Showing posts with label Bagavath Geetha. Show all posts
Showing posts with label Bagavath Geetha. Show all posts

Saturday, August 28, 2010

கீதை ஒரு உட்டாலக்கடி : 16

அண்ணே வணக்கம்ணே,
கீதை ஒரு உட்டாலக்கடி தொடர்பதிவுக்கு எதிர்வினையை எதிர்பார்த்து கண்ணே பூத்து போன நிலைல அய்யர் தி கிரேட்னு புது கேரக்டர் முளைச்சிருக்கு.  பாவம் பைல்ஸ் கம்ப்ளெயிண்ட் உள்ள பார்ட்டி  போலிருக்கு. சரக்கே இல்லாம ஒரு கமெண்டை போட்டிருக்கு. ஓஞ்சு போவட்டும் மொத கமெண்டாச்சேனு விட்டுட்டன்.
இவராச்சும் சரக்கு உள்ள கேஸா? இல்லை இதுவும் ஸ்மார்ட் மாதிரி டுபுக்கானு வெய்ட் அண்ட் சீ.

சரி மேட்டருக்கு வந்துர்ரன்.கிட்ணர் சொல்றாரு..

//ஆகாயம் என்பது என்ன? அது எதிலே ஒட்டிக்கொண்டிருக்கிறது.ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட ஒரு கலவை அந்த ஆகாயம்//

பாவம் அந்த காலத்து அசம்ப்ஷன் இது. கீதாசிரியரான அய்யரு அந்த காலத்து பிரமிப்பை , அசம்ப்ஷனை இட்டு நிரப்பியிருக்காரு.

இப்போ விஞ்ஞானிங்க நிறையவே கண்டுபிடிச்சாச்சு. பிக் பேங்க்  நிகழ்ந்த சமயம் ஏற்பட்ட வெப்பத்தின் காரணமா கேலக்ஸி விரிவடைஞ்சுகிட்டே போகுதுனு சொல்றாய்ங்க. இன்னொரு பக்கம் பிக் பேங் சூடு ஆறி  கேலக்ஸி  சுருங்கிக்கிட்டே வருதாம்.

கூகுல்ல போய் ஆகாயம்னு அடிச்சு தேடினா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதாசிரியருக்கு தெரியாத டேட்டா  எல்லாம்  ஏழுமலையான் உண்டில காணிக்கை மாதிரி கொட்டோ கொட்டுனு கொட்டும்.

//அது போலத்தான் ஆத்மாவும்.அது எந்த தேகத்தில் இருந்தாலும் தேகத்தோடு ஒட்டுவதில்லை//

இந்த ஆத்மாங்கறதே சந்தேகாஸ்பதமான மேட்டர். யோக சாஸ்திரம் சொல்ற சக்கரங்களை பத்தி ஓஷோ சொன்னது ஞா வருது. பை பெர்த் இந்த வீல் எல்லாம் கிடையாதாம். அவனவன் சாதனையை பொருத்து உருவாகுமாம்.( மூளைல புது கனெக்சன் உருவாகறாப்ல).  ஆத்மா சமாசாரம் கூட  இதே கேட்டகிரிதான் . ஆனால் இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதைய பார்த்திங்கண்ணா ஆத்மாவுக்கு அப்படியே படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருக்காய்ங்க.

நீரில் நனையாது, நெருப்பில் வேகாது எட்செட்ரா. கல்வியை பத்தின பழந்தமிழ் பாட்டு ஒன்னிருக்கு.அதுல கல்விக்கு எக்ஸாக்டா இதே உவமைகள் சொல்லப்பட்டிருக்கு.

//ஒரே சூரியன் உலக முழுமைக்கும் ஒளி தருகிறான்.//
இது எத்தனாம் பெரிய ஹம்பக்னு ஏற்கெனவே விவரிச்சிருக்கேன்.  நட்சத்திரங்களோடு ஒப்பிட்டா சூரியன் எல்லாம் ஜுஜுபி.

//அது போலவே ஆத்மா தேகத்தை ஒளிப்பெற செய்கிறான்//
மனித தேகத்துக்கென்னவோ ஒரு ஒளி இருக்குங்கண்ணா. அதை பத்தி ஆரா ங்கற தலைப்புல தனிப்பதிவே போட்டிருக்கேன் படிங்க. ஆனால் இந்த சூரியன் உலகம்ங்கற உவமைதான் கிருஷ்ணர் ரேஞ்சுக்கு ஒத்துவராம உதைக்குது


//பிரம்மாவே எனது கர்ப்பப்பை//
அடடா பிரம்மா  ஆண் இல்லையா? அட பாவமே ஆணாவே இல்லாமயா தான் படைச்ச சரஸ்வதியை தானெ மோகிச்சாரு. ஆணாவே இல்லாமயா எவளோ ஆடினா வீர்யத்தை  நழுவ விட்டாரு. இல்லை அந்த காலத்துலயே பால் மாற்று ஆப்பரேஷன் எல்லாம் நடை முறைல இருந்ததா?  கர்பப்பைன்னா அப்ப மாதவிலக்கு கூட நடக்கனுமே.

// அதில் நான் விதையை விதைக்கிறேன். அந்த விதையிலிருந்து எல்லா உயிர்களுமே தோன்றுகின்றன.//

சரியா போச்சு அப்ப கிருஷ்ணர் ஒரு வயாக்ரா ஃபேக்டரியே வச்சிருக்கனும்.

//எந்த கர்பப்பையில் எத்தனை விதமான வடிவங்கள் படைக்கப்பட்டாலும் அவற்றுக்கெல்லாம் பரபிரம்மமே தாய்.//
பாருங்க போன பத்தில பிரம்மா தான் கர்ப்பப்பைனு வருது அதுக்குள்ள ட்ராக் மாறி பரபிரம்மமே தாய்னு வருது.  அப்ப கிருஷ்ணர் பரபிரம்மமில்லையா?  தான் தான் பரபிரம்மம்னா பரபிரம்மமாகிய நானே தாய்னு சொல்லியிருக்கனுமில்லையா?

அடுத்த வரியை பாருங்க

// நான் விதையை தூவி விளைச்சலை உண்டாக்கும் தந்தை //

நம்ம படைப்பே அடல்ட்ரிலதான் ஓடுது போல. இதெல்லாம் பிராமண குசும்பு. விஷ்ணுமயம் ஜக்த்ம்பானுக. சரி ஓஞ்சு போவட்டும்னு விட்டா  ராஜாவும்  விஷ்ணுவும் வேற இல்லேம்பானுங்க. ராஜா தான் ஊர் மேஞ்சிக்கிட்டிருந்தாருன்னா கிருஷ்ணரை கூட பொலி காளையாக்கிடாய்ங்க பாருங்க. ஊர் உலகத்துல உள்ள கர்ப்பப்பைல எல்லாம் விதைக்கிறதே இவர் வேலையாம். எந்த கர்பப்பையில் எத்தனை விதமான வடிவங்கள் படைக்கப்பட்டாலும்  ........................  நான் விதையை தூவி விளைச்சலை உண்டாக்கும் தந்தை.

கிருஷ்ணருக்கு நரம்பு தளர்ச்சி  வந்துராதோ?

இங்கிலீஷ் கிராமர்ல "டிகிரி" ன்னு ஒரு கான்செப்ட் வரும். பாஸிட்டிவ் டிகிரி,கம்பேரிட்டிவ் டிகிரி, சூப்பர் லேட்டிவ் டிகிரி.  குட்,பெட்டர்,பெஸ்ட். இதான் டிகிரீஸ். இந்த விதியை வச்சு அய்யரு ஒரு தியரியையே டெவலப் பண்ணிட்டாரு.
அதான்  தமோ,ரஜொ,சத்வ எனும் முக்குணங்கள்.

இவரை விட கண்ண தாசனே பெட்டர். ஒருவன் மனது  ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடானு வைடா ரோசிச்சிருக்காரு.

இப்ப இந்த முக்குணங்களை பத்தி கீதை ( இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதை) என்ன சொல்லுதுனு பார்ப்போம்.

//தமோ,ரஜொ,சத்வ என்னும் குணங்கள் இயற்கையில் இருந்து தோன்றியவை.//

இதை கூட ஏதோ தியரி இழவு ஓஞ்சு போவட்டும்னு விட்டுரலாம். இந்த மூன்று குணங்கள் கூட பர்மெனென்டா இருக்க வாய்ப்பே கிடயாது. மாறி மாறி வரும். ஜோதிஷத்துல முக்குண வேளைகள்னு தனி கான்செப்டே இருக்குங்கோ.

அடுத்த வரிதான் இன்னம் சில்லியா இருக்கு.

//இந்த குணங்கள் தான் அழிகின்ற உடம்போடு அழிவற்ற ஆன்மாவை படைக்கின்றன//

அழிகின்ற உடம்பை மட்டும் படைக்கின்றனன்னா ஒரு மாதிரியா அஜீஸ் ஆயிரலாம். ரஜோ குணம் மேலோங்கும்போது பெண்டாட்டிகிட்ட " ஏய்  வரப்ப உனக்கு பட்டுப்புடவை, லாலா கடை அல்வாவோட வரேன். நீ ரெடியாயிருன்னுட்டு கில்மா வேலைல குதிச்சா அன்னைக்கு சேஃப்டி டேஸா இல்லாம இருந்தா நம்மாளு அதுக்கு மிந்தி ஏழெட்டி தினமாச்சும் நல்ல பிள்ளையா இருந்திருந்தா ஒரு அழிகின்ற உடம்பு படைக்கப்பட வாய்ப்பிருக்கு.

அதே மாதிரி ஞாயிற்றுக்கிழமை. பத்து மணி வரை படுக்கைல புரண்டு கிட்டிருந்து தமோ குணம் மேலோங்கின வேளைல குளிக்கிறதுக்கு மிந்தி ஒரு ஷோ போட்டா என்னன்னு கில்மால இறங்கினா அன்னைக்கு சம்சாரத்துக்கு சேஃப்டி டேஸா இல்லாம இருந்தா நம்மாளு அதுக்கு மிந்தி ஏழெட்டி தினமாச்சும் நல்ல பிள்ளையா இருந்திருந்தா ஒரு அழிகின்ற உடம்பு படைக்கப்பட வாய்ப்பிருக்கு.

ஆனா கிருஷ்ணர் //அழிகின்ற உடம்போடு அழிவற்ற ஆன்மாவை படைக்கின்றன//ங்கறாரே  இங்கன தான்  குழப்பம் கும்மியடிக்குது. ஆன்மா பிறப்பதுமில்லை. சாகிறதுமில்லேனு இதே கீதையில சொல்லிட்டு இப்படி சொதப்பறாரே.

Wednesday, August 25, 2010

பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி

பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி

பகவத்கீதைன்னா யூத்தை பொருத்தவரை ஏதோ விஜய் படத்துல கூட வந்ததே அதுவாங்கற ஐடியா தான் இருக்கும். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கோர்ட்ல சத்திய பிரமாணம் வாங்கற சீன் ஞா வரும். மிஞ்சிப்போனா வெளியூர் போன ஹீரோ திரும்பி வரச்ச தாத்தா அ பாட்டிக்கு "உங்களுக்கு பகவத்கீதை" ன்னிட்டு தர்ர சீன் ஞா வரும்.





ஆந்திராவுல கண்டசாலா பகவத்கீதை கேசட் ரெம்ப பிரபலம். அதை எடிட் பண்ணனும்னு எனக்கு ஒரு ஐடியா. கண்டசாலா ஞா இருக்குங்களாண்ணா. "கல்யாண சமையல் சாதம்" பாட்டு ஞா இருக்கா? அந்த குரலை வச்சுக்கிட்டு அர்ச்சுனனோட வெர்ஷனுக்கும் அவர் குரலே பலான யோகம் , பலான யோகம் முற்றும்ங்கற மாதிரி இணைப்புரைக்கும் அந்த குரலே. அர்ச்சுனனோட வெர்ஷனை எஸ்.பி.பால

சுப்பிரமணியம் குரல்ல ரெக்கார்ட் பண்ணி எடிட் பண்ணுங்கப்பா.



வேலை வெட்டினு இருக்கிறச்ச பணம் பதவின்னு அங்காடி நாயா அலைய வேண்டியது ரிட்டையர் ஆனதும் காலிகோ பைண்ட் பகவத் கீதை புஸ்தவம் வாங்கி வச்சுக்கிட்டு சீன் போட வேண்டியது. இதுவா வாழ்க்கை? தூத்தேறிக்க.



கீதைய கிழிக்கிறதோட நிப்பாட்டுவன்னு நினைக்காதிங்கண்ணா. இந்த தொடரை எழுத கீதைய உன்னிப்பா படிக்கிறச்ச சில ப்ளஸ் எல்லாம் கூட கண்ல பட்டது அதையெல்லாம் வச்சு இன்னொரு தொடர் எழுத உத்தேசம். மொக்கை சாஸ்தியாயிருச்சு. விஷயத்துக்கு வர்ரேன்.



கிருஷ்ணரோட விஸ்வரூபத்தை பார்த்த அர்ச்சுனனின் புலம்பலை தொடர்ந்து கிருஷ்ணர் உதிர்த்ததா சொல்லப்படற முத்துக்களோட தரத்தை பார்த்துக்கிட்டு இருக்கோம். மேட்டருக்கு வரேன். கிஷ்டரோட அடுத்த வரிய பாருங்க



//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//



தத்துவம்ங்கற வார்த்தைக்கு நீங்க ஃபிலாசஃபினு அர்த்தம் சொல்விங்க. தமிழ்ல இதை வேதாந்தம்னும் சிலர் சொல்றாய்ங்க. இந்த தத்துவம்ங்கற வார்த்தை இந்த அர்த்தத்துல தான் செலாவணி ஆயிட்டிருக்கு.



ஆக்சுவலா தத்துவம்னா இயல்புனு அர்த்தம். உ.ம்: மனோதத்துவம்னா மனதின் இயல்பு. தத்துவம்னா அது மனித வாழ்வின் இயல்பை ஆராயக்கூடியதா இருக்கனும்.



ஆனா தத்துவம்ங்கற கேட்டகிரில அவாளாகட்டும், இன்ன பிறராகட்டும் சொல்லி வச்சிருக்கிறதெல்லாமே மனிதனை அவன் இயல்புக்கு அவனோட வாழ்வின் இயல்புக்கு எதிரா சிந்திக்க வைக்கிறதாவே இருக்கு.



ஆனா கிட்னர் என்ன சொல்றார் பாருங்க..



//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//



தத்துவம்ங்கறதே டுபாகூரு. ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வாரு " ஒரு காயிதத்துல சர்க்கரைனு எழுதி வச்சு அதை நக்கினா இனிக்குமா?" தத்துவ வாதிகள்னு சொல்லப்படறவுக சர்க்கரைனு எழுதி நக்கின பார்ட்டியா இருந்தாலும் பரவாயில்லை அதை ஒரு தாட்டி கூட , கண்ணால பார்க்காம, நாக்கால நக்காம அதை பத்தி வால்யூம் வால்யூமா எழுதி வருஷ கணக்கா பேசிட்டு போய் சேர்ந்த பார்ட்டிங்க.



ஆனால் கிட்ணர் சொல்றாரு தத்துவ அறிவால ஆத்மாவ பார்க்கிறாய்ங்களாம். நாளிதுவரை ஆத்மா பத்தி சொல்லப்பட்ட செனேரியோவ வச்சு பார்த்தா அது அறிவை ,சிந்தனையை எல்லாம் கடந்தது. ஆனால் கிட்னர் ............



//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//



தெரிஞ்சதை தான் சிந்திக்க முடியும். தெரியாததை சிந்திக்க முடியுமா? கற்பனை வேணம்னா பண்ண முடியும். அதனாலதான் தத்துவ வாதிகளை விட கவிஞர்கள் குருட்டாம்போக்குல சத்தியத்தை டச் பண்ணிர்ராய்ங்க.



சிந்தனைக்கு ஈகோ உண்டு. அறிவுக்கு ஈகோ உண்டு .ஆனால் கற்பனைக்கு ஈகோ இல்லை. அதனால தான் கற்பனை சில சமயம் சத்தியத்தை டச் பண்ணிருது. ஆனால் பாருங்க கிட்னர் சொல்றாரு சிந்தனையால ஆன்மாவ பார்க்கிறார்களாம்.



( சிந்தனை காரியமாகும். காரியத்துக்கு முந்தி சிந்திப்பாய்ங்க .சிந்தனையிலயும் சிந்தனை காரிய சிந்தனைன்னா என்னங்கண்ணா? )



தொடர்ந்து வர்ர ஸ்டேட்மென்டை பாருங்க. (இதுவும் கிட்ணரோட ஸ்டேட்மென்டுதான்)



//வேறு சிலரோ இது புரியாமல் யாராவது சொல்லக்கேட்டு அதன் படி ஆத்மாவை தேடுகிறார்கள்.//



தத்துவமே டுபாகூர். தெரிஞ்சதை தான் சிந்திக்க முடியும், தெரியாத ஆன்மாவை எப்படி சிந்திக்க முடியும்னு கிழிச்சு தொங்க விட்டாச்சு. இங்கன இன்னம் ஒருபடி மேல போய் " யாராவது சொல்லக்கேட்டு அதன் படி ஆத்மாவை தேடுகிறார்கள்"

ஆத்மா என்ன ரைஸ் புல்லிங்கா? எவனோ சொல்லக்கேட்டு தேட.



இதனோட நோக்கம் என்னடான்னா உனக்கு ஒரு மயிரும் புரியலைன்னாலும் பரவால்ல. நாங்க சொல்றதை வாய்ல கொசு போறது தெரியாம கேளு. தேட் அப்பத்தான் நாங்க உழைக்காம, உங்க உழைப்புல உண்ண முடியும்ங்கறதுதான்



கிருஷ்ணரோட லைஃப்ல நமக்கு தெரியற ப்ராக்டிக்காலிட்டிக்கு இந்த ஸ்டேட்மென்ட் கடுகளவாச்சும் பொருந்துதா பாஸு. கேள்வி ஞானத்தை ரெக்கமெண்ட் பண்ற கேரக்டரா கிருஷ்ணருது. கேள்வி ஞானத்துல திருப்தியடையற பார்ட்டியா இருந்தா கோபிகைகள் குளிக்கிற இடத்துக்கு போக வேண்டிய அவசியமே இல்லையே வேற எவனோ பார்த்துட்டு வந்து சொன்னா போதும்னு கிடந்திருப்பாரே.



அடுத்துவர்ர ஸ்டேட்மென்ட் செம காமெடி ...



//அந்த கேள்வி ஞானத்தை பெரிதாக மதிப்பவர்களும் பிறப்பு இறப்பற்ற நிலையை அடைகிறார்கள்//



ஒரு ஆளு கேள்வி ஞானத்தை பெருசா மதிக்கிற கேட்டகிரின்னா அவனுக்குள்ள எந்த விதமான கேள்வியும் தேடலும் இல்லைனு அர்த்தம். அப்படியே இருந்தாலும் கேள்வி ஞானத்துலயே திருப்தி அடையறான்னா அவனோட கேள்வி,தேடல் எல்லாம் பாசாங்குனு அர்த்தம்.



சந்தையை விரிவுப்படுத்திக்கிட்டே போறது அவாள் டெக்னிக். பாரதத்தை முழுக்கா படிச்ச சொர்கம்னுவான். அப்பாறம் குறிப்பிட்ட பார்ட்டை படிச்சா போதும்னு ரிலாக்சேஷன் கொடுப்பான். அப்பாறம் உன்னால முடியலைன்னா குறிப்பிட்ட ஒரே ஸ்லோகத்தை படின்னுவான். இதெல்லாம் ஒரு ரூபாய்க்கு சிம் கார்டு விக்கிற மார்க்கெட்டிங் டெக்னிக். இதை கிருஷ்ணர் உபயோகிச்சுருப்பாருனு நான் கற்பனை கூட பண்ண மாட்டேன். இதுவும் அவாளோட கைவரிசையாதான் இருக்கும்.



//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//

அப்ப கிட்ணர் என்னத்த கழட்டறாரு? இந்த பஞ்ச கச்சங்கள் என்னத்தை கழட்டறாய்ங்க. இயற்கை தான் அனைத்தையும் செய்யுது. இல்லேங்கலை. ஆனால் மனிதன் இயற்கையோட மீனியேச்சர். இயற்கையோட செயல்பாடுகளுக்கு மனிதனும் பொறுப்பு வகிக்கிறான். அதை அவன் உணரமுடியாம இருக்கலாம் .அது வேற கதை.



அதை அனுபவத்துல உணர்ரதுதான் ஞானம். ஞானேஸ்வரனான கண்ணன் இப்படி

//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//னு மொட்டையா சொல்ட்டு கழண்டுக்குனாருன்னா நான் எப்படி நம்புவேன். உண்மையிலயே கிருஷ்ணர் //இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//ன்னு நம்பியிருந்தா கம்சன் தன்னை கொல்றதும் இயற்கையோட வேலைதானு கழுத்தை ஆல்கஹால்ல நனைச்ச பஞ்சால தடவிட்டு காட்டியிருப்பாரே. திரவுபதி வஸ்திராபரணம் நடந்தப்ப ஹிண்டு ரிப்போர்ட்டர் கணக்கா ஸ்பைரல் நோட்புக்ல குறிப்பெடுத்துக்கிட்டிருந்திருப்பாரே.



//ஆத்மா அதற்கு காரணமன்று//



மனிதன் இயற்கையோட மீனியேச்சர். இயற்கையோட செயல்பாடுகளுக்கு மனிதனும் பொறுப்பு வகிக்கிறான்னு சொல்லி ஒரு நிமிஷம் கூட ஆகலை கிட்ணரோட ஸ்டேட் மென்டை பாருங்க //ஆத்மா அதற்கு காரணமன்று//



இயற்கையின் செயல்பாட்டுக்கு மனிதனே பொறுப்பு வகிக்கனும்னு சொன்னேன். ஞானமடைந்த ,ஆன்மாவை உணர்ந்த மனிதனில்லே பாஸு. சாமானிய மன்சனை சொன்னேன். ஆன்மாவை உணர்ந்த மனிதனுக்கு நான் தனியா சொல்லத்தேவையில்லை .. ஆட்டோ மேட்டிக்கா அவனுக்குள்ள அந்த உணர்வு வந்துரும். இன்னம் ஆன்மாவ பத்தி என்ன சொல்ல?



ஆன்மாவை மனசு,மனசை அறிவு, அறிவை அகந்தை அழுத்திக்கிட்டிருக்கிற கண்டிஷன்லயே இயற்கையோட நிகழ்வுகளுக்கு மனிதனும் பொறுப்புனு சொன்னேன்.

மேற்படி கஸ்மாலத்துலருந்தெல்லாம் கழண்டுகிட்ட ஆன்மாவ பத்தி சொல்லனும்னா அது நத்திங் பட் பார்ட் அண்ட் பார்ஷல் ஆஃப் ஆல் மைட்டி.



இயற்கை தான் இறைவன். இயற்கையோட செயல்களுக்கு இயற்கையை போலவே (இறைவனை போலவே) மனிதனும் பொறுப்பு. தன்னை அழுத்திக்கிட்டிருக்கிற மனசு,அறிவு,அகந்தைலருந்து ரிலீஸ் ஆயிட்ட ஆன்மா இயற்கையில ஒரு பாகமாயிருது. பாகம் என்ன பாகம்............. இயற்கையில இரண்டற கலந்துருது.

(இதைத்தான் நம்மாளுங்க செத்தார்ங்கறதுக்கு இயற்கை (நிலை) எய்தினாருன்னு போட்டுக்கிட்டிருந்தாய்ங்க.





ஆனா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதைல கிட்ணர் என்ன சொல்றாரு?



