Thursday, July 30, 2009

இறைவன் உலகச்சிறையின் ஜெயிலர்

இறைவா !
நீ அழுத்தக்காரன் .உன்னை நீ வெளிப்படுத்திக்கொள்வதே இல்லை
நான் நெஞ்சழுத்தக்காரன் .உன்னை நான் வெளிப்படுத்தாது விடுவதாயில்லை
நீ ராமனிலும் ராவணனிலும்
ஒரே நேரத்தில் செயல்பட்ட பொறி நீ
உன்னை பொறி வைத்து பிடிப்பதே எனது ஐம்பொறிகளுக்கு
நான் கொடுத்துள்ள செயல் திட்டம்

புராண புருடாக்களையும் மீறி படைப்பின் ஒரே புருஷன் நீ என்று உணர்கிறேன்
பௌராணிகர்கள் புராண புருஷன் என்றாலும்
ஜோதிடர்கள் கால புருஷன் என்றாலும்
நீ சிங்கிளாக இருக்கும் சிங்கம் என்று அவதானிக்கிறேன்

ஒரே சத்தியத்தை வெவ்வேறானதாய்,புதிதே போல்
வெவ்வேறு ஆசாமிகளுக்கு வெளிப்படுத்திய உன் கற்பனை வளம் பேஷ் !
அதானால் ஆனது உலக அமைதி ஸ்மாஷ் !

"பிட்டா பிடி" என்று நீ அவ்வப்போது கொடுத்த சூசகங்களை
சூட்டிகை தனத்துடன் செட்டாக்கி படித்தவன் நான்

இறைவா ! எங்கும் உறைபவா !
என் முக விலாசத்தை எம் அக விலாசத்தில் ஒளித்தவா !

ஓருயிராய் இறங்கி வந்து பல்லுயிராய் பிரிந்து எம்மில்
ஒளிர்ந்தவா !

நீ உலகச்சிறையில் ஜெயிலராக இருக்கிறாய்
ஆயுள் தண்டனை கைதிகளுக்கு
ஆர்டர்லி பதவி கொடுத்து என் போன்ற
பிக்பாக்கெட்டுகளுக்கு டின் கட்ட வைக்கிறாய்
இது உனக்கு ஃபன் ! இதன் பின்னான காரணம் எங்கள் ஸின் !

நீ ஒரு நல்ல தகப்பனை போல் இருக்கிறாய்
கெட்ட குமாரர்கள் வீடு திரும்பும்போது விருந்து வைக்கிறாய்
உன்னை அண்டியே வாழ்ந்த எம்மை உண்டியில்லை உனக்கு
பட்டினியே மருந்து என்கிறாய்

நீ என் கப்பலின் தலைவன்
ஓட்டை வழியே கடல் நீர் குபு குபுக்கும்போது
கப்பலையே காலி செய்கிறாய்
நான் உன்னை மெட்ராஸ் பாஷையில் வைதாலும்
செவிடனாய் நடிக்கிறாய்

ஆம் நீ ஒரு செவிடன்
உனக்காக எத்தனை எத்தனை கச்சேரிகள்

நீ ஒரு ஊமை
உன் மவுன மொழிக்குத்தான் எத்தனை எத்தனை அகராதிகள்

நீ ஒரு அம்பயர்
விளையாட்டு வீரர்கள் உன்னை பணியும்போது
பாப்கார்ன் சாப்பிடுகிறாய்
அவர்கள் உன்னை புகழ்ந்து பாடும்போது
காது குடைகிறாய்
இவர்கள் எதையேனும் ஆட முற்படும்போது
ஆயிரம் கண்களுடன் பார்க்கிறாய்

இறைவா !
நீ ஒரு நல்ல செவிலித்தாய்
ஒவ்வொரு முறையும் நான் பிரச்சினைகளால்
பிரசவிக்கப்படும்போது
தலை கீழாய் தொங்க விட்டு
புட்டத்தில் அறைகிறாய்

இறைவா !
நான் அனுபவப்பள்ளிக்கு போக மறுத்து அடம் பிடிக்கும்போதெல்லாம்
என் சட்டைப்பையில் ஒரு ASA சாக்லெட்டை திணித்து ஆசை வாகனத்தில் ஏற்றுகிறாய்

மரணத்தின் நிழல் கூட மனிதர்களை விரட்டுவது போல்
உன் குறித்த கற்பனைகள் கூட சிதறிக்கிடக்கும் என் சிந்தனைகளை
திரட்டுகின்றன

நழுவும் காலமானாய். ஒரு நாள் நானும் காலமாவேன்
என்று புரிவித்தாய்
காதலியர் விழி மொழியறியவே அகராதி தேடிய எனக்கு
உன் மொழியற்ற மொழியும் புரியும் நிலை தந்தாய்
என்னில் நிகழும் ரசவாதத்தை கணிணிக்கு ரைட் செய்யும்
கலை தந்தாய்

கனவாய் கலைந்தாலும் விடியல் கனவாய் நாள் முழுக்க இதம் தந்தாய்
உன் பாதம் பணிதலும்
உனை ஏற்றி புகழ்தலும் வெற்று என்று ஒற்றறிந்த பின்னும்
நன்றி என்ற வார்த்தையின் கனம் போதாதோ என்ற தலைகனத்தில் கர்த்தாவே
உன்னை கவிதையில் கனம் பண்ணுகிறேன்

நான் தட்டாமலே திறந்தாய்
நான் கேளாமலே தந்தாய்

அதற்கொரு நன்றியுரைக்கும் மடமையையும் தந்தாய்


********
நீ ஒரு ஆசிரியன் .
கடைசி வரிசைக்காரர்களை கண்டு கொள்வதே இல்லை
முன் வரிசையில் இருக்கும் என்னை முட்டிக்கு முட்டி தட்டுகிறாய்

நீ ஒரு பொற்கொல்லன்
தகரங்களை புறந்தள்ளி தங்கங்களைத்தான் சுடுகிறாய்
நீ ஒரு ரசவாதி இரும்புகளை தங்கமாக்குகிறாய்
தங்கங்களை ஈயமாக்கி இரும்புகளின் முன் இளிக்க வைக்கிறாய்

நீ ஒரு சதிகாரன்
உன்னை மறக்கடிக்கும் பலதையும் எமக்கு நினைவூட்டி
உன்னை நினைவுறுத்தும் சிலதையும் நினையாது அம்னீஷியாவுக்கு
அடிகோலுகிறாய்

நீ ஒரு நல்ல நடிகன்.
நயவஞ்சகர்களிடம் இளித்தவாயனாய் நடந்து கொள்கிறாய்
அவர்களை அழிவுப்பள்ளத்தாக்கை நோக்கி செலுத்துகிறாய்

துவைத்த துணிகளை வெள்ளாவியில் வைத்து சுடுகிறாய்
அழுக்கு துணிகளையோ வெள்ள நீரில் நனைக்கிறாய்

நீ ஒரு விவரமான சவரத்தொழிலாளி
ஒருவனுக்கு உபயோகித்த அனுபவ ப்ளேடை மற்றொருவனுக்கு
உபயோகிப்பதே இல்லை

நீ ஒரு நல்ல வங்கி காசாளன்
எம் கணக்கில் காசு இருந்தால் நீ கொடுக்காதிருப்பதில்லை
உனக்கு முகமன் கூறாவிட்டாலும்

நீ ஒரு நல்ல இயக்குனன்
கடந்த பிறவியில் பூத உடலிழந்து
ஆன்ம வடிவில் அழுது அரற்றி
நாங்கள் முக்தியே நோக்கமாய் எழுதிக்கொடுத்த
கதைக்கு தான் திரைக்கதை எழுதி இயக்குகிறாய்
இன்றோ புக்தியை நோக்கமாய் கொண்டு உன்னை
சகட்டு மேனிக்கு சவட்டுகிறோம்

நீ ஒரு நல்ல நீதிபதி
நீ வழங்கும் பிறருக்கான தீர்ப்புகள்
பத்தாம் வாய்ப்பாடு தனமாய் புரிந்து விடுகின்றன

நீ மோசமான நீதிபதி (?)
எனக்கான உனது தீர்ப்புகள் மட்டும் புரிவதே இல்லை
அல்ஜீப்ரா கணக்காய்

செக்ஸுக்கு மாற்று பணம்,புகழ்,அதிகாரம்

"மனிதர்கள் ஸ்தூலமாக எந்த செயலில் இறங்கினாலும் சூட்சுமத்தில் அவன் செய்வது கொல்வது அ கொல்லப்படுவது என்ற இரண்டு செயல்களையே"

மேலும் குழந்தையின் மனதில் கலக்கப்பட்ட தான் என்ற எண்ணம் அதன் ஆத்மாவுக்கு (செல்ஃப்) மாற்றாக வலுப்படுகிறது. இதனால் சற்றே விழிப்புற்ற மனிதர்களின் ஆழ்மனதில் தமது ஒத்திசைவுக்கு ,இயற்கையுடனான ஒருங்கிணவுக்கு தத்தமது அகந்தையே காரணம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது. அகந்தை ஒழிந்தால் தம்மில் ஒத்திசைவுக்கும் ,இயற்கையுடனான ஒருங்கிணவுக்கும் வழி ஏற்படும் என்ற எண்ணத்தால் மனிதர்கள் ஒருவர் ஈகோவை அடுத்தவர் காயப்படுத்தி அழிக்கப்பார்க்கின்றனர். அகந்தையே தாம் என்ற எண்ணத்தில் வாழும் மனிதர்கள் தம் ஈகோ சற்று உரசிப்பார்க்க பட்டாலும் உயிரே போய்விட்டதாய் எண்ணி தவித்து போகின்றனர்.

ஆனால் சற்றே விழிப்புற்ற மனிதர்களாகட்டும் மந்தமான மனிதர்களாகட்டும் அறிந்து கொள்ளாத ஒரு ரகசியம் இருக்கிறது. அது ஏற்கெனவே அவர்கள் பரஸ்பர ஒத்திசைவுடன் தான் இயங்குகிறார்கள். இயற்கையுடன் பிணைக்கப்பட்டேதான் இருக்கிறார்கள் என்பதே

மனிதன் எப்போது (நாகரிகமடைந்த பின் வந்த தலைவலி இது) தான் இந்த படைப்பின் மையம் என்று பிரமிக்க துவங்கினானோ எப்போது அவனில் அகந்தை வலுப்பெற்றதோ அது முதல் அவனை மரண பயம் துரத்த ஆரம்பித்துவிட்டது. படைப்பின் மடியில் நிற்சிந்தையாக வாழ்ந்த மனிதன் கால கிரமத்தில் படைப்பின் மடியிலிருந்து இறங்கி தளர் நடை பயின்று ஓடினான் ஓடினான் செயற்கையின் எல்லைக்கே ஓடினான். இயற்கையின் குழந்தையாய் வாழ்ந்த போது மரணம் என்பது
அக்கணத்தில் நிகழக்கூடிய ஒரு சாதாரண நிகழ்வாக இருக்க, செயற்கை வாழ்வில் அகந்தை விஸ்வரூபம் எடுத்து விட்ட நிலையில் மரணம் ..அட சட் மரணம் குறித்த எண்ணமும் தாங்கொணாத துயரை தர ஆரம்பித்தது. மரணம் குறித்த நினைவுகள் அவன் வாழ்வை பாதிக்க துவங்கி விட்டன.

பாரதம் சுதந்திரம் பெறுவதற்கு சற்று முன் ப்ளேக் வியாதி பரவிய போது கூட மக்கள் லட்சக்கணக்கில் செத்தனர். ஏனென்றால் அது மனிதனில் அகந்தை வலுப்பெறாத காலம் அது. இப்போதும் சரி ஒரு கோழிப்பண்ணையில் ஒரு கோழிக்கு நோய் கண்டால் அந்த பண்ணையில் உள்ள அனைத்து கோழிகளுக்கும் வியாதி பரவி செத்துப்போகின்றன். எஸ்.டி.க்கள் வாழும் தாண்டாக்களில் தொற்று நோய் வேகமாக பரவுகிறது. ஏனென்றால் அவர்களில் அவர்களிடையே ஊண கண்களுக்கு தென்படாத ஒரு இணைப்பு இருக்கிறது. அவர்கள் தமக்கு நிகழ்வதை எள்ளத்தனை கூட மன அளவில் எதிர்ப்பதில்லை. தொற்று நோய்கள் கிராமங்களில் பரவுமத்தனை வேகமாய் நகரங்களில் பரவுவதில்லை ஏனென்றால் நம்மிடையே அந்த ஒத்திசைவும்,ஒருங்கிணப்பும் இல்லை. அந்த லிங்க் கட் ஆகிவிட்டது. அதை கட் செய்தது நம் அகந்தை தான்.

புனரபி மரணம் புனரபி ஜனனம்:
மரணம் என்பது ஒரு சாதாரண நிகழ்வு. புனரபி மரணம் புனரபி ஜனனம். ஆனால் அகந்தை நிறைந்த மனது மரணத்தை எதிர்க்கிறது. இந்த எதிர்ப்பினால் மரணம் வலிமையானதாக மாறியது. இவ்வாறாக விஸ்வரூபம் எடுத்த மரணம் மனிதனை, மனித மனத்தை விரட்டுகிறது. இந்த மரண பயத்திலிருந்து விடுதலை பெற ஒரே வழி மரணமடைதல் தான். மரணமுற்றவனுக்கு தான் மரண பயமிருக்காது. ஒரு புறம் மரண பயம் நடு நடுங்க செய்தாலும், மறுபுறம் இயற்கையுடனான ஒருங்கிணைப்புக்கு தடையாக தான் கருதும் உடல் மரணத்தால் உதிர்ந்து போகும் என்ற எண்ணம் மனிதனை மரணம் நோக்கி நடத்த ஆரம்பித்தது.

இருள் மரணத்தின் அடையாளம். தனிமை மரணத்தின் நிழல். இதரருடன் தொடர்பு கொள்ள முடியாது போவதும் மரணத்தின் நகலே. அதனால் தான் மனிதன் நெருப்பை பூசித்தான். சூரிய சந்திரர்களை பூசித்தான். கும்பலாகவே வாழ்ந்தான். காடுகள் அவன் அந்தரங்கத்திலான விருப்பத்தை (கொல்லுதல் அ கொல்லப்படுதல்) முழுமையாக நிறைவேற்றியது. இயற்கையுடனான ஒத்திசைவு, மரணத்துடனான அந்த கண்ணாமூச்சி ,எக்கணமேனும் மரணம் என்ற நிலை ,கும்பலாக வாழும் தன்மை ஆகியனஅவனை அமைதிப்படுத்தின.

காலமே காலன் - காலாதீத நிலையே சுவர்கம்:

செக்ஸின் போது வீரியம் நழுவும் போது கிட்டும் காலாதீத நிலை (ப்ளாக் அவுட்) மரணம் போன்றே இருந்ததால் அதன் மீதான ஆர்வம் மனிதனை செக்ஸில் இறங்க செய்தது.

-------------------
ஆண் பெண்களில் சுய பால் தனமையுடன் எதிர்பால் தன்மையும் உண்டு. சுய பால் தன்மை பதிக்கு சற்று அதிகமாகவும் (60 %)எதிர்பால் தன்மை சற்றே குறைவாகவும் இருக்கும். உதாரணமாக பெண்ணில் ஆண் தன்மை 40 %(10 சதம் குறைவு) , ஆணில் பெண் தன்மை 40% (10 சதம் குறைவு). இதன் படி பார்த்தால் எந்த ஆணும் முழு ஆண்மகன் கிடையாது. எந்த பெண்ணும் முழு பெண் கிடையாது.ஒரு ஆணும் பெண்ணும் இணையும்போது இந்த பற்றாக்குறை நிறைவு செய்கிறது. இவனில் உள்ள ஆண் தன்மையும் அவளில் உள்ள ஆண் தன்மையும், இவளில் உள்ள பெண் தனமையும், அவனில் உள்ள பெண் தன்மையும் இணையும் போதுதான் நிறைவு ஏற்படுகிறது . இதுவும் இணைப்புக்கான துடிப்பை அதிகரிக்கிறது

-------------------
மனிதன் சஞ்சார வாழ்க்கையை மேற்கொண்டிருந்த வரையில் பெரிதாக பிரச்சினைகள் ஏதுமின்றி மனிதனின் ஆழ் மனதின் அடிப்படை இச்சைகள் நிறைவேறிவந்தன.(கொல்லுதல் /கொல்லப்படுதல்)

ஸ்திரவாசம்:
பின்பு ஏற்பட்ட ஸ்திரவாசம் தான் மனித வாழ்வின் எதிர்கால பிரச்சினைகள் அனைத்துக்கும் அடிக்கல் நாட்டியது. விவசாயத்துக்கு ஏற்றதாய் சீர்திருத்திய நிலம், அதிகப்படி விளை பொருள் ஆகியன தனியார் சொத்தாக உருவாகின. இவை தனது வாரிசுகளுக்கே சேர வேண்டும் என்ற ஆணின் எண்ணம் பெண்ணடிமைக்கு அடிகோலியது. குடும்ப அமைப்பு தோன்றியது. செக்ஸ் இரண்டாம் பட்சமாக மாறி வாரிசை உருவாக்குவதே முதல் லட்சியமானது. செக்ஸ் என்பது ஏறக்குறைய தடை செய்யப்பட்டுவிட்டது. (அந்த காலத்தில் மருத்துவத்துறையில் இன்றைய அளவுக்கு முன்னேற்றம் இல்லாததால் குழந்தை பேறின் போது மரணங்கள்,குழந்தை மரணங்கள் அதிகம். யுத்தங்களில் போரிட, விளை நிலங்களில் பாடுபட மனித வளம் பெரிய அளவில் தேவைப்பட்டது. மேலும் குடும்ப கட்டுப்பாடு முறைகளும் கிடையாது. எனவே பெண் குழந்தைகள் பெறும் இயந்திரமாக மாறினாள் . செக்ஸுக்கு வாய்ப்பு மேலும் குறைந்தது.

யுத்தங்கள் எதிர் குழுக்களின் தாக்குதலின் போது தவிர மனிதனின் கொல்லும், கொல்லப்படும் இச்சை நிறவேறும் வாய்ப்பும் குறைந்தது .மனிதனின் அடிப்படை இச்சைகளான கொல்லும்,கொல்லப்படும் இச்சைகள் நிறைவேறாத நிலை ஏற்பட்டது

ஆணின் வாரிசு மோகத்தால் பெண் கைதியானாள். காட்டில் வாழ்ந்த வாழ்வில் ஆணுக்கு சமமான உடல் பலம், துணிச்சல் கொண்டவளாக இருந்த பெண் நாட்டிலான வாழ்வில் உடல் பலத்தை இழந்தாள். இயற்கை அந்த நசிவை ஈடுகட்ட அவளை மானசிகமாக வலுப்படுத்தியது. அவளில் பாதுகாப்பற்ற தன்மை அதிகரித்தது. உடல் ரீதியான, (+மன ரீதியான ) பலவீனமே பாவங்களின் கங்கோத்ரி என்பதால் பெண் சதிகாரியாக மாறினாள்.இதனால் ஆண்,பெண்கள் திருமண பந்தத்தையும் மீறி தனிமையை அனுபவிக்க வேண்டியதாகி விட்டது. இயற்கையுடன் இணையத்துடித்த ஆண் பெண்கள் தமக்குள்ளேயே தனிமைப்பட்டு போனார்கள் .தனிமை மரணத்துக்கொப்பானது என்பதை ஏற்கெனவே கூறியுள்ளதை நினைவு படுத்திக்கொள்ளவும்.

செக்ஸுக்கு மாற்று:

கொல்லுதல்/கொல்லப்படுதல் அதற்கு மாற்றான செக்ஸ் ஆகியன ஏறக்குறைய தடை செய்யப்பட்டுவிட்ட நிலையில் தனது அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள மனிதனுக்கு மாற்று ஏற்பாடு தேவைப்பட்டது.

அதே சமயத்தில் ஒரு குழு விளைவித்த அதிகப்படியான விளை பொருட்களை கொடுத்து மற்றொரு குழுவினரிடம் உள்ள த்மக்கு தேவையான விளை பொருட்களை பெற பண்ட மாற்று முறை ஏற்பட்டது, பின் தங்க,வெள்ளி நாணயங்கள் அமலுக்கு வந்தன. பணம் உருவானது. செக்ஸில் கிடைக்கக்கூடிய அனைத்து உணர்வுகளும் பணத்தில் கிடைப்பதை மனிதனின் ஆழ்மந்து உணர்ந்து கொண்டது. செக்ஸுக்காவது மற்றொரு துணை தெவைப்படுகிறது. பண விஷயத்தில் அதுவும் கிடையாதே..

நேரிடையாக கொல்லவும்,கொல்லப்படவும் உடல் பலம், தைரியம் தேவைப்பட்டது. செக்ஸில் இவற்றின் தேவை குறைவுதான் என்றாலும் கட்டாயம் தேவை. ஆனால் பணம் சம்பாதிக்க இது ஏதும் தேவைப்படாத நிலை ஏற்பட்டது. எதிரியின் அகந்தையை திருப்தி படுத்தினாலே பணம் சம்பாதிக்க வாய்ப்பு இருந்தது. சில காலம் தன் ஈகோவை கொன்று (தன்னை) பணம் சம்பாதித்து விட்டால் பிறகு பணம் பணத்தை சம்பாதிக்க துவங்கிவிடுவதை கண்டான் அப்போது தன்னை கொன்று தான் ஈட்டிய பணத்தை கொண்டு பிறரை கொல்லும் சுகம் கிடைத்தது. செக்ஸுக்கு மாற்றாக மனிதன் உணர்ந்த பணத்தின் பாதிப்பு எந்த அளவுக்கு உயர்ந்ததென்றால் எதற்கு மாற்றாக பணத்தை ஈட்ட ஆரம்பித்தானோ அந்த செக்ஸையே மறந்து போகுமத்தனைக்கு பணம் மனிதனை பாதித்தது.

இதுவரை படித்த பதிவின் சாரத்தை மீண்டும் ஒரு தரம் ஓட்டிப்பாருங்கள்:

1.சகல உயிர்களும் முதலில் ஓருடல் ஓருயிர் என்ற நிலையில் இருந்தன.
2.பின் பரிணாம வளர்ச்சியில் பல உடல் பல்லுயிராக பிரிந்தன
3.மீண்டும் ஒன்று சேர துடிக்கின்றன.
4. அந்த மறு இணைப்புக்கு தத்தமது உடலே தடை என்று பிரமிக்கின்றன.
5. உண்மையில் அனைத்து உயிர்களையும் கண்ணுக்கு தெரியாத ஒரு தங்க நூல் சரிகை பிணைத்துத்தான் வைத்துள்ளது.
6.ஆனால் ஈகோ அதை உணர மறுக்கிறது. தான் பிரிந்தே இருப்பதாய் எண்ணச்செய்கிறது. ஒன்றிணைய துடிக்கச்செய்கிறது. அதற்கு தடை உடல் என்று பிரமிக்கச்செய்கிறது.
7.எனவே தான் மனிதர்கள் தம் உடலை உதிர்க்க துடிக்கின்றனர். அதனால் எச்செயலுக்கு பின்னும் மனிதனின் கொல்லு அல்லது கொல்லப்படும் இச்சையே இருக்கிறது
8.சற்றே விழிப்புற்றவர்கள் இணைவுக்கு தடை அகந்தை தான் என்பதை உள்ளூர உணர்ந்து தம் அகந்தையை உதிர்க்கும் தைரியம் போதாது (அது தான் தான் என்ற எண்ணம் ஈகோவை உதிர்க்கும் செயலை தற்கொலையாகவே எண்ணி நடு நடுங்கி போகிறாது.) பிறரின் ஈகோவை உதிர்க்க முயற்சி செய்கின்றனர். முட்டாள்கள் சதா சர்வகாலம் எதிராளியின் ஈகோவை உரசி பார்ப்பதில் திருப்திய்ற்று விடுகின்றனர். இதனால் தத்தமது ஈகோ மேலும் வலுப்பெறுகிறது என்பதையும் மறந்து விடுகின்றனர்
9.மனிதன் காடுகளில்வசித்தபோது சுதந்திரமாய் கொல்வதும் கொல்லப்படுவதுமாய் வாழ்ந்தான்.
10. ஓரளவு நாகரீகம் அடைந்த பிறகு கொல்வதும்,கொல்லப்படுதலும் குறைந்து போயின. பிறகு செக்ஸில் கிடைக்கும் மரணமொத்த காலாதீத நிலை மீது கவர்ச்சி கூடியது.
11. ஸ்திரவாசம், நாகரிகம்,வாரிசுக்கான தவிப்பால் செக்ஸ் பெறுதலில் பிரச்சினை ஏற்பட்டது .
12. கூடுதல் விளைபொருட்கள்/பண்டமாற்று/தங்க வெள்ளி நாணயங்கள் /பணம்/செக்ஸுக்கான மாற்றாக பணம்/ தற்போது செக்ஸையே மறக்கடிக்குமளவுக்கு பணத்தின்கவர்ச்சி

ரஜினியின் கட்டக்கடைசி சரணாகதி சன் மூவீஸிடம்

பெரிய மனிதர்களை (அப்படி சமுதாயம் கொண்டாடும்) விமரிசிப்பது ஒரு மனோ வியாதி என்று யாரோ ஒரு பெரிய மனிதர் (?) எனக்கு அறிவுரை கூறியதுண்டு.

