Thursday, July 9, 2009

ஜோதிடத்தின் நம்பகத்தன்மை குறித்த ஆராய்ச்சியில் பங்கு கொள்ளுங்கள்


உங்கள் ஜாதகத்தின் நகலை அனுப்பித்தந்தால் அதில் உள்ள முக்கியமான 5 அம்சங்கள் கொடுக்கும் பலன் கூறப்படும். அவை யதார்த்தத்தில் உண்மையாக நடந்தனவா இல்லையா என்பதை தெரிவிக்கவேண்டும் இதுவே நீங்கள் இந்த ஆராய்ச்சிக்கு தரும் ஒத்துழைப்பாகும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் ஜாதகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கீழ்காணும் ஏதேனு வலை தளத்தில் (www.freehoro.com , www.scientificastrology.com) லாக் இன் ஆகி ஜாதகம் போட்டு அதை கீழ்காணும் எனது மெயிலுக்கு (s_murugesan_67@yahoo.com swamy7867@gmail.com) அட்டாச் செய்து விடவேண்டியதுதான்.

தங்கள் ஜாத‌கம் கிடைத்த 24 மணி நேரத்தில் அதை ஆராய்ந்து ஐந்து முக்கிய அம்சங்களை நான் தெரிவிப்பேன்.அவை எத்தனை ச‌தவீதம் உண்மை என்பதை தெரிவித்தால் போதுமானது.

எனது 23 ஆவது வயதில் ஜோதிடம் சொல்ல ஆரம்பித்தேன். ஆந்திர மானிலம் சித்தூரை சேர்ந்த நான் ஒரு பி.காம் பார்ட்டி. பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவன். மூட நம்பிக்கைகளை கடுமையாக எதிர்ப்பவன். இருந்தாலும் இந்த ஜோதிடம் விஷயத்தில் இது பொய் என்று கூற முடியாத நிலையில் உள்ளேன். காரணம் 1989 முதல் (அப்போ நான் கற்றுக்குட்டி) நான் சொல்லி வரும் பலன் கள் 99.9 சதவீதம் நடந்து வருகின்றன.

பாரபட்சமின்றி எனது ஜோதிடம் பொய்த்த கதைகளையும் ஞா. வைத்துக்கொன்டு அதை என்னை புகழ்பவர்களிடம் சொல்லி "அடக்கி வாசிங்கப்பா" என்று கூறுமத்தனை ஸ்ட்ரெயிட் ஃபார்வார்ட் பேர்வழி நான். ஆனால் மனித ஞா என்பது பழுதுபட்ட ஒன்று. மேலும் எனது இந்த அனுபவத்துக்கு நான் ஒருவனே சாட்சி. என்னதான் ஸ்ட்ரெயிட் ஃபார்வார்ட் பேர்வழி என்றாலும் உலகம் நம்பவேண்டாமா ?

நான் அடிக்கடி உதிர்க்கும் முத்து "ஜோதிடம் பலித்தால் அது ஜோதிடத்தின் பெருமை. ஜோதிடம் பொய்த்தால் அது ஜோதிட‌னின் சிறுமை" ஜோதிட‌ம் ஒரு விஞ்ஞான‌ம் என்று ந‌ம்புகிறேன். அதை நான் நிரூபித்து விட்டால் ஜோதிட‌ம் பெய‌ரால் ந‌டைபெறும் மோச‌டிக‌ளை வெளிச்ச‌ம் போடும் வாய்ப்பு என‌க்கு கிடை‌க்கும். இதுவே என‌து ஆராய்ச்சியின் நோக்க‌ம்.