//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது. ஆத்மா அதற்கு காரணமன்று. என்று எவன் கண்டு கொள்கிறானோ அவனே பேரறிஞன்//



எம்மாம் பெரீ வைட் மார்க்கெட் பார்த்தியா துரை! இந்த டுபாகூர் ஸ்டேட்மென்டை எந்த கூமுட்டையும் ஆகே பீச்சே மூடிக்கிட்டு ஏத்துக்குவான். ஆத்மாங்கற வார்த்தைய எடுத்துட்டு மனிதன்னு மாத்தி பெரியார் கிட்டே காட்டியிருந்தா அவரும் இதை ஏத்துக்கிட்டிருப்பாரு.



இது ஒரு ரூபாய்க்கு சிம் காரடு விக்கிற டெக்னிக் இல்லையா? மார்க்கெட்டை வைடன் பண்ணிக்கிற தந்திரமில்லையா? அவிக உழைப்புல வாழற குயுக்தியில்லையா?



இதை கண்ணன் சொல்லியிருப்பானா? பார்ப்பனன் சொல்லியிருப்பானா? ரோசிச்சு பாருங்க

Sunday, August 22, 2010

இன்றைய கீதை அவா கைங்கர்யம்

கடந்த பதிவுல கிஷ்டரோட வி.ரூபத்தை பார்த்து அர்ச்சுனனோட பினாத்தலை சொல்லி முடிச்சிருந்தேன். ரிப்பீட்டு.........

அர்ச்சுனன் சொல்றதை பாருங்க  //கதிரும் மதியும்  கண்களாய் பெற்றாய்//
அட டுபாகூருங்களே ! ரீல் விடறதுதான் விடறிங்க நம்பறாப்ல விடலாம்லியா. உண்மையிலயே கிஷ்டர் வி.ரூபம் காட்டி அர்ச்சுனன் இப்படி உளறியிருந்தா ஒரிஜினல் கிஷ்டர் இன்னா சொல்லனு?

"இன்னாடா சொல்றெ கஸ்மாலம்..  விஸ்வமே நானா காட்சியளிக்கிற இந்த  ரூபத்துல கேலக்சிலயே லோ ஓல்டேஜ் ப்ராப்ளத்துல  டுபாகூரா கீர சூரியனும் சந்திரனுமாடா என் கண்ணுங்களா தெரியுதுன்னு திருத்தியிருக்கவேணாம். 

சரி தங்கச்சி சுபத்திராவ கட்டிக்கின பார்ட்டிங்கறதால "இன்னா மச்சான்..    நாளைக்கு நாலாங்கிளாஸ் படிக்கிற பையனுக்கு கூட மெய்யாலுமே  இது கடவுள் சொன்னதுதானா இல்லே அய்யருங்க கோர்த்து வுட்டானுங்களானு டவுட் வராப்ல பேசிட்டயே. சூரியன் சந்திரனெல்லாம் பூமிக்கு கிட்ட இருக்கிறதால பெருசா தெரீதுபா.  இதை யெல்லாம் தூக்கி சாப்பிடற நட்சத்திரமெல்லாம் இருக்கு. சிலதோட ஒளின்னா  இன்னம் பூமிக்கு வந்து சேரவே இல்லை. தொலவா கீறதால  சின்னதா தெம்புடுதே கண்டி  அதுக்குத்தான் மச்சான் வெளிச்சம் சாஸ்தின்னு கரெக்ட் பண்ணியிருக்கவேணாம்.

அதனால தான் சொல்றேன். இப்போ செலாவணில கீற கீதைக்கு ஆசிரியன் கண்ணன் இல்லே.

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு இந்த ஒரு பாயிண்டை மட்டும் எடுத்து கிழிச்சேங்கண்ணா விஸ்வ ரூப தரிசனத்துலயே 116 ஓட்டையிருக்குங்கண்ணா.

இப்போ கிஷ்ணனோட ஸ்டேட்மென்டைபாருங்க.

//உடல் வேறு மனம் வேறு ஆத்மா வேறு //
இது ஏதோ இருட்டில விட்ட அம்பு மாதிரி குன்ஸாதான் தைக்குது விட்டுருவம் அடுத்த வரிய பாருங்க

//.சிலர் தியானம் செய்து செய்து பக்குவப்பட்ட மனதால் ஆத்மாவை நேரில் பார்க்கிறார்கள்.//

ஓஷோ சொல்வாரு. மனதுக்கு வியாதி வரும். இது மேற்கத்திய தத்துவம்
மனதே வியாதி - இது கிழக்கிந்திய தத்துவம். இந்த மயித்துல தியானம் செய்தா மனசு பக்குவப்படுதாம்.

மனசு பக்குவப்பட கவிதை07 படிச்சாலே போதும். அதுக்கு தியானம் தேவையில்லே.தியானத்தோட உண்மையான நோக்கம் மனசை இல்லாம ஆக்கிர்ரதுதான். மனசுன்னா என்ன? எண்ணங்கள். எண்ணங்களை நிறுத்தி- அதன் மூலம் மனச இல்லாம ஆக்கிர்ரதுதான் தியானம்.

எண்ணங்களை நிறுத்த என்ன வழி? எண்ணங்களை கவனிக்கனும். அப்படி கவனிச்சாலே எண்ணங்களின் எண்ணிக்கை, அவற்றின் பிறப்பிலான  வேகம் குறைய  ஆரம்பிச்சுரும். ஒரு எண்ணத்துக்கும் அடுத்த எண்ணத்துக்கும்   இடையில் இடைவெளி அதிகரிக்க ஆரம்பிக்கும்.

அந்த இடைவெளிலதான் உறைக்கும்.  நான் உடலுமல்ல. மனமுமல்ல. (எண்ணங்களுமல்ல) இதுக்கெல்லாம் சம்பந்தமில்லாம நிக்கிற சாட்சின்னு (இலங்கை விவகாரத்துல ஐ. நா சபை மாதிரி)

இதையெல்லாம் நம்ம மகாசனங்க செக்ஸ் சாமியாருன்னு சொன்னாய்ங்களே அந்த ஓஷோ வாழைபபழத்தை உரிச்சு வச்ச கணக்கா சொல்லியிருக்காரு. ஆனால் இங்க பகவான் என்ன சொல்றாரு............

//தியானம் செய்து செய்து பக்குவப்பட்ட மனதால் ஆத்மாவை நேரில் பார்க்கிறார்கள்//

இதுலருந்தே தெரியலை.. இப்ப செலாவணில இருக்கிற கீதையோட ஆசிரியர் கண்ணன் இல்லே.யாரோ ஒரு அய்யரு.

உடுங்க ஜூட்

பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி

அண்ணே வணக்கம்ணே,
கிருஷ்ணருக்கும் நமக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறதால தில்லு துரை கணக்கா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதை ஒரிஜினல் கிடையாது. இதுல அவாள் கைவரிசை இருக்கு. ஏன்னா சர்வக்னரான கிருஷ்ணர்  ஸ்டேட்மென்ட் தர்ரச்ச சில்லியான  மிஸ்டேக் எல்லாம் பண்ணமாட்டாரு. அன் சைன்டிஃபிக், இல்லாஜிக்கல் கன்டென்ட் எல்லாம் அவர் வாய்லருந்து வர வாய்ப்பே இல்லைன்னு இந்த தொடர் முழுக்க எழுதிக்கிட்டு வர்ரேன். ஒரே ஒரு ஸ்மார்ட் மட்டும்  ...பேர்ல மட்டும் ஸ்மார்ட்டை வச்சிக்கிட்டு துள்ளி குதிச்சு துவண்டு பொயிருச்சே தவிர தர்ம பூமி,கர்ம பூமின்னு புகழப்படற பாரத  நாட்ல என் வாதங்களை தர்க பூர்வமா கண்டிச்சு  ஒரு பதிவு கூட வெளியாகல. இருந்தாலும் நம்ம வேலைய நாம விட்டுர முடியாதில்லையா.

கடந்த பதிவுல கிருஷ்ணர் நான் புலி, நான் சிங்கம்னு செல்ஃப் டப்பா அடிச்சுக்கிறத பார்த்தோம். அவர் செலக்ட் பண்ணி  தன்னோட ஒப்பிட்டுக்கிட்டதெல்லாம் எந்த அளவுக்கு இன்ஃபிரியர்னு பார்த்தோம்.

இப்போ  விஸ்வ ரூப கட்டத்துக்கு வந்துட்டம். என்னதான் பம்ப் அடிச்சாலும் அர்ச்சுனன் பஸ்ட் ஆன லாரி ட்யூப் மாதிரி இருக்கவே கிருஷ்ணர் அவனை நம்ப வைக்கிறதுக்காக விஸ்வ ரூப தரிசனம்  காட்டறாராம்.

யோக சாதனையின் டார்கெட்டே சாதகன்  தன்னை இந்த படைப்பின் பிரிக்க முடியாத பாகமா உணர்ந்துக்கறதுதான். தான் இந்த படைப்பின் மீனியேச்சர் ( ஃபோன்சாய்க் மாதிரி) னிட்டு அனுபவபூர்வமா புரிஞ்சிக்கிறதுதான்.  அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டுங்கறதை எக்ஸ்பீரியன்ஸ் ஆறதுதான் லட்சியம்.

நேத்து லோக்கல் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு , நம்ம லோக்கல் பத்திரிக்கைக்கு இலவச இணைப்பா (பேப்பரே இலவசம் தான் தலை !)   ஸ்ரீகிருஷ்ணரோ 108 நாமங்களை பாக்கெட் புக்கா போட்டுக்கொடுக்க ஒரு ஸ்பான்சரரை பிடிச்சேன். மேற்படி நாமங்களை தெலுங்குல அடிச்சேன். கிருஷ்ணர்னா கில்மா பார்ட்டின்னு ஒரு இமேஜ் எப்படி வந்ததோ தெரியலை. அவருடைய 108 நாமங்கள்ள ஒன்னு யோகேஸ்வராய நம:

யோகேஸ்வரனான கண்ணன் உண்மையிலயே அர்ச்சுனனுக்கு ஞானத்தை கொடுக்கனும்னா அவனோட உடல்ல ( அர்ச்சுனனோட உடல்ல) அண்ட சரா சர பிரபஞ்சங்களும் உள்ளடங்கி  இருக்கிறதை காட்டியிருக்கனும்.

பாரு ராசா !  நீ இந்த படைப்புல ஒரு பாகம். பாகம் என்ன சில்லியா... இந்த படைப்பே நீதான். என்ன.. படைப்பு கொஞ் .....சம் பெருசா இருக்கு. நீ கொஞ்சம் சிறுசா இருக்கே.   நல்லா பார்த்துக்கனு  அர்ச்சுனன் உடல்ல படைப்பு அடங்கியிருக்கிறதை த்ரீ டி எஃபெக்ட்ல ,  டி.டி.எஸ் துல்லியத்தோட  காட்டியிருக்கனும் காட்டியிருக்கனும்.

சரி ஓஞ்சு போவட்டும் திடீர்னு அந்த அனுபவத்தை அர்ச்சுனனுக்கு கொடுத்தா 6 வோல்ட் சீரியல்  பல்புல  250 வோல்ட் கரண்ட் பாஸானப்ல அவன் பஸ்மமாயிருவானு நினைச்சுருந்தா தனக்குள்ளே அண்ட சராசர பிரபஞ்சங்கள் அடங்கியிருப்பதை காட்டி  பார்த்தயா இதே தான் உன் பாடிலயும். இப்போ இதையெல்லாம் உனக்குள்ள  காட்டவும் நான் ரெடி .. ஆனா உன் பாடி ரெடியில்லைனு எஜுகேட் பண்ணியிருக்கலாம். அதை விட்டுட்டு விட்டலாச்சார்யா படத்துல எஸ்.வி.ரங்காராவ் மாதிரி மாஃப் காட்டறார்.


சரி ஓஞ்சு போவட்டும். அதை பார்க்கிற அர்ச்சுனன் தப்பு தப்பா வர்ணிக்கிறான். அதையெல்லாம் கேட்டுக்கிட்டு புராண படத்துல கிருஷ்ணர் வேஷம் போட்ட என்.டி.ஆர் மாதிரி அபய ஹஸ்தத்தை காட்டிக்கிட்டு நிக்கிறார்.

அர்ச்சுனன் சொல்றதை பாருங்க

//கதிரும் மதியும்  கண்களாய் பெற்றாய்//

(To be cont. in Next post

Monday, August 16, 2010

தலைய வெட்டிப்போட்டு யாகம்

என்னை நான் தேடி தேடி -நிந்தா ஸ்துதி - விமர்சனம் ஒரு கொலை இப்படி பல தலைப்புகள் ஸ்பார்க் ஆச்சு. மொதல்ல விமர்சனம் ஒரு கொலைன்னு தலைப்பு வச்சி ஆரம்பிச்சேன் .பவர் கட். என்னங்கடா இதுன்னு என்னை நான் தேடி தேடின்னு தலைப்பை வச்சு ஆரம்பிச்சேன். மறுபடி பவர் கட். இப்போ நிந்தா ஸ்துதிங்கற தலைப்பை எடுத்துக்கிட்டு அடிச்சிட்டிருக்கேன். மறுபடி புடுங்கிக்குதோ என்னமோ பார்க்கனும்.

( நீங்க கவலை படாதிங்க தலை.. இந்த பிக்காலிங்க வில் பவர் எல்லாம் பவர் மேல தான் வேலை செய்யும் .இவனுக இவிக தலைய வெட்டிப்போட்டு  யாகமே செய்தாலும் ஜஸ்ட் பேதி தான் புடுங்கிக்கும். ( அடுத்த ஒரு மாசத்துக்கு மலச்சிக்கல் இருக்காது. பால்,பழ செலவு மிச்சம்)

நிந்தா ஸ்துதின்னா சின்ன விளக்கம். ஸ்துதின்னா பாராட்டறதுன்னு அர்த்தம் . நிந்தா ஸ்துதின்னா திட்டித்தீர்க்கறது. இதுல ரெண்டுவிதம் இருக்கு. நாணயமான ஆளை "பொழைக்க தெரியாத ஆளுப்பா"ன்னா இது டூ இன் ஒன்.மேலுக்கு விமர்சனமா இருந்தாலும் டீப்பா பார்த்தா பாராட்டுன்னு தான் எடுத்துக்கிடனும்.

இன்னொரு விதம் நெஜமாலுமே திட்டறது. சிசுபாலன் ராஜசூய யாகத்துல  கிருஷ்ணனை திட்டின மாதிரி. தெய்வம் எல்லாத்தையுமே ஏத்துக்குது.  ஏற்கெனவே பல தடவை சொல்லியிருக்கேன்ன்ன ஐ வாஸ் எ ப்ரெட் ஹன்டர் (சோத்துக்கு லாட்டரி).

கட்டக்கடைசியா லட்சுமியை வசியம் பண்ண ஆரம்பிச்சேன். இந்த யோசனைக்கு மிந்தி அம்மனோட சத நாமாவளியை எடுத்துக்கிட்டு ஒவ்வொரு பேரா அனலைஸ் பண்ணி ஸோ அண்ட் ஸோ காரணங்களால இந்த பேரு நாட் அப்ளிக்கபிள். இனி 99 வச்சுக்க. ஸோ அண்ட் ஸோ காரணங்களால இந்த பேரு நாட் அப்ளிக்கபிள். ஸோ 98 வச்சுக்கன்னு விமர்சனம் பண்ணி ஒரு நீண்ட கவிதை தெலுங்குல எழுதினேன்.

ஆத்தாளுக்கு நிந்தா ஸ்துதின்னா ரெம்ப பிடிக்குமாம். பெரியார் இந்த ஸ்டைலதான்  அப்ளை பண்ணி கடவுளுங்களை சகட்டு மேனிக்கு விமர்சனம் பண்ணி புனிதரானாரு.

விமர்சனமும் ஒரு கொலைதான். என்ன அது நியாயமானதா இருந்தா எதிராளியோட ஈகோவை கொன்னு அவனை மேலும் பரிணமிக்க செய்யும். அடாவடி விமர்சனமா இருந்தா ஆளையே கொல்லும். கொலை வெறிய கிளப்பும் அவன் விமர்சனத்துக்கு எதிர் விமர்சனம் பண்ணி கொல்லப் பார்ப்பான்

ஆத்தாளுக்கு மஹிஷாசுர மர்த்தனின்னு ஒரு பேர் உண்டு. மர்த்தனின்னா கொலை பண்ணவுகனு அர்த்தம்.  இதுக்கு சிறப்பு விகுதியை சேர்த்தா விமர்த்தனி. (செக்ஸுக்கு மதனம்னு பேரு -மர்த்தனம் மதனம் ரெண்டுத்துக்கு ஒரு எழுத்துத்தான் வித்யாசமுங்கோ - ஏன்னா சைக்கலாஜிக்கலா பார்த்தா  ரெண்டும் ஒன்னுதான்) இந்த விமர்சனம்ங்கற வார்த்தை கூட விமர்த்தனம்ங்கற வார்த்தைலருந்து தான் வந்திருக்கனும். அதனாலதான் மர்த்தனம் -மதனம் - (வி)மர்சனம்ங்கற மூணு கான்செப்ட் மேலயும் சனத்துக்கு இத்தீனி ஜொள்ளு.

நான் பல காலத்துக்கு மிந்தி பகவத் கீதை ஒரு உட்டாலக்கடின்னு தொடர்பதிவு போட்டது ஞா இருக்கலாம்.  இதை ஒரு பார்ட்டி விமர்சிச்சு உட்டாலக்கடியின் உட்டாலக்கடின்னு  ஒரு பதிவு போட்டிருந்தாரு. நானும் அதுக்கு லாஜிக்கலா பதில் கொடுத்தாச்சு. விவகாரம் அத்து போச்சுனு நான் இருந்துட்டன். பாவம் நியாயமா நம்ம ப்ளாக்ல கமெண்ட் வடிவத்துல தன் எதிர்பதிவை பத்தி  தகவல் தெரிவிச்சிருந்தாரு. அவருக்கு பாராட்டுக்கள்.

பெரீ மன்சன் மாதிரி பில்டப் கொடுத்து போட்ட எதிர்பதிவுலயே தனி மனித தாக்குதலுக்கெல்லாம் இறங்கி தன் ப்ளாகை தானே நாறடிச்சுக்கிட்டாரு. என் வயசு 44. எனக்கு எந்த நாயும் பொண்ணு கொடுக்க தேவையில்லை. எந்த பிக்காலியும் ஃபைனான்ஸ் கொடுக்க தேவையில்லை. இருக்கிறது ஒரு மகள். அவளுக்கு கண்ணாலம் ஃபிக்ஸ் ஆயிருச்சு. அதனால் இந்த தனி மனித தாக்குதல் இத்யாதிக்கெல்லாம் பயப்படறாப்ல இல்லே.

தாளி இவிக சரக்கெல்லாம் செப்டிக் டாங்கை விட அதிகமா நாறும்னு தெரிஞ்சுத்தான் கீதைல கை வச்சேன்.  ஓகே. பதிவு -எதிர்பதிவு - நம்ம எதிர்வினை எல்லாம் ஓவர். நான் பாட்டுக்கு நம்ம வேலைய பார்த்துக்கிட்டிருந்தேன்.

வழக்கமா என்னை நான் தேடறது வழக்கம். உள்ளாற மட்டுமில்லை. கூகுல் சர்ச் இஞ்சின்லயும். இந்த தேடல்ல பல தவளைகள் மாட்டியிருக்கு. அப்படி நேத்து ஒரு தேடலை ஆரம்பிச்சப்ப மேற்படி எதிர்பதிவுக்கு   கச்சா முச்சானு கமெண்ட்ஸ் போஸ்ட் ஆகியிருக்கு.

நான் கடவுளையே விமர்சிக்கிற பார்ட்டி.என்னை விமர்சிக்கிறதை விமர்சிக்கவோ தடுக்கவோ மாட்டேன். ஆனால் இதுல பலதும் கமெண்ட் இல்லே. நான் ஏதோ இவிக பக்கத்து வீட்ல ஆஃபீஸ் போட்டு இவிக வீட்டு பொண்ணுகளை பிக் அப் பண்ணி ரெட் லைட் ஏரியாவுக்கு வித்துட்ட கணக்கா எத்தனை துவேஷம் .. பாருங்க. நாளைக்கு யாரோ ஒருத்தர் என் பேரை அடிச்சு தேடறப்ப இந்த மாதிரி கஸ்மாலம்லாம் அவிகளுக்கு சிக்கினா சிவுக்குங்கும். சரி இதுக்கு நம்ம முருகேசன் என்ன பதில் சொல்லியிருக்காருனு தேடும் போது எதுவும் கிடைக்கலன்னா நல்லாருக்குமா என்ன?

அதுக்குத்தான் இந்த கிழிப்பு. எனக்காக எதையும் செய்யற ஸ்டேஜு தாண்டிருச்சு சாரே. இந்த சன்மமே சனங்களுக்காகத்தான்.

கமெண்ட் யுத்தத்தை துவக்கியிருக்கிறவர் வால் பையன். 
"புலனடக்குதல்னா என்ன? "

_________
 புலனடக்கம் என்பது புலன்களை கட்டுப்பாட்டில் வைப்பதாகும். அதாவது கண் முதலிய ஐம்புலன்களையும் ஒழுக்கநெறியில் செலுத்துவதாகும். படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கவும், படுக்க வேண்டிய நேரத்தில் படுக்கவும், வேலை நேரத்தில் வேலை செய்யவும் நமது புலன்களை கட்டுப்படுத்துவது என்று தெரியாதா தல!

 smarttamil
______________
 நல்லாதான் (ஹிப்பாக்ரடிக் ,அன்சைன்டிஃபிக், இல்லாஜிக்கலா இருந்தாலும்)  போகுது. தொடர்ந்து படிங்க                 
______________

//படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கவும், படுக்க வேண்டிய நேரத்தில் படுக்கவும், வேலை நேரத்தில் வேலை செய்யவும் நமது புலன்களை கட்டுப்படுத்துவது என்று தெரியாதா தல!//

நேரம் காலமெல்லாம் பார்க்குறதில்ல, எப்ப என்ன தோணுதோ, அதை அப்ப செய்வேன்!
- வால்பையன்
______________
சபாஷ் வால் பையன்! . ஏறக்குறைய ஓஷோ ரேஞ்சுக்கு போயிட்டாரு. இயற்கையின் கரங்களில் வாழ்வை ஒப்படைக்கும் சம்பூர்ண  சரணாகதி  தத்துவம் இதுதான். கடந்த கமெண்டுக்கு சங்கராச்சாரி ரேஞ்சுல பதில் சொன்ன பார்ட்டி இப்போ ஆட்டோ சங்கர் ரேஞ்சுக்கு இறங்கறாரு பாருங்க
__________
      //நேரம் காலமெல்லாம் பார்க்குறதில்ல, எப்ப என்ன தோணுதோ, அதை அப்ப செய்வேன்//
      எங்கவூர் எருமை மாடும் அப்படித்தான் செய்யும். நான் உங்கள சொல்லல பொதுவா சொல்றேன்
______________
இப்போ வால் பையன் ரெஸ்பாண்ட் ஆகிறாரு.
__________

      //எங்கவூர் எருமை மாடும் அப்படித்தான் செய்யும். நான் உங்கள சொல்லல பொதுவா சொல்றேன்//

      நிச்சயமாக மனிதனை விட எருமைமாடு கேவலமானதல்ல!, நான் ஒரு இயற்கை விரும்பி, எருமமாடு போல வாழ்வதில் எனக்கு மகிழ்ச்சியே!
_________________

இப்போ திரு ஸ்மார்ட் (அதாங்க எதிர்பதிவு போட்ட பார்ட்டி) மறுபடி சங்கராச்சாரி ரேஞ்சுக்கு போறார்
_____________

  எருமை மாடு கேவலம் என்று நானும் சொல்லவில்லை அதுவும் சக ஜீவராசிதான் ஆனால் அது அது இருக்கும் இடத்தில் இருப்பதுதான் இயற்கை. பூனை புலி வேசம் போடக்கூடாது, புலி பசு வேசம் போடக்கூடாது. மனித இனத்திற்கான ஆறாவது அறிவைப் பயன்படுத்தி ‘எதையும் ப்ளான் பண்ணாம’ பண்ணக்கூடாது.
            - இது மனித இனத்திற்கான புரிதல்.

