Friday, May 21, 2010

ஒரு கோக் மூடியும் கொக்கோகமும்

அண்ணே வணக்கம்ணே !
கொக்கோகமும் கோக் மூடியும்ங்கற இந்த பதிவோட

கிரகமும் கிளுகிளுப்பும்  
பெண்ணுக்குள்ளே பூதம் 
மானங்கெட்ட செயல்    
ங்கற மூணு தனிப்பதிவுகளும் போட்டிருக்கேண்ணா . அந்தந்த தலைப்பு மேல க்ளிக் பண்ணி படிச்சுருங்கண்ணா

கொக்கோகம் என்பது வாத்ஸாயன முனிவர் எழுதிய காமசூத்திரம் போன்று  அதிவீரராம பாண்டியர் எழுதிய  பழம்பெரும்  செக்ஸ் நூலாகும்.அவர் காலத்தில் கொக்கோ கோலா ஏது என்று மதி மயங்காதீர்கள்.நம் காலத்தில் இருக்கிறதல்லவா.இந்த பதிவை படிக்கப்போவது நீங்கள். உங்கள் காலத்தில் கோக்கும்  உண்டு கோக் மூடியும் உண்டு. ஏன் ஒரு கோக் சாப்பிட்டுக்கிட்டே கொக்கோகம்ங்கற இந்த பதிவை படிக்கலாம்  அல்லவா?  அப்பாடா எப்படியோ பதிவோட தலைப்பை ஜஸ்டிஃபை பண்ணியாச்சு.

கொக்கோகத்தை பத்தி சொல்றதுக்கு முன்னாடி கோக் முடிய பத்தி கொஞ்சம் சொல்லிருவம்.

கோக் மூடி என்ன மெட்டல் என்று பார்த்ததுண்டோ? 99.99 சதவீதம் தகரம். மேலே மட்டும் பள பள கோட்டிங்க். 

கோக்கே இல்லை எந்த கம்பேனி ட்ரிங்க்ஸ் சாப்பிட்டாலும்  ஷுகர் வருமாம், கேஸ் ட்ரபிள் வருமாம். பல் எனாமல் போயிருமாம். ( கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில்ல ஒரு பல்லை போட்டுவச்சா ஒரு வாரத்துல கரைஞ்சே போயிருமாம்) இந்த உபத்திரவங்கள் இல்லாமே அப்பப்போ கூல் ட்ரிங்க் பாட்டில்ல கரப்பான் பூச்சி , வண்டுல்லாம் வருதாம்.  (ஒர் ரகசியம் இதுல ஆல்க்கஹால் கூட இருக்காம் அதனாலதான் அடிக்சன் ஆகுதாம்.)

என்னய்யா நாங்க ட்ரிங்க் மட்டும்தானே கேட்டோம் , இதெல்லாம் ஃப்ரீனு ஆஃபர் கூட இல்லையே பின்னே ஏன்யா இந்த ஜீவ ராசிகளை  பாட்டில்ல போட்டுத் தர்ரிங்கனு கேட்டா  பாட்டில் எல்லாம் கழுவப்பட்டு  கன்வேயர் பெல்ட்ல சுத்தமா போறச்ச இந்த பறப்பன,ஊர்வனவெல்லாம் உள்ளாற புகுந்துருதாம் . பாவம் அவிக என்ன பண்ணுவாங்க.

சின்ன வயசுல டீ,காஃபில எறும்பு இருக்கிறதை காட்டி கம்ப்ளெயிண்ட் பண்ணா எங்கம்மா " அடச்சீ சொம்மா குடிங்கடா எறும்பு உள்ளாற போனா கண்ணு நல்லா தெரியும்னுவாய்ங்க. அந்த மாதிரி இந்த கூல்ட்ரிங்கோட வண்டு, சிலந்தி, கரப்பான் எல்லாம் போனா பலான பவர் ஜாஸ்தியாகும்னு நினைச்சு குடிங்க.