ஆனால் நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் வழி என் வழி ஆகும். அதிலும் சமுதாய்த்தையே பாதிக்கும் நிலையில் உள்ள செலிப்ரிட்டீஸ் ஆதர்சமாக இல்லா விட்டாலும் , தரம் தாழ்ந்து விடாதிருக்க முயற்சிக்க வேண்டும்.

அதை விடுத்து பெரிய மனிதன் என்ற போர்வையில் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று தவறுகளை தொடர்ந்தால் என் விமர்சனம் தொடரும்.

இந்த பதிவில் கிழிக்க எடுத்துக்கொண்ட நபர் சூப்பற ஸ்டார் ரஜினி காந்த்.
இவரை ஆள் காட்டிவிட்டது வேணும்னா ஒரு பார்ப்பனரா இருக்கலாம். ஆனால் ஆளாக்கி விட்டது சூத்திர பசங்க ,சேரி பசங்க . ஆனால் ஆசாமி பார்ப்பனர்களோட விளையாட்டு பொம்மையாவே ஆய்ட்டாரு.

நேட்டிவிட்டியை பொறுத்தவரை ரஜினியின் நிலையும் என் நிலையும் ஒன்றுதான் காரணம் நானும் ஆந்திரம் வாழ் தமிழன் தான். ஆனால் நான் பேசும் தெலுங்கை கேட்டால் தெலுங்கு பண்டிதர்கள் கூட மயங்கிவிடுவார்கள். ரஜினி பேசும் தமிழை கேட்டால்?

நான் என்.டி.ஆர் ரசிகன். இன்று என்.டி.ஆரின் ஆதர்ஸ் திட்டமான 2 ரூ.க்கு கிலோ அரிசிமுதல் ஏழை மக்களுக்கு ப‌யன் தரும் பல திட்டங்களை ஒய்.எஸ் அமல் அமல் படுத்தி வருவதால் நிபந்தனையற்ற ஆதரவை தந்து வருகிறேன். (மாதமிருமுறை தெலுங்கு பத்திரிக்கை நடத்தியபடி). என்.டி.ஆர் உயிரோடு இருந்தவரை , ஒய்.எஸ்.ஆர் ஜல யக்னம் என்ற பெயரில் அணைகளை கட்டத்துவங்கும் வரை நான் என்.டி.ஆர் புகழைத்தான் பாடிவந்தேன்

ஆனால் ரஜினி?

ஆந்திராவுக்கு வந்தா நான் என்.டி.ஆர் ரசிகன்னுவார்.. நாகேஸ்வர்ராவும் பிடிக்கும்னுவாரு. அப்புறம் சந்திரபாபு என்.டி.,ஆருக்கு ஆப்பு வைக்கும்போது ஜால்ரா போடுவார்.

கர்நாடகத்துக்கு போனா ராஜ்குமார் ரசிகன்னுவார் இங்கே காவிரி தண்ணி கேட்டு நடிகர்கள் நெய்வேலிக்கு போனா இவர் தனியே உண்ணாவிரதமிருப்பார். இன்னைக்கு கன்னடனை உதைக்கனும்னுவார் நாளைக்கு மன்னிப்புன்னுவார் மறுபடி இல்லை வருத்தம் தெரிவிச்சேன்னுவார்.

அட போங்கய்யா நீங்களும் உங்கள் சூப்பற ஸ்டாரும்.

one cannot serve two bosses

one cannot raid 2 horses

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைன்னா எப்படி?

கர்நாடகால படம் வெளி வராட்டா ரோமமே பொச்சு அந்த நஷ்டத்துக்கு என் சம்பளத்துல வெட்டு விதிச்சுருங்கன்னனும் அதான் ஆம்பளைக்கு அழகு. வேறு மாதிரியா சொன்னா வில்லங்கமாயிரும் புரிஞ்சுக்கங்க.
ரஜினி பாவம் என்ன செய்வார் அவர் வெற்றியே இரவல் வெற்றிதான் எந்த படம் எந்த பாஷைல சக்ஸஸ் ஆனாலும் தூக்க வேண்டியது தான் .
அதுலயும் ரொம்ப மோசம் ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன் சினிமா சிவாஜி நடித்த ஹிட்லர் உமாநாத்தின் உல்ட்டா என்பது தெரியுமா?
"ஹிட்லர் உமாநாத்" ல சிவாஜி கோழை, மனைவி ஹிட்லரோட கதையை சொல்லி ஜும் ஏற்றி வீரனாக்கி,பணக்காரனாக்குவார். இதை தெலுங்குல உல்ட்டா அடிச்சு ஹீரோவை பயங்கர ரவுடியாக்கி "தர்மாத்முடு" னு ஒரு படம் எடுத்தானுங்க..

அதைத்தான் ரஜினியை போட்டு ஏவிஎம் நலாவனுக்கு நல்லவன் எடுத்தாங்க .

பார்ப்பனர் கூட்டத்தின் கைதி ரஜினி:

பாஷா பட டிஸ்கஷனின் போது உ.வ.பட்டு பேசிக்கொண்டே பாலா ரஜினியின் சீட்டில் உட்கார்ந்துட்டாராம்.(சி.எம்.நாற்காலி பாருங்க !) ரஜினி மறுபடி அந்த நாற்காலியில் உட்காரவே இல்லையாம். டெட்டாயில்,ஃபெனாயில் போட்டு கழுவிட்டு உட்காரலாம்னு நினைச்சாரோ என்னவோ. பாலா ! ஜால்ரா சத்தம் சகிக்க முடியலை ..கொஞ்சம் அடக்கி வாசியும் பிள்ளாய்!

ரஜினிக்கு கிடைத்த தகுதிக்கு மீறிய அங்கீகாரம் ஒரு விபத்து. ஒரு காலத்தில் வேண்டுமானால் ரஜினி ஒரு வித்யாசமான நடிகராக இருந்திருக்கலாம். வர வர மாமி கழுதைப்போலானாள் என்பது போல் அவரது பாத்திர படைப்பு ஏறக்குறைய ஒரு எம்.ஜி.ஆர் தனமாகிவிட்டது.அக்மார்க் அரைத்தமாவாகி விட்ட பிறகும் காலி பெருங்காய டப்பா மணப்பது போல் மணந்து வருகிறார். அந்த பெருங்காயத்துக்கு ஜல் ஜக் போட்டு என்ன லாபம்? ஒரு வேளை சுஜாதாவின் இடத்தை பிடிக்க ரோபோ ரயிலில் தொற்ற ஒரு முயற்சியா?

ரஜினியின் கட்டக்கடைசி சரணாகதி சன் மூவீஸிடம் தான் . ரோபோவுக்கு மூட்டை அவிழ்க்க கார்ப்போரேட் கம்பெனி யோசிக்க ஆரம்பித்துவிட சன் மூவீசிடம் நாலு காலையும் தூக்கிவிட்டார் ரஜினி.


என்னை பொருத்தவரை என் கையில் இன்றிருப்பது கப்பறையாகவேகூட இருக்கலாம். அவர்கள் தலைகளில் இருப்பது கிரீடங்களாகவே கூட இருக்கலாம். இந்த கப்பறைக்கான நோக்கம் என் எதிர் காலத்தில் தெளிவு பெறும்.


என் இருண்ட காலத்தில் என்னை நானே வெளுத்து சுத்திகரித்துக்கொண்டுவிட்டேன். இவர்களோ லைம் லைட்டின் வெளிச்சத்தில் அழுக்காகிவிட்டார்கள்.

என் அளவு கோல் ரொம்ப சிம்பிள். வெற்றிக்கும் திறமைக்கும் தொடர்பு கிடையாது. இந்த நவீனயுகத்தில் வெற்றி என்பது ஒரு விபத்து மாதிரி. நம்மை விட தகுதி படைத்தவர்கள் ஆயிரக்கணக்கில் ஒரு துண்டு பீடிக்கு கூட கதியில்லாமல் இருப்பார்கள். இதை மறந்து என் வெற்றிக்கு காரணம் என் தகுதி,உழைப்பு என்று ஜல்லியடிப்பது மதியீனம்.

ரஜினியை மக்கள் அங்கீகரித்துவிட்டார்கள். இதற்கு நன்றி தெரிவிக்க ரஜினி செய்ய வேண்டியது என்ன? எந்த கட்சிக்கு ஓட்டு போடவேண்டும் என்று சொல்வதா ? நிச்சயமாக இல்லை. ரஜினியை ரஜினியாக்கி உய்ரத்தியது சினிமா. ஆனால் அந்த சினிமாத்துறைக்கு ரஜினியால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அவர் நினைத்தால்

சினிமாவுக்கு ஏதோ செய்யவேண்டும் என்ற தவிப்பில் இருப்பவர்களுக்கு உதவலாம். இதுஒன்றுதான் ரஜினி செய்யக் கூடியது. ஆனால் அவரோ மீண்டும் மீண்டும் மற்றொரு சிவாஜிக்கு முயற்சி செய்தபடி சர்வைவல் பிரச்சினைகளிலேயே மூழ்கியிருக்கிறார்.

வென்றவன் அதிர்ஷ்டத்தால் வெல்கிறான். திறமையால் வெல்ல முடியாதவர்களுக்கு அவன் வழி காட்ட வேண்டும் அதுதான் அவன் அவனை வாழவைத்த‌ துறைக்கு காட்டும் நன்றி.

ஆனால் ஒன்று ரஜினியுடன் சிரஞ்சீவியை ஒப்பிட்டால் ரஜினி பெட்டர். காரணம் ரஜினி தம் மகளை நடிகையாக்கவில்லை. அவரது காதலை அங்கீகரித்து சைடு கொடுத்து பெரியமனிதராகிவிட்டார். ஆனால் சிரஞ்சீவி மகள் விஷ்யத்தில் சொதப்பி வில்லனாகி , தன் மகனை சினிமாவி திணித்து அதுவும் தன் ஜிராக்ஸ் பிரதியாக.


ரஜினி காந்த் ரசிகர்கள் அவரது படங்களில் இயக்குனர்கள் உருவாக்கி காட்டிய பிம்பத்தையே ரஜினியாக புரிந்து கொண்டார்கள்.

இதனால் தான் ரஜினியால் தமது ரசிகர்களை திருப்திப்படுத்த முடியாமல் போனதோடு அவர்கள் பார்வையிலேயே கோயானாகவும் மாறிவிட்டார். இந்த தவறான புரிதலுக்கு காரணம் ரஜினி செட்டில் மட்டுமல்லாது வெளி உலகத்திலும் சினிமாத்தனமாகவே நடந்து கொண்டது தான் ( நதி நீர் இணைப்புக்கு ஒரு கோடி நன்கொடை அறிவித்தது)


ரங்கா படத்தில் ரஜினி பேசிய வசனம் (இதோ பார் குரு! உங்களை மாதிரி 100 வயசு வாழனும்னுல்லாம் நான் ஆசைப்பட மாட்டேன் என் இஷ்டப்படி 40 வயசு வரை வாழ்ந்துட்டு போறேன்) இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் எத்தனை ஆயிரம் ரசிகர்கள் ரஜினி காட்டிய வழியில் புகையும்,போதையுமாக நாசமாகிப்போனார்கள். எனது புகைப்பழக்கத்துக்கு கூட ரஜினி தான் காரணம்.

நீண்ட ஆயுள் கொண்ட லெஜென்டுகளின் வாழ்க்கை இப்படி சந்தி சிரிப்பது சரித்திரத்தில் சகஜமான ஒன்று தான். லேட்டஸ்டாக அந்திமழை யில் அன்னார் உதிர்த்த முத்துக்களை படித்தேன். அரிக்குதுய்யா! புல்லரிக்குது..


இடம்:சிவாஜி பட வெள்ளி விழா

கபில முனி என்பவர் சொன்னாராம் (அதை ரஜினி எடுத்து கூறுகிறார்)

"ஆசைப்படு.ஆசைப்பட்டதை அடைவதற்கு விஷயத்தை சேர்த்து வை.அப்படி சேர்த்து வைத்த விஷயத்தை , சரியாக செயல்படுத்து...அது கொடுக்கும் பலனை முதலில் நீ அனுபவி...அதில் கொஞ்சம் நீ வைத்துக்கொள் . மீதியை மற்றவர்களுக்கு கொடுத்து விடு "

இத‌ற்கும் யோக‌த்துக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்? சாங்கிய‌ யோக‌ம் இதைத்தான் கூறுகிற‌தா? என்ன‌ இழ‌வு இது?

ஆசை என்ப‌து தோன்ற‌ கார‌ண‌ம் ம‌னித‌னையும் ,இந்த‌ ப‌டைப்பையும் வேறுப‌டுத்தும் அக‌ந்தைதான். நான் த‌னியில்லை. இந்த‌ ப‌டைப்பின் பிரிக்க‌ முடியாத‌ பாக‌ம் நான். என்ற‌ உண‌ர்வுட‌ன், ப‌டைப்பில் த‌ன்னையும், த‌ன்னில் ப‌டைப்பையும் பார்ப்ப‌வ‌ன் ம‌ன‌தில் ஆசை என்ப‌து தோன்றாது. என்.டி.ஆர் சினிமாவில் வில்லன் " டேய் இந்த ஊரே என‌க்கு சொந்தம் என்று சொல்வார் . அதற்கு என்.டி,.ஆர் "ஈ தேச‌மே நாதி"(இந்த‌ நாடே என்னுடைய‌து) என்று ப‌தில் சொல்வார். ஒரு நாட்டை என்னுடைய‌து என்ற‌ எண்ண‌மே இத்த‌னை பெருமித‌த்தை,திருப்தியை த‌ரும்போது இந்த‌ ப‌டைப்பே என்னுடைய‌து என்ற‌ உண‌ர்வும், அனுப‌வ‌மும் ஏற்ப‌ட்டு விட்டால் அந்த‌ உன்ன‌த‌ நிலையை த‌ங்க‌ள் க‌ற்ப‌னைக்கே விட்டு விடுகிறேன்.

இந்த‌ ப‌டைப்பே தான், தானே இந்த‌ ப‌டைப்பு என்று உண‌ர்ந்துவிட்ட‌ யோகி , அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு, இந்த பிண்டத்தில் உள்ளதை கொண்டு அண்டத்தை கட்டுப்படுத்தும் கலையறிந்த ஒரு யோகி "ஆசைப்படு" என்று சொன்னதாக ர‌ஜினி சொல்வ‌தை ப‌டித்த‌து சிரித்து விட்டேன். அடுத்து பாருங்க‌ள் க‌பில‌ முனி சொல்கிறாராம் ஆசைப்பட்டதை அடைவதற்கு விஷயத்தை சேர்த்து வை. எதை சேர்த்து வைப்ப‌து உண்மையிலேயே புரிய‌வில்லை. ஆசையையா இல்லை. ஆசைப்ப‌ட்ட‌தை அடைவ‌த‌ற்கு விஷ‌ய‌த்தை சேர்த்து வைக்க‌ வேண்டுமாம். (என் குறுகிய‌ மூளைக்கு ஆசை என்ற‌துமே பெண்ணும், விஷ‌ய‌த்தை சேர்த்து வைத்த‌ல் என்ற‌தும் பிர‌ம்ம‌ச்ச‌ர்ய‌மும் தான் ஸ்பார்க் ஆகிற‌து.(அபிஷ்டு..)

அப்புற‌ம் பாருங்க‌ ம‌றுப‌டி குழ‌ப்ப‌ம்.

அப்படி சேர்த்து வைத்த விஷயத்தை , சரியாக செயல்படுத்த‌ வேண்டுமாம். இவ‌ர் என்ன‌த்தை சொல்கிறார். ஒருவேளை ஓஷோ கூறும் காம‌த்திலிருந்து க‌ட‌வுளுக்கா ?

அப்புற‌ம் பாருங்க‌ ம‌றுப‌டி குழ‌ப்ப‌ம்.

அது கொடுக்கும் பலனை முதலில் நீ அனுபவிங்கறார்....அதில் கொஞ்சம் நீ வைத்துக்கொள் என்றும் சொல்கிறார். மீதியை மற்றவர்களுக்கு கொடுத்து விடு என்று முடிக்கிறார்.

துன்ப‌ம் வ‌ருகையிலே சிரிங்க‌ என்ப‌து க‌ண்ண‌தாச‌ன் வாக்க‌ல்ல‌வா?

க‌பில‌ முனி(?) அழ‌கே இத்த‌னை அழ‌காக‌ இருக்கிற‌து. இதில் ர‌ஜினியும் கொட்டேஷ‌ன் விடுகிறார்.(என்ன‌ங்க‌டா இது த‌மிழ் நாட்டுக்கு வ‌ந்த் கேடு)

அடுத்து ர‌ஜினி கோட்டேஷ‌னை பார்ப்போம்

சாப்பிட்டதை எல்லாம் உடம்பில் வைத்துக் கொண்டால் , உடம்பு கெட்டுப்போய்விடும் . சம்பாதித்ததை எல்லாம் நாமே வைத்துக்கொண்டால் , வாழ்க்கை கெட்டுப்போய்விடும்.

இதை ரஜினி தனது டேபிள் கண்ணாடி கீழே தட்டச்சி வைத்திருந்தால் ரஜினி 25 விழாவில் 75 ரூபாய் வாட்ச் ர‌ஜினி ப‌ட‌ம் போட்டு 250 ரூபாய்க்கு விற்ற‌ கொடுமை ந‌ட‌ந்திருக்காதே...
ரஜினி ரசிகனா இருப்பது என்பது சுய இன்பம் காண்பது மாதிரி ஒரு வயசு கோளாறுதான்

நானும் ஒரு காலத்துல ரஜினி ரசிகன் தான். ரஜினி ரசிகனா இருப்பது என்பது சுய இன்பம் மாதிரி ஒரு வயசு கோளாறுதான்
அதை தாண்டி வரணும். வராதவங்க இன்னும் ரஜினி ரசிகராவே இருந்துர்ராங்க. என்னதான் நான் மானசீகமா முதிர்ச்சி அடைஞ்சு ரஜினியை சீரியஸா எடுத்துக்க கூடாதுனு நினைச்சாலும் அவருக்கு அவமானம் நடக்கும்போது நான் நடை பழகிய நடை வண்டியை யாரோ அடுப்பெரிக்க உபயோகிக்கறாப்ல ஒரு ஃபீலிங்க். ரஜினிக்கு ஒரே வார்த்தை சொல்ல விரும்பறேன்.
ரஜினி சார்..சைலன்ஸ் ப்ளீஸ் ! ஏன் இப்படி வாயை கொடுத்து எதையோ புண்ணாக்கிக்கிறிங்க.

தெலுங்கில் ஒரு சூப்பர் பழமொழி உண்டு. *நோரு மஞ்சிதைதே ஊரு மஞ்சிதி. அதாவது
வாய் நல்லதாயிருந்தா ஊர் நல்லதாவே இருக்குமாம். மிஸ்டர்.பாரத் சினிமால காமராஜர் மாதிரி ஒரு கெட்டப்,ராஜீவ் மாதிரி ஒரு கெட்டப்,இவரோட அம்மாவுக்கு இந்திராகாந்தி மாதிரி பில்டப் எல்லாத்தயும் பார்த்ததுலயே ஜகா வாங்கிகிட்டது நல்லதா போச்சு. இல்லாட்டி இன்னைக்கு ரஜினி உளர்ர உளறலுக்கெல்லாம் வக்காலத்து வாங்கி செத்து சுண்ணாம்பாயிருக்கனும். பார்ப்பன,மேற்கத்திய கலாச்சாரத்தை தமிழர்கள் மேல் திணித்து காசு பொறுக்கிய மணிரத்தினத்துக்கு வக்காலத்து வாங்கினது முதல் இன்றைய சித்தர் ஆட்சி வரை ரஜினியில் லொள்ளு தாங்க முடியாததாக இருக்கிறது.

அன்றைய ஜெயலலிதா ஆட்சியில் உழைத்து வாழும் சாமானிய மக்களுக்கு சமாதி கட்டப்பட்ட போதெல்லாம் கட்டின பசுவாய் இருந்த ரஜினி சீறியெழுந்ததும், காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாய் ஆட்சி மாறியதும் சாதனை என்று ரஜினியும்,ரஜினி ரசிகர்களும் இன்றுவரை நினைத்து வருகிறார்கள். முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல் ரஜினியின் சாதனைகள்(?) தொடர்கின்றன.

நம் வீட்டில் வைத்து சில காலம் போஷித்த பிறகு லொள்ளு தாங்க முடியாமல் துரத்திவிட்ட தூரத்து சொந்தமான கிழம் ஒன்று ஆற்றங்கரையில் நாயடி பேயடி வாங்கும் போது மனசு அடித்துக் கொள்ளுமே அது போல் என் மனசு அடித்து கொள்கிறது. கடைசி வேண்டு கோள் ! மிஸ்டர் ரஜினி கொஞ்சம் பொத்திக்கிட்டு இருங்க‌
சிவாஜி படம் ரிலீசான புதிதில் உள்ளிட்ட என் வலைப் பதிவுக்கான சுட்டியை கீழே கொடுத்துள்ளேன் .படித்து பாருங்கள்.

http://kavithai07.blogspot.com/2007/08/blog-post_18.html

தெரிந்த்தோ தெரியாமலோ எல்லோரும் தவறு செய்பவர்களே..நம்மை பொறுத்த வரை சிறு தவறாக இருக்கக் கூடிய ஒன்று அடுத்தவரின் வாழ்வையே கூட சீரழித்து விடலாம் .
"தவறு செய்தவன் திருந்த்தியாகனும்,தப்பு செய்தவன் வருந்த்தியாகனும்"
இது ஒன்றே என் எழுத்தின் நோக்கம்.

Wednesday, July 29, 2009

பணம் பற்றிய ரகசியங்கள்

சச்சித்தானந்த ஸ்வரூபனின் உண்மை வாரிசுகளே !

பணம் பற்றிய மர்மங்களை இந்த பதிவில் படிக்க முனைந்திருப்பதே நான் மேற்சொன்ன சத்தியத்துக்கான சாட்சி ! ஏனென்றால் பணத்தால் ஆனந்தம் கிட்டும். இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிருமே ஆனந்தத்தை வேண்டுகிறது. காரணம் இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிரும் சச்சித்தானந்த ஸ்வரூபனின் உண்மை வாரிசுகளே உங்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறீர்கள். பணம் இல்லாதவர்கள் கூட இருக்கின்றனர். ஆனால் பணத்தேவை இல்லாதவர்கள் மட்டுமில்லை.காரணம் உங்களில் (பதிவை படிக்க முன் வந்திருப்பவர்களில்) ஒவ்வொருவரும் ஆனந்தத்தை கோருகிறீர்கள் அந்த ஆனந்தம் பணத்தால் கிட்டும் என்று நம்புகிறீர்கள். அதனால்தான் பணம் பற்றிய ரகசியங்கள் குறித்த இந்த பதிவை படிக்க முன் வந்துள்ளீர்கள். பணவிஷயத்தில் அப்படி என்ன ரகசியம் வாழ்கிறது. என்று அலுத்துக்கொள்ளாதீர்கள் . பணம் என்பதே ரகசியத்தின் மறு பெயர்தான் .அது எப்போர்து வரும் ? வந்தாலும் எத்தனை நிமிடம் நம்மிடம் இருக்கும் . எப்போது போகும்? போனால் திரும்பி வருமா ? இப்படி எல்லாமே ரகசியம் தான். பணம் இப்படி நம்மை நிச்சயமற்ற தன்மையில் (நினைத்தாலே இனிக்கும் படத்துல ஜெயப்ரதா மாதிரி) வைத்திருப்பதால் தான் பணம் பற்றிய ரகசியங்கள் என்ற இந்த பதிவை இதுவரை படித்து படித்துவிட்டீர்கள். இதற்கு மேலும் உங்கள் பொறுமையை சோதிப்பதாயில்லை. பணம் பற்றிய முழு உண்மைகளை இந்த பதிவில் உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் போகிறேன்.

ஆமாம் பணத்தின் மீது மனிதனுக்கு ஏனித்தனை கவர்ச்சி என்று நான் கேட்டல் பணம் என்பது அத்யாவசியம் ,தேவைகளை தீர்த்து வைக்கிறது என்பீர்கள். நான் கேட்கிறேன் நீங்கள் கூறுவது உண்மை என்றால் ஒவ்வொருவரும் அவருக்கு எத்தனை பணம் தேவையோ அத்தனை பணத்தை மட்டும் தானே சம்பாதிக்கவேண்டும். உண்மை நிலை அப்படி இல்லையே ! தேவையற்றவன் தானே மேலும் மேலும் சம்பாதிக்கிறான். தன் தேவைகளை /அத்யாவசிய தேவைகளை தீர்த்துக்கொள்ளாது பிணம் காக்கும் பூதம் போல் பணத்தை ஈட்டி காக்கின்றானே ஏன்? இந்த செயலுக்கு பின்னுள்ள காரணம் தான் என்ன ?

