இந்த கண்ணாலங்கற ஏற்பாடே மனுசனுக்குள்ள இருக்கிற வேக்குவம் செக்ஸுல முழுக்க செலவழிஞ்சுராத இருக்க பண்ண ஏற்பாடுன்னு கடந்த பதிவுல சொல்லியிருந்தேன். அதெப்படி தினசரி நான்கு காட்சிகள் போட்டு வேக்குவமை தீர்த்துர மாட்டாய்ங்களான்னு நீங்க கேட்டா ( அதான் ராசா கேட்க நினைச்சா) தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டினு ஒரு விதிய காட்டி பயமுறுத்தியிருந்தேன்.
பழக பழக பாலும் புளிக்கும்னு கேள்விப்பட்டிருக்கிங்களா? அதே இழவுதான். ஒரு படத்துல வடிவேலு தன் பெண்டாட்டி எக்ஸர்சைஸ் பண்றதை சன்னல் வழியா பார்ப்பாரே. ஏன்? சலிச்சு போச்சுங்கண்ணா. மேலும் பொம்பள பிள்ளைகளை திருமணத்துக்கு முந்தி வெல போக வேண்டிய சரக்குனு அப்பா அம்மா பொத்தி பொத்தி வளர்ப்பாய்ங்க. அதுகளும் மை தீட்டி, பவுடர் போட்டு,பொட்டு வச்சு நல்லாவே ஒர்க் அவுட் பண்ணும். மார்க்கெட்டிங் தேவைகள். கண்ணாலத்துக்கு அப்புறம் ? இதெல்லாம் குறைஞ்சு போயிரும். அதான் ஒருத்தன் தலைல கட்டியாச்சே.
ஒன்னை பெத்துப்போட்டுட்டா இயற்கையும் தன் தேவை (இனப்பெடுக்கம்) நிறைவேறிருச்சுனு அடக்கி வாசிக்க ஆரம்பிச்சுருது. இவனுக்கும் எத்தனை முறை தொட்டது, எத்தனை முறை நட்டதுனு சலிப்பு தட்ட ஆரம்பிச்சுருது. மேலும் இங்கன இவன் மைண்ட் செக்ஸுக்கு மாற்றா உள்ள பணம்,பதவி ,அதிகாரம் இத்யாதி மேல டைவர்ட் ஆக ஆரம்பிச்சிட்டிருக்கும். பெண்டாட்டி பிரசவ கால உபாதைகள் இவனை அண்டவிடாம அடிக்கவே இப்படி டைவர்ட் ஆயிர்ரான்.
உண்டாகறதுக்கு முந்தியாச்சு 7 -23 பேலன்ஸ் ஆகலைன்னாலும் அட இன்னைக்கில்லன்னா நாளைக்கு நடக்காதானு ஒரு எதிர்பார்ப்பாவது இருக்கும். வயித்துல வாங்கிட்ட பிறவு குழந்தை பிறப்பு குறித்த பயங்கள். வாந்தி ,மயக்கம் இத்யாதியால சரியா திங்காத களைப்பு,பலகீனம் இத்யாதி. பிரசவத்துக்கப்பாறம் டீலாயிர்ரது இதெல்லாமே ஒரு ஆணை செக்ஸுக்கான மாற்றை நோக்கி விரட்டுது. அவன் மனம் அதுலயே தங்கி போகுது.அவனோட செக்ஸ் பவரும் மங்கிப்போகுது. இங்கே பெண்டாட்டி மனம் ஏங்கி போகுது
சரிங்கண்ணா இதெல்லாம் தெரிஞ்ச கதைதானே இதுக்கு சொல்யூஷன் என்னனு நீங்க பரபரக்கறிங்க. வரேன் மேட்டருக்கு வரேன். அதுக்கு முன்னாடி சின்ன உபகதை.
