எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே (14 வயது) மஞ்சள் விளக்கின் கீழ் வரவேண்டும் என்ற துடிப்பு எனக்கு இருந்தது.(There is a mystic link between sexual urge and this instinct) என் ராசி சிம்மம் என்பதாலோ அல்லது என் ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றதாலோ இந்த துடிப்பு பிறந்ததாக கூறலாம். ஆனால் மனிதனாய் பிறந்த ஒவ்வொருவனுக்குள்ளும் இந்த துடிப்பு உள்ளது. இன்றைய கவைக்குதவாத தமிழ் படங்கள் வெற்றி பெற மனிதனாய் பிறந்த ஒவ்வொருவனுக்குள்ளும் இந்த துடிப்பு தான் காரணம். கையாலாகாத ரசிகன் ஹீரோவின் இடத்தில் தன்னை கற்பித்துக்கொண்டு ஒரு க்ரூர திருப்தியை பெறுகிறான். ஏறக்குறைய ப்ளூ பிலிம் பார்க்கும் மனோதத்துவம் தான் இது.
உடல் உறவில் தான் ஈடுபடுவதற்கும், பார்ப்பதற்கும் வித்யாசமிருக்கிறது, பிரபல தெலுங்கு எழுத்தாளர் எண்டமூரி கூறுவார். 99.9 சதம் பேர் பிறர் செய்வதை புகழ்ந்தவாறும்,விமர்சித்தவாறும் தம் வாழ் நாளை வீணாக்கிவிடுகிறார்களாம். ...க்கிற நாயை பார்த்தால் பார்க்கிற நாய்க்கு கேவலமாம். அப்படி எவரேனும் தப்பி தவறி ஏதேனும் லட்சியத்துடன் எதையேனும் செய்ய முயன்றால் நக்கல் அடிப்பதே தமிழ் சமுதாயத்தின் இயல்பு.
மனிதன் பிறப்பது ஒரு முறை மட்டுமல்ல. பல்லாயிரம் முறை பிறந்து இறந்த அனுபவம் அவனது ஞா சில்லுகளில் இருக்கிறது. மரணம்,மரண பயம் அவனை விரட்டியபடியே இருக்கிறது. எனவே தான் ரிஸ்க் எடுக்க அஞ்சி செத்துப்போன வாழ்க்கையை வாழ்ந்து விடுகிறான். எலக்ட்ரிக் உபகரணம் போலவே ஆன் ஆஃப் ஸ்விட்ச் மனிதனிலும் உள்ளது. தனது செத்த வாழ்வில் சலித்துப்போகும்போதுதான் அவன் கொலைக்கோ,தற்கொலைக்கோ இறங்கிவிடுகிறான்.
தான் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதை தனக்கு தானே நிரூபித்துக்கொள்ள ஒன்று சாகிறான் அல்லது சாகடிக்கிறான். லைட்டுக்குள் வர எண்ணுவதும் பிறரை கொல்லத்தான் (பொறாமையால்) அதற்கான முயற்சிகள் தற்கொலைக்கு ஈடாக இருப்பது இயல்பே.
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி "life is relationshiப்" என்றார். அதாவது நான் உங்களை தொடர்பு கொண்டாலன்றி நான் உயிர்த்திருப்பது தங்களுக்கு தெரியாது. கு.ப.என் அடிமனம் கூட நம்பாது. உயிரினங்களின் அடிப்படை நோக்கம் ஒன்றே !
நாம் அனைவரும் என்றோ,ஏதோ ஒரு வடிவத்தில் சேர்ந்திருந்தோம். அந்த ஒருங்கிணைப்பில் ஒரு பாதுகாப்பை உணர்ந்தோம். ஒரு மகா வெடிப்பினாலோ , Evolutioந் காரணமாகவோ பிரிந்து விட்டோம். இணைய துடிக்கிறோம், அதற்கான முயற்சியே கம்யூனிகேஷன். தன் இதயத்துடிப்பு சமுதாயத்தின் செவிட்டு காதுகளில் அஞ்சலாக உதவும் என்ற காரணத்தால் தான் மனிதன் பணத்துக்கும்,அதிகாரத்துக்கும்,ஆயுதத்துக்கும் அலைகிறான். படைப்புடனான இணைப்புக்கு தடை இந்த உடல் என்று பிரமித்து, இதை உதிர்க்கவே கொலை,தற்கொலை செய்யும் தகிரியம் போதாது தவணையில் சாகிறான். கேப்பிடேஷன் ஃபீ கட்டி படிப்பது தற்கொலையல்லாது வேறென்ன ?
ஈழத்தில் சகோதரர்கள் செத்துக்கொண்டிருக்க, அந்த படுகொலைக்கு ஆயுதம் வழங்கிய மத்திய ஆளுங்கட்சிக்கும், அதற்கு துணை போன மானில ஆளுங்கட்சிக்கும் வாக்களித்ததை இப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்த படைப்போடு நாம் அனைவரும் பின்னிப்பிணைந்துள்ளோம். அதை மறக்க வைத்திருப்பது அகந்தை, தன் என்ற எண்ணம், தான் வேறு இந்த படைப்பு வேறு அன்ற தப்பெண்ணமே தவிர உடல் அல்ல.
எத்தனை புகழ் ஈட்டினாலும்,பணமழையே கொட்டினாலும் உலகுடன் உறவாட தடையாயிருப்பது தான் என்ற எண்ணமே. அதை விட்டால் கொலை தற்கொலை எண்ணங்கள் ஃபணாலாகி விடும்