நம்மில் ஒவ்வொருவரும் பில்கேட்ஸ்,அம்பானி ரேஞ்ச்சுக்கு சம்பாதிக்காவிட்டாலும் கொஞ்சமோ நஞ்சமோ சம்பாதித்து கொண்டே தானே இருக்கிறோம். அட நம்மை விடுங்கள் ஸ்கூலுக்கு போகும் உங்கள் மகனுக்கு ஒரு நாள் பாக்கெட் மணி இல்லேனு சொன்னா அவன் என்னமா ஆர்பாட்டம் பண்றான் ? புரண்டு புரண்டு அழறான். எதுக்கு ?

தேவைகளை நிறைவேற்றுகிறது என்று நாம் கூறிக்கொள்ளும் பணம் , செலவழிக்கத்தான் என்று கூறிக்கொள்ளும் பணம் பல நேரங்களில், பல மனிதர்கள் விசயத்தில் உப்பு ஜாடிகளிலும், புடவைகளின் கீழும், டப்பாக்களிலும், வங்கி கணக்குகளிலும்,இரும்புப்பெட்டிகளிலும் தூங்கிக்கொண்டுதானே இருக்கிறது. இப்படி செத்து சுண்ணாம்பாகி ,தேவைக்காக ஈட்டிய பொருளை கூட மக்க வைக்கச்செய்யும் சைக்காலஜியின் மர்மம் என்ன?

பணம் மனித வாழ்விலானபிரிக்க முடியாத அங்கமாகி பல காலமாகிவிட்டது. ஒரு பொருளை ப்பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ளாது அதை கைப்பற்றுவதோ, பற்றியதை பிடித்து வைப்பதோ முடியாதவேலை.மனிதன் உருவாக்கிய பணம் இன்று மனிதனையே ஆட்டிப்படைக்கிறதே அது ஏன் ? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சரித்திரத்திலும் இல்லை,பொருளாதாரவியலிலும் இல்லை. பின் எங்கே இருக்கிறது என்றால் படைப்பின் ஆரம்பத்தில் இருக்கிறது.

எனவே நாம் படைப்பின் ஆரம்பத்தில் இருந்து இந்த பதிவை தொடங்காவிட்டால் பணத்தின் தோற்றம், அது மனிதனை ஆட்டிப்படைக்கும் நிலைக்கு வந்தது எப்படி போன்ற விசயங்களை தெரிந்து கொள்ளவே முடியாது.

இந்த படைப்பு ஒரு மகா வெடிப்பில் துவங்கியது ..வெடிப்புக்கு பல கோடி ஆண்டுகளுக்கு பின் அந்த வெடிப்பால் ஏற்பட்ட சொல்லொணாத வெப்பம் தணிந்த பின் சமுத்திரத்தில் அமீனோ அமிலங்களின் சேர்க்கையால் முதல் முதலாக ஒரு செல் அங்க ஜீவி ஒன்று தோன்றியது அதுதான் அமீபா. அது கொழுத்து இரண்டாக பிளந்தது. இரண்டு உடல். இரண்டு உயிரானது . ஒரு செல் மற்றொரு செல்லை பிரதியெடுப்பதில் ஏற்பட்ட தவறுகள் காரணமாய் புதிய புதிய ஜீவ ராசிகள் தோன்றின. குரங்கு ஏற்பட்டது. குரங்கிலிருந்து மனிதன் உருவானான்.

ஒரு செல் அங்கஜீவியில் இருந்த அதே உயிர்தான் இன்று பல லட்சம் கோடி உயிர்களிலும் இருக்கிறது . ஒரே உயிராய், ஒரே உடலாய் இருந்த அந்த காலம், அதில் இருந்த அமைதி,போட்டியின்மை,அச்சம்,இலக்கற்ற தன்மை ,காலமற்ற தன்மை எல்லா உயிர்களிலும் பசுமை நிறைந்த நினைவுகளாக இருக்கிறது. அந்த நினைவுகள் உயிர்களை பரஸ்பரம் இணைந்து ஓருயிராக தூண்டுகின்றன. இயற்கையுடன் இணைய தூண்டுகின்றன. இந்த தூண்டுதல் மிருகங்கள் விசயத்தில் Success ! Success ! என்ற ஏ.வி.எம் பட ஓப்பனிங்க் சீனாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. வளர்ப்பு பிராணிகள் உட்பட வெவ்வேறு ஆட்களால் வளர்க்கப்பட்டாலும் அவை ஒரே உயிராய் செயல்படுகின்றன. அவற்றின் செயல்பாட்டில் பயாலஜிக்கல் க்ளாக்கில் எவ்வித வேறுபாடும் ஏற்படுவதில்லை. பூகம்பம், கிரகணம் போன்ற இயற்கை நிகழ்வுகளின் போது அவற்றின் செயல்பாடுகள் ஒன்றே போல் உள்ளன. இதற்கு காரணம் தான் என்ற எண்ணம், அகந்தை, ஈகோ என்பது அவற்றில் இல்லை.
ஆனால் மனிதன் விசயத்தில் மட்டும் இந்த இணைப்பு துடிப்பு இருக்கிறதே தவிர...செயல்பாட்டுக்கு வரும்போது வெவ்வேறாக மாறிவிடுகிறது.காரணம் இந்த பூமிக்கு அகந்தை என்பது எள்ளளவும் இல்லாத யூனிவர்சல் மைண்டுடன் வரும் மனிதனில் அவனது பெற்றோரும்,ஆசிரியர்களும் அகந்தையை உற்பத்தி செய்கிறார்கள் .இந்த அகந்தை அவனை இயற்கையிலிருந்து பிரிப்பதோடு, இணையத்துடிக்கும் ஆழ் மனதுக்கும் தவறான வழியை காட்டிவிடுகிறது. ஆம்
மனிதன் இயற்கையுடனான தன் இணைப்புக்கு, ஓருயிராக மாறுவதற்கு தன் உடலே தடை என்று தவறாக நினைத்து விடுகிறான். அந்த உடலை உதிர்த்துப்போட தற்கொலை,கொலை என்று இறங்கி விடுகிறான். ஆடு ,கோழி, மீன் , நண்டு என்று உள்ளே தள்ளுபவனின் உள் நோக்கமும் இதுவே.அவற்றை , அதாவது அவற்றின் உடல்களை தன்னுள் ஐக்கியம் செய்து கொண்டால் அவை ஓருயிராக மாறும் என்ற பிரமையே அவனை இப்படி செய்யத்தூண்டுகிறது.ஒரேயடியாய் தற்கொலை அ கொலை செய்யும் தகிரியம் போதாதவன் அதை தவணையில் செய்கிறான்.
இவையெல்லாம் நான் கூறுவன அல்ல . மனோதத்துவ இயலின் சாரம் இது.

"மனிதர்கள் ஸ்தூலமாக எந்த செயலில் இறங்கினாலும் சூட்சுமத்தில் அவன் செய்வது கொல்வது அ கொல்லப்படுவது என்ற இரண்டு செயல்களையே"

(To be continued

வைரமுத்துவுடன் போட்டி போட்டு சினிமாவுக்கு பாட்டு

வைரமுத்துவுடன் போட்டி போட்டு சினிமாவுக்கு பாட்டு எழுதினவனாக்கும் என்று
கித்தாப்பாக சொல்லிக்கொள்ள முடியுமாக்கும்.அது எப்படினு இந்த பதிவுல சொல்லத்தான் போறேன்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்தகுடி தமிழ் குடினு சொல்றோமே..அப்படிப்பட்ட தமிழ் குடியில பிறந்த என் தாத்தா ஆரணி துரைசாமி முதலியார் அங்கிட்டு
பிழைக்க முடியாம சித்தூர் வந்துட்டாராம்.(இங்கயும் ஒன்னும் பிழைச்சமாதிரி தெரியலை. அரசியல் வாதி மாதா மாதம் கறை வேட்டி (த பார்ரா ! அரசியல் வாதிக்கு கைலதான் கறைன்னா வேட்டிலயும் அதே இழவு) மாத்தின மாதிரி வியாபாரத்தை மாத்தினா எப்படி பிழைக்க முடியும். பாட்டிதான் இட்லி சுட்டு அப்பனை "கவர்மிட்டு " வேலை பண்ணி வச்சாளாம். அப்பாவுக்கு கவர் மிட்டு வேலை வர ஒரு பெண் காரணம்.அவள் கலெக்டர் மகளாம். எங்க அப்பனுக்கு க்ளாஸ் மேட், (பார்த்திங்களா ! அந்த காலத்துல கலெக்டர் மகளும், இட்லி விக்கிறவ மகனும் ஒரே ஸ்கூல்ல படிச்சுருக்காங்க ..

ஆக தமிழ்குடியான நாங்க எப்படி ஆந்திரா பக்கம் வந்துட்டோம்னு சொல்லியாச்சில்ல ..இப்போ வைரமுத்துவோட போட்டி போட்டு சினிமா பாட்டு எழுதின கதைய சொல்றேன். வைர முத்து அடிக்கடி அழுதுக்கிட்டு (இரவு முழுதும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது) தமிழ் திரையுலகத்தின் ஆஸ்தான கவிஞராக கோலோச்சினாலும் அப்பபோ டப்பிங் படத்துக்கும் பாட்டு எழுதுவாரு. உதாரணம்: சலங்கையொலி .

அப்படியாக அவர் சிரஞ்சீவியின் ராட்சஸுடு என்ற படத்துக்கும் பாட்டு எழுதினார். அந்த படம் தெலுங்குல வந்து சில காலம் கழிச்சுத்தானே தமிழ்ல டப் ஆயிருக்கும்.

ஆனால் புதுசா பாட்டெழுத ஆரம்பிச்சிருந்த நான் ஆடியோ ரிலீஸான அன்னைக்கே எல்லாப்பாட்டையும் டப் பண்ணிருவேன்.அப்படித்தான் ராட்சசன் படத்துல வர்ர "மள்ளி மள்ளி இதி ரானி ரோஜு" என்ற பாட்டுக்கும் தமிழ்ல எழுதினேன்.

தெலுங்குல இப்படி தமிழ்ல இருந்து வர டப்பிங் படத்துக்கு எழுதறதுக்குன்னே ஒரு ஆசாமி உண்டு அவர் பேர் வீட்டூரி சுந்தரரமமூர்த்தி. தெலுங்கு ஃபீல்டுல ஒரிஜினல் பாட்டு எழுதுறவர் பேரு வேட்டூரி சுந்தரராமமூர்த்தி
அந்த வரிகள் இன்னம் ஞா இருக்கு. நீங்க எப்பயாவது தமிழ்ல வெளி வந்த ராட்சசன் பட ஆடியோவை கேட்டிருந்தா வைரமுத்துவோட பாட்டு வரிகளையும்,கீழே
கொடுக்கப்பட்டிருக்கும் என்னோட பாட்டுவரிகளையும் ஒப்பிட்டு ஒரு வரி எழுதினால் "புளங்காகிதம்" எய்துவேன்.

"மீண்டும் மீண்டும் இந்த நாள் வராது
எங்கு சென்றாய் கண்ணே தேன் தராது
நந்தவனம் மங்கை சொந்த மனம் தேறி விடும் இந்த மன்னன் மனம்.
கண்ணே இந்த நேரமே..கண்ணில் ஒரு தாகமே
பூவே உன்னை தொட்டால்
கன்னமெல்லாம் வர்ணஜாலம் கோலம் போடும்
கன்னியுன்னால் உள்ளம் பாடாதோ ஜீவனுள்ள புது கீதம்
கண்களில் காண்கிறேன் காந்தமே (மீண்டும்

பூக்கள் கோடியிருந்தால் என்ன பாரிஜாதம் நீ எங்கே ?
பாக்கள் கோடியிருந்தால் என்ன கண்ணதாசன் கவியெங்கே ?
வெண்ணிலா வாழ்வது கன்னியுன் கண்ணிலா
(மீண்டும்
குறிப்பு:
ஆனால் ஒன்னுங்க தமிழ்,தெலுங்கு ரெண்டும் தெரிஞ்சவங்கிற முறையில சொல்றேங்க ..
கண்ணதாசன் காலத்துக்கப்புறம் தமிழ் திரை இலக்கியம் சோனியாயிருச்சு. சோனியாவே
கிடக்கு . ஆமா தில்லில சோனியாம்மா பவர் ஃபுல் லேடியாயிட்டாங்களே இன்னம் ஏன்
சோனியான்னு சோனியான பேரு

Monday, July 27, 2009

புட்டபர்த்தி சாயி பாபா குறித்த புருடாக்கள்- 2

இவரது பக்தர் டி.கே.ஆதி கேசவுலு திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மனாக பதவியேற்றார்.ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்தை மானிலமெங்குமுள்ள கோவில்களில் நடத்த முடிவு செய்தார். இதில் தவறேதுமில்லை. நான் கடவுள்(சினிமா டைட்டில் இல்லிங்க) என்று சொல்லிக்கொள்ளும் பாபாவின் ஆசிரமத்தில்
ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்தை நடத்தியது ஏன் ? அதிலும் பாபா சோஃபாவில் அமர்ந்து கல்யாணத்தை பார்வையிட்டது ஸ்ரீ வாருவின் பக்தர்களை ரொம்பவே கடுப்படித்து விட்டது. ஆதி கேசவுலு செய்கிறேன் என்றாலும் பாபா அடச்சீ நானே கடவுள் என் முன்னாடி அந்த பொம்மை கல்யாணம் எதுக்கு என்று தடுத்திருக்க வேண்டாமோ ?

தூரதர்ஷன் கேமரா கண்களுக்கு சிக்கிய மாயக்கரம்:
அப்போது நரசிம்மராவ் பிரதமர். பாபா பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அந்த க்ளிப்பிங்கை தூர்தர்ஷன் ஒளிபரப்ப ஷூட் செய்தது. எடிட்டிங்கின் போது பார்த்தால் பாபா ஒரு தங்க செயினை வரவழைத்து (லலிதா ஜுவெல்லர்ஸ்லருந்து இல்லிங்க) தரும் காட்சியில் ஒரே ஒரு ஃப்ரேமில் ஒரு கை பின்னிருந்து தோன்றி மறைந்ததாம்.. உடனே தூரதர்ஷன் காரர்கள் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டனராம். "அந்த ஃப்ரேமை கட் பண்ணிட்டு போடுங்க" என்று உத்தரவு வந்ததாம். காரணம் பி.வி.நரசிம்மராவும் பாபா பக்தர்தான்.

கொலை முயற்சியின் போது பஸ்ஸரை அழுத்தியது ஏன்
பாபா மீது ஒரு முறை கொலை முயற்சி நடந்தது. ஒரு ஆசாமி துப்பாக்கியுடன் பாபாவின் படுக்கை அறைக்குள் நுழைந்து விட்டான்.பாபா கடவுள் தானே உடனே முப்புரம் எரி செய்த அச்சிவன் போல் புன்னகை பூத்திருக்கலாம், ஸ்ரீராமனை போல் ஒரு அம்பு விட்டிருக்கலாம், அட அதுதான் வேண்டாம் குறைந்த பட்சம் காற்றிலிருந்து ஒரு துப்பாக்கி வர வழைத்து தன்னை சுட வந்தவனை சுட்டிருக்கலாம் அல்லவா ? அதுதான் நடக்கவில்லை. பாபா உடனே அருகிலிருந்த செக்யூரிட்டியை அழைப்பதற்கான பஸ்ஸரை அழுத்தினார்.

வெளி நாட்டினர் தொடர்ந்து மர்ம சாவு:
ஆந்திர மானிலம் ,அனந்த புரம் மாவட்டத்திலாகட்டும், கர்னாடக மானிலம் ,வைட் ஃபீல்டில் ஆகட்டும் பாபா பக்தர்களானவெளினாட்டினர் தொடர்ந்து மர்ம சாவுக்கு இலக்காகி வருகின்றனர். நாட்டின் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய மந்திரிகள், அதிகாரிகள் எல்லாம் பாபா முன் மண்டியிட்டு கொண்டிருக்க இந்த வழக்குகளில் எல்லாம் பாரபட்சமற்ற விசாரணை நடத்த உள்ளூர் போலீசாருக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது .

குடி நீர் திட்டம் :
ஆட்காட்டி விரலால் தொட்டு கேனிலான தண்ணீரை டீசலாக மாற்றிய பாபா வறட்சி பிரதேசமான அனந்தபுரம் மாவட்டத்தை பச்சை பசேலென்று மாற்ற பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் கால்வாய் வெட்டி வருகிறார். ஒரு பக்தராவது
பாபா நீங்கதான் கடவுளாச்சே ..நீங்களும் சாதாரண மனிதன் மாதிரி கால்வாய் வெட்டித்தானா தண்ணீரை கொண்டு வரனுமா என்று கேட்கிறமாதிரி இல்லை.

வெளி நாட்டை சேர்ந்த பெப்சி,கொக்கோ கோலா கம்பெனிகள் ஆகட்டும் , புற்றீசலாய் கிளம்பிவரும் மினரல் வாட்டர் ப்ளாண்டுகள் ஆகட்டும், அரங்கேற்றி வரும் தண்ணீர் கொள்ளையை நிறுத்தலைனா அந்த நாட்டு பக்தர்களே என்னிடம் வர கூடாது என்று அழுத்தம் தரலாமே ! நீர் வளங்களை சிதைக்கும் தொழிற்சாலைகளை நடத்தும் பண முதலைகள் இந்த இழி செயலை விட்டாலன்றி தன் அருள் கிடைக்காது என்று எச்சரிக்கலாமே ! மணல் கொள்ளையை தடுத்து , மரங்களை லட்சக்கணக்கில் நடலாமே ! (ஜக்கி வாசுதேவை இந்த விசயத்தில் பாராட்டியே தீர வேண்டும்)

முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் 9 ஆண்டு கால ஆட்சியில் அவர் ஒரே ஒரு அணையை கூட கட்ட முனையவில்லை .அவரும் பாபா பக்தர்தானே . பாபுவுக்கு சொல்லி அணைகள் கட்டசெய்திருக்கலாமே ! சரி அதுதான் ஒழியட்டும் இன்றைய முதல்வர் டாக்டர் ஒய்.எஸ். ஒரு லட்சம் கோடி செலவில் அணைகள் கட்டுகிறாரே அதற்கு குறைந்த பட்சம் ஆசி (?) கூறி , ஆதரவு தெரிவித்திருக்கலாமே

எங்கள் தொகுதியின் முன்னாள் எம்.பி. ஆதிகேசவுலு கூட இவரது பக்தர்தான். தன் மதுபான தொழிற்சாலையின் கழிவு நீரை பத்தாண்டு காலம் ஆற்றில் விட்டி அந்த நீவா நதியை நாஸ்தி பண்ணிட்டாரே தடுத்திருக்கலாமே! ஒரு காலத்தில் பளிங்கு போன்ற நீர் ஓடிய அந்த ஆற்றில் இன்று சாக்கடையை கூட பூதக்கண்ணாடி வைத்துதான் தேடவேண்டும். அந்த ஆற்றின் அருகாமை பகுதிகளில் எங்கு போர் (BORE) போட்டாலும் ப்ராந்தி நிறத்தில்தான் தண்ணீர் வருகிறது. அந்த பகுதி மக்கள் அனைவரும் இன்று வரை தோல் வியாதியாலும், மஞ்சள் காமலை போன்ற வியாதிகளாலும் அவதிப்பட்டுக்கொண்டுதான் உள்ளனர். அந்த நீவா நதிக்கரையில் பெருமாளுக்கு கற்றளி சமைத்த் வருகிறார் ஆதி கேசவுலு .அவர் முதல் முறையாய் அரசியலில் குதித்து காங். கட்சி சார்பில எம்.பி யாக போட்டியிட்ட போத் புட்டபர்த்தி பாபாதான் தன் கையால் பிஃபார்ம் கொடுத்தார் கொடுத்து என்ன டி.கே .தோத்து போயிட்டாரே

பாபா எவ்வழி பக்தர்கள் அவ்வழி:
பாபா மேற்படி மோடி மஸ்தான் வேலைகளை செய்து வரும்போது பக்தர்கள் சும்மா இருப்பார்களா என்ன அவர்களும் தம் பங்குக்கு பாபா படத்துல விபூதி கொட்டுது ,தேன் வழியுது என்று பீலா விடுவது வழக்கமாகிப்போனது. இந்த மாதிரி கேஸ் எல்லாம் கொஞ்சம் டீப்பா சமீபத்துல பெரிய இழப்புக்கு ஆளான குடும்பமா இருக்கும் . அந்த சோகத்துல இருந்து வெளிவர இந்த விபூதி புரளிய கிளப்பி விட்டிருப்பாங்க .. இல்லாட்டி திவால் பார்ட்டியா இருக்கும் இல்லன்னா வீட்டு மேல ஏதாவது லிட்டிகேஷன் இருக்கும்

இதையெல்லாம் பார்க்கும்போது இந்தமாதிரி டுபாக்கூர் ஆசாமிகளை அங்கீகரிக்கும் இந்து மதத்தை விட "லாயில்லாஹி இல்லல்லாஹி முகம்மது ரசூருல்லாஹி"(அல்லாவை தவிர தெய்வமேதுமில்லை முகமதுவை விட சிறந்த தூதருமில்லை ) என்று போதிக்கும் இஸ்லாமே மேல் என்று படுகிறது. ஆனால் இஸ்லாமில் கூட பாபாக்களை, தர்காக்களை பூஜிக்கும் அம்சம் பெருகிவருவது வேதனையை தருகிறது. ரஹ்மான் போன்ற பிரபலங்கள் விசிட் அடிக்கும் தர்காக்கள்
மேலும் மேலும் மக்களை ஈர்ப்பது சோகம். இதற்கு ரஹ்மான் போன்றவர்கள் துணை நிற்பது சோகத்திலும் சோகம்.

புட்டபர்த்தி சாயி பாபா குறித்த புருடாக்கள்

சரித்திரத்தில் முதலாம் ஜார்ஜ் இரண்டாம் ஜார்ஜ் போல, சங்கராச்சாரிகளில் சீனியர்,ஜூனியர்,சப் ஜூனியர் என்றிருப்பது போல சாயி பாபாவிலும் உண்டு. புலியை பார்த்து நரி சூடு போட்டுக்கொண்ட கதை தெரியுமா ? அதுவே தான் ஷீரடி பாபாவின் கதையை கேள்விப்பட்ட சிறுவன் நான் தான் பாபா என்று பீலா விட புட்டபர்த்தி பாபா உருவானார். உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ புட்டபர்த்தி பாபாவுக்கும் ஒரு ஜூனியர் உள்ளார் (சப் ஜூனியர்) அவரை பாலசாயிபாபா
என்கிறார்கள். அதே பரட்டை தலை.அதே சாயல். பால என்றால் பத்து பதினைந்து வயது என்று நினத்துவிடாதீர்கள் மனிதருக்கு 50க்கு மேல் வயதிருக்கலாம்.

நிற்க புட்டபர்த்திக்காரர் சமீபத்தில் முதல்வர் வீட்டுக்கு வ்ந்து ஒரு மோதிரம் கூட வரவழைத்து (கூரியரிலல்ல) கொடுத்து சென்றார். இயற்கை கொடுத்த இளமையே போய்விட்ட நிலையில் பெரியார் கொடுத்த நாத்திகமும், பகுத்தறிவுமா நிலைத்திருக்க போகிறது. முதல்வரும் பாவம் தேமே பார்த்துக்கொண்ட்ருந்துவிட்டார்.

உடனெ கேரோ மீட்டரில் வைத்து அதன் தரத்தை பார்த்திருக்க வேண்டாமோ? உட்புறம் எந்த கடையின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறாது என்று என்று பார்த்திருக்க வேண்டாமோ? பாபா இருக்கையில் எதற்கு கோலார் தங்கவயல் எல்லாம் ? இழுத்து பூட்ட வேண்டாமோ ?

பல காலத்துக்கு முன்பு நான் பத்திரிக்கைகளில் படித்த செய்தி :
ரஷ்ய குடும்பம் ஒன்று பாபா தரிசனத்துக்கு வருகிறது. அதி ஒரு (ரஷ்ய )சிறுவனும் இருக்கிறான். பாபா பந்தாவாய் அவன் தலை மேல் கை வத்து ஆசீர்வதித்து "உனக்கு என்ன வேணும் கண்ணா" என்றார். சிறுவன் கேஷுவலாக " கப் ஆஃப் காஃபி" என்றான்.பாபா ஏன் அவனிடம் நிற்கிறார் ? வுட் ஜூட் ! மோதிரம், செயின் என்றால் எப்படியோ ஒரு வழியா மேனேஜ் பண்ணலாம். காஃபிய எங்க வச்சுருந்து எப்படி கொடுக்கிறதாம்

சுவர்கத்தில் அச்சிடப்பட்ட பைபிள்:
கிறிஸ்தவர் ஒருவருடன் பாபா வாக்கிங் போகும்போது நடந்தது. ஓரிடத்தில் பாபா சடன் ப்ரேக் போட்டாற்போல் நின்றார் . கூட வந்தவருக்கு ஒரு இடத்தை காட்டி இங்கே தோண்டு என்றார். அவரும் தோண்டினார். தோண்டியதில் ஒரு பைபிள் பிரதி கிடைத்தது. கிறிஸ்தவர் "பாபா இந்த பைபிள் எங்கே அச்சடிக்கப்பட்டது" என்று கேட்டார். "பாபா ஸ்வர்கத்துல"ன்னார். உடனே கூட வந்த ஆசாமி பைபிளை புரட்டி எந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டதோ கூறினார். பாவம் பாபா அந்த காலத்தில் மைக்கேல் ஜாக்சன் மாதிரி மூக்கு ஆப்பரேஷன் செய்யும் வசதியில்லாததால் உடைந்த மூக்குடனேயே ஆசிரமம் போய் சேர்ந்தார்

பாபாவுக்கு நொடில பைபிள் ப்ரிண்ட் செய்து தரும் சக்தி இருக்கும்போது அவர் ஏன் இந்தியன் கரன்சிய அரசாங்கத்துக்கு அடிச்சு தரக்கூடாது. குறைந்த பட்சம் தனக்காவது அச்சிட்டு கொள்ளலாம் அல்லவா ? கேப்பையில் நெய் வடிகிறதென்றால்
கேட்பவன் என்ன கேனையனா ?

