Monday, July 6, 2009

பிரபல தமிழ் நாளிதழ் நிர்வாகத்துல மாட்டி:2

பத்திரிக்கைன்னா எல்லாருக்கும் ஒரு பிரமை இருக்கும். அங்கே வேலை செய்றவனெல்லாம் நெருப்பா இருப்பான். அவனுக்கு தெரியாத விச‌யமே இருக்காதுனு நினைப்பாங்க. மத்த பத்திரிக்கை எப்படியோ தெரியாது, இந்த பத்திரிக்கையிலேயெ இதர கிளைகள் (எடிசன் ?) எப்படியோ தெரியாது. வேலூர் கிளை மட்டும் ..அட அட ..

இது பனிஷ்மென்ட் ஏரியா போலே. இது தெரியாம மாட்டினேன். சேர்ந்த முதல் வாரத்துலயே ஒரு விபத்து மூணு பேரு காலி. சோத்துல கை வச்ச நேரம் போன் வந்தது. சோத்தை விட்டுட்டு பறந்து பறந்து போட்டோக்ராஃபர் ஏற்பாடு செய்து ஆம்புலென்ஸ்ல இருந்து பாடிய இறக்கும்போதே படம் எடுத்து மெயில் பண்ணினேன். மறு நால் அந்த வாசமே கிடையாது.

மறு மாசம் சம்பளம் வாங்க போனபோது மேனேஜர் கேட்டார். எல்லாம் எப்படி போகுது ? அப்போ இந்த போட்டோ சமாச்சாரத்தை விட்டேன். அவர் எடிட்டரை கூ(ப்)ட்டு கேட்டார்.

இந்த நிர்வாகத்துல மேனேஜர்தான் புருசன் மாதிரி. எடிட்டர் பெண்டாட்டி மாதிரி போல ( நமக்கு தெரிஞ்சு உடைச்சாதானே) அங்கே பவ்யம் காட்டின எடிட்டர். மேலே போனதும்(எடிட்டோரியல்) புலி வேஷம் போட்டாரு..பரிதாபம் காட்றார். நவரசம் போங்களேன். கீழ் காணும் டயலாகை சிவாஜி சார் மாதிரி சொல்லிப்பார்த்துக்கங்க ஓகே.

"இதை..இதைப்போயி மே..னேஜர்கிட்ட சொல்றாருப்பா.இதை..இதை"

செய்தியும் அதே கதிதான் . மூணு நாள் முன்னே அனுப்பின செய்தி நாலாவது நாள் வரும்.

சித்தூருல ஏறக்குறைய எல்லா தெலுங்கு தினசரிக்கும் பி.சி.சென்டர் உண்டு.(தமிழ் பத்திரிக்கை உலகத்துல இதை டெப்போங்கறாங்க) தாளி பாதி ராத்திரி 12 மணிக்கு கூட ந்யூஸ் அடிச்சு மோடத்துல அனுப்பிக்கிட்டே இருப்பானுங்க. இங்கே ந்யூஸ் டெட்லைன் சாயந்திரம் 5 மணி.


இத்தனைக்கும் சித்தூர் மாவட்டத்துலருந்து செமையான விளம்பர வருமானம். எல்லா ஏஜெண்ட் கிட்டேருந்தும் காப்பிய குறைங்க காப்பிய குறைங்கனு கார்டு வந்துக்கிட்டே இருக்கும். சர்க்குலேஷனை கூட்ட இந்த பயலுங்க ஒரு ...ம் பிடுங்க மாட்டானுங்க. டவுன்ல நம்ம முகம் தெரிஞ்ச முகமாச்சே . ஏதோ நான் தான் அந்த பேப்பருக்கு எடிட்டர் மாதிரி ஜனம் கேக்கர கேள்விக்கு பதில் சொல்லமுடியாத நிலை ..
இத்தனைக்கும் என்னடா மர்மம்னா நிறுவனத்தை ஒரு ட்ரஸ்டு ஆக்கிட்டாங்க. எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுங்கற மென்டாலிட்டி.

(தொடரும்