சரி கோக் மூடிய பார்ப்போம்.  ஒரு கோக் மூடிய எடுத்து சட்டை பாக்கெட்ல வை ராசா. இதோ பார் என் கைல மேக்னெட் இருக்கு. நான் என்ன பண்றேன் மேக்னெட்டை  உங்க சட்டை பாக்கெட் கிட்டே கொண்டார்ரேன். இப்போ உன் சட்டைப்பைக்குள்ள இருக்கற கோக் மூடி  சட்டை  துணிய தள்ளிக்கிட்டு மின்னே வருது.

பொம்பளை உடம்புல ஏதோ இருக்குது ( நான் மேடு பள்ளம் போன்ற ஸ்தூல விஷயங்களை  சொல்லவில்லை. , உன் உடம்புல வேற ஏதோ இருக்குது.  நான் கோன்,குல்ஃபி மாதிரி ஸ்தூலமான விஷயங்களை சொல்லலை. இதெல்லாம் மேம்போக்கான சங்கதி. ஏதோ சூட்சுமம் இருக்கு.

ஒரு பையனை எடுத்துக்க. அவன் வம்ச விருட்சத்துல, ரிலேட்டிவ் சர்க்கிள்ள, ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ள , தினத்தந்தில, சினிமால ,டிவில  எத்தனை கதைய பார்க்கிறான். அண்ணன் தம்பி ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல கணக்கு பண்ணவ, அப்பன்,பிள்ளைய ஒரே நேரத்துல வச்சிக்கிட்டவ,  கள்ளக்காதலனோட வாழ்வாங்கு வாழ கணவனுக்கு விஷம் வச்சு கொன்னவ,  மச்சினனோட இல்லறத்தை பேண கணவன் தூங்கும்போது அம்மிக்கல்லை எடுத்து போட்டவள் இப்படி எத்தனையோ கதைய கேட்கிறான். பார்க்கிறான். ஏன் சில சமயம் சுயமாவே மேற்படி அனுபவங்களுக்கு கூட இலக்காகிறான் . இருந்தும் அவன் ஏன் காதலிக்கனும்?

சரீர தர்மங்கள் தான் காரணம்னா அதுக்கு எத்தனையோ வழி இருக்கு. என்ன மயித்துக்கு லவ் பண்றான்?

ஒரு பெண்ணை எடுத்துக்க (ஒரு உதாரணமா மட்டும் தலை) அவளோட வம்ச விருட்சத்துல, ரிலேட்டிவ் சர்க்கிள்ள, ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ள , தினத்தந்தில, சினிமால ,டிவில  எத்தனை கதைய பார்க்கிறாள். அக்கா தங்கச்சி  ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல கணக்கு பண்ணவன், அம்மா பெண்ணை  ஒரே நேரத்துல வச்சிக்கிட்டவன்,  கள்ளக்காதலியோட கவிதாமயமான வாழ்க்கைய வாழ மனைவிக்கு  விஷம் வச்சு கொன்னவன்,  மச்சினியோட வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறை தெய்வத்துள் வைக்கப்பட  மனைவி தூங்கும்போது அம்மிக்கல்லை எடுத்து போட்டவன். இப்படி எத்தனையோ கதைய கேட்கிறான். பார்க்கிறான். ஏன் சில சமயம் சுயமாவே மேற்படி அனுபவங்களுக்கு கூட இலக்காகிறான் . இருந்தும் அவள் ஏன் காதலிக்கனும்?

சரீர தர்மங்கள் தான் காரணம்னா அதுக்கு எத்தனையோ உத்தமமான மார்கங்கள் இருக்கு. என்ன மயித்துக்கு லவ் பண்றாள்?