இவர் நான் தான் ஷீரடி பாபாவின் மறுபிறவி என்கிறார். அந்த பாபா ஈஸ்வர் ஏக் (கடவுள் ஒருவரே) என்று தானே கூறினார். அல்லா மாலிக் (அல்லாஃஹ் தான் முதலாளி) என்றார் . இவரோ நானே கடவுள் என்கிறாரே ! சரி ஒழியட்டும் மகாராஷ்டிராவில் ஷிரடி பாபாவுக்கு கோவில் இருக்கிறது. கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது. இவர்தான் பாபா என்றால் போய் வாங்கிக்கிட வேண்டியது தானே!

இவருடைய அருமந்த பக்தர் திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மன் டி.கே.ஆதிகேசவுலு. சித்தூர் எம்.எல்.ஏ சி.கே.பாபு ஷீரடி பாபா பக்தர் ஷீரடி பாபாவுக்காக ஒரு கோயிலையே கட்டியுள்ளார். ஷீரடி பாபாதான் புட்டபர்த்தி பாபா என்றால் தன் பக்தர்கள் இருவரும் முட்டி மோதிக்கொள்ள விடுவாரா ? மோதிக்கொண்டால் பரவாயில்லை ஆதிகேசவுலு சி.கே.பாபுவை இங்கிலீஷ் சினிமா மாதிரி மிஷின் கன்ஸுடன் ஆட்களை அனுப்பி சுட்டு தள்ள பார்ப்பதும் கண்ணி வெடி வைத்து கொல்லப்பார்ப்பதும் புட்டபர்த்திக்காரருக்கு தெரியாதா ? தெரிந்தும் தடுக்கவில்லையா? குற்றம் நிகழ விருப்பதை அறிந்தும் போலீசாருக்கு தகவல் கொடுக்காதிருப்பதும் குற்றம் தானே ! (எப்படியோ சிறு கீறலும் இன்றி சி.கே.பாபு பிழைத்திகொண்டார். இரண்டு முறையும் அப்பாவிகள் இரண்டு பேர்தான் செத்தனர். அப்போ ஷீரடி காரர்தான் ஒரிஜினல் என்று பொருளோ? )
டீசல் இல்லாம கார் நின்னு போயிருச்சு:
ஒரு தரம் புட்டபர்த்திகாரர் பயணம் செய்த கார் டீசல் இல்லாம நின்னு போயிருச்சாம். உடனே பாபா இறங்கினாராம். டிக்கில தண்ணி கேன் இருக்கானு கேட்டாராம். இருக்குன்னாங்களாம். உடனே கேன் மூடிய திறந்து விரலை விட்டு தண்ணிய தொட்டாராம். இப்ப ஊத்தி ஓட்டுங்க என்றாராம். கார் ஓட ஆரம்பிச்சுருச்சாம். (இது கல்கி இதழ் ஒன்றில் நான் படித்த சம்பவம்) அட கூமுட்டைகளா ! அப்படியே பாபாவை ஏரோப்ளேன்ல கூட்டிக்கிட்டு போய் இந்து மகா சமுத்திரத்துல தள்ளி விட்டுட்டா கடல் மொத்தமும் டீசலாயிராதா ? கலைஞர் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் டீசல் திட்டத்தை கொண்டு வந்துர மாட்டாரா ?

(அடுத்த பதிவில் நிறைவு செய்கிறேன்)

Sunday, July 26, 2009

பத்திரிக்கை தொழிலில் பெருகிவரும் வியாபார நோக்கு

பத்திரிக்கை தொழிலை சுதந்திரத்துக்கு முன் ,சுதந்திரத்துக்கு பின் ,என்று இரண்டு வகையாக பிரிக்கலாம்.சுதந்திரத்துக்கு முன் அது ஒரு தற்கொலை முயற்சி.சுதந்திரத்துக்கு பின் அது அட்சய பாத்திரமாகவே மாறிப்போனது. தொழிலுக்கு தொழிலுமாச்சு ,செல்வாக்குக்கு செல்வாக்குமாச்சு. பவர் ப்ரோக்கரிங் , கவிழ்ப்பு அரசியல் சதிகளில் பங்கு வகித்தல் அதில் வெற்றி பெற்றால், அரசு வகை,அரசியல் வகை லாபங்களையும் அடைதல் , குடும்ப சொத்துக்கு பாதுகாப்பு இப்படி ஒன்றல்ல இரண்டல்ல அனேக வகைகளில் பத்திரிக்கை தொழில் உதவுவதால் போட்டு தாளிக்கிறாங்கணா !

உள்ளடக்கத்துல ஓரளவு மரியாதை பார்க்கும் கல்கி மாதிரி பத்திரிக்கைகள் கூட குஜராத் அளவில் காய் நகர்த்தி அரசு விளம்பரங்களை கொத்தாக பறிக்கின்றன என்றால் அதற்கு தாம் பெயரளவுக்காகவாவது எதிர்த்து வந்த மதவாத அரசியலுக்கான மறு உருவமான குஜராத் அரசை தூக்கிப்பிடித்து ஒரு சப்ளிமெண்டையே வெளியிடுகிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

விளம்பரங்களை சேகரிப்பதும், வெளியிடுவதும் ஒரு பத்திரிக்கையின் பொருளாதார தன்னிறைவுக்கு அவசியமானதாக இருக்கலாம். ஆனால் அந்த முயற்சி பத்திரிக்கையின் மோரலுக்கு விரோதமாக மாறிவிட்டது தான் சோகம். ஒரு பத்திரிக்கையின் உள்ளடக்கம் வேறு , விளம்பரப்பக்கங்கள் வேறு என்பது சட்டப்படி சரியாக கூட இருக்கலாம்.

ஆனால் அதே சட்டம் சந்தேகாஸ்பதமான வைத்திய முறைகளை பற்றிய விளம்பரங்களையும், தீர்க்க முடியாத வியாதிகளை குணப்படுத்துவதான விளம்பரங்களையும் வெளியிடக்கூடாது . என்று கூறுகிறது . மருத்துவ கழகத்தின் நாம்ஸ் படி ஒரு உண்மையான டாக்டரே விளம்பரம் வெளியிடக்கூடாது என்பது வெகு சிலருக்கே தெரியும். ஆனால் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் விளம்பரங்களை வெளியிடாத பிரபல பத்திரிக்கைகள் எத்தனை ?

சட்டமன்றம், மந்திரிசபை ,நீதிமன்றம் ஆகிய அரசின் முக்கிய அங்கங்கள் மீது ஒரு கண் வைத்து ஆராய்ந்து அரசு இயந்திரம் சரிவர செயல்படுகிறதா என்று ஆராய்ந்து செய்திகள் வெளியிட வேண்டிய பத்திரிக்கைகள் எந்த அழகில் செயல்படுகின்றன என்பதை நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை.

ஒரு வார இதழ் சில ஆண்டுகளுக்கு முன் கோழிக்கறி சாப்பிடுவதால் வரும் பிரச்சினைகளை பற்றி ஒரு தொடரே வெளியிட்டது. தொடர் வெளியாகும்போதேவா இல்லே முடிஞ்ச கையோடவா நினைவில்லே அதே பத்திரிக்கைல கோழிக்கறி சாப்பிடலைன்னா ஜன்ம சாபல்யமே கிடையாதுங்கற ரேஞ்சுக்கு தொடர் விளம்பரங்கள் வெளியானது. இது விளம்பர வேட்டைக்காகவே எழுதப்பட்ட தொடர்னு நான் சொல்றேன் மறுக்க முடியுமா ?

ஒரு காலத்துல அதிக வட்டி தரோம்னுட்டு தனியார் ஃபைனான்ஸ் கம்பெனிகள் ஏழை,பாழை,நடுத்தர வகுப்பு மக்களோட பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடிச்சுக்கிட்டு ஓடிப்போன கதை. அந்த கம்பெனிகளோட விளம்பரங்களை வெளியிட்டு லட்சக்கணக்கா கல்லாவை நிரப்பின அதே பத்திரிக்கைகள் ஃபைனான்ஸ் கம்பெனிக்காரன் ஓடிப்போவதையும் , கம்பெனி மூடிப்போவதையும் வைத்து நூற்றுக்கணக்காண ஜோக்குகளை போட்டு தம் பக்கங்களையும் நிரப்பியதை மறக்க முடியுமா ?

எங்கள் சித்தூர் தமிழக எல்லையில் ரெண்டுங்கெட்டானாக இருப்பதால் தினத்தந்தி,தினகரன் மாதிரி பத்திரிக்கைகள் அழுத பிள்ளைக்கு வாழைப்பழம் கொடுத்த கதையாக தம்து வேலூர் பதிப்பில் நேற்று,முந்தா நேற்று செய்திகளை டப் செய்து வெளியிட்டு அவற்றை காட்டி தமது நிருபர்களுக்கு ஓசி பாஸ்கள் ,தமக்கு லட்சக்கணக்கில் திருமலை,காணிப்பாக்கம் விளம்பரங்களை பெற்று வருகின்றன.

ரெஜிஸ்ட்ரார் ஆஃப் ந்யூஸ் பேப்பர் வழங்கிய ஆர்.என்.ஐ நெம்பர் இருந்தால் போதும். தபால் துறை வழங்கும் சலுகை (ஆர்.என்.ஐ எண் இல்லாத பத்திரிக்கைகளை தபாலில் அனுப்ப ரூ.4 க்கான தபால் தலை ஒட்ட வேண்டும் ஆர்.என்.ஐ எண் இருந்தால் நாலணா) , சலுகை விலையில் ந்யூஸ் ப்ரிண்ட் ,நிருபர்களுக்கு இலவச பஸ்பாஸ் . இப்படி ஆயிரம் சலுகைகள்.

சலுகைகளின் நோக்கம்:
இந்த சலுகைகளின் நோக்கம் பத்திரிக்கைகளை ஊக்குவிப்பதே. ஏன் ஊக்குவிக்க வேண்டும் ? அவை பொருளாதார ரீதியிலான சிக்கல்களை புறந்தள்ளிமக்கள் கருத்தை உள்ளபடி பிரதிபலிக்க வேண்டும் என்பதே ! ஜன நாயகத்தின் நான்காவது தூண் வலுவாக இருக்க வேண்டும் என்பதே !

பத்திரிக்கைகளின் கடமை:
பத்திரிக்கைகளின் கடமை மக்கள் கருத்தை வெளிப்படுத்துவதே ! ஆனால் எந்த பத்திரிக்கையும் மக்கள் கருத்தை வெளிப்படுத்துவதில்லை. தன் கருத்தை , தப்பு தப்பு தன் முதலாளியின் கருத்தை வெளியிட்டு , அவரது உள்ளக்கிடக்கையை நிறைவேற்ற தன் கருத்தை மக்கள் மீது திணிக்க பார்க்கிறது.

ஆந்திரத்தில் அரசியல்விளையாட்டு:
ஆந்திரத்தில் ராமோஜிராவின் ஈ நாடு பத்திரிக்கையும், ராதாகிருஷ்ணாவின் ஆந்திர ஜோதி பத்திரிக்கையும் ஆளும் காங். கட்சி மீது கருக்கட்டி கொண்டு குறைந்த பட்ச பத்திரிக்கை தர்மங்களையும் குழி தோண்டி புதைத்து கெட்ட ஆட்டம் போட்டன. அதன் விளைவு என்னவாச்சு ? முதல்வரின் மகன் இரண்டு ரூபாய் விலையில் சாட்சி என்ற தினசரியை கொண்டு வந்தார். இப்போது அவர் ஒரு எம்.பி.யுமாகியுள்ளார். ராமோஜிராவின் மார்கதர்ஸி ஃஃபைனான்ஸ் மக்களிடம்முறைகேடாக டிப்பாசிட் வசூல் செய்தும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களின் கருப்பை வெளுப்பாக்குவதில் ஈடுபட்டும் கோர்ட்டில் குடித்தனம் வைத்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் என்னவாம்:
ஒரு சில குடும்பங்கள் ஜாதிக்கொன்றாய் (தப்பா நினைச்சுராதிங்கணா நான் பத்திரிக்கைல இருக்கிற ஜாதிகளை சொல்றேன் தினசரி, வாராந்தரி இப்படி) பத்திரிக்கைகளை வைத்துக்கொண்டு மத்திய அரசு தரும் சலுகைகளை அனுபவித்தபடி, சந்தனக்கட்டை ஓட்டினால் கூட கிடைக்காத அத்தனை லாபமீட்டி வருகின்றன. ஜர்னலிசம் என்றால் கிலோ என்னவிலை என்று கேட்கும் நபர்களுக்கு அரசு தரும் இலவச பஸ் பாஸ்களையும் ஒரு சில ஆயிரம் ரூபாய்களை கூலியாக கொடுத்து கொள்ளையடித்து வருகின்றன. பத்திரிக்கைகள் அடிக்கும் கொள்ளையை பார்த்து சில நிருபர்கள் சொந்த சுய லாபங்களுக்காக சொந்த பத்திரிக்கை ஆரம்பித்து சிலர் ஸ்திரப்பட்டு போவதும்,பலர் கையை சுட்டு கொளவதும் நடந்து வருகிறது.

போலி நிருபர்கள் :
போலி நிருபர்கள் பற்றி இப்போதெல்லாம் அடிக்கடி செய்திகள் வருவதை பார்க்கிறோம்.போலிகளை தவிர்க்க நிருபர்கள் வாகனங்களில் ஒட்டிக்கொள்ளும் ப்ரஸ் ஸ்டிக்கர்களையும் அரசாங்கமே அச்சடித்து தரும் நிலை ஏற்பட்டுள்ளது.போலி நிருபர்கள்பிரச்சினையை கிளப்புவதே அசல் நிருபர்கள்தானோ என்பது என் சந்தேகம். போலி நிருபர்கள் மீது சாட்டப்படும் அனைத்து குற்றங்களிலும்(ப்ளாக் மெயில் பணம் பறிப்பு) பத்திரிக்கை நிர்வாகங்களே ஈடுபட்டு வருகின்றன. அதை அசல் நிருபர்கள் சிறிய அளவில் செய்து வருகின்றனர். போலி நிருபர்கள் பற்றிய கூச்சலுக்கு காரணமே கொள்ளையில் பங்கு குறைவது தான்.

பத்திரிக்கை விலை அதிகரிப்பும் பக்க அதிகரிப்பும் ஏன் ?

இயற்கை விதி ஒன்றுண்டு .எது அளவுக்கு மீறி கொழுக்கிறதோ அது இரண்டாக பிளந்துவிடும். ஒரு செல் அங்க ஜீவியான அமீபா முதல் அச்சு ஊடகம் வரை ஒரே விதிதான்.

பத்திரிக்கை துறையில் பணம் கொழிப்பதை பார்த்து வட்டமிட்ட கழுகுகள் அறிவியல் முன்னேற்றத்தின் பலனாய் வந்த விஷுவல் மீடியாவையும் விட்டு வைக்கவில்லை. விஷுவல் மீடியா ஒரு புறம் , புற்றீசலாய் கிளம்பிவரும் இணைய தளங்களொருபுறம் பத்திரிக்கைகளின் ஏகாதிபத்யத்துக்கு ஆப்பு வைத்துவிட்டன. இதையடுத்து உள்ள வாசகர்களை தக்க வைத்துக்கொள்ள வண்ணப்பக்கங்கள், மழமழ காகிதங்கள் என்று புலி வேஷம் போட்டு காட்ட வேண்டியுள்ளது. கடந்த 10 வருடங்களில் ஒரு புதிய தலைமுறை ஏற்பட்டுள்ளது .அவர்களை ஈர்க்கத்தான் பத்திரிக்கைகள் படாத பாடு பட்டுவருகின்றன. அவர்களை கவரத்தான் மஞ்சள் பத்திரிக்கை ரேஞ்ச்சுக்கு செக்ஸ் வெளியிடுகின்றன. சோகம் என்னவென்றால் அவர்களின் நோக்கம் நிறைவேறாததுடன் கடந்த தலைமுறை வாசகர்களையும் வேகமாக இழந்து வ்அருகிறார்கள்.

நியூஸ் ப்ரிண்ட் மோசடி :
பத்திரிக்கை முதலாளிகள் எல்லாம் கஞ்சிக்கு இல்லாதவர்கள் .அவர்களால் வெளிமார்க்கெட்டில் காசு கொடுத்து பேப்பர் வாங்கமுடியாது என்று மத்திய அரசு அவர்களுக்கு சலுகை விலையில் ந்யூஸ் ப்ரிண்ட் பேப்பர் தருகிறது. இந்த ந்யூஸ் ப்ரிண்ட் பேப்பர் என்பது சற்று பழுப்பு நிறத்துடன் இருக்கும் . இந்த பேப்பரில் அச்சிட்ட பேப்பர்களை இப்போது மார்க்கெட்டில் பார்க்கவே முடியாது. காரணம் விஷுவல் மீடியாவுடன் போட்டியிட பத்திரிக்கைகள் மழ மழ பேப்பர்களில் பத்திரிக்கை அச்சிட துவங்கி பல காலமாகிறது. அதற்காக அரசு ஒதுக்கித்தரும் ந்யூஸ் ப்ரிண்ட் கோட்டாவை வேண்டாம் என்று கூறிவிட்டனவா ? என்றால் இல்லை. அதை வாங்கி வெளி மார்க்கெட்டில் விற்றுவிட்டு அதிகப்படியான பணத்தை போட்டு நல்ல பேப்பர் வாங்கி அச்சிட்டுவருகின்றன.

ரேஷன் அரிசியை விற்றால் குற்றம்:
அரசு சலுகை விலையில் தரும் அரிசியை விற்றால் அது கிரிமினல் குற்றம். கார்டு தாரரே விற்றாலும் அது குற்றம் தான். சட்டம் இப்படியிருக்க ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் விலையுள்ள ந்யூஸ் ப்ரிண்டை விற்பது எத்தனை பெரிய குற்றமோ ..

முன் குறிப்பு:
பத்திரிக்கை எஜமானர்களுக்கும் ,எடிட்டர்களுக்கும் ராம்ஜெத்மாலானி கணக்காய் கீழ் காணும் 10 வினாக்கணைகளை தொடுக்கிறேன். பதில் தரட்டும் நேர்மை துணிவிருந்தால்.

ஒரே நிறுவனத்தின் விளம்பரம் ஒரு பக்கத்திலும்,அது குறித்த செய்தி ஒரு பக்கத்திலும் வெளிவருவது ஏன்? நீங்கள் செய்தி போடுவதால் விளம்பரம் தருகிறார்களா? அல்லது அவர்கள் விளம்பரம் தருவதால் நீங்கள் செய்தி வெளியிடுகிறீர்களா?


2.விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஒரு அறிவிப்பை சமீப காலமாய் வெளியிட துவங்கியுள்ளீர்கள். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் வெளியிட்ட விளம்பரங்களுக்கெல்லா ம் நீங்கள் தான் பொறுப்பா?


3.மத்திய அரசு பதிவு பெற்ற பத்திரிக்கைகளுக்கு நியூஸ் ப்ரின்ட் காகிதத்தை கண்ட்ரோல் ரேட்டில் தருகிறது. ஆனால் எந்த பத்திரிக்கையும் நியூஸ் ப்ரின்ட் காகிதத்தில் வெளி வருவதில்லை. கண்ட்ரோல் ரேட்டில் அரசு தந்த காகிதங்கள் என்னவாகின்றன?


4.ஒரே குழுமத்திலிருந்து பல பத்திரிக்கைகள் வெளிவருகின்றன . பெரும்பாலும் ஆசிரியர் தவிர ஆசிரியர் குழு உறுப்பினர்கள் எல்லாம் அதே ஆசாமிகள் தான். இவர்களுக்கு எத்தனை பத்திரிக்கைக்கு வேலை செய்தால் அத்தனை சம்பளமா? அல்லது ஒரே சம்பளத்துக்கு இத்தனை இதழ்களுக்கும் பணி புரிகிறார்களா?


5.எஸ்.எம்.எஸ் மூலம் ஜோக்,வாசகர் கடிதம் இத்யாதி அனுப்பச் சொல்வதும் நடந்து வருகிறது. வாசகருக்கு செலவாகும் தொகையில் பத்திரிக்கைக்கு கிடைக்கும் பங்கு விவரம் என்ன?



6.எழுத்தாளர்கள் தங்களுக்கு அனுப்பும் படைப்புகள் முதலில் சுவற்றிலடித்த பந்தாக இருந்தன. பின் கிணற்றில் போட்ட கல்லாயின. தற்போது பிரதி வைத்துக்கொண்டு அனுப்புங்கள். திருப்பி அனுப்ப முடியாது என்று அறிவிக்கிறீர்கள். இந்த அறிவிப்பை தாங்கள் வெளியிடுவதற்கு முன் அனுப்பப்பட்ட படைப்புகளையாவது திருப்பி அனுப்பலாம் அல்லவா?



7.எழுத்தாளர் ராஜேஷ் குமார் எல்லா பத்திரிக்கைகளாலும் நிராகரிக்கப்பட்ட தன் குறுநாவல் மற்றொரு பத்திரிக்கையின் போட்டியில் பரிசு பெற்ற வரலாற்றை தம் சுய சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்வு பெறாத படைப்புகளை திருப்பி அனுப்பினால் அவை வேறு ஏதேனும் போட்டியில் பரிசு பெற்றுவிட்டால் என்ன செய்வது என்ற தங்கள் நல்லெண்ணமே மேற்படி அறிவிப்புக்கு காரணமா?


8.ஒரு பத்திரிக்கையில் கோழிக்கறியின் தீமைகள் குறித்து கட்டுரை தொடர் வெளிவந்தது. பிறகு கோழிக்கறி சாப்டு மஜா பண்ணுங்கங்கற விளம்பரங்கள் தான் தொடர்ந்து வந்ததே தவிர கட்டுரை என்ன கேடு ஒரு துணுக்கு கூட மேற்படி விஷயத்தில் வெளிவரவில்லையே? அது என்ன சமாசாரம்?


9.பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகளில் வாய்தா போன பிராமண‌ பிரபலங்களை கூட இந்த தூக்கு தூக்கறிங்களே..பிராமணர்களுக்கு மட்டும் வித்து பத்திரிக்கை நடத்தறிங்களா? இல்லயே! சூத்திர‌னோட காசு வாங்கிகிட்டு பிராமண புகழ் பாடறிங்களே இது நியாயமா?


10.உங்கள் வலை தளத்தில் contacட்: என்பதை மட்டும் ஒளித்து வைத்துள்ளீர்களே அது ஏன்? தப்பித்தவறி மெயில் அனுப்புபவர்களுக்கு உங்கள் விளம்பரத்தை தான் அனுப்புகிறீர்களே தவிர பதில் தருவதில்லையே இதுதான் பத்திரிக்கை தர்மமா?

தலைமை செயலகத்தில் பார்ப்பனகூட்டம்

ஏ தாழ்ந்த தமிழகமே !
ஈ.வே.ரா ஈந்த திராவிட பராம்பரியத்தால், பகிர்ந்திட்ட பகுத்தறிவால்
பக்குவப்பட்டு பார்மிசை
தலை நிமிர்ந்து நின்ற நீ இன்று
அந்தணர் தம் சதியாம்
சாதிகளின் சறுக்குப்பலகையில் சறுக்கி
துவேஷ பள்ளத்தாக்கில் புதைந்து விட்டாய்.

ஆஷாட பூதிகள் வகுத்த மனு தர்மம் காத்து
இன மானத்துக்காய் செயல் பட வேண்டிய
மனோ தர்மத்தை பலியாக்க விட்டு விட்டாய்.

பகுத்தறிவு பகலவனே உதித்தும்
வெளுக்காத கிழக்கு நீ ! விடியாத வானம் நீ !
பெரியார் வார்த்தை பிரம்புகளாலும் படியாத மாடு நீ
அடி மாடாய் போனதில் வியப்பென்ன?

பாரதத்தில் முதல் முறையாய்
பார்ப்பனீயத்தை எதிர்த்து வெடித்து கிளம்பிய
இயக்கத்தின் வரலாறு இப்படியா முடிய வேண்டும்

இறைவனுக்கே வேண்டாம் சிலை
என்ற அய்யாவின் கொள்கைக்கே
உலை வைத்து பேட்டை பேட்டைக்கு வைத்தீர்கள் சிலை

பார்ப்பனர்கள் தம் முதுகு அழுக்கை
திரட்ட பயன்படுத்திய பூணூல்
திராவிட இனத்துக்கே தூக்குக்கயிறாக மாறிட
விட்டாரா ஈ.வே.ரா ?

