"மனிதர்கள் ஸ்தூலமாக எந்த செயலில் இறங்கினாலும் சூட்சுமத்தில் அவன் செய்வது கொல்வது அ கொல்லப்படுவது என்ற இரண்டு செயல்களையே"
மேலும் குழந்தையின் மனதில் கலக்கப்பட்ட தான் என்ற எண்ணம் அதன் ஆத்மாவுக்கு (செல்ஃப்) மாற்றாக வலுப்படுகிறது. இதனால் சற்றே விழிப்புற்ற மனிதர்களின் ஆழ்மனதில் தமது ஒத்திசைவுக்கு ,இயற்கையுடனான ஒருங்கிணவுக்கு தத்தமது அகந்தையே காரணம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது. அகந்தை ஒழிந்தால் தம்மில் ஒத்திசைவுக்கும் ,இயற்கையுடனான ஒருங்கிணவுக்கும் வழி ஏற்படும் என்ற எண்ணத்தால் மனிதர்கள் ஒருவர் ஈகோவை அடுத்தவர் காயப்படுத்தி அழிக்கப்பார்க்கின்றனர். அகந்தையே தாம் என்ற எண்ணத்தில் வாழும் மனிதர்கள் தம் ஈகோ சற்று உரசிப்பார்க்க பட்டாலும் உயிரே போய்விட்டதாய் எண்ணி தவித்து போகின்றனர்.
ஆனால் சற்றே விழிப்புற்ற மனிதர்களாகட்டும் மந்தமான மனிதர்களாகட்டும் அறிந்து கொள்ளாத ஒரு ரகசியம் இருக்கிறது. அது ஏற்கெனவே அவர்கள் பரஸ்பர ஒத்திசைவுடன் தான் இயங்குகிறார்கள். இயற்கையுடன் பிணைக்கப்பட்டேதான் இருக்கிறார்கள் என்பதே
மனிதன் எப்போது (நாகரிகமடைந்த பின் வந்த தலைவலி இது) தான் இந்த படைப்பின் மையம் என்று பிரமிக்க துவங்கினானோ எப்போது அவனில் அகந்தை வலுப்பெற்றதோ அது முதல் அவனை மரண பயம் துரத்த ஆரம்பித்துவிட்டது. படைப்பின் மடியில் நிற்சிந்தையாக வாழ்ந்த மனிதன் கால கிரமத்தில் படைப்பின் மடியிலிருந்து இறங்கி தளர் நடை பயின்று ஓடினான் ஓடினான் செயற்கையின் எல்லைக்கே ஓடினான். இயற்கையின் குழந்தையாய் வாழ்ந்த போது மரணம் என்பது
அக்கணத்தில் நிகழக்கூடிய ஒரு சாதாரண நிகழ்வாக இருக்க, செயற்கை வாழ்வில் அகந்தை விஸ்வரூபம் எடுத்து விட்ட நிலையில் மரணம் ..அட சட் மரணம் குறித்த எண்ணமும் தாங்கொணாத துயரை தர ஆரம்பித்தது. மரணம் குறித்த நினைவுகள் அவன் வாழ்வை பாதிக்க துவங்கி விட்டன.
பாரதம் சுதந்திரம் பெறுவதற்கு சற்று முன் ப்ளேக் வியாதி பரவிய போது கூட மக்கள் லட்சக்கணக்கில் செத்தனர். ஏனென்றால் அது மனிதனில் அகந்தை வலுப்பெறாத காலம் அது. இப்போதும் சரி ஒரு கோழிப்பண்ணையில் ஒரு கோழிக்கு நோய் கண்டால் அந்த பண்ணையில் உள்ள அனைத்து கோழிகளுக்கும் வியாதி பரவி செத்துப்போகின்றன். எஸ்.டி.க்கள் வாழும் தாண்டாக்களில் தொற்று நோய் வேகமாக பரவுகிறது. ஏனென்றால் அவர்களில் அவர்களிடையே ஊண கண்களுக்கு தென்படாத ஒரு இணைப்பு இருக்கிறது. அவர்கள் தமக்கு நிகழ்வதை எள்ளத்தனை கூட மன அளவில் எதிர்ப்பதில்லை. தொற்று நோய்கள் கிராமங்களில் பரவுமத்தனை வேகமாய் நகரங்களில் பரவுவதில்லை ஏனென்றால் நம்மிடையே அந்த ஒத்திசைவும்,ஒருங்கிணப்பும் இல்லை. அந்த லிங்க் கட் ஆகிவிட்டது. அதை கட் செய்தது நம் அகந்தை தான்.
புனரபி மரணம் புனரபி ஜனனம்:
மரணம் என்பது ஒரு சாதாரண நிகழ்வு. புனரபி மரணம் புனரபி ஜனனம். ஆனால் அகந்தை நிறைந்த மனது மரணத்தை எதிர்க்கிறது. இந்த எதிர்ப்பினால் மரணம் வலிமையானதாக மாறியது. இவ்வாறாக விஸ்வரூபம் எடுத்த மரணம் மனிதனை, மனித மனத்தை விரட்டுகிறது. இந்த மரண பயத்திலிருந்து விடுதலை பெற ஒரே வழி மரணமடைதல் தான். மரணமுற்றவனுக்கு தான் மரண பயமிருக்காது. ஒரு புறம் மரண பயம் நடு நடுங்க செய்தாலும், மறுபுறம் இயற்கையுடனான ஒருங்கிணைப்புக்கு தடையாக தான் கருதும் உடல் மரணத்தால் உதிர்ந்து போகும் என்ற எண்ணம் மனிதனை மரணம் நோக்கி நடத்த ஆரம்பித்தது.
இருள் மரணத்தின் அடையாளம். தனிமை மரணத்தின் நிழல். இதரருடன் தொடர்பு கொள்ள முடியாது போவதும் மரணத்தின் நகலே. அதனால் தான் மனிதன் நெருப்பை பூசித்தான். சூரிய சந்திரர்களை பூசித்தான். கும்பலாகவே வாழ்ந்தான். காடுகள் அவன் அந்தரங்கத்திலான விருப்பத்தை (கொல்லுதல் அ கொல்லப்படுதல்) முழுமையாக நிறைவேற்றியது. இயற்கையுடனான ஒத்திசைவு, மரணத்துடனான அந்த கண்ணாமூச்சி ,எக்கணமேனும் மரணம் என்ற நிலை ,கும்பலாக வாழும் தன்மை ஆகியனஅவனை அமைதிப்படுத்தின.
காலமே காலன் - காலாதீத நிலையே சுவர்கம்:
செக்ஸின் போது வீரியம் நழுவும் போது கிட்டும் காலாதீத நிலை (ப்ளாக் அவுட்) மரணம் போன்றே இருந்ததால் அதன் மீதான ஆர்வம் மனிதனை செக்ஸில் இறங்க செய்தது.
-------------------
ஆண் பெண்களில் சுய பால் தனமையுடன் எதிர்பால் தன்மையும் உண்டு. சுய பால் தன்மை பதிக்கு சற்று அதிகமாகவும் (60 %)எதிர்பால் தன்மை சற்றே குறைவாகவும் இருக்கும். உதாரணமாக பெண்ணில் ஆண் தன்மை 40 %(10 சதம் குறைவு) , ஆணில் பெண் தன்மை 40% (10 சதம் குறைவு). இதன் படி பார்த்தால் எந்த ஆணும் முழு ஆண்மகன் கிடையாது. எந்த பெண்ணும் முழு பெண் கிடையாது.ஒரு ஆணும் பெண்ணும் இணையும்போது இந்த பற்றாக்குறை நிறைவு செய்கிறது. இவனில் உள்ள ஆண் தன்மையும் அவளில் உள்ள ஆண் தன்மையும், இவளில் உள்ள பெண் தனமையும், அவனில் உள்ள பெண் தன்மையும் இணையும் போதுதான் நிறைவு ஏற்படுகிறது . இதுவும் இணைப்புக்கான துடிப்பை அதிகரிக்கிறது
-------------------
மனிதன் சஞ்சார வாழ்க்கையை மேற்கொண்டிருந்த வரையில் பெரிதாக பிரச்சினைகள் ஏதுமின்றி மனிதனின் ஆழ் மனதின் அடிப்படை இச்சைகள் நிறைவேறிவந்தன.(கொல்லுதல் /கொல்லப்படுதல்)
ஸ்திரவாசம்:
பின்பு ஏற்பட்ட ஸ்திரவாசம் தான் மனித வாழ்வின் எதிர்கால பிரச்சினைகள் அனைத்துக்கும் அடிக்கல் நாட்டியது. விவசாயத்துக்கு ஏற்றதாய் சீர்திருத்திய நிலம், அதிகப்படி விளை பொருள் ஆகியன தனியார் சொத்தாக உருவாகின. இவை தனது வாரிசுகளுக்கே சேர வேண்டும் என்ற ஆணின் எண்ணம் பெண்ணடிமைக்கு அடிகோலியது. குடும்ப அமைப்பு தோன்றியது. செக்ஸ் இரண்டாம் பட்சமாக மாறி வாரிசை உருவாக்குவதே முதல் லட்சியமானது. செக்ஸ் என்பது ஏறக்குறைய தடை செய்யப்பட்டுவிட்டது. (அந்த காலத்தில் மருத்துவத்துறையில் இன்றைய அளவுக்கு முன்னேற்றம் இல்லாததால் குழந்தை பேறின் போது மரணங்கள்,குழந்தை மரணங்கள் அதிகம். யுத்தங்களில் போரிட, விளை நிலங்களில் பாடுபட மனித வளம் பெரிய அளவில் தேவைப்பட்டது. மேலும் குடும்ப கட்டுப்பாடு முறைகளும் கிடையாது. எனவே பெண் குழந்தைகள் பெறும் இயந்திரமாக மாறினாள் . செக்ஸுக்கு வாய்ப்பு மேலும் குறைந்தது.
யுத்தங்கள் எதிர் குழுக்களின் தாக்குதலின் போது தவிர மனிதனின் கொல்லும், கொல்லப்படும் இச்சை நிறவேறும் வாய்ப்பும் குறைந்தது .மனிதனின் அடிப்படை இச்சைகளான கொல்லும்,கொல்லப்படும் இச்சைகள் நிறைவேறாத நிலை ஏற்பட்டது
ஆணின் வாரிசு மோகத்தால் பெண் கைதியானாள். காட்டில் வாழ்ந்த வாழ்வில் ஆணுக்கு சமமான உடல் பலம், துணிச்சல் கொண்டவளாக இருந்த பெண் நாட்டிலான வாழ்வில் உடல் பலத்தை இழந்தாள். இயற்கை அந்த நசிவை ஈடுகட்ட அவளை மானசிகமாக வலுப்படுத்தியது. அவளில் பாதுகாப்பற்ற தன்மை அதிகரித்தது. உடல் ரீதியான, (+மன ரீதியான ) பலவீனமே பாவங்களின் கங்கோத்ரி என்பதால் பெண் சதிகாரியாக மாறினாள்.இதனால் ஆண்,பெண்கள் திருமண பந்தத்தையும் மீறி தனிமையை அனுபவிக்க வேண்டியதாகி விட்டது. இயற்கையுடன் இணையத்துடித்த ஆண் பெண்கள் தமக்குள்ளேயே தனிமைப்பட்டு போனார்கள் .தனிமை மரணத்துக்கொப்பானது என்பதை ஏற்கெனவே கூறியுள்ளதை நினைவு படுத்திக்கொள்ளவும்.
செக்ஸுக்கு மாற்று:
கொல்லுதல்/கொல்லப்படுதல் அதற்கு மாற்றான செக்ஸ் ஆகியன ஏறக்குறைய தடை செய்யப்பட்டுவிட்ட நிலையில் தனது அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள மனிதனுக்கு மாற்று ஏற்பாடு தேவைப்பட்டது.
அதே சமயத்தில் ஒரு குழு விளைவித்த அதிகப்படியான விளை பொருட்களை கொடுத்து மற்றொரு குழுவினரிடம் உள்ள த்மக்கு தேவையான விளை பொருட்களை பெற பண்ட மாற்று முறை ஏற்பட்டது, பின் தங்க,வெள்ளி நாணயங்கள் அமலுக்கு வந்தன. பணம் உருவானது. செக்ஸில் கிடைக்கக்கூடிய அனைத்து உணர்வுகளும் பணத்தில் கிடைப்பதை மனிதனின் ஆழ்மந்து உணர்ந்து கொண்டது. செக்ஸுக்காவது மற்றொரு துணை தெவைப்படுகிறது. பண விஷயத்தில் அதுவும் கிடையாதே..
நேரிடையாக கொல்லவும்,கொல்லப்படவும் உடல் பலம், தைரியம் தேவைப்பட்டது. செக்ஸில் இவற்றின் தேவை குறைவுதான் என்றாலும் கட்டாயம் தேவை. ஆனால் பணம் சம்பாதிக்க இது ஏதும் தேவைப்படாத நிலை ஏற்பட்டது. எதிரியின் அகந்தையை திருப்தி படுத்தினாலே பணம் சம்பாதிக்க வாய்ப்பு இருந்தது. சில காலம் தன் ஈகோவை கொன்று (தன்னை) பணம் சம்பாதித்து விட்டால் பிறகு பணம் பணத்தை சம்பாதிக்க துவங்கிவிடுவதை கண்டான் அப்போது தன்னை கொன்று தான் ஈட்டிய பணத்தை கொண்டு பிறரை கொல்லும் சுகம் கிடைத்தது. செக்ஸுக்கு மாற்றாக மனிதன் உணர்ந்த பணத்தின் பாதிப்பு எந்த அளவுக்கு உயர்ந்ததென்றால் எதற்கு மாற்றாக பணத்தை ஈட்ட ஆரம்பித்தானோ அந்த செக்ஸையே மறந்து போகுமத்தனைக்கு பணம் மனிதனை பாதித்தது.
இதுவரை படித்த பதிவின் சாரத்தை மீண்டும் ஒரு தரம் ஓட்டிப்பாருங்கள்:
1.சகல உயிர்களும் முதலில் ஓருடல் ஓருயிர் என்ற நிலையில் இருந்தன.
2.பின் பரிணாம வளர்ச்சியில் பல உடல் பல்லுயிராக பிரிந்தன
3.மீண்டும் ஒன்று சேர துடிக்கின்றன.
4. அந்த மறு இணைப்புக்கு தத்தமது உடலே தடை என்று பிரமிக்கின்றன.
5. உண்மையில் அனைத்து உயிர்களையும் கண்ணுக்கு தெரியாத ஒரு தங்க நூல் சரிகை பிணைத்துத்தான் வைத்துள்ளது.
6.ஆனால் ஈகோ அதை உணர மறுக்கிறது. தான் பிரிந்தே இருப்பதாய் எண்ணச்செய்கிறது. ஒன்றிணைய துடிக்கச்செய்கிறது. அதற்கு தடை உடல் என்று பிரமிக்கச்செய்கிறது.
7.எனவே தான் மனிதர்கள் தம் உடலை உதிர்க்க துடிக்கின்றனர். அதனால் எச்செயலுக்கு பின்னும் மனிதனின் கொல்லு அல்லது கொல்லப்படும் இச்சையே இருக்கிறது
8.சற்றே விழிப்புற்றவர்கள் இணைவுக்கு தடை அகந்தை தான் என்பதை உள்ளூர உணர்ந்து தம் அகந்தையை உதிர்க்கும் தைரியம் போதாது (அது தான் தான் என்ற எண்ணம் ஈகோவை உதிர்க்கும் செயலை தற்கொலையாகவே எண்ணி நடு நடுங்கி போகிறாது.) பிறரின் ஈகோவை உதிர்க்க முயற்சி செய்கின்றனர். முட்டாள்கள் சதா சர்வகாலம் எதிராளியின் ஈகோவை உரசி பார்ப்பதில் திருப்திய்ற்று விடுகின்றனர். இதனால் தத்தமது ஈகோ மேலும் வலுப்பெறுகிறது என்பதையும் மறந்து விடுகின்றனர்
9.மனிதன் காடுகளில்வசித்தபோது சுதந்திரமாய் கொல்வதும் கொல்லப்படுவதுமாய் வாழ்ந்தான்.
10. ஓரளவு நாகரீகம் அடைந்த பிறகு கொல்வதும்,கொல்லப்படுதலும் குறைந்து போயின. பிறகு செக்ஸில் கிடைக்கும் மரணமொத்த காலாதீத நிலை மீது கவர்ச்சி கூடியது.
11. ஸ்திரவாசம், நாகரிகம்,வாரிசுக்கான தவிப்பால் செக்ஸ் பெறுதலில் பிரச்சினை ஏற்பட்டது .
12. கூடுதல் விளைபொருட்கள்/பண்டமாற்று/தங்க வெள்ளி நாணயங்கள் /பணம்/செக்ஸுக்கான மாற்றாக பணம்/ தற்போது செக்ஸையே மறக்கடிக்குமளவுக்கு பணத்தின்கவர்ச்சி