இல்லை தலை ஸ்தூலமான விஷயங்கள் மட்டுமில்லாம ஆண் பெண்களுக்குள்ளே  வேற ஏதோ பிரத்யேகமான  கெமிஸ்ட்ரி இருக்கு.  இயற்கையோட ஹிடன் அஜெண்டா இருக்கு.
இது அதை ,அது இதை கவருது. இதனோட க்ளைமேக்ஸ் என்ன அந்த அஞ்சு நிமிஷ விவகாரம் தானா?  நான் பல பதிவுகள்ள சொன்ன படி இயற்கை மனிதனுக்கு கொடுத்திருக்கிற அஜெண்டா உயிர் வாழ்தல், இனப்பெருக்கம் செய்தல் மட்டும்  தானா ?

இல்லே. இயற்கை அந்த அளவுக்கு முட்டாளில்லே. இன்னைக்கு ஒரு டெஸ்ட் ட்யூப், பெண்ணின் முட்டைக்கரு, ஆணின் விந்தனு இருந்தால் குவா குவா சத்தம் வந்துருமே.

சரி உடலுறவு(னா)ல என்னதான் நட(கிடை)க்குது ?

பாயிண்ட் நெம்ப்ர்: 1

ஆணில் பாதி ஆண்,பாதி பெண் இருக்க, பெண்ணில் பாதி பெண்,பாதி ஆண் இருக்க இருவருமே அரை குறையாக உணர்கிறார்கள் உடலுறவின் போது சற்று நேரமாவது இருவரும் தம்மை முழுமையாக உணர்கிறார்கள். ஓகே.

பாயிண்ட் நெம்பர் 2

மனிதர்கள் பல்வேறு முகமூடிகளில் /போர்வையில் செய்யறது ரெண்டே வேலைதான். ஒன்னு கொல்றது, அடுத்தது கொல்லப்படறது. எல்லா உயிரும் ஆதி உயிரான அமீபால இருந்து செல்காப்பியிங், காப்பியிங் எர்ரர் மூலமா வந்த உயிர்தான். ஒரே உயிரா இருந்தப்ப காலம் ,தூரம், இன் செக்யூரிட்டி, கம்யூனிகேஷன் ட்ரபுள்,போட்டி,ஒப்பீடு எதுவுமில்லாம இருந்தாய்ங்க. பல்லுயிரா பெருகிப்போனபிறகு சகலமும் வந்துருச்சு.  அதனால ஒவ்வொரு உயிரும் இன்னொரு உயிரோட இணைய துடிக்குது. அந்த இணைப்புக்கு இந்த உடல் தான் தடைனு நினைக்குது (சப் கான்ஷியஸ்) . அதனால இந்த உடலை உதிர்க்க கொலை/தற்கொலை எண்ணங்களை வளர்த்துக்குது. இது தான் மேற்படி கொல்றது,கொல்லப்படறதுங்கற இச்சைகளுக்கு  அடிப்படை 

இந்த ரெண்டு வேலையுமே உடலுறவுல அசால்ட்டா முடியுது. ஆணப்பொருத்தவரை வீரியஸ்கலிதமாகிற வரை கொல்லும் இச்சை  நிறைவேறுது. வீரிய ஸ்கலிதம்  ஆன பிறகு கொல்லப்படற இச்சை நிறைவேறுது.

இது பெண்ணை பொருத்தவரை ஆணுக்கு எஜாகுலேஷன் நடக்கிற வரை  கொல்லப்படும் இச்சை நிறைவேறுது. அவனுக்கு எஜாகுலேஷன் நடந்த பிறகு கொல்லும் இச்சை   நிறைவேறுது

