Monday, July 27, 2009

புட்டபர்த்தி சாயி பாபா குறித்த புருடாக்கள்

சரித்திரத்தில் முதலாம் ஜார்ஜ் இரண்டாம் ஜார்ஜ் போல, சங்கராச்சாரிகளில் சீனியர்,ஜூனியர்,சப் ஜூனியர் என்றிருப்பது போல சாயி பாபாவிலும் உண்டு. புலியை பார்த்து நரி சூடு போட்டுக்கொண்ட கதை தெரியுமா ? அதுவே தான் ஷீரடி பாபாவின் கதையை கேள்விப்பட்ட சிறுவன் நான் தான் பாபா என்று பீலா விட புட்டபர்த்தி பாபா உருவானார். உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ புட்டபர்த்தி பாபாவுக்கும் ஒரு ஜூனியர் உள்ளார் (சப் ஜூனியர்) அவரை பாலசாயிபாபா
என்கிறார்கள். அதே பரட்டை தலை.அதே சாயல். பால என்றால் பத்து பதினைந்து வயது என்று நினத்துவிடாதீர்கள் மனிதருக்கு 50க்கு மேல் வயதிருக்கலாம்.

நிற்க புட்டபர்த்திக்காரர் சமீபத்தில் முதல்வர் வீட்டுக்கு வ்ந்து ஒரு மோதிரம் கூட வரவழைத்து (கூரியரிலல்ல) கொடுத்து சென்றார். இயற்கை கொடுத்த இளமையே போய்விட்ட நிலையில் பெரியார் கொடுத்த நாத்திகமும், பகுத்தறிவுமா நிலைத்திருக்க போகிறது. முதல்வரும் பாவம் தேமே பார்த்துக்கொண்ட்ருந்துவிட்டார்.

உடனெ கேரோ மீட்டரில் வைத்து அதன் தரத்தை பார்த்திருக்க வேண்டாமோ? உட்புறம் எந்த கடையின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறாது என்று என்று பார்த்திருக்க வேண்டாமோ? பாபா இருக்கையில் எதற்கு கோலார் தங்கவயல் எல்லாம் ? இழுத்து பூட்ட வேண்டாமோ ?

பல காலத்துக்கு முன்பு நான் பத்திரிக்கைகளில் படித்த செய்தி :
ரஷ்ய குடும்பம் ஒன்று பாபா தரிசனத்துக்கு வருகிறது. அதி ஒரு (ரஷ்ய )சிறுவனும் இருக்கிறான். பாபா பந்தாவாய் அவன் தலை மேல் கை வத்து ஆசீர்வதித்து "உனக்கு என்ன வேணும் கண்ணா" என்றார். சிறுவன் கேஷுவலாக " கப் ஆஃப் காஃபி" என்றான்.பாபா ஏன் அவனிடம் நிற்கிறார் ? வுட் ஜூட் ! மோதிரம், செயின் என்றால் எப்படியோ ஒரு வழியா மேனேஜ் பண்ணலாம். காஃபிய எங்க வச்சுருந்து எப்படி கொடுக்கிறதாம்

சுவர்கத்தில் அச்சிடப்பட்ட பைபிள்:
கிறிஸ்தவர் ஒருவருடன் பாபா வாக்கிங் போகும்போது நடந்தது. ஓரிடத்தில் பாபா சடன் ப்ரேக் போட்டாற்போல் நின்றார் . கூட வந்தவருக்கு ஒரு இடத்தை காட்டி இங்கே தோண்டு என்றார். அவரும் தோண்டினார். தோண்டியதில் ஒரு பைபிள் பிரதி கிடைத்தது. கிறிஸ்தவர் "பாபா இந்த பைபிள் எங்கே அச்சடிக்கப்பட்டது" என்று கேட்டார். "பாபா ஸ்வர்கத்துல"ன்னார். உடனே கூட வந்த ஆசாமி பைபிளை புரட்டி எந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டதோ கூறினார். பாவம் பாபா அந்த காலத்தில் மைக்கேல் ஜாக்சன் மாதிரி மூக்கு ஆப்பரேஷன் செய்யும் வசதியில்லாததால் உடைந்த மூக்குடனேயே ஆசிரமம் போய் சேர்ந்தார்

பாபாவுக்கு நொடில பைபிள் ப்ரிண்ட் செய்து தரும் சக்தி இருக்கும்போது அவர் ஏன் இந்தியன் கரன்சிய அரசாங்கத்துக்கு அடிச்சு தரக்கூடாது. குறைந்த பட்சம் தனக்காவது அச்சிட்டு கொள்ளலாம் அல்லவா ? கேப்பையில் நெய் வடிகிறதென்றால்
கேட்பவன் என்ன கேனையனா ?

இவர் நான் தான் ஷீரடி பாபாவின் மறுபிறவி என்கிறார். அந்த பாபா ஈஸ்வர் ஏக் (கடவுள் ஒருவரே) என்று தானே கூறினார். அல்லா மாலிக் (அல்லாஃஹ் தான் முதலாளி) என்றார் . இவரோ நானே கடவுள் என்கிறாரே ! சரி ஒழியட்டும் மகாராஷ்டிராவில் ஷிரடி பாபாவுக்கு கோவில் இருக்கிறது. கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது. இவர்தான் பாபா என்றால் போய் வாங்கிக்கிட வேண்டியது தானே!

இவருடைய அருமந்த பக்தர் திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மன் டி.கே.ஆதிகேசவுலு. சித்தூர் எம்.எல்.ஏ சி.கே.பாபு ஷீரடி பாபா பக்தர் ஷீரடி பாபாவுக்காக ஒரு கோயிலையே கட்டியுள்ளார். ஷீரடி பாபாதான் புட்டபர்த்தி பாபா என்றால் தன் பக்தர்கள் இருவரும் முட்டி மோதிக்கொள்ள விடுவாரா ? மோதிக்கொண்டால் பரவாயில்லை ஆதிகேசவுலு சி.கே.பாபுவை இங்கிலீஷ் சினிமா மாதிரி மிஷின் கன்ஸுடன் ஆட்களை அனுப்பி சுட்டு தள்ள பார்ப்பதும் கண்ணி வெடி வைத்து கொல்லப்பார்ப்பதும் புட்டபர்த்திக்காரருக்கு தெரியாதா ? தெரிந்தும் தடுக்கவில்லையா? குற்றம் நிகழ விருப்பதை அறிந்தும் போலீசாருக்கு தகவல் கொடுக்காதிருப்பதும் குற்றம் தானே ! (எப்படியோ சிறு கீறலும் இன்றி சி.கே.பாபு பிழைத்திகொண்டார். இரண்டு முறையும் அப்பாவிகள் இரண்டு பேர்தான் செத்தனர். அப்போ ஷீரடி காரர்தான் ஒரிஜினல் என்று பொருளோ? )
டீசல் இல்லாம கார் நின்னு போயிருச்சு:
ஒரு தரம் புட்டபர்த்திகாரர் பயணம் செய்த கார் டீசல் இல்லாம நின்னு போயிருச்சாம். உடனே பாபா இறங்கினாராம். டிக்கில தண்ணி கேன் இருக்கானு கேட்டாராம். இருக்குன்னாங்களாம். உடனே கேன் மூடிய திறந்து விரலை விட்டு தண்ணிய தொட்டாராம். இப்ப ஊத்தி ஓட்டுங்க என்றாராம். கார் ஓட ஆரம்பிச்சுருச்சாம். (இது கல்கி இதழ் ஒன்றில் நான் படித்த சம்பவம்) அட கூமுட்டைகளா ! அப்படியே பாபாவை ஏரோப்ளேன்ல கூட்டிக்கிட்டு போய் இந்து மகா சமுத்திரத்துல தள்ளி விட்டுட்டா கடல் மொத்தமும் டீசலாயிராதா ? கலைஞர் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் டீசல் திட்டத்தை கொண்டு வந்துர மாட்டாரா ?

(அடுத்த பதிவில் நிறைவு செய்கிறேன்)