகராட்சி தேர்தல் வந்தது. தெ.தே.களத்தில் நின்றதென்னவோ நிஜம். கோடீஸ்வரரான தெ.தே.எம்.பி பணத்தை கொட்டினார். இந்த நிலையில் அவ‌ருக்கு ஆத‌ர‌வாக‌ இல்லாவிட்டாலும் ஆளுங்க‌ட்சியான‌ தெ.தேச‌ம் க‌ட்சிக்கு எதிராக‌ 5000 துனண்டு பிர‌சுர‌ங்க‌ள் வெளியிட்டு வினியோகித்தேன்.

சந்திரபாபு வந்தார். புலி (சி.கே.வுக்கு சித்தூர் டைகர் என்ற விருது உண்டு)நாட்டில் இருக்கக்கூடாதென்று வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிவிட்டுப் போனார். ஆனாலும் நகராட்சி காங்கிரஸ் வசமாகியது.


சட்டமன்ற தொகுதி கட்சி பொறுப்பாளராக சி.கே.பாபுவின் நேரடி பார்வையில் வேட்பாளர் தேர்வு முதல் சகலமும் நடந்தன.

இந்த பெருவெற்றியை சகிக்க முடியாத தெ.தே.கட்சித் தலைவர்கள் 9/2/2007 அன்று வாடகை கொலையாளிகளைக் கொண்டு துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த கொடூர கொலை முயற்சியில் நகராட்சி ஊழியர் ஒருவர்,கொலையாளிகளில் ஒருவன்,சி.கே.வின் துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் உயிரழந்தனர்.


சி.கே.வை ஒழித்துக் கட்டுவதான எண்ணத்துடன் சித்தூர் தொகுதி,நகராட்சிகளின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு வேட்டு வைத்துவிட்டனர். முதல்வருடன் தனக்குள்ள நல்லுறவை பயன்படுத்தி சி.கே. தொகுதி வளர்ச்சிப் பணிகளில் படைத்திருக்கக் கூடிய சரித்திரத்தை சமாதி ஆக்கிவிட்டனர்.


தன் உயிருக்கு ஆபத்து இருந்தாலும் தொடர்ந்து மக்கள் பணி யாற்றிவரும் சி.கே.வை சித்தூர் டைகர் என்று அவர் ஆதரவாளர்கள் கொண்டாடுவதில் நியாயமில்லாமலில்லை