பாயிண்ட் நெம்பர்: 3
உயிர்கள் இணைய உடல்களை உதிர்க்கிறது ஒரு வழி ( மனித மனங்களின்அடியாழத்தில்  இருக்கிற வழிங்க)  இன்னொரு உடலை  தன் உடலோடு  சேர்த்துக்கறது இன்னொரு வழி.  இது உடலுறவுல தற்காலிகமா கொஞ்ச நேரத்துக்கு சாத்தியமாகுது அப்பறம் ? "தள்ளிப்படு தான்" இதை ஜஸ்ட் ஒரு பத்து மாசத்துக்கு எக்ஸ்டெண்ட் பண்ற ப்ராசஸ்தான் கர்பம். ஒரு உடல் ரெண்டு உயிர். இதனாலதான் பெண்டாட்டி கர்பம்னா அவனவன் டீலாயிர்ரான். ஆனால் மனைவிக  மட்டும் செம குஜிலியாயிருவாங்க. ஏன்னா இன்னொரு உயிர் தன் உடல்ல இணைஞ்சிருக்குதுங்கற எண்ணம்தான். ( அதே நேரத்துல பிரசவ கால ரிஸ்க் காரணமா கொல்லப்படற இச்சையும் நிறைவேறுது.) இதனாலதான் கர்பம்னு தெரிஞ்சவுடனே  தாய்குலம்  முகத்துல அத்தனை பூரிப்பு. வெட்கம் எதுக்குன்னா ( இருட்ல நடந்த சமாசாரம் வெளிச்சத்துக்கு வந்துருச்சேங்கறதாலதான்)

பாயிண்ட் நெம்பர் :4
இன உறுப்பும் கேரக்டரும் என்ற பழைய பதிவை படிக்காதவங்க  மட்டும்  இதை படிங்க. ஆணோட இன உறுப்பு எதையோ ஆக்கிரமிக்க துடிச்சு ஆக்கிரமிப்புக்குள்ளாகிபோகுது. பெண்ணுறுப்பு ஆக்கிரமிக்கப்பட தவிச்சு ஆணுறுப்பை ஆக்கிரமிச்சுக்குது. ஆண் ,பெண்ணோட கேரக்டரும் இதுதான். ஆண் தான்  பெரிய பிஸ்தானுதான் எல்லாத்தயும் ஆரம்பிக்கிறான். ஆனால் முடிவு வேற விதமா அமையுது. உடலுறவுல மட்டுமில்லை வாழ்க்கையிலயும் இதுதான் நடக்குது. பெண் என்பவள் இயற்கையின் மீனியேச்சர் வடிவம்.

பாயிண்ட் நெம்பர் :5

இது எல்லாருக்கும் தெரிஞ்ச பாயிண்டு தான். ஆண் தன்னை செக்யூர்டா உணர்ந்தது ஒரு பெண்ணின்  (தன் தாயின்) கருப்பையில்தான் . ஸோ கருப்பைக்குள்ள மறுபடி புகுந்துக்கற ஒரு முயற்சிதான் உடலுறவு. ( ஹோமோக்களை பத்தி ஏற்கெனவே சொல்லியிருக்கேன். இவிக சைக்காலஜி சொல்ற  ஆசனப்பருவத்துலருந்து வெளிய வராதவுக. இவிக மட்டுமில்லை எவன் வெறும் பேச்சுக்கும், (எழுத்துக்கும்- இது கூட ஒரு வகை பேச்சுத்தான்) தீனிக்கும் பரிமிதமா இருக்கானோ அவன் கூட ஹோமோதான். வாய்ல ஏற்படற அசைவுகள் அதன் முடிவான ஆசன வாயை அடையுது. அப்போ இவன் சப்கான்ஷியஸா ஒரு வித இன்பத்தை அடையறான். நிறைவேறாத செக்ஸ் எண்ணங்கள் கூட இதுக்கு ஒரு காரணம்.)

பாயிண்ட் நெம்பர்:6
இ.ப.மு.சொ (இப்போதைக்கே பல முறை சொன்னபடி) மனிதன் அடிப்படையில் ஒரு மிருகம். ஆடைகள் அவனை சிறைப்படுத்தி வைத்திருக்கின்றன. ஆடைக்கு விடைகொடுக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் அந்த மிருகம் வெளியே வந்து உலாவி  ரிலாக்ஸ் ஆகிறது.

(இன்னம் 16 பாயிண்ட் இருக்குங்கண்ணா இதையெல்லாம் ப்ளாக்ல பகிரங்கமா எழுதற அளவுக்கு நம்ம சமுதாயம் இன்னம் முன்னேறலை)