சகோதிரிகளை புணர்வதில் என்ன ஒரு ஆர்வமடா சாமி .முன்னொரு காலத்தில் அதாவது வலைப்பூவை அமைத்த புதிதில் வேதங்களின் தோலை உரிக்க எமனின் சகோதிரி எமனை பலான காரியத்துக்கு அழைத்த கூத்தை விவரித்திருந்தேன். இத்தனைக்கும் அந்த பதிவில் மொத்தமே 12 வரிகள் தான். ஆனால் தமிழ்கூறு நல்லுலகம் அந்த பதிவை எத்தனை தடவைதான் படித்ததோ எண்ணில் அடங்கவில்லை.
வேதம்,புராணம் என்றால் இதுதான் என்று முடிவு கட்டிவிடாதீர்கள். இன்றைக்கும் பின்பற்றக்கூடிய எத்தனையோ அம்சங்கள் உள்ளன.
வேதத்தின் பொருளைக்காட்டிலும் அதன் மாடுலேஷனில் தான் இருக்கிறது சூட்சுமம் என்று ஓஷோவும் கூறுகிறார். என்னை பொருத்தவரை மனித மனம் என்பது என்ன கடந்த காலத்தின் நினைவுகள், நிகழ்காலம் குறித்த விமர்சனங்கள்,எச்சரிக்கைகள்,எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகள் எல்லாம் அடங்கியதே . இவை யாவும் வார்த்தை வடிவத்தில் தான் பதிவாகியுள்ளன. ரீரைட்டபிள் சி.டி. இல்லாத பட்சத்தில் சாதாரண சி.டி.யில் ஏற்கெனவே உள்ளதை அழித்தாலன்றி புதிய ஃபைல்களை உள்ளிட முடியாது. அதை போல் மனித மனதை ஒழித்திட,(அதில் பதிவாகியுள்ள வார்த்தைகளை ) ஒரு வார்த்தை தேவைப்படுகிறது.
அந்த வார்த்தையே சில விசேஷ அம்சங்கள் கொண்டதாயிருந்தால் ?