ஆந்திரத்தில் கூட்டுறவு பண்ணை விவசாயம் அமலாக உள்ளது. ஆனால் நிலமுள்ள விவசாயிகள் முன்வந்தாலன்றி இது அமல்படுத்தப்படாதென்று முதல்வர் ஒய்.எஸ். கூறியுள்ளார்.
இது குறித்து அனைத்துகட்சி கூட்டமும் கூட்டப்பட்டுள்ளது. பிரபல விவசாய விஞ்ஞானி ஸ்வாமி நாதன் வழிகாட்டுதலும் கோரப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 ல் இந்த கூட்டுறவு பண்ணை விவசாயம் முக்கிய அம்சம் என்பதை அறிந்தே இருப்பீர்கள்.
இத்திட்டத்தை 1997 நவம்பர் முதல் சந்திரபாபுவுக்கு அனுப்பிவந்ததும் தாங்கள் அறிந்ததே. எனது திட்டத்திலிருந்து சுட்டனரோ அல்லது அவர்களுக்கே தோன்றியதோ நானறியேன் பராபரமே !
ஆனால் சந்திரபாபு காலத்தில் கிருஷ்ணகிரியை ஒட்டியுள்ள குப்பத்தில் இந்த ஆந்திரத்தில் கூட்டுறவு பண்ணை விவசாயம் அமல்

ஆனால் சந்திரபாபு காலத்தில் கிருஷ்ணகிரியை ஒட்டியுள்ள குப்பத்தில் இந்த கூட்டுறவு பண்ணை விவசாயம் புதுமையான முறையில்(?) அமல் செய்யப்பட்டது. அதாவது நவீன விவசாய முறைகளுக்கு தேவையான சொட்டு நீர் பாசனம் இத்யாதி தொடர்பான கருவிகள் ஒரு தனியார் கம்பெனியால் ஆனை விலை குதிரை விலைக்கு விவசாயிகள் தலையில் கட்டப்பட்டது. பின் அந்த கம்பெனியே காணாமல் போய் விட்டது.
அரசின் நோக்கம்:
ஆனால் ஏற்கெனவே விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் செலவில் அணைகள் ,இலவச மின்சாரம், கடன் தள்ளுபடி, கடனை தீர்த்து விட்டவர்களுக்கு தலா ரூ.5000 ஊக்கத்தொகை நூற்றுக்கு நாலணா வட்டிக்கே கடன் இத்யாதி வழங்கி விவசாயிகளின் நம்பிக்கையை பெற்ற ஒய்.எஸ் அரசின் நோக்கம் மட்டும் நல்லதாகவே படுகிறது
இதில் விவசாயிகளின் நிலத்தின் மீதான உரிமை எக்காரணம் கொண்டும் மாறாது. பாதிக்கப்படாது. லார்ஜ் ஸ்கேல் ப்ரொடக்ஷன், மெக்கனைசேஷன்,விஞ்ஞாண முறைகளை பின்பற்றுதல் இத்யாதிக்கு வசதியாய் நிலங்கள் விவசாயிகள் சங்கத்துடன் ஒருங்கிணைக்கப்படும். விவசாய கூட்டுறவு வங்கி பெரிய அளவில் கடன் வழங்கும்.அரசு 400 கோடிகள் வரை நிதி வழங்கும். அரசு இயந்திரம் மண் பரிசோதனை முதலாக மார்க்கெட்டிங் ஈறாக பூரண ஒத்துழைப்பை நல்கும். விருப்ப அடிப்படையில் தான் இது அமலாகும். எந்த கிராமத்து விவசாயிகள் பூரண சம்மதம் தெரிவிக்கிறார்களோ அங்கு மட்டும் பரீட்சார்த்தமாக அமல் செய்யப்படும்.
ஆனால் இந்த லொள்ளு பிடித்த எதிரி கட்சிகளோ சும்மாவே விவசாயிகளுக்கு பேதிக்கு கொடுத்து வருகின்றன. சந்திரபாபுவுக்கு விவசாயிகள் மீது உள்ள பாசம் எப்படிப்பட்டதென்றால் .. என்.டி.ஆர் அமல் செய்த ஹெச்.பி.க்கு 50 ரூ. மின்சார கட்டணத்தை உயர்த்தியது, பி.டி.காட்டன் விதைகளுக்கு அனுமதி வழங்கியது
இனிவிவசாயமே வேஸ்டு. உழவர் மகன் (விஜயகாந்த்) எல்லாம் கம்ப்யூட்டர் கத்துக்கங்க என்றது, தன் 9 வருட ஆட்சி காலத்தில் ஒரே ஒரு அணையை கூட கட்ட முன்வராதது.. இப்படி எத்தனையோ சொல்லலாம். இப்போ அவரும் இந்த கூட்டுறவு பண்ணை விவசாய்த்தை எதிர்க்கிறார். விவசாயிகள் எதிர்ப்பார்கள் , நிலம் அவர்கள் உயிரோடு கலந்தது அதை விட்டுத்தரமாட்டார்கள் என்று லாவணி பாடுகிறார். நிலம் பறிக்கப்படாது, உரிமை மாற்றப்படாது என்று தலை தலைனு அடிச்சிக்கிட்டாலும் அவர் தன் வேலையை தொடர்ந்து செய்கிறார்.
விவசாயி விவசாயத்தில் வெறுப்புற்று , விளை நிலத்தை இழக்க முன்வந்ததால் தானே இத்தனை தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்டன். இத்தனை கட்டிடங்கள் எழுந்துள்ளன. பின் ஏதுக்கு இந்த பழைய ரிக்கார்டு.
இந்த மாதிரியெல்லாம் சொறிவான் கள் என்றுதான் என் திட்டத்தின் முதல் அம்சமாக அதிபர் முறையை வைத்தேன். மற்றொரு அறிவு ஜீவி கூறுகிறார் சீனாவில்பண்னை விவசாயம் ரத்து செய்யப்பட்டு நிலங்களை தனியாருக்கு மாற்றி தந்த பிறகு உற்பத்தி பெருகியதாம் . அய்யா கூட்டுறவை அமல் செய்ததால் பேஸிக் பலப்பட்ட பிறகு தனியார் செய்தாலும், சங்கம் செய்தாலும் உற்பத்தி பெருகத்தானே செய்யும்.
கிராம அளவில் ஜாதி வேறுபாடுகள் பலமாய் உள்ளதால் இது சரியா வராதாம். இன்னொரு புலி வாதம் இது. சந்திரபாபுவின் 9 வருட ஆட்சிகாலத்தில் வானம் பொய்த்து பயிர் கருகி கடன் கழுத்தை நெறித்த போது எல்லா விவசாயியும் தான் தற்கொலை செய்தான் இதில் உயர் ஜாதி என்ன கீழ் ஜாதி என்ன?
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை இந்த கூட்டுறவு பண்னை விவசாயம் நிரூபிக்கும். இதில் நிரூபிக்கப்பட்டால் ஜாதி அமைப்பே அம்பேல் ஆகி விடும்.