புது கல்யாண சோடி. கண்ணாலம் முடிஞ்சு பெண் வீட்டுக்கு போறாய்ங்க. பெண் வீடு இருக்கிற தெருவுல நடந்துபோறாய்ங்க.அப்போ கல்யாண பொண்ணு ஒரு வீட்டுக்குள்ள போச்சு அஞ்சு நிமிசமாச்சு வரலை.பத்து நிமிசமாச்சு வரலை. கால் மணி நேரமாச்சு வரலை.மாப்பிள்ளை நடுத்தெருவுல நிக்கறார். நெளியறார்.
அங்கனருந்து அவிக வாழ்க்கைல நிம்மதியில்லே. மாப்பிள்ளை சாருக்கு என்னடா சந்தேகம்னா கண்ணால பொண்ணு அந்த வீட்ல எவனோடவோ ஆட்டம் போட்டுட்டு வந்தான்னு.
இன்னொரு உப கதை நம்ம ஃப்ரெண்டு தங்கச்சி கண்ணாலத்துக்கு ஃபோட்டோகிராஃபரை ஏற்பாடு பண்ணியிருந்தாய்ங்க.அவனும் சின்சியரா வந்து பளீர் பளீர்னு ஃப்ளாஷ் அடிச்சு நிறைய ஃபோட்டோ எடுத்தான்.ஆனால் ஆல்பத்தை கையில கொடுக்கறது அப்பாறம். கண்ணுலயே காட்டலை. மாப்பிள்ளை வீட்டுக்காரவுகளுக்கு சந்தேகம் ஆரம்பிச்சுருச்சு.
ஆக இந்த கண்ணாலம், தாம்பத்யம் மேட்டர்ல சின்சியரா நடந்துக்கறது எவ்ள முக்கியமோ அதை முக்கியம் சந்தேகத்துக்கப்பாற்பட்ட வகையில நடந்துக்கறது .
உபகதைகள் போதும் விஷயத்துக்கு வரேன். இந்த சமாசாரத்துல அப்பா,அம்மாவோட ரோல் ரெம்ப இம்பார்ட்டன்ட். செக்ஸ் பத்தின அறிவை ஊட்டலைன்னா பரவாயில்லை. கு.ப அருவறுப்பூட்டாம ,அச்சமூட்டாம இருந்தாலே போதும்.
"ஹும் உங்கப்பனை கட்டிக்கிட்டு நான் பட்ட பாடு இருக்கே. கண்ணாலத்துக்கு மிந்தி எப்படியிருந்தேன் தெரியுமா? இப்பபாரு.. நானும் என் அவதாரமும்"னு சொல்லாத மம்மியில்லை.
"ஹும் உங்காத்தாளை கண்ணாலம் கட்டறதுக்கு மிந்தி நான் தான் காலேஜ் ஹீரோ.இப்பப்பாரு வழுக்கையும்,தொந்தியும்,பிருஷ்டமுமா மாமா மாதிரி ஆயிட்டன்"னு சொல்லாத டாடியும் ரெம்ப கம்மி.
இது பசங்க மைண்டை எப்படியெல்லாம் பாதிக்கும்னு அவிக நினைக்கிறதே இல்லை.
ஒரு குழந்தை இந்த பூமிக்கு வந்த பிறகு அதுக்கு கிடைக்கிற முதல் கம்பேனியன் அம்மாதான். அம்மா மடிய விட்டு இறங்கின பிறகுதான் அப்பன்.ஆயி எல்லாம். ஆண் குழந்தை விஷயத்துல அவன் டீன் ஏஜை தொட்ட உடனே இந்த மொதல் கம்பேனியனே அவனை விலக்க ஆரம்பிக்கிறாள்.
"தத்.. எருமை மாதிரி மேல விழாதே தள்ளி நில்லு" . இந்த திரஸ்காரம் அவனை சைக்கலாஜிக்கலா ரெம்ப பாதிக்குது. அதனால அவன் ரெபலா, அர்ரகன்டா மாறிர்ரான். தன் எதிர்ப்பை பல விதத்துல காட்டறான்.
