என் வாழ்வையும் அங்காடி நாயாய் என்று வருணிக்க முடியும். இதரருக்கும் எனக்கும் என்ன ஒரு வித்யாசம் என்றால் அவர்கள் தான்,தனது,தன் குடும்பம் மிஞ்சிப்போனால் தன் நட்பு உறவு என்று உழலுகின்றனர். நான் முதற்கண் எனது நாடு விதி,ஆயுள் அனுமதிப்பின், எனது உலகம் என்று உழலுகின்றேன். இங்கே ஒரு தமாஷ் என்னவென்றால் என் முயற்சியில் நான் தோற்றாலும் அது வரலாறு. இவர்கள் முயற்சியில் வென்றாலும் அது டுபாகூரு.
நான் யார் ? ஒரு ப்யூராக்ரட்டின் மகன் அதிலும் ஒரு மெமோ கூட வாங்காது 58 வயது வரை உழைத்த ப்யூராக்ரட் என் தகப்பன். என் தாய் யார் ? கணவனே கண் கண்ட தெய்வம் என்று வாழ்ந்து யூட்ரஸ் கேன்ஸருக்கு உடனடி சிகிச்சை கிடைக்காது அவசரமாய் தெய்வமாகிப்போனவள்.
நான் பிறந்த ஜாதி ? விளக்கெண்ணைக்கு பிரபலமான ஜாதி. என் படிப்பென்ன ? கேவலம் க்ளர்க்குகளை தயாரிக்க மெக்காலே பிரபு அறிமுகம் செய்த படிப்பு, நான் தேங்கி போக இப்படி எத்தனையோ வழிகள் இருந்தாலும் ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றும் துடிப்பும், அதை செயல் படுத்தும் துணிவும் என்னில் பிறக்க காரணமான காரணம் எதுவோ அதுவே என் முயற்சியில் வெற்றியையும் கொடுக்கும்,
அட தோற்றுத்தான் போகட்டுமே. என்ன போச்சு ? என்னை பொருத்த வரை நிறைவாக உணர்கிறேன். என் சக்திக்கு பலமடங்கு அதிகம் முயற்சித்தேன். எத்தனை கீழுக்கு இறங்கவேண்டுமோ அத்தனை கீழுக்கு இறங்கினேன். என் நோக்கம் என்ன இவர்களின் பிரச்சினைகள் பிரச்சினைகளே அல்ல இருப்பது ஒரே பிரச்சினை அது ஏழ்மை. அதை ஒழிக்க வழி கண்டேன். இவர்கள் எனக்கு காது கொடுக்க வேணுமே என்று சுய இன்பம் முதல் ஹோமோ செக்ஸ் வரை பேசினேன். இருந்தும் என்ன புண்ணியம் ? இன்றும் நான் இவர்களுக்கு அன்னியம்.