            // எருமமாடு போல வாழ்வதில் எனக்கு மகிழ்ச்சியே//

            நீங்க கலக்குங்க எரும மாடு
_______________
வால் பையன் போட்ட போடுக்கு ஸ்மார்ட்டுக்கு பேதியாயிருச்சு போல . இப்போ திருவாளர் ஸ்மார்ட்  ஒரு கமெண்டை வெளியிடறாரு.

கொலை பண்ணவனை விட கொலைய தூண்டினவனுக்குத்தான் தண்டனை அதிகம். கமெண்டை போட்ட பன்னாடைய விட அதை வெளியிட்ட பார்ட்டியைத்தான் கிழிக்கனும். கிழிக்கிறேன். இப்போ சர்ச்சைக்குரிய கமெண்டை ஒரு ஓட்டு ஓட்டுங்க. இடையிடையில நம்ம இன்டர் ப்ரிட்டேஷன்ஸும் தந்திருக்கேன்
________________

     // இந்த மகா டாபர் யார் என்று தெரியாதா?ஹஹஹஹாஹா,இந்த டாபர் என்ன செய்யும் தெரியுமா?//
துரியோதனனுக்கு உலகத்துல உள்ளவன்லாம் கெட்டவனாவே தென்பட்டாப்ல இந்த ........க்கு எல்லாரும்  .........ராவே தென்படறாப்ல இருக்கு.

// சார் என்ன படிங்க சார்..
  சார் என்ன படிங்க சார்..
பால்கோவாவும் சேவுமுறுக்கும் இலவசம்னு போறவற்றவனுக்கெல்லாம்                                                          பின்னூட்டமிடும்.//

"நெம்பர் ஒன் நெம்பர் தினகரன் என்றும் நெம்பர் ஒன்" ன்னிட்டு விளம்பரம் வருதே. அப்ப சன் க்ரூப் கூட ...........ர் தானா? பார்த்து ராசா !


//அட  இதாவது பரவாயில்ல மிஸ்டர் ஸ்மார்ட். எனக்கு சிலக்கலூரு பேட்டாக்கி பெத்த டாபர்னு இன்னொரு பேரும் இருக்குன்னு பாட்ஷா பாணில மூச்சா போகும் ,போற வர்ர பிளாக்ல எல்லாம்.என் பேங்க அக்கவுண்டுக்கு பணம் அனுப்புங்கோ,என் பேங்க அக்கவுண்டுக்கு பணம் அனுப்புங்கோ என்று எல்லா பிளாக்லயும் போய் டைப் அடிக்கும் பண்னாடை.//

இந்த மாதிரி ஒரு கமெண்டை  நானும் ஒரு தாட்டி  பார்த்தேன். சரி ஏதோ ஒரு அடுப்பூதி,அன்னக்காவடி,திண்ணத்தூங்கி,அரைடிக்கெட்டு,கால் டிக்கெட்டு,முக்கா டிக்கெட்டு போட்டிருக்கும். இன்னைக்கு நகராட்சி கக்கூஸுக்கு போக பைசா இல்லையோ என்னவோ கைக்கு கரி கிடைக்கலையோ என்னவோனு நினைச்சேன். அந்த பிக்காலி இந்த பிக்காலிதான் போல.

இந்த மாதிரி பிக்காலி பஞ்சாயத்தையெல்லாம் நான் பண்றதில்லிங்கண்ணா மேலிடத்துக்கு அனுப்பிர்ரது. நாம ஆஃப்டர் ஆல் ஒரு ரிப்போர்ட்டர் - ஒரு நாலணா பத்திரிக்கைக்கு எடிட்டர். எஸ்.பி கிட்ட கம்ளெயிண்ட் பண்ணி விரைய பிசையமுடியும் அவ்ளதான். ஆனால் ஆத்தா நினைச்சா ?   கம்கட்ல சூலத்தை விட்டு குடைஞ்சு பால் மாற்று ஆப்பரேஷனே பண்ணிருவா. அதனால ஆத்தாளே பார்த்துக்கட்டுங்கண்ணா

//எல்லாத்துக்கும் மேல ஜாதகம் பாக்க வர்ரவனுக்கு முகஜோசியம் பாக்கறேன்னு சொல்லி மை தடவி உனக்கு சித்தப்பா சித்தி சூன்யம் வச்சிருக்காண்,  எனக்கு சித்தப்பா,சித்தியே இல்லைன்னு என் நண்பன் ரமேஷ்கண்ணன் சொல்ல இல்ல இல்ல தூரத்து சித்தப்பா சித்தி,உன் வீட்டில் தகடு இருக்கு அதை அமாவாசை அன்னிக்கு எடுக்கனும்னு 5000 ஆட்டையை போடுவான் சார்.என் நண்பன் ரமேஷ் கண்ணன் உஷாரா பணம் தரலை சார். சரியா பாட்டியம்மை அன்னைக்கு சூனியம் எடுக்க இவனும் இவன் எடுப்பு ஒரு சுள்ளானும் ஆஜர் சார். நைஸா ஜோல்னா பையிலேந்து தகட்டை தோட்டத்தில தகடு தேட தோண்டிய இடத்தில் ஒரு அழுகிய தேங்காயோடு ஃபெவிகால் போட்டு சீல் பண்ணி போட்டுட்டான் சார்.அதை லாவகமாக எடுத்தான் பாருங்க.எங்க நண்பன்கிட்ட ஐயாயிரமும் அவன் அரிசி மண்டிலேந்து 225கிலோ நெல்லூர் அரிசியும் வாங்கிகிட்டான் சார்.அதே மாதிரி என் நண்பன் ரமேஷ்கண்ணனின் நண்பன் பாலமுருகனுக்கும் பண்ணான் பாருங்க சார் அப்போதான் உஷாரானோம் சார்.முதல்ல ஜாதகம் பாக்கவான்னுவான்,அப்புறம் சூன்யம் எடுக்கனும்னுவான் சார். உஷார் உஷார் உஷார்,போன் நம்பரோடு எல்லாம் தரேன்//

மொத்தத்துல இந்த கமெண்டை போட்ட பார்ட்டி தான் மேற்படி தில்லாலங்கடி வேலையையெல்லாம் செய்துருக்கனும். இல்லைன்னா இந்த அளவுக்கு டீட்டெயில்ஸ் எப்படிங்கண்ணா தெரியும்?

 சித்தூர்.பால்கோவா
__________________

அடுத்து வர வலைப்பதிவரோட மறுமொழிய பாருங்க.  பார்ப்பன குசும்புன்னா இதான் தலை.. அப்படியே புக் மார்க் பண்ணி வச்சிக்கங்க, இந்த ஒரு மேட்டர் போதும் ஏன் இவிக சோத்துக்கு லாட்டரி அடிக்கிறாய்ங்கனு சொல்ல

// உங்க பேரப்பார்த்தவுடனே தப்பா நினைச்சுட்டேன். நீங்க அவரப்பத்தி சொல்றேங்க போல ஆனால் அவரைப்பார்த்தா அப்பாவி போல தெரியுது. உங்கள் கருத்தை இங்கே இருக்கட்டும் வரும் தலைமுறையினர் பார்த்து படிச்சு நடந்துக்கட்டும்.//

_______________
இப்போ மறுபடி ஒரு கமெண்ட் . அரசியல்வாதிங்களை இவிக குறை சொல்றாய்ங்க.அவிகளாச்சும் பினாமி பேர்ல சொத்தைத்தான் வைக்கிறாய்ங்க. இந்த பன்னாடை ( நான் திருவாளர்.ஸ்மார்ட்டை சொல்றேன்) கமெண்டை கூட சொந்த பேர்ல போட தில் இல்லாம பினாமி பேர்ல போட்டு வச்சிருக்கு

//  சார் அவன் அப்பாவியில்லை  அடப்பாவி,படு டேஞ்சரானவன்,அவனுக்கு ஆந்திர நக்சல் பாரிகளுடன் கூட தொடர்பு உண்டு,புகழ் கிடைக்க நரகலை கூட திம்பான்,வீட்டுக்கு கூப்பிட்டு சோறு போட்டு தான் பாருங்களேன்.வீட்டில் உள்ள பொருளை ஆட்டையப்போட்டுடுவான்,இல்லை நாகூசாமல் உங்களைப்பத்தி புறம் பேசுவான்,இவன் தினத்தந்தி யில் ரிப்பொட்டராய் வேலை செய்தேன் என்பதெல்லாம் சுத்தப்பொய்.ப்ரிண்டிங் செக்‌ஷன்ல பேப்பர் ரோல் மாட்டும் கலாசியாய் இருந்தான்,என் அப்பா திருவேங்கடத்துக்கு வெற்றிலை சிகரெட் வாங்கிகொடுத்த எடுபிடி,அப்போவே மீதி சில்லரை தரமாட்டானாம்.கேட்டால் கலீஜ் தெலுங்குல திட்டுவானாம்.//

இதுல எல்லாமே பொய்யா இருந்தாலும் ஒன்னே ஒன்னு மட்டும் நெஜம். கலீஜ் தெலுங்குல மட்டுமில்லை தமிழ்லயும் திட்டுவன். ப்ரூஃப் பண்ணவா..  இந்த பிக்காலிகளை திட்டவா...

" ரேய்.. நீயம்மன் தெங்கா லஞ்சா கொடக்கா நியக்கா பூக்கு தெங்கினோடி மொட்ட குடுவுரா .. நேனேமன்னா நீ அக்கன் தெங்கானா நீ செல்லினி தெங்கானா நா மொட்ட எந்துக்குரா குடஸ்தாவு. நேனசலே திக்க பூக்குனா மட்டனு .. குத்தலோ பெடிதே நோட்லோ வஸ்துந்தி

பினாமி பெயர்: ஷன்முகம்
______________
அடுத்து ஒரு கமெண்ட் , இதுக்கு பினாமி : சித்தூர் பால்கோவா

// சார் இதை எடிட் பண்ணிக்கிறதுன்னா பண்ணுங்க,ஆனா வெளியிட்டுடுங்க,ஏன்னா ஊரு உலகம் இந்த மாமாப்பயலை நம்பி பணம் மோசம் போகுது சார்.அதை தடுங்க,என்னிடம் பிளாக் இல்லை சார்.நீங்க தான் அதர்மத்தை தடுக்க வந்த ரட்சகர் சார்.இந்த கொட்டை வீங்கி விற்கும் பெண்ணை வசியம் செய்யும் மையை வாங்கி எத்தனையோ இளைஞர்கள் மோசம் போறாங்க சார்.எதோ காரிய சித்தி அஞ்சனமாம்.வீட்டுக்கு ஜோசியம் கேக்க போனா பெரிய கேட்லாக்கை எடுத்து அந்த தாய்த்து வாங்கு நரிப்பல் வாங்குன்னுவான் சார்.//

பாருங்க அநியாயத்துக்கு இவன் ப்ரோக்கரா ஒர்க் பண்ண அவிக ஊரு  ஜோசியர் இவன் கட்டிங்குக்கு காசு கொடுக்கலைன்னு அவனும், இவனும் சேர்ந்து பண்ண மொள்ளமாரி வேலையையெல்லாம்  நான் பண்ணதா  சொல்றான்.
_______________--
இப்போ கக்கூஸுக்கு சொந்தக் காரர் அதாங்க ஸ்மார்ட்டு மறுமொழி சொல்றாரு
__________

            //அதர்மத்தை தடுக்க வந்த ரட்சகர் சார்//
            இதெல்லாம் ரொம்ப ஓவர்.

            உங்களுக்கு ப்ளாக் இல்லைன்னு கவலைப்படாதீங்க தனி மனித தாக்குதல் இல்லாமல் அறிவுப்புர்வமாக எழுதி தந்தா என்னோட ப்ளாக்ல பதிவு செய்றேன்//

இதுவரை வெளியிட்ட கமெண்ட் எல்லாம் தனி மனித தாக்குதல் இல்லாம அறிவு பூர்வமா இருக்குன்னுதான் வெளியிட்டாப்ல இருக்கு. அட போடாங்கோ.............உன் அறிவுல சங்கராச்சாரி பேண்டு வைக்க

_______________
அடுத்து ஒரு அறிவு பூர்வமான , தனி மனித தாக்குதல் இல்லாத மறுமொழி

//  சார் இவனும் அந்த கோழிகண்ணனும் அடிக்கும் கொட்டமிருக்கே,அந்த கோழி சிங்கப்பூரிலிருந்து நிறைய ஏமாந்தவர்கள் ஜாதகம் வாங்கி இவனுக்கு அனுப்பறான் சார்.அதுல அவனுக்கு சிங்கப்பூர் டாலரில் கமிஷன் சார்.அதுதான் இவங்க ரெண்டு பேரும் குலவுவாங்க.பாருங்க நீங்க போங்க சார் என்பான் அந்த கோழி,பால்கோவா இல்ல நான் அப்புறம் போறேன் நீங்க போங்க அப்படின்னுவான் சார்.,எங்கே சொல்லுங்க?மூச்சா தான் சார்.போன்லயே இதெல்லாம் நடக்கும்.நான் ஓம்காரை அடிக்கிறா மாதி அடிப்பேன் நீ அணைக்கிறாமாதி அணைக்கனும் என்பது தான் பிளான்.இதெல்லாம் எப்படி தெரியுமாவா?
சார் பால்கோவாவுக்கு சிங்கப்பூரிலிருந்து எத்தனை v.p.p எத்தனை m.o.எத்தனை இன்லாண்ட் கவர் வருதுன்னு கேசவலுன்னு ஒரு போஸ்ட் மேன் டீடெய்லா சொல்லுவான் சார்.ஊதற சங்கை ஊதிட்டேன்,இனி உங்க இஸ்டம்.//

"அட பன்னாடை பரதேசிகளா .. ஒரே ஒரு இரு நூற்றைம்பது ரூபா கட்டணத்துக்கு நான் கண்ணு பூ பூக்க, இடுப்பும், பிருஷ்டமும்,முதுகெலும்பும் ஒடிய எவ்ள விஸ்தாரமா பலன் தரேன்னு ஆத்தாளுக்கு தெரியும்டா ..

ஸ்மார்ட்டு உனக்கு நாள் குறிச்சாச்சு. இன்னைக்கு ஆத்தாளோட ஹாட் லைன்ல பேசியே உடறேன். மவனே உனக்கு ஆப்புத்தான். என் காலை இல்லே ஆத்தாள் காலையே பிடிச்சு கதறினாலும் சாகிற வரை மகனே சங்கு உன் காதுல கேட்டுக்கிட்டே இருக்கும். ஜெனரல் ஆசுபத்திரி கக்கூஸ் கிட்டே தான் உனக்கு படுக்கை ..
______________--
கழிவறை உரிமையாளரின் கமெண்ட்: பார்ப்பார குசும்பு

// உங்கள் சங்கு சேவை என்றும் எங்களுக்குத் தேவை
 ஐயா ஷன்முகம்,
      ஒவ்வொருவரைப் பற்றி நேரில் பார்த்தது போல கூறுகிறீர்கள் . ஆனால் தனி மனித விஷயத்தை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம் எனக்கருதுகிறேன். அவர்களின் கருத்தில் உள்ள ஓட்டைகளுக்கு மட்டும் ஆப்படிப்பதே உத்தமம்//

______________
இப்போ சித்தூர் பால்கோவா, ஷண்முகம்ங்கற பேரெல்லாம் சலிச்சுட்டாப்ல இருக்கு. இப்போ இன்னொரு பினாமி. மவனே உன் வாழ்க்கையில சுனாமி கியாரண்டி.

     // அவரின் பல பதிவுகளில் பல உட்டாலக்கடி செய்து வருகிறார், விடாதீங்க அவிங்க டவுசரை கிழிங்க
_________________-
கழிவறை உரிமையாளர்:
//தொடருவோம்.  கருத்துக்கு மிக்க நன்றி//

எங்கன தொடர்ரது. தாளி இத்தீனி குசும்புக்கே குசு வராத குதம் அடைச்சிருக்கும். வாயால தான் பேண்டிருப்பான்

_____________-
அடுத்து ஒரு நாடகம் துவங்குது

//      நண்பர் சித்தூர் முருகேசனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா :) )//

 //     தப்பு பண்ணிட்டேன் நண்பரே.
    கருத்துக்கு நன்றிகள்//
_______________________

இதே கேட்டகிரில மொத்தம் 16 கமெண்ட். ஒரே ஒரு கார்மேகராஜா நெத்தியடியா சொல்லியிருக்காரு

" யோவ்! சொந்தமா பதிவு போடுய்யா! பகவத் கீதை பொய்னு அவர் சொன்னா உண்மைனு ஒரு பதிவு போடு! அத விட்டுட்டு உங்கள பாத்தா ஸ்மார்ட் பார்வை போல இல்லை சார், கிராஸ்பெல்ட் பார்வை போல இருக்கு!"

நான் அவாளை கிழிக்கிறதை நினைச்சு எனக்கே ஒவ்வொரு சமயம் அய்யோ பாவம்னு ஆயிரும். ஆனால் இந்த மாதிரி பிஞ்சாரிகளை, நாதாரிகளை , இதுக பண்ற அலப்பறைய பார்த்தா கிழிக்கிறதுல்ல தாளி டெய்லர் கடை ஸ்க்ராப் மாதிரி ஆக்கிரனும்னு ஆத்திரம் வருது.

இந்த பதிவை போட்டதே எதுக்குன்னா நாளைக்கு நான் அவாளை கிழிச்சு ஆறப்போடறப்ப யாரும் வெள்ளைக்கொடில்லாம் காட்டிரக்கூடாதுல்ல அதுக்குத்தான்.

Friday, August 13, 2010

பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி

Friday, 13 August, 2010


இந்த தொடருக்குள்ள புதுசா வந்த பார்ட்டிகளுக்கு ஒரு பேச்சு. அண்ணே, நான் கண்ணனை ஏத்துக்கிடறேன். அவரு கீதை சொல்லியிருப்பாருனும் நம்பறேன். ஆனால் அவரோட பயாக்ரஃபிய வச்சு பார்க்கிறச்ச , அவர் சைக்காலஜிப்படி , இன்றைய விஞ்ஞான உண்மைகளின் படிபார்த்தா கீதைல நிறைய கலப்படம் நடந்திருக்கிறதை ஃபீல் பண்ணித்தான் இந்த தொடரை எழுதிக்கிட்டிருக்கேன்.



கிஷ்டருக்கும், நமக்கும் நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருக்குங்கண்ணா.ஆத்திரம் அவசரம்னா லைட்னிங் கால் கூட போட்டு பேசலாம். சந்துல சிந்து பாடற அவாளோட பிற்சேர்க்கைகளை வெளிச்சம் போடறதுதான் நம்ம நோக்கம். ஓம் க்லீம் க்ருஷ்ண க்லீம்



குறிப்பு:

கீதை வாசகங்கள் கண்ணதாசன் அவர்களின் மொழி பெயர்ப்பாகும்.



கடந்த அத்யாத்துல கண்ணன் சொல்றதா வர்ர //தேவர்களில் இந்திரன் நானே// ங்கற வரியை கிழிக்காம விட்டிருந்தேன்.



இந்த இந்திரனோட சைக்காலஜியே டிஃப்ரன்ட். பாவம் பயங்கர ஐ.சி பார்ட்டி. இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். பூலோகத்துல எவன் தபஸ் பண்ணாலும் அவன் இந்திர பதவியை கேட்டு நமக்கு ஆப்பு வைக்கத்தான் தபஸ் பண்றான்னு தேவ வேசிகளை அனுப்பி கிளப்பிவிட்டு இனப்பெருக்கம் பண்றதே வேலை. எந்த வீட்ல எந்த நேரத்துல புருசன் இல்லைன்னு பார்த்து ரேப்பறதில ஸ்பெஷலிஸ்ட். இன்னம் நிறைய டேட்டா இருக்கு. அதையெல்லாம் பின்னொரு சந்தர்ப்பத்துல தனிப்பதிவாவே பார்ப்போம். ( அவாள் அலறல் : அய்யய்யோ தனிப்பதிவா? - வடிவேலு மாடுலேஷன்ல படிங்க)



இந்த மாதிரி ஒரு செக்ஸ் மேனியாக், பர்வர்ட்டட் ஃபெலோ, ஐசி பார்ட்டியான இந்திரனை கோட் பண்ணி " தேவர்களில் இந்திரன் நானே"ன்னு கிஷ்டர் சொல்லியிருப்பாரா?



அடுத்த வரி // முனிவர்களில் பிருகு நானே// இந்த பிருகு முனிவர் இன்னொரு வகை செக்ஸ் வக்கிரம் பிடிச்ச மன நோயாளி, பயங்கர ஈகோயிஸ்ட். எங்கன புருசன் பொஞ்சாதி ப்ரைவேட்டா சந்தோசமா இருக்காய்ங்களோ அங்கன வேளை நாழி இல்லாம நுழைவாரு. நுழைஞ்சதும் உருவிக்கிட்டு ( அணைப்பை சொன்னேன்ங்க) இவரை கண்டுக்கிட்டு, வணக்கம் போடலைன்னா சபிச்சுருவாராம்.



பிரம்மனுக்கு கோவில் இல்லாததுக்கு,கோவில்கள்ள சிவனோட உருவத்தை பிரதிஷ்டை பண்ணாததுக்கு ஸ்ரீனிவாச அவதாரத்துக்கு இவரோட இந்த பர்வெர்சன் தான் காரணமுங்கோ.



அறிவுள்ளவன் எவனாச்சும் இந்த பார்ட்டிய தன்னோட ஒப்பிட்டுக்குவானா?



அடுத்த வரி //பேரரசன் நானே//



இன்னைக்கு மந்திரி நாளைக்கே எந்திரிங்கற ஸ்டேஜ் இருக்கிறச்சயே சனம் பண்ற அலப்பறைக்கு அளவே இல்லை. ராசா அதுவும் பேரரசன்னா நிலைம எப்படியிருக்கும் பாருங்க.ஆஃப்டர் ஆல் ஒரு கிருஷ்ண தேவராயர் தன் சொந்த மந்திரிக்கு கண்ணை பிடுங்க வச்சாரு தெரியும்ல. சன நாயகத்துல ஆஃப்டர் ஆல் மந்திரி, எம்.எல்.ஏவே இத்தனை ஆட்டம் போடறச்ச ராசாவுங்க எத்தீனி ஆட்டம் போட்டிருப்பாய்ங்க. கிருஷ்ணர் மாதிரி ஒரு மனிதாபிமானி வாயா வார்த்தையா கூட //பேரரசன் நானே// னு சொல்லியிருப்பாரா ஊஹூம். இதெல்லாம் அவளோட கை சரக்குதேன்.



//ஆயுதங்களில் வஜ்ரம் நானே//



கிஷ்ணரு அவதாரமில்லையா? எதிர்காலத்துல என்னென்னா ஆயுதம்லாம் கண்டு பிடிக்கப்போறாய்ங்கனு குத்து மதிப்பா ஒரு ஐடியா இருக்கனும்லியா. ஆயுதங்களில் நான் எதிர்காலத்தில் கண்டிபிடிக்கப்பட உள்ள அணு குண்டுன்னு சொல்லியிருக்கனும்லியா. சொல்லலியே அதனாலத்தான் சொல்றேன். இப்போ செலவாணில இருக்கிற கீதைய சொன்னது கண்ணனில்லே. எழுதி விட்டது ஒரு பஞ்ச கச்சம்னு.





//தீய விஷ நாகங்களில் அனந்தன் நானே//

கிஷ்ணரு அவதாரமில்லையா? எதிர்காலத்துல என்னென்னா விசங்கள் எல்லாம் வரப்போவுதுன்னு குத்து மதிப்பா ஒரு ஐடியா இருக்கனும்லியா. விசங்களில் நான் எதிர்காலத்தில் கண்டிபிடிக்கப்பட உள்ள சயனைடுன்னு சொல்லியிருக்கனும்லியா.