ஆனா டீன் ஏஜ்ல கூட பெண் குழந்தைகள் ஓரளவாச்சும் பெற்றோரோட நல்ல கம்யூனிகேஷனோட இருக்க காரணம் அவளோட மொதல் கம்பேனியனான தாயுடனான நல்லுறவு தொடருது. இன்னம் சொல்லப்போனா "அவ என்ன சின்ன குழந்தையா? அவளுக்கும் எல்லாம் தெரிய வேண்டியதுதானே"ங்கற அங்கீகாரமும் நெருக்கமும் கிடைக்கறது.
இதனால அந்த பெண்குழந்தை புதிய உறவுகளை பத்தி பெருசா கனவு காணறதில்லை.
ஆனால் ஆண்குழந்தை விசயத்துக்கு வந்தா ஏற்கெனவே அம்மாவை தன் கிட்டருந்து பிரிக்கிறார்னு அப்பா மேல ஊமை கோபம் ( ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ்) . டீன் ஏஜ்ல அம்மாவும் கழட்டிவிட புதிய உறவுகளுக்கு ஏங்க ஆரம்பிக்குது அவன் மனசு.
தினசரி உங்க காதுக்கு வர்ர காதல் கதைகள்ள கூட பார்த்திருக்கலாம். பையன் என்னவோ என் வீட்ல உள்ளவுக செத்தாலும் சரி நீ வா கண்ணால கட்டிக்கிடலாம்னு கூப்டுவான். ஆனா பொண்ணுதான் எங்க வீட்ல ஒத்துக்கிட்டாதாம்பா.
அவளோட குடும்பத்துல அவள் இடம் கம்ஃபர்ட்டபிள், ப்ராம்ப்ட்,பர்ஃபெக்ட் ,சேஃபா இருக்கு. ஒரே ஒரு குறைதான் அது செக்ஸ். இந்த ஒரே ஒரு மேட்டருக்காகத் தான் அவ கண்ணாலம் கட்டிக்கிட்டு உறவையெல்லாம் அறுத்துக்கிட்டு புகுந்த வீடு வர்ரா.
இவளுக்கு பிறந்த வீட்ல கிடைச்சிட்டு இருந்த கம்ஃபர்ட்டபிள், ப்ராம்ப்ட்,பர்ஃபெக்ட் ,சேஃப் பொசிஷன் புகுந்த வீட்ல கிடைக்காது அது கன்ஃபார்ம். அட் தி சேம் டைம் இவ எந்த ஒரே ஒரு விஷயத்துக்காக இடம் மாறினாளோ அந்த ஒரே ஒரு விஷயத்துல கூட ஏமாற்றம் ஏற்படும்போதுதான் தாய் வீடு,மாமியார் வீடு ஷட்டில் பயணங்கள் ஆரம்பிச்சுருது.
இதுக்கு பெற்றோர் என்ன பண்ணனும்?
1.தங்கள் திருமண வாழ்வு குறித்த கருத்துக்களை டிக்ளேர் பண்ண கூடாது. தெலுங்குல ஒரு சொலவடை உண்டு " பில்லல்னி கன்டாமு கானி வாரி தலராதல்னி கனலேமுகா"
நம்மால குழந்தைகளை மட்டும் தான் பெத்துக்க முடியும். அவிக தலையெழுத்தை பெத்துக்க முடியாதில்லையா? அவிக புதுசா ஆரம்பிக்கட்டும். வாழ்ந்து பார்க்கட்டும். அவிகளுக்குனு ஒரு கருத்து உருவாகட்டுமே.