அவர் கண்ட இயக்கம் அவர் கண் முன்னே பிளந்து
கண்ணீர் துளிகளே சூடாறி
சுரத்திழந்தன.

புதிய புதிய விளக்கங்கள் கூறி
அந்த கோமகனின் கொள்கையை கூறிட்டன.
பதவி என்ற ஆட்கொல்லிக்கு பலியாகின.
தமிழர் சமுதாயத்து தன் மானத்துக்கே நலியாகின
அண்ணாவை கொன்றது புற்று நோய் தான்
ஆனால் தம்பிமார்களில் அவர் வளர்த்த
கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை கொன்றது
மட்டும் பதவி என்ற ஆட்கொல்லிதான்


அண்ணா சொன்னார் நான் பார்ப்பணீயத்தை எதிர்க்கிறேன்
பார்ப்பனரை அல்ல !
போலீசார் ஏன் இரவு ராணிகளை கைது செய்கிறார்கள் ?
அவர்களிலான விபச்சார எண்ணத்தை மட்டும் கைது செய்தால் போதுமே ?
அவ்வெண்ணத்தை தோற்றுவிக்கும் வறுமையை மட்டும்
தண்டித்தால் போதுமே !

பார்ப்பான் என்ன பாம்பா ? பார்ப்பணீயமெனும் விஷத்தை மட்டும்
எடுத்து விட்டு குழந்தைகளிடம் விளையாட கொடுக்க
பாம்புக்கு பல்லில் பார்ப்பானுக்கு செல்லில் விஷம்.

விபச்சாரிகளிடமாவது கொடுக்க ஏதேனும் இருக்கிறது - இந்த
வீணர்களிடம் என்ன உண்டு.

தம்பிமாரின் பதவிச்சண்டை ஒவ்வொரு தமிழனின்
தன்மானத்தையும் தில்லி பாதுஷாக்களின்
பாதுகைகளாக்கியதே !

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே
என்று ஒரிசாவிலிருந்து ஒருவன் வந்து கூற வேண்டியதாயிற்றே !
உண்மையிலேயே உடன் பிறப்புக்களின் வாழ்வுதான் அவர்களின் நோக்கம்
என்றால் கோர்த்திருக்கலாமே கை
கோர்த்திருந்தால் இப்படி ஆகியிராதே ஈழ தமிழர் வாழ்க்கை

அரசன் மனைவி தன் கருவில் வைத்திருந்ததால்
இளவரசிகளாய் கவுரவிக்கப்பட்டோர் உண்டு
ஆண் வாரிசுகள் இல்லாத பட்சத்தில் அவர்களே
அரசிகள் ஆனதும் உண்டு
அரசன் (தன்னுடன்) வைத்திருந்ததாலேயே அரசி ஆன சரித்திரம்
ஏ தமிழினமே ! உனக்குத்தான் உண்டு

கழகத்தை குடும்பமாக்கினார் அண்ணா
குடும்பத்தையே கழகமாக்கினார் தம்பி

கிளைக்கழகங்களை விடுவோம்
மூலக்கழகம் என்னாயிற்று
வீரமானவர் மணியாய் பேசி தமிழர் நெஞ்சங்களில் வீரத்தை ஊட்டியிருக்க வேண்டும். அந்த நாள் முதல் ஆட்சி செய்யும் கிரகங்களின்
துணைக்கோளாகவே வாழ்ந்து விட்டவர் சுக வாழ்வை இழக்க முடியுமோ ?

உலகின் ஏதோ மூலையில் ஒரு தெலுங்கன் செத்தால்
தெலுங்கு தினசரிகளில் அதுதான் தலைப்பு செய்தி
உங்களுக்கோ விஜயசாந்தி ஏழுமலையானை கும்பிட்டதுதான் த.செய்தி
ஏ தமிழினமே நீ கோழைத்தனத்தின் கைதி

ஈ.வே.ராமசாமி நாயக்கர்
காலணாவுக்கு இனிஷியலும், ஓரணாவுக்கு முழு கையெழுத்தும் போட்டு
கட்சிக்கு நிதி வசூலித்த முனிவர்
அவரது தன்னலம் கருதா சிக்கனம் தெரிந்தால்
ராம பக்தர்களும் அவரை பூசிக்க முனைவர் இக்கணம்.

இன்று அவர் இருந்திருந்தால் புலிகளை தனிமைப்படுத்த
தில்லியில் கில்லி விளையாடிய பஞ்சக்கச்சங்களை அவிழ்த்தெரிந்து
அவர்தம் பூணூல்களை அறுத்தெறிய அழைப்பு விட்டிருப்பார்.

அவர் பேர் சொல்லி பேர் வாங்கும் பேருக்கு தலைவர்கள்
ஊருக்கு தலைவர்கள் அல்லர்.
முருகனுக்கு காவடி எடுக்கும் சாமானிய பக்தனையாவது
புரிந்து கொள்ளலாம்
தில்லிக்கு காவடி எடுக்கும் இந்த அசாதாரண பக்தர்களை
எப்படி புரிந்து கொள்ள !

தலைமை செயலகத்தில் பார்ப்பனகூட்டம்
மீடியாவில் பார்ப்பனகூட்டம்
நீதித்துறையில் பார்ப்பன கூட்டம்
இதில் பார்ப்பனருக்கு இட ஒதுக்கீடு கேட்டு
மனு கொடுக்கிறார் ஒரு பார்ப்பனர்
அதையும் வாங்கி வைத்துக்கொள்கிறார் ஒரு பெரியார் சீடர்

ஏ தாழ்ந்த த்மிழகமே !
நீ மறந்த இனமானத்தை நினைவுறுத்த
உன்னை சீரழித்த திரைத்துறை தான் முன் வர வேண்டியுள்ளது.
என்ன ஒரு வித்யாசம் என்றால் இவர்கள் வந்தேறிகள் அல்லர்.
மண்ணின் மைந்தர்கள்
குவிலயமாளும் கோமான்களே !
உங்கள் அழுக்குகளை
வெளுக்க வந்திருக்கும் இவர்கள் சீமான்கள்
வேறு வார்த்தையில் கூற வேண்டுமெனில் ஈமான்கள்

Friday, July 24, 2009

ஜூ.வி ஆசிரியர் அனுப்பிய நிருபர்

விகடன் குழுமத்தின் விபரீத போக்கு
பீடிக்கட்டுகள்,சிகரட் பாக்கட்டுகள் மீது வெளியிடுவது போல தமிழ் பத்திரிக்கைகள் மீதும் எச்சரிக்கை வாசகம் வெளியிட வேண்டிய அவசியம் விகடன் குழும பத்திரிக்கைகளால் ஏற்பட்டுள்ளது.

(மற்ற பத்திரிக்கைகள் எல்லாம் ஓக்கியம் ஒரு குளத்து நண்டு என்று கூறவில்லை. அவற்றையும் உப்பு மிளகாயை போட்டு கிண்டுவது விரைவில் நடை பெறும் . )

எந்த கதாநாயகன் எங்கே எந்த கதாநாயகியை எப்படி கவிழ்த்தான் என்ற அரிய செய்திகளை தரவே ஒரு தொடர் வருகிறது. (நல்ல காலம் எந்த ப்ராண்டு காண்டோம் உபயோகித்தான் போன்ற விவரங்களை தருவதில்லை. இன்னும் கொஞ்ச காலம் போனால் அவற்றையும் தமிழ் கூறு நல்லுலகம் தெரிந்து கொள்ளலாம்)

தற்போது 42 வயது காரனாகிய நான் என் இளமையில் இது போன்ற பலான விஷயங்களை படிக்க சித்தூர் பஸ் ஸ்டாண்டின் இருட்டு மூலைகளிலான பங்க் கடைகளில் தேடுதல் வேட்டை நடத்த வேண்டியிருந்தது. ஆனால் இப்போது விகடன் குழுமம் இன்றைய தலைமுறைக்கு அந்த சிரமத்தை எல்லாம் கொடுப்பதில்லை. அந்த தொடரில் வெளி வரும் அஜால் குஜால் வார்த்தைகளை எந்த பலான புத்தகத்திலும் நான் படித்ததில்லை. ரிப்போர்ட்டர்/உங்கள் ஹீரோ இப்படி தோடர் தலைப்பு வேறாக இருந்தாலும் உள்ளடக்கம் மட்டும் ஒன்றுதான்.

இந்த அழகில் ஜூலை 22 தேதியிட்ட ஜூனியர் விகடனில் ட்ராஃபிக் போலீஸின் வெப்சைட்டில் வயாக்ரா விளம்பரம் வெளிவந்துவிட்டதாக கவலைப்பட்டிருக்கிறார்கள் .அதே இதழில் வேறு சில பக்கங்களில் இழந்த சக்தி வைத்தியர்களின் விளம்பரத்தை வெளியிட்டிருப்பதை எந்த வகையில் சேர்க்க ?

கழுகார் பக்கத்தில் பாருங்கள் ! முதல் செய்தியே வீரப்ப மொய்லியின் ராமாயண வெளியீட்டு விழாவில் கலைஞர் கலந்து கொள்வதைப்பற்றித்தான். இதை ஜாதி புத்தி என்றால் தப்பா ! ஏற்கெனவே வயதாகிப்போய், ஈழத்தமிழ் விவகாரம் முதல்,குடும்பத்துக்கு மந்திரி பதவி கேட்டு தில்லிக்கு காவடி எடுத்தது வரை பேர் ரிப்பேராகி திராவிட இனத்துக்கே தூரமாகிப்போன கலைஞரை இப்படியெல்லாம் மொக்கை செய்தால் திராவிட இனம் முழுசாக அவரை தூக்கி எறிந்து விடாதா என்ற நப்பாசையா புரியவில்லை.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல ஓராண்டு இதழ்களை என் முன் வைத்தால் ஆயிரம் விஷயங்களை முன் வைக்க நான் தயார். பதில் தர விகடன் குழுமம் தயாரா ?


திரு பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த போது:

எனது வலைப்பூவை படிப்பவர்களுக்கு இந்தியாவின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாக நான் தீட்டியுள்ள ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி தெரிந்திருக்கலாம். தெரியாதவர்கள் கூகுள் சர்ச்சிலோ அல்லது என் வலைதளத்திலோ தேடி ஒரு பாட்டம் படித்து விடுங்கள்.

இந்த திட்டத்தின் முழுவடிவத்தை ஒரு ஆடியோ கேசட்டில் பதிவு செய்து 1999 வாக்கில் ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். அதிலென்ன காந்தியாரின் கல்லூரி காதல்களையா பேசியிருந்தேன் உடனே பக்கம் 18/ உங்கள் ஹீரோ,ரிப்போர்ட்டர் மாதிரி பகுதிகளில் உடனே வெளியிட்டு விட . ஏதோ 10 கோடி வாலிபர்களாம்/சிறப்பு ராணுவமாம்/கங்கை காவிரி இணைப்பாம்.. யாருக்கு தேவை. எனவே கிடப்பில் போட்டு விட்டார்கள்.

நிருபர் வந்தார்:
நான் அந்த கேசட்டிருந்தால் வேறு யாருக்காவது அனுப்பலாமேஎன்ற உத்தேசத்தில் கேசட்டை திருப்பியாவது அனுப்பும்படி தபால் செலவுக்கு ரூ.10 எம்.ஓ அனுப்பினேன். ஆனாலும் விகடன் தரப்பிலிருந்து பதிலில்லாது போகவே காட்டமாக ஒரு போஸ்டு கார்டு எழுதினேன் . அது ஆசிரியராக இருந்த திரு பாலசுப்பிரமணியன் கண்களில் பட்டிருக்கிறது. உடனே அவர் ஜே.வி.நாதன் என்ற நிருபரை என்னிடம் அனுப்பினார். வந்த ஜே.வி.நாதன் கேசட்டு ஓஞ்சு போனதை பற்றியும் அதை எப்படி காம்பன்சேட் பண்ணுவது என்பதை பற்றித்தான் பேசினார். அதில் என்ன பதிவாகியிருந்தது. அதற்கும் இந்த நாட்டிற்கும் என்ன சம்பந்தம் இதெல்லாம் டாபிக்ல வரவே இல்லை. அப்புறம் பந்தாவாய் பேட்டியெல்லாம் எடுத்தார் .

அப்புறம் என்னாச்சு ? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !

படைப்புகள்மீது முடிவு தெரிவிக்கமாட்டார்கள். ஆனால் முடிவு தெரிவிக்க கோரி கொடுத்த விலாசம், மெயில் விலாசத்துக்கு தமது விளம்பரங்களை தொடர்ந்து அனுப்பி வெறுப்பேற்றுவார்கள். இதுவும் ஒரு பிழைப்பா என்று ஒரு பதிவு போட்ட பிறகுதான் விளம்பர தலைவலி ஒழிந்தது.

திருப்பதி தேவஸ்தான நிர்வாகம்+போர்டு சேர்மன் மீது சரமாரி குற்றச்சாட்டுக்கள்





முன்னுரை:
தமிழக பக்தர்கள் மேல் திருப்பதி என்று குறிப்பிடும் திருமலையில் கொலுவிருக்கும் ஏழுமலையானுக்கு அறிமுகம் தேவையில்லை. திருமலை என்றதும் மொட்டையும் ,லட்டும் உடனே நினைவுக்கு வரும். இப்போதெல்லாம் திருமலை என்றால் அங்கு கோலோச்சும் நிர்வாக சீர்கேடுகள், ஊழல், போலி லட்டுகள், ஏழை-பணக்கார பக்தர்களிடையே வெளிப்படையாக காட்டப்படும் பாரபட்சம் ,தேவஸ்தானத்துக்கென்று துவங்கப்பட்ட எஸ்.வி.பக்தி சேனலில் வீணாகும் ஏழுமலையான் உண்டியல் பணம் எல்லாம் நினைவுக்கு வந்து இம்சை செய்கின்றன. கடந்த ஜூலை 21 ஆம் தேதி தி.தி.தே. நிர்வாக அலுவலர் எஸ்.வி.பக்தி சேனல் தயாரிக்கவிருந்த காசுக்காகாத நிகழ்ச்சிகள் 12 க்கு தடா விதித்தார். உப்பு ஊறுகாய்க்கு உதவாத கேள்வி பதில் நிகழ்ச்சி ,அதில் கலந்து கொள்ளும் வாய்தா போன சினிமா பிரமுகருக்கு ஒரு நிகழ்ச்சிக்கு ரூ.40 ஆயிரம் வீதம் செலவழித்திருக்கிறார்கள் என்றால் பாருங்கள்.


இப்படியாக அள்ளிவிட்ட பணமெல்லாம் தேவஸ்தானத்துக்கு எப்படி வந்தது . இதெல்லாம் யாருடைய பணம் ? மக்கள் அரசுக்கு இழவே என்று அழுத வரிப்பணமல்ல. ஏழுமலையானுக்கு பக்தர்கள் மனமுவந்து அளித்த காணிக்கைகள்.

ஒரு மானிலத்துக்கு மட்டும் தொடர்புள்ளதல்ல:
திருமலை என்பது ஏதோ ஒரு மானிலத்துக்கு மட்டும் தொடர்புள்ளதல்ல. ஏழுமலையானை சாதி,மதங்களுக்கு அதீதமாக பாரத நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ,ஏன் கோடிக்கணக்கான பக்தர்கள் நம்புகிறார்கள் , திருமலை என்பது உணர்வு ரீதியாக இந்தியர்களின் இதயங்களோடு பின்னிப்பிணைந்துள்ளது
எனவே இந்த பதிவில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் மீது சுமத்தப்படும் சரமாரி குற்றச்சாட்டுக்களை அலசுவோம்.

"திருப்பதி சென்று திரும்பி வந்தால் வாழ்வில் திருப்பம் தோன்றுமடா (டி)" என்ற திரைப்பாடல் வரிக்கிணங்க பக்தர்கள் லட்சக்கணக்கில் திருமலை வந்து குவிந்த படியே உள்ளனர். உண்டியலில் கோடிக்கணக்கில் காணிக்கைகளை குவித்துக்கொண்டே உள்ளனர். ஆனால் திருமலை நிர்வாகத்தை கையில் வைத்திருக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு (இனி தி.தி.தே என்று குறிப்பிடுவோம்) தொடர் விமர்சனங்களுக்கு இலக்காகி வருகிறது.
புராணம்:
ஸ்தல புராணம் என்ன சொல்கிறது ? ஏழுமலையானாக அவதரித்த பெருமாள் , அரசகுமாரியாக பிறந்த திருமகளை பெண் கேட்டு தன் தாய் வகுளாதேவியை அனுப்புகிறார். திருமண செலவுகளுக்கு என்ன செய்ய ? குபேரனிடம் கடன் வாங்குகிறார். அந்த கடனை தீர்க்கத்தான் நம்முடைய உதவாக்கரை வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றியபடி நாம் கொடுக்கும் நூறு இரு நூறுகளை கானிக்கையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்.கலியுக முடிவில் குபேரனிடம் வாங்கிய பணத்தை செட்டில் செய்தாக வேண்டும். ஆனால் தேவஸ்தானம் என்ன செய்கிறது? ஏழுமலையான் நாளெல்லாம் நின்று அருள்பாலித்து ஈட்டிய காணிக்கைகளையெல்லாம் வந்தது வந்தபடி வேட்டு விட்டுக்கொண்டே இருக்கிறது.
ஏதோ மானவ சேவா மாதவ சேவா என்று செலவிட்டாலும் பரவாயில்லை. யானைக்கு அல்வா வாங்கிய கதையாய் வேட்டு விட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.


சரித்திரம்:
பழந்தமிழ் நாட்டின் எல்லையைப்பற்றிய பழம்பாடல் "வடக்கே திருவேங்கடம் முதல் தெற்கே குமரி வரை என்று குறிப்பிடுகிறது. திருவேங்கடம் என்றால் திருமலை என்று பொருள். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு மொழிவாரி மானிலங்கள் அமைக்கப்பட்டபோது தெலுங்கர்கள் "மதறாஸ் மனதே (நம்முடையது)" என்று கோஷம் போட, தமிழ் நாட்டில் காலஞ்சென்ற ம.பொ.சி போன்றவர்கள் திருவேங்கடம் தமிழகத்தின் வட எல்லை எனவே அது தமிழகத்துடன் சேர்க்கப்பட வேண்டும் என்று போராடினர். ஆனால் ஏழுமலையான் சங்கல்பம் வேறாக இருக்க திருமலை ஆந்திரத்துடன் சேர்க்கப்பட்டது.

அரசியல் வரலாறு:
தமிழகத்தில் ஒரு பெரியாரின் தாக்கம் அவருக்கு பின் வந்த அனைத்து ஆட்சிகளிலும் இருந்தது. இருக்கிறது. ஜெயலலிதாவின் ஆட்சி ஒரு விதி விலக்கு. ஆனால் ஏழுமலையான் செய்த புண்ணியம் ஆந்திரத்தில் நாத்திக வாதம் வலுப்பெறவில்லை. ஜன விக்னான வேதிகா (மக்கள் அறிவியல் மேடை) , விப்லவ ரசயித்தல சங்கம்(புரட்சிகர எழுத்தாளர் சங்கம்) , போன்றவை நாத்திக வாதத்தை முன் வைத்தாலும் ஆந்திர அரசியல் ஆத்திகமாகவே தொடர்கிறது.

என்.டி.ஆர் அரசியல் வருகைக்கு முன்:
என்.டி.ஆர் அரசியல் வருகைக்கு முன் திருமலை அனேக புண்ணியக்ஷேத்திரங்களில் ஒன்றாகவே இருந்தது. ஏதோ கும்பலில் கோவிந்தா போட்ட கதையாகத்தான் திருமலையில் வளர்ச்சிப்பணிகளும் ,பக்தர்களுக்கான வசதிகளும், உள் கட்டமைப்பும் மேற்கொள்ளப்பட்டது.

என்.டி.ஆர் அரசியல் வருகைக்கு பின்(1989) :
என்.டி.ஆர் அரசியலில் குதித்து முதல்வரானார். ஏழுமலையானின் பக்தரான என்.டி.ஆர் வாடிகன் நகரம் போல் திருமலைக்கு பிரத்யேக அந்தஸ்து கொடுத்தார். அங்கு அரசியல் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டன. என்.டி.ஆரே திருமலை வந்தாலும் சாதாரண பக்தர் போல் ரூ.50 டிக்கட் வாங்கி க்யூவில் சென்று தரிசனம் செய்வது வழக்கம். அங்கே அக்காலத்தில் ஸ்திரம்,சம்பிரதாயம்,ஆகமம்,பராம்பரியம் என்ற வகையில் பிராமணர்கள் அடித்து வந்த கொள்ளைக்கு ஆப்பு வைத்தார். (ஏழுமலையானுக்கு தயாரிக்கப்படும் பிரசாதங்களில் கூட அவர்களுக்கு பங்கு இருந்ததென்னால் பார்த்துக் கொள்ளுங்கள். திருமலையிலான இதர தலங்களுக்கு இலவச பஸ் வசதி,பக்தர்களுக்கு இலவச மொட்டை,இலவச உணவு ,ஒருவருக்கு ஒரே லட்டு போன்ற சீர்திருத்தங்கள் அமலாகின. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்க ஸ்ரீனிவாசம் போன்ற கட்டிடத்தொகுப்புகள் கட்டப்பட்டன. முக்கியமாக பக்தர்கள் நீண்ட நேரம் க்யூவில் நின்று அவதிப்பட தேவையில்லாது க்யூ காம்ப்ளெக்ஸுகள் கட்டப்பட்டன. விமான நிலையத்து லவுன்ச் போன்ற வசதிகளுடன் (டீ,காபி,டிஃபன்,டி.வி,பாத்ரூம், கழிவறைகளுடன்)

காங். ஆட்சியிலும் தொடர்ந்த வளர்ச்சி திட்டங்கள்(1989-1994):
இடையில் வந்த காங்கிரஸ் ஆட்சியும் என்.டி.ஆர் துவக்கி வைத்த வளர்ச்சி பணிகளை தொய்வில்லாமல் தொடர்ந்தது. கீழ் திருப்பதியில் இறங்கியதுமே பஸ்,ரயில் நிலையங்களின் அருகிலேயே ஸ்ரீ வாருவை தரிசிக்க கம்ப்யூட்டரில் முன் பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

என்.டி.ஆர் முதுகில் குத்தி சந்திரபாபு முதல்வரானார் (1994):
1994 ல் என்.டி.ஆர் மீண்டும் முதல்வரானார். சந்திரபாபு கட்சியை பிளந்து என்.டி.ஆர் முதுகில் குத்தி முதல்வரானார். என்.டி.ஆருக்கும் சந்திரபாபு அடிப்படையில் இருந்த வித்யாசம் என்னவென்றால் என்.டி.ஆர் லட்சியத்திலான வெற்றியை இரண்டாம் பட்சமாககருதியவர் . அதை அடைவதற்காக தமது சுயமதிப்பையோ , தான் நம்பிய கொள்கையையோ எள்ளளவும் விட்டுக்கொடுக்க மாட்டார். ஆனால் சந்திரபாபு கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல் வெற்றிக்காக எது வேண்டுமானாலும் செய்யக்கூடியவர். என்றாலும் திருமலை விஷயத்தில் இவரும் வளர்ச்சிப்பணிகளை தொடரவே செய்தார். தமது தாராளமயமாக்கல்,தனியார் மயமாக்கல், போன்ற கொள்கைகளை திருமலை விசயத்தில் அடக்கியே வாசித்தார்.


இப்போதைய லிக்கர் கிங் தி.தி.போர்டு சேர்மனான கதை:

தற்போது தி.தி.போர்டு சேர்மனாக உள்ள லிக்கர் கிங் டி.கே ஆதிகேசவுலுவின் கதை பெரிய கதை. இதில் அவர் தி.தி.போர்டு சேர்மனாக ஆன கதை தெலுங்கு டப்பிங் சினிமா கதைகளையும் தூக்கி சாப்பிட்டுவிடும்.

