Sunday, July 5, 2009

INDO Vs PAK :அங்கே சப்பாத்தி கிடைக்காம சாவறான்.. இங்க சோத்துக்கில்லாம சாவறான்.

உலகிலிருந்து வறுமை ஒழிய வேண்டும்
ஆம். இன்று உலக நாடுகள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளில் 99.9 சதவீதம் வறுமையால் முளைத்தவையே. இன்னபிற திமிர் காரணமாய் வரும் பிரச்சினைகளை .1 சதவீதத்தில் அடக்கிவிடலாம். இது கூட முக்கியமாக அமெரிக்க நாட்டில்தான் அதிகம்.

முதலில் வீட்டுக்கொருகார், பின் ஆளுக்கொரு கார், பின் விடுமுறைக்கு மற்றொரு கார் என்று கடனில் பிறந்து ,கடனில் வாழ்ந்து கடனில் சாகும் நாடோடிப்பயல்களுக்கு ஹவுசிங் லோன் கொடுத்தால் திரும்புமா ? இதெல்லாம் திமிரால் வந்த பிரச்சினைகள் தான். மற்றொன்று அமெரிக்கா தனது வருமான மார்கங்களில் முக்கியமானதாய் கருதுவது ஆயுத விற்பனையை. சமீப காலமாய் அக்கம் பக்கத்து நாடுகளை குண்டு போட்டு அழித்து ரீ கன்ஸ்ட்ரக்ஷன் காண்ட்ராக்டுகளையும் வருவாய் ஈட்டும் மார்கமாக்கிக்கொண்டது.

நாய் விற்ற காசு குறைக்காது என்று இறுமாந்திருந்த அமெரிக்காவுக்கு வளர்த்த கடா மாரில் பாய்ந்த கதையாய் அது ஊட்டி வளர்த்த அல்கொய்தா கொடுத்த அடி உங்க வீட்டு எங்க வீட்டு அடி அல்ல. இன்று அமெரிக்கா , இஸ்லாம் இடையில் விரோதங்கள் இல்லை என்ற மாத்திரத்தில் கடந்த கால புண்கள் ஆறிவிடுமா என்ன ?

முன்னொரு காலத்தில் குவைத்தின் அமெரிக்க அடி வருடி தனத்துக்கு தாளம் போட்டு ஈராக் இறையாண்மையில் தலையிட்டு சூடு கண்ட அமெரிக்கா இந்த ஒரே காரணத்துக்காக ஈராக்கை சுடுகாடாக்கி,சதாமை (உலகின் ஒரே ஆண்மகன்) தூக்கிலிட்ட சரித்திரத்தை முஸ்லீம்கள் மறப்பது மறுபக்கம் என் போன்ற காஃபிர்கள் கூட மறப்பது அசாத்தியம்.

நிற்க உலக வறுமை பற்றி பேச வந்து சற்றே டைவர்ட் ஆகிவிட்டது. ஆனால் மேற்சொன்ன அமெரிக்க தான் தோன்றித்தனம் கூட உலக வறுமைக்கு ஒரு காரணம்.

நான் மட்டுமே லாப மீட்ட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் அமெரிக்காவையே திவாலாக்கி வருகிறது. வாழு வாழவிடு. இதுதான் வாழ்க்கை விதி. ஈராக் தான் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய்க்கு விலை நிர்ணயிக்கும் உரிமையை பெற்றுள்ளது. இதை குவைத் மூலம் குலைக்க அமெரிக்கா முனைந்ததால் தான் ஈராக் யுத்தம்.

அன்று அல்கொய்தா ..இன்று பாக்கிஸ்தான். ஊட்டி ,ஊட்டி வளர்த்து வரும் பாக் என்னைக்கு அமெரிக்காவுக்கு அல்வா கொடுக்க போவுதோ தெரியலை. சரி சுத்தி வளைப்பது ஏதுக்கு . உலக அமைதி சாத்தியமானால் உலக வறுமை ஒழியும். அமைதிக்கு என்னவழி.

இந்திய,பாக் நாடுகளிடையே தகராறுள்ள நிலபாகத்தை (ஆக்குபைட் காஷ்மீர்/ஆஜாத் காஷ்மீர்) ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைத்துவிட்டு இரண்டு நாடுகளும் உருப்படும் வழியை பார்த்துக்கொள்ள வேண்டும். ரெண்டுக்கும் ஒரே வித்யாசம் அங்கே சப்பாத்தி கிடைக்காம சாவறான்.. இங்க சோத்துக்கில்லாம சாவறான்.

முதல்ல அமெரிக்கா வருமானத்துக்கு வேற வழி பார்த்துக்கனும்.(ஆயுத விற்பனைய ஏறக்கட்டிடனும்). ஒரு 5 வருடங்களுக்காவது எந்த தகராறு இருந்தாலும் அப்புறம் பார்த்துக்கலாம்னு ஒரு சீஸ் ஃபைர் ஒப்பந்தம் வரணும். ஈராக்லருந்து வெளி்யேறனும். ஊருக்கு நாட்டாமை பண்றத ஏறக்கட்டிட்டு தன் கோவணத்தை துவைக்க பார்க்கனும். பி.டி.காட்டன் விதைகள் மாதிரி ஊர்வம்பை விலைக்கு வாங்கி ,ஊரான் வயித்துல அடிக்கிற திட்டங்களை ஊத்தி மூடனும்.

இப்படி எத்தனையோ செய்ய வேண்டியிருக்கு. எல்லாத்தயும் எல்லாருமா செய்தா அமைதி திரும்பும் .வறுமை ஒழியும். பூ லோகமே ஸ்வர்கமா மாறும்