2.முடிஞ்சவரை தங்கள் திருமண வாழ்வின் அவலங்கள் தங்கள் குழந்தைகளுக்கு தெரியாம பார்த்துக்கனும். இவிக வெளிச்சம் போட்டு காட்டற அவலங்கள் பருவ வயசுல, இளமை துடிப்புல உறைக்கறதில்லைதான்.ஆனால் பசங்களோட மேரீட் லைஃப் கசக்க ஆரம்பிக்கற பீரியட்ல இதெல்லாம் தேவகுமாரன் மாதிரி உயிர்த்தெழுந்து ஆட்டி வைக்க ஆரம்பிச்சுருது.பிரச்சினையை காம்ப்ளிக்கேட் பண்ணிருது. பையன் " அய்யய்யோ இனி நம்ம நிலையும் நம்ம அப்பன் மாதிரி ஆயிருமா"னு அரண்டு போயிர்ரான். பொண்ணு "அய்யய்யோ இனி நம்ம நிலையும் அம்மா மாதிரி ஆயிருமா"னு அரண்டு போயிர்ரா
3.பாடாவதி சினிமாங்களை பார்த்து என்னென்ன இழவையோ கத்துக்கிடறாய்ங்க. தமிழ் சினிமால ஹீரோவான 55 வயசு மகனை , 40 வயசு தாய் அணைச்சு, நெத்தில முத்தமிட்டு பாசம் காட்டறதை தாய்மார்களும், , பழைய வில்லன் நடிகர் தன் மகளான லேட்டஸ்ட் ஹீரோயினை அணைச்சு தன் பாசத்தை காட்டறதை தந்தை மார்களும் ஏன் பழக்கப்படுத்திக்க கூடாது.
ஒரு சலூன்ல ரெண்டு எலிகள் அணைச்சிட்டிருக்கிற போஸ்டரை பார்த்தேன் (ரெம்ப வருஷத்துக்கு மிந்தி) அதுல ஒரு வசனம் " எ ஹக் ஒர்த் தவுசண்ட் வோர்ட்ஸ்" ஒரு அணைப்பு ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். ராஜசேகர் ரெட்டி செத்து ஒரு வருஷம் ஆகப்போகுது. இன்னைக்கும் அவரை நினைச்சு கண் கலங்கற சனம் லட்சக்கணக்குல இருக்காய்ங்க. ஒரு ஆள் அறிமுகப்படுத்தப்பட்டதுமே கை குலுக்கி தோள்ள ஒரு தட்டு தட்டி லேசா அணைச்சுக்கறது ஒய்.எஸ்.ஆரோட ஸ்டைல். அவர் நினைவுகள் இன்னம் பசுமையா இருக்க இந்த ஸ்டைல் கூட காரணமா இருக்கலாம்.
ஆகக்கூடி ஆண்குலத்துக்கு சிறப்பா நான் சொல்ல விரும்பறது என்னன்னா புதிய உறவுக்கு ஏங்கறதுல தவறில்லை. ஆனால் ஏற்கெனவே உள்ள உறவுகளை இழந்துட்டோம்னு நினைச்சு ஏங்கறது தவறு.
இது புது உறவின் வரவுக்கு பிறகு சில லொள்ளுகளை ஏற்படுத்திருதுங்கண்ணா. ஏற்கெனவே ஃபேட் ஆயிட்ட உறவுகள் புதிய உறவு காரணமா தங்கள் முக்கியத்துவம் எங்கே மொத்தமா குறைஞ்சு போயிருமோனு பதறி தங்களோட ஆதிக்கத்தை நிலை நாட்ட துடிப்பாய்ங்க. இந்த இழவெடுத்த பாலிடிக்ஸ்ல உங்க தாம்பத்யம் ஃபணாலாயிராம பார்த்துக்கங்க.
செக்ஸுங்கறது 15 நிமிஷம் மேட்டரோ, அல்லது 90 நாள் மேட்டரோ கிடையாது துரை. மனித வாழ்வின் ஆரம்பம் நடு எல்லாம் அதுதான். (முடிவும் அதுதானு நினைச்சா நாறிருவிங்க) ஆன்மீகம்ங்கற நீச்சல் குளத்துல குதிக்க வசதியான விசைப்பலகை செக்ஸுதான்.