ஒரு காலத்தில் சித்தூர்-திருப்பதி சாலையில் உள்ள சித்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இஞ்சினீயராக வேலை பார்த்த இவர் போலி சான்றிதழ்களை கொடுத்து வேலைக்கு சேர்ந்தார் என்று குற்றச்சாட்டு எழவும் ஆதி கேசவுலு ராஜினாமா கொடுத்து விட்டு ஊரை விட்டுப்போனதோடு இவர் கதை ஆரம்பமாகிறது. 2004 முதல் தெலுங்கு தேசத்தில் சித்தூர் எம்.எல்.ஏ டிக்கட் பெற முயன்று அது முடியாது போகவே , 2009 தேர்தல்களில் பிரஜாராஜ்ஜியத்தில் சித்தூர் டிக்கட் வாங்கி போட்டியிட்ட் தோற்ற ஜங்காலபல்லி சீனிவாசுலு இந்த 5 வருடங்களில் செலவிட்ட தொகை மட்டும் ரூ.40 கோடி. (2009ல் சித்தூரில் நடந்த சட்டமன்ற தேர்தலிடம் திருமங்கலம் இடைத்தேர்தலெல்லாம் பிச்சை வாங்கனும்) அவர் ஆதிகேசவுலுவின் சீடர் என்றால் ஆதி கேசவுலுவின் ரேஞ்ச் என்ன என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். ஆந்திரம்,கர்னாடகா ,மற்றும் தமிழ் நாட்டில் கோடிக்கணக்கில் புரளும் வியாபாரங்கள் உண்டு. இஞ்சினீரிங் கல்லூரி ஒன்றும் இவருக்கு சொந்தம். சிரஞ்சீவியின் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து முடித்ததே இவர்தான் என்றால் இவரது செல்வம்,செல்வாக்குக்கு வேறென்ன ஆதாரம் தேவை. சித்தூரில் பளிங்கு மாதிரி தண்ணீரை கொண்டிருந்த நீவா நதி இன்று சாக்கடையாக கிடக்க காரணமே இவர் சித்தூர் வேலூர் சாலையில் நடத்திய மதுபானத்தொழிற்சாலையிலிருந்து மேற்படி ஆற்றில் விடப்பட்ட கழிவு நீர்தான். மேலும் சித்தூர் தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ வாக வெற்றிபெற்று ஹேட்ரிக் அடித்த சி.கே.பாபு மீது நடந்த இரண்டு கொலை முயற்சிகளில் இவரது மகன் டி சீனிவாசுலு குற்றவாளியாக உள்ளார். இப்படிப்பட்ட பின்னணி உள்ள ஆதி கேசவுலு தி.தி.போர்டு சேர்மனாக ஆனது எப்படி என்பதை இப்போது பார்ப்போம் ! (இவ்வாறான பின்னணி உடையவரின் நிர்வாகத்தில் என்னதான் நடக்காது ?)

காங்.கட்சி சார்பில் எம்.பி.யாக போட்டி:

சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் சந்திரபாபுவின் தொகுதி. அங்கு சந்திரபாபுவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி தற்போதைய தி.தி.தே போர்டு சேர்மனான டி.கே.ஆதிகேசவுலுவை எம்.பி.யாக நிறுத்தியது. பெரும் தொழிலதிபரான ஆதிகேசவுலு பணத்தை பாராளுமன்ற தொகுதியெங்கும் வாரி இறைத்தார். சந்திரபாபு குப்பத்தில் தம் வெற்றிக்காக ரொம்பவே மெனக்கெட வேண்டி வந்து விட்டது. சூடுகண்ட பூனையான சந்திரபாபு ஆதிகேசவுலுவை தம் கட்சிக்கு இழுத்தார். இழுத்ததோடு தி.தி.தே போர்டு சேர்மனாகவும் ஆக்கினார். 2003 ல் திருமலை காட் ரோடில் சந்திரபாபு கண்ணிவெடி தாக்குதலில் சிக்கியதை அடுத்து அனுதாப ஓட்டுக்களை அள்ள முன் கூட்டியே சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கு சென்றார் சந்திரபாபு.அவரது தெலுங்கு தேசம் கட்சி சக்கையாய் தோற்றது .காங். ஆட்சியை பிடிக்க டாக்டர்.ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி முதல்வரானார். தி.தி.தே.போர்டு சேர்மனாக தமது பிரிய சீடர் பூமண கருணாகர ரெட்டியை நியமித்தார். அவரும் ஏழுமலையானை சேரி மக்களுக்கு நெருக்கமாக்க தலித கோவிந்தம், இலவச திருமணங்கள் (கல்யாணமஸ்து ) என்று தீவிரமாகவே செயல்பட்டார்.

ஆதி கேசவுலு தெலுங்கு தேசம் எம்.பி.யானார்:
1999ல் சித்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி யாக போட்டியிட்டு குப்பத்தில் சந்திரபாபுவுக்கு தூக்கமில்லாமல் செய்த ஆதிகேசவுலு 2004 ல் தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிட்டு சித்தூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குப்பம் சட்டமன்ற தேர்தல்களில் சந்திரபாபுவை விட அதிகம் வாக்குகள் பெற்று சாதனை படைத்தார். இதையடுத்து சந்திரபாபு மாவட்ட கட்சிக்கே ஆதிகேசவுலுவை அறிவிக்கப்படாத பொறுப்பாளராக்கினார். மத்தியில் இடது சாரிகளின் ஆதரவுடன் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி அணு ஒப்பந்த விசயத்தில் அவர்களின் ஆதரவை இழந்து நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க வேண்டி வந்தது. சந்திரபாபு காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். அந்த நிலைப்பாட்டுக்கு ஆதிகேசவுலு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்ததும், வாக்கெடுப்பின் போது காட்டிய தயக்கமும் சந்திரபாபுவை எரிச்சலூட்டியது , கட்சியின் நிலைப்பாட்டுக்கேற்பவே வாக்களித்தும் ஆதி கேசவுலுவை கட்சியை விட்டு நீக்கினார் சந்திரபாபு.

காங்கிரசில் சேர்ந்தார் தி.தி.போர்டு சேர்மனானார்:
சிரஞ்சீவியின் ப்ரஜா ராஜ்ஜியம் கட்சியிலிருந்து சிவப்பு கம்பள மரியாதை உறுதியளிக்கப்பட்டாலும் ஆதிகேசவுலு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். புது தில்லி அளவில் காய் நகர்த்தி தி.தி.போர்டு சேர்மனாகவும் ஆனார். உள்ளூர் காங்கிரஸ் கட்சி ஹேட்ரிக் எம்.எல்.ஏவுடனான உரசல்களை தவிர்க்க ஆதிகேசவுலுவை தள்ளி வைக்கவே தி.தி.தே போர்ட் சேர்மன் பதவி அவருக்கு தரப்பட்டது

இதற்கு பின் நடந்த கூத்துக்கள்தான் எத்தனை எத்தனை ?

1.வட இந்தியாவை சேர்ந்த ராம் தேவ் பாபா பற்றி நீங்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கலாம். அவர் ஆதிகேசவுலுவின் மதுபான தொழிற்சாலை பின்னணியை விவாதமாக்கினார். ஆதிகேசவுலு மட்டும் இதை மறுக்கவில்லை. ஆமாம் எங்கள் குடும்பம் அந்த தொழிலில் ஈடுபட்டிருந்தது நிஜம் தான் . ஆனால் இப்போது இல்லை என்றார். மேலும் ராம் தேவ் பாபா மீது ஏற்கெனவே சொல்லப்பட்டுவிட்ட குற்றச்சாட்டுக்களை (ஹோமியோ மருந்தில் மிருக,மனித எலும்புகள்) புதிது போல் அள்ளி வீசினார்.
2.திருமலையில் விரிவாக்க பணிகளுக்காக அங்கு குடியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு மாமாங்கமாகியும் நிர்வாகம் அவர்களுக்கு எந்த வித நஷ்ட ஈட்டுக்கோ ,மாற்று ஏற்பாடுகளுக்கோ முனையவில்லை. இதையடுத்து அந்த மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். ஆதிகேசவுலுவின் காரை மறித்தனர். அப்போது ஆதிகேசவுலு என்ன செய்தார் தெரியுமா ?" காரை நிறுத்தாதே வாகமா ஓட்டு " ட்ரைவருக்கு கட்டளையிட்டார்.
3.திருமலைக்கோடி சாமியாருக்கு புஷ்பாபிஷேகம்:
உங்களில் பலரும் அறிந்திருக்கமாட்டீர்களோ என்னவோ ? திருமலையில் பெருமாளை தவிர பெண்கள்,குழந்தைகள் யாரும் பூச்சூடக்கூடாது என்று ஒரு விதி உள்ளது. தேவஸ்தானம் வெளியிடும் "சப்தகிரி" மாத இதழின் ஒவ்வொரு இஷ்யூவிலும் இந்த விதி தவறாது இடம்பெறும். இது இப்படியிருக்க ஓம் சக்தி அம்மா நாராயணி என்று அழைக்கப்படும் சாமியாருக்கு புஷ்பாபிஷேகம் செய்தார் ஆதிகேசவுலு.
4.ஆதிகேசவுலு பற்றிய அறிமுகத்தில் ஒரு விஷயம் விட்டுப்போயிற்று புட்டபர்த்தி சாய்பாபாவின் அருமந்த பக்தர். திருமலையில் ஏழுமலையானுக்கு திருக்கல்யாணம் செய்யப்படுவது போல மானிலமெங்கும் உள்ள தேவஸ்தான திருமண மண்டபங்களிலும் ,உள்ளூர் பெருமாள் கோவில்களிலும் திருக்கல்யாணம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. நானே கடவுள் என்று கூறிக்கொண்டு சக்கர நாற்காலியில் வலம் வரும் புட்டபர்த்தி சாய்பாபா சோஃபாவில் அமர்ந்து புன்முறுவல் பூக்க வைட் ஃபீல்டில் ஸ்ரீனிவாச கல்யாணத்தை நடத்தி வைத்தார் அவர்.
5.அதோடு விட்டாரா லிக்கர் லாபி விஜய் மல்லய்யா திருமலை வந்த போது விதிகள்,சம்பிரதாயங்கள் சகலத்துக்கும் சமாதி கட்டி அவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்தார் சேர்மன். பத்திரிக்கையாளர்கள் கேள்விகளால் துளைத்தபோது "அவர் கோவிலுக்கு எவ்வளவோ செய்தார் அவருக்கு இது கூட செய்யாவிட்டால் எப்படி என்று எதிர் கேள்வி கேட்டார்.
6.புண்ணியஸ்தலம் என்றாலே விபச்சாரம், மது, இத்யாதிக்கு குறைவிராது.அதிலும் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து போகும் திருமலையில் சொல்லவே தேவையில்லை. ஆனால் இதையெல்லாம் கட்டுப்படுத்தி புண்ணியதலத்தின் புனிதத்தை காப்பாற்றத்தான் ஒரு போர்டு. அதற்கொரு சேர்மன். ஆனால் சித்தூரில் தமது அரசியல் எதிரியான சி.கே.பாபுவை எதிர்க்க ஆதிகேசவுலு ஒரு சாதி சங்க இளைஞரணி தலைவரை ப்ரமோட் செய்ய ஆரம்பித்தார். அந்த இளைஞர் சித்தூர் எம்.எல்.ஏ.சீட்டுக்கு கட்சி டிக்கெட் கேட்க ஐதராபாத் சென்றார். அவருக்கு ஐதராபாதில் பெருமாள் கோவிலை ஒட்டியுள்ள தேவஸ்தான காட்டேஜில் அறை கொடுக்கும்படி தேவஸ்தான சேர்மன் என்ற வகையில் ஆதிகேசவுலு லெட்டர் கொடுத்திருந்தார். அங்கே மேற்படி இளைஞரும் அவரது நண்பர்களும் புட்டி குட்டி என்று கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார்கள். இதை ஒரு தனியார் தொலைக்காட்சி வகையாய் படம் பிடித்து போட்டு போட்டு காட்டியது. ஆதி கேசவுலு அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை. அதெல்லாம் மீடியாவோட செட்டப் என்று கூறிவிட்டார்.

கடந்த பொது தேர்தல்களின் போது சித்தூர் தனித்தொகுதியாகிவிட்டதால் ஆதிகேசவுலுக்கு டிக்கெட் ஃபணாலாகிவிட்டது. மேற்சொன்ன இளைஞருக்கு சித்தூர் டிக்கெட் கேட்டு தில்லி வரை அலைந்தும் வேலைக்காகவில்லை. அவரது அரசியல் எதிரி சி.கே.பாபுவுக்கே கட்சி டிக்கெட் கிடைத்தது. வெற்றியும் பெற்றுவிட்டார். ஆதிகேசவுலு தன் மகனுக்கு பலமனேர் டிக்கெட்டுக்கு முயற்சி செய்தார் .அதுவும் பலிக்கவில்லை. கடைசி முயற்சியாக கோடிகள் அள்ளிக்கொடுத்து தன் மகனுக்கு ப்ரஜா ராஜ்ஜியத்தில் ராஜம்பேட்டை எம்.பி டிக்கட் வாங்கினார். பணமழையே பெய்தும் தோல்விதான் மிஞ்சியது.

இப்படி மக்கள் ஆதரவோ, நம்பகத்தன்மையோ,இல்லாத ஆதிகேசவுலு போன்ற குற்றப்பின்னணியும்,மதுபான பின்னணியும் உள்ள நபரின் மேற்பார்வையில் நடக்கும் நிர்வாகம் வேறெப்படியிருக்கும் என்று மனதை தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்.

(Foot note: TTD EO YR.Krishnarao )

Wednesday, July 22, 2009

அன்புடையீர்,
1987 லேயே பாக்யா வார இதழில் சிறுகதை ஆசிரியனாக அரங்கேறியவன் நான் . ஜோதிட பூமியில் ஆராய்ச்சிக்கட்டுரை தொடரும் எழுதியுள்ளேன்.
எனது சொந்த வலைப்பூவான கவிதை07 ஏறக்குறைய 500 பதிவுகளுடன் மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருக்கிறது.

புதிய திறமைகளை அடையாளம் கண்டு அரங்கேற்றும் தமிழ் பத்திரிக்கையுலகம் எனது வலைப்பூவில் உள்ள பதிவுகளை தமிழ் கூறு நல்லுலகிறகு அறிமுகம் செய்யும் என்ற ஆவலுடன் இந்த மெயிலை அனுப்புகிறேன்.


எனது வலைப்பூவிற்கான யு ஆர் எல்


http://www.kavithai07.blogspot.com

Tuesday, July 21, 2009

வாஸ்து பெயரால் மோசடிகள்

ஜோதிடத்துக்கும் வாஸ்துவுக்கும் உள்ள தொடர்பு
ஜோதிடம் என்பது ஒன்பது கிரகங்களை கொண்டு சொல்லப்படுகிறது. வாஸ்துவும் ஒன்பது திசைகளை கொண்டு ( பாரதியார் கூட சென்றிடுவீர் எட்டு திக்கும் என்றுதானே குறிப்பிட்டார் என்று குழம்பிவிடாதீர்கள். திக்குகள் எட்டே ஆனாலும் நடுபாகத்தை சூரியன் ஆளுகைக்கு உட்பட்டதாய் வாஸ்து கூறுகிறது) சொல்லப்படுகிறது. ஜோதிடத்தில் கிரகங்களுக்கான காரகத்துவம்( அந்த கிரகத்தின் ஆளுகைக்குட்பட்ட விஷயங்கள்) விவரிக்கப்படுவதை போலவே வாஸ்துவில் ஒவ்வொரு திசைக்கும் காரகத்துவம் கூறப்படுகிறது.

ஒரு ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகமும் எப்படி அமைந்தால் நலம் தரும். எப்படி அமைந்தால் தீமை தரும் என்று கூறப்படுகிறது. அதே போல் வாஸ்துவில் ஒவ்வொரு திக்கும் எப்படி அமைய வேண்டும் (மேடு,பள்ளம், திறந்தவெளியாக இருப்பதோ , மூடப்பட்டு இருப்பதோ, )என்று விவரிக்கப்படுகிறது.

ஜோதிடத்துக்கும் வாஸ்துவுக்கும் உள்ள வித்யாசங்கள்:
1.ஜோதிடத்தில் எந்த கிரகம், எந்த ராசியில்,எந்த கிரகத்துடன் சேர்ந்தால் என்ன பலன் என்பதும், அது எப்போது நடக்கும் எனபதும் கச்சிதமான முறையில் கூறப்படுகிறது. ஆனால் வாஸ்துவில் பார்க்கும் போது என்ன நடக்கும் என்று கூற முடியுமே தவிர எப்போது,எந்த அளவில் நடக்கும் என்று கூறவே முடியாது.

உதாரணமாக: தென் கிழக்கில் )ஆக்னேயம்) மிகப்பெரிய பள்ளம் இருக்கிறது என்று வையுங்கள். அந்த வீட்டில் விபத்து,தீவிபத்து,கொலை,அகால மரணம்,துர்மரணம் நடைபெறும் என்பது வாஸ்து பலன். ஆனால் இந்த பலன் எப்போது நடக்கும். எத்தனை முறை நடக்கும் என்று கூற முடியாது. பொதுவாக வாஸ்து என்பது வீடு கட்டி குடிபோன பின்னே ஒன்னரை மாதம் கழித்து கால் பலன் , 3 மாதங்களில் அரைப்பலன், ஒன்னரை வருடங்களில் முழுப்பலன் தரும் என்று ஒரு விதி உள்ளது. இது பலன் ஆரம்பத்துக்கான விதிதானே தவிர பலனின் அளவுக்கோ , எத்தனை முறை என்பதற்கோ கூறப்பட்ட விதி அல்ல.

2.ஒருவர் பிறந்த ஜாதகத்தில் நான்காமிடத்தை பொறுத்தோ கிருக(வீடு) காரகனான சுக்கிரன் நின்ற இடத்தை பொறுத்தோ அவரவர்க்கு வீடு அமைகிறது. (இவையிரண்டில் எது பலமாக இருந்தால் அதைப்பொறுத்து அமையும்.) ஆனால் ஒருவர் கட்டிக்கொண்ட வீட்டின் வாஸ்துவை பொறுத்து அவர் ஜாதகம் மாறாது வாழ்வும் மாறாது. உதாரணமாக: எம்.ஜி.ஆர் உபயோகித்த பிரச்சார வாகனத்தை பயன்படுத்தியதை போலவே அவர் வாழ்ந்த வீட்டில் விஜயகாந்த் குடியேறி வாழ்கிறார் என்று வைப்போம். விஜயகாந்த் எம்.ஜி.ஆரை போல் முதல்வராகிவிட முடியுமா ? முடியாது.

3.ஜாதகம் என்பது ஒன்றே . அது எப்போதும் மாறாது. ஆனால் வாஸ்து அப்படியல்ல. ஜாதகரின் ஜாதகத்தை பொறுத்து ,தசாபுக்திகளை பொறுத்து மாறிவிடும். உதாரணமாக ஒருவருக்கு சுக்கிரன் யோககாரகன். நான்காமிடம் சுபபலம். சுக்கிரதசை நடக்கிறது என்று வையுங்கள். வீடு கட்டுவார். வாஸ்துவும் அமோகமாக அமைந்து விடும். அந்த தசை முடிந்து சூரியதசை ஆரம்பமாகிறது. சூரியன் பாவியாக உள்ளார். வலுத்தும் உள்ளார் என்று வையுங்கள். அந்த வீட்டில் அவர் தொடர்ந்து வாழமுடியுமா ? முடியவே முடியாது. ஒன்று இன்றைய மாடர்ன் அரைகுறை வாஸ்து பண்டிதன் எவனோ அவரது மூளையை குழப்பி வாஸ்துவில் குறை ஏற்படுத்தி விடுவார். அல்லது வீட்டையே மாற்றிவிட வேண்டியதும் வரலாம். ஒருவேளை அந்த வீட்டையே விற்க வேண்டியும் வரலாம்.

4.பரிகாரங்களை பொருத்த அளவில் ஜோதிடத்துக்கும் வாஸ்துவுக்கும் நிறைய வித்யாசமிருக்கிறது. ஜோதிடத்தை பொருத்த அளவில் பரிகாரம் என்பது அந்தந்த கிரகம் காரகத்துவம் வகிக்கும் பொருளை அந்த கிரகம் காரகத்துவம் வகிக்கும் பொருளை தானம் செய்வதும், அந்த கிரகத்துக்குரிய க்ஷேத்திரத்தை தரிசிப்பது ,அந்த கிரகத்துக்குரிய தெய்வத்தை வழிபடுவதுமே.

(அனுபவத்தில் தேவைகளும்,சுய நலமும் பெருகிப்போன இந்த காலத்தில் இந்த பரிகாரங்கள் சரி வர பலன் தராததை உணர்ந்து இன்னும் இன்னும் சற்று சுரத்தான பரிகாரங்களை நான் பரிந்துரைத்து வருகிறேன். இவற்றிற்கு நவீன பரிகாரங்கள் என்று நாம கரணமும் செய்துள்ளேன். இவற்றையும் நீங்கள் அதிகாலை டாட் காமில் விரைவில் எதிர்பார்க்கலாம்)

இது இப்படியிருக்க வாஸ்து விஷயத்துக்கு வரும்போது அனேகர் விஷயத்தில் பரிகாரங்களே புதிய பிரச்சினைகளை கிளப்பி விட்டுவிடுவது சகஜம். ஏன் இப்படி ?

ஒரு குழந்தை பிறக்கும் போதே அது எப்படிப்பட்ட வீட்டில் வசிக்க வேண்டும் எனபது முடிவாகிவிடுகிறது. அந்த குழந்தையின் ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் நல்ல நிலையில் உள்ளனவோ அந்தந்த கிரகங்களுக்குரிய திசைகள் 100சதவீதம் வாஸ்து பிரகாரமே அமைந்திருக்கும்.

அந்த குழந்தையின் ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் தீமை செய்யும் நிலையில் உள்ளனவோ அந்தந்த கிரகங்களுக்குரிய திசைகள் அந்தந்த கிரகங்களின் பாப பலனை பொறுத்து குறைந்த பட்சம் 30 சதம் முதல் 100சதவீதம் வாஸ்துவுக்கு விரோதமாகவே அமைந்திருக்கும்.
ஒரு வேளை அந்த குழந்தையின் தந்தை வாஸ்து நிபுணர்களின் உதவியுடன் அந்த வீட்டை மாற்றி கட்டினால் அந்த குழந்தை அந்த வீட்டில் வாழ்வது சந்தேகமே !

இது ஒருபுறம் என்றால் வாஸ்து படி தோஷம் கொண்ட வீடுகளில் அந்த தோஷம் ஒரு புறம் இருந்தாலும் வேறு சில அம்சங்கள் நல்ல நிலையில் அமைந்து ஓரளவு நல்ல பலனையே கொடுத்துக் கொண்டிருக்கும். உதாரணமாக : வடகிழக்கு (ஈசான்யம்) குறைந்துள்ளது என்று வையுங்கள். அப்போது தென் கிழக்கு (ஆக்னேயம்) வளர்ந்திருக்கும். ஒருவேளை அந்த வீட்டுக்காரர் படு சோம்பல் பேர்வழி அல்லது பட்டாசு, எரிபொருள்,ஓட்டல் வியாபாரம் செய்பவர் என்று வையுங்கள். ஈசான்யம் குறைந்ததால் அவருக்கு வரக்கூடிய நஷ்டம் ஏதுமில்லை. என்ன கண்டதற்கும் எரிந்து விழுந்து கொண்டிருப்பார். பிள்ளைகளுடன் தகராறுகள் இருக்கும் அவ்வளவே. ஒரு வாஸ்து நிபுணர் வந்து அந்த குறையை நிவர்த்தி செய்ய வைக்கிறார் என்று வைப்போம். என்னாகும் ? வியாபாரம் விழுந்து விடும். சோம்பல் அதிகரித்து விடும்.

ஜோதிடத்திலாவது பரிகாரங்கள் ஒன்று பலனை தரலாம் அல்லது தராமல் போகலாம். ஆனால் வாஸ்துவில் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணத்து சிந்தித்து பரிகாரத்தை அமலாக்கா விட்டால் கோவிந்தா தான் !
வாஸ்து சரியில்லாத வீடுகளை மாற்றியமைப்பதை விட அவை தரும் நற்பலன் களை அனுபவித்தபடி அவை தரும் தீய பலன்களை சகித்துக் கொள்வதே மேல் என்பது என் அனுபவம்.

ஒரு வழியாக ஜோதிடம்,வாஸ்து இடையிலான தொடர்பு , வித்யாசங்களை பார்த்துவிட்டோம். இனி வாஸ்து பேரால் நடைபெறும் மோசடிகளை பார்ப்போம்.

1.அளந்து விடுவது :
மனித வாழ்வை பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. ஒவ்வொரு காரணிக்கும் ஓரளவு பாதிப்பு தரும் வல்லமை உண்டு. அவ்வாறான பல்வேறு காரணிகளில் வாஸ்துவும் ஒன்று. இதுவே உண்மை நிலை. ஆனால் சில வாஸ்து பண்டிதர்கள் பிள்ளையில்லையா ? பிள்ளைக்கு வேலை கிடைக்கவில்லையா ? பெண்ணுக்கு திருமணமாகவில்லையா? வ்யாபாரத்தில் சரிவா ? இப்படி எந்த பிரச்சினையானாலும் அதற்கு வாஸ்துவை காரணமாக்கி வாஸ்து ஒன்றே பரிபூரண தீர்வு என்ற வகையில் அளந்து விடுகிறார்கள். இது தவறான அணுகுமுறை. 100 சதவீதம் வாஸ்து உள்ள வீட்டில் வாழ்ந்துவிட்டால் அலிக்கு குழந்தை பிறந்துவிடுமா என்ன ?

2.ஆளுக்கொன்றை சொல்வது:

ஜோதிடத்திலாவது கிரகங்களின் பலா பலன்களை விவரிப்பதில் கருத்து வேறுபாடு வரலாம். வாஸ்துவில் அதற்கு வாய்ப்பே இல்லையே ! கிழக்கு கிழக்குதான், மேற்கு மேற்கு தான். ஆனால் இங்கே ஒரு விஷயத்தை சொல்லி வைக்கிறேன். அவரவர் குண நலன்கள், தொழில்,வியாபாரம், குடும்ப நிலையை பொறுத்து பொதுவான வாஸ்துவில் சிற்சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. வசிப்பிடங்களுக்கான வாஸ்து வேறு, வியாபார தலங்களுக்குண்டான வாஸ்து வேறு , சோம்பேறிக்கான வாஸ்து வேறு ,டென்ஷன் பார்ட்டிகளுக்குண்டான வாஸ்து வேறு இவற்றையெல்லாம் தீர அலசி அவ்வீட்டுக்காரரின் முழு விவரங்கள் அவரது நிலை ஆகியவற்றை கொண்டு ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் அதை விடுத்து எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சொல்வதால் தான் ஆளுக்கொன்றை சொல்லி குழப்புகிறார்கள்.