//பாய்ந்துவரும் ஆறுகளில் கங்கை நானே//

உலகத்துல பெரிய ஆறு எதுன்னு கூகுல் சர்ச் இஞ்சின்ல அடிச்சு தேடினா தான் தெரியும்னா நீங்க நானுல்லாம் மனிதன். அப்படியே தெரிஞ்சாதான் மாதவன்.

உலகத்துல பெரிய ஆறு எதுங்கற பாயிண்ட் கூட கரெக்டா இல்லே.இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதைய எப்படிங்கண்ணா நம்பறது? அதை சொன்னது கண்ணந்தானு எப்படிங்கண்ணா ஏத்துக்கிறது.



கங்கையே நாறிப்போச்சுன்னு சுத்திகரிப்பு வேலை பல காலமா நடந்துட்டிருக்கு.

கிஷ்ணரு அவதாரமில்லையா? எதிர்காலத்துல கங்கை நாறிப்போயிரும்னு தெரியாதா? தெரியாமத்தான் ஆறுகளில் கங்கைன்னிருக்காரா?



//ஐவரிலே தனஞ்சயனும் நானே//



இந்த ஐவர் யாருன்னா பாண்டவர்கள் அஞ்சு அப்பாவுக்கு பிறந்து அஞ்சு பேரும் ஒருத்தையை கட்டிக்கிட்டாய்ங்களே அந்த பார்ட்டிங்க. இதுல தஞ்சயன்னா யாரு? அர்ச்சுனன். இவன் கதை தெரியுமில்லியா? ஸ்டூடெண்ட் பீரியட்லயே லெக்சரருக்கு ஜல் ஜக் போட்டு ஏகலைவனுக்கும் ,கர்ணனுக்கு ஆப்பு வச்ச பொட்டை . கிருஷ்ணர் உண்மையிலேயே கீதைய சொல்லியிருந்தா இந்த மாதிரி ஒரு கேரக்டரை தன்னோட கம்பேர் பண்ணியிருப்பாரா? நோ



//ஈடில்லாத அறிவினிலே சுக்கிராச்சாரி நானே//

இந்த சுக்கிராச்சாரி கேரக்டர் எப்படிப்பட்டதோ அடுத்த பதிவுல பார்ப்போம்.

Monday, August 9, 2010

பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி (அ)

அண்ணே,

ரெம்ப நாளைக்கு மிந்தி பகவத் கீதை - ஒரு உட்டாலக்கடி என்ற தலைப்புல ஒரு தொடர்பதிவு போட்டது ஞா இருக்கலாம். நாம லா.ச.ரா மாதிரி நெருப்புன்னா வாய் வெந்துரனும். இவிக வெறுமனே கீதையா அது ஆஹா .. அது ஓஹோனு பில்டப் கொடுக்கிறாய்ங்க. பாம்பு பாட்டுக்கு சிவனேனு போய்கிட்டிருக்குமாம். தவளைங்க சொம்மா இல்லாத "தவளை கூச்சல்" போட்டு கூப்டுமாம். அந்த மாதிரி தான் அவாளோட கதை . இன்னைக்கு வியாசர் விருந்து (சி.எ) மகாபாரதம் (பெரிய எழுத்து)ங்கற தலைப்புல வழித்துணை ராமன் என்பவர் எழுத பாரதி நிலையம் வெளியிட்ட பொஸ்தவத்தை புரட்டிக்கிட்டிருந்தேன்.



ஆசிரியர் பாவம் பேட்டைக்கு புதுசா இல்லை பதவிசானவரா தெரியலை. ஏதோ தடி தடியா பொஸ்தவங்களை வச்சுக்கிட்டுத்தான் எழுதியிருக்காரு. அவரா எதையும் சேர்க்கிற சாதியா இல்லை. ஜஸ்ட் ரீ ப்ரொடக்சன் தான்.



ஒரு பாரா மட்டும் இங்கே. (அர்ச்சுனருக்கு ஒரு கந்தர்வர் அட்வைஸ் பண்றார்)



//பாண்டவர்களே ! நீங்கள் பிராமண சகாயமின்றி இருக்கிறீர்கள். யாருக்கு பிராமண சகாயமிருக்கிறதோ அவர்களை அரக்கர்,ராட்சதர்,கந்தர்வர் எதிர்ப்பதில்லை. இதனால் தான் ( பிராமண சகாயம் இல்லாததால் தான்?) மானிடர் கந்தர்வர்களுக்கு பயப்பட நேர்கிறது. வெறும் வீர,சூர பராக்கிரமத்தால் மட்டும் வேந்தர்கள் பூமியை வெல்ல முடியாதுபிராமண சகாயம் இல்லாத பேரரசும் மேன்மை பெறாது//



இதை படிச்சுட்டு கூட நான் பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி தொடர் பதிவோட ரெண்டாவது பாகத்தை ஆரம்பிக்கலின்னா நான் பொறந்ததே வேஸ்டு. கிட்ண பரமாத்மாவுக்கும் நமக்கும் ஹாட் லைனே இருக்கு. எதுனா தகராறு வந்தா பேசி தீர்த்துக்கறேன்.



பிராமண சகாயம் இருந்தா அரக்கர்,ராட்சதர்,கந்தர்வர் எதிர்ப்பதில்லையாம். மூணுமே நிலத்துல கால்பாவாத சமாசாரம். அப்போ பக்கத்து நாட்டு ராசாவுங்க வந்து இந்த ராசா சூ..ல பொங்கல் வச்சுட்டு போயிருவார் ஆனால் இதுக்கும் அவாளுக்கும் சம்பந்தமில்லை போல. அவிக ஜூரிஸ்டிக்சன்ல தான் எதிரிங்க கிடையாதே.



//வெறும் வீர,சூர பராக்கிரமத்தால் மட்டும் வேந்தர்கள் பூமியை வெல்ல முடியாது//



நெஜம் தான். எத்தீனி யுத்தம் தான் பண்றது.பொண்ணை கொடுத்து (விட்டு) எதிரி நாட்டு ராசாவ தோஸ்து பண்ணிக்கிற டெக்னிக்கையே இவாள் தான் கத்துக்கொடுத்திருப்பானு நினைக்கிறேன்.இந்த வகையில பூமியை வெல்ல அவா சகாயம் தேவைதான். அட அவா சகாயம் இல்லாமயே வென்றாலும் வெல்லலாம். அவியளை ஆட்டத்துல சேர்த்துக்கலன்னா கவுத்துருவாளே.



சரிங்கண்ணா தொடருக்கு வந்துருவம்.



மதச்சார்பற்ற அரசுன்னு அரசியல் சாசன அட்டையிலயே பொறிச்சு வச்சிருக்கிற இந்திய அரசு நடத்தற கோர்ட்ல இந்து மத நூலான பகவத் கீதை மேல கைய வைக்க சொல்லி சத்திய பிரமாணம் எடுக்கச்சொல்றாய்ங்களே.. கீதைய சொன்ன கண்ணன் சொல்லாத பொய்யா, பண்ணாத சதியா? எந்த ஊரு நியாய்ங்கண்ணா இது ?



அர்ச்சுனன்:



//கிருஷ்ணா நீயே பரபிரம்மம் , நீயே மோட்சம், நீயெ தூய திருவடிவம், அழிவில்லாதவன் நீயே தேவ புருஷன். தேவர்களுக்கும் தேவன் நீயே

பிறப்பற்றவன். என்றும் எங்கும் நிறைந்தவன் என்றும் முனிவர்களெல்லாம் கூறுகிறார்கள் . தேவமுனி நாரதரும் கூறுகிறார்.//



இதையெல்லாம் ஸ்க்ரால் பண்ணி விடுங்க. விசயம் பின்னாடி வருது.



//அசிலதர்,தேவலர், வியாச முனிவரும் அவ்வாறே கூறுகிறார்கள்.//



சரி அர்ச்சுனா மேட்டருக்கு வா



//அவர்கள் கூறியதைத்தான் திரும்ப சொல்கிறாய்.//

வச்சான்யா ஆப்பு கிட்ணர் அப்போ காப்பிரைட் ஆக்டை வயலேட் பண்ணிட்டாரு. நம்ம நாலணா சினி டைரக்டர்ஸ் வெளி நாட்டு டிவிடிலருந்து உருவறாப்ல கிட்ணர் மேற்படி பார்ட்டிங்க சொன்னதை தான் ரீ ப்ரொட்யூஸ் பண்றாருன்னு அர்ச்சுனன் சொல்றான்.



கிட்ணர் இதையும் கேட்டுக்கிட்டிருக்காரு. இதுல எதுனா லாஜிக் இருக்கா? இது கிட்ணருக்கு பெருமை தருமா? இதை கண்ணன் ஏத்துக்கிட்டிருப்பானா? இப்போ செலாவணில இருக்கிற கீதை ஒரிஜினலே கிடையாதுங்கறதுக்கு இதை விட ஆதாரம் வேற எதுனா வேணமா?



இப்போ கண்ணனோட ஸ்டேட்மென்ட்:



//காஸ்யப முனிவருக்கு அதிதி தேவியிடம் பிறந்த 12 புதல்வர்களில் குணத்தில் சிறந்தவனான விஷ்ணு நானே //

இந்த விஷ்ணுவும் மும்மூர்த்திகள்ள ஒருவரான விஷ்ணுவும் ஒரே பார்ட்டியா? உலகத்தை படைச்ச பிரம்மாவே விஷ்ணுவோட உந்தி கமலத்துலருந்துதான் வந்தாருங்கறாய்ங்க. படைப்பு ஆரம்பமாகி காஸ்யப முனிவர் தோன்றி அதிதி தேவி தோன்றி அவிக கெட்ட காரியம் செய்து இந்த விஷ்ணு பிறக்கிற வரை காக்கும் தொழிலை யார் செய்துக்கிட்டிருந்தாய்ங்க? கண்ணன் கீதைய சொல்லியிருந்தா இந்த மாதிரி டுபாகூர் ஸ்டேட்மென்டெல்லாம் கொடுத்திருப்பானா? நோ.



//.கிரகங்களில் ஒளி வீசும் கதிரவன் நானே //

அடங்கொப்புரானெ.. கிட்ணருக்கு அஸ்ட்ரானமில அரிச்சுவடி கூட தெரியலை போலிருக்கே. சூரியன்லாம் ஜுஜுபி. ஏதோ கிட்ட இருக்கிறதால பெருசா தெரியறார். ஆக்சுவலா நட்சத்திரங்களுக்குத்தான் ஒளி அதிகமாம். கிட்ணர் மேட்டர் புரியாம கதிரவன்னிட்டாரு. சிவாஜில ரஜினி பஞ்ச் டயலாக் மாதிரி காண் ட்ராவர்சியாயிருச்சு. "சிங்கம் சிங்கிளா வரும் பன்னிங்க தான் கூட்டமா வரும்"



//தேவர்களில் இந்திரன் நானே//

இந்திரனோட பயோ டேட்டாவும் கீதைல உள்ள அய்யர் மாருங்க கலந்து விட்ட பீலாக்களும் அடுத்த பதிவில் தொடரும்

Friday, May 21, 2010

"அவாளுக்கு" ஒரு குட் நியூஸுங்கோ.

ஆமாங்கண்ணா பகவத்கீதை ஒரு உட்டாலக்கடிங்கற தொடர்பதிவுல கட்ட கடைசியா சில பத்தியை எழுதிட்டு இதுக்கு தலை முழுகிரலாம்னு முடிவு பண்ணிட்டேன்.



இந்த தொடர்பதிவு மூலமா நான் சொல்ல நினைச்ச சில விஷயங்கள்:



1.கண்ணன் உண்டு. கண்ணனின் குரல் அலைகள் அண்டை வெளியில் இன்னமும் மிதக்கிறது. தன்னில் தன்னை தள்ளி வைத்தவர்களின் காதில் இன்னமும் ஒலிக்கிறது. ஒரு தாய் வயிற்று மக்களாய் வந்த மக்களில் ஒரு பகுதியினரை தள்ளி வைத்தவர்களின் காதில் அல்ல.



(இன்றைய கீதையில் தொகுப்பாசிரியரின் இனவாதம், சாதி அகங்காரம் , சுய நலம் ,மடமைகள் சேர்ந்து அதை நாறடித்த மாதிரியே என் விளக்கங்களிலும் சில அல்லவை கலந்திருக்கலாம். ( ஆனால் இதை சொன்ன நான் வெறும் முருகேசன்ங்கறதால நல்லா விஜாரிச்சு விவாதிச்சு ஒரு முடிவெடுக்கலாம். ஆனால் கீதைய சொன்ன பார்ட்டி இது கிட்னன் சொன்னதுன்னு வல்லடி அடிச்சுருச்சே)



2.மதத்தோட மையத்துல நீ என்ற உச்சரிப்பு சேரனும். அது ம 'னி'தமா மாறனும். அப்பத்தான் அது மதம். இல்லேன்னா ஆனைக்கு பிடிக்கிற மதம். மனிதனுக்காகத்தான் மதமே தவிர மதத்துக்காக மனிதனில்லே. மனிதங்கறவன் ஒரு மிருகம். ஜஸ்ட் மனிதனா ஆக்டு கொடுக்கிறான். நடிப்பையே நிஜம்னு நம்பி அசால்ட்டா இருந்தா படக்குனு மனிதனுக்குள்ள இருக்கிற மிருகம் வெளிய வந்துரும். அதை அப்பப்போ உலவ விடனும். கழிவறைல, படுக்கையறைல, தனிமைல . அப்பத்தான் அது மறு நாள் வரை சமூக, நாகரீக சங்கிலிக்கு அடங்கி இருக்கும். அதை விட்டு நான் அடக்கி காட்டறேன், முடக்கி காட்றேன்னு இறங்கினா இவிக வேதம்,உபனிஷதம்,புராணம்,சமூகம் இத்யாதி போட்ட சங்கிலியெல்லாம் பராசக்தில கண்ணாம்பா வசனத்துக்கப்புறம் தெறிச்சு விழறாப்ல ஃபணாலாயிரும்.



உள்ளுக்குள்ள மிருகமா இருக்கிற மனிதனை அதை உணரச்செய்து , அந்த மிருகத்தனத்தை படிப்படியா இழக்கச்செய்து (லீகல் & மோரல் மெத்தட்ஸ்) மனிதனா மாத்தி மனிதனா தொடரச்செய்யனும், விட்டா தெய்வமா முன்னேற வைக்கனும் அதான் மதம். இந்த ஃப்ரேமுக்குள்ள அடங்காத எதையும் நான் மதமா ஏத்துக்க தயாராயில்லே.



ஓஷோ தான் சொல்வாரு ஒரு மனிதன் ஞானமடைந்த பிறகு தானா வந்து சேரக்கூடிய நற்குணங்கள் ஏற்கெனவே தமக்குள்ள இருக்கிறாப்ல வெறுமனே நடிக்கறது ஆபத்தானது. அதை தான் மதம் செய்யுது. இது ஏமாற்று வேலை, ஹிப்பாக்ரசி, கேணைத்தனம். முட்டாள்தனம்.



புதுசா ஆரம்பிங்கப்பா. உண்மை நிலையை ஏத்துக்கிட்டாத்தான் ப்ளானிங் பக்காவா இருக்கும். அடுத்த கட்ட நடவடிக்கையும் யூஸ்ஃபுல்லா இருக்கும்.



அரிது அரிது மானிடராய் பிறத்தலரிதுன்னு அவ்வை சொன்னது கரெக்டுதான். ஏன்னா மனிதனுக்குள்ள ஒரு மிருகமிருக்கு அதை காலை,மாலை உலவ விட்டு (லீகல் & மோரல் லிமிட்) மறுபடி கட்டி வச்சா லேசா உறுமிக்கிட்டு கிடக்கும். ஆனால் மிருகங்கள் 24 ஹவர்ஸ் மிருகங்கள் தான். மனிதன் பார்ட் டைம் மிருகம். ( அது கூட அவனோட உயிருக்கு ஆபத்து வரச்ச, பசி,பட்டினி பாதிக்கிறச்ச, அவனோட ஆதாரமான செக்ஸ் தேவை மறுக்கப்படறச்சத்தான்)



சரிங்கண்ணா இந்த தொடர்பதிவோட கடைசீ ...பத்திகளை படிச்சுருங்க. தொடர் வெறுமனே "முற்றும்" இல்லே. தற்காலிகமா முற்றும்.



இதுவரை நான் எடுத்துவச்ச வாதங்களை தப்புன்னு நிரூபிச்சு , கீதையில இருக்கிறதெல்லாம் கிட்னர் சொன்னது, அய்யர் சொல்லலை, அந்த அய்யருக்கு ஹிடன் அஜெண்டா ஏதுமில்லேன்னு, கீதையில இருக்கிறதெல்லாம் அறிவுப்பூர்வமானது, லாஜிக்கல், லீகல்னு ருசுப்படுத்திட்டாங்கன்னா கு.ப. வலுவான வாதங்களை எடுத்து வச்சாங்கன்னா அப்போ இந்த தொடர்பதிவை ரீ ஸ்டார்ட் பண்றேன். அதுவரைக்கும் அம்பேல்.



தொடர் பதிவின் கடைசி பத்திகள்:



//ஒழுக்கம் கெட்டவனாக இருந்தாலும் அவன் வேறு தெய்வத்தை வணங்காமல் என்னையே வணங்கினால் அவன் உன்னத உத்தமமானவன் என்றுதான் கருதவேண்டும்//னு கிருஷ்ணர் சொன்னதை (?) கடந்த பதிவுல பார்த்திங்க. அடுத்து ஒரு பாரா வருது.



//அப்படி வணங்கறவன் சூத்திரனா இருந்தாலும் அட பெண்ணாவே இருந்தாலும் நோ பிராப்ளம்//னு கிட்னர் என்.ஓ.சி கொடுக்கிறாரு.



நாய் கறிய சமைச்சு சாப்பிடறவன் , சத் பிராமணன் இரண்டு பேருக்கிடையிலயும் எந்த வித வேறுபாட்டையும் பாராத ஒருவனே எனக்கு ப்ரீதியானவன்னு வேற ஒரு சீக்வென்ஸ்ல சொல்லப்போற கிட்னர் சூத்திரனா இருந்தாலும் அட பெண்ணாவே இருந்தாலும்னு சொல்றாருன்னா என்ன அர்த்தம் அவருக்கு பேதபாவம் தான் இருக்கு. அபேதபாவம் இல்லேன்னு ருசுவாகுதுல்ல. இந்த ரெண்டு ஸ்டேட்மெண்டுக்கு மத்தியில இன்னா மாதிரி காண்ட் ராடிக்ஷன் இருக்கு பார்த்திங்கல்ல.



ஏதோ காலணா டைரக்டர் எடுத்த நாலணா சினிமாவுலயே இப்படி ஒரு முரண்பாடு வந்தாலே விகடன்ல போட்டு குடைஞ்சுருவாங்க. ஆனால் ஜகன்னாடக சூத்திரதாரியான கிட்னரோட ஸ்டேட்மெண்ட்ல இப்படி ஒரு முரண்பாடு வருமா? வராது. ஆனால் கீதைல வந்திருக்கே.



"இதனால் யாவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் தற்போது கீதை என்ற பெயரில் செலவாணியில் இருக்கும் கீதைக்கும் , கண்ணனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லிங்கோ"

Thursday, May 20, 2010

கீதை: எதிர் வினைகளுக்கான விளக்கம்

 ஸ்மார்ட் அவர்களே,
தங்கள் பதிவுக்கு இணைப்பு கொடுக்காதது ஜஸ்ட் ஒரு மிஸ்டேக் தான். டோண்ட் ஃபீல் யார்.. (உங்க பதிவை சனம் படிக்க கூடாதுனு கண்ணன் சங்கல்ப்பமோ என்னமோ) வேணம்னா நம்ம ப்ளாக்ல ஹெடர் இமேஜ் கீழேய உங்க  பதிவுக்கு இணைப்பு கொடுத்துர்ரேன். ஓகே ?

// முதல் முறைய எதிர்ப்பு வந்திருக்குனா, எல்லாத்துக்கும் தெரியுது நீங்க எதோ உளருறீங்கனு அதை யாரும் எதிர்க்கலை போல, நான் தான் அதை புரிஞ்சுக்காம தனி பதிவு போட்டு டயம் வேஸ்ட் பண்ணிட்டேன்//

என்ன ஜாலாக்கா கழண்டுக்கறே தலை !  எதிர்ப்பு வரலன்னா கண்டுக்கலை/ உளறல் னு தெரியும் போல ன்னுதான் அர்த்தம் சொல்லி  அடம்பிடிச்சா எப்படி ராசா..கீதைங்கறது  எந்தளவுக்கு சென்சிட்டிவ் விஷயம் தெரியும்ல.  உங்க தமிழகத்தின் அடுத்த முதல்வர்    விஜய்  கை வச்சாலே  எதிர்ப்பு சீறி கிளம்புச்சுல்ல.

இப்போ எதிர்ப்பு ஏன் வரலைன்னா தி.க காரவுக  கீதைய பத்தி பேசினா கண்ணனே இல்லைனு ஆரம்பிப்பாய்ங்க. உடனே  ஆஸ்திக கூட்டம்  நீங்கள்ளாம் அபிஷ்டுங்க நரகத்துக்குத்தான் போவிங்க அது இதுன்னு மொக்கை போட்டுட்டு அடுத்த  வேலைய  பார்த்துக்கிடுவிங்க.

ஆனால் இங்கே கண்ணனை ஏத்துக்கறோம். கீதைய ஏத்துக்கறோம். இப்ப செலாவணில கீர கீதைய இல்லைண்ணா. கண்ணனோட கேரக்டருக்கு, அடுத்து அவர் செயல்பட்ட விதத்துக்கு ஒத்துவராத பாய்ண்டையெல்லாம் கழிச்சுட்டா மிச்சமிருக்கிற கீதைய ஏத்துக்கறோம். ஒத்துவர்ர பாயிண்டை மட்டும் ஏத்துக்கறோம்.

பிரிச்சு மேயறதுன்னா இதான் தொரை ! டிவைட் அண்ட் ரூல் பாலிஸி தெரியும்ல. கீதைய ரெண்டா பிரிக்கிறோம், ஒரிஜினல் கீதையோட எச்சங்களை ஒரு பக்கம்,  அவாள் கோர்த்துவிட்ட மிச்சங்களை மறுபக்கம் பிரிக்கிறோம்ல.

இதனால தான் அவாள் எல்லாம் கிர்ரடிச்சு கிடக்கா. டர்ராகி கிடக்கா . நீ பாவம் இளங்கன்னு பயமறியாது கணக்கா விவரம் புரியாம மோதிட்ட கண்ணு..

//ஆ உ னா அவ்வளவு ஹிட்ஸ் வாங்கிட்டேன் இவ்வளவு ஹிட்ஸ் வாங்கிட்டேன்னு பினாத்துறீங்களே! அதெல்லாம் ஒரு சாதனையா வெட்காமயில்லை//

என்ன ராசா ! இப்படியெல்லாமா மொக்கை போட்டு சக்கையா வாங்கி கட்டிக்கிறது. அப்போ  இதே கேள்விய ஏ.ஆர்.ரஹ்மானை பார்த்தும் கேட்பிங்களா?
ரஜினிய பார்த்தும் கேட்பிங்களா? விஜய் அவர்களை பார்த்து கேட்பிங்களா ?  என்னாச்சு ஸ்மார்டு ! இந்தளவுக்கு டெப்ரஷனா? ப்ளாக்ல எழுதறதே பத்து பேரு படிக்கத்தான். யாரும் படிக்க தேவையில்லைன்னா எழுதி ட்ரங்க் பெட்டில வச்சிக்கிட வேண்டியதுதானே.

நான் என்ன அடுத்தவுங்க ப்ளாகுக்கு வந்த ஹிட்ஸையா சொல்றேன். என் ப்ளாகுக்கு வந்த ஹிட்ஸைதானே சொல்றேன். நான் என்ன விரதங்கள்,பரிகார தலங்கள், சமைத்துப்பார், சினிமா விமர்சனம்னு ஜல்லியடிச்சா இத்தனை ஹிட்ஸ் வாங்கினேன். தத்துவம் கண்ணா ..தத்துவம்..