நீங்க படிக்கறதும், வேலை தேடறதும், வண்டி வாங்கறதும்,வித விதமா ட்ரஸ் பண்றதும் பலான லைஃபுக்காகத்தான். எதுக்காகவும் அதை விட்டுக்கொடுத்துராதிங்க.
பணம்,பதவி,அதிகாரம் ஏன் சன்யாசம் கூட செக்ஸுக்கு மாற்றுதான். மாற்றுகள் எப்பவும் முழு திருப்தியை தராது . மறுபடி அசலுக்கு திரும்ப வேண்டியதுதான். அப்ப டூ லேட் ஆயிருச்சுன்னா திவாரி கதையாயிரும். சாக்கிரதை.
லவ்ஸு பண்றியா? பண்ணு வேணாங்கலை. அவளை ஜஸ்ட் பார்த்துட்டே இருந்தா போதும்பா வேற எதுவும் பண்ண வேணாம்னு பீலா விடாதே. விட்டாலும் நீ அதை நம்பாதே.
கேபினெட் எவ்ள அழகா இருந்தாலும் உள்ளாற பேட்டரி இல்லைன்னா வேஸ்டு. பேட்டரில சார்ஜ் இல்லைன்னா வேஸ்ட். மொபைல் வேலை செய்யலைன்னா அதைவிட வேஸ்டு. கால் பேசறச்ச கட் ஆயிட்டாலே என்னமா கடுப்பாகறிங்க.
அப்படியா பட்டது பலான நேரத்துல படக்குனு எல்லாமே கொட்டிப்போயி கொடியிறங்கிப்பூட்டா என்னமா கடுப்பாகும்.அதனால ஆண்மைய காப்பாத்திக்கற வழிய பாருங்க.
ஈர கோவணம் கட்டினா கம்கட்டெல்லாம் நாறிப்போயிரும். ஆண்மைய காப்பாத்தறதுன்னா ஜெனரல் ஹெல்த் ரூல்ஸை மெயின்டெய்ன் பண்றதுதான். பசிச்சு திங்கறது, அளவோட திங்கறது,ஈசியா செரிக்கிறதை மட்டும் திங்கறது, வேளையோட திங்கறது, சத்தானதை திங்கறது. டைட் ஃபிட் போட்டு விதைய சூடேத்தி நசுக்காம பார்த்துக்கறது. வண்டி வாகனம்னு ஏறி நாயா பேயா அலைஞ்சா ராத்திரி டென்டெக்ஸ்ல மாடர்ன் ஆர்ட்தான். அல்லது மறு நா கழியாது. பான் பராக், ஹன்ஸ், ஜரிதா இதெல்லாம் பேட்டரிக்கு ஆப்பு மாப்பு. அடக்கி வாசி.
7 - 23 ஞா இருக்கில்ல. ஆணுறுப்பு இன்செர்ட் ஆன பிறகு 7 அசைவுல அண்ணன் ஆட்டம் க்ளோஸ். அவளுக்கு 23 அசைவுகள் தேவைப்படுது. வித்யாசம் 16. இந்த 16 க்கு வழி என்ன ரோசி.
செக்ஸுன்னா அது வெறுமனே இன உறுப்பு தொடர்பான மேட்டருனு நினைச்சுரகூடாது. ஸ்டார்ட்டிங் பாயிண்ட் உன் மனசு. மனசுல அதை பத்தின குழப்பம்,சந்தேகம், பரபரப்பு,பதைப்பு,மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் இதெல்லாம் இருந்தா வேலைக்காகாது.
சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆகனும். கில்மா மேட்டர்ல நின்னு விளையாட இன்னம் நிறைய டிப்ஸ் இருக்கு. அதையெல்லாம் அடுத்த பதிவுல பார்ப்போம்.