ஒபாமாவை கவர்ந்த நமீதா நம் காந்தி தாத்தாவாம் ரீலுக்கு இல்லே அளவு !
இது உண்மையான கருத்தாக இருந்தால் 24 மணி நேரத்தில் ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்ப அழைக்க சொல்லுங்கள். இந்தியாவை அணு ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க சொல்லுங்கள். ஐ. நா. சபையை தம் வீட்டு புறக்கடையாய் பாவிக்கும் தன்மைக்கு விடை கொடுக்க சொல்லுங்கள். அங்கே ரூ.2,500 க்கு விற்கும் மருந்தை நம்மவர்கள் ரூ.250க்கு தயாரிக்க தடை கூறும் பேடெண்ட் சட்டத்தை தடை செய்ய சொல்லுங்கள். பாக்கிஸ்தானுக்கு கொம்பு சீவாது இருக்க சொல்லுங்கள். இலங்கையை தட்டி வைக்க சொல்லுங்கள். மனித உரிமைகள் பற்றி வாய் கிழிய பேசும் அமெரிக்கா இலங்கை தமிழர்கள் விஷயத்தில் மட்டும் மவுனம் காப்பது ஏன் என்று பதில் சொல்லட்டும் முதலில். தாத்தாவின் பெயரை சொல்லும் தகுதி கூட ஒபாமாவுக்கு கிடையாது.
உலக அமைதிக்கு ஒசாமா எப்படி ஒரு வில்லனோ ஒபாமாவும் ஒரு வில்லன் தான். இந்த அழகில் அவர் தன்னை காந்தி கவர்ந்ததாக கூறுவது வடிகட்டிய ஹிப்பாக்ரஸி. படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவில் என்றால் இதுதான்.