ஹி ஹி எப்படியோ சந்தர்ப்பம் வந்ததாலே இன்னொரு தாட்டி சொல்றேன். பத்து மாசத்துல 1 லட்சம் ஹிட்ஸு. ரெண்டு மாசத்துல 50 ஆயிரம் ஹிட்ஸு.. எத்தனை சதவீதம் வளர்ச்சின்னு சின்னதா கணக்கு போட்டு பாரு ராசா.

கழுகைபார்த்து உயர பறக்க கத்துக்கிடனும். அது பிணத்தை தானே திங்குதுனு நொட்டை விடக்கூடாது.

//உங்க பதிவெல்லாம் ஒரே சுயபுராணமா இருக்கே!//

புராணம்னா பழசு, பழைய கதைனு அர்த்தம் .  நான் புராணத்தை கிழிக்கிறேனே தவிர எடுத்துவிட்டு காசு பொறுக்கலியே.  சுயம்னா செல்ஃப். என் செல்ஃப் என்னனு உணர்ந்ததால தான் ஓஷோ சொன்னாப்ல பாதுகாப்பின்மையையே பாதுகாப்பா வச்சு வாழ்ந்துக்கிட்டிருக்கேன். ரிஸ்குன்னா நமக்கு ரஸ்கு சாப்டாப்பல. இல்லாட்டி பத்து ரூபாய்க்காக ஒரு சி.எம். மேல கேஸ் போட முடியுமா?  நான் என்ன என் கதையை  இட்டுக்கட்டியா சொல்றேன். சரித்திரம் கண்ணு. சம கால சரித்திரம்.  சொல்லிக்க ஏதோ இருக்கு சொல்றேன். இது தப்பா?

என் லேப் நான் தான். என்னோட லேப்ல முதல் எலி நான் தான். ஒரு விஞ்ஞானி தன்  பரிசோதனை முடிவுகளை சொல்றப்போ தன் ஆராய்ச்சிக்கு உதவிய எலிகளுக்கு என்னாச்சுனு சொல்றதில்லையா அது மாதிரிதான் தலை.. என் சுய புராணம் .

//உங்க ஐடியாவைக் கேட்டா அப்படியாகலாம் இப்படியாகலாம் என்று சொல்லும் நீங்க முதல உருப்படியா ஒரு ஐடியா போட்டு எழுத்துப் பிழையை நீக்கிற வழியப்பாருங்கண்ணா.//

என்னாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆது எழுத்துப்பிழைய பத்தி ஸ்மார்ட்டா சொல்றது ? கஷ்ட காலம்..

//சீக்கிரம் போங்க காத்து வரட்டும்.//

ஸ்மார்ட்டு.. ஒன்னரை லட்சம் தடவை சனம் என் ப்ளாகுக்கு விசிட் பண்ணி நீ இரு கண்ணானு சொல்லியிருக்காங்க. ரஜினியே ஆனாலும் ஒரு தடவை சொன்னா  நூறு  நூறு தடவை சொன்ன மாதிரிதான்.  என்னை போங்கனு சொல்ல எத்தனை ரஜினி வரனும்னு கூட்டி கழிச்சு கணக்கு போடுங்க 


// கம்மிங் டு தி போயின்ட்,மொத்தப்பதிவுல கீதையை விட பார்ப்பனரைத் தான் திட்டுறீங்க.//

ஏங்க .. கர்த்தா கர்மா க்ரியா தெரியும்ல . பிராமணர்கள் கீதையை எழுதினார்கள்ங்கற இந்த வார்த்தைல கர்த்தா :  பிராமணர்கள். கர்மா : கீதை க்ரியா: எழுதினார்கள். இதுல காரியமோ , பொருளோ கெட்டுப்போனா கர்த்தாவைத்தானே திட்டுவாய்ங்க.

நாய் நம்ம காலை கடிச்சா காலை திட்டனுமா? கடிச்சதை திட்டனுமா? நாயை திட்டனுமா? நீயே சொல்லு பாஸு நீ என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் சொன்னாலும் ஓகே

//உங்க காண்டேல்லாம் அவுங்க மேல தான்.//

இந்த மேட்டர்ல நாம அண்ணா வழி அண்ணாச்சி. அவாள் மேல நமக்கு காண்டு கிடையாது. வித்தைக்கு பண்ணாங்களே துரோகம் அது மேல தான் காண்டு. மனித குலத்தை  நாலு வர்ணமா பிரிச்சு ஆண்டாங்களே.. அந்த பிரிவினை வாதம் மேல தான் காண்டு.  உங்க உயிரும்,எங்க மயிரும் ஒண்ணுன்னாங்களே அந்த அகங்காரத்து மேல காண்டு.

இத்தனை ஆயிரம் வருஷமாகியும் மந்திரி/எம்.எல்.ஏ //தாழ்த்தப்பட்டவனா இருந்தாலும் செகரட் ரிங்கற போர்வைல இன்னைக்கும் அதிகாரம் செலுத்தறாய்ங்களே அது மேல தான் காண்டு. இந்த நாடு இன்னைக்கும் இந்த இழி நிலைல இருக்க காரணம் ஆண்டவனும் கிடையாது. இந்த நாட்டை ஆண்டவர்களும் கிடையாது. அவிக பின்னாடி இருந்துக்கிட்டு இந்த நாட்டை ஆண்ட அவாள் தான்.

அவிக முட்டா பசங்களா இருந்திருந்தா அட விடுப்பா அவிக அறிவு அவ்ளதானு விட்டுத்தள்ளியிருப்பேன். ஆனால் அவிக சொந்த வேலை,மடத்து வேலை,ஆசிரமத்து வேலை, அவிக இனத்தோட வேலைய மட்டும் இவ்ளோ ஜாலாக்கா பாயடில தண்ணி பாஞ்சா மாதிரி முடிக்கிற பார்ட்டிங்க இந்த நாட்டை இந்த கதிக்கு ஆளாக்கி விட்டிருக்காய்ங்களே அதான் காண்டு

 என்னதான் இருந்தாலும் நீங்க அரசியல் பண்ண அதை பயன்படுத்தாமல் இருக்கமுடியாதுல! கடைசில புத்தி பேதலித்தவர் போல மனசை அடக்காதே மாடுபோல திரி என்று ஐந்தறிவு ஜீவன்களுக்கு உபதேசிப்பது போல முடித்திருக்கீங்க. ரொம்ப நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

//கடைசியா ஒரு விஷயம் நீங்க 10 பதிவு எழுதினதால 10 பேர் வானளவு பாராட்டி மெயில் அனுப்பியதாகச்சொல்கிறீர்கள் ஆனால் பதிவுலகத்தில் 1000 எருமை மாடுகள்(இங்க தப்ப எதுவும் சொல்லலைஆதாரம் இங்கே) இருக்கிறது. அதில் வெறும் பத்துதான் பாராட்டியுள்ளதா?//

என்ன தலை!  கீதைய படிச்சு ஆற அமர கிழிக்கிற என் எழுத்துலயே முரண்பாடு இல்லே.( கீதையோட சாரமே முரண்பாடுதான். அந்த வாசனை கூட என் எழுத்துல வரலை பார்த்திங்கள்ள.  (தாமரையிலை தண்ணீர் நைனா முருகேசன்) பாவம் ஜஸ்ட் கீதைய பத்தின என் விளக்கத்தை படிச்சதுக்கே  இப்படி பினாத்த ஆரம்பிச்சுட்டிங்களே ஹிட்ஸ் கணக்கை சொன்னா ? நான் பாரதியார் மாதிரி கணக்குன்னாலே  பிணக்குன்னு பிணக்கிக்கிறிங்க. நான் ஒரு பேச்சுக்கு பத்து பேர் பாராட்டினாங்கன்னா உடனே இன்டலிஜென்ஸ்  கானிஸ்டபுள் கணக்கா கணக்கு பார்க்கிறிங்க..

//நீங்க பவர் பீஸ்னு நினைச்சுத்தான் விளக்கம் கொடுத்தேன் ஆனால் நீங்க டம்மி பீஸ் போல. இன்னைக்குத்தான் உங்க சில பல பதிவுகளை புரட்டினபின்னாடி தெரிஞ்சுகிட்டேன்//

தலீவா.. பவர் பீஸா இல்லியானு எப்டி பார்க்கறிங்க. மீட்டர் வச்சு பார்த்திங்களா? இல்லே டெஸ்டர் வச்சு பார்த்திங்களா?  அப்படியோ ஷாக் அடிச்சுத்த விளக்கம் கொடுக்கலை பாஸு.. விளக்கம் தர வாய்ப்பு தந்து கமெண்ட் போட்டிங்க.  பத்திரிக்கை தொழில்ல முதல்ல டம்மி தயாரிப்பாய்ங்க. டம்மி லெவல்லயே எல்லா சரிபார்ப்பும் (ப்ரூஃப் ரீடிங்  உட்பட) முடிச்சுட்டுத்தான் ஒரிஜினலை ப்ரிண்டுக்கு அனுப்புவாய்ங்க.

நானாகட்டும், என் எழுத்தாகட்டும் எல்லாமே  டம்மி பீஸுதான் தலை. காலம் ஒரிஜினலை பிரசுரிக்கும். என்ன படிக்கறப்ப கண்ல கண்ணீர் இல்லே ரத்தம் வழியும்.  உங்கள்ள


//தளத்தின் தலைப்புக்கும் பதிவுகளுக்கும் சம்மந்தமேயில்லை.  இங்கிருக்கிற பல திரட்டிகள்ல பதிவை கொடுத்து  50,000/955 = 52  ஒரு பதிவுக்கு 52 ஹிட்ஸ் வாங்கிட்டு தூள் கிளப்புதா? உலகமாக நடிப்புடா சாமி. //

முதல்ல லட்சத்து அம்பதாயிரமே அசிங்கம்னிட்டிங்க.இப்ப பிரிச்சு மேஞ்சிருக்கிங்க. சரி சித்திர குப்தன் கணக்கா கணக்கு கேட்கறிங்க. சொல்ட்டா போவுது.

முதல் பத்து மாசம் :
300 நாள் : 300 பதிவு  ஒரு லட்சம் ஹிட்ஸ் ஒரு லட்சம் டிவைடட் பை 300 =  333 ஹிட்ஸ்

அடுத்த ரெண்டு மாசம்:
60 நாள் : 60 பதிவு 50 ஆயிரம்  ஹிட்ஸ் . அம்பதாயிரம் டிவைடட் பை 60 = 833 ஹிட்ஸ்

திரட்டிகள் கதைய சொல்றேன்:

நானா பிங்க் பண்ற திரட்டிகள் தமிழ்10, தமிலிஷ், தமில் பெஸ்ட் ,உலவு (பல நாள் இது ட்ரபிள் கொடுத்துரும்) தமிழ் மணம் (இடையில ஏதோ மால்வேர் வந்துருச்சுன்னு நீக்கிட்டாய்ங்க)   திரட்டிங்கறது ஒரு மேடை ராசா. பிந்து கோஸ் கூட கேட் வாக் பண்ணலாம், ஜெயிக்கிறது? என் எழுத்துல சரக்கில்லேன்னா 60 திரட்டில இணைச்சாலும் பூஜ்ஜியம் தான்.

புரியுதில்லை..

//அண்ணே எனக்கு பில்லி சூனியம் வச்சுறாதீங்கண்ணே //

பில்லிங்கறது தெலுங்குலயும், இந்திலயும் பூனைய குறிக்கும். சூனியம்னா இந்தி ஒலிபரப்புல ஃபோன் நெம்பர்  சொல்றப்ப  சொல்வாய்ங்களே  ஷுன்னெ ஷுன்னெனு அட ..ஜீரோ தலைவா ..

சமூக பொறுப்போட, வெள்ளை மனசா, தன் ப்ளாகோட எதிர்காலத்தை பணயம் வச்சு ரிஸ்கை ரஸ்கா சாப்பிட்டுக்கிட்டு நான் இப்படி ஒரு பதிவை போடறச்ச ஆத்தா அம்மானு கமெண்ட் போடற கம்னாட்டிங்களுக்கு ஆயிரம்  சூனியம் வச்ச எஃபெக்ட் வந்துரும். அதுக்கு நான் காரணமில்லே. ஏற்கெனவே கொடுத்தேனே லிஸ்டு. பெருமாள் டு பெரியாழ்வார். பெரியாழ்வார் டு பெரியாராழ்வாரோ ஆசிதான் காரணம்.

பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி :11

கீதையிலான பிராமணீய கலப்படங்கள் குறித்த கிழிப்பு தொடருது. கிருஷ்ணர் சொல்றதா கீதைல வர்ர கீழே உள்ள வரிகளை பாருங்க

//வேள்விகளையும் தவங்களையும் அனுபவிப்பவன் நானே//



தவத்தை அனுபவிக்கிறவன் நானேங்கற பார்ட்டை நானும் ஏத்துக்கறேன். அதாவது கண்ணன் ஒருத்தனே இல்லை நமக்கெல்லாருக்குமே இந்த கெப்பாசிட்டி இருக்கு. எங்கனயோ ஒரு பார்ட்டி அன்ன தானம் பண்ணா நமக்குள்ளயும் ஒரு வித குளிர்ச்சி பரவும். எங்கனயோ ஒரு ராஜ பக்சே நம்மாளுங்களை கொன்னு குவிச்சா நமக்குள்ளயும் ஏதோ செத்துப்போகுது. ( அங்கே படுகொலைகள் நடந்த நேரங்கள்ள இங்கே நடந்த கொலை,தற்கொலை,கொலை முயற்சி இத்யாதியோட நெம்பருக்கும், இதர நேரங்கள்ள நடந்த சம்பவங்களோட நெம்பருக்கும் பெரிய அளவுல வித்யாசம் இருந்தே தீரும்) இதை உணர கொஞ்சமே கொஞ்சம் சூட்சும புத்தி இருந்தா போதும்.



இந்த தியரியை டோட்டல் உலகத்துக்கு அப்ளை பண்ணா புரிபடறது கஷ்டம். ஸோ ஒரு சின்ன காலனி அ அப்பார்ட்மெண்டை எடுத்துக்குவம். அங்கன ஒரு தற்கொலை நடக்கப்போவுதுன்னு வைங்க. அது நடக்கறதுக்கு 6 மாசம் முந்தியே அங்கே ஒரு வித அமானுஷம் / ரெஸ்ட் லெஸ் நெஸ்/ பேட் வேவ்ஸ் பரவ ஆரம்பிச்சுரும். அட்மாஸ்ஃபியர் மாதிரி நூஸ்ஃபியர்னு ஒரு வார்த்தை உண்டு. அதுக்கு எண்ணங்களால் உருவாகும் சூழல்னு அர்த்தம். இந்த நூஸ்ஃபியர் ஸ்பாய்லாயிரும். அந்த காலனி /அப்பார்ட்மெண்ட்ல அதுவரை சண்டையே போட்டறியாத தம்பதி சண்டை போட்டுப்பாங்க. நோயே கண்டறியாத பார்ட்டிக்கு கடுமையான ஜுரம் வரும் . இப்படி அனேகம் நடக்கும்.



இந்த அடிப்படையில //தவங்களை(யும்) அனுபவிப்பவன் நானே//ங்கற கருத்தை ஏத்துக்கிடலாம்.



ஸ்வாமி விவேகானந்தா கூட உன் பிரார்த்தனைக்கு பலன் எங்கேயிருந்தோ வரலே கண்ணா.. உனக்குள்ளருந்தே வருதுங்கறார். தவத்தை அனுபவிக்கிறது மட்டுமில்லே அந்த தவத்துக்கு வரம் கொடுக்கிறது கூட உங்களுக்குள்ள இருக்கிற "சக்தி" தான்.



ஆனால் இதே வாக்கியத்துல முத பார்ட்டை பாருங்க //வேள்விகளையும் தவங்களையும் அனுபவிப்பவன் நானே//



வேள்வியை என்னத்த அனுபவிக்கிறது ? சொர்கம்னு ஒன்னிருந்தா இந்த பயலுவ பண்ற யாகம்/வேள்விலருந்து கிளம்பற புகை மண்டலம் தேவர்கள் கூட்டத்தை மூச்சுத்திணறல், காஃப், ப்ராங்கடைஸ், டி.பினு வர வச்சு அவிகளை ஒரு வழியாக்கியிருக்கும்.



சரி யாகம் பவர் ஃபுல். ஜென்யூன். பக்கானு சொல்ற பார்ட்டிங்களுக்கு ஒரு சவால்

ஆந்திர அரசு செயற்கை மழை பொழியவைக்கிறதுக்காக பல நூறு கோடி பணம் செலவழிச்சிக்கிட்டு இருக்குது. விரயமா விமானத்துல போய் மேகங்கள்ள சில்வர் நைட்ரேட் விதைச்சுட்டு வராய்ங்க.



கீதை தான் சொல்லுதுல்ல யாகத்தால மழை வரும்னு பேசாம ஆந்திரா கவர்ன்மெண்டுக்கிட்ட பேசி "செயற்கை மழையெல்லாம் எதுக்கு தெண்டம். நாங்க யாகம் பண்றோம் . மழை வந்தே உடும்"னு ஒத்துக்க வச்சி காண்ட்ராக்ட் எடுத்துக்க வேண்டியதுதானே. வேணம்னா இந்து மடங்கள், இந்து ஆசிரமங்களோட ( நித்யானந்தா ஆசிரமம் உட்பட) சொத்துக்களை பிணையா கூட வைக்கலாம்.



என்னய்யா கதை விடறிங்க. யாகத்தை எவனாச்சும் அனுபவிக்க முடியுமா? சகிச்சுக்கலாம். தட்ஸால். தலைவன் செத்தா லாரி டயரை கொளுத்தற தொண்டனுக்கும், மழை வரும்னு யாகம் பண்ற தெண்டனுக்கும் என்னய்யா வித்யாசம்?



லாரி டயரை மாதிரி இதையும் சகிச்சுக்கிடத்தான் முடியும். அனுபவிக்க முடியுமா ?

யாகம்/வேள்வி எல்லாம் உண்மையா இருந்தா எல்லா தேர்தல்லயும் எல்லா பன்னாடையும் ஜெயிச்சுத்தான் ஆகனும். ஏன்னா எல்லா நாதாரியும் யாகம் பண்ற கேஸுதானே. தோற்க ஆளே இருக்காதுல்ல.



யாகம் வெற்றிய தரும்னா அப்போ ஏன்யா தவலை, மூக்குத்தி, கவர்ல காசு, பாட்டில் எல்லாம் குடுக்குறாய்ங்க? ஆறும்,அருவியும்,ஏரியும், பச்சை புல்வெளியும் பசு கூட்டமுமா இயற்கைக்கு நெருக்கமா வாழ்ந்த கண்ணன் இயற்கையின் கொடையான காட்டுச்செல்வத்தை கரியாக்கிற யாகத்தை அனுபவிக்கிறேன்னு சொல்லியிருப்பாரா? ரோசிச்சுப்பாருங்க.



அடுத்து கிட்ன பரமாத்மா ஒரு பஞ்ச் டயலாக் உடறாரு.



" ஏழுலகிற்கும் இறைவன் நானே." சுபாஷ் சந்திரபோஸ் கீராரா பூட்டாராங்கற விஷயத்துல நடக்கிற மாதிரியே இந்த உலகங்கள் பற்றிய எண்ணிக்கை பத்தி கூட ஓயாத சர்ச்சை நடக்குது.



ஜரிதா போட்டவனுக்கு புதுசா ஒரு உலகம் விரியுமாம், ஃபுல் அடிச்சவனுக்கு ஒரு உலகம், கஞ்சா அடிச்சவனுக்கு ஒரு உலகம், சப்பை ஃபிகர் மடில படுத்தவனுக்கு ஒரு உலகம்னு கச்சா முச்சானு விரியறதா கேள்வி. அந்த காலத்து நாவல்ல ஹீரோயின் கண்ணை மூடினதுமே விரியற கனவுலகம் வேற..



திருக்குறள் அவ்வுலகு/இவ்வுலகுனு ரெண்டு உலகத்தை காட்டுது, மூவுலகுனு கேள்விபட்டிருக்கோம், இங்கே கிட்னர் ஏழு உலகம்ங்கறார். சில மாயா ஜால கதைகள்ள ஈரேழு பதினான்கு உலகம்னு வரும். சைன்ஸ்ல நம்ம சூரியன், சூரியனை சுத்தி கிரக கூட்டம் இருக்குதுல்ல. இதை சூரிய குடும்பம்ங்கறாய்ங்க . இந்த மாதிரி பல்லாயிரம் சூரிய குடும்பங்கள் இருக்கிறதா சைன்ஸ் சொல்லுது. இதில்லாம இந்த விசுவம் விரிவடைஞ்சுக்கிட்டே போவுதாம்.மகாவெடிப்புல ஆரம்பமான படைப்புதானே அந்த சூட்ல தான் இப்படி விரிவடையுதாம்.



(ஒரு பக்கம் சூடு ஆறிட்டே வருதாம் அதனால இந்த படைப்பு ஒரு பக்கம் சுருங்கிக்கிட்டும் வருதாம்)



அப்போ மொத்தம் எத்தனை உலகம் இருக்கும் ? குத்து மதிப்பா ஒரு கணக்கு போடுங்க. ஆனால் கிருஷ்ணர் என்னடான்னா ஏழு உலகத்தோட நின்னுர்ரார். அப்போ மத்த உலகத்துக்கு வேற ஒரு கிருஷ்ணர் உண்டா? டோட்டல் படைப்புக்கும் பேட்டன்ட் ரைட் என்னுதுங்கற பார்ட்டிக்கு மொத்தம் எத்தனை உலகம்னு தெரியாதா? இந்த ஒரு விஷயத்தை வச்சே சொல்லிரலாம். இந்த கீதைய சொன்னது கிருஷ்ணர் இல்லேன்னு. நாலாங்கிளாஸ் ஜியாக்ரஃபி பாடம் கூட தெரியாத பார்ட்டின்னு.





அடுத்து யோகம் - யோகி பற்றி கீதை என்ன சொல்லுதுனு பார்ப்போம்:



//யோகி யோகி என் கிறாயே எவன் அந்த யோகி என்று கேட்கிறாயா? குந்தியின் மகனே என்னையே நம்பி என்னையே நெருங்கி என்னையே சார்ந்து என்னை தொழுகின்றவனே எல்லா யோகிகளிலும் சிறந்த யோகி இது என்னுடைய முடிவு//



இங்கே கிருஷ்ணர் நம்ம ஜெயலலிதா, கலைஞர் ரேஞ்சுக்கு போயிட்டாரு. யாரெல்லாம் நிறைய கோவில்ல அபிஷேகம் அர்ச்சனை பண்ணி பிரசாதம் கொண்டுவராய்ங்களோ அவிகதான் ஜெ வுக்கு ஸ்ரேஷ்டம். யாரெல்லாம் தொகுதி பிரச்சினை, மானில பிரச்சினை, கழக பிரச்சினையை கண்டுக்காம தன்னை சுத்தி சுத்தி வர்ரவுகதான் கலைஞருக்கு ஸ்ரேஷ்டம்.



//என்னையே நம்பி என்னையே நெருங்கி என்னையே சார்ந்து என்னை தொழுகின்றவனே // யோகின்னா. அவன் பத்மாசனத்துல உட்கார வேணாமா? மூக்கு நுனில நினைவை நிறுத்தி மூச்சை, எண்ணங்களை, எண்ணங்களுக்கிடையிலான இடைவெளிய கவனிக்க வேணாமா? அவன் பத்து வட்டி வாங்கினா பரவாயில்லையா? தன் அப்பா அம்மாவை முதியோர் இல்லத்துல சேர்த்தாலும் பரவாயில்லையா? என்னங்கய்யா இது ?