3.சூ மந்திர காளி !

இந்த படியை இடி படி படியா பொற்காசுகள் கொட்டும் ,இந்த கிணற்றை மூடிவிடு ஆனந்த வெள்ளத்தில் மிதப்பாய் என்று உடனடி லாட்டரியில் கூட எதிர்பார்க்க முடியாத விளைவுகளை கூறி வாஸ்துவை ஏறக்குறைய சூ மந்திர காளி ! ஆக்கி விடுகிறார்கள். ஜோதிடத்தையாவது மிஸ்டிக் சைன்ஸ் என்று கூற வாய்ப்பு இருக்கிறது. வாஸ்து என்பது 100 சதவீதம் கணிதமாகும். வாஸ்துவில் கூறப்படும் பலன்கள் யாவும் மேலுக்கு லக்ஷ்மி கரம், கரம் , பீடை என்று ரொம்பவே மடிசஞ்சி தனமாக இருந்தாலும் வாஸ்து என்பது ஒரு அறிவியலாகும்.

உதாரணமாக தெருக்குத்து கூடாது என் கிறது வாஸ்து . ஒரு வீடு . அதன் வாசலுக்கு நேரே சாலை இருக்கிறது என்று வையுங்கள். அது வழியாக ஒரு வாகனம் வேகமாக வருகிறது. பிரேக் ஃபெயில் ஆகிறது என்னாகும் ? வாகனம் வீட்டுக்குள் புகும். சரி ஒருவனை மற்றொருவன் கையில் கத்தியுடன் குத்த துரத்தி வருகிறான். என்னாகும் ? நம் வீட்டில் கத்திக்குத்து நடக்கும். பிறகு கோர்ட்டு போலீஸ் ஸ்டேஷன் என்று ஏறி இறங்க வேண்டி வரும்.

இது வெறும் உதாரணமே ! வாஸ்துவில் உள்ள அம்சங்களை "உட்கார்ந்து யோசித்தால் " இது போல் பல நூறு காரண காரியங்களை கூற முடியும். எனவே டுபாகூர் வாஸ்து பண்டிதர்கள் கூறுவதை நூற்றுக்கு நூறு நம்பாதீர்கள் . மூளைக்கு வேலை கொடுங்கள். பிராக்டிக்கலாக சிந்தித்து பாருங்கள். வாஸ்துவில் பரிகாரம் என்றால் அது வீட்டை மாற்றிகட்டுவதுதான்.

ஈசான்யத்தில் செம்பில் நீர்வைத்து பூக்களை மிதக்க வைப்பது , அந்த இயந்திரம் இந்த இயந்திரம் என்று மாட்டி வைப்பது இதெல்லாம் மேனா மினுக்கி வேலைகள். வேலைக்காகாத வேலைகள். பருவ வயது பெண்கள் முகப்பருவுக்கு கண்ட கண்ட களிம்புகளை பூசுவதற்கும் இதற்கும் வித்யாசமே இல்லை. (முகப்பருவுக்கு முக்கிய காரணங்கள் வேறாகவும், சிகிச்சை வேறாகவும் இருக்க களிம்புகள் பூசுவது மடமையல்லவா?)

காம்பவுண்டு இல்லையா !

காம்பவுண்டு இல்லையென்றால் வாஸ்து பார்ப்பதே வீண் வேலை. உங்கள் வீடுள்ள லைனில் எந்த வீட்டுக்கு காம்பவுண்டு போடப்பட்டுள்ளதோ அந்த வீடு வரை ஒரே வீடாக கருதித்தான் வாஸ்து பார்க்க வேண்டும். (எத்திசையிலும்). இதை ப்ளாக் வாஸ்து எனலாம்.

சில்லறை விஷயங்களை மறந்துருங்க:

எனது அனுபவத்தில் திசைகள் குறைவது, வளர்வது ,காலியாக இருக்க வேண்டிய பகுதியில் (வடக்கு,கிழக்கு) கட்டிடம், கட்டிடம் இருக்க வேண்டிய திசையில் (மேற்கு, தெற்கு) காலியிடம் ,நைருதியில்,ஆக்னேயத்தில் பள்ளம், ஈசான்யத்தில் மூடி,மாடிப்படி, வீட்டில் உபயோகிக்கும் தண்ணீர் தவறான திசையில் வெளியேறுவது, தரை அமைப்பு தவறாக இருப்பது, நைருதி பாகத்தில் வாசற்படி, பெரிய ஜன்னல்கள் இருப்பது , தவறான திசைகளில் கிணறு அமைவது (வடக்கு,கிழக்கு,வட கிழக்கு தவிர இதர திசைகளில்), தவறான செப்டிக் டாங்க் அமைவது (வடக்கு,கிழக்கு திசைகளில் மையத்தில் தவிர) போன்ற இன்னும் சில அம்சங்கள் தான் மிக மிக தீமை தருகின்றன. இன்ன பிற ஜன்னல் எண்ணிக்கை இத்யாதியெல்லாம் வாஸ்து பண்டிதர்களால் பூதாகரமாக்கப்படும் அம்சங்களே !

ருணானு பந்த ரூபேணா
பசு பத்னி சுதாலயா

இந்த சுலோகத்தின் பொருளை கூறி இக்கட்டுரையை முடிக்கிறேன். ருணம் என்றால்
நேரடி பொருள் கடன். பௌராணிகர் மொழியில் சொன்னால் பூர்வ புண்ணியம். வழக்கு மொழியில் "கொடுத்து வச்சது அவ்ளதான் என்கிறோமே அதை தான் இங்கு சுலோகம் "ருணம் " என்கிறது. ருணானு பந்த ரூபேணா என்றால் பூர்வ புண்ணியத்தின் படி / நீ (போன ஜென்மத்துல நல்லவங்களுக்கு ) கொடுத்து வச்சது என்னவோ அதுக்கேத்தபடி என்று பொருள் . பசு என்றால் கால் நடைகள், பத்னி என்றால் மனைவி. சுதா என்றால் பிள்ளைகள். ஆலயா என்றால் வீடு. அதாவது இந்த ஜென்மத்தில் கால் நடைகள், மனைவி,பிள்ளைகள் வீடு இவையெல்லாம் உனது பூர்வ புண்ணியத்தை பொருத்துதான் அமையும்.

கோள்கள் இறைவனின் கேபினெட்டில் மந்திரிகள். அந்த கோள்கள் தான் நீங்கள் எப்படிப்பட்ட வீட்டில் வசிக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றன. அதை மாற்றவும் உங்கள் ஜாதகமோ, தசா புக்தியோ கு.பட்சம் கோச்சாரத்தில் சனியின் இருப்போ இடம் கொடுத்தால் தான் உண்டு. அந்த மாற்றமும் தற்காலிகமே ! எனவே வாஸ்து விஷயத்தில் அதீத ஆர்வம் நற்பலனை கொடுக்க வாய்ப்பு என்பது மிக மிக குறைவே ! ஆனால் கெட்ட பலன் மட்டும் சர்வ நிச்சயம். எனவே அடக்கி வாசிங்கணா !

Monday, July 20, 2009

யாஹூ ஜியோ சிட்டீஸ் அக்டோ. 26 க்கு க்ளோஸ் !

ஆமாங்க ஒரு காலத்துல நம்ம வெப்சைட் கனவுகளையெல்லாம் நிறைவேற்றின யாஹூ ஜியோ சிட்டீஸ் அக்டோ. 26 ஆம் தேதி மூடப்படுது. நானும் சில ஃபைல்ஸ் எல்லாம் வச்சிருக்கேன். திஸ்கி என்ற ஃபோல்டரை டவுன் லோட் பண்ணி படிச்சுருங்க..

இது ஒரு பெரிய சோக கதை . இன்டர் நெட்ல அழகிய சுட்டுக்கிட்டு போய் வீராவேசமா தட்டச்சி பார்த்தால் எல்லாம் திஸ்கி ஃபைலா சேவ் ஆகி ஷேவ் பண்ணிருச்சு. (அஸ்கு புஸ்கு மாதிரி இந்த திஸ்கி) அந்த ஃபைல்களைதான் எக்ஸ் எம் எல் ஃபைல்களா அம்பபலுகு என்ற என் ஜியோசிடீஸ் ல வச்சிருக்கேன்.
அக்டோபர் 26 க்குள்ள இதையெல்லாம் படிச்சுருங்கன்னா ! ..

URL:
http://www.geocities.com/ambapaluku

எனது எழுத்துக்கள்

முதல்கதை:
வயது முதிர்ந்தவருடனான இளம்பெண்ணீன் திருமணம் பற்றியது. பன்ச்: இதைக்காட்டிலும் அப்பெண்ணை பாழும் கிணற்றில் தள்ளியிருக்கலாமே ! (முதல் கதைங்க)

பீலா:
எட்டாம் வகுப்பு படிக்கிறப்ப குங்குமத்துல யாரோ முருகன் எழுதின கதைய என் கதையா பீலா விட்டுட்டன்

இண்டர் இரண்டாம் வருடம்:
காலேஜ் மேகசினுக்கு பெண்ணையும், நிலவையும் ஒப்பிட்டு கவிதை. (அந்த 17 வயசுலயே மூணு நாள் பிரச்சினை). "கல் மேல் கொட்டுவரோர் குடம் பால் " னிட்டு விதவை & அவளது கைக்குழந்தை பற்றி ஒரு கவிதை
செவிட்டு ராஜ்ஜியத்தின் அரசவை கவிஞன் நான்

இவர்களது காதுகளுக்கு வைர வரிகளாலான கவிதைகளை கொடுத்தேன்
இவர்களோ ஜான்சன் பட்ஸுக்கு தவிர காதுகளின் கதவுகளை திறப்பதாயில்லை


ஈ கவிதை(எலக்ட்ரானிக் கவிதையில்லிங்கோவ்) தீம் :குண்டு பிரபா
ஒரு இளைஞன் .பூங்காவில் இளம்பெண் வந்து முத்தமிடுவதாய் பகல் கனவு. அப்புறம் பார்த்தால் ஈ

சிறுகதைகள்:

பிரசுரமானவை:
1. முளைச்சு மூனு இலை விடலை
2.அருணா கவுரி
3. கனகாவை காணவில்லை
4.புதியவள்
5.படைத்தவன் கிடைத்தான்
6.நாடகம்
ரிகார்ஸலின் போது இருந்துவிட்டு நாடகம் துவங்க க்விட் ஆகும் எழுத்தாளர்
பிரசுரமாகாதவை:

1.கீரை /குரோட்டன்ஸ்
2. உங்க தொழில் அப்படி என் தொழில் இப்படி /ஜோதிடர் & எஸ்.ஐ
3.அம்மா (பாத யாத்திரை அறிவிப்பு பற்றி கடியோ கடி. பையன் ஸ்பாட்டுக்கு போயிட்டான். கே.சி.ஆட்கள் வட்டமிடறாங்கனு தெரிஞ்சதும் ஆட்டோல பயணம்)
4.போட்டி
இளம் எழுத்தாளன் தனது ஆதர்ஸ எழுத்தாளனிடம் தன் தீம் ஒன்றை கூறுகிறான். பெரிதும் புகழும் ஆதர்ஸன் எழுதுவது யார் என்ற சஸ்பென்ஸுடன் தொடர் கதையாக வெளியிட ஏற்பாடு செய்வதாய் கூறுகிறான். தொடர் வெளியாகிறது. இவன் மனைவி தன் கணவன் பெயரை குறிப்பிட்டு போட்டியில் கலந்து கொள்கிறான். பரிசு கிடைப்பதில்லை.



குறுநாவல்கள்:
1.கொண்டபள்ளி சீத்தாராமய்யா /சுசி/சுந்தரேசன்
2.ஆபத்தான வளைவுகள்
3.ப்ளட் ரோஸ்
4.வக்கிரங்கள்

நாவல்கள்:
1.கையாலாகாதவன் கதை
2.தருமம் தலை வாங்கும்

திரைக்கதைகள்:
1.ஆண்பிள்ளைசிங்கம்
2.வெற்றிச்செல்வன்
3.வளையல்
4.பவர்
5.பேக்கேஜ் டூர் (சீனியர் ஹீரோவுக்கு ரீ என்ட்ரி)
6. ராமன் எத்தனை ராமனடி ( டாக்டர் லூ)
7.விஜய பாப்பினீடுவுக்கு எழுதினது
8.கிராமப்புற மிஸ்டரி (ஒரு தங்கை மூன்று அக்கா )
9.முப்பெரும் தேவியர் (கமல் இரட்டைவேடம்)


நாடகங்கள்:
1.சரஸ்வதி சபதம்
(To be continued)

பெண் இயற்கையின் பிரதி.+ நிதி.

மனிதர்கள் எந்த செயலை செய்தாலும் அதன் பின்னுள்ள் விருப்பம் ஒன்றே .அது கொல்வது அல்லது கொல்லப்படுவதே ! இது மனவியல் கூறும் உண்மை . மனவியல் மேலும் கூறுவது என்னவென்றால்:
கொல்லவும்,கொல்லப்படவும் தைரியம் போதாதவன் அதற்கு ஆல்ட்டர்னேடிவ் வழிகளை தேடுகிறான். அவை யாவன செக்ஸ்,பணம்,அதிகாரம்,புகழ்

எல்லாம் சரி ஆறறிவு படைத்த மனிதன் ஏன் கொல்வதும் கொல்லப்படுவதுமாயிருக்கிறான்.

இங்குதான் முடிவான தத்துவம் வருகிறது. நாமனைவரும் இல்லாதிருந்த காலமே கிடையாது. நாம் எல்லோருமே ஏதோ ஒரு கல்பத்தில்,ஏதோ ஒரு யுகத்தில் ஏதோ ஒரு வடிவில் சேர்ந்திருந்தோம். அப்போது அந்த இணைவில் ஒரு பாதுகாப்பை உணர்ந்தோம். பின் ப்ரிந்தோம். மீண்டும் இணைய துடிக்கிறோம். அந்த இணைப்புக்கு இந்த உடல் தடையாக இருப்பதாக பிரமிக்கிறோம்.

மாமிசம் உண்பவனை பாருங்கள். அவன் என்ன செய்கிறான். அவன் கொன்ற கோழியையோ,ஆட்டையோ தன்னுள் ஐக்கியம் செய்துகொள்கிறான். ஆண் பெண்ணில் ஐக்கியமாகிறான். பெண் ஆணை தன்னில் ஐக்கியம் செய்து கொள்கிறாள். இணைப்புக்கான கோரிக்கை அவர்களை ஊக்கு (சட்டைக்கு போடறதில்லிங்க) விக்கிறது. ஆனால் இணைப்புக்கு வழி உடல்களை இணைப்பதோ ? உடல்களை உதிர்ப்பதோ அல்ல.

நாம் பிரிந்திருக்கிறோம் என்பது நம் பிரமை. ஏற்கெனவே இணைந்தேதானிருக்கிறோம். நாமனைவரும் இப்படைப்பில் ஒரு அங்கமாகத்தானிருக்கிறோம். ஆனால் நம்மை இந்த படைப்பிலிருந்து பிரித்துக் காட்டுவது நமது அகந்தை ஒன்றே. பிறந்த குழந்தைக்கு தன்னை தனது பொம்மைகளிலிருந்து கூட பிரித்துக்காண முடிவதில்லை. ஆனால் நாம் ?

பெற்ற தாயை, தந்தையை, கூடப்பிறந்த சகோதர சகோதிரிகளையும் நம்மிலிருந்து பிரித்து காண்கிறோம். முஸ்லீம் இந்துவை, இந்து முஸ்லீமை பிரித்துக் காண்கிறான். இதனால் மனிதனில் பாதுகாப்பின்மை வளர்கிறது.

இதனால் மனிதன் இணைய துடிக்கிறான். மாமிசம் உண்ணும்பழக்கம், செக்ஸ் மீதான வேட்கை அதிகரிக்க மனிதருள் பெருகி வரும் பிரிவினையே முதல் காரணம். இதனால் தான் மனிதர்கள் சாகத்துடிக்கிறார்கள்.கொலை தற்கொலைக்கெல்லாம் ஸ்தூலமான காரணங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் சூட்சுமமாக பார்க்கும்போது அவனது நோக்கம் தன் உடலை உதிர்ப்பதும் இந்த அண்டத்துடன் இரண்டற கலப்பதுமே.

மனிதன் காட்டில் வாழ்ந்த காலத்தில் குழுவாய் வாழ்ந்தான் (இணைந்து வாழ்ந்தான்) மேலும் உடல் உதிர்ந்து போக-அவன் இந்த அண்டத்துடன் இரண்டறா கலக்க எந்த நேரமும் வாய்ப்பிருந்தது. எனவே அவன் தற்கொலைக்கோ ,கொலைக்கோ பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை. இப்போது காலம் மாறிப்போச்சு. மரணம் ஏறக்குறைய அசாத்தியமாகி விட்டது. எனவே தானாய் வராத சாவை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறான் மனிதன்.

செக்ஸில் ஆண் பெண்களுக்கு சுக்கில சுரோணிதங்கள் ஸ்கலிதமாகும்போது காலம் தெரியாத மரணமொத்த ப்ளாக் அவுட் ஏற்படுகிறது. எனவேதான் மனிதன் செக்ஸ் மீது அதிக ஆர்வம் காட்டுகிறான். 100 வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் கூடி வாழ்ந்தனர், இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். எனவே படைப்புடனான உறவு நெருக்கமாகவே இருந்தது. மனிதன் பாதுக்காப்புணர்வுடன் வாழ்ந்தான்.

இப்போது ? இயற்கையிலிருந்து ஓடினான் ஓடினான் ஓடிக்கொண்டே இருக்கிறான். இந்த விலகல் அவனில் பாதுகாப்பின்மையை அதிகரிக்கிறது எனவே அவன் சமுதாயத்துடன் இணைய துடிக்கிறான். ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள துடிக்கிறான். சாதி சங்கம்,கட்சிகள் பெருக இதுவே காரணம். ஓயாமல் செல் பேசுவதும் இதன் அடையாளம் தான்.


பின்னே இதற்கு என்னதான் தீர்வு ? மனிதன் சமுதாயத்துடன்,இயற்கையுடன் இணைந்து வாழவேண்டும். அதற்கு தடையாக இருப்பது அவன் உடலல்ல். அவனது அகந்தை. ஆண் பெண் இயற்கையின் இரண்டு பாகங்கள். இவை பிரிந்து கிடக்கும் வரை மனிதன் அபத்திரமாகத்தான் உணர்வான். பெண் இயற்கையின் பிரதி.+ நிதி. பெண்ணே இயற்கைதான். சந்திரனின் வளர்ச்சி,தளர்ச்சிக்கும் பெண்ணின் மாதாந்திர ருதுவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவளுடன் ஆண் உறவாட வேண்டும். ஸ்கலிதத்தின் போது காலாதீத நிலயை உணரவேண்டும். அதுவே யோகத்துக்கான திறவு கோல்.

Sunday, July 19, 2009

தமிழ் அக்ரகேட்டர்களுக்கு எச்சரிக்கை

வலையுலகம் விசித்திரமானது. பத்திரிக்கையுலகத்திலாவது மூடி மறைக்கலாம். சில்லாயிரத்தை , பல்லாயிரமாகவும் காட்டி பந்தா பண்ணலாம். ஆனால் வலையுலகத்தில் அந்த பருப்பு வேகாது. எத்தனையோ வலை தளங்கள் இதர வலை தளங்களின் ஜாதகத்தை கணித்து கூறவே உள்ளனர். சிறு துளி பெருவெள்ளம் என்பது போல் சின்னஞ்சிறு பதிவர் கூட்டம் உங்கள் வலை தளங்களுக்கு பார்வையாளர்களை வசீகரித்து கொடுக்கிறது என்பது மறைக்க முடியாத மறுக்க முடியாத உண்மை.

உண்மை நிலை இப்படியிருக்க அந்த காலத்து பத்திரிக்காசிரியர்களை போல் தங்கள் வலை தளத்தை சங்கப்பலகை என்று எண்ணி இடம் தர மறுத்தால் நஷ்டம் பதிவர்களுக்கல்ல. வாசகர்களுக்கே. லாங் ரன்னில் இந்த போக்கு வலை தளத்தின் ரெப்புட்டேஷன் நிச்சயம் பாதிக்கும். வலைப்பூவை பிரபல படுத்திக்கொள்ள பல்வேறு வழிகள் உள்ளன. ஒரு ஜோதிடனாக எனக்கு பரிச்சயமானவர்களிம் மெயில் ஐடிக்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றை என் போல் தங்கள் பாகு பாட்டிற்கு ஆளான பதிவர்களுக்கு கொடுப்பேன்.
உங்கள் வலை தளங்களுக்கு இணைப்பு கொடுத்து பிரபலப்படுத்தியது என் போன்ற பதிவர்களே. ஆனால் தாங்கள் நன்றி மறந்து இருட்டடிப்பு செய்வது கண்டிக்கத் தக்கது. தேனீக்கள் பறந்து பறந்து தேனை எடுத்து வந்தாலல்லவா தேன் கூடொத்த இணையதளம் உருவாவது. (ஆமாம் தேன் கூடு என்னாச்சு ?)


இந்த பதிவை கண்ட 7 நாட்களில் நான் இணைப்பு கொடுத்துள்ள அனைத்து இணைய தளங்களும் என் பதிவை காட்ட வேண்டும். இல்லையேல் இணைப்புகள் நீக்கப்படும் என்று தெரிவிக்கிறேன்.


காசுபணம் குறித்த சிந்தனை கூட இல்லாது வெறுமனே கருத்து பகிர்வுக்காய் ஆத்ம திருப்திக்காய் செய்யும் பணி இது. இதிலும் இவ்வாறான பாகு பாடுகள் கொடுமை. திருந்துங்கள். இல்லாவிடில் காலாவதியாகும் பத்திர்க்கைகளின் கதி தான் உங்களுக்கும்.

(ஆமா ராணி வார‌ இத‌ழ்ல‌ என்ன‌ தொட‌ர்ச்சியா ப‌டைப்புக‌ள் கேட்டு விள‌ம்ப‌ர‌ம் வ‌ருது ? தமிழகத்து எழுத்தாள‌ர்களை எல்லாம் காக்கா தூக்கிகிட்டு போயிருச்சா இல்லே மேற்சொன்ன‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் போல‌ அல‌ட்ட‌ல் காட்டிய‌தால் ஆர்வ‌ல‌ர்க‌ள் வில‌கிட்டாங்க‌ளா ?)

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
நீ அனாதியாய் இருந்து சனாதனிகளால்
சாரம் சாகடிக்கப்பட்ட ஆன்மீக மரத்தின் விழுது
அவர்கள் பாலரை பட்டினி போட்டு செய்தனர் பாலாபிஷேகம்

ஆனால் நீயோ ..... பாற்கடலே இறங்கி வந்தாலும்
சோமாலியா வரை அஞ்சல் செய்து
மிஞ்சியதை கொட்டுங்கள்
வாங்கிக்கொள்வது சிலுவையா சிவலிங்கமா என்பது முக்கியமல்ல
கொட்டும் சமுதாயத்தின் சுபிட்சமும் அச்செயலின் பின்னான பாவமுமே முக்கியமென்றாய்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

மேலுலகின் அதிர்வுகள் உன்னை தீண்டாதபோது
தீண்டத்தகாதவனாய் நெஞ்சில் இருள் மண்டி இருந்ததுண்டு

அதிர்வுகள் துவங்கியதும் பகிர்வுகள் துவங்குவது வழக்கம்தானே
உன் கவிதை வரிகளின் இடைவெளிகளில் ஒலிப்பது ஓங்கார முழக்கம்தானே

உன் கவிக்கும் மக்கள் செவிக்குமான கல்யாணத்தை நிறுத்த சீப்பை ஒளித்து வைக்கும் மண்டூகங்கள் மண் மூடிப்போகும்
கண் மூடி ஆன்மக்கயிறு வீசி !
காளி ஆசி தனை யாசி !
காசியில் குடிபுகுந்தாலும் கருமம் தொலையாத கசடர்க்கும்சேர்த்துத்தான் சுபிட்சம்
அதுதானே உன் மனோபீஷ்டம்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

பாவம் இவர்களது வானொலிகளில் வான் ஒலி அஞ்சலாவதில்லை
எனவேதான் இவர்கள் உன் ஆணைகளை கெஞ்சலாக பார்க்கின்றனர்
நீ இந்த திரைக்கதையின் முடிவு தெரிந்தவன்
மரை கழன்ற மந்தர் தம் செவியில் மறையுணர்ந்த உன் உரை புகுமோ ?
மாவரைக்கும் க்ரைண்டர்களாய்
துளை போடும் ட்ரில்லர்களாய்
தொந்தி கொழுத்து மூட்டுக்கள் கழண்டு கிடக்கின்றார்
ஸ்வர்கத்து கதவுகளின் பூட்டுக்கான சாவியால் காது குடையும்
முடை நாற்றம் பிடித்த இந்த கிடையில் உன் விடைக்கு விலை ஏது?

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

இணையம் கண்டாலும் இவர்களை பிணைத்த தளைகள் தளர்வதில்லை
வலைப்பூக்களே மலர்ந்தாலும் சூடிக்கொள்ள முடியாத சோ (சொட்டை) தலையர்கள்
அரை ஆயிரம் பதிவுகள் போட்டாலும் கடந்த பிறவிகளின் பதிவுகளே இவர்களை பாதிக்கின்றன.
ஊதும் சங்கை ஊதிவை !
விழிக்கும் மாந்தர் விழிக்கட்டும்.. பழிக்கும் மந்தர் பழிக்கட்டும்
மண்ணுலகை அழிக்கட்டும்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

உன்னுள் உறை பரமனுக்கு முகமன் கூறி முத்தமிழ் கடலில் முத்தெடு ..
தமிழன்னை தாள் சேர்த்து கூத்திடு
இதழ்களை பூவாக்கு வலை சேர்த்து வலைப்பூவாக்கு
தேடிவந்த வார்த்தைகளை கவிதையாக்கு
கவிதைக்கு பொருள் வாழ்க்கையில் என்று வைரவரிகள் சொல்லி
தழலை கெல்லியெறிந்து பொருளுக்காய் வாழ்க்கையை தொலைத்து
வீண புத்திரர்களாகிப்போன வாணி புத்திரர்களை மறந்து விடாதே
நெஞ்சக்கழலை துறந்து விடாதே

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

மேகத்துக்கப்பாலிருந்து கொட்டும் வார்த்தைகளை வாங்கிவை
நினைவில் தேங்க வை
பண்ணில் பாட்டில் மானுடம் ஓங்கவை
நீயா எழுதுகிறாய்
பார் முழுக்க பல்லாயிரம் சாதியார்
தரணிமிசை தவிக்கும் தனியாள் நீ
படி எடுக்கும் பணியாள் நீ

ஈங்கிவர் ஆசை தனியார்
பரமனை பணியார்
சற்றேனும் கனியார்

இவர்களுக்காக கண்ணீர் சிந்து
அவனிடம் கப்பறை ஏந்து
காத்தவன் இழப்பான் இழப்பவன் பெறுவான்
இதுதான் நியதி
உனக்கென்ன என்றும் இளமை பொங்கும் யயாதி

பிறப்புக்கு முன்பே திறப்பு
கருப்பை கிழிப்பு
மனித மனத்து மாசாய் கருதி
உணவின் சத்து நீக்கி
சக்கை உண்டு
இளமையில் முதுமை
எதிலும் இயலாமை

கருச்சுமக்க ஆள் தேடும் இவரே
கருவாக்கவும் தேடுவரே !
சகதியொத்த சங்கதி பல உண்டு
சக்தி இழந்து இவரே சிவனார் போலாகி
மணவாழ்வை மயானமாக்கிட்டார்

உனக்கென்ன வேடிக்கை பார்க்க வந்தாய்
வாடிக்கையாக சில வாக்கியம் கூறிவிட்டு
உன் இறை தேடி உன்னுள் இறங்கி விடுவாய்

வாழும் மாந்தரைப்பார் !
ஆரும் இளைத்தாரில்லை
சகதியில் சலித்தாரில்லை
முள்ளை மேய்ந்திருக்கும் ஒட்டகம் போல்தானே
பெட்டகம் காக்கின்றார்
நோய்கள் தமக்கு தமை தாரை வார்க்கின்றார்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

நாளைய புதை பொருள் ஆராய்ச்சியாளர்களுக்காகவேனும் எழுது
சமாகாலர்களின் சமாதிகளின் மீதாவது உன் கவிதைகள்
எச்சரிக்கை விளக்குகளாக ஒளிரட்டும்
நாளைய சமுதாயமேனு செழிக்கட்டும்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

ஆகப்போவதென்ன ஆண்பிள்ளை அழுது புதிதாய்
சாகப்போவதென்ன மனிதமே செத்தபின்பு !

Saturday, July 18, 2009

ஜோதிடத்தின் பெயரால் மோசடிகள்

முன்னுரை:
தனி நபர்களான கிராமப்புற ஜோதிடர்கள் சிறிய அளவில் செய்யும் மோசடிகள் ஒருபுறம் , நகரங்களில் ஏ.சி வசதியுடன் ஆஃபீஸ் ,தனியார் தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள், ஆயிரக்கணக்கில் ஃபீஸ் என்று பட்டையை கிளப்பும் கார்ப்போரேட் ஜோதிடர்களின் மோசடிகள் ஒரு புறம் , பத்திரிக்கைகள், இணைய தளங்கள் தெரிந்தோ தெரியாமலோ துணை போகும் மோசடிகள் மறுபுறம் மக்களை தவறான வழியில் நடத்துவதோடு ஜோதிடத்தின் நம்பகத்தன்மையையும் குலைத்து வருகின்றன. ஜோதிடத்தின் பெயரால் நடை பெறும் மோசடிகளை விவரிப்பதும் , இவற்றிலிருந்து தப்ப வாசகர்களுக்கு சில டிப்ஸ் தருவதும் இக்கட்டுரையின் முககிய நோக்கம். ஜோதிடத்தின் பேராலான மோசடிகளை வெளிச்சம் போடுவது ஒரு ஜோதிடனாய் , ஜோதிட ஆய்வாளனாய் என் கடமை. அவற்றிலிருந்து தப்ப வழி கூறுவது ஒரு மனிதனாய் என் கடமை.

கவர்ச்சியே காரணம் :

எது தமக்கு அன் அவெய்லபிளாக இருக்கிறதோ அதற்காக தவிப்பது மனித மனதின் இயற்கை. எதிர்காலம் குறித்த அறிவும் அன் அவெய்லபிள். எனவே தான் மனிதர்களுக்கு ஜோதிடத்தின் மீது இத்தனை கவர்ச்சி. டிமாண்ட் சப்ளை தியரி படி சப்ளை அறவே இல்லாத காரணத்தால் ஜோதிடர்களும், பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளின் ஜோதிட சிறப்பு பகுதிகளும் சக்கை போடு போடுகின்றன.

கவர்ச்சிக்கு காரணம்:

மேலும் எதிர்காலம் குறித்த அறிவை பற்றி சிந்திக்கும்போது அது ஏதோ ஒரு காலத்தில் நமக்கு 100 சதவீதம் அவெய்லபிளாக இருந்துள்ளது. எப்படியோ அதை இழந்து விட்டோம். ஆம் தற்போதும் அது அவெய்லபிள்தான். ஆனால் நமது மூளையில் உள்ள ஆழமான பகுதிகளில் அது புதைந்துள்ளது.

முக்கால ஞானம் :

முக்கால ஞானம் அனைவருக்கும் இருந்தது . ஏன் இப்போதும் உள்ளது. என்ன ஒரு அசௌகரியம் என்றால் அது வறண்டு வரும் நிலத்தடி நீர் மாதிரி சற்றே ஆழத்துக்கு போய்விட்டது . யூனிவர்சல் மைண்ட் ,இண்டிவியூஜுவல் மைண்ட் இந்த இரண்டு விஷயங்களையும் , இவற்றிற்கிடையே உள்ள வித்யாசத்தை தெரிந்து கொண்டால் நான் சொல்லவரும் விசயம் தெளிவாக புரியும்.

இழந்தோம்:

குழந்தை பிறக்கிறது. அதற்கு தன்னையும், தன்னை சுற்றியுள்ள பொருட்களையும் வேறுபடுத்தி பார்க்க தெரியாது. ஆனால் சுற்றியுள்ளவர்கள் அதன் மூளைக்குள் தான் என்ற எண்ணத்தை புகுத்துகிறோம். அதுவரை தான், தன்னை சுற்றி உள்ளவர்கள், தான் வாழும் இந்த பூமி, நவ கோள்க்ள், பால் வீதி இத்யாதிகளின் முக்காலத்தையும் உள்ளடக்கிய யூனிவர்சல் மைண்டுடன் இந்த பூமிக்கு வந்த குழந்தையின் மூளைக்குள் நாம் புகுத்தும் "தான்" என்ற எண்ணம் சென்று மூளையின் கோடானு கோடி யூரான்களில் முக்காலம் உணர்த்தும் நியூரான் களை தூக்க நிலையில் ஆழ்த்திவிடுகிறது.

இழந்ததை பெறவே துடிப்பு:

நாம் ஒவ்வொருவரும் முக்காலம் உணர்த்தும் யூனிவர்சல் மைண்டுடன் இம்மண்ணுக்கு வந்தவர்கள்தான்.பாழாய் போன ஈகோ நம் மூளைக்குள்
நுழைந்து (பெற்றோராலும், ஆசிரியர்களாலும் நுழைக்கப்பட்டு) அது இண்டிவியூஜுவல் மைண்ட் ஆக்கிவிட்டது. இதனால்தான் முன்னொரு காலத்தில் நாம் பெற்றிருந்த செல்வம் என்ற காரணத்தால்தான் நம்மில் ஒவ்வொருவருக்கும் ஜோதிடத்தின் பேரில் இத்தனை ஈர்ப்பு. இந்த முக்கால ஞானம் குறித்த ஈர்ப்பு சாதாரணர்க்கே அதிகம் என்றால் புத்திசாலிகள், பற்றி வேறே சொல்வதற்கென்ன இருக்கிறது. இதனால் தான் தமது துறையில் புலிகளாக விளங்கும் அறிவு ஜீவிகள்கூட ஜோதிடத்தின் பால் ஈர்க்கப்பட்டு ,ஜோதிடர்களால் ஏமாற்றப்படுகின்றனர். இந்த ஈர்ப்புக்கு மற்றொரு காரணமும் உள்ளது. ஜோதிடம் என்பது லாஜிக்கல் கேல்குலேஷன் தான் என்று என் போன்றவர்கள் கையில் அடித்து சத்தியம் செய்தாலும் அதில் ஒரு வித "நிச்சயமற்ற தன்மை" இருக்கத்தான் செய்கிறது. அது மனிதர்களை தன் பால் ஈர்க்கிறது.

உண்மையில் ஏமாற்றுவதே அவர்களின் நோக்கமா ?

இல்லை என்றுதான் கூற வேண்டும் . ஆம் . எதிர்காலம் என்பது தேவரகசியம். யாருக்கு இதன் பால் ஆர்வமில்லையோ அவர்களுக்கு மட்டுமே இது தரிசனமளிக்கும் . ஓஷோ சொல்வது போல் அந்தந்த
நொடியில் வாழ்பவருக்கு தான் எதிர்காலத்தின் மேல் ஆர்வமிராது. யார் மனதில் அகந்தை இல்லையோ, யார் மனதில் சுய நலம் எள்ளளவும் இல்லையோ அவர்களுககு தான் எதிர்காலத்தின் மேல் ஆர்வமிராது. அந்த ஆர்வமற்றவர்களுக்குதான் எதிர்காலம் தரிசனமளிக்கும். இந்த எளிய உண்மை சாதாரண மக்களை போலவே ஜோதிடர்களுக்கும் புரிவதில்லை. இதனால் தான் எதிர்காலம் குறித்த அறிவு என்பது குருவித்தலையில் பனங்காய் ஆகிவிடுகிறது.
மேற்சொன்ன விவரங்கள் தெரியாது ஜோதிடர்கள் ஜோதிடம் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள் . இதனால் அவர்கள் ஏமாற்றுவதை நோக்கமாக கொண்டில்லாத போதிலும் அவர்கள் கூறும் ஜோதிடம் பல்லை இளித்து ஏமாற்று வேலையாகிவிடுகிறது.

அறிவியல் கண்ணோட்டமில்லை:

முதற்கண் மக்களும் ஜோதிடர்களும் ஜோதிடம் குறித்த அறிவியல் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். முன் சொன்னாற்போல் யார் மனதில் அகந்தையோ,சுய நலமோ எள்ளளவும் இல்லாமலிருந்தனவோ அந்த ரிஷிகள்,மகரிஷிகள் கிரகங்களின் சஞ்சாரத்தையும், அவை மக்கள் கூட்டத்தின் உடல்,மனம்,புத்தி மேல் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் தொகுத்து எழுதி வைத்துள்ளனர். அவற்றை கூட உருப்படியாக படித்தறியாமல் ஐந்தோ பத்தோ ஜோதிட பழமொழிகளை மட்டும் தெரிந்து வைத்து கொண்டு ஜல்லியடிப்பது தவறு.

கோசார பலன்கள்:

தினசரி,வார, மாத பத்திரிக்கைகளில் வெளி வரும் பலன்கள் யாவுமே கோசாரத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்படுகின்றன. கோச்சார பலன் என்பது தற்போது உள்ள கிரக நிலையை பொருத்து கூறப்படுவதாகும் . ஜாதகர் பிறந்தபோது இருந்த கிரக நிலையை பொருத்து ஜாதகம் கணிக்கப்படுகிறது . ஓஷோ கூறுவது போல் தாயின் மணிவயிறு ஒரு கேமரா . ஷட்டர் திறந்து எதிரிலுள்ள காட்சி ஃபிலிமில் பதிவாவது போல் சகல பாதுகாப்புகளுடன் தாயின் வயிற்றிலிருந்த குழந்தை வெளியே வந்ததுமேஅந்த நேரத்து கிரக ஸ்திதி அக்குழந்தையின் மீது அழுத்தமான முத்திரையை பதித்து விடுகிறது. அதற்கு பின் மாறும் கிரக நிலைகளின் (கோசாரம்)
பாதிப்பு என்பது புகைப்படத்தின் மீது படியும் தூசு போன்றதே.
ஆனால்பத்திரிக்கைகளும், இணைய தளங்களும் இதனை பெரிய விசயமாக்கி பலன்களை விரிவாக வெளியிட்டு தம் வியாபாரத்தை பெருக்கிக்கொள்கின்றன

கோசாரம் Vs தசாபுக்திகள் :

ஜாதகத்தை வாகனத்தோடு ஒப்பிட்டால் கோச்சாரத்தை சாலைக்கு ஒப்பிடலாம். மோசமான சாலையில் (தற்கால கிரக நிலை) பயணித்த மாத்திரத்தில் நல்லதொரு
வேகம் குறைந்து விடாது , புகையை கக்க ஆரம்பித்து விடாது . சக்கரங்கள் கழண்டு போகாது வாகனம் கவிழ்ந்து விடாது. ஏனெனில் அந்த வாகனத்தில் அதற்கான ஏற்பாடுகள் ( உதாரணமாக :ஷாக் அப்ஸர்வர்ஸ்) அற்புதமாக அமைந்திருக்கும். மோசமான ஒரு வாகனம் என்ன தான் சிக்ஸ் ட்ராக் சாலையில் பயணித்தாலும் அதன் வேகம் அதிகரித்துவிடப்போவதில்லை. இந்த எளிய உண்மையை அறியாது அல்லது இருட்டடிப்பு செய்து கோசார பலன் களை வெளியிடுவதும். அவை தவறும்போது வாசகர்கள் ஜோதிடத்தையே விமர்சிப்பதையும் பார்த்துக்கொண்டு தானிருக்கிறோம். இதனால் ஜோதிடத்தின் நம்பகத்தன்மையே குறைந்து விடுகிறது.

(பேர்) ராசி பலன்கள்:

ஜாதகர்கள் தாம் பிறந்த நட்சத்திரம் ,பாதம் பிரகாரம் ராசிகளுக்கு அறிந்து கொள்ளும் கோசார பலனே முட்டாள்தனமானது என்று நான் கூறுகிறேன். ஆனால் பல ஜோதிடர்கள் ஜாதகர் வந்து அமர்ந்ததும் பெயரை கேட்டு பலன் சொல்லி முடித்து விடுகின்றனர். நாய்க்கு டைகர் என்று பெயர் வைத்த மாத்திரத்தில் அந்த நாய் புலியாகிவிடுமா என்ன ? பெயர் என்பது LABLE மட்டுமே ..ஜாதகப்படி வைக்கப்பட்ட பெயருக்கு சொல்லும் பலனே 10 முதல் 20 சதவீதம் தான் பலிக்கும் என்ற நிலையில் இந்த பேர் ராசி பலன் களை என்னென்பது ?

திருமண பொருத்தம்:

தனிப்பட்ட பலன்களை ஏறுமாறாக கூறித்தொலைத்தாலும் ஓரளவு மன்னிக்கலாம். ஆனால் ஜோதிடர்களில் பலர் திருமணத்துக்கு பொருத்தம் பார்க்கும்போதும் வெறுமனே நட்சத்திரத்துக்கும், பெயருக்கும், செல்லப்பெயர், தொட்டிலில் போட்டபெயர் , அந்த கணம் முடிவு செய்த பெயர்களுக்கு பொருத்தம் பார்த்து பச்சைக்கொடி காட்டிவிடுகிறார்கள். இது அந்த மண மக்களுக்கே அல்ல அவர்கள் குடும்பத்துக்கும் , ஜோதிடத்துக்கும் செய்யும் துரோகமாகும். இப்படி டுபாகூர் பொருத்தங்கள் பார்த்து திருமணம் செய்து அவதி படுவதை விட சாமி முன்னே பூ போட்டு பார்த்து முடிவு செய்யலாம். அந்த சாமியாவது காப்பாற்றும். அல்லது பெரியார் வழிக்கு சென்று மருத்துவ சோதனை (முக்கியமாக ஹெச்.ஐ.வி ) செய்து முடிவெடுத்தால் பகுத்தறிவு வாதியென்ற பட்டமும் கிட்டும். ஐயா அவர்களின் புனித ஆத்மாவாவது அந்த தம்பதிகளை காக்கும். (ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா /மானவ சேவா மாதவ சேவா என்று வாழ்ந்த ஐயா அவர்களின் ஆத்மாவுக்கு அந்த சக்தி நிச்சயம் உண்டு)

அடைந்தால் மகா தேவி

ஒன்று ஒழுங்காக ஜாதகம் பார்த்து தோஷங்களை ஆராய்ந்து அதன் பிறகு நட்சத்திர பொருத்தம் பார்த்து ரஜ்ஜு,நாடி வெவ்வேறாக வந்தால் திருமணம் செய்ய வேண்டும். இல்லையா ஒன்று சாமி அல்லது ராமசாமி ! (பெரியார்) வழியை பார்த்துக்கொள்ள வேண்டும். அதை விட்டு டுபாகூர் ஜோதிடர்களிடம், டுபாகூர் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் மட்டுமல்ல கேணத்தனம்.

ஆஹா ! ஓஹோ ! பலன்கள்:

சில ஜோதிடர்கள் முகஸ்துதி செய்தே ஜாதகர்களை ஒழித்து கட்டிவிடுவார்கள். வெறுமனே சில பாடல்களை பாடி அந்த யோகம் இந்த யோகம் என்று அளந்து விடுவார்கள். அடிப்படையான விஷயங்களை மறைத்து விடுவார்கள். ஜாதகத்தில் ஆயிரம் யோகங்கள் இருந்தாலும் அதை அனுபவிக்கும் அமைப்பு அந்த ஜாதகத்தில் அமைந்திருக்க வேண்டும். முக்கியமாக லக்னம்,லக்னாதிபதி பலம் பெற்றிருக்க வேண்டும். லக்னம் முதல் 6,8,12 இடங்கள் காலியாக இருக்க வேண்டும். இந்த இடத்ததிபதிகள் லக்னாதிபதியை பார்ப்பதோ, அவருடன் சேர்வதோ கூடாது. முக்கியமாக லக்னாதிபதி நீசமடைதல், அஸ்தங்கதம் அடைதல் ,ராகு கேதுக்களுடன் சேருதல், பகை கிரகங்களுடன் சேருதல் இத்யாதி அமைப்புகள் கூடாது.

யோகத்தை அனுபவிக்க நிபந்தனைகள்:

ஏதோ ஒரு கிரகம் உச்சமானவுடனே அண்ட புளுகு,ஆகாச புளுகை அளந்து விட்டால் மயங்கி விடாதீர்கள். அந்த கிரகம் உங்கள் லக்னத்துக்கு யோககாரகனாகவோ ,கு.பட்சம் சுபனாகவோ இருக்க வேண்டும். நீசம்,ஹஸ்தங்கதம், மற்றொரு உச்சனால் பார்க்கப்படுவது போன்ற அவயோகங்கள் இருக்ககூடாது. நீங்கள் அந்த கிரகம் தொடர்பான துறை,தொழிலில் இருக்க வேண்டும். அந்த கிரகம் தொடர்பான மனிதர்களுடன் உறவாட வேண்டும். உங்களுக்கு இண்டியன் வங்கியில் கணக்கு திறந்து ஒரு நபர் அதி கோடி ரூபாய் போட்டிருந்தாலும் கு.பட்சம் ஏடிஎம் அட்டை வாங்கவாவது அந்த வங்கிப்பக்கம் போனால் தானே பணம் எடுக்க முடியும்.


நியூமராலஜி /நேமாலஜி :

அஸ்ட்ராலஜியில் கணக்கற்ற விதிகள் இருப்பதாலோ என்னவோ தொழில் முறை ஜோதிடர்களில் பலர் நியூமராலஜி /நேமாலஜிக்கு மாறிவிட்டனர். மக்களில் பலருக்கும்
முக்கியமாய் நடு வயதில்முன்னேறியவர்களுக்கும் பிறந்த தேதி இத்யாதி தெரியாத நிலையில் இவற்றிற்கு ஆதரவு பெருகி வருகிறது. (மேலும் ஜாதக நோட்டை தூக்கிகொண்டு அலையவேண்டி வராதே)

அஸ்ட்ராலஜி Vs நியூமராலஜி :/நேமாலஜி

அஸ்ட்ராலஜியில்கிரகங்கள், நியூமராலஜியில் எண்கள் அவ்வளவுதானே வித்யாசம் என்று நீங்கள் நினைக்கலாம். நியூமராலஜியில் உள்ள சிக்கல் என்ன என்றால் இதில் கூறப்படும் பிறப்பு எண் , கூட்டு எண், பெயர் எண்களுக்கு உரிய கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் வலிமையுடன் வீற்றிருந்தால் தான் நியூமராலஜி நிபுணர் (?) கொடுக்கும் ரிசல்ட் ஒர்க் அவுட் ஆகும். இல்லையென்றால் நீங்கள் கொடுத்த காசு காக்கா தூக்கிட்டு போனமாதிரிதான். இதே விதிதான் நேமாலஜிக்கும். உதாரணமாக சுக்கிரன் சுபனாக பலனளிக்கும் ஜாதகத்தில் நீங்கள் பிறந்திருந்து , சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தாலன்றி நேமாலஜிப்படி செய்யும் பெயர் மாற்றங்கள் இத்யாதி காதலிலோ,
திருமணத்திலோ வெற்றியை தராது.

அனுபவ அறிவு:

மேற்படி ரிஷிகள்,மகரிஷிகள் எழுதி வைத்த விதிகளை மனப்பாடம் செய்து கொண்டுவிட்டால் மட்டும் போதாது. அவை அனுபவத்தில் எந்த அளவு
பலிக்கின்றன என்பதையும் பார்க்கவேண்டும். அவர்கள் எதையோ தப்பாக எழுதியிருக்கக்கூடும் என்று நான் கூற வரவில்லை. அவர்கள் எழுதிய போது இருந்த அரசாங்கங்கள் வேறு, அன்றைய சமுதாயம் வேறு , அன்றைய வாழ்க்கை முறை வேறு, அன்றைய கல்வி முறை வேறு. குடும்ப அமைப்பு வேறு . அன்றைய மன அமைப்புகள் வேறு. அவர்கள் அந்த காலத்துக்கு பலன் எழுதி வைத்தார்கள். அவை இன்றும் அதே அளவில் உண்மையாகும் என்பதற்கு என்ன கியாரண்டி ? இதனால் தான் நான் என் ஜோதிட முறைக்கு அனுபவ ஜோதிடம் என்று பெயர் சூட்டியுள்ளேன். செவ்வாய் எட்டிலிருக்கிறார் என்று உடனே பலன் கூறிவிடாது அந்த செவ்வாய் கிரகம் கடந்த காலத்தில் தன் புக்திகளில் எந்த அளவு பாதித்துள்ளது என்பதை ரஃப் கேல்குலேஷன் மற்றும் கணிப்புகள் மூலம் கேள்விக்கணைகள் தொடுத்து அறிய வேண்டும் .ஜாதகரின் கல்வி,வேலை,குடும்ப பின்னணி, இவற்றையும் கருத்தில் கொண்டு பலன் கூற வேண்டும் .இதுவே அனுபவ ஜோதிடம் .

அவ்வாறன்றி "அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்கு போனதெல்லாம் வழி என்பது போல் பலன் சொல்லும் ஜோதிடர்களால் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கை நசிந்து போவதோடு ,தவறான வழி காட்டுதலால் கெட்டுப்போனவர்களின் சாபமும் வந்து சேரும்.

அடுத்த பதிவு:
அடுத்த பதிவில் ஜோதிடத்துக்கும் வாஸ்துக்கும் உள்ள தொடர்பென்ன ? வாஸ்து பெயரால் நடைபெறும் மோசடிகள் என்ன என்பதை விவரிக்க உத்தேசம்.நான் ரெடி நீங்க ரெடியா ?