"ஆரா"ங்கற வார்த்தைக்கு ரெண்டு அர்த்தம் இருக்கு. மெடிக்கலா ஒரு ஆரா இருக்கு. யோகத்துலயும் ஒரு ஆரா இருக்கு.
மனித உடலை சுற்றி ஒரு ஒளி வளையம் இருக்கிறதா சொல்றாய்ங்க. ஒரு ஆசாமியை கும்மிருட்டுல உட்கார வச்சு இன்ஃப்ரா ரெட் ரேஸ் உதவியோட படம் பிடிக்கிற கேமரால படம் பிடிச்சா இந்த ஒளி வளையத்தை பார்க்கலாம்னு எங்கனயோ படிச்சிருக்கேன். அதை "ஆரா" ன்னு சொல்றாய்ங்க.
சாமி படங்கள்ள ( அண்ணே நான் பலான சாமியாருங்களோட படங்களை சொல்லலே) சாமிங்க தலைக்கு பின்னாடி சங்கு சக்கரம் கொளுத்தி விட்டாப்ல இருக்குமே அதேதான். அது மன்சங்களும் இருக்குதுனு ஒரு தியரி.
இப்போ நான் உட்கார்ந்து தட்டச்சிக்கிட்டிருக்கிற சேரை விட்டு நான் எழுந்து போயிட்டாலும் குறிப்பிட்ட சமயம் வரை என் உடலின் அவுட் லைன் வடிவத்துல அந்த ஒளி இருக்கும்னு சொல்றாய்ங்க.
நான் பீலா விடறேனு கமெண்ட் போடாம இருக்கிறதா வாக்கு கொடுத்தா என் அனுபவத்தை கடாசில சொல்றேன்.
மேற்படி ஆராங்கறது பை பெர்த் இருக்கலாம். இல்லேங்கலை. ஆனால் இது நிலையானதில்லே. அந்தந்த மனிதர்களோட சிந்தனை ,செயல்பாடுகளை பொருத்து இதன் அளவு நிறம் மாறும்ங்கற பாய்ண்டை வச்சு நான் இந்த கான்செப்டை நம்பறேன். (இதுக்கு என் அனுபவமும் காரணம்)
மேற்படி விதியிலருந்து என்ன தெரியுது?
மொள்ளமாரி,முடிச்சவிக்கி வேலைகள் செய்துக்கிட்டிருந்தா ஆட்டோ மேட்டிக்கா அந்த ஆரா ஜவுளி கடல்ல ஆடிதள்ளுபடில வாங்கின சேலை மாதிரி வெளுத்து போயிரும். சுருங்கி போயிரும்.
அதே மாதிரி சுய நலம் விட்டு,பொது நலத்துக்காக எதையாச்சும் செய்ய ஆரம்பிச்சா இந்த ஆராவோட அளவு பெருகும், நிறம் மாறும். இதுக்கும் ஆத்மாவுக்கும் எந்த தொடர்புமில்லே.
இந்த ஆராங்கறது பாடிய சுத்தி ஒரு அவுட் லைன் மாதிரி இருக்கும்னு சொல்றாய்ங்க. தாய்குலம் புடவை பார்டரோட அகலத்தை வச்சு ஸ்டேட்டஸை கேல்குலேட் பண்றாப்ல யோகால இருக்கிறவுகளோட தகுதிய இந்த ஆராவோட அகலத்தை வச்ச் கேல்குலேட் பண்ற வழக்கம் இருக்கு. மகாவீரர் எங்கன இருக்காரோ அவரை சுத்தி ஒரு கி.மீ பரப்பளவுக்கு யாரும் கெட்டதை நினைக்க முடியாதாம், செய்யமுடியாதாம். ஏன்னா அவரோ ஆரா அந்த பரப்புல பரவியிருக்கும்னு ஒரு தகவல்.
உங்க ஊர்ல சர்க்கஸ் வந்தப்ப கவனிச்சிருப்பிங்க. அவிக ஒரு பவர் ஃபுல் விளக்கை வச்சிருப்பாய்ங்க. அது சர்க்கஸ் கூடாரத்து உச்சில பொருத்தப்பட்டிருக்கும் .அது ரங்க ராட்டினம் மாதிரி சுழலும் அதனோட வெளிச்சம் ஊர் முழுக்க ஒரு ரவுண்ட் அடிக்கும்.
இந்த ஆராவையும் அப்படி வச்சுக்குவமே.
இந்த ஆராவை படம் பிடிக்க முடியும், அதன் கலரை கொண்டு அந்த மனிதனோட குண நலனை கணிக்க முடியும்னெல்லாம் சொல்றாய்ங்க. எது எப்படியோ ஒழிஞ்சு போவட்டும்.. இந்த ஆரா சமுதாயத்துல நல்ல அம்சங்களையெல்லாம் பரப்பும்ங்கற போது கொஞ்சம் போல வளர்த்துக்கிட்டாதான் என்ன?
ஆரா வளர ஒரே கண்டிஷன் சுய நலம் கூடாது. உங்கள்ள எத்தனை பேர் ரெடி?