இந்த கீதைய கண்ணனே சொல்லியிருந்தா " தபாருப்பா. .. நான் என்ன அரசியல் தலைவனா தொகுதிய /மக்களை /கட்சிய/ கவனிக்காம என்னை சுத்தி சுத்தி வந்தா பதவியை தூக்கி கொடுத்துர.. ஏன் விரயமா என்னை வெளிய தேடறே? நான் உனக்குள்ள இருக்கேன்பா. நீ இந்த இயற்கையோட கையடக்க பதிப்புகண்ணா.. உன்னைபாரு...இந்த இயற்கைய பாரு. இதுல இருக்கிற ஒழுங்கற்ற ஒழுங்கை பாரு. நான் தான் இயற்கையின் வடிவா என்னை நான் வெளிப்படுத்திக்கிட்டிருக்கேன் . இயற்கையும் நானும் வேறில்லை. இயற்கை உனக்கு கொடுத்திருக்கிற கடமைகளை நிறைவேற்று. உன்னை நீயே ஒரு சாட்சியா இருந்து கவனி. இதான் தியானம். ஒழுங்கா தியானம் பண்ணு. வெறுமனே எனக்கு ஜால்ரா போட்டு எனக்கு ஆகிறது ஒன்னுமில்லைன்னு சொல்லியிருப்பாரு



ஆனால் மேற்படி ஸ்டேட்மென்ட்டுக்கு ஓனர் ஒரு ஐயர். அதனாலதான்

//என்னையே நம்பி என்னையே நெருங்கி என்னையே சார்ந்து என்னை தொழுகின்றவனே யோகி/ன்னு கிருஷ்ணர் சொல்றதா பீலா விடறார். ஏன் ? எதுக்கு?





எவனாலயும் இப்படி வாழமுடியாது. அப்படி வாழாத பட்சத்துல அவனுக்குள்ள குற்ற மனப்பான்மை வரும். வந்தா அவன் அவாளை அப்ரோச் பண்ணுவான். அப்போ அவனை சரண்டர் பண்ணிக்கிறது ஈஸி. இதான் நூலாசிரியரோட வியூகம்.



என்னைப் பொருத்தவரை இயற்கைதான் இறைவன். இயற்கையிலிருந்து வந்த மனிதர்கள் தான் இறைவனின் வாரிசுகள். இயற்கையை புரிஞ்சிக்கிட்டு இயற்கையை பணிஞ்சு, பாதுகாத்து, இணக்கமா வாழற வரைக்கும் இந்த உலகமே ஸ்வர்கம். இதுதான் கிருஷ்ணனுக்காக நாம செய்ற தவம், வேள்வி எல்லாமே.



இப்படியொரு வாழ்க்கைய வாழ்ந்தா தியானம்,யோகம்லாம் மனிதர்கள் கிட்டே ஆட்டோகிராஃப் கேட்டு முண்டியடிக்கும்.



அடுத்த பத்திய பாருங்க



//அர்ச்சுனா ! யார் மூன்று வேதங்களையும் படித்து கிடைப்பதற்கு அரிதானதும் ஒரு கொடியில் இருந்து கிடைப்பதுமான சோமபானத்தை அருந்தி தங்கள் பாவங்களுக்கு விடை கொடுத்து அடிக்கடி வேள்விகளால் என்ன பூஜித்து சொர்கத்தை அடைய விரும்புகிறார்களோ அவர்கள் தேவருலகத்தில் திகட்டாத சுகம் முழுவதும் அல்லும்,பகலும் அனுபவித்து வாழ்கிறார்கள்.//



//அர்ச்சுனா ! யார் மூன்று வேதங்களையும் படித்து//



நான்குனு வந்திருக்கனும். அச்சுப்பிழை போலிருக்கு. விட்டுருவம். வேதங்களை பத்தி ஏற்கெனவே சொல்லியிருக்கேன். முதல்ல பொருளை பாருன்னாங்க, நான் ப்ராமின் வர்கங்கள்ள ஏற்பட்ட கல்வி வளர்ச்சி காரணமா அது புஸ்வானம்னு தெரிஞ்சு போன பிறகு பொருளை பார்க்காதே உட்பொருளை பாருன்னு டுமீல் விட்டாய்ங்க. அதுவும் ஒரு மண்ணுமில்லைன்னு நம்மாளுங்க ப்ரூவ் பண்ண பிறகு ரிதம், டெசிபல், ஸ்ருதின்னு ரீல் விட்டாய்ங்க. ஏ.ஆர் ரஹ்மானோட ஸ்ருதிதான் வையத்தை ஆளுதே தவிர வேதம்லாம் வெறுமனே அவாளுக்கும், திருந்தாத சில சூத்திர ஜென்மங்களுக்கும் மட்டும் பரிமிதமாயிருச்சு.



//ஒரு கொடியில் இருந்து கிடைப்பதுமான சோமபானத்தை அருந்தி//



இது வெறுமனே டாஸ்மாக்ல கிடைக்கிற சரக்கு இல்லிங்கண்ணா அதை விட காட்டம். சட்டத்தால தடை செய்யப்பட்ட பானம். இதை அருந்தி என்ன செய்யனும்னு அடுத்த வரில பார்ப்போம்.



//(சோம பானத்தை அருந்தி ) தங்கள் பாவங்களுக்கு விடை கொடுத்து//



சோம பானங்கறது டாஸ்மாக் சரக்கை விட காட்டமானது இன்றைய மானங்கெட்ட அரசுகளால் கூட தடைசெய்யப்பட்ட போதை வஸ்துன்னு சொல்லியிருக்கேன். இதை அடிச்சா பாவங்கள் குட் பை சொல்லிருமா ? நோ.. மிஞ்சி போனா பாவங்கள் பற்றிய நினைவு கொஞ்ச நாழிக்கு குட் பை சொல்லலாம். அதே சமயம் " நான் மனிதன். மிருகம் போல நடக்க கூடாது"ங்கற எண்ணம் கூட குட் பை சொல்லிரும் அண்ணாத்தை.



பார்த்திங்களா பாவங்களுக்கு விடை கொடுக்க இன்னா மாதிரி வழி சொல்லுது கீதை? ராமதாஸு, அன்புமணில்லாம் 3 மணி நேர சினிமால ஜஸ்ட் ஒரு நிமிசம், ரெண்டு நிமிசம் வர்ர பீடி,சிகரட் சீனுக்கே அவ்ளோ சீன் போட்டாங்களே பல்லாயிரம் கோடி காப்பீஸ் புத்தகமா, சி.டி.யா, டிவிடியா வித்திருக்கிற கீதைல, இவ்ளோ பகிரங்கமா போதைக்கு விளம்பரம் தர்ராய்ங்க, போதைய ஜஸ்டிஃபை .

பண்றாய்ங்க,கீதைய பத்தி பேச ராமதாஸ் அண்ட் கோ தயாரா?



பாரதியார் ஒரு தரம் வீட்டை விட்டு வெளிய வர்ரச்ச எதிர்த்தாப்ல ஒத்தை அய்யரு வந்தாராம்.அப்போ பாரதியாரோட நண்பர் ஒருத்தர். "சகுனம் சரியில்லையே"ன்னு சொல்ல பாரதியார், " யோவ் கள்ளுபானை எதிர்க்க வந்தா நல்லது தானே"ன்னு கேட்டாராம். நண்பர் " நீங்க கேட்கிற கேள்விக்கும் இந்த சிச்சுவேஷனுக்கும் என்ன

சம்பந்தம்னு கேட்க பாரதியார் சொன்னாராம் " எதிர்த்தாப்ல வர்ர அய்யரு மொடா குடியன். அவனோடது வயிறுல்ல கள்ளுப்பானை"ன்னாராம். பாரதியார் காலத்துலயே இதான் நிலைமை.



இப்போ லிக்கர், கோழிக்கறி,ஆட்டுக்கறி,முட்டையெல்லாம் விலையேற டிமாண்ட் எகிற காரணமே "அவாள்" கூட சாப்பிட ஆரம்பிச்சுட்டதுதான். பிராமணன் என்றால் பிரம்மத்தை (இயற்கையை) அறிந்தவன்னு அர்த்தம். கிறிஸ்தவ பேர்கள்ள ஒளிஞ்சிக்கிட்டு "அவாள்" போடற கமெண்டை பார்த்தா சரோஜா தேவி நாவல் எல்லாம் இவாள் கிட்டே பிச்சை எடுக்கனும். அப்புறம் ஏனய்யா உங்களுக்கு இந்த கேவலமான புத்தினு கேட்டா " நானெல்லாம் காயத்ரி சொல்றவன் தெரியும்ல"ன்னு ப்ளாக் மெயிலிங் வேறே.





அடுத்த பத்திய பாருங்க:



//ஒருவன் ஒழுக்கம் கெட்டவனாக இருந்தாலும் அவன் வேறு தெய்வத்தை வணங்காமல் என்னையே வணங்கினால்//



தமிழ் நாட்ல இருக்கிற ரவுடிப்பய எல்லாம் எதிர்கட்சில இருந்தா என் கவுண்டர், ஆளுங்கட்சில இருந்தா ரவுடி ஷீட் இருக்கும், கேஸு இருக்கும்,வாரண்ட் இருக்கும், போலீஸ் ரெக்கார்ட்ல தலைமறைவுன்னு இருக்கும். ஆனால் மேற்படி மாண்புமிகு ரவுடி பப்ளிக் ஃபங்க்ஷன்ல முதல்வர்,துணைமுதல்வர், மந்திரிங்க பின்னாடியே நின்னுட்டிருப்பான். ஏன்னா இவிக கீதையின் பாதைல நடை போடறாய்ங்க. அதான் கிருஷ்ணரே சொல்ட்டாரே.



//ஒழுக்கம் கெட்டவனாக இருந்தாலும் அவன் வேறு தெய்வத்தை வணங்காமல் என்னையே வணங்கினால் அவன் உன்னத உத்தமமானவன் என்றுதான் கருதவேண்டும்//



தூத்தேறிக்க...கிருஷ்ணனை கலைஞர்,ஜெ, ரேஞ்சுக்கு கொண்டுவந்துட்டாய்ங்களே. உண்மைலயே இந்த கீதைய கண்ணன் சொல்லியிருந்தா "த பாருப்பா என்னை வணங்கறது, பேனர் கட்டறது இதெல்லாம் தேவையில்லாத விஷயம், நான் தான் என்னை இயற்கையோட வடிவத்துல வெளிப்படுத்திகிட்டிருக்கேன். நீ எந்த தெய்வத்தை வேணா வணங்கு. வணங்காம போ. ஆனால் இயற்கைக்கு இணங்கு. தலை வணங்கு. இல்லே லைலா, ஷகீலானு வரிசை புயல்களோட வடிவத்துல சக்கரம்தான் மாப்ளே"ன்னிருப்பாரு. அதனால தான் சொல்றேன் இந்த கீதை கண்ணன் சொன்னதுல்ல.



இப்போ செலாவணில இருக்கிற கீதைலயே அய்யர் கண்ல படாம ஒளிஞ்சுக்கிட்டு தப்பிச்ச இந்த பத்திய பாருங்க



"எவன் எந்த வடிவத்துல வணங்கினாலும் அவன் என்னையே வணங்கறானு அர்த்தம். எவன் எந்த வடிவத்துல வணங்கினாலும் அவனுக்கு அந்த வடிவத்திலயே அருள்புரியறேன்"

Wednesday, May 19, 2010

பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி: 10

அண்ணே வணக்கம்ணே,
பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி தொடர்பதிவின் மீது முதல் முறையாக ஒரு  ஸ்மார்ட் என்பவரிடமிருந்து பகிரங்க எதிர்வினை வந்திருக்கு. அதை படிக்க இங்கே அழுத்துங்க. திருவாளர் ஸ்மார்ட் என்பவரின் மேற்படி எதிர்வினைக்கு எனது விளக்கத்தை படிக்க இங்கே அழுத்துங்கள். ம'ரு' மொழி போடுவோர் கவனத்துக்கு என்ற எச்சரிக்கை பதிவை படிக்க இங்கே அழுத்துங்க.

(வரவர நம்ம வலைப்பூ கவர்ன்மெண்ட் ஆஃபீஸ் மாதிரி ஆயிருச்சு கச்சா முச்சானு அழுத்த சொல்ற நிலைமை வந்துருச்சு)

ஓகே இப்போ பதிவுக்கு போயிரலாம்.

ஓரிடத்துல கருமயோகமும், கரும சன்னியாசமும் (ஆன்மீகம்) ஒன்னுதான்னு சொன்ன கீதாசிரியர் இன்னொரு இடத்துல கரும சன்னியாசத்தை விட கரும யோகமே பெட்டர்னாரு. மறுபடி பார்த்தா

//எவனொருவன் ஆன்மிகமும் செய்கை செய்வதும் ஒன்றே என்று தெளிவு பெறுகிறானோ அவனே விவரம் தெரிந்தவன்.//ங்கறாரு.

ஆன்மீகமும்,  செய்கையும் (கர்ம யோகமும்)  ஒன்னுதானு தெளிவடைஞ்சவன் தான் விவரம் தெரிஞ்சவன்னு கீதை சொல்லுது.

இது 100%  உண்மை. ஏற்கத்தக்கது. பின்பற்ற தக்கதுன்னா அப்புறம் எதுக்கய்யா இத்தனை கோவில், இத்தனை மடம், இத்தனை வேத பாடசாலை இழுத்து மூடுங்கய்யா எல்லாத்தயும். வாங்கய்யா கங்கைக்கு காவிரிக்கும் மத்தில கால்வாய் வெட்டுவம்.

இந்து மத சாரம்னு சொல்றிங்களே அந்த  கீதையே சொல்லுதே ஆன்மீகமும், செய்கையும் ஒன்னுதான்னு. இதைவிட வேற ஆத்தன்சிட்டி என்ன வேணம்? இருக்கிற கோவில் இத்யாதியெல்லாம் மூடிருவிங்களா? செத்தாலும் மூட மாட்டிங்க. ஏன்னா அதுல தான் உங்க பிழைப்பு ஓடுது.

இங்கே நான் குறிப்பிடுவது பிரபலமாயில்லாத  கோவில்கள்ள  வெறுமனே பூசை,புனஸ்காரங்களுக்கு, தங்களை அழைக்கிற வீடுகள்ள  வைதிக கர்மங்களுக்கு  பரிமிதமான அர்ச்சகர்களை அல்ல . இவிக நிலை (பந்தாவை விட்டுட்டு பார்த்தா) செருப்பு தைக்கிறவக, துணி வெளுக்கறவக, பார்பர்ஸை விட மோசம். 

அதனாலதான் இவிகளுக்கு மதவாத சக்திகள் கிறிஸ்தவர்னு சேறுவாரி இறைச்ச டாக்டர் .ஒய்.எஸ்.ஆர் மாதசம்பளத்துக்கு ஏற்பாடுபண்ணார். சிரம தசைல இருக்கிற கோவில்களுக்கு தீப,தூப,நைவேத்தியங்களுக்கு ஒரு அமவுண்ட், இவிக வயித்துப்பாட்டுக்கு ஒரு அமவுண்ட் மாசாமாசம் செக் வடிவத்துல வர்ர மாதிரி வழி பண்ணாரு. ( சாமிக்கு ரூ 1000 ஆசாமிக்கு ரூ.1,500)   இதை நான் விமர்சிக்கலை. ஏன்னா கோவிலுங்கற பின்னணி, பஞ்ச கச்சம், பூணூல், சாதி அகங்காரம் இதையெல்லாம் மீறி அவிக ஏழைங்க.

என்.டி.ஆர் " சமுதாயமே என் கோவில். ஏழை மக்களே என் தெய்வங்கள்"னு சொன்னாரு. நானும் அதை ஏத்துக்கறேன். லாங் ரன்ல இவிகளுக்கெல்லாம் ஆல்ட்டர் நேட்டிவ் சோர்ஸ் ஆஃப் இன்கம்கு ஏற்பாடு பண்ணி  அவனவன் போய்  சாமி கும்பிட்டுட்டு வர்ர மாதிரி பண்ணிரனும். இதான் நம்ம ஸ்டாண்ட்.

திருச்செந்தூர், திருத்தணி, பழனி, திருமலை,காளஹஸ்தி மாதிரி பிரபல கோவில்கள்ள இந்த பிராமணோத்தமர்கள் பண்ற அலப்பறைக்கு அளவே கிடையாது. வர்ர வி ஐ பிங்களுக்கு எல்லாத்தயும் திறந்து காட்டி மஸ்கா அடிச்சு, லாபியிங், பவர் ப்ரோக்கரிங், பத்து வட்டினு ஒரு   மாஃபியாவே மெயிண்டெயின் பண்றாய்ங்க. திருமலைல டாலர் சேஷாத்ரினு ஒரு அய்யரு. பக்தர்களுக்கு விற்பனை செய்யனு தயாரிச்ச பெருமாள் உருவம் பொறிச்ச தங்க  டாலர்களை  கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைச்ச கணக்கா வி.வி.ஐ.பிக்களுக்கு அள்ளிவிட்டு  நிழல் நிர்வாகம் நடத்திக்கிட்டு வந்த பார்ட்டி. சுப்ரீம் கோர்ட்லயே இந்த அபிஷ்டுவை கோவில்ல சேர்க்காதிங்கனு தீர்ப்பு கொடுத்தாய்ங்கன்னா பார்த்துக்கங்க.

என் பாய்ண்ட் ஒன்னுதான் கீதை உண்மை. அதை சொன்னது கண்ணன். அது இந்து மதத்து வேதங்கள்,உபனிஷதங்கள், பதினென் புராணங்களோட சாரமிது , அதெல்லாத்துக்கும் பிரமாணம் இதுனு   நீங்க  ஒத்துக்கிடறிங்களா? இழுத்து மூடுங்கய்யா எல்லா கோவிலையும். இருக்கிற வேதம்,உபனிஷத் எல்லாத்தையும் பொருளோட (அதுல சரக்கு இல்லைனு தயங்கறிங்களா நீங்க பூச்சி காட்டற உட்பொருளை  டிஜிட்டலைஸ் பண்ணி 24 மணி நேரம் ஒலி பரப்பிக்கோங்க வேணாங்கலை.

இருக்கிற கோவில்  ஐயருக்கெல்லாம் (பிரபலம் & நான் பிரபலம்) சித்த வைத்தியம், யோகாசனம், நோய் தடுப்பு, முதலுதவின்னு ட்ரெயினிங் கொடுங்க. இருக்கிற கோயிலெல்லாம் கலைக்கூடமாகட்டும், இயற்கை வைத்தியத்தை தர்ர மருத்துவ மனைகளாகட்டும், மூலிகை பண்ணைகளாகட்டும்.

ஆன்மீகமும், செயலும் ஒன்றேன்னு தெரிஞ்சவன் தான் புரிஞ்சவன் தான் விவரம் தெரிஞ்சவன்னு  கீதையே சொல்லுதே . சொல்லி இத்தனை ஆயிரம் வருஷமாச்சு. இன்னமும் விவரங்கெட்டவுகளா இருந்தா அசிங்கமில்லியா? 

இதையெல்லாம் செய்து விவரம் தெரிஞ்சவங்களா தங்களை தாங்கள் எஸ்டாப்ளிஷ் பண்ணிக்குவாங்கனு நீங்க எதிர்பார்த்தா ஏ.............மாந்து போயிருவிங்க. காரணம் என்னடான்னா....

இவிகளுக்கு கண்ணன் மேலயோ, கண்ணனோட வாக்கான  கீதை மேலயோ ஒரு நயா பைசா மதிப்பு கூட கிடையாது. இவிகளுக்கு தேவை இவிக பிழைப்பு ஓடனும்.அதுவும் அடுத்தவன் உழைப்புல ஓடனும்.

ஆன்மீகம்/ கரும சன்னியாசம் இப்படி எந்த பேரை சொன்னாலும் இதெல்லாமே சமூகத்தில் சிறப்பு  சலுகைகளை எதிர்பார்த்து, உழைப்பிலிருந்து தப்பிக்க உதவுற மார்கங்கள் தான். அதுக்கான வியூகங்கள் தான்.

செக்ஸ் எஜுகேஷன் பத்தி ஒரு படம் வந்து சக்கை போடு போட்டது ஞா இருக்கலாம். பேரு ஞா இருக்கா "குப்த் ஞான்" .குப்த என்றால் ரகசியம்னு அர்த்தம். உண்மையான் ஆன்மீக வாதி தன்னை வெளிச்சம் போட்டுக்கவே மாட்டான் . அவனுக்கு குப்த யோகின்னு பேரு.

தெலுங்குல ஒரு பழமொழி உண்டு. " கன்சு ம்ரோகினட்டு கனகம்பு ம்ரோகுனா" பித்தளை ஒலிக்கிற மாதிரி தங்கம் ஒலிக்குமாங்கறது இதனோட அர்த்தம்.

நான் மறுபடி மறுபடி சொல்றேன் மதம்,ஆன்மீகம்லாம் காலைக்கடன் கழிக்கிற மாதிரி அதை ரகசியமா வச்சுக்கனும். அதைக்காட்டி உழைப்புல இருந்தோ,சமூக கடமைகள்ள இருந்தோ விதிவிலக்கு கேட்கிறது, சிறப்பு சலுகை கேட்கிறதெல்லாம் அசிங்கம்.

ஓஷோ சொல்வாரு " சரியான ஆளு தப்பான வழில போனாலும் சரியான இடத்தை போய் சேர்ந்துருவான். தப்பான ஆளு சரியான வழில போனாலும் வழி தவறிடுவான்"
இவிக தப்பான ஆளுங்க. அதனால தான் கீதையே சரியான வழிய காட்டியும் தப்பான வழில போறது மட்டுமில்லாம சனத்தையும் மிஸ் கைட் பண்ணிக்கிட்டு பிழைப்பை நடத்தறாய்ங்க.

சக மனுஷனை எந்த விஷயத்துல வேணம்னா ஏமாத்திரலாம் ஆனால் அவன் கெட்டு நொந்து  நூடுல்ஸாகி  சரண் புகும் இடம் ஆன்மீகம். அதுல கூட அவனை ஏமாத்தினா/ஃப்ராட் பண்ணா, பண்ணினவன்  மனுஷனே கிடையாது. மிருகம்.

கர்ம சன்னியாசம், கர்மயோகம் பத்தி ஓஷோ நச்சுனு ரெண்டு வரி சொல்லியிருக்காரு.

கர்ம சன்னியாசம்: செயலின்மையில் செயல்படுதல்
கர்மயோகம்: செயலில் செயலற்று இருத்தல்.

இந்த ரெண்டு பாயிண்டை புரிஞ்சிக்கிடனும்னா நீங்க இயற்கையோட இணக்கமா இருக்கனும். அப்பத்தான் மேற்படி கர்ம சன்னியாசம், கர்ம யோகம் ரெண்டுமே ஒன்னுங்கற சத்தியம் புரியும் . கீதை இயற்கைக்கு எதிரா போராடச்சொல்லுதே. புலனடக்கத்தை உபதேசிக்குது. நீங்க உங்க புலன் களோட போராட ஆரம்பிச்சுட்டா உங்களுக்குள்ள இரட்டை தன்மை ஏற்பட்டுரும். நீங்க உங்களோடவே போராடி சாகவேண்டியதுதானே தவிர..ஒரு வெண்ணையும் சாதிக்க முடியாது. உங்க உள் மனப்போராட்டம் காரணமா கர்ம சன்னியாசமும் ஃபணால். கர்ம யோகமும் ஃபணால்.

கர்ம சன்னியாசம்னா  செயலின்மையில் செயல்படுதல்:
கர்மயோகம்னா செயலில் செயலற்று இருத்தல்:

இந்த மாதிரி ஒரு விளக்கத்தை யாராச்சும் ஒரு பஞ்ச கச்சம்  ஏற்கெனவே சொல்லியிருந்தா சொல்லுங்கய்யா. அவிக தப்பான ஆளுங்க அதனாலதான் சரியான விஷயங்களை கூட தப்பா ஆக்கிட்டாய்ங்க. கண்ணன் சொன்ன கீதை சரியானதாதான்   இருந்திருக்கனும். ஏன்னா கண்ணனோட கேரக்டர் அப்படி..அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படி. வாழ்க்கை பற்றிய அவரோட அவுட் லுக் அப்படி.

ஆனால் அதை பகவத்கீதைங்கற பேர்ல   தொகுத்த பார்ட்டி, அந்தாளோட இனம், நோக்கம் எல்லாம் சேர்ந்து கீதைய  சொதப்பிருச்சு.

கர்ம சன்னியாசம்னா  செயலின்மையில் செயல்படுதல்:
கர்மயோகம்னா செயலில் செயலற்று இருத்தல்:

இதை ஓஷோ சொன்னாருன்னு கோட் பண்ணேன். இது சொம்மா எடுத்தாள்ற விஷயமில்லே. எடுத்து காட்டற விஷயம் இல்லே. என் வாழ்க்கைல நான் ஃபேஸ் பண்ண விஷயம்.


கர்மயோகம்னா செயலில் செயலற்று (பற்றற்று/பலனில் நினைவற்று) இருத்தல்:

திருப்பதி மலை மேல கி.பி.1900ல  நிலவிய என்விரான்மென்டை, நாவல்ட்டிய மறுபடி கொண்டுவரனுங்கற நோக்கத்தோட திருமலா விஷன் 1900 னு ஒரு ப்ராஜக்ட் ப்ரிப்பேர் பண்ணேன். அப்போ இருந்த  தி.தி.தே நிர்வாக அலுவலர் , சேர்மன், மந்திரி,முதல் மந்திரி எல்லாருக்கும் அனுப்பினேன். நெம்பர் ஆஃப் டைம்ஸ் ரிமைண்ட் பண்ணேன். ஆக்சுவலா நான் விக்கிரகாராதனைக்கு எதிரானவன். (குறிப்பிட்ட காலம் வரை குழந்தைங்களோட நடைவண்டி மாதிரி உபயோகிக்கலாம்ங்கறது நம்ம ஸ்டாண்ட்.) இருந்தாலும் திருமலா விஷன் 1900
அமலுக்காக சின்சியரா ட்ரை பண்ணேன்.  ஜஸ்ட் கொரியர் தபால், தந்தி, மெயில் தான். ஃபைலை தூக்கிக்கிட்டு ஆஃபீஸ் சுத்தி பிரதட்சணம் பண்றது . லாபியிங் பண்றது, ரெகமெண்டேஷன் தேடறது இதையெல்லாம் செய்யலே. ( செய்ய முடியும்ங்கற நிலை இருந்தாலும்) இதான் கர்ம யோகம். செயலில் செயலற்று (பற்றற்று/பலனில் நினைவற்று) இருத்தல்.

இந்த விஷன் அமலானா எனக்கென்ன தரப்போறானுக. ஒன்னு மண்ணும் கிடையாது. சப்போஸ் தேவஸ்தானம் என் விஷனை அண்டர் டேக் பண்ணி அப்படியே அமல் படுத்தினாலும் எல்லா பிரபல புண்ணிய க்ஷேத்திரங்களுக்கும் அப்ளை பண்ணனும்னு கேட்க ஒரு கிரவுண்ட் ஏற்பட்டிருக்கும் தட்ஸால்

சரி சில காலம் கழிச்சு இந்த கொரியர் தபால்/ ஆர்.பி க்கெல்லாம் தடா போட்டுட்டு பொழப்பை பார்த்துக்கிட்டிருந்தேனா அப்போ என்னாச்சுன்னா..

கர்ம சன்னியாசம்னா  செயலின்மையில் செயல்படுதல்:
திருமலா விஷன் 1900 ஐ திராட்டில விட்டாச்சு.  2008 நவம்பர் தெலுங்குல ஒரு ப்ளாக் ஆரம்பிச்சேன்.  http://www.blaagu.com/swamy7867 . 2009 மே வரை நம்ம ப்ளாக் புலின்னா புலி தான். ஜஸ்ட் ஆறுமாசத்துல 25,000 ஹிட்ஸ் .பயங்கர காண்ட்ரா வர்சி. சித்தூர் பாலிட்டிக்ஸ்ல நான் சி.கே பாபுவோட ஆதரவாளன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஆதி கேசவுலுக்கும், சி.கே வுக்கும் இடையில வெட்டுப்பழி கொலைப்பழி. எம்.பியோ ஆட்க்ள் சி.கே.வை ரெண்டு த்டவை கொல்லப்பார்த்தாய்ங்க. முத தடவை துப்பாக்கில சுட்டப்ப  நோ இஞ்சுரி.ரெண்டாம் தடவை கண்ணி வெடி வெடிச்சப்ப மட்டும் லேசான காயம். நம்ம லோக்கல் பேப்பரான இண்டியன் பொலிட்டிக்கல் க்ளோசப் இதழ்ல எம்.பி யை கிழி கிழினு கிழிச்சு எழுதியிருக்கன். இந்த பின்னணில என்னோட திருமலா விஷன் 1900 ப்ராஜக்ட்ல இருக்கிற முக்கிய அம்சங்களை எல்லாம் இப்போ தி.தி.தே சேர்மன் ஆதிகேசவுலு ஒவ்வொன்னா அமல்படுத்திக்கிட்டிருக்காரு. உ.ம் பெருமாள் ந்கைகளையெல்லாம் எஸ்.பி.ஐல கோல்ட் இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீம்ல வச்சது. ஹௌ இட் ஹேப்பண்ட்ஸ்? இதான் கர்ம சன்னியாசம். செயலின்மையில் செயல்படுதல்.

நாரத பக்தி சூத்திரத்துல இருந்து ஒரு விஷயம்  " இந்த உலகத்துல எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை விதமான பக்தி மார்கங்கள் உண்டு"

ஆனா கீதை கர்ம யோகம், கர்ம சன்னியாசம்னு ரெண்டு கான்செப்டை மட்டும் ப்ரப்போஸ் பண்ணி ரெண்டுமே ஒன்னுதான்னு "நான் - ப்ராமின்ஸ்"க்கு காதுல பூ சுத்துது. அல்வா கொடுக்குது.

இவிக ( நான் ப்ராமின்ஸ்) கர்ம சன்னியாசத்தை பின் பற்றவே முடியாது. இவன் எப்படியும் கர்ம யோகத்தை தான் ஆப்ட் பண்ணுவான்.  நாம கர்ம சன்னியாசத்தை ஆப்ட் பண்ணி நோகாம நோன்பு கும்பிடலாம். கர்ம யோகத்துல  இருக்கிறவன் தான்  பலனையே எதிர்பார்க்க கூடாதே. அந்த பலனையும் தாங்களே சேர்த்து அனுபவிக்கலாம்ங்கறதுதான் இவிக சதி.

இந்த படைப்புல/அதுலயும் ஆன்மீகத்துல  எந்த ரெண்டு அம்சமும் சமமானது அல்ல. அல்ல.அல்ல. அப்படி ஏதாவது ரெண்டு அம்சம் சமம்னு எவனாச்சும் சொன்னா அவன் தன் ஆன்மீக பயணத்தை முடிச்சிட்டான்.இலக்கை அடைஞ்சிட்டானு அர்த்தம் அல்லது பயணத்தை துவக்கவே இல்லைனு அர்த்தம்.

இந்த கீதையில வர்ர குழப்படிய பார்த்தா கீதாசாரியர் பயணத்தை முடிச்சவரா தோணலை ஆரம்பிக்கவே இல்லைனு தான் தோணுது



(தொடரும்

கீதை தொடர் மீதான எதிர்வினை

தம்பி ஸ்மார்ட்டு..
நான் நாஸ்திகன்னு டிக்ளேர் பண்ணியிருக்கே . அதுக்கு என் வாழ்த்துக்கள். ஆஸ்திகனா இருக்கிறது ஆத்தோட போற மாதிரி நீஞ்ச தெரியனுங்கற அவசியமே கிடையாது. நீ நாஸ்திகன்னு டிக்ளேர் பண்ணியிருக்கே . நீஞ்ச தெரிஞ்சுக்க கண்ணா! நிறைய எழுத்துப்பிழை இருக்கு. (அர்த்தமே மாறிப்போற அளவுக்கு).

ப்ளாக்ல எதையாவது விமர்சிக்கனும்னு  முடிவு பண்ணிட்டா லவ் லெட்டரை படிச்ச மாதிரி ஆயிரம் தடவை படிக்கனும்.  நீ பாவம் ஆடு மாதிரி நுனிப்புல்  மேஞ்சுட்ட  போலிருக்கு.

//கீதையின் எந்த இடத்தில் இரண்டும் ( கர்ம யோகம் , கர்ம சன்னியாசம் )  சமம்//னு சொல்லியிருக்குனு கேட்கறே. இது புள்ளிமானோட உடம்புல எங்கே புள்ளியிருக்குனு கேட்கிறாப்ல இருக்கு.

கீதாசாரியர் ஒரு இடத்துல சமம்ங்கறாரு. இன்னொரு இடத்துல கர்ம யோகமே பெட்டர் சாய்ஸுங்கறாரு. மறுபடி ஒரு இடத்துல ரெண்டும் ஒன்னுதானு தெரிஞ்சிக்கிட்டவன் தான் விவரம் புரிஞ்சவன்னு சொல்றாரு. இன்னொரு தடவ கடந்த இரண்டு பதிவுகளை புரட்டிரு கண்ணா..கு.பட்சம்  கண்ட்ரோல் ஃபைண்ட் கீ உபயத்துல "சமம்"ங்கற வார்த்தையை தேடிப்பாரு.

//பலனை வாங்காதே என்று கூறியதாக கற்பனை செய்து//

ஸ்மார்ட்டு ! என்னை என்ன வேத பாடசாலைல படிச்ச கிளிப்பிள்ளனு நினைச்சியா வாழ்க்கைய படிச்சவன் நைனா..  நான் பலனை வாங்கறது விக்கறத பத்தி ரெய்ஸ் பண்ணவே இல்லே. எதிர்பார்க்கிறதை பத்திதான் பேசியிருக்கேன். 


//ஒரு செயல் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால் முழு ஈடுபாடு வேண்டும் எதையும் எதிர்பாக்காமல் இயற்கையாக செய்யும் செயல், ஏதோவொன்றை எதிர்பார்த்து அதற்காக செயற்கையாக செய்யும் செயலைவிட சிறந்ததுதானே.//


இயற்கைல பலனை எதிர்பார்க்காம செயல்படற அளவுக்கு  மன்சனுக்கு இயற்கையோட போதிய நெருக்கம்  இல்லடா செல்லம்!

//ரெகுலர்ல படிச்சவனெல்லாம் புத்திஜீவிபோலவும் தொலை தூரக் கல்வியில் படிச்சவன் எல்லாம் முட்டாள் போலவும் இடத்தை வைத்து மட்டும் கல்வியை கணிக்கமுடியாதே. அவனிடத்திலுள்ள ஆர்வம் தானே முக்கியம்//

ஆர்வம் ஆட்டுக்குட்டிங்கறத பத்தி நான் ரெய்ஸ் பண்ணலை தலை. நீ தொலை தூர கல்வில ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தாலும் சர்ட்டிஃபிகேட்ல ஸ்டேட் ஃபர்ஸ்டுன்னுதானே இருக்கும். உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாயிராதுங்கண்ணா..

என் கான்செப்ட் என்னடான்னா  கர்ம யோகம், கர்ம சன்னியாசம்ங்கற ரெண்டுமே மெகன்னாஸ் கோல்ட் சினிமால வர்ர புதையல் மேப் மாதிரி .  மேப்பை வச்சிக்கிட்டா புதையல் கிடைச்சுராது தலை. ( இன்னைக்கு பதிவை படிங்க கோனார் கைட் மாதிரி விளக்கியிருக்கேன்.இந்த ரெண்டுமெ அல்ஜீப்ரா மாதிரி குழப்படி சமாச்சாரம். கரணம் தப்பினா மரணம் மாதிரி தப்பா புரிஞ்சிக்கப்பட அதிக வாய்ப்புள்ள விஷயங்கள் . 

இந்த ரெண்டையும் தனித்தனியா சொன்னதே குழப்பம். இதுல ரெண்டும் ஒன்னுதான்னு ஒரு சமயம், கர்ம யோகம்தான் பெட்டர் சாய்ஸுன்னு வேற  ஒரு  சமயத்துல சொன்னது பயங்கர குழப்படி. தமிழ் சினிமால பஞ்ச் டயால்குக்கெல்லாம் இன்ஸ்பிரேஷன் கீதைதான். நான் புலி,சிங்கம்னு பயாக்ரஃபி சேனல் மாதிரி கரடி விட்ட  நேரத்துல இது ரெண்டையும் இன்னம் கொஞ்சம் டீட்டெய்ல்டா பீசியிருக்கலாம்.

நான் கர்ம யோகத்தையோ, கர்ம சன்னியாசந்த்தையோ நக்கலடிக்கலை. அதுக்கு பின்னாடி உள்ள பிராமண இனத்தோட சதியைத்தான் விளக்கினேன். ரெண்டையும் சமம்னு புரிஞ்சிக்க நிறைய ஒர்க் அவுட் தேவை. அதை என்னமோ தமிழ் வார இதழ் அறிவு போட்டிக்கான விடை மாதிரி கொடுத்து ச்சூ காட்டிட்டு போறது ஒரு பொறுப்பான ஆசாமிக்கு தகாதுன்னுதான் சொன்னேன்.ரெண்டும் சமம்னு ஒரு பத்தில சொல்லிட்டு  கர்ம யோகம் பெட்டருங்கறது முரண்பாடில்லையா? இதுக்கு பின்னாடி ஹிடன் அஜெண்டா இல்லையான்னு கேள்வி எழுப்பியிருந்தேன்

என் கருத்து:
//மனிதனுக்கு வர்ர மனக்கோளாறுகளுக்கு முதல் காரணம் அவன் தன் மனதை அடக்கறதுதான். (அதுக்காக மனம் போன போக்குல மனிதன் போகனும்னு நான் சொல்லலே.)//
உங்க கேள்வி:
என்னங்க கடைசியில் மனம் போன போக்குல போகாதேன்னு அந்தர் பல்டி அடிக்கிறீங்க.

என் விளக்கம்:
ஸ்மார்ட் அண்ணாச்சி !  நான் எழுத வந்தது கீதைய பத்தி அதனால மனித மனதை பத்தி பெரிசா விளக்கலை.(உங்க குழப்பத்துல லாஜிக் இருக்கு. இதுக்கு என்னொட தவளைப்பாய்ச்சல் நடையும் ஒரு காரணமாயிருச்சு) இப்ப விளக்கறேன். (பல்லை இல்லிங்கண்ணா) மனித மனம் ஈகோங்கற பாலிடால் கலந்துட்ட பால் குடம். சில சமயம் பால் அடில தங்கி பாலிடால் மேல வந்துருது. அந்த நேரம் பார்த்து மன்சங்க  "மனம் இயற்கையின் அந்தர்பாகம். நான் மனம் வழி போறேன்"னா எய்ட்ஸும் வரலாம். தந்தில செய்தியாவும் வரலாம். சில அரிய சந்தர்ப்பங்கள்ள (உ.ம்: மனிதனுடைய ஈகோவானது மரண அடி வாங்கின சமயத்துல) பாலிடால் எல்லாம் அடில தங்கிருது. பால் மேலே வருது. அப்போ மனம் சொல்வதை கேட்டால்  நீங்க இயற்கைக்கு நெருக்கமா போறிங்க)

/(மனம்) /உங்க ஜாதகம் சொன்ன பாதையில் போகணும்னு சொல்லவரீங்களா?//

உங்க மனம் உங்க ஜாதகம் சொன்ன பாதைல போகனும்னு கூட நான் சொல்லமாட்டேன். சர்வ ஸ்வதந்த்ரி ஆன இயற்கை அன்னையின் செல்லப்பிள்ளைகள் நவகிரகங்களின் கால்களின் கீழே ஃபுட் பால்களாக இருப்பதை மாத்தத்தான் முதல்ல நவீன பரிகாரங்களை ரிலீஸ் பண்ணேன்.அப்புறம் நவகிரகங்களிலிருந்து விடுதலை தொடர் பதிவையும் போட்டேன்.ஆனால் ஒன்னு தலீவா.. சனங்க  மனம் மட்டும் என் ஜாதகம் சொல்ற பாதைல போனா அஞ்சுவருசத்துல ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலாயிரும். இந்தியாவே சொர்கமாயிரும்ல.

//ஒருவனால் அடக்கமுடியதவிஷயம் எல்லாராலும் அடக்கமுடியாது என்று கேள்வி ஞானத்தை அடைத்துவிட்டீங்களா? //

இல்லாததை அடக்க வேண்டிய அவசியமே இல்ல அண்ணாச்சி. நான் சொல்றது
(  ஸ்வப்ன ஸ்கலிதம், சுய இன்பம் இத்யாதி வழிகள்ள சக்தி இழந்த நண்பர்களை)  இருக்கிறதை அடக்கவே முடியாதுங்கண்ணா. அது பிரம்மனாவே இருந்தாலும். ஒரு தரம் சொர்கத்து கேபரே கேர்ள் ஆடறப்ப அவருக்கு  ......... நழுவிருச்சாம்ல .

என் கருத்து:
//புலனடக்கம் புண்ணாக்குனு கண்டதையும் அடக்கினா அந்த சமாசாரம் மேம்போக்கான கான்ஷியஸ் மைண்ட்லருந்து ஆழமான சப்கான்ஷியஸ் மைண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆயிருது. //
தங்கள் விமர்சனம்:
முயற்சி செய்யாமலே முடிவு கட்டியாச்சு. அப்போ அடக்கி வச்சவங்களோட சப்கான்ஷியஸ் மைண்டுல அதுயிருக்கும் என்கிறீங்க. இங்க தான் நிக்கிறது கீதை. எதையோ எதிர்பார்த்து நீங்க அடக்கமுயன்றால் (செயற்கையாக) அது அப்படித்தான் போகும், பலனை எதிர்பார்க்காமல் அடக்கினால் சப்கான்ஷியஸ் மைண்டுலையும் நிக்காது.

என் கேள்வி:
முயற்சி செய்யாம முடிவு கட்டறதெல்லாம் நம்ம சரித்திரத்துல கிடையாதுஅண்ணாத்தை !   நாலாம் கிளாஸ் படிச்ச காலத்துலயே பருவம் படிச்சவன்.  அந்த நாள் முதல் இந்த நாள் வரை சனத்துக்கு  நாம தான் கன்சல்டன்ட் தெரியும்ல.

பித்துக்குளி முருகதாஸ் தெரியுமா?  வாழ் நாள் எல்லாம் முருகன் புகழ் பாடுவேன்னாரு. ஆனா எல்லாம் நின்னு போற காலத்துல கண்ணால கட்டிக்கிட்டாரு.

விஸ்வாமித்திரர் கதை தெரியும்ல. அவரை விட புலிங்க நாட்ல இருக்காங்களா தலீவா.. இயற்கைலயே இல்லைன்னா ( செக்ஸ் பவர்) அதை அடக்கவே தேவையில்லை. இருந்ததுன்னா  அதை அடக்கவே முடியாது.இது  சைன்ஸு கண்ணா தெரியும்ல...

//மனோதத்துவ சாஸ்திரத்தின் அடிப்படைக்கே விரோதமான புலனடக்கத்தை பத்தி பேசற பகவத்கீதை தலை சிறந்த மனோதத்துவ நூலாம். //
மனம் சொல்வதையெல்லாம் செய்தால் மனிதனுக்கு மூளை தேவையில்லையே! மனதை சரியான பாதைக்கு அனுப்பினால்தானே  (அனுப்பத்தான்?) மனோதத்துவமே தேவை

மனம் சொல்றதை கேட்கிறது மனோதத்துவம். நீ செக்ஸு, வன்முறை, சேடிசம், மசாக்கிசம் ,பணம்,பதவி ,புகழாசைன்னு தனித்தனியா பார்க்கிறே. உன் வாய் இதையெல்லாம் தனின்னு தான் சொல்லுது. உன் வாய் சொல்றதை கேட்க சைக்காலஜி தயாராயில்லை.

உன் மனசு எல்லாத்தையும் ஒன்னாவே பார்க்குது. ஒன்னத்துக்கு அடுத்ததை ஆல்ட்டர் நேட்டிவா பார்க்குது. சொல்லுது. இப்படி  மனம் சொல்றதை கேட்கிறது தான் சைக்காலஜி. அதுக்குண்டான அவுட்லெட்டை ப்ரிஸ்க்ரைப் பண்றது தான் சைக்காலஜி. சரியான பாதைன்னு ஈர கோவணத்தை இழுத்து கட்ட சொல்றதும், காமப்பேயா மாத்தறதும் மத்தாலஜி ( மதங்களின் உபதேசம்)

என் கருத்து:

//பரமாத்மாவை இயற்கையின் மறு உருவா,உருவகமா, பிரதி நிதியா காட்டற கீதாசாரியர் புலன் களை அடக்குவது இயற்கைக்கு விரோதமானது அதாவது கிருஷ்ணருக்கே விரோதமானதுங்கற சங்கதியை வசதியா மறந்துர்ரார்.//

உங்க விமர்சனம்:

வயலில் புல் முளைப்பது இயற்கை என விடமுடியாது.

என் விளக்கம்:
அப்படி விடாம வீட்டு மனைகளாக்கினதும், சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கினதும் தான் இப்ப தண்ணி லாரி பின்னாலே ஓட வச்சிருக்கு அண்ணாத்தை ..

நீங்க வெளியிட்டிருக்கிற குவிஸ்:
who is that உட்டாலக்கடி?
a)இந்தியாவை பணக்கார நாடாக்கிட திட்டம் தீட்டி அதை அமல் படுத்தியே தீர்வதென்று பிடிவாதமாய் உழைத்து ஏழையானவன்.
b)2006 ஹிட்ஸ் மட்டும் கண்டு இருட்டில் இருந்தவன்

என் ரியாக்சன்:
அசத்தப்போவது யார் பாணியில் படிக்கவும். நன்றி!  நன்றி!!  நன்றி!!!

குவிஸ்:

//c)தொழில் முறை ஜோதிடனாக மூடநம்பிக்கையை வளர்ப்பவர்.//
//d)நிர்வாண உண்மைகள்//

ஸ்மார்ட்டு கண்ணா.. பாவம் ரொம்பவே இர்ரிடேட் ஆயிட்டாப்ல இருக்கு. பிராமண விஷ விருட்சத்துக்கு எந்த உரங்களை போட்டு வளர்த்தாங்களோ, எந்த தண்ணீரை ஊத்தி வளர்த்தாங்களோ  அதே உரங்களையும், அதே தண்ணீரையும் என் ஸ்டைல்ல கெமிக்கல் ட்ரீட் மெண்ட் கொடுத்து அந்த விஷ விருட்சத்தோட தோட வேர்களை வெட்டி எறிய உலகமகா சதி பண்ணிக்கிட்டிருக்கேன்.  இந்த சதில ஒரு பாகம்தான் தொழில் முறை ஜோதிடன் என்ற மாறு வேஷம். நான் மூட நம்பிக்கைய வளர்க்கலிங்கண்ணா.. ஒரு அக்மார்க் விஞ்ஞானத்துல அவாள் கலந்து விட்டுட்ட மூட நம்பிக்கைகளை பொறுக்கி எடுத்துக்கிட்டிருக்கேங்கண்ணா.. இந்த என் முயற்சிக்கு பெருமாளு, பெரியாழ்வாரு, பெரியாராழ்வார்லருந்து இந்த ஒட்டு மொத்த படைப்பே சப்போர்ட்டுங்கண்ணா..


நான் ஒரு குவிஸ் தரேன்:

கண்ணன் என்பவர் யார்?
பெண் வடிவெடுத்து ஈஸ்வருடன் ஹோமோ செக்ஸில் ஈடுபட்டவர்.
ஊரான் மனைவியர் குளிக்கும் இடத்துக்கு போய் அவிக ஆடைகளையெல்லாம் கவர்ந்து ரெண்டு கையால கும்பிட்டாதான் ஆடை வாபஸ்னு லந்து பண்ணவர். அவிகளோட ...... ஐ பார்த்து பரவசமானவர்.
திரவுபதிக்கு ஆயிரம் புடவை கொடுத்து மானத்தை காப்பாத்தினவர்.
இத்தனை லட்சம் வருஷத்துக்கப்புறமும் அண்டை வெளில மிதக்கிற தன் எண்ண அலைகள் மூலம் உண்மையான கீதையை எனக்கு உபதேசிச்சிட்டிருக்கிறவர்

தங்கள் வலைப்பூவில் வெளியாகியிருக்கும் இரண்டு கமெண்டுகள் தங்கள் (புதிய) பார்வைக்கு

வால் பையன்:
நேரம் காலமெல்லாம் பார்க்குறதில்ல, எப்ப என்ன தோணுதோ, அதை அப்ப செய்வேன்
ஸ்மார்ட்:
எங்கவூர் எருமை மாடும் அப்படித்தான் செய்யும். நான் உங்கள சொல்லல பொதுவா சொல்றேன்
வால் பையன்:
நிச்சயமாக மனிதனை விட எருமைமாடு கேவலமானதல்ல!, நான் ஒரு இயற்கை விரும்பி, எருமமாடு போல வாழ்வதில் எனக்கு மகிழ்ச்சியே!

Monday, May 17, 2010

பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி: 9

இந்த தொடர்பதிவில் கடந்த பதிவை முடிக்கும்போது "கருமயோகம் / ஆத்ம ஞான யோகம் ரெண்டும் ஒரே பலனை தரும்னு ஆசிரியர் சொல்றார். இதுக்கு பின்னாடி இருக்கிற பிராமண சதியை , பிராமணரல்லாதோர் மீதான அவிக அண்டர் எஸ்டிமேட்டை பத்தியெல்லாம் அடுத்த பதிவுல பார்க்கலாம்ணா !" என்று முடித்திருந்தேன்.




மேலுக்கு பார்க்கும் போது பிராமணரல்லாதோருக்கு என்ன தோணும்னா



" ஆகா என்ன லிபரலா சொல்லியிருக்காய்ங்க. கர்ம சன்னியாசம்னா நம்மால ஆவாத வேலை. நாம சன்னியாசியா வாழபார்த்தாலும் நாம திங்கற/அல்லது இதுவரைக்கும் தின்ன உப்பு,புளி,காரம் இதெல்லாம் சும்மா விடாது.



கரும யோகம்னா என்ன ஜுஜுபி. நம்ம வேலைய நாம செய்துக்கிட்டிருந்தா போதும் என்ன அப்பப்போ கிருஷ்ணார்ப்பணம்னு சொல்லிக்கிட்டிருக்கனும் அவ்ளதானேனு தோணும்.



இங்கே கர்ம சன்னியாசத்துக்கும், கர்மயோகத்துக்கும் ஒரே ஹோதா கொடுத்ததே ஒரு சதிதான்.



மனுஷன் முக்தியடைய பிரம்மச்சரியம், கிருஹதாஸ்ரமம், வான பிரஸ்தம், சன்னியாசம்னு நாலு ஸ்டேஜ் இருக்கு. அந்தந்த பருவத்துல அந்தந்த வேலைய பார்த்துட்டு கடைசில சன்னியாசம்னு வந்தா /போனா தான் ஸ்மூத் கோயிங்கா இருக்கும். அதை விட்டுட்டு பால சன்னியாசி, இளையவர், மூத்தவருன்னு வெறுமனே காவிய கட்டிக்கிட்டு கதை விட்டா ம(க)ட்டைய தூக்கிக்கிட்டு நிக்க வேண்டியதுதான்.அப்புறம் பெண் எழுத்தாளர்கள் எல்லாம் கட்டுரை வரைவாய்ங்க. பேட்டி கொடுப்பாய்ங்க. (அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்)



ரெண்டே வேட்டி,ரெண்டே துண்டை சோப்பு உபயோகிக்காம துவைச்சி துவைச்சி கட்டிக்கிட்டிருந்தா அதுவே காவியா மாறிரும்.அதுதான் காவி நெம்பர் 1. இதற்கடுத்த சாய்ஸ் இயற்கைல கிடைக்கிற சில மூலிகைகளை உபயோகிச்சு சாயமேற்றின காவி வந்த் காவி நெம்பர் 2.



இன்னைக்கு சாமியாருங்க கட்டற காவியெல்லாம் உங்களோட கல்யாண சூட்டை விட காஸ்ட்லி. ஒன்லி இம்போர்ட்டட்.



கீதாசிரியர் எந்த வயசுல கர்ம சன்னியாசம், எந்த வயசுல கர்ம்யோகம்னு ஸ்பெசிஃபை பண்ணாததை கவனிங்க.



இந்த ரெண்டு வார்த்தைக்கும் (கர்ம யோகம், கர்ம சன்னியாசம்) என்னென்னமோ அர்த்தம்லாம் தேடி கண்டு பிடிச்சு பெரியவுக சொல்லி வச்சிருக்கிற அர்த்தத்தையெல்லாம் போட்டு குழப்பிக்கிராதிங்க. அதெல்லாம் இட்டுக்கட்டினது. அவிகவிக தங்களோட கொள்கைகளையெல்லாம் கீதை மேல ஏத்தி சொன்ன விளக்கங்கள்.



சரித்திரத்தை புரட்டி பார்த்து, அந்த இனத்தோட நோக்கத்தை வியூகத்தை புரிஞ்சிக்கிட்டு ரோசிச்சா கர்மயோகம்னா பலனை எதிர்பார்க்காம உழைச்சிக்கிட்டே இருக்கிறது. தங்கள் உழைப்பின் பலனை பஞ்ச கச்சங்கள் நேரடியா அடிச்சிக்கிட்டு போச்சா, இல்லே தாங்கள் ராஜாவுக்கு வரியா கட்டின காசுலருந்து தானமா லவட்டிக்கிட்டு போச்சுங்களானுல்லாம் யோசிக்காம உழைச்சிக்கிட்டே இருக்கிறதுதான் கர்மயோகம்.இது பிராமணரல்லாத மத்த 3 வர்ணத்துக்குரியது.



வேலை வெட்டி எதுவுமில்லாம மத்த வர்ணத்தார் உழைச்சி கொட்ட அதுல கொம்மாளம் போடறதுதான் கர்ம சன்னியாசம் . இது பிராமணர்களுக்கே உரியது.



மத்த வர்ணத்தான் எல்லாம் உழைச்சி உழைச்சி என்னத்தை கண்டோம்னு யோசிச்சுர கூடாதில்லையா அதனாலதான் கருமயோகம்னு ஒரு பில்டப். அதுக்கு கர்ம சன்னியாசத்துக்கு சமமான ஹோதா.



ஒரு சில பக்தி இலக்கியங்கள் ஒரு மைல் நீளத்துக்கு இருக்கும். அதை மனப்பாடம் பண்றதோ , ப்ரவச்சனம் பண்றதோ எல்லாராலயும் முடியாத காரியம். அதுக்காக என்ன பண்ணுவாய்ங்க குறிப்பிட்ட ஒரே ஒரு அத்யாயத்தை படிச்சாலே மொத்த இலக்கியத்தையும் படிச்ச பலன் கிடைக்கும்னுவாய்ங்க. அந்த ஒரு அத்யாயத்தை கூட படிக்க முடியாத தற்குறிகளோ, சோம்பேறிகளோ இருப்பாய்ங்க.அதுக்காக ஒரு ஸ்லோகத்துக்கு ஸ்டார் மார்க் கொடுத்து அந்த ஒரு ஸ்லோகத்தை சொன்னாலே போதும் 100% ரிசல்ட்டுன்னு பீலா விடுவாய்ங்க. அதுவும் முடியாதவுக கடவுளோட 1000 நாமங்களை (சஹஸ்ர நாமம்) சொன்னா போதும்னுவாக. இது கூட முடியாத சோம்பேறிக்கு சோறு கொண்டு போகும் பார்ட்டிங்க இருப்பாய்ங்க அவிக மேற்படி சஹஸ்ர நாமங்கள்ள குறிப்பிட்ட பேரை சொன்னா போதும் சஹஸ்ர நாமம் சொன்ன புண்ணியம்/பலன் கிடைச்சுரும்னுவாக.



இதெல்லாம் ஜஸ்ட் சைக்கலாஜிக்கல் சேடிஸ்ஃபேக்சனுக்காக சொல்றதுதான். ஒரு உபசாரத்துக்கு சொல்லிக்கிரதுதான். உதாரணத்துக்கு ஸ்ரீராமனோட இந்த மூலமந்திரத்தை பாருங்க



ஸ்ரீராம ராம ராமேட்டி ரமே ராமே மனோரமே

சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீராம நாம வரானனே



இது வந்து ஸ்ரீராமனோட சஹஸ்ர நாமத்துக்கு சமமானதாம். இந்த ரெண்டு வரிய சொன்னாலே சஹஸ்ர நாமம் எல்லாத்தையும் சொன்ன புண்ணியம், பலன் கிடைச்சுருமாம்.



இதே ஸ்டைல்ல தான் கருமயோகமும், கரும சன்னியாசமும் ஒன்னுதான் .பலனும் ஒன்னுதான்னு சொல்றாரு கீதாசிரியர்.



இந்த பெரும்போக்குக்கு இன்னொரு உதாரணமா கீதையையே எடுத்துக்கங்க.



//நம்பிக்கையுடன் நாட்டம் மிகுந்து இந்த கீதையை எவன் கேட்பானோ அவனது பாவமும் அழிவது உறுதி அமர நிலைதான் அவனது இறுதி//



கீதைய கேட்டாலே பாவம் அழிஞ்சு போயிருமாம். இதெல்லாம் ஜஸ்ட் ஒரு சம்பிரதாயம். பாகவதம் படிக்கனும், மகாபாரதத்தை படிக்கனும்,கிருஷ்ணனை சுத்தி சனம் கட்டிவிட்டிருக்கிற கதைகளை அடையாளம் கண்டு வடிகட்டி உண்மையான கிருஷ்ணனை உள் வாங்கனும். அப்புறமா கீதையை கேட்கனும். கண்ணனோட கேரக்டருக்கும் கீதைக்கும் பொருத்தமில்லாத அம்சங்கள் எத்தனை இருக்குனு பார்த்து அதையெல்லாம் அரிசில கல்லை பொறுக்கின மாதிரி பொறுக்கி போட்டுட்டு கீதாசாரத்தை ( உண்மையான ) வாழ்க்கைல கடை பிடிக்கனும். இந்த ப்ராசஸ் எல்லாம் நடக்காம வெறுமனே கீடைய கேட்டுட்டா பாவம் அழிஞ்சுருமா? அமர நிலை கிடைச்சுருமா? ஒரு ................ரும் கிடைக்காது.





இவிகளுக்கென்ன எல்லாம் ஒன்னுதான்னு அசால்ட்டா சொல்ட்டாங்க. எவ்வளவு பெரிய நேர் கோடா இருந்தாலும் அது ஒரு வட்டத்தின் பகுதிதான். இல்லேங்கலை. அந்த நேர்கோடு என்னைக்கோ ஒரு நாள், எங்கனயோ ஒரு இடத்துல தன் ஆரம்ப புள்ளியை சந்திச்சு வட்டமாயிரும். இது தியரி. இது ப்ராக்டிக்கலைஸ் ஆகனும்னா அந்த நேர்கோட்டை தொடர்ந்து வரையனும். இந்த ப்ராஜக்டை ஒலிம்பிக் தீபம் மாதிரி தலைமுறை தலைமுறையா தொடர்ந்து கொண்டு செல்லனும்.அப்போ எங்கனயோ ஓரிடத்துல சந்திக்கும்.



ஆனால் கீதை சொல்றது அப்படியில்லை. ரெண்டும் ரெண்டும் நாலு மாதிரி ச்சோ சிம்பிளா சொல்லுது. ரெண்டும் ஒன்னுதான்.





கீதைல சொன்னது ஒர்க் அவுட் ஆகனும்னா அதுக்கு பெரிய ப்ராசஸ் இருக்கு.



கர்மயோகம்னா என்ன ? பலனை எதிர்பார்க்காம கடமையை செய்யறது. உயிர்களை படைச்சது இயற்கை. இயற்கையின் பால் உயிர்களின் கடமை என்ன?முதல் கடமை உயிர் வாழறது. இரண்டாவது கடமை இனப்பெருக்கம் செய்யறது. மூணாவது கடமை தங்களுக்கு உயிரையும்,வாழ்வையும் கடமையையும் தந்த இயற்கைய நாசமாக்காம இருக்கிறது.



இந்த கடமைகளை இயற்கைக்கு நிபந்தனைகள் விதிக்காம பலனை எதிர்பார்க்காம செய்ய முனைஞ்சா , செய்ய முடிஞ்சா சொர்கம்லாம் ஒத்தைக்கு இரட்டையா இங்கனயே இறங்கி வந்துரும்.



நான் சொன்ன மூணு கடமைகளை மன்சங்க செய்துக்கிட்டுதான் இருக்காய்ங்க. இல்லேங்கலை. ஆனால் கடமையா நினைச்சு செய்யறதில்லை. பலனை எதிர்பார்க்காம செய்யறதில்லை. அதான் மனுஷ வாழ்க்கைய சிக்கலாக்கிருச்சு.



கிருஷ்ணர் கண்ட குட்டியை போட்டுட்டு நான் நைஷ்டிக பிரம்மச்சாரிங்கறது உண்மைன்னா ஹே யமுனா நதியே நீ இந்த மோர்காரிக்கு வழி விடுன்னாராம். உடனே யமுனை வழி விட்டுட்டுதாம். இது கிருஷ்ணருக்கு செல்லுபடி ஆகியிருக்கலாம். நமக்கு உயிரையும், வாழ்வையும் தந்த இயற்கை நமக்கு கொட்த்திருக்கிற எளிமையான கடமைகளை நிறைவேற்றவே நிபந்தனைகள் நமக்கு கர்ம யோகம் ஒர்க் அவுட் ஆகுமா?



கம்ப்யூட்டர்லயே நாம செய்யற வேலை விவரமெல்லாம் ரீசன்ட் ஃபைல்ஸ்லயும் , டெம்ப்லயும் சேவ் ஆகுது. ஃபைல் ரிக்கவரி சாஃப்ட் வேர் போட்டா டெலிட் ஆன ஃபைல்ஸ் எல்லாம் ரிக்கவரி ஆகி பல்லை இளிக்குது. தேவ நாத குருக்களோட ஜாலிலோ ஜிம்கானா வேலைகள் வெளிச்சத்துக்கு வந்தது இப்படித்தான்.



மனித மூளைய பத்தி சொல்லவே தேவையில்லை. பல கேஸ்கள்ள ஒரு வயசு ரெண்டு வயசு நினைவுகளை கூட ஹிப்னடைஸ் பண்ணி, ட்ரான்ஸ்ல வச்சு தோண்டி எடுத்திருக்காய்ங்க.



கிருஷ்ணர் தான் போட்ட குட்டிகளோட நினைவுகளையெல்லாம் தன் மூளைல சப்ஜாடா தூக்கிட்டாரு .விளக்கெண்ணையை பூசிக்கிட்டு பலாப்பழத்தை பிரிச்ச மாதிரி விளையாடியிருப்பாரு. பிசின் ஒட்டாம வெளிய வந்துட்டாரு. நம்ம கதை?



டாக்டர்களுக்கான ஒரு வழிக்காட்டி சூத்திரம் இருக்கு." நோய்க்கு சிகிச்சை செய்யாதே நோயாளிக்கு சிகிச்சை செய்" இங்கே குருட்டாம்போக்குல கீதாசாரியர் நோய்க்கு சிகிச்சை தரார்.



சரி கீதைய கொஞ்ச நாழி ஓரமா வச்சுருவம். கர்ம யோகம் சாமானியனுக்கு எப்பத்தான் ஒர்க் அவுட் ஆகும்னு யோசிப்போம்.



ஏற்கெனவே சொன்ன மாதிரி பிரம்மச்சரியம், கிருகதாஸ்ரமம், வான ப்ரஸ்தம், சன்னியாசம்னு எல்லா ஆசிரமத்தையும் கம்ப்ளீட் பண்ணிட்டு ஒரு பார்ட்டி மறுபடி சமுதாயத்துல வாழ முனைஞ்சா



இந்த உலகம் நாடக மேடையாகும் . அந்த பார்ட்டி ஒரு நடிகராயிருவாரு.

இந்த உலகத்துல அவர் இருப்பார். ஆனால் அவருக்குள்ள உலகம் இருக்காது

ஓடம் தண்ணி மேல போகும். ஆனால் ஓடத்துக்குள்ள தண்ணி வராது



நீங்க அஞ்சு வயசுல ஒன்னாங்கிளாஸ் படிக்க போன பள்ளிக்கும், பள்ளியோட பழைய மாணவர்கள் சங்க விழா ஏற்பாட்டுக்குனு போற பள்ளிக்கும் வித்யாசம் இருக்கும்.



மேலே சொன்ன நாலு ஆசிரமத்துக்கும் ( பிரம்மசரியம், கிருகதாஸ்ரமம், வான ப்ரஸ்தம், சன்னியாசம்) அந்த காலத்துல தலா எத்தனை வருஷம் ஒதுக்கியிருந்தாய்ங்களோ தெரியாது.



ஜோதிஷத்துல ஒன்பதுகிரகங்களுக்கான தசைகளோட கூட்டுத்தொகை 120 வருஷம். ஆனால் இன்னைக்கு 120 வருஷம் வாழ்ந்தா கின்னஸ் ரிக்கார்டுதான். உயிரியல் நிபுணர்கள், சைக்கிரியாட்ரிஸ்டுகள் இப்படி பலதரப்பட்ட நிபுணர்கள் விஸ்தாரமா சர்வே பண்ணி,ஆராய்ச்சி பண்ணி எந்த ஆசிரமத்துக்கு எத்தனை வருசம்னு முடிவு பண்ணி, அதுக்குண்டான ஏற்பாட்டை அரசாங்கம் ஏற்படுத்தனும்.



இந்த பொதுவிதி எல்லாருக்கும் பொருந்துமாங்கறது சந்தேகம்தான். (விதிவிலக்குகள் இருக்கலாம்)



பிரம்மச்சரியம்னா ஈர கோவணத்தை இழுத்து கட்டி செக்ஸ் தேவைகளை சப்ரெஸ் பண்ணிக்கிட்டு அது வன்முறையா மாற வழிபண்றது கிடையாது. செக்ஸ் பற்றிய புரிதலை வளர்த்துக்கிட்டு ஸ்வப்ன ஸ்கலிதம் இத்யாதிக்கு டெப்ரஸ் ஆயிராம "இது இயற்கையான ஒன்னு"னு புரிஞ்சிக்கிட்டு சுய இன்பம்,ஒட்டல், உரசல்,காதல் , ஹோமோ,லெஸ்பியன், கள்ள உறவு, விலைமாதர்/கால் பாய்ஸ்னு போகாம வாழறது

எதிர்காலத்து தாம்பத்யத்துக்கு உடல்,மனசு,புத்தி அளவுல பிரிப்பேர் ஆறது.



பிரம்மச்சரியத்தை ஒழுங்கா கடைபிடிச்சாதான் கிருகதாஸ்ரமம் /இல்லறம் இனிக்கும். இல்லன்னா எழுச்சி இன்மை, குறி சிறுத்தல், துரித ஸ்கலிதம்னு லாட்ஜு வைத்தியர்களோட விளம்பரங்களை துரத்திக்கிட்டு , தாழ்வு மனப்பான்மைய மறைக்க மேல் ஷேவனிசம், பெண்டாட்டிய கொடுமை படுத்தறது, நம்மால "அதை"தான் கொடுக்க முடியலைன்னு 54 இஞ்ச் கலர் டிவி வாங்கித்தர்ரது. அவள் நம்ம அப்பா,அம்மாவை முதியோர் ஆசிரமத்துக்கு விரட்டினா பார்த்துக்கிட்டிருக்கிறதுல்லாம் நடக்கும்.



இல்லறத்தை ஒழுங்கா அனுபவிக்காதவன் 60 வயசுல 6 வயது சிறுமியை கற்பழிக்க முயற்சி பண்ணி தந்தில செய்தியா வந்துருவான். தனக்குள்ள, தங்களுக்குள்ள (தம்பதி) ஏற்பட்டு போன எம்ப்டி நெஸ்ஸை நிரப்ப ஊரை அடிச்சு உலைல போட்டு வாழ் நாள் எல்லாம் கண்ட குப்பைகளை வாங்கி நிரப்பிக்கிட்டே இருப்பான். அவன் எங்கே வான பிரஸ்தத்துக்கு போறது ? ஞா இருக்கில்ல ? என்.டி. திவாரி



வான பிரஸ்தம்னா காட்டுக்கு போய் மான் வேட்டையாடறதில்லை. முடிஞ்ச வரை ஊருக்கு/ சன நெருக்கடிக்கு/பொல்யூஷனுக்கு தூரமா அமைதியான, என்விரான்மென்ட்ல குறைஞ்ச பட்ச வசதிகளோட வாழலாம். தம்பதிகள்ள யாரோ ஒருத்தர் டிக்கெட் வாங்கிட்ட பிறவோ , இல்லே சோடியாவேவோ சன்னியாசம் வாங்கிக்கிடலாம்.( ப்ரேமானந்தா, ஜெயேந்திர சரஸ்வதி, நித்யானந்தா மாதிரி பார்ட்டிகளோட ஆசிரமம் ,மடம்னு போய்தான் வாங்கனும்னுல்ல. ஜஸ்ட் ஒரு கமிட்மென்ட். தட்ஸால்.



இத்தனை கட்டத்தை வெற்றிகரமா தாண்டிவந்த பிறகு மறுபடி எம்.ஜி.ஆர் கேரளாவுல தான் படிச்ச ஸ்கூலுக்கு போய் ரெஜிஸ்டரை பார்வையிட்டாரே அது மாதிரி ஒரு பங்க் கடை வைக்கலாம். ஒரு பீடா கடை வைக்கலாம். அப்போ கரும யோகம்னா என்னனு புரியும். சனத்துக்கும் புரியவைக்கலாம்.



அதைவிட்டுட்டு வீரப்பனுக்கும் மீசை இருக்கு, தேவாரத்துக்கும் மீசை இருக்கு ரெண்டும் ஒன்னுதான்னிட்டா எப்படி? சரி மீண்டும் கீதைக்கே வருவோம்.



நாம இத்தனை நாழி டிஸ்கஸ் பண்ணோமே அதே வரியை வேற வார்த்தைல சொல்றார் கண்ணன் ( அதாங்க கீதாசிரியர்). அதையும் பாருங்க.



//எவனொருவன் ஆன்மிகமும் செய்கை செய்வதும் ஒன்றே என்று தெளிவு பெறுகிறானோ அவனே விவரம் தெரிந்தவன்.//



இந்த ஸ்டேட்மெண்ட் ரொம்ப மொட்டையா இருக்கு. திராட்சையும், பெண்ணோட கண்ணும் ஒன்னுதான். எதுவரை ? நிறத்துல, பளபளப்புல மட்டும்தான். திராட்சை பார்க்க முடியுமா? இல்லே கண்ணைதான் சாப்பிடமுடியுமா?



ஆன்மீகமும், செய்கை செய்வதும் ஒன்றே என்று தெளிவு பெற்றவர் நித்யானந்தாதான் போலும்.



மேற்படி ஸ்டேட்மெண்டுக்கு சின்ன வார்த்தைய சேர்த்தாதான் அது முழுமை பெறும்.



பலனை எதிர்பாராத செயலும் ஆன்மீகம்தான். பலனை எதிர்ப்பார்த்து செய்யப்படற ஆன்மீகமும் வெறும் செயல்தான்.



இப்படி சுத்தி வளைக்கிறதை விட ஸ்ட்ரெயிட்டா சொல்றேன் பாருங்க ,



" சுய நலமற்ற செயலும் ஆன்மீகம்தான். சுய நலம் கலந்த ஆன்மீகமும் செயல்தான்.



விளக்கம் எப்படி? இன்னைக்கு இது போதும் மீதியை நாளைக்கு பார்ப்போம்.