Monday, July 6, 2009

மக்கள் சுகிக்க கிரகத்தடை ஏதுமில்லை

உணவு,உடை,இருப்பிடம் மற்றும் செக்ஸை பெற்று சுகிக்க கிரகத்தடை ஏதுமில்லை. ஆம். இதற்கெல்லாம் காரகத்வம் வகிக்கும் சுக்கிரன் ஒரு ஆண்டில் 2 மாதங்கள் மட்டுமே அசுப பலன் களை தருபவராக உள்ளார்.(ராசிக்கு 7,10 ஆமிடங்களில் சஞ்சரிக்கும் 2 மாதம் மட்டுமே) மக்கள் உணவு,உடை,இருப்பிடமின்றி,திருமணத்திற்கு (செக்ஸுக்கு) வழியின்றி தவிக்க நம் அரசாங்கங்களின் தவறான வழி முறைகள் தான் காரணம்.



ஒருவேளை ஜாதகத்திலேயே சுக்கிரன் பாவியாகியிருந்தால்:


சுக்கிர கிரகத்தின் பலவீனத்தை மீறி அரசாங்கம் தரும் வேலை வாய்ப்பின் மூலம் கவுரவமான வாழ்க்கை வாழ்ந்தால் அந்த ஜாதகனுடைய ஆண்மை குறையும் அவ்வளவே..


உங்க‌ள் ஜாத‌க‌த்தில் சுக்கிர‌ன் எப்ப‌டியிருந்தாலும் சுக்கிர‌னின் அருளை ஓர‌ள‌வேனும் பெற‌ கீழ்காணும் ந‌வீன‌ ப‌ரிகார‌ங்க‌ளை க‌டை பிடியுங்க‌ள்

ஹ‌லோ ! மிஸ்ட‌ர் சுக்கிர‌ன் லைன்ல‌ இருக்கார்:
யாராவது ஓரளவு வசதி பெற்றுவிட்டால் பிறர் "அவனுக்கென்னப்பா! சுக்கிரதிசை அடிக்குது" என்பது வழக்கம். இதில் உண்மையில்லாமல் இல்லை. சுக்கிரனாகிய நான் ஜாதகத்தில் நல்ல நிலையில் உட்கார்ந்து விட்டால், ஜாதகனுக்குப் பெரிய பங்களா, நான்கு சக்கர வாகனம், அழகான மனைவி, படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், நல்ல தூக்கம், அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள், நல்ல நடனம், சங்கீதம் எல்லாவற்றையும் வாரி வழங்குகிறேன். காரணம் இவற்றிற்கெல்லாம் நான் தான் அதிபதி. தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாவுக்கும் நானே அதிபதி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், தென்கிழக்குத்திசை, எதிர்பாலினர், மர்ம உறுப்புகள், வெள்ளிச்சாமான்களும் என் ஆளுகைக்குட்பட்டவையே. ஒரு ஜாதகனின் அந்தரங்க வாழ்வு பாதிக்கப்பட்டால் நான் அவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள். ஒரு ஜாதகத்தில் நான் நீசமாகியிருந்தால் ஆண்மையின்மை, செக்ஸ்வெறி, செக்ஸ் வக்கிரங்கள் ஆகியவை அந்த ஜாதகனுக்கு பாதிப்பு தரும். நான் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொண்டால் என் ஆளுகைக்குட்பட்ட விசயங்களில் நன்மை அதிகரிக்கும். தீமைகள் குறையும்.

பரிகாரங்கள்
1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும். 2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும். 6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல). 8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும். 9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும். முடிவுரைஎதெல்லாம் உங்கள் முயற்சியில்லாமலே உங்களைத் தேடி வந்ததோ அதெல்லாம் ஆண்டவன் பரிசு. எதையெல்லாம் போராடி அடைந்தீர்களோ! அதுவே உங்கள் வாழ்வின் துன்பங்களுக்கு மூலம். எனவே விட்டுக் கொடுங்கள். ஆபத்துகள் தட்டிப்போகும் கை நழுவிப் போவதைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். அது உங்களையும் படுகுழியில் தள்ளிவிடும்.