ஆம். குற்றங்களை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஒரு மெயில் மூலம் ஆந்திர உள்துறை அமைச்சகத்துக்கு மெயில் மூலம் தெரிவித்திருந்தேன். அதற்கு தங்கள் மெயில் கிடைத்தது . சிறிது காலத்திற்கு பின் விரிவான பதில் தருகிறோம் என்று பதில் வந்தது.
இதற்கிடையில் மேற்படி மெயிலில் நான் குறிப்பிட்டிருந்த ஒரு அம்சம் குறித்து உள் துறை மந்திரி சபீதா இந்திரா ரெட்டி ஒரு சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளார். அந்த அம்சம் " குற்றங்களை தடுத்திட கிராமம்,வார்டு அளவில் ஒரு கமிட்டியை நியமிப்பதே.
ஆ.இராசாவுக்கு மெயில்:
இதற்கிடையில் இந்தியாவின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக நான் தீட்டிய எனது"ஆப்பரேஷன் இந்தியா 2000" திட்டம் குறித்த விவரங்களையும் மத்திய தகவல் தொழில் நுட்ப மந்திரி ஆ.இராசா அவர்களுக்கும் அனுப்பியுள்ளேன்.
எனது எந்த மெயிலுக்கும் மத்திய ,மானில அரசுகள் பதில் தராத நிலையில் இது பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது என்பதை சொல்லவும் வேண்டுமோ
குறிப்பு:"ஆப்பரேஷன் இந்தியா 2000" திட்டம் குறித்த முழு விவரங்களையும் அறிய விரு்ம்புவோர் எனது முந்தைய பதிவை பார்க்கவும்.