விகடன் குழுமத்தின் விபரீத போக்கு
பீடிக்கட்டுகள்,சிகரட் பாக்கட்டுகள் மீது வெளியிடுவது போல தமிழ் பத்திரிக்கைகள் மீதும் எச்சரிக்கை வாசகம் வெளியிட வேண்டிய அவசியம் விகடன் குழும பத்திரிக்கைகளால் ஏற்பட்டுள்ளது.
(மற்ற பத்திரிக்கைகள் எல்லாம் ஓக்கியம் ஒரு குளத்து நண்டு என்று கூறவில்லை. அவற்றையும் உப்பு மிளகாயை போட்டு கிண்டுவது விரைவில் நடை பெறும் . )
எந்த கதாநாயகன் எங்கே எந்த கதாநாயகியை எப்படி கவிழ்த்தான் என்ற அரிய செய்திகளை தரவே ஒரு தொடர் வருகிறது. (நல்ல காலம் எந்த ப்ராண்டு காண்டோம் உபயோகித்தான் போன்ற விவரங்களை தருவதில்லை. இன்னும் கொஞ்ச காலம் போனால் அவற்றையும் தமிழ் கூறு நல்லுலகம் தெரிந்து கொள்ளலாம்)
தற்போது 42 வயது காரனாகிய நான் என் இளமையில் இது போன்ற பலான விஷயங்களை படிக்க சித்தூர் பஸ் ஸ்டாண்டின் இருட்டு மூலைகளிலான பங்க் கடைகளில் தேடுதல் வேட்டை நடத்த வேண்டியிருந்தது. ஆனால் இப்போது விகடன் குழுமம் இன்றைய தலைமுறைக்கு அந்த சிரமத்தை எல்லாம் கொடுப்பதில்லை. அந்த தொடரில் வெளி வரும் அஜால் குஜால் வார்த்தைகளை எந்த பலான புத்தகத்திலும் நான் படித்ததில்லை. ரிப்போர்ட்டர்/உங்கள் ஹீரோ இப்படி தோடர் தலைப்பு வேறாக இருந்தாலும் உள்ளடக்கம் மட்டும் ஒன்றுதான்.
இந்த அழகில் ஜூலை 22 தேதியிட்ட ஜூனியர் விகடனில் ட்ராஃபிக் போலீஸின் வெப்சைட்டில் வயாக்ரா விளம்பரம் வெளிவந்துவிட்டதாக கவலைப்பட்டிருக்கிறார்கள் .அதே இதழில் வேறு சில பக்கங்களில் இழந்த சக்தி வைத்தியர்களின் விளம்பரத்தை வெளியிட்டிருப்பதை எந்த வகையில் சேர்க்க ?
கழுகார் பக்கத்தில் பாருங்கள் ! முதல் செய்தியே வீரப்ப மொய்லியின் ராமாயண வெளியீட்டு விழாவில் கலைஞர் கலந்து கொள்வதைப்பற்றித்தான். இதை ஜாதி புத்தி என்றால் தப்பா ! ஏற்கெனவே வயதாகிப்போய், ஈழத்தமிழ் விவகாரம் முதல்,குடும்பத்துக்கு மந்திரி பதவி கேட்டு தில்லிக்கு காவடி எடுத்தது வரை பேர் ரிப்பேராகி திராவிட இனத்துக்கே தூரமாகிப்போன கலைஞரை இப்படியெல்லாம் மொக்கை செய்தால் திராவிட இனம் முழுசாக அவரை தூக்கி எறிந்து விடாதா என்ற நப்பாசையா புரியவில்லை.
இப்படி ஒன்றல்ல இரண்டல்ல ஓராண்டு இதழ்களை என் முன் வைத்தால் ஆயிரம் விஷயங்களை முன் வைக்க நான் தயார். பதில் தர விகடன் குழுமம் தயாரா ?
திரு பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த போது:
எனது வலைப்பூவை படிப்பவர்களுக்கு இந்தியாவின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாக நான் தீட்டியுள்ள ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி தெரிந்திருக்கலாம். தெரியாதவர்கள் கூகுள் சர்ச்சிலோ அல்லது என் வலைதளத்திலோ தேடி ஒரு பாட்டம் படித்து விடுங்கள்.
இந்த திட்டத்தின் முழுவடிவத்தை ஒரு ஆடியோ கேசட்டில் பதிவு செய்து 1999 வாக்கில் ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். அதிலென்ன காந்தியாரின் கல்லூரி காதல்களையா பேசியிருந்தேன் உடனே பக்கம் 18/ உங்கள் ஹீரோ,ரிப்போர்ட்டர் மாதிரி பகுதிகளில் உடனே வெளியிட்டு விட . ஏதோ 10 கோடி வாலிபர்களாம்/சிறப்பு ராணுவமாம்/கங்கை காவிரி இணைப்பாம்.. யாருக்கு தேவை. எனவே கிடப்பில் போட்டு விட்டார்கள்.
நிருபர் வந்தார்:
நான் அந்த கேசட்டிருந்தால் வேறு யாருக்காவது அனுப்பலாமேஎன்ற உத்தேசத்தில் கேசட்டை திருப்பியாவது அனுப்பும்படி தபால் செலவுக்கு ரூ.10 எம்.ஓ அனுப்பினேன். ஆனாலும் விகடன் தரப்பிலிருந்து பதிலில்லாது போகவே காட்டமாக ஒரு போஸ்டு கார்டு எழுதினேன் . அது ஆசிரியராக இருந்த திரு பாலசுப்பிரமணியன் கண்களில் பட்டிருக்கிறது. உடனே அவர் ஜே.வி.நாதன் என்ற நிருபரை என்னிடம் அனுப்பினார். வந்த ஜே.வி.நாதன் கேசட்டு ஓஞ்சு போனதை பற்றியும் அதை எப்படி காம்பன்சேட் பண்ணுவது என்பதை பற்றித்தான் பேசினார். அதில் என்ன பதிவாகியிருந்தது. அதற்கும் இந்த நாட்டிற்கும் என்ன சம்பந்தம் இதெல்லாம் டாபிக்ல வரவே இல்லை. அப்புறம் பந்தாவாய் பேட்டியெல்லாம் எடுத்தார் .
அப்புறம் என்னாச்சு ? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !
படைப்புகள்மீது முடிவு தெரிவிக்கமாட்டார்கள். ஆனால் முடிவு தெரிவிக்க கோரி கொடுத்த விலாசம், மெயில் விலாசத்துக்கு தமது விளம்பரங்களை தொடர்ந்து அனுப்பி வெறுப்பேற்றுவார்கள். இதுவும் ஒரு பிழைப்பா என்று ஒரு பதிவு போட்ட பிறகுதான் விளம்பர தலைவலி